VINAAYAKA PURAANAM 1.
26 e. வாமனன்
“விநாயகர் அருளால் முடியும் அது!”
விநாயகர் மந்திரத்தைக் கற்பித்தார்.
வன்னி மரத்தடியில் அமர்ந்து கொண்டு
விநாயகனை தியானித்தான் வாமனன்.
மயில் வாகனத்தில் தோன்றினார் ஐயன்;
மாவலியை வெல்லும் திறன் அளித்தார்.
மரத்தடியில் அமைத்தான் விநாயகனை.
முடித்துக் கொண்டான் ஆராதனைகளை.
வாமனன் சென்றான் மாவலி யாகத்துக்கு.
வாமனனை வரவேற்றான் மன்னன் மாவலி.
“தாங்கள் விழைவது என்னவோ சுவாமி?”
“தவம் செய்யத் தேவை மூன்றடி மண்!”
“மூன்று உலகங்களையும் தருகின்றேன்!
மூன்று அடி மண் எதற்கு போதும்?” என
“மூன்றடி மண்ணால் நிறைவு எய்தாதவன்
மூன்று உலகங்களாலும் நிறைவெய்தான்!”
குலகுரு கண்டு கொண்டார் வாமனனை!
வலியிடம் கூறினார் “மாயாவி விஷ்ணு
இந்திரன் பதவியைக் காத்துக் கொடுக்க
வந்துள்ளான் இன்று இந்த உருவில் இங்கு!
வாக்குத் தானே அளித்துள்ளாய் நீ! நீர்
வார்த்து தத்தம் செய்யாதே!” என்றார்.
“நாடி வந்தால் நாராயணன் நம்மை
நமக்கல்லவோ வந்து சேரும் பெருமை!
வாக்கை மறுத்துச் செழிப்பதைவிட
வாக்குக் கொடுத்து அழிவதே மேல்.
சொல்லே போதும் வாக்கு அளிக்க
இல்லை தேவை நீர் வார்த்துத் தர!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
26 e. வாமனன்
“விநாயகர் அருளால் முடியும் அது!”
விநாயகர் மந்திரத்தைக் கற்பித்தார்.
வன்னி மரத்தடியில் அமர்ந்து கொண்டு
விநாயகனை தியானித்தான் வாமனன்.
மயில் வாகனத்தில் தோன்றினார் ஐயன்;
மாவலியை வெல்லும் திறன் அளித்தார்.
மரத்தடியில் அமைத்தான் விநாயகனை.
முடித்துக் கொண்டான் ஆராதனைகளை.
வாமனன் சென்றான் மாவலி யாகத்துக்கு.
வாமனனை வரவேற்றான் மன்னன் மாவலி.
“தாங்கள் விழைவது என்னவோ சுவாமி?”
“தவம் செய்யத் தேவை மூன்றடி மண்!”
“மூன்று உலகங்களையும் தருகின்றேன்!
மூன்று அடி மண் எதற்கு போதும்?” என
“மூன்றடி மண்ணால் நிறைவு எய்தாதவன்
மூன்று உலகங்களாலும் நிறைவெய்தான்!”
குலகுரு கண்டு கொண்டார் வாமனனை!
வலியிடம் கூறினார் “மாயாவி விஷ்ணு
இந்திரன் பதவியைக் காத்துக் கொடுக்க
வந்துள்ளான் இன்று இந்த உருவில் இங்கு!
வாக்குத் தானே அளித்துள்ளாய் நீ! நீர்
வார்த்து தத்தம் செய்யாதே!” என்றார்.
“நாடி வந்தால் நாராயணன் நம்மை
நமக்கல்லவோ வந்து சேரும் பெருமை!
வாக்கை மறுத்துச் செழிப்பதைவிட
வாக்குக் கொடுத்து அழிவதே மேல்.
சொல்லே போதும் வாக்கு அளிக்க
இல்லை தேவை நீர் வார்த்துத் தர!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.