KANDA PURAANAM - DAKSHA KAANDAM
10b. நந்தியின் வெகுளி.
“நீயா முதல்வனாகிய நான்முகன்?
நீயே அறிவித்தாய் வேள்வியைப் பற்றி
நீறணிந்து பிச்சை எடுக்கும் சிவனிடம்.
நீ வணங்கி அமர்த்தினாய் நந்தியை!
என் தந்தை என்பதால் பிழைத்தாய்
அன்றேல் தலை தனியாகி இருக்கும்!
சுடலையில் பேய் பூதக் கூட்டத்துடன்
நடனமாடும் சிவனுக்கு அவிர்பாகமா?
நெடுமாலுக்கு அளிப்போம் அவிர்பாகம்
நடமாடும் பித்தனுக்கு அளிக்காதே அதை!”
போற்றும் பிரானைப் பற்றித் தக்கன்
சாற்றிய மொழி துளைத்தது செவிகளை.
காதுகளைக் கைகளால் மூடினார் நந்தி.
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
நந்தியின் சினத்தால் நடுங்கியது உலகு.
நான்முகனும், திருமாலும் கலங்கினர்.
“உமையொரு பாகனை இகழ்ந்தாய் நீ!
உன்னைக் கொல்வேன் நீ மேலும் வைதால்!
சிவனைப் பழிப்பவன் தலை சேதமாகுக!
சிவனை மதியாதவர் செல்வம் அழிக!
உன்னைச் சேர்ந்த தேவர்கள் நெடுநாள்
துன்புறுக சூரபத்ம அவுணனிடம்!”எனப்
பற்பல சாபங்கள் இட்டார் நந்தி தேவர்.
பிற்பாடு திரும்பினார் கயிலையங்கிரி.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
10b. நந்தியின் வெகுளி.
“நீயா முதல்வனாகிய நான்முகன்?
நீயே அறிவித்தாய் வேள்வியைப் பற்றி
நீறணிந்து பிச்சை எடுக்கும் சிவனிடம்.
நீ வணங்கி அமர்த்தினாய் நந்தியை!
என் தந்தை என்பதால் பிழைத்தாய்
அன்றேல் தலை தனியாகி இருக்கும்!
சுடலையில் பேய் பூதக் கூட்டத்துடன்
நடனமாடும் சிவனுக்கு அவிர்பாகமா?
நெடுமாலுக்கு அளிப்போம் அவிர்பாகம்
நடமாடும் பித்தனுக்கு அளிக்காதே அதை!”
போற்றும் பிரானைப் பற்றித் தக்கன்
சாற்றிய மொழி துளைத்தது செவிகளை.
காதுகளைக் கைகளால் மூடினார் நந்தி.
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
நந்தியின் சினத்தால் நடுங்கியது உலகு.
நான்முகனும், திருமாலும் கலங்கினர்.
“உமையொரு பாகனை இகழ்ந்தாய் நீ!
உன்னைக் கொல்வேன் நீ மேலும் வைதால்!
சிவனைப் பழிப்பவன் தலை சேதமாகுக!
சிவனை மதியாதவர் செல்வம் அழிக!
உன்னைச் சேர்ந்த தேவர்கள் நெடுநாள்
துன்புறுக சூரபத்ம அவுணனிடம்!”எனப்
பற்பல சாபங்கள் இட்டார் நந்தி தேவர்.
பிற்பாடு திரும்பினார் கயிலையங்கிரி.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி