SREEMAN NAARAAYANEEYAM
த3ச’கம் 69 ( 1 to 3)
ராஸக் கிரீடை3
கே’ச பாச’ த்4ருத பிஞ்சி2கா விததி
ஸஞ்சலன் மகர குண்ட3லம்
ஹாரஜால வன மாலிகா லலிதா
மங்க3ராக3 க4ன சௌரப4ம் |
பீத சேல த்4ருத காஞ்சி காஞ்சித
முத3ஞ்ச த3ம்சு’மணி நூபுரம்
ராஸகேலி பரி பூ4ஷிதம் தவஹி
ரூபமீச’ கலயாமஹே || ( 69 – 1 )
ஹே சர்வேஸ்வரனே! கொண்டையில் தரிக்கப்பட்ட மயில்பீலிகளின் வரிசைகளை உடையதும்; சலிக்கின்ற மகர குண்டலங்களை அணிந்ததும்; முத்து மாலைகளாலும், வனமாலைகளாலும் மனோஹரமானதும்; சந்தனப் பூச்சின் நறுமணம் கொண்டதும்; மஞ்சள் பட்டாடையின் மீது கட்டப்பட்ட மேகலையால் அழகுற்றதும்; காந்தி வீசும் இரத்தின சிலம்புகள் அணிந்ததும்; ராசக்ரீடைக்கென்றே விசேஷமாக அலங்கரிக்கப்பட்டதும் ஆன தங்கள் மேனியை நாங்கள் தியானிக்கின்றோம். ( 69 – 1)
தாவ தே3வ க்ருத மண்ட3னே கலித
கஞ்சுலீக குச மண்ட3லே
க3ண்டலோல மணி குண்ட3லே யுவதி
மண்ட3லேSத2 பரிமண்ட3லே|
அந்தரா ஸகல ஸுந்தரீ யுக3ள
மிந்திரா ராமண ஸஞ்சரன்
மஞ்ஜுலாம் தத3னு ராசகேலி மயி
கஞ்ஜநாப4 ஸமுபாத3தா4 || ( 69 – 2)
அப்போதே அலங்காரம் செய்துகொண்டவர்களும்; ரவிக்கைகள் தரித்த ஸ்தன மண்டலங்களை உடையவரும்; கன்னங்களில் அசைகின்ற ரத்தின குண்டலங்களை அணிந்தவரும் ஆன இளம் பெண்களின் கூட்டம் மண்டலமாகச் சுற்றி நின்ற பொழுது; இரண்டு இரண்டு பெண்களுக்கு இடையே சஞ்சரித்துக் கொண்டு லக்ஷ்மி காந்தனே மனோஹரமான ராசக்ரீடையைச் செய்தீர்கள் அல்லவா? ( 69 – 2)
வாஸுதே3வ தவ பா4ஸ மானமிஹ
ராஸகேலி ரஸ சௌரப4ம்
தூ3ரதோபி க2லு நாரதா3 க3தி3தம்
ஆகலய்யா குதுகாகுலா |
வேஷ பூ4ஷண விலாஸ பேச’ல
விலாஸினீ ச’த ஸமாவ்ருதா
நாகதோ யுக3பத்3 ஆக3தா வியதி
வேக3தோத2 ஸுர மண்ட3லி || ( 69 – 3 )
ஹே வாசுதேவனே! இவ்வுலகில், யமுனைக் கரையில் பிரகாசிக்கும், தங்களுடைய ராசக்ரீடையின் வைபவத்தை, வெகுதூரத்தில் இருந்த நாரதர் கூறக் கேட்டு, வியப்புற்ற தேவர்கள் கூட்டம், வேஷம், பூஷணம், ஸ்ருங்கார சேஷ்டைகள் இவைகளால் அழகு பெற்ற, அநேகம் ஸ்திரீகள் சூழ, விரைவாக சுவர்க்கத்தில் இருந்து ஆகாயத்துக்கு வந்தது அல்லவா?
( 69 – 3)