Kanda puraanam - porpuri kaandam
8a. அக்னிமுகாசுரன்.
சூர பத்மனின் மகன்களில் ஒருவன்
வீரன் அக்கினி முக அவுண இளவரசன்.
தாயின் கருவிலே உருவாகும் போதே
தாயின் உடலிலிருந்து சிந்திய தீயால்;
அன்னைக் கருவிலிருந்து பிறந்ததும்
அக்கினி முகன் என்னும் அரிய பெயர்.
திக் பாலகர்களை வென்ற வீரன் அவன்!
திக் கஜங்களை வென்ற சூரன் அவன்.
தமையன் ஆதவனைச் சிறை செய்தான்.
தம்பியோ திங்களைச் சிறை செய்தான்!
மாயப் போர்கள் புரிவதில் வல்லவன்!
தெய்வப் படைக்கலன்கள் பெற்றவன்.
போருக்குப் புறப்பட்டான் அக்னி முகன்
முரசொலியே வீழ்த்தியது முகில்களை.
போர் தொடங்கியது பூத, அவுணரிடையே.
தாரகைகள் உதிர்ந்தன! நிலம் அதிர்ந்தது.
இரு புறங்களிலும் பெரும் உயிர்ச்சேதம்!
பொருதனர் அக்கினிமுகன் வீரபுரந்தரர்.
பொருதனர் வீரரின் ஏழு இளவல்களும்!
அரிய படைக் கலனகளைச் செலுத்தினர்.
சிவப் படை செலுத்தினான் அவுணன்.
வருணப் படையைச் செலுத்தினர் வீரர்.
சிவப் படை விழுங்கியது வருணப்படையை.
சிவலோகத்துக்கு அனுப்பியது எழுவரையும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
8a. அக்னிமுகாசுரன்.
சூர பத்மனின் மகன்களில் ஒருவன்
வீரன் அக்கினி முக அவுண இளவரசன்.
தாயின் கருவிலே உருவாகும் போதே
தாயின் உடலிலிருந்து சிந்திய தீயால்;
அன்னைக் கருவிலிருந்து பிறந்ததும்
அக்கினி முகன் என்னும் அரிய பெயர்.
திக் பாலகர்களை வென்ற வீரன் அவன்!
திக் கஜங்களை வென்ற சூரன் அவன்.
தமையன் ஆதவனைச் சிறை செய்தான்.
தம்பியோ திங்களைச் சிறை செய்தான்!
மாயப் போர்கள் புரிவதில் வல்லவன்!
தெய்வப் படைக்கலன்கள் பெற்றவன்.
போருக்குப் புறப்பட்டான் அக்னி முகன்
முரசொலியே வீழ்த்தியது முகில்களை.
போர் தொடங்கியது பூத, அவுணரிடையே.
தாரகைகள் உதிர்ந்தன! நிலம் அதிர்ந்தது.
இரு புறங்களிலும் பெரும் உயிர்ச்சேதம்!
பொருதனர் அக்கினிமுகன் வீரபுரந்தரர்.
பொருதனர் வீரரின் ஏழு இளவல்களும்!
அரிய படைக் கலனகளைச் செலுத்தினர்.
சிவப் படை செலுத்தினான் அவுணன்.
வருணப் படையைச் செலுத்தினர் வீரர்.
சிவப் படை விழுங்கியது வருணப்படையை.
சிவலோகத்துக்கு அனுப்பியது எழுவரையும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.