DEVI BHAAGAVATAM - SKANDA 6
6#21b. யசோவதி (2)
“செய்தனர் புத்திர காமேஷ்டி யாகம்,
பெய்தனர் நெய்யை ஹோம அக்னியில்;
தோன்றினாள் தீச் சுடர் நடுவே ஒரு பெண்;
தோன்றினாள் பொற்கொடி போன்ற அழகி.
ஏகாவலி என்ற பெயரிட்டான் கன்னிக்கு,
ராஜ போகத்துடன் வளர்த்தனர் கன்னியை.
மகன் பிறக்கவில்லையே என வருந்தவில்லை;
மகளையே மகனாகக் கருதி வளர்த்தினர் நன்கு.
வளர்ந்தாள் வளர்பிறை போல ஏகாவலி;
வளர்ந்தாள் அழகிய தோழியர் புடை சூழ.
அமைச்சரின் மகள் யசோவதி ஆவேன் நான்;
அமைந்தேன் ஏகாவலியின் உயிர்தோழியாக.
இருந்தோம் இணை பிரியாமல் இருவரும்;
இருந்தது கொள்ளைப் பிரியம் தாமரை மீது.
விளையாடுவோம் தாமரைத் தடாகத்து நீரில்!
விளையக் கூடாது ஏகாவலிக்கு ஆபத்து என
அளித்தான் மன்னன் காவலரை எங்களுக்கு;
களித்தோம் தடாக நீரில் காவலர் காவலில்.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
6#21b. யசோவதி (2)
“செய்தனர் புத்திர காமேஷ்டி யாகம்,
பெய்தனர் நெய்யை ஹோம அக்னியில்;
தோன்றினாள் தீச் சுடர் நடுவே ஒரு பெண்;
தோன்றினாள் பொற்கொடி போன்ற அழகி.
ஏகாவலி என்ற பெயரிட்டான் கன்னிக்கு,
ராஜ போகத்துடன் வளர்த்தனர் கன்னியை.
மகன் பிறக்கவில்லையே என வருந்தவில்லை;
மகளையே மகனாகக் கருதி வளர்த்தினர் நன்கு.
வளர்ந்தாள் வளர்பிறை போல ஏகாவலி;
வளர்ந்தாள் அழகிய தோழியர் புடை சூழ.
அமைச்சரின் மகள் யசோவதி ஆவேன் நான்;
அமைந்தேன் ஏகாவலியின் உயிர்தோழியாக.
இருந்தோம் இணை பிரியாமல் இருவரும்;
இருந்தது கொள்ளைப் பிரியம் தாமரை மீது.
விளையாடுவோம் தாமரைத் தடாகத்து நீரில்!
விளையக் கூடாது ஏகாவலிக்கு ஆபத்து என
அளித்தான் மன்னன் காவலரை எங்களுக்கு;
களித்தோம் தடாக நீரில் காவலர் காவலில்.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி