KANDA PURANAM - PORPURI KAANDAM
3d. போர் தொடங்கியது.
தூதனாக அன்று வந்து திரும்பிய வீரவாகு
பூதப் படைகளுடன் இன்று போர்க்களத்தில்!
பானுகோபன் நெருங்கினான் படையுடன்
கனைத்தனர் அவுணர்கள் பூதர்கள் முன்பு.
போர் மூண்டது இரு படைகள் இடையே!
தேர்கள் அழித்து ஒழித்தன தேர்களை!
கரிகள் அழித்து ஒழித்தன கரிகளை.
பரிகள் அழித்து ஒழித்தன பரிகளை.
சிங்கன் கொன்றான் அவுண அனலியை.
சிங்கன் கொன்றான் பிறகு சண்டனை.
பானுகோபன் எதிர்த்தான் பூதங்களை!
பானுகோபன் எதிர்த்தான் உக்கிரனை!
பானுகோபன் எதிர்த்தான் நூற்று எண்மரை.
பானுகோபன் எதிர்த்தான் வீரகேசரியை.
பானுகோபன் எதிர்த்தான் வீர மார்தாண்டரை.
பானுகோபன் எதிர்த்தான் வீர ராக்கதரை.
பானுகோபன் எதிர்த்தான் வீர ராந்தகரை.
பானுகோபன் எதிர்த்தான் வீரவாகுவை.
மோகக்கணை செலுத்தினான் பானுகோபன்.
மோகக்கணை அழித்தது பூத உணர்வுகளை!
அமோகக் கணையை முருகன் உருவாக்க,
அக்கணை அழித்தது மோகக்கணையை.
மோகப்படையின் ஆற்றல் அழிந்ததும்
மோகத்தினின்றும் மீண்டது பூதப் படை.
சிவப் படைக் கலத்தை எடுத்தான் முருகன்
எவரும் அறியாது மறைந்தான் பானுகோபன்.
கதிரவன் மேற்கில் விழுந்து மறைந்தான்
பூதப் படை திரும்பியது அதன் பாசறைக்கு.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.