Dear Sri Swaminatha Sarma,
Brahmins have lost their identity and the border line separating them from others is getting blurred day by day. As such talking about uniting all the Brahmins under a leader is like putting the clock back. This varna was created for the protection of the Vedas, to which now we pay only a lip service. When we have given up the serious study of Vedas, there is no justification for our separate existence.
கலப்பு மணத்தை நாம் எதிர்ப்பது பொருளாதாரக் காரணங்களால் அல்ல, நம் கலாசாரம் சீரழிந்து விடுமே என்பதற்காகத் தான். நமது இன்றைய கலாசாரத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
1 உணவு- சைவ உணவும், விசேஷ நாட்களில் வெங்காயம் போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளாமையும்.
2 உடை- விசேஷ நாட்களில், விசேஷ நேரத்தில் மட்டும் பஞ்சகச்சம், மடிசார்.
3 பேச்சு- ஆத்துக்கு, வாங்கோ, அத்திம்பேர் போன்ற சில விசேஷ பதப் பிரயோகங்கள்.
4 நவராத்திரி கொலு, காரடையான் நோன்பு முதலிய பண்டிகைகள்.
5 சுமங்கலிப் பிரார்த்தனை முதலிய சில சடங்குகள்.
6 மடி, விழுப்பு, தீட்டு, எச்சில், பத்து
7 சுப அசுப காரியங்களில் வைதிகத்துக்கு முக்கியத்துவம்.
இவை எல்லாமே காலத்துக்குக் காலம் மாறுபட்டுக் கொண்டு இருக்கின்றன. நம்மில் தற்போது எத்தனை பேர் நம் தந்தையரின் பழக்க வழக்கங்களை அனுசரிக்கிறோம் என்பதை அவரவரே அறிவர். வைதிக காரியங்களை நாம் எத்தனை சிரத்தையோடு செய்கிறோம் என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எல்லாவற்றிலும் சாரத்தைத் தொலைத்து விட்டுப் புறச்சின்னங்களை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கும் இச் சமூகம் தன் தனித்தன்மையை இழந்து விட்டது. மற்ற சமூகத்தினர் பலர் நமது பழக்க வழக்கங்களை ஏற்று வருவதால் அவர்களையும் நம்மையும் பிரிக்கும் எல்லைக் கோடு வரவர மங்கி வருகிறது. இந்நிலையில் இதை ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுத்திக் கலப்பு மணங்களை முற்றிலும் தடுத்து விடலாம் என நினைப்பது கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவைக்கச் செய்யும் முயற்சியே.
ஒரு உயர்ந்த லட்சியம் இல்லாத நிலையில் சிந்திக்கத் தெரிந்த மக்களை ஒரு தலைவனின் கீழ் ஒன்று படுத்துவது இயலாது. ஆடு மாடுகளை மந்தையாக மேய்க்கலாம். சிங்கங்களை முடியாது.
பிராமண வர்ணம் வேதரக்ஷணத்துக்காக ஏற்பட்டது. இதை லட்சியமாக வைத்து இதற்கு முன் வருபவர்களை மட்டும் அவர்கள் பிறப்பு எப்படி இருப்பினும் பிராமணர்களாக ஏற்றுக் கொள்ள முன் வந்தால் பிராமணர்கள் என்ற பெயரில் ஒரு குழு நிலைத்து வாழும். வேறு வழி இல்லை.