VINAAYAKA PURAANAM -2
14c. துராசதன்
வஞ்சகமாகப் பிரமாசுரன் கொல்லப்பட்டதை,
வஞ்சம் தீர்க்க எண்ணினான் மகன் துராசதன்.
சுக்கிராசாரியாரிடம் சென்றான் அவன் நேராக,
“அக்கிரமாகக் கொன்று விட்டனர் தந்தையை!
உபாயம் ஒன்றினைக் கூறுங்கள் குலகுருவே!
அபாயம் வரச் செய்வது எப்படி தேவர்களுக்கு?”
பஞ்சாக்ஷரத்தை நன்கு உபதேசித்தார் குலகுரு.
பிஞ்சு மதியணி பிரானைத துதிக்கச் சொன்னார்.
ஐம்புலன்களையும் அடக்கி, ஐந்தெழுத்தை ஓதிட,
சம்பு தோன்றினார், வரங்களையும் அருளினார்!
தேவர்களால் அழிவின்மை; நீண்ட ஆயுளுடன்;
மூவுலகங்களின் ஆளுமையைக் கோரிப்பெற்றான்.
வல்லவன் பின்னால் செல்வதற்கு வருவார்கள்
அல்லல் தீர்ந்து அமைதியாக வாழ விரும்புபவர்.
வந்து கூடினர் அரக்கர்கள் அசுரன் துராசதனிடம்,
வல்லமை பெருகத் தொடங்கியது மேன்மேலும்.
முகுந்தம் ஆனது அவனது அழகிய தலை நகர்;
மூவுலகும் அவன் குடைக் கீழ் வந்து விட்டன!
அசுரனின் வருகையை அறிந்ததால் இந்திரன்
அமராவதியை விட்டுச் சென்றுவிட்டான் காசி.
பிரமனும், நாரணனும் அவனை எதிர்க்காமல்
பிரானிடம் சென்று சரண் புகுந்தனர் காசியில்!
சகல தேவர்களும் கூடி இருந்தனர் காசியில்;
சகல லோகங்களையுன் வென்றான் துராசதன்.
காசிக்குச் சென்றான் தேவர்களைத் துன்புறுத்த;
ஈசன் சென்றுவிட்டார் தேவர்களுடன் கேதாரம்!
நடத்தினான் ஆட்சி காசியில் இருந்து கொண்டு;
முடக்கினான் யாக, யக்ஞங்களை முற்றிலுமாக.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.