A poem a day to keep all agonies away!

Vinaayaka Puraanam 1.

26c. மனமோகினி

வரம் பெற்றவர் வலிமை பெறுவர்;
வலிமை பெற்றவர் கொடுமை புரிவர்.

பாரினில் அன்றும் இன்றும் என்றும்
மாறாமல் நிகழ்வது இதுவே அன்றோ?

தேவர்கள் அஞ்சினர் விரோச்சனனிடம்;
தேவர்கள் கெஞ்சினர் விஷ்ணுவிடம்;

அபயம் அளித்தார் அவர் தேவர்களுக்கு
அழகிய மோகினி வடிவம் எடுத்தார்.

மனமோகினி அசுரன் முன் வந்தாள்
மயங்கி விட்டான்அசுரன் அவளிடம்.

“தேவகன்னியோ? கந்தர்வ கன்னியோ
தேடிச் சென்றான் அவளிடம் அசுரன்.

மாயையை அறியவில்லை சிறிதும்
மயக்கம் வளர்ந்து பெருகியது விரகம்.

இழுத்த இழுப்புக்கு அவன் வளைந்தான்
பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல!

“அசுரர் அரசே! பாக்கியம் எனதே!
பேச இயலுமோ உன் பராக்கிரமத்தை?

நேசம் பெருகுகிறது உன் வலிமை கண்டு!
நெஞ்சம் விரும்புகிறது உன் நெருக்கத்தை!

உறுதி ஒன்று வைத்துள்ளேன் நெடுநாளாக
அருகில் நெருங்குமுன் எண்ணெய்க் குளியல்.

விரும்பினால் செய்விக்கின்றேன் ஸ்நானம்
விருப்பத்தை நிறைவேற்றுவேன் அதன்பின்

தையல் மேல்கொண்ட அதீத மையலால்
மெய் மறந்தே போனான் விரோசனன்.

அமர்ந்தான் கிரீடத்தைக் கழற்றிவிட்டு;
ஆயிரம் சுக்கலானது சிரம் கரம் பட்டதும்!

சூரியன் தந்த வரம் அசுரனைக் காக்கும்
அரிய கிரீடம் தலை மீது உள்ளவரையே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Vinaayaka Puraanam 1.

26C. The bewitching beauty

The person who gets special boons becomes stronger. The person who becomes stronger becomes a terror to the others. That was what happened in the past, happens in the present and will continue to happen in the future.

Virochanan became a terror to the Deva. They sought Vishnu’s help. Vishnu gave them abhayam and transformed himself into a beautiful mohini.

Mohini came in front of Virochanan. He was dazed by her bewitching beauty. He wondered “Is she a Deva kanya or a Gandharva kanya?” He went closer to her.

The mohini spoke to him in a sweet voice.”I have heard about your valor and victories. It will be my pleasure to associate with you. I am deeply in love with you. i want to have intimacy with you.

But I have a rule which I follow very strictly. The closeness will follow a nice relaxing oil bath. I can bathe you if you will permit me. After that I will fulfill your desires.”

Virochanan was like a red hot iron rod which could be bent into any shape. He forgot himself, his boons, the warning which go with the boons. He removed his kireetam and sat there to be bathed by the mohini.

The moment her hand touched his head, it blew up into one hundred pieces. The boon and the crown given by the Sun God will protect him only as long as he was wearing it on his head.
 
DEVI BHAAGAVATM - SKANDA 4

4#3c. இந்திரனின் வஞ்சகம்


போதனை கேட்டான் தாயிடம் இந்திரன்;
பேதலித்தான் மனம் துர்போதனைகளால்.

சென்றான் திதியிடம் நயவஞ்சகத்துடன்,
சொன்னான் அவளிடம் இனிய மொழிகளை .

“இளைத்து மெலிந்து விட்டாய் விரதத்தால்
களைத்து நலிந்து விட்டாய் விரதத்தால்.

பாத சேவை செய்யும் பாக்கியம் தருவாய்!
பேதமில்லை மனதில் உனக்கும், தாய்க்கும்!”

பாதங்களைத் தொடையில் வைத்துக் கொண்டு
பாத சேவை தொடர்ந்து செய்தான் இந்திரன்.

ஐயுறவில்லை திதி இந்திரனின் நோக்கத்தை;
அயர்ந்து உறங்கினாள் களைப்பின் மிகுதியால்.

வாய்த்தது இந்திரன் காத்திருந்த சந்தர்ப்பம்!
மாய்த்து விடலாம் எளிதில் உருவான கருவை!

வடிவெடுத்தான் யோகசக்தியால் நுட்பமாக;
குடிகெடுக்க நுழைந்தான் அவள் கர்ப்பத்தில்.

வெட்டினான் சிசுவை ஏழு துண்டுகளாக;
வெட்டப் பட்ட சிசு அழுதது ஓயாமல்!

வெட்டினான் ஒவ்வொன்றையும் ஏழாக!
வெட்டப் பட்டது சிசு நாற்பது ஒன்பதாக!

மரிக்கவில்லை அந்த சிசு அப்போதும்;
மருத்துக்களாக உருவெடுத்தன அவை.

கண் விழித்த திதி அதிர்ந்து போனாள் – இது
கண் மூடித் திறப்பதற்கு என்ன கொடுமை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATM - SKANDA 4

4#3c. The treachery of Indra

Indra listened to the wicked advice of his mother Aditi. His mind was filled with hatred towards his unborn half brother. He went to his stepmother Diti and spoke to her very kind words.

“The austerities of the vratam have made you weak and lean my dear mother. I want to serve you somehow. Please grant me permission to do paada seva to you. I consider you at par with my own mother!”

Diti trusted him an allowed him to massage her feet gently. She felt relaxed and went into a sound sleep. Now this was the opportunity Indra had been waiting for. He assumed a minute form by his yogic powers and entered into her womb.

He cut off the fetus into seven parts. The fetus did not die but started to cry. He again cut off each of those seven parts into seven parts.

Now the fetus was dissected into forty nine parts. Still the fetus did not die but became the forty nine Marut gaNaans.

Diti was shocked by this quick sequence of events from one – who she had trusted as her own son!
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 66 ( 1 to 5)

கோ3பி ஜன ஆஹ்லாத3னம்

உபயாதானாம் ஸுத்3ருசா’ம் குசுமாயூத4 பா3ணபாத விவசா’னாம்|
அபி4வாஞ்சி2தம் விதா4தும் க்ருதமதி ரபிதா ஜகாத2 வாமிவ ||
( 66 -1)

மன்மத பாணத்தால் அடிபட்டு, பரவசர்களாகி, அதனால் சமீபத்தில் வந்த, கட்டழகிகளின் ஆசைகளை நிறைவேற்றத் தீர்மானித்து இருந்தும், அவர்களிடம் விபரீத வார்த்தைகளைக் கூறினீர்கள் அல்லவா? ( 66 – 1)

க3க3னக3ம் முனி நிவஹம் ச்’ராவயிதும் ஜகி3த2 குலவதூ4 த4ர்மம் |
த4ர்ம்யம் க2லு தே வசனம் கர்மது நோ நிர்மலஸ்ய விச்’வாஸ்யம்||
( 66 – 2)

ஆகாயத்தில் வந்து நிற்கும் முனிவர் கூட்டத்தை கேட்கச் செய்வதற்காக குலஸ்திரீக்களின் தர்மத்தை எடுத்து உரைத்தீர்கள் அல்லவா? தங்கள் திருவாக்கு தர்மத்தை விட்டு அகன்றதே இல்லை. ஆனால் மாசற்ற, புண்ய பாப சம்பந்தம் இல்லாத தங்களுடைய பிரவ்ருத்தி நம்பத் தகுந்தது அல்ல! ( 66 – 2)

ஆகர்ண்ய தே ப்ரதீபாம் வாணீ மேணீத்3ருஷ: பரம்தீ3னா |
மா மா கருணாஸிந்தோ4 பரித்ய ஜேத்யதிசிரம் விலேபுஸ்தா:||
( 66 – 3)

அந்த மான் கண்ணியர் தங்களுடைய விபரீதமான திருவாக்கினைக் கேட்டு, “கருணைக் கடலே! எங்களைக் கை விடாதீர்கள் !” என்று வெகு நேரம் புலம்பினார்கள அல்லவா? ( 66 – 3)

தாஸாம் ருதி3தைர் லபிதை: கருணாகுலமானஸோ முராரே த்வம்|
தாபிஸ் ஸமம் ப்ரவ்ருத்தோ யமுனா புலினேஷு காமமாபி4ரந்தும் || (66 – 4)

முராரியே! தாங்கள் அவர்கள் வருந்திக் கேட்டுக் கொண்டதன் பேரில் கருணை பொங்கிய மனத்துடன் அந்தப் பெண்களுடன் யமுனையின் மணல் திட்டுக்களில் இஷ்டம் போல விளையாடத் தொடங்கினீர்கள்.
( 66 – 4)
சந்த்ரகர ஸ்யந்த3ல ஸத்ஸுந்த3ர யமுனா தடாந்த வீதீ2ஷு |
கோ3பி ஜனோத்தரீயை: ஆபாதி3த ஸம்ஸ்தரே ந்யஷீத3ஸ்த்வம் ||
( 66 – 5)

நிலவொளி பொழிந்த அழகிய யமுனைநதிக் கரையில் கோபஸ்த்ரீக்களின் மேலாடைகளால் உண்டு பண்ணப்பட்ட விரிப்பில் தாங்கள் அமர்ந்தீர்கள் அல்லவா? ( 66 – 5)
 
த3ச’கம் 66 ( 6 to 10)

கோ3பி ஜன ஆஹ்லாத3னம்

ஸுமது4ர நர்மலாபனை: கரஸங்க்ரஹணைச்’ச சும்பனோல்லாசை:|
கா4டா4லிங்க3ன ஸங்கை3; தவ மங்க3னாலோக மாகுலீ சக்ருஷே || ( 66 – 6)

காதுகளுக்கு இனிமையான பரிஹாச வசனங்களாலும்; கைகளைப் பிடித்துக் கொண்டு, பலவகை முத்தங்கள் தந்து கெட்டியாகத் தழுவிக் கொண்டு, தாங்கள் அந்தப் பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்தினீர்கள் அல்லவா? ( 66 – 6 )

வாஸோ ஹரண தி3னே யத்3வாஸோ
ஹரணம் ப்ரதி ச்’ருதம் தாஸாம் |
தத3பி விபோ4 ரஸ விவச’ ஸ்வாந்தானாம்
காந்த ஸுப்ருவாமத3தா3:|| ( 66 – 7)

பிரபுவே! வஸ்த்ராபஹாரம் செய்த தினத்தில் இடுப்பில் இருந்து எந்த வஸ்திரத்தை அவிழ்ப்பது பிரதிக்ஞை செய்யப்பட்டிருந்ததோ, சிருங்கார ரசத்தில் மூழ்கிய அந்தக் கட்டழகிகளுக்குத தாங்கள் அதையும் செய்தீர்கள் அல்லவா? ( 66 – 7 )

கந்த3லித க4ர்மலேச’ம் குந்த3ம்ருது3
ஸ்மேர வக்த்ர பதோ2ஜம் |
நந்த3ஸுத த்வாம் த்ரிஜக3த் ஸுந்த3ரம்
உபகூ3ஹ்யம் நந்தி3தா பா3லா:|| ( 66 – 8)

சரீரத்தில் தோன்றிய சிறு சிறு வியர்வைத் துளிகளை உடைய; முல்லைப்பூ போன்ற இளம் புன்னகை தவழும் முகத்தை உடைய; த்ரிலோக சுந்தரன் ஆன உம்மைக் கட்டித் தழுவி அப்பெண்கள் ஆனந்தம் அடைந்தனர் அல்லவா? ( 66 – 8)

விரஹேஷ்வங்கா3ர மய :ச்’ருங்கா3ர
மயச்’ச ஸங்க3மே ஹி த்வம் |
நிதரா மங்கா3ரமய ஸ்தத்ர
புனஸ்ஸங்கமேSபி சித்ரமிதம் || ( 66 – 9)

தாங்கள் விட்டுப் பிரியும் பொழுது தீக்கனல் போன்றவர். சேர்ந்திருக்கும் போது சிங்கார ரூபியாக ஆவீர்கள். ஆனால் அந்த இராசக்ரீடையில் சேர்ந்து இருக்கும் போதும் தீக்கனல் போன்று இருந்தீர்கள் என்பது அதிசயம்.(66-9)

ராதா4 துங்க3 பயோத4ர
ஸாது4 பரிரம்ப4 லோலுபாத்மானம்|
ஆராத4யே ப4வந்தம்
பவனபுராதீ3ச’ ச’மய ஸகலக3தா3ன் || ( 66 – 10)

ராதையின் உயர்ந்த ஸ்தனங்களைக் நன்றாக அணைத்துக் கொள்வதில் ஆசைகொண்ட மனத்தை உடைய உங்களை நான் ஆராதிக்கின்றேன். குருவாயூரப்பா! என் வியாதிகள் எல்லாவற்றையும் தணிக்கவேண்டும். (66-10)
 
த3ச’கம் 67 ( 1 to 5)

ப4க3வத திரோதா4னம்
ஸ்புரத் பரானந்த3 ரஸாத்மகேன
த்வயா ஸமாஸாதி3த போ4க3லீலா:|
ஆஸீம மானந்த3ப4ரம் ப்ரபன்னா:
மஹாந்த மாபூர் மத3மம்பு3ஜாக்ஷ்ய: || ( 67 – 1)

பிரகாசிக்கின்ற பரமானந்த ஸ்வரூபியான தங்களால் சுகபோகங்களை அடைந்து; அதனால் எல்லையற்ற ஆனந்தம் அடைந்த அவர்கள்; அதன் காரணமாக மிகுந்த செருக்கு அடைந்தார்கள். ( 67 – 1 )

நிலீயதேSசௌ மயி மைய்ய மாயம்
ரமாபதி விஸ்வ மனோபி4 ராமம் |
இதிஸ்ம ஸர்வா: கலிதாபி4மனா:
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோபூ4 : || ( 67 – 2 )

“லக்ஷ்மி காந்தனும், எல்லாருடைய மனத்தையும் கவரும் இந்தக் கிருஷ்ணன் கபடம் இல்லாமல் என்னிடமே மயங்கி இருக்கின்றான்! என்னிடமே மயங்கி இருக்கின்றான்!” என்றே ஒவ்வொரு பெண்ணும் கர்வம் அடைந்ததைக் கண்டு, ஹே கோவிந்தா! தாங்கள் அவர்களிடமிருந்து மறைந்து போய்விட்டீர்கள். ( 67 – 2)

ராதா4பி4தா4ம் தாவத3 ஜாத க3ர்வாம்
அதிப்ரியம் கோ3ப வதூ4ம் முராரே |
ப4வான பாதாய க3தோ விதூ3ரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ || ( 67 – 3)

ஹே முராரி! அப்போது தாங்கள் கர்வம் கொள்ளதவளும், அதனால் தங்களுக்குப் பிரியமானவளும் ஆன ராதை என்னும் கோபியை அழைத்துக் கொண்டு வெகு தூரம் சென்று அவளுடன் விளையாடிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? ( 67 – 3)

திரோஹிதேSதத்வயி ஜாத தாபா:
ஸமம் ஸமேதா: கமலாயதாக்ஷ்ய:|
வனே வனே த்வாம் பரி மார்க3 யந்த்யோ
விஷாத3 மபுர்ப4க3வன்ன பாரம் || ( 67 – 4)

பகவன்! தாங்கள் மறைந்தவுடன் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை உடைய அந்த கோபிகைகள் ஒரே போல தாபம் அடைந்து, ஒன்றாகச் சேர்ந்து, ஒவ்வொரு காட்டிலும் சென்று, தங்களைத் தேடி, எல்லையே இல்லாத வருத்தத்தை அடைந்தார்கள். ( 67 – 4 )

ஹாசூத ஹா சம்பக கர்ணிகார
ஹா மல்லிகே மாலதி பா3லவல்ய:|
கிம் வீக்ஷிதோ நோ ஹ்ருத3யைகசோர:
இத்யாதி தாஸ்த்வத் ப்ரவனா விலேபு:|| ( 67 – 5)

ஏ மாமரமே! ஏ சண்பக மரமே! ஏ கர்ணிகார மரமே! ஏ மல்லிகையே! ஏ மாலதியே! ஏ இளம் கொடிகளே! எங்கள் மனத்தைக் கவர்ந்து சென்ற ஒருவனை நீங்கள் கண்டீர்களா? என்று கதறினார்கள். ( 67 – 5)
 
த3ச’கம் 67 (6 to 10)

ப4க3வத திரோதா4னம்

நிரீக்ஷி தோSயம் ஸகி பங்கஜாக்ஷ்ய:
புரோ மாமாத்யாகுல மாலபந்தீ |
த்வாம் பா4வனா சக்ஷுஷி வீக்ஷ்ய காசித்
தாபம் ஸகீ2னாம் த்3விகு3ணீ சகார || ( 67 – 6)


ஒருத்தி தங்களை மனக்கண்ணில் கண்டு,” ஏ தோழிகளே! தாமரைக் கண்ணன் என் எதிரில் காணப்பட்டான்!” என்று பரபரப்புடன் கூறி தோழிகளின் வருத்தத்தை இரண்டு மடங்கு ஆக்கினாள். ( 67 – 6)

த்வதா3த்மிகாஸ்தா யமுனா தடாந்தே
தவானுசக்ரு: கில சேஷ்டிதானி |
விசித்ய பூ4யோsபி ததை2வ மானத்
த்வயா விமுக்தாம் தத்3ருசு’ச்’ச ராதா4ம் || ( 67 – 7 )


தங்களிடம் லயித்து தன்மயம் ஆகித் தாங்களாகவே மாறிவிட்ட அந்த கோபிகைகள், யமுனைக் கரையில் பூதனா மோக்ஷம் போன்ற தங்கள் சேஷ்டிதங்களை அனுகரணம் செய்தார்கள் அல்லவா? மறுபடியும் உங்களைத் தேடி வரும்போது , அவளும் கர்வம் கொண்டதால் தனியே விடப்பட்ட ராதையையும் கண்டார்கள் அல்லவா? ( 67 – 7)

தத ஸமம் தா விபினே ஸமந்தாத்
தமோவதாராவதி4 மார்க3யந்த்ய:|
புனர் விமிஸ்ரா யமுனா தடாந்தே
ப்4ருச’ம் விலேபுச்’ச ஜகு3ர் கு3ணாம்ஸ்தே || ( 67 – 8 )


அதன் பிறகு அவர்கள் ராதையுடன் கூட, காட்டில் நான்கு பக்கங்களிலும் இருட்டும் வரையில் தேடி, மீண்டும் யமுனைக் கரையில் ஒன்று சேர்ந்து வருந்தி நின்றனர். தங்களைப் புகழ்ந்து பாடவும் செய்தனர். ( 67 – 8)

ததா2 வ்யதா2 ஸங்குல மானஸானாம்
வ்ரஜாங்க3னானாம் கருணை க ஸிந்தோ4|
ஜகத் த்ரயீ மோஹன மோஹனாத்மா
த்வாம் ப்ராது3 ராஸீரயி மந்த3ஹாஸீ || ( 67 – 9 )


ஹே கிருஷ்ணா! அவ்வாறு வருந்திய மனத்தை உடைய கோபஸ்திரீகள் எதிரே மூவுலங்களையும் மயக்குகின்ற சுந்தர வடிவுடனும், மந்தஹாசத்துடனும் தாங்கள் தோன்றினீர்கள் அல்லவா? ( 67 – 9 )

ஸந்தி3க்3த4 ஸந்த3ர்ச’ன மாத்மகாந்தம்
த்வாம் வீக்ஷ்ய தன்வ்யஸ் ஸஹஸா ததா3னீம் |
கிம் கிம் ந சக்ரு: ப்ரயதா3திபா4ரத்
ஸ த்வம் க3தா3த் பாலய மாருதேச’ || ( 67 – 10)


“மீண்டும் காண்போமா?” என்று ஏங்கிய அந்தப் பெண்கள் தங்களின் ப்ரியதமனாகிய உங்களைக் கண்டு ஆனந்தத்திலும் அதிசயத்திலும் விரைந்து என்னென்ன செய்யவில்லை! அப்படிப்பட்ட குருவாயூரப்பா! என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும். ( 67 – 10)
 
Kanda puraanam - Asura kaandam

5g. விருத்தை மீளுதல்.


தவத்தை மெச்சிக் காட்சி தந்தான்
தவச்சீலர் குச்சகர் முன்பு நமன்!


“விரும்புவதைக் கேளும் முனிவரே!”
திருவாய் மலர்ந்தருளினான் நமன்.

“மகனுக்கு மணம் பேச வந்தேன்;
மணமகள் பிணமாகி விட்டாள்.

முன்போல் அவளைத் தரவேண்டும்
என் மகன் திருமணம் நடப்பதற்கு!”

தூதனிடம் ஆணை இட்டான் நமன்,
“துரிதமாக இவள் உயிரை மீட்டுவா!”

உடலுள் உயிர் புகுந்த அளவில்
உடன் எழுந்து கொண்டாள் விருத்தை.

உறங்கியவள் போல் எழுந்தவளைக்
கிறங்கிய தாய் கட்டி அணைத்தாள்.

ஏங்கிய அன்புத் தோழிகள் வந்து
தூங்கி விழித்தவளை அணைத்து;

குச்சக முனிவரைப் போற்றினர்,
பத்திரமாக அவளை மீட்டதற்கு.

குச்சகர் மகனை அழைத்து வந்தார்;
விருத்தையுடன் நடந்தது திருமணம்.

இனிய இல்லறத்தில் மலர்ந்தான்
இனிய வரவாக ஒரு திருமகன்

மிருகண்டூயரின் மகன் மிருகண்டு!
மிருகண்டுவுக்கு வயது ஆறு ஆனது.

தவம் செய்யத் தந்தை சென்றது போல,
தவம் செய்ய மிருகண்டூயரும் சென்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
2 ( # 5 G). RESURRECTION OF VIRUTHTHAI.

Yamadharman was pleased by the penance of Kuchchagar. He appeared in front of the sage and asked him,” What do you wish for, revered sire?”

“I came here to fix the wedding of my son with a girl but now she lies dead. Please return her to me alive so that I can get her married to my son as originally planned!”

Yamadharman ordered his servant to go fetch the life of the girl immediately and return it to her. The girl woke up as if from a deep sleep.The joy of her mother knew no bounds. Her friends were overwhelmed with happiness.

Kuchchgar brought his son, whose wedding with Viruththai was promptly celebrated. They lived a happy life as a result of which they were blessed with a son Mrugandu.

When the son became six years of age, Mrugandooyar left to perform penance – the same way his father had left him earlier.
 
VINAAYAKA PURAANAM 1

23d. மாவலி

மாவலி விரோச்சனனின் மைந்தன்;
மகா பலம் பொருந்திய அசுர அரசன்.

கடும் தவம் செய்தான் சிவனைக் குறித்து.
அரும் வரங்கள் பெற்றான் பெருமானிடம்.

குருவிடம் கேட்டான் அரிய கேள்வி,
“பெறுவது எப்படி நான் இந்திரப் பதவி?”

“நூறு அஸ்வமேத யாகத்தின் பயனே
யாவரும் விரும்பிடும் இந்திரப் பதவி!”

“செய்வேன் அஸ்வமேத யாகங்கள்!
எய்துவேன் நிகரில்லா இந்திரப்பதவி.”

முனிசிரேஷ்டர்கள் வந்து குவிந்தனர்;
முடிந்தது தொண்ணூற்று ஒன்பது யாகம்.

தொடங்கி விட்டது நூறாவது யாகம்.
முடிந்து விட்டால் பறிபோகும் பதவி.

பதவியை விட யாருக்கு சம்மதம்?
பதறி ஓடினான் மஹா விஷ்ணுவிடம்.

ஆறுதல் கூறினார் அவர் இந்திரனுக்கு,
“ஆவான செய்வேன் யாகம் தடைபட!

ஒழுக்கம் தவறாத மாவலியை வெல்ல
வழக்கமான உபாயங்கள் பயன் தரா!

மாவலியின் வலிமையைக் கொண்டே
மாவலியின் யாகத்தைக் குலைப்பேன்!”

அதிதி வேண்டினாள் ஹரியை மகனாக;
அதிதியிடம் அவதரித்தார் வாமனனாக.

தந்தை கச்யபரிடம் கேட்டான் வாமனன்,
இந்திரன் பதவி நிலைத்திட வேண்டும்.

மாவலியின் யாகம் தடைபட வேண்டும்.
ஆவன கூறுவீர் இவை நிறைவேறிட!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1

26d. Mahaa Bali

Mahaa Bali was the son of Virochanan. As his names suggested he was mighty and valorous beyond words. He did severe penance towards Lord Siva and got many boons from him.

One day he asked his Guru, “How can I attain the position of Indra?” The guru replied that performing one hundred aswamedha yaaga would confer the power and position of Indra on any person.

Mahaa Bali decided to perform one hundred aswamedha yaaga and become the new Indra. All the sages and rushis were were brought to his palace and they completed ninety nine yaagas successfully. The hundredth yaaga was started.

Indra panicked since he would be dislodged by the New Indra from his powerful position. He ran to Mahaa Vishnu for help and guidance. Vishnu consoled him and said,

“I shall interrupt and ruin the hundredth yaagam. Then you will be safe. But since Mahaabali is a person of Integrity and character, the usual saama, daana, bedha and dandam will not work here. I will use his own might and greatness against him and ruin his yaaga.”

Aditi had wished that Vishnu should be born as her son. Vishnu used this opportunity to fulfill both these missions.

He was born to Aditi and sage Kasyapa as Vamana.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#3d. அதிதியும், திதியும்


சபித்தாள் திதி தந்திரன் இந்திரனை மனமார;
கோபித்தாள் நடத்திய நயவஞ்சக நாடகத்தை.

“திரிலோக அதிபதிப் பதவியை இழந்துவிட்டு
திரிவாய் அலைந்து, குலைந்து, மெலிந்து!”

அதிதியின் வஞ்சனையையும் அறிந்தாள்;
அதீத சினத்துடன் சபித்தாள் அவளையும்!

“பிறந்தவுடனே குழந்தைகள் கொல்லப்பட்டு
இறப்பதைக் கண்டு நெஞ்சு துடிதுடிப்பாய் நீ!”

அறிந்தார் காசியபர் நடந்த நிகழ்ச்சிகளை.
ஆறுதல் கூறினார் அன்புடன் திதி தேவிக்கு.

“மருத்துக்களாக விளங்குவர் மகன்கள்;
பொருந்துவர் இந்திரனுடன் தம் புகழில்.

சாபங்கள் பலன் தரும் துவாபரயுகத்தில்,
சதுர் யுகம் இருபது எட்டில் என்றறிவாய்

கிடைத்துள்ளது எனக்கும் பிரம்ம சாபம்;
கிடைத்துள்ளது எனக்கும் வருண சாபம்;

மானிடப் பிறவியை எடுப்போம் நாங்கள்;
மாளாத துயரை அனுபவிப்போம் நாங்கள்;

சாபம் தொடரும் பல ஜன்மங்களுக்கு;
தாபம் தீர்ந்து மன அமைதி கொள்வாய்!”

கோபம் மறைந்தது திதியின் மனத்தில்;
பாவம் செய்தால் உண்டு தண்டனை.

பிறந்தார் காசியபர் வசுதேவனாக;
பிறந்தாள் அதிதி வந்து தேவகியாக;

சாபங்கள் பலித்தன, பலனைத் தந்தன;
சாபங்கள் தொடரும் ஜன்மாந்திரமாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#3d. Aditi and Diti


Diti cursed Indra for his treacherous deeds. “You will lose your rulership on the three worlds and roam around pitiably.”


She knew the wicked part played by her sister Aditi in this foul play. Diti cursed Aditi,” You will suffer as much as I do and have your new born babies killed right in front of your eyes”


Sage Kashyap came to know of these happenings and consoled his wife Diti, “Your sons will become the Forty nine Marut GaNaas. They will be as famous as Indra.Your curses will take effect in the Dwaapara yuga in the twenty eighth Chatur yuga.


I too got cursed by Varuna. I got another curse from Brahma. I will be born as human being along with Aditi. We both will suffer a lot in that birth. The curse will chase for many births until they take effect. The wrongdoer will get punished. Calm down now!” Diti calmed down after listening to her husband.



In the Dwaapara yuga Sage Kashyap was born as Vasudeva and Aditi as Devaki. The curses took effect and they both suffered a lot. Curses can chase humans over many births!
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 68 ( 1 to 5)

கோ3பிகானாம் பரம ஆஹ்லாத3:

தவ விலோகனாத்3 கோ3பிகா ஜனா:
ப்ரமத3 ஸங்குலா: பங்கஜேக்ஷணா:|
அம்ருத தா4ரயா ஸம்ப்லுதா இவ
ஸ்திமிததாம் த3து3ஸ் த்வத் புரோக3தா:|| ( 68 – 1 )

செந்தாமரைக் கண்ணா! கோபிகைகள் தங்களைக் கண்டதால் ஆனந்தம் மேலிட்டவர்களாகி அமிர்த வர்ஷத்தில் நனைந்தவர்கள் போல உங்கள் முன்வந்து அசைவற்ற தன்மையை அடைந்தார்கள் அல்லவா? ( 68 – 1)

தத3னு காசன த்வத் கராம்பு3ஜம்
ஸபதி3 க்3ருஹ்ணதி நிர்விச’ங்கிதாம் |
க4னபயோத4ரே ஸம்விதா4ய ஸா
புலக ஸம்வ்ருதா தஸ்து2ஷீ சிரம் || ( 68 – 2 )


அதன் பிறகு ஒருத்தி விரைவாகத் தங்கள் கராரவிந்தத்தைப் பற்றி அச்சம் இன்றி தன் பெருத்த ஸ்தனத்தில் வைத்துக் கொண்டு வெகு நேரம் மயிர் கூச்சம் அடைந்தாள் அல்லவா? ( 68 – 2)

தவ விபோ4Sபரா கோமலம் பு4ஜம்
நிஜ க3லாந்தரே பர்ய வேஷ்டயத்|
கல ஸமுத்3க3தம் ப்ராணமாருதம்
ப்ரதி நிருந்த4தி வாSதி ஹர்ஷுலா|| ( 68 – 3 )

மற்றொருத்தி மிகவும் சந்தோஷம் அடைந்தவளாய் தங்களுடைய அழகான கையைத தன் கழுத்தில் இருந்து வெளிச் செல்லும் பிராண வாயுவைத் தடுத்து நிறுத்துகின்றவள் போலத் தன் கழுத்தில் சுற்றிக் கொண்டாள் அல்லவா? ( 68 – 3)

அபக3தத்ரபா காSபி காமினி
தவ முகா2ம்பு3ஜாத் பூக3 சர்விதம் |
ப்ரதி க்3ருஹ்ய ததவக்த்ர பங்கஜே
நித3த4தி க3தா பூர்ண காமதாம் || ( 68 – 4 )


வேறு ஒரு பெண் வெட்கத்தை விட்டவளாகித் தங்கள் திருமுகமலரில் இருந்து தாங்கள் மென்ற தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு அதைத் தன் வாயில் இட்டுச் சுவைத்து தன் மனோரதத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.( 68 – 4)

விகருணே வனே ஸம்விஹாய மாம்
அபக3தோஸி கா த்வாமிஹ ச்’ப்ருசே’த்|
இதி ஸரோஷயா தாவதே3கயா
ஸஜல லோசனம் வீக்ஷிதோ ப4வான் || ( 68 – 5)


“கருணையே இல்லாமல் என்னைக் காட்டில் தனியாக விட்டுச் சென்றாய் அல்லவா? உன்னை இப்போது யார் தொடுவாள் ?” என்று கோபத்துடன் கண்களில் கண்ணீர் வர ஒருத்தி தங்களைக் கண்டாள் அல்லவா? ( 68 – 5 )
 
SREEMAN NAARAAYANEEYAM


த3ச’கம் 68 ( 6 to 10)


கோ3பிகானாம் பரம ஆஹ்லாத3:

இதி முதா3SS குலைர் வல்லவீ ஜனை:
ஸம முபாக3தோ யாமுனே தடே|
ம்ருது3 குசாம்ப3ரை: கல்பிதாஸனே
கு4ஸ்ருண பா4ஸுரே பர்ய சோ’ப4தா2: || ( 68 – 6 )

இவ்விதம் ஆனந்த பரவசர்களாகிய கோப ஸ்திரீகளுடன் யமுனைக் கரைக்கு வந்து குங்குமத்தால் விளங்குவதும் மிருதுவான ரவிக்கைகளால் உண்டு பண்ணப் பட்டதும் ஆன ஆசனத்தில் தாங்கள் வீற்றிருந்தீர்கள் அல்லவா? ( 68 – 6)

கதி விதா4 க்ருபா கோS பி ஸர்வதோ
த்ருத த3யோ த3யா கேசிதா3ச்’ரிதே|
கதிசி தீ3த்3ருஷா மாத்3ரு சே’ஷ்வபீத்
யபி4ஹிதோ ப4வான் வல்லவீ ஜனை:|| ( 68 – 7 )

“கருணை என்பதில் எத்தனை விதம் உண்டு? சிலர் எல்லோரிடத்திலும் கருணை கொண்டால் சிலர் தங்களை ஆச்ரயித்தவர்களிடத்தில் மட்டும் கருணை கொள்கிறார்கள். ஆச்ரயித்தவர்களிடமும் கருணை அற்றவர்களாக சிலர் உங்களைப் போல இருக்கின்றார்கள்!” என்று அந்தப் பெண்கள் தங்களிடம் கூறினார்கள் அல்லவா? ( 68 – 7 )

அயி குமாரிகா நைவ ச’ங்க்யதாம்
கடி2னதா மயி ப்ரேம காதரே |
மயி து சேதஸோ வோனு வ்ருத்தயே
க்ருத மித3ம் மயேத்யூசிவான் ப4வான்|| ( 68 – 8 )

“ஓ பெண்களே! பிரேமை அற்று விடுமோ என்று என்னிடத்தில் கடுமையை பற்றி சந்தேகப்படவேண்டாம். கண்ணில் இருந்து மறைந்தது உங்கள் மனம் என்னிடம் தொடர்பு கொள்வதற்காகச் செய்யப்பட்டது” என்று கூறினீர்கள் அல்லவா?( 68 – 8)

அயி நிச’ம்யதாம் ஜீவ வல்லபா4:
ப்ரியதாமோ ஜானே நேத்3ருசோ’ மம|
ததி3ஹ ரம்யதாம் ரம்ய யாமினீஷூ
அனுபரோத4 மித்யாலபோ விபோ4 || ( 68 – 9)

“ஓ பிராண நாயிகைகளே கேளுங்கள்! உங்களைப் போன்ற மிகவும் பிரியமான பந்து மித்திரர்கள் வேறு எவரும் எனக்கு இல்லை. ஆகையால் இந்த யமுனைக் கரையில் ரமணீயமான இரவுகளில் தங்கு தடை இல்லாமல் கிரீடை செய்யப்படும்”என்று நீங்கள் திருவாய் மலர்ந்து அருளினீர்கள் அல்லவா? ( 68 – 9)

இதி கி3ராSதி4கம் மோத3 மேது3ரை:
வ்ரஜ வது4ஜனை ஸாகமாராமன்|
கலித கௌதுகோ ராஸ கே2லனே
கு3ருபுரீபதே பஹி மாம் க3தா3த்|| ( 68 – 10)

ஹே குருவாயூரப்பா! என்ற திருவாக்கினைக் கேட்டு, ராசக்ரீடையில் உற்சாகம் கொண்ட, மிகுந்த ஆனந்தத்துடன் கோகுலப் பெண்களுடன் விளையாடும் தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
( 68 – 10)
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 69 ( 1 to 3)

ராஸக் கிரீடை3

கே’ச பாச’ த்4ருத பிஞ்சி2கா விததி
ஸஞ்சலன் மகர குண்ட3லம்
ஹாரஜால வன மாலிகா லலிதா
மங்க3ராக3 க4ன சௌரப4ம் |
பீத சேல த்4ருத காஞ்சி காஞ்சித
முத3ஞ்ச த3ம்சு’மணி நூபுரம்
ராஸகேலி பரி பூ4ஷிதம் தவஹி
ரூபமீச’ கலயாமஹே || ( 69 – 1 )


ஹே சர்வேஸ்வரனே! கொண்டையில் தரிக்கப்பட்ட மயில்பீலிகளின் வரிசைகளை உடையதும்; சலிக்கின்ற மகர குண்டலங்களை அணிந்ததும்; முத்து மாலைகளாலும், வனமாலைகளாலும் மனோஹரமானதும்; சந்தனப் பூச்சின் நறுமணம் கொண்டதும்; மஞ்சள் பட்டாடையின் மீது கட்டப்பட்ட மேகலையால் அழகுற்றதும்; காந்தி வீசும் இரத்தின சிலம்புகள் அணிந்ததும்; ராசக்ரீடைக்கென்றே விசேஷமாக அலங்கரிக்கப்பட்டதும் ஆன தங்கள் மேனியை நாங்கள் தியானிக்கின்றோம். ( 69 – 1)

தாவ தே3வ க்ருத மண்ட3னே கலித
கஞ்சுலீக குச மண்ட3லே
க3ண்டலோல மணி குண்ட3லே யுவதி
மண்ட3லேSத2 பரிமண்ட3லே|
அந்தரா ஸகல ஸுந்தரீ யுக3ள
மிந்திரா ராமண ஸஞ்சரன்
மஞ்ஜுலாம் தத3னு ராசகேலி மயி
கஞ்ஜநாப4 ஸமுபாத3தா4 || ( 69 – 2​)


அப்போதே அலங்காரம் செய்துகொண்டவர்களும்; ரவிக்கைகள் தரித்த ஸ்தன மண்டலங்களை உடையவரும்; கன்னங்களில் அசைகின்ற ரத்தின குண்டலங்களை அணிந்தவரும் ஆன இளம் பெண்களின் கூட்டம் மண்டலமாகச் சுற்றி நின்ற பொழுது; இரண்டு இரண்டு பெண்களுக்கு இடையே சஞ்சரித்துக் கொண்டு லக்ஷ்மி காந்தனே மனோஹரமான ராசக்ரீடையைச் செய்தீர்கள் அல்லவா? ( 69 – 2)

வாஸுதே3வ தவ பா4ஸ மானமிஹ
ராஸகேலி ரஸ சௌரப4ம்
தூ3ரதோபி க2லு நாரதா3 க3தி3தம்
ஆகலய்யா குதுகாகுலா |
வேஷ பூ4ஷண விலாஸ பேச’ல
விலாஸினீ ச’த ஸமாவ்ருதா
நாகதோ யுக3பத்3 ஆக3தா வியதி
வேக3தோத2 ஸுர மண்ட3லி || ( 69 – 3 )


ஹே வாசுதேவனே! இவ்வுலகில், யமுனைக் கரையில் பிரகாசிக்கும், தங்களுடைய ராசக்ரீடையின் வைபவத்தை, வெகுதூரத்தில் இருந்த நாரதர் கூறக் கேட்டு, வியப்புற்ற தேவர்கள் கூட்டம், வேஷம், பூஷணம், ஸ்ருங்கார சேஷ்டைகள் இவைகளால் அழகு பெற்ற, அநேகம் ஸ்திரீகள் சூழ, விரைவாக சுவர்க்கத்தில் இருந்து ஆகாயத்துக்கு வந்தது அல்லவா?
( 69 – 3)
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 69 ( 4 to 6)

ராஸக் கிரீடை3

வேணு நாத3 க்ருத தானதா3ன கல
கா3னராக3 க3தி யோஜனா
லோப4னீய ம்ருது3 பாத3 பாத க்ருத
தால மேலான மனோஹரம் |
பாணி ஸங்க்வணித கங்கணாஞ்ச முஹுர்
அம்ஸ லம்பி3த கராம்பு3ஜம்
ச்’ரோணி பி3ம்ப3 சலத3ம்ப3ரம் ப4ஜத
ராஸகேலி ரஸ ட3ம்ப3ரம் || ( 69 – 4 )


வேணு நாதத்தால் செய்யப்பட்ட பாட்டில் இனிய ஸ்வரங்களைக் காண்பித்ததாலும்; இனிமையான பாட்டினாலும்; பல ராகங்களை ஒன்றாக இணைத்ததாலும்; மிகவும் அழகிய மிருதுவான கால்களை எடுத்து வைக்கும் தாளங்களின் சேர்க்கையாலும்; மனோஹரமாகக் கைகளில் ஒலிக்கின்ற வளையல்களாலும்; தோள்களின் மீது வைக்கப்பட்ட தாமரைக் கைகளாலும்; இடையில் அசையும் வஸ்திரங்களாலும் அழகுற்ற ராசக்ரீடையின் கோலாஹலத்தை சேவியுங்கள். ( 69 – 4)

ச்ரத்3த4யா விரசிதானுகா3 ந க்ருத
தார தார மது4ரஸ்வரே
நர்த்தSனேத2 லாலிதாங்க3 ஹார
லுலிதாங்க3 ஹார மணி பூ4ஷணே |
ஸம்மதே3ன க்ருத புஷ்பவர்ஷ மல
முன் மிஷத்3 தி3விஷதா3ம் குலம்
சின்மயே த்வயி நிலீயமான மிவ
ஸம்முமோஹ ஸ வதூ4குலம் || ( 60 – 5)

பிறகு மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்ட பின்பாட்டில் மேலும் மேலும் உச்சஸ்தாயியை அடைந்த மதுரமான ஸ்வரங்களாலும்; அழகான அபிநயத்தால் அசையும் முத்து மாலைகளாலும்; இரத்தின மாலைகளாலும்; நர்த்தனம் நடக்கும்போது பேரானந்ததுடன் பூமாரி பெய்து, பார்க்கப் பேராவல் கொண்டு, பெண்களுடன் வந்திருந்த தேவ சமூஹம் சைதன்ய ரூபியாகிய தங்களிடம் லயித்து மோஹம் அடைந்தது.( 69 – 5)

ஸ்வின ஸன்ன தனு வல்லரீ தத3னு
காSபி நாம பசு’பாங்க3னா
காந்த மம்ஸ மவலம்ப3தே ஸ்ம ப்4ருச’
தாந்தி பா4ர முகுலேக்ஷணா |
காசி தா3சலித குந்தளா நவ படீ
ரஸார நவ சௌரப4ம்
வஞ்சனேனே தவ ஸஞ்சு சும்ப பு4ஜ
மஞ்சிதோரு புலகாங்குரம் || ( 69 – 6)

அதன் பிறகு வியர்த்து விட்ட, சோர்வுற்ற, கொடி போன்ற சரீரம் உடைய ஒரு கோபிகை, மிக அதிகமான களைப்பினால் கண்களை மூடிக் கொண்டு தங்கள் தோள் மீது சாய்ந்துவிட்டாள் அல்லவா? வேறொருத்தி அவிழ்ந்து அசையும் கூந்தலுடன், புதிய சந்தனக் குழம்பின் நறுமணம் கொண்ட தங்கள் கையை, முகருவது போல மயிர் கூச்செறியும் வண்ணம் நன்கு முத்தம் இட்டாள் அல்லவா? ( 69 – 6)
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 69 ( 7 to 9)

ராஸக் கிரீடை3

காபி க3ண்ட3பு4வி ஸன்னிதா4ய நிஜ
க3ண்ட3 மாகுலித குண்ட3லம்
புண்ய பூர நிதி4 ரன்வவாய தவ
பூக3 சர்வித ரஸாம்ருதம் |
இந்தி3ரா விஹ்ருதி மந்தி3ரம் பு4வன
ஸுந்த3ரம் ஹி நடனாந்தரே
த்வாமவாப்ய த3து4ரங்க3னா கிமு ந
ஸம்மதோ3ன்மத3 த3சா’ந்தரம் || ( 69 – 7)


புண்ணியப் பெருக்குக்கு இருப்பிடமான ஒருத்தி தங்கள் கன்னங்களில் அசைகின்ற குண்டலங்களை உடைய தன்னுடைய கன்னத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தாங்கள் மென்ற தாம்பூல ரசம் என்னும் அமிர்தத்தை அருந்தினாள் அல்லவா? ராசக்ரீடையில் லக்ஷ்மி தேவியின் விலாசத்துக்கு இருப்பிடமும் லோக சுந்தரனும் ஆன தங்களை அடைந்து சந்தோஷத்தால் என்னென்ன அவஸ்தைகளை அனுபவிக்கவில்லை அந்தப் பெண்கள் ? ( 69 – 7)

கா3னமீச’ விரதம் க்ரமேண கில
வாத்3ய மேலன முபாரதம்
ப்3ரஹ்ம ஸம்மத3 ரஸாகுலாஸ் ஸத3ஸி
கேவலம் நந்ருது ரங்க3னா ;|
நாவித3ன்னபி ச நீவிகாம் கிமபி
குந்தலீ மபி ச கஞ்சுலீம்
ஜ்யோதிஷாமபி கத3ம்ப3கம் தி3வி
விலம்பிதம் கிமபரம் ப்3ருவே
|| ( 69 – 8 )

ஹே கிருஷ்ணா! பாட்டு முடிவடைந்து, கிராமமாக வாத்தியங்களின் இசையும் ஓய்ந்தது அல்லவா? ஸ்திரீகள் மட்டும் பிரம்மானந்த ரசத்தில் மூழ்கி நர்த்தனம் செய்து கொண்டிருந்தனர். அது மட்டும் அல்ல! அவர்கள் தங்கள் வஸ்திரங்களைப் பற்றியோ, கூந்தலைப் பற்றியோ, ரவிக்கையைப் பற்றியோ ஒன்றுமே அறியவில்லை அல்லவா? ஆகாயத்தில் நக்ஷத்திரக் கூட்டம் கூட அசைவன்றி நின்றுவிட்டது! நான் வேறு என்ன சொல்வேன்? ( 69 – 8)

மோத3 ஸீம்னி பு4வனம் விலாப்ய விஹ்ரு
தீம் ஸமாப்ய ச ததோ விபோ4
கேலி ஸம்ம்ருதி3த நிர்மலாங்க3 நவ
க4ர்மலேச’ ஸுப4கா3த்மானாம் |
மன்மதா2 ஸஹன சேதஸாம் பசு’ப
யோஷிதாம் ஸுக்ருத சோதி3த
ஸ்தாவ தா3கலித மூர்த்தி ராத3தி4த2
மாரவீர பரமோத்ஸவான் || ( 69 – 9 )


பிரபுவே! எல்லா பிரபஞ்சத்தையும் பரமானந்தத்தின் எல்லையில் லயிக்கச் செய்து; ராசக்ரீடையையும் முடித்துக் கொண்டு; அதன் பிறகு ராசக்ரீடையினால் நிர்மலமான அவயவங்களில் தோன்றிய புது வியர்வைத் துளிகளால் அழகான மேனியை உடையவரும்; காமத்தைப் பொறுக்க முடியாத மனதை உடையவர்களும் ஆகிய அந்த கோபிகைகளின் புண்ணியத்தால் ஏவப்பட்டு; அத்தனை சரீரங்களைத் தாங்களும் எடுத்துக் கொண்டு; அவர்களுடன் சரசங்கள் செய்தீர்கள் அல்லவா? ( 69 -9 )
 
த3ச’கம் 69 ( 10 & 11)

ராஸக் கிரீடை3

கேலிபே3த3 பரி லோலிதாபி4 அதி
லாலிதாபி4 அப3லாலிபி4:
ஸ்வைர மீச’ நனு ஸூரஜாபயஸி
சாரு நாம விஹ்ருதீம் வ்யதா4:|
கானனேsபி ச விஸாரி சீ’தல
கிசோ’ர மாருத மனோஹரே
ஸூன சௌ’ரப4 மயே விலேஸித2
விலாஸிநீ ச’த விமோஹனம்|| ( 69 – 10)

ஹே பிரபு! ஆலிங்கனம் போன்ற கிரீடா விசேஷங்களால் மிகவும் சோர்வடைந்த; அதனால் சீராட்டப்பட்ட; பெண்களின் கூட்டத்துடன் யமுனா நதியில் இஷ்டம் போல அழகான ஜலக்ரீடை செய்தீர்கள் அல்லவா? வீசுகின்ற குளிர்ந்த இளங்காற்றினால், அழகிய புஷ்பங்களின் நறுமணம் நிறைந்த வனத்தில், அந்தக் கட்டழகிகளுக்கு மயக்கம் உண்டாகும் வண்ணம் விளங்கினீர்கள் அல்லவா? ( 69 – 10)

காமிநீரிதி ஹி யாமினீஷு க2லு
காமநீயக நிதே4 பவான்
பூர்ண ஸம்மத ரஸார்ணவம் கமபி
யோகி3 க3ம்ய மனுபா4வயன் |
ப்3ரஹ்ம ச’ங்கர முகானபீஹ பசு’
பாங்க3னாஸு ப3ஹுமனயன்
ப4க்த லோக கமனீய ரூப
கமனீய க்ருஷ்ண பரிபாஹிமாம் || ( 69 – 11)


சௌந்தரியத்தின் கடலே! தாங்கள் இவ்விதம் இரவுகளில் அந்தப் பெண்களை; யோகிகளால் மட்டுமே அடையக் கூடியதும், இன்னதென்று சொல்ல முடியாததும் ஆன பிரும்மானந்த சாகரத்தை அனுபவிக்கச் செய்து; பிரமன், சங்கரன் முதலியவர்களைக் கூட கோபிகைகளை மதிக்கச் செய்தீர்கள் அல்லவா? பக்த ஜனங்களால் மட்டுமே அறியப் படக் கூடிய உருவத்தை உடையவரும்; எல்லோராலும் விரும்பப்படுபவரும் ஆன ஸ்ரீ கிருஷ்ணா! என்னைக் நன்கு காப்பாற்ற வேண்டும். ( 69 – 11)
 
KANDA PURANAM - ASURA KANDAM

5h. மிருகண்டூ

திருமண வயதை அடைந்த மிருகண்டூ
திருமணம் புரிந்தார் மருத்துவதியை.


இல்லறம் நடந்தது ஒரு நல்லறமாக;
இல்லறத்தில் மலரவில்லை ஒரு மகவு.

புனித நகர் காசியினை அடைந்தார்;
புனித கங்கை நதியில் நீராடினார்.

மணிகர்ணிகை திருக்கோவில் சென்று
பணியணி நாதனின் பதம் பணிந்தார்

விழைந்து மக்கட்பேற்றை அருந்தவம்
மழை, காற்று, பனி, வெய்யிலில் செய்ய;

ஓராண்டு காலம் ஓடி மறைய, வந்தார்
மிருகண்டூவின் தவத்தை மெச்சி சிவன்.

“அன்பரே! நீர் விழைவது என்ன?”
“அடியேனுக்கு அருள்க மக்கட்பேறு!”

“அறிவு அற்று, நோயுற்று, என்மேல் அன்பு
அற்று, நூறாண்டுகள் வாழ வேண்டுமா?

அழகுற்று, நோயற்று, என்மேல் அன்புடன்
பதினாறு ஆண்டுகள் வாழ வேண்டுமா?”

“அகவை குறைந்தாலும் சரி, பழுதற்றுச்
சிவனை விரும்புபவனே வேண்டும்!

அத்தகைய மைந்தனை அருளினால்
மெத்தவும் மகிழ்வேன் பெருமானே!”

மருத்துவதி சூலுற்ற போது முனிவர்
மிருகண்டூ மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

பங்குனித் திங்கள், மிதுன லக்னத்தில்,
ரேவதி நாளில், பிறந்தான் திருமகன்;

பொன்னையும், மணிகள், மலர்களைச்
சந்தனம், கஸ்தூரியுடன் கலந்து தூவ

தேவ துந்துபிகள் முழங்கின விண்ணில்!
தேவர்கள் வந்து வாழ்த்தினர் மகனை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Kanda Puraanam - asura kaandam

2 (# 5 H). MRUGANDOO'S LIFE.

When Mrugandu attained marriageable age, he married Marhuthuvathi. Their life was happy but for one thing. They were not blessed with a child.

They went to Kasi and took holy bath in Ganges. Mrugandoo worshipped Siva and did severe penance in the heat of the sun, the cold of the winter and rain and snow.

Siva was pleased an appeared before him after one year. Mrugandoo wished for a son.

Siva asked him, "Do you wish to have a son who would live for a hundred years but will lack intelligence, suffer several diseases and will have no bhakti?

Or will you prefer a bright, intelligent son who would live for sixteen years but will have deep love for me?"

Mrugandoo wished for a son who would have love for Siva and who would be bright and intelligent.

When his wife became pregnant, the sage was joyous. On an auspicious day in the month of Panguni a son was born to them.

Gold, gems, flowers were strewn with sandal and kasthoori. Devas played dundubi and blessed the child.

 
Back
Top