A poem a day to keep all agonies away!

VINAAYAKA PURAANAM 1.

26 e. வாமனன்

“விநாயகர் அருளால் முடியும் அது!”
விநாயகர் மந்திரத்தைக் கற்பித்தார்.

வன்னி மரத்தடியில் அமர்ந்து கொண்டு
விநாயகனை தியானித்தான் வாமனன்.

மயில் வாகனத்தில் தோன்றினார் ஐயன்;
மாவலியை வெல்லும் திறன் அளித்தார்.

மரத்தடியில் அமைத்தான் விநாயகனை.
முடித்துக் கொண்டான் ஆராதனைகளை.

வாமனன் சென்றான் மாவலி யாகத்துக்கு.
வாமனனை வரவேற்றான் மன்னன் மாவலி.

“தாங்கள் விழைவது என்னவோ சுவாமி?”
“தவம் செய்யத் தேவை மூன்றடி மண்!”

“மூன்று உலகங்களையும் தருகின்றேன்!
மூன்று அடி மண் எதற்கு போதும்?” என

“மூன்றடி மண்ணால் நிறைவு எய்தாதவன்
மூன்று உலகங்களாலும் நிறைவெய்தான்!”

குலகுரு கண்டு கொண்டார் வாமனனை!
வலியிடம் கூறினார் “மாயாவி விஷ்ணு

இந்திரன் பதவியைக் காத்துக் கொடுக்க
வந்துள்ளான் இன்று இந்த உருவில் இங்கு!

வாக்குத் தானே அளித்துள்ளாய் நீ! நீர்
வார்த்து தத்தம் செய்யாதே!” என்றார்.

நாடி வந்தால் நாராயணன் நம்மை
நமக்கல்லவோ வந்து சேரும் பெருமை!

வாக்கை மறுத்துச் செழிப்பதைவிட
வாக்குக் கொடுத்து அழிவதே மேல்.

சொல்லே போதும் வாக்கு அளிக்க
இல்லை தேவை நீர் வார்த்துத் தர!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1.

26e. Vaamanan

Sage Kasyapa said, “It is possible only for Vinayaka. Pray to him”. He taught Vaamana the Vinayaka mantra. Vamana sat under a vanni tree and concentrated on Vinayaka.

Vinayaka appeared on his peacock vaahana and blessed Vaamana with the power to conquer Mahaa Bali. Vaamana did prathishta of a Vinayaka statue under the vanni tree and went to the yaaga saala.

Mahaa Bali was duly impressed by this little brahmachaari’s brahma tejas. He paid obeisance and asked Vaamana,

“What do you wish for swami? Vaamana replied, ” I need three foot lengthof land for doing tapas”


“Mahaa Bali was amused. “What is the use of three foot length of land with your tiny feet? I shall bestow the three worlds on you swami”


Vaamana said, “One who is not contented with three foot length of land will not be contended with the three worlds either. I need only three foot lengths with my own feet”


Sukracharya identified Vaamana as Vishnu in disguise. He warned Mahaa Bali,” This little brahmin is Vishnu in disguise. His aim is to help Indra retain his power and position.”


Mahaa Bali was thrilled now. “If Vishnu himself comes to me asking for something it will only add to my greatness.”

The guru persisted. “You have only committed orally. Do not pour water and gift the land to this brahmin”


Mahaa Bali said, “It is better to be ruined trying to uphold my words rather than live in disgrace by going back on my promise. My words are as good as the gifting with water poured.”




 
DEVI BHAAGAVATAL - SKANDA 4

4#4a. மாயையின் சக்தி (1)

“கலைத்தானா இந்திரன் தாயின் கர்ப்பத்தை?
குலைத்தானா அதை அத்தனை துண்டுகளாக?

தேவர்களின் அரசனல்லவா இந்திரன் – செய்யத்
தேவை அதர்மத்தை வென்று தர்மம் காப்பது!

மூன்று உலகங்களின் அதிபதி ஆனவன்
முன் மொழிந்தான் தாயின் மீது அசத்தியம்.

பெரும் பாவமல்லவா நம்பிக்கை துரோகம்?
பெரும் துரோகம் அல்லவா நயவஞ்சகம்?

நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை;
நீசத்தனமான இத்தகைய ஒரு செயலை.

பாரதப் போர்க்களத்தில் அரங்கேறின
பல கொடூரங்கள் என்று நான் அறிவேன்.

உத்தமர் செய்யும் செயல்களா அவை?
எத்தனை அதர்மங்கள் செய்துள்ளனர்!

சாந்தி தரவில்லை உம் வார்த்தை எனக்கு;
காந்துகின்றது என் மனம் கொடுமைகளால்.

இருந்தார் கிருஷ்ணன் ஸ்த்ரீ லோலனாக!
இருந்தார் கிருஷ்ணர் கபட வஞ்சகனாக!

பிராமண வடிவத்திலேயே கிருஷ்ணன்
புரிந்துள்ளார் பல பாதகங்கள் வாழ்வில்.

தர்ம தேவதை கால்கள் நான்கு உடையது,
தானம், தயை, சத்யம் ஆசாரம் என்பவை.

காணவில்லை அவர்கள் வாழ்வில் இவற்றை;
பேணவில்லை நிச்சல புத்தியுடன் இவற்றை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAL - SKANDA 4

4#4a. The power of Maayaa (1)

King Janamejayan was shocked to hear this.” Did Indra really try to kill the baby in the womb of his stepmother? Did he really cut it into forty nine pieces?

Indra is the king of Deva. His duty is to uphold Dharma and punish the wrong doers.He should not become a wrong doer himself! He is the ruler of the three worlds. Yet he falsely swore on his mother!

Isn’t breach of trust a great sin? Isn’t treachery a great sin? I can’t imagine such treachery!

I have heard that many wicked things happened during the Mahaa Bhaarata yuddham. Can real good people perform such actions?

Your words do not give me any peace. My heart burns to think of the injustice.

Krishna was womanizer. He was a crooked cheat. He did many tricks and cheated even in the form of a brahmin.

Dharma stands on four legs namely Daanam (Sharing), Daya (Mercy), Satyam (Truth) and Aachaaram (Good Conduct).

These are not seen in their lives. They never bothered about these things.” King Janamejayan was really upset with these thoughts!
 
Sreeman NaaraayaNeeyam

த3ச’கம் 70 ( 1 to 5)

சுத3ர்சனன் சா’ப மோக்ஷம்; ச’ங்க2சூட3ன் அரிஷ்டன் வத4ம்

இதி த்வயி ரசாகுலம் ராமித வல்லபே4 வல்லவா:
கதா3Sபி புர மம்பி3காகமிது ரம்பி3கா கானனே |
ஸமேத்ய ப4வதா ஸமம் நிஷி நிஷேவ்ய தி3வ்யோத்ஸவம்
ஸுகம் ஸுஷுபுரக்3ரஸீத் வ்ரஜப மக்3ர நாக3ஸ்ததா3 ||( 70 – 1​)

இவ்விதம் தாங்கள் ஆனந்த பரவசத்தில் இருக்கும்படிப் பெண்களை இன்பமுறச் செய்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் கோபர்கள் அம்பிகா வனத்தில் இருக்கும் ஒரு சிவன் கோவிலுக்குத் தங்களுடன் சென்று இரவில் சிறந்த உற்சவத்தை சேவித்து விட்டு சுகமாக உறங்கினார்கள். அப்போது ஒரு கொடிய பாம்பு நந்தகோபரை விழுங்க வந்தது அல்லவா? ( 70 – 1)

ஸமுன்முக2 மதோ2ல்முக: அபி4ஹிதேSபி தஸ்மின் ப3லாத்
அமுஞ்சதி ப4வத் பதே3 ந்யபதி பாஹி பாஹீதி தை:|
ததா3 க2லு பதா3 ப4வான் ஸமுபக3ம்ய பஸ்பர்ச’ தம்
ப3பௌ4 ஸ ச நிஜாம் தனும் ஸமுபஸாத்ய வைத்3யாத4ரீம் || ( 70 – 2 )

கொள்ளிக் கட்டைகளால் பலமாக அடித்தபோதும் அது அவரை விடவில்லை. அந்தகோபர்கள் “காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று தங்கள் திருவடிகளில் வந்து விழுந்தனர். நீங்கள் விழுங்கிக் கொண்டிருந்த பாம்பைக் காலால் தொட்டீர்கள். அந்தப் பாம்பு உடனே தன் சுய வடிவை அடைந்து ஒரு வித்தியாதரனாக மாறியது அல்லவா? ( 70 – 2)

ஸுத3ர்ச’ன த4ர ப்ரபோ4 நனு ஸுத3ர்ச’னாக்2யோSஸ்ம்யஹம்
முனீன் க்வசி த3பாஹஸம் தா இஹ மாம் வ்யது4ர்வாஹஸம்|
ப4வத் பத3 ஸமர்ப்பணாத மலதாம் க3தோSஸ் மித்யசௌ
ஸ்துவன் நிஜபதம் யயௌ வ்ரஜபத3ம் ச கோ3பா முதா3 || ( 70 – 3 )


“ஸுதர்சனச் சக்கரத்தைத் தரிக்கின்ற பிரபு! நான் ஸுதர்சனன் என்ற பெயர் உடையவன். நான் ஒருநாள் முனிவர்களைப் பரிஹசித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக மாற்றி விட்டார்கள். தாங்கள் திருவடியால் தொட்டவுடன் என் பாவங்கள் தொலைந்து விட்டன!” என்று தங்களை வணங்கித் தன்னிடத்தைச சென்று அடைந்தான். கோபர்களும் சந்தோஷத்துடன் கோகுலத்துக்குத திரும்பிச் சென்றனர். ( 70 – 3)

கதா3Sபி க2லு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீ ஜனைர்
ஜஹார க4னதா3னுக3ஸ்ஸ கில ச’ங்க2சூடோ3Sபலா:|
அதித்3ருத மனுத்3ருத ஸ்தவமத2 முக்த நாரீ ஜனம்
ருரோஜித2 சி’ரோமணிம் ஹல ப்4ருதே ச தஸ்யாத3தா3:|| ( 70 – 4 )

ஒருநாள் தாங்கள் பலராமனுடன் சேர்ந்து கொண்டு பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது குபேரனுடைய யக்ஷன் சங்கசூடன் என்பவன் அந்த ஸ்திரீகளை அபஹரித்துச் சென்று விட்டான் அல்லவா? அப்போது தாங்கள் விரைவாக அவனைப் பின்தொடர்ந்து பெண்களை விடுவித்த அவனைக் கொன்றீர்கள். அவன் தலையில் இருந்த ரத்தினத்தை பலராமனுக்குக் கொடுத்தீர்கள். ( 70 – 4)

தி3னேஷு ச ஸுஹ்ருஜ்ஜனைஸ்ஸஹ வனேஷு லீலாபரம்
மனோப4வ மனோஹரம் ரஸிவ வேணு நாதா3ம்ருதம்|
ப4வந்த மப4ரீ த்3ருசா ‘ மம்ருத பாரணா தா3யினம்
விசிந்தய கிமு நாலபன் விரஹதாபிதா கோ3பிகா:|| ( 70 – 5 )


பகல் நேரங்களில் சிநேகிதர்களுடன் வனங்களில் விளையாடுவதில் ஈடுப்பட்டவரும்; மன்மதன் போல மனத்தைக் கவருபவரும்; வேணு நாதமாகிய அமிர்தத்தை ஆஸ்வதிக்கின்றவரும், தேவ ஸ்திரீகளின் கண்களுக்கு அமிர்த பக்ஷணத்தைக் கொடுக்கின்றவரும் ஆகிய தங்களை நினைத்து விரகதாபம் கொண்ட கோபிகைகள் என்னென்ன சொல்லிக் கொள்ளவில்லை? ( 70 – 5)




 
த3ச’கம் 70 ( 6 to 10)

சுத3ர்சனன் சா’ப மோக்ஷம்; ச’ங்க2சூட3ன் அரிஷ்டன் வத4ம்

போ4ஜ ராஜ ப்4ருதகஸ் த்வத2 கச்’சித்
கஷ்ட து3ஷ்டபத2 த்3ருஷ்டி ரரிஷ்ட:|
நிஷ்டுராக்ருதி ரபஷ்டு நிநாத:
திஷ்ட2தே சம பவதே வ்ருஷரூபி || ( 70 – 6)

பிறகு கம்சனின் வேலைக்காரனும், கடுமையான துர்மார்கங்களில் தன் திருஷ்டியைச் செலுத்தியவனும் ஆகிய அரிஷ்டன் என்பவன் பயங்கரவடிவுடன், கடூரமான சப்தத்துடன் காளை வடிவுடன் தங்களுக்கு எதிரில் வந்து நின்றான் அல்லவா? ( 70 – 6 )

சா’க்வரோத்த ஜக3தீ தபியம் தம் ஹாரி
மூர்த்திமேவ ப்3ருஹதீம் ப்ரத3தா4ன:|
பங்க்தி மாசு’ பரிகூர்ண்ய பசூ’னாம்
ச2ந்த3ஸாம் நிதி4மவாப ப4வந்தம் || ( 70 – 7 )

எருதின் வடிவம் எடுத்த அவன் உலகத்தினரின் தைரியத்தை அபஹரிப்பவனாக பெரும் உருவம் எடுத்துக் கொண்டு பசுக் கூட்டத்தை விரைவாக விரட்டிக் கொண்டு வேதங்களுக்கு இருப்பிடம் ஆன தங்களை வந்து அடைந்தான் அல்லவா? ( 70 – 7)

துங்க3 ச்’ருங்க3 முக2 மாச்’வ மபி4யந்தம்
ஸம்க்3ருஹய்ய ரப4ஸா த3பி4யம் தம்|
ப4த்ர ரூபமமபி தை3த்ய மப4த்ரம்
மர்த்த4யன்னமத3ய: ஸுரலோகம் || ( 70 – 8 )

உயர்ந்த கொம்புகளின் நுனிகளை உடையவனாக, விரைவாக எதிர்த்து வருகின்றவனும், பயமற்றவனும், பத்திரமான உருவமுடையவனும் ஆன மிகவும் துஷ்டனான அவ்வசுரனை விரைவாகப் பிடித்துப் பிசைந்து கொன்று தேவர்களை சந்தோஷப்படுத்தினீ ர்கள் அல்லவா? ( 70 – 8)

சித்ரமத2 ப4கவன் வ்ருஷ கா4தாத்
ஸுஸ்தி2ராSஜனி வ்ருஷஸ்தி2தி ரூர்வ்யாம் |
வர்த்த4தே ச வ்ருஷ சேதஸி பூ4யான்
மோத3 இத்யபி4னுதோSஸி ஸுரைஸ்த்வம் || ( 70 – 9 )

ஹே பகவானே! இந்த விருஷபாசுரனைக் (விருஷத்தைக்) கொன்றதால், பூமியில் தர்மத்தின் (விருஷத்தின்) நிலை மிகவும் நிலை பெற்றாதாக ஆனது. இந்திரனின் (விருஷத்தின்) மனத்தில் அதிகமான சந்தோஷம் வளர்ந்தது! இது ஆச்சரியம்!” என்று தாங்கள் தேவர்களால் துதிக்கப்பட்டீர்கள் அல்லவா? ( 70 – 9)

ஔக்ஷகாணி பரிதா4வாத தூ3ரம்
வீக்ஷ்யதா மய மிஹோக்ஷவிபே4தீ3|
இத்த மாத்த ஹஸிதைஸ் ஸஹ கோ3பை:
கே3ஹக3ஸ்த்வமவ வாதபுரேச’ || ( 70 – 10 )

“காளைக் கூட்டங்களே! வெகுதூரம் ஓடுங்கள். காளையைக் கொன்றவனை எல்லோரும் பார்க்கட்டும்!” என்று வேடிக்கையாகப் பரிஹசிக்கின்ற கோபாலர்களுடன் வீட்டுக்குத் திரும்பிய ஹே குருவயூரப்பா! தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 70 – 10)





 
த3ச’கம் 71 ( 1 to 5)

கேசி’, வ்யோமாஸுர வத4ம்

யஹ்த்னேஷு ஸர்வேஷ்வபி நாவகேசீ’
கேசீ’ ஸ போ4ஜேசி’து ரிஷ்ட ப3ந்து4:|
த்வம் ஸிந்து3ஜாSவாப்ய இதீவ மத்வா
ஸம்ப்ராப்த்வான் ஸிந்து3ஜ வாஜிரூப:|| ( 71 – 1 )

எல்லா பிரயத்னங்களிலும் வீணாகாதவனும், கம்சனுக்கு நெருங்கிய உறவினனுமாகிய அந்தக் கேசி என்பவன் தாங்கள் சிந்துஜையால் (லக்ஷ்மியால் ) அடையப்படக் கூடியவர் என்று எண்ணி, சிந்துஜன் (சிந்து தேசத்தில் பிறந்த குதிரை ) வடிவம் எடுத்து வந்தான் அல்லவா? ( 71 – 1)

க3ந்த4ர்வ தாமேஷ க3தோபி ரூக்ஷை:
நாதை3:ஸுத்3வேஜித ஸர்வ லோக:|
ப4வத்3 விலோகாவதி4 கோ3ப வாடீம்
ப்ரமர்த்3ய பாப: புனராப தத்வாம் || ( 71 – 2)

இந்தப் பாவி கந்தர்வனாக (குதிரையாக) இருக்கும் தன்மையை அடைந்தும் கூட, கர்ண கடோரச் சத்தங்களால் எல்லா ஜனங்களையும் துன்புறுத்திக் கொண்டும், கோகுலத்தை அழித்துவிட்டும், தங்களை எதிர்த்தான் அல்லவா? ( 71 – 2)

தார்க்ஷ்யார்பிதாங்க்4ரேஸ் தவ தார்க்ஷ்ய ஏஷ:
சிக்ஷேப வக்ஷோ பு4வி நாம பாத3ம் |
ப்4ருகோ: பதா3கா4த கதா2ம் நிச’ம்ய
ஸ்வேனாபி ச’க்யம் ததி3தீவ மோஹாத்|| ( 71 – 3 )

இந்த தார்க்ஷியன் (குதிரை) பிருகு மகரிஷி தங்களைக் காலால் மிதித்து கேட்டு, அதைத் தன்னாலும் செய்ய முடியும் என்று மதியீனத்தால், கருடன் மேல் வைக்கப்பட்ட திருவடிகளை உடைய தங்கள் மார்பில் காலால் உதைத்தான் அல்லவா? ( 71 – 3)

ப்ரவஞ்சயன்னஸ்ய குராஞ்சலம் த்ராக்
அமும் ச விக்ஷேபித2 தூ3ர தூ3ரம்|
ஸம் மூர்ச்சி2தோSபி த்3யுதி மூர்ச்சிதேன
க்ரோதோ3ஷ்மணா கா2தி3து மாத்3ருதஸ்த்வாம்|| ( 71 – 4 )

அவனுடைய கால் உதையிலிருந்து தப்பித்துக் கொண்டு, விரைவாக அவனையும் வெகு தூரத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதனால் அவன் மயக்கம் அடைந்தும் கூட மேலும் அதிகரிக்கும் கோபக் கனலுடன் தங்களைத் தின்பதற்கு விரைந்து வந்தான் அல்லவா?
( 71 – 4)

த்வம் பா3ஹத3ண்டே3 க்ருத தீ4ச்’ச பா3ஹ
த3ண்ட3ம் ந்யதா4ஸ் தஸ்ய முகே2 ததா3னீம்|
தத்3 வ்ருத்3தி4 ருத்3த4 ச்’வஸனோ க3தாஸு:
ஸுப்தோ ப4வான்னப்யய மைக்ய மாகா3த் || ( 71 – 5 )

தாங்கள் வாஹத்தை (குதிரையை) தண்டிப்பதில் மன உறுதி கொண்டு இருந்ததால், அவன் வாயில் தண்டம் போன்ற தங்கள் கரத்தைச் செலுத்தினீர்கள் அல்லவா? அப்போது அந்தக் கைப் பெருகி வளர்ந்ததால் மூச்சுத் திணறி அவன் குதிரையாக இருந்தும் கைவல்யத்தை (ஒன்றாகும் தன்மையை) அடைந்தான் அல்லவா? ( 71 – 5)




 
த3ச’கம் 71 ( 6 to 10)

கேசி’, வ்யோமாஸுர வத4ம்

ஆலம்ப4 மாத்ரேண பசோ':ஸுரணாம்
ப்ரஸாத3கே நூதன இவாச்’வமேதே4 |
க்ருதே த்வயா ஹர்ஷவசா’த் ஸுரேந்த்3ரா:
த்வாம் துஷ்டுவு: கேச’வ நாமதே4யம் || ( 71 – 6)

யாகப் பசுவைக் கொன்று தேவர்களுக்குத் திருப்தி செய்கின்ற இந்தப் புதிய அஸ்வமேத யாகத்தைத் தாங்கள் செய்யும்போது தேவர்கள் மகிழ்ந்து தங்களுக்கு கேசவன் என்ற பெயர் சூட்டித் துதித்தார்கள் அல்லவா? ( 71 – 6)

கம்ஸாய தே சௌ’ரி ஸுதத்வ முக்த்வா
தம் தத்3வதோ4க்தம் ப்ரதி ருத்4ய வாசா|
ப்ராப்தேன கேசி’ க்ஷபணா வஸானே
ஸ்ரீ நாரதே3ன த்வமபி4ஷ்டுதோSபூ4: || ( 71 – 7 )

கம்சனுக்குத் தாங்கள் வசுதேவரின் குமாரன் என்பதை எடுத்து உரைத்து, அந்த வசுதேவரைக் கொல்ல விரும்பிய கம்சனை நல்ல வார்த்தைகளால் தடுத்து, கேசி வதத்தின் முடிவில் வந்து சேர்ந்த நாரதர் தங்களைத் துதித்தார் அல்லவா? (71 – 7)

கதா3Sபி கோ3பைஸ்ஸஹ கானனாந்தே
நிலாயன க்ரீட3ன லோலுபம் த்வாம்|
மயாத்மஜ: ப்ராபது3ரந்த மாயோ
வ்யோமாபி4தோ வ்யோம சரோபரோதீ4 || (71 – 8 )

ஒருநாள் தேவர்களைத் துன்புறுத்துகின்றவனும், அளவில்லாத மாயைகளில் வல்லவனும், மயாசுரன் பிள்ளையுமான வ்யோமன் என்னும் அசுரன், காட்டில் கோபர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த தங்களிடம் வந்தான் அல்லவா?
( 71 – 8 )

ஸ சோர பாலாயித வ்ல்லவேஷு
சோராயிதோ கோ3ப சி’சூ’ன் பசூ’ம்ச்’ச|
க்ருஹாஸு க்ருத்வா பித3தே4 சீலாபி4:
த்வயா ச பு3த்3த4வா பரிமர்தி3தோSபூ4த்|| (71 – 9 )

அவன் திருடர்கள் ஆகவும், காப்பாற்றுபவர்கள் ஆகவும் விளையாடுகின்ற கோபர்கள் இடையில் திருடனாக விளையாடி, கோபர்களையும் பசுக்களையும் குஹைகளில் கொண்டு விட்டுக் கல்லால் மூடிவிட்டான். அதை அறிந்த தாங்கள் அவனைக் கொன்றீர்கள் அல்லவா? ( 71 – 9)

ஏவம் விதை4ச்’ சாத்3பு4த கேலி பே4தை3:
ஆனந்த3 மூர்ச்சா2 மதுலாம் வ்ரஜஸ்ய|
பதே3 பதே3 நூதன யன்ன ஸீமாம்
பராத்மரூபின் பவனேச’ பாயா:|| ( 71 – 10 )

பரமாத்மா ஸ்வரூபியான குருவாயூரப்பா! இப்படிப் பட்ட பல ஆச்சரியமான விளையாட்டுக்களால் ஒப்பற்ற ஆனந்தத்தை கோகுலத்தில் புதிது புதிதாகச் செய்து கொண்டிருக்கும் தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 71 – 10)




 
Kanda PuraaNam - Asura Kaandam

5i. மார்க்கண்டேயன்.

காசி நகரம் அன்று களிப்பிலாழ்ந்தது;
காசினி முழுவதும் மகிழ்சியடைந்தது.


மறையவர்களுக்கு வழங்கினர் தானம்;
“மார்க்கண்டேயன்!” பிரமன் பெயரிட்டார்.

மாசற்ற திங்கள் போல் மகன் வளருவதை,
பாசமுற்ற பெற்றோர் பார்த்து மகிழ்ந்தனர்.

முப்புரி நூல் அணிந்தான் ஐந்து வயதில்;
மறைகளைக் கற்றுத் தேர்ந்தான் சிறுவன்;

முழு முதற்கடவுள் சிவபெருமானே என்று
முழு மனதோடு நம்பினான் அச்சிறுவன்;

இறைவன், பெற்றோர், குருமார் மீது,
குறையாத அன்பு செலுத்தினான் அவன்;

நாட்கள் உருண்டோடி ஆண்டுகள் ஆயின.
நடப்பது மகனின் பதினாறாவது வயது!

தாயும், தந்தையும் துன்பக் கடலில்
தோய்ந்து கிடப்பதைக் கண்டான் மகன்;

காரணம் கேட்டு மன்றாடியதால் அங்கு
காரணத்தை அவனிடம் கூற நேர்ந்தது !

“வருந்த வேண்டாம் நீங்கள் இருவரும்,
பெருமான் அருளை பெறுவேன் நான்!

கூற்றுவனின் ஆற்றலையும் மாற்றிவிடும்
போற்றும் நம் இறைவனின் இன்னருள்!”

விரைந்து சென்றான் திருக்கோவில்;
திருந்த அமைத்தான் ஒரு சிவலிங்கம்.

பெருந்தவத்தினரும் வியந்து போற்ற
அருந்தவம் அங்கு செய்யலுற்றான்!

செக்கர் வண்ணனாம் சிவபெருமான்
முக்கட்பிரான் வெளிப் போந்தார்!

“யாம் மகிழ்ந்தோம் நீ செய்தவத்தால்!
எம்மிடம் நீ கோருவது யாது மகனே?”

“நமன் கைபடாமல் அருள்வீர் ஐயனே!
நான் வேண்டுவது வேறொன்றுமில்லை!”

“கூற்றுவனுக்கு நீ அஞ்சத் தேவை இல்லை!”
பொற்பதத்தை அவன் தலைமேல் பதித்தார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Kanda PuraaNam - Asura Kaandam

2 (# 5 i) MAARKKANDEYAN.

The city of Kasi celebrated the birth of the child. The whole world seemed to be happier than usual. Gifts were given to the worthy brahmins. Brahma named the child as Maarkkandeyan.

The parents watched their son grow well like a blemish-less full moon. He had upanayanam at the age of five. He mastered the Vedas at a tender age. He firmly believed that Siva was the supreme God. He had great respect for Lord Siva, his parents and his gurus.

Days rolled by and he entered his sixteenth year. The poor parents were torn to pieces internally, thinking of the inevitable fate of their dear son. Maarkkandeyan noticed their constant sorrow and wanted to know the real reason.

His parents had to come out with the truth – since the boy was persistent. He assured them, “Please do not worry. I am sure I will get the blessings of Siva and defeat the purpose of Yama. Siva is more powerful than yama”

He went to the temple. He erected a Sivalingam and started worshipping it with such an intensity that even grown up tapasvis became wonder struck.

Siva was pleased with the boy and appeared before him.”What is that you seek my dear son?”

“Sire! I should not be caught by the cruel hands of Yama. I ask for nothing more!”

Siva planted his lotus foot on the boy’s head and blessed him.”You need not be afraid of Yama!”





 
VINAAYAKA PURAANAM 1.

26f. விஸ்வரூபம்

தாரை வார்க்க முயன்றான் மாவலி,
தண்ணீர் நிரம்பிய கமண்டலத்தால்.

“என் வார்த்தையைத் தட்டுகின்றான்
தன் அழிவை நாடுகின்றான் இவன்!”

ஆதங்கம் ஏற்பட்டது குலகுருவுக்கு;
“எதாவது செய்து தடுக்க வேண்டும்.”

எடுத்தார் ஒரு சிறு வண்டின் வடிவை!
அடைத்தார் நீர் வருகின்ற துவாரத்தை.

வாமனன் கண்டான் ஞான திருஷ்டியில்;
வண்டைக் குத்தினான் சிறிய குச்சியால்!

கண்ணில் அந்தக் குச்சி பாய்ந்து விட்டது;
வண்டின் கண் ஒன்று குருடாகி விட்டது!

தன் காலால் மூன்றடி மண் கேட்ட சிறுவன்
தான் வளர்ந்தான் வானளாவாக வாமனன்!

ஓரடியால் அளந்தான் மண்ணுலகை எல்லாம்!
ஓரடியால் அளந்தான் விண்ணுலகை எல்லாம்!

இடம் இல்லை மூன்றாவது அடியை வைக்க
இடம் தந்தான் கால் வைக்க மாவலி சிரசில்.

தலையைக் காலால் அழுத்தி மாவலியைத்
தலைவன் ஆக்கினான் பாதள உலகிற்கு.

சிவன் அருள் பெற்றவன் மாவலி மன்னன்
அவனைத் தொழுகின்றான் அங்கிருந்தபடி!

வன்னிப் பத்திரத்தின் பெருமையைக் கூற
இன்னும் ஒரு கதை சொன்னார் பிரமன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
VINAAYAKA PURAANAM 1.

26f. Thrivikraman

Mahaa Bali wanted to pour the dhaarai from his kamandalam. Kulaguru got agitated since Mahaa Bali was not listening to his sound advice and was leaping towards his own destruction.

He had to do something to stop the daanam of land. He transformed himself into small beetle and sat blocking the outlet of water of the kamandalam. Water would not come out of the kamandalam.

Vaamana knew the reason and thrust a thin stick in to the nozzle of the kamandalam. It poked one of the eyes of the beelte. Sukracharya came out blinded in one of his eyes.

The gift of land was given. The little brahmachaari who wanted three foot lengths of land grew towering to the sky as Trivikrama. He measured the entire earth in step, he measured the entire heavens with his second step.

There we no place to keep the foot now. Mahaa Bali offered his head to Trivikarama for placing his foot. Trivikrama pushed him to Paatala lokam and made him the king there.

Maha Bali who is a devotee of lord Siva lives there even today worshiping his god. Brahma related one more story to bring out the greatness of vanni patram.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#4b. மாயையின் சக்தி (2)

வாமன வடிவெடுத்து வந்தார் விஷ்ணு;
வஞ்சித்துப் பெற்றார் மூன்றடி நிலத்தை!

வளர்ந்தார், அளந்தார் மூவுலகங்களையும்!
தளர்ந்தான் பாதாளம் சேர்ந்த மஹாபலி !

அநீதிமான் அல்லவே மஹாபலி மன்னன்!
அனைத்தும் வழங்கிய வள்ளல் ஆயிற்றே!

சத்திய சந்தன், பல யாகங்கள் புரிந்தவன்,
நிச்சயமாக இந்திரியங்களை வென்றவன்!

வஞ்சித்தார் வாமன ரூபத்தில் வந்த விஷ்ணு;
விஞ்சுமோ புகழ் வானளவாக வளர்ந்ததால்?”

கேட்டான் மன்னன் ஜனமேயஜயன் வியாசரை
கேட்டவற்றை விளக்கினார் வியாச முனிவர்.

“தர்மம் சத்தியத்துக்கு மாறுபட்டதல்ல!
தர்மமே சத்தியத்துக்கு மூல காரணம்.

மாயை மயக்கிவிடும் மனித மனத்தினை.
மாயை தாக்கும் குணங்களைக் கொண்டு;

மாயை மறைத்துவிடும் தூய அறிவினை;
மாயை பிறக்கச் செய்யும் வஞ்சகத்தை!


மாயை கட்டாது சத்தியத்தின் பாதையை;
மாயை விளக்காது தர்மத்தின் நெறியினை;

கலந்து தோன்றும் சத்தியம் அசத்தியத்தில்!
கலந்து தோன்றும் அசத்தியம் சத்தியத்தில்!


மாயைக்கு உட்பட்ட சம்சாரி ஜீவனை
மயக்கி ஆட்டுவிக்கின்றன இந்திரியங்கள்.

இந்திரியங்களின் வழிச் செல்லும் நம் மனம்!
இந்திரியங்கள் மாயையின் வழிச் செல்லும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#4b. The power of Maayaa (2)

King Janamejayan continued asking his doubts to sage Vyaasaa. ” Vishnu came in the form of a Vaamana – a very young Brahmana.

He tricked King Mahaa Bali and got the gift of three paces of land. He then grew sky high and measured the Heaven and the earth in two paces. Mahaa Bali got pushed down to the Paataala lokam.

Mahaa Bali was not an unjust king. He was a just king and one very famous for his rich gifts. He spoke the truth always. He had performed 99 yaagaa and yagnaas, He had conquered his Indriyaas.

Yet Vishnu tricked him in order to help Indra retain his post in Heaven. Has Vishnu become more famous than Bali just because he grew sky high?”

Vyaasaa replied to these doubts raised by king Janamejayan. “Dharma and Satyam are not two opposing factors. In fact Dharma forms the basis of Satyam.

But Maayaa deludes and confuses the human mind. Maayaa acts through the three guNaas viz Satvam, Raajasam and Taamasam.

Maayaa covers a man’s intelligence. Maayaa can make a person wicked. Maayaa will not show the path of Dharma and justice. Satyam will get mixed up with asatyam. A samsaari is deluded by the all powerful Maayaa. He is under the power and influence of his Indriyaas. His Indriyaas are under the power and influence of Maayaa!”
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 72 ( 1 to 5)

அக்ரூர ஆக3மனம்

கம்ஸோSத2 நாரத3 கி3ரா வ்ரஜ வாஸினம் த்வாம்
ஆகர்ண்ய தீ3ர்ண ஹ்ருத3யஸ்ய ஹி கா3ந்தி3நேயம் |
ஆஹூய கார்முக மக2ச்சலதோ ப4வந்தம்
ஆனேது மேனமஹினோ த4ஹி நாத2 சா’யின் || ( 72 – 1 )

பாம்பணையின் மேல் துயிலும் ஈசா! நாரதரின் வாக்கினால் தங்கள் கோகுலத்தில் வசிப்பதை அறிந்து மனம் உடைந்த கம்சன், வில் யாகம் என்ற காரணத்தைக் காட்டித் தங்களை மதுரைக்கு அழைத்துவர காந்தினியின் பிள்ளையாகிய அக்ரூரனனை அனுப்பினான் அல்லவா? ( 72 – 1)

அக்ரூர ஏஷ ப4வத3ங்க்4ரி பரச்’சிராய
த்வத்3த3ர்ச’னாக்ஷம மனா : க்ஷிதிபால பீ4த்யா |
தஸ்யாக்ஞயைவ புனரீக்ஷிது முத்3ய தஸ்த்வாம்
ஆனந்த3பா4ர மதிபூ4ரிதரம் ப3பா4ர || ( 72 – 2 )

வெகு காலமாகவே தங்கள் திருவடிகளை மனதில் துதிக்கின்றவரும், கம்சனிடம் இருந்த பயத்தால் தங்களை தரிசிக்கும் சக்தியற்றவரும் ஆன அக்ரூரர், இப்போது அதே கம்சனின் கட்டளையால் தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது என மிக அதிகமான ஆனந்தத்தை அடைந்தார் அல்லவா? ( 72 – 2)

ஸோSயம் ரதே3ன ஸுக்ருதோ ப4வதோ நிவாஸம்
க3ச்சன் மனோரத2 கணாம்ஸ்தவயி தா4ர்யாமாணான் |
ஆஸ்வாத3யன் முஹுரபாய ப4யேன தை3வம்
ஸம்ப்ரார்த2யன் பதி2 ந கிஞ்சித3பி வ்யஜானாத் || ( 72 – 3 )

தங்கள் இருப்பிடத்துக்கு தேரில் ஏறிச் செல்கின்ற புண்ணியவான் ஆகிய அக்ரூரன், தங்கள் மேல் வைத்திருந்த மனோரதக் கூட்டங்களை ஆலோசித்துக் கொண்டும், அவற்றை அனுபவித்துக் கொண்டும், அவைகளுக்கு இடையூறு வந்து விடுமோ என்று அஞ்சி இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்தும் வந்ததால் வழியில் ஒன்றுமே அறியவில்லை. ( 73 – 3)

த்3ரக்ஷ்யாமி வேத3 ச’த கீ3த க3திம் புமாம்ஸம்
ஸ்ப்ரக்ஷ்யாமி கிம்ஸ்வித3பி நாம பரிஷ்வஜேயம்|
கிம் வக்ஷ்யதே ஸ க2லு மாம் க்வனு வீக்ஷித : ஸ்யாத்3
இத்த2ம் நினாய ஸ ப4வன் மயமேவ மார்க3ம் || ( 72 – 4 )

“அனேக உபநிஷத்துக்களால் உபதேசம் செய்யப்பட ஸ்வரூபம் உடைய பரம புருஷனைக் காண்பேனோ? அவரை நான் தொடுவேனோ? அவற்றின் ஆலிங்கனம் செய்து கொள்வேனோ? அவர் என்னிடத்தில் பேசுவாரா? என்னை அவர் எப்படிப் பார்ப்பார்?” என்ற பலவித ஆலோசனைகளால் வழி நீளத் தங்களையே எண்ணிக் கொண்டு சென்றார் அல்லவா? ( 72 – 4)

பூ4ய: க்ரமாத3பிவிசன் ப4வத3ங்க்4ரி பூதம்
ப்3ருந்தா3வனம் ஹர விரிஞ்ச ஸுராபி4 வந்த்3யம் |
ஆனந்த3 மக்3ன இவ லக்3ன இவ ப்ரமோஹே
கிம் கிம் தசா’ந்தர மவாப ந பங்கஜாக்ஷ || ( 72 – 5 )

செந்தாமரைக் கண்ணனே! கிரமாகத் தங்கள் திருவடிகள் பட்டதால் மிகவும் சுத்தம் அடைந்ததும், பரமசிவன், பிரம்மதேவன் முதலியவர்களால் வணங்கத் தகுந்ததும், ஆன பிருந்தா வனத்தில் செல்லுகின்ற அவர் ஆனந்தத்தில் மூழ்கியவர் போலும், மதி மயக்கத்தை அடைந்தவர் போலும், என்ன என்ன அவஸ்தைகளைத தான் அனுபவிக்க வில்லை? ( 72 – 5)
 
த3ச’கம் 72 ( 6 to 8)

அக்ரூர ஆக3மனம்

பச்’யன்னவன்த3த ப4வத்3 விஹ்ருதி ஸ்த2லானி
பாம்ஸுஷ்வ வேஷ்டத ப4வச் சரணாங்கிதேஷு |
கிம் ப்3ரூமஹே ப3ஹுஜன ஹி ததா3Sபி ஜாதா:
ஏவம் து ப4க்தி தரலா விரலா: பராத்மன் || ( 72 – 6 )

தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டு வணங்கினார்! தங்கள் திருவடிகளின் அடையாளம் பட்ட புழுதியில் புரண்டார்! நான் வேறு என்ன சொல்லுவேன்? பரமாத்மா ஸ்வரூபியே! அந்தக் காலத்திலும் அநேகர் பிறந்திருந்தார்கள். ஆனால் இது போல பக்தி பரவசம் அடைந்தவர்கள் மிகக் குறைவே! ( 72 – 6)

ஸாயம் ஸ கோ3ப ப4வனானி ப4வச்சரித்திர
கீ3தாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயனானி |
பச்’யன் ப்ரமோத3 ஸரிதேவ கிலோஹ்ய மானோ
க3ச்ச2ன் ப4வத்3 ப4வன ஸந்நிதி4 மன்வயாஸீத் || ( 72 – 7 )

அக்ரூரர் அந்த சாயங்கால வேளையில், தங்கள் சரிதங்களைக் கானம் பண்ணும், காதுகளுக்கு அமிர்தப் பிரவாகம் ஆகின்ற ரசாயனங்களை உடைய, இடையர்களின் வீடுகளைப் பார்த்துக் கொண்டே, ஆனந்தப் பெருக்கால் இழுத்துச் செல்லப்பட்டுத் தங்கள் வீட்டின் அருகே வந்து சேர்ந்தார் அல்லவா? ( 72 – 7)

தாவத்3 த3த3ர்ச’ பசு’தோ3ஹ விலோகலோலம்
ப4க்தோத்மாக3திமிவ ப்ரதி பாலயந்தம்|
பூ4மான் ப4வந்த மய மக்3ரஜ வந்த மந்த :
ப்3ரஹ்மானுபூ4தி ரஸ ஸிந்து3 மிவோத்3வமந்தம் || ( 72 – 8 )

எங்கும் நிறைந்து இருக்கும் ஈசனே! அதற்குள் மாடு பால் கறப்பதைப் பார்க்க ஆசை கொண்டவரும், சிறந்த பக்தனுடைய வரவை எதிர்பார்க்கின்றவரும், அண்ணனுடன் கூடியவரும், சித்த விருத்தியில் பிரம்ம ஞானத்தால் உண்டாகும் ஆனந்தக் கடலைப் பெருக விடுகிறவர் போலும் இருந்த தங்களை, அந்த அக்ரூரர் கண்டார் அல்லவா?
( 72 – 8)
 
த3ச’கம் 72 ( 9 to12)

அக்ரூர ஆக3மனம்

ஸாயந்தநாப்லவ விசே’ஷ விவிக்த கா3த்ரௌ
த்3வௌ பீத நீல ருசிராம்ப3ர லோப4 நீயௌ |
நாதி ப்ரபஞ்ச த்4ருத பூ4ஷண சாருவேஷௌ
மந்த3ஸ்மிதார்த்3ர வத3நௌ ஸ யுவாம் த3த3ர்ச || ( 72 – 9)


அந்த அக்ரூரர், சாயங்காலம் குளித்ததால் விசேஷமான தூய்மை பெற்ற திருமேனியை உடையவர்களும்; மநோஹரமான மஞ்சள், நீல நிறப் பட்டாடைகள் அணிந்து அழகானவர்களும்; அதிகம் இல்லாமல் சில ஆபரணங்களையே அணிந்து அழகு பெற்றவர்களும்; மந்த ஹாசத்தால் கனிந்த முகம் உடையவர்களும் ஆகிய உங்கள் இருவரையும் கண்டார் அல்லவா? ( 72 – 9)

தூ3ராத்3ரதா2த் ஸமவருஹ்ய நமந்த மேனம்
உத்தா2ப்ய ப4க்த குல மௌலி மதோ2பகூ3ஹன் |
ஹர்ஷான்மிதா க்ஷர கி3ராகுச’லானுயோகீ3
பாணீம் ப்ரக்3ருஹ்ய ஸப3லோSத க்3ருஹம் நிநேய || ( 72 – 10)

உடனே வெகு தூரத்தில் இருந்து வந்து தேரில் இருந்து இறங்குகின்றவரும்; பக்தர்களில் சிறந்தவரும்; ஆன அந்த அக்ரூரரை எழுப்பிப் பிறகு கட்டித் தழுவிக் கொண்டு; சந்தோஷத்தால் சில வார்த்தைகள் கூறி க்ஷேமம் விசாரித்துக் கையைப் பிடித்துக் கொண்டு; பலராமனுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?(72-10)

நந்தே3ன ஸாக மமிதாத3ர மர்ச்சயித்வா
தம் யாத3வம் தது3தி3தாம் நிச’மய்ய வார்த்தாம் |
கோ3பேஷு பூ4பதி நிதே3ச’ கதா2ம் நிவேத்3ய
நானாகதா3பி4 ரிஹ தேன நிசா’மனைஷீ : || ( 72 – 11 )


நந்தகோபருடன் யதுவம்சத்தில் பிறந்த அந்த அக்ரூரரை மிகவும் கௌரவத்துடன் வெகுமானித்து; அவர் சொன்ன விருத்தாந்தங்களையும்கேட்டு; அரசனின் கட்டளையையும் கோபர்களிடம் தெரிவித்து; அன்று அக்ரூரருடன் நந்தகோபர் வீட்டில் பலவிஷயங்களைப் பேசி இரவைக் கழித்தீர்கள் அல்லவா? ( 72-11)

சந்த்3ரா க்3ருஹே கிமது சந்த்3ரபகா4 க்3ருஹே நு
ராதா4 க்3ருஹே நு ப4வனே கிமு மைத்ரவிந்தே3|
தூ3ர்த்தோ விலம்ப3த இதி ப்ரமதா3பி4ருச்சை:
ஆச’ங்கிதோ நிசி’ மருத்புர நாத2 பாயா: || ( 72 – 12 )


உம்மைச் சந்திக்க முடியாத கோபிகள் அன்று இரவு “வஞ்சகனான கண்ணன் சந்திராவின் வீட்டிலோ, சந்திர பாகாவின் வீட்டிலோ அல்லது ராதாவின் வீட்டிலோ தங்கிவிட்டான் ” என்று உம்மைக் குறித்துச் சந்தேஹம் அடைந்தனர் அல்லவா?
( 72 – 12)
 
த3ச’கம் 73 ( 1 to 5 )

மது4ராபுரீ யாத்ரா

நிச’மய்ய தவாத2 யான வார்த்தாம்
ப்4ருச’ மார்தா: பசு’பால பா3லிகாஸ்தா:|
கிமித3ம் கிமித3ம் கத2ன்விதீமா :
ஸமவேதா: பரிதே3விதான்யகுர்வன்|| ( 73 – 1)

உம்முடைய பிரயாணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கோபிகைகள் மிகவும் வருத்தம் அடைந்தனர். ஒன்று கூடி “இது என்ன? இது என்ன? இது எப்படி வந்தது என்று பிரலாபித்தனர். ( 73 – 1 )

கருணா நிதி4ரேஷ நந்த3 ஸூனு:
கத2மஸ்மான் விஸ்ருஜே த3னன்ய நாதா2:|
ப3த ந: கிமு தை3வ மேவ மாஸீத்
இதி தாஸ்த்வத்3 க3த மானஸா விலேபு:|| ( 73 – 2 )

“கருணாநிதியான இந்தக் கிருஷ்ணன் வேறு நாதன் இல்லாத நம்மை எப்படிக் கைவிடுவான்? கஷ்டமே! நம்முடைய தலைவிதி இப்படி ஆயிற்றே!” என்று தங்களிடம் செலுத்திய மனத்துடன் பெண்கள் பலவாறு வருந்தினார்கள் அல்லவா
( 73 – 2)
சரம ப்ரஹரே ப்ரதிஷ்ட2 மான:
ஸஹ பித்ரா நிஜ மித்ரமண்ட3லைச்’ச |
ப்ரதி தாப ப4ரம் நிதம்பி3னீனாம்
ச’மயிஷ்யன் வ்யமுசஸ்ஸகா2யமேகம் || ( 73 – 3 )

இரவின் கடைசி யாமத்தில் தந்தையுடனும், தோழர்களுடனும் புறப்படுகின்ற நீங்கள்; கோபிகைகளின் வருத்தத்தைத் தணிக்க, ஒரு தோழனைத் தூது அனுப்பினீர்கள் அல்லவா? ( 73 – 3)

அசிரா து3பயாமி ஸந்நிதி4ம் வோ
ப4விதா ஸாது4 மயைவ ஸங்க3மச்’ரீ:|
அம்ருதாம்பு3னிதௌ4 நிமஜ்ஜயிஷ்யே
த்3ருத மித்யாச்’வஸிதா வதூ4ரகார்ஷீ:|| ( 73 – 4 )

“தாமதிக்காமல் உங்கள் பக்கம் வருவேன். விரும்பிய வண்ணம் என்னுடன் சம்போக சுகம் உங்களுக்குக் கிடைக்கும்! ஆனந்தக் கடலில் தாமதியாமல் உங்களை மூழ்கச் செய்கின்றேன்!” என்று சொல்லி கோபிகைகளை சமாதானம் செய்தீர்கள் அல்லவா?
( 73 – 4)

ஸவிஷாத3 ப4ரம் ஸயாஞ்ச முச்சை :
அதிதூ3ரம் வனிதாபி4ரக்ஷ்யமாண:|
ம்ருது3 தத்3 தி3சி’ பாதயன் நபாங்கா3ன்
ஸபா3லோSக்ரூர ரதே2S ன நிர்க3தோபூ4:|| ( 73 – 5 )

மிக வருத்ததுடனும், “தாங்கள் திரும்பி வரவேண்டும்!” என்ற பிரார்த்தனையுடனும், தலையை உயர்த்தி வெகு தூரம் வரைத் தங்களைக் கண்டனர் கோபிகைகள். தாங்கள் மெதுவாக அவர்கள் திக்கில் கடைக் கண்களைச் செலுத்தி, பலராமனுடன் கூட அக்ரூரரின் தேரில் ஏறிச் சென்றீர்கள் அல்லவா? ( 73 – 5)
 
த3ச’கம் 73 ( 6 to 10)

மது4ராபுரீ யாத்ரா

அனஸா ப3ஹுலேன வல்லவானாம்
மனஸா சானுக3தோSத2 வல்லவனாம்|
வனமார்த்த ம்ருக3ம் விஷண்ண வ்ருக்ஷம்
ஸமதீதோ யமுனாதடீ மயாஸீ:|| ( 73 – 6)

பிறகு கோபர்களுடைய அனேக வண்டிகளும், கோபிகைகளுடைய மனங்களும் தங்களைப்பின் தொடர; வருந்திய மிருகங்களும் வாடிய மரங்களும் நிறைந்த காட்டைக் கடந்து யமுனைக் கரையை அடைந்தீர்கள் அல்லவா? ( 73 – 6)

நியமாய நிமஜ்ஜ்ய வாரிணி த்வாம்
அபி4 வீக்ஷ்யாத2 ரதேSபி கா3ந்திநேய:|
விவசே’Sஜனி கின்வித3ம் விபோ4ஸ்தே
நனுசித்ரம் த்வவலோகனம் ஸமந்தாத்|| ( 73 – 7)

அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்வதற்கு யமுனா ஜலத்தில் மூழ்கியபோது, அந்த ஜலத்திலும் பிறகு அந்தத் தேரிலும் தங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அல்லவா? எங்கும் நிறைந்து இருக்கும் உங்களின் இந்த தரிசனம் அத்தனை ஆச்சரியமானதா என்ன? ( 73 – 7)

புனரேஷ நிமஜ்ஜ்ய புண்யசா’லீ
புருஷம் த்வாம் பரமம் பு4ஜங்க போ4கே3|
அரி கம்பு3 கதா3ம்பு3ஜை: ஸ்புரந்தம்
ஸுர ஸீத்தௌக4 பரீதமாலுலோகே || ( 73 – 8 )

புண்ணியசாலியான அந்த அக்ரூரர் மீண்டும் ஜலத்தில் மூழ்கியபோது தங்களை ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவராகவும்; சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றுடன் பிரகாசிப்பவராகவும்; தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்துகொண்டு துதிப்பவராகவும் கண்டார் அல்லவா? ( 73 – 8)

ஸ ததா3 பரமாத்மா சௌக்ய ஸிந்தௌ4
விநிமக்3ன: ப்ரணூவன் ப்ரகார பே4தை3:|
அவிலோக்ய புனச்’ச ஹர்ஷ ஸிந்தோ4:
அனுவ்ருத்ய புலகாவ்ருதோ யயௌ த்வாம் || ( 73 – 9 )

அப்போது அவர் பிரம்மானந்த சாகரத்தில் மூழ்கியவராகத் தங்களைத் துதித்துக் கொண்டு , மறுபடியும் தங்களைக் காணாமலும், கண்டும், ஆனந்தப் பெருக்கின் தொடர்ச்சியாகப் புளகம் அடைந்தவராகத் தங்களிடம் வந்தார் அல்லவா? ( 73 – 9)

கிமு சீ’தலிமா மஹான் ஜலே யத்
புலகோSஸாவிதி சோதி3தேன தேன |
அதிஹர்ஷா நிருத்தரேண ஸார்த்த4ம்
ரத2வாஸீ பவனேச’ பாஹிமாம் த்வம் || ( 73 – 10 )

“ஜலம் மிகவும் குளிர்ந்து இருந்ததா? மயிர் கூச்சம் காணப் படுகிறதே!” என்று கிருஷ்ணன் கேட்டபோது சந்தோஷ மிகுதியால் பதில் ஏதும் கூறாமல் இருந்த அந்த அக்ரூரருடன் தாங்கள் தேரில் வீற்று இருந்தீர்கள் அல்லவா? குருவயூரப்பா! என்னைக் காப்பாற்று! ( 73 – 10)
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5j. கிங்கரன்.

பதினாறு வயது நிரம்பி விட்டது;
பறித்து உயிரை எடுத்துச் செல்ல


அங்கே தோன்றினான் எமதூதன்;
கங்கை புனை சிவபூஜை கண்டான்!

நெருங்க முடியவில்லை அவனால்!
திரும்பிச் சென்றான் வெகு விரைவாக.

“சிவனிடம் பொருந்திய உள்ளம்;
சிவன் தன் பாதம் பதித்திட்ட சிரம்;

அணுக முடியவில்லை அவனிடம்!
அமர்ந்துள்ளான் சிவ வழிபாட்டில்!”

கணக்கனை அழைத்தான் எமதர்மன்;
“கணக்குப் பார்த்துச் சொல்லு வயதை!”

“பதினாறு முடிந்து விட்டது பிரபோ!
அதுவே அவனுக்கு அளித்த ஆயுள்!”

“சிவ வழிபாடு சிறந்த அறம் எனினும்
சிறுவனின் காலம் முடிந்துவிட்டது.

விண்ணுலகம் அடைவதற்கு உரியவனை
மண்ணுலகம் சென்று அழைத்து வா!”

காலனைப் பணித்தான் எமதர்மன்;
காலன் சென்றடைந்தான் காசியை.

அஞ்சினான் சிறுவனை நெருங்கிட;
“கெஞ்சியாகிலும் கூட்டிச் செல்வேன்”

கண்ணுக்குத் தெரியும் வடிவம் எடுத்து
கண்நுதற் பெருமான் அடியானைத் தொழ,

“நீ யார்?” என வினவினான் சிறுவன்.
“நீவீர் தென்புலம் செல்ல வேண்டும்!

எமனின் அமைச்சன் காலன் நானே;
என்னுடன் அழைத்துப் போக வந்தேன்”

“சிவனைத் தொழுபவன் வர மாட்டான்
சிவலோகம் தவிர வேறு ஒரு உலகம்!

உன்னுடன் வர என்னால் இயலாது!
உன் தலைவனிடம் சென்று சொல்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2(# 5J). MAARKKANDEYAN AND KINKARAN.

Maarkkandeyan had completed sixteen years of age. A kinkaran came to take away his life. He saw the lad seated in Siva pooja. He could not even go near the lad.

He went back to Yama. “The boy is immersed in worshiping Siva. Siva has blessed him by placing his foot on the boy’s head. I could not bring his life”

Yama called Chitragupthan and verified the age of the boy. “He is now sixteen years old and that is the lifespan allotted to him sir!”

“Siva puja is a sat karma but since his lifespan is over he must be brought here at any cost!” He set his minister Kaalaa to do the job.

Kaalaa went to Kasi. He saw the lad immersed in puja and realized that, if at all, the boy would have to come on his own – as no one could touch him. He took a visible form and prostrated to Markandeya.

The buy asked him, “Who are you? What do you want?”

“I am Kala the minister of Yama. Your time on earth is over. You have to come with me now to Yamalokam.”

“A devote of Siva will go only Sivalokam and never go to any other lokam. Go and tell your master this”

The boy was very firm and Kala had to retreat in haste.
 
VINAAYAKA PURAANAM 1

27a. கீர்த்தி

பரமசிவன் அமர்ந்திருந்தார் கயிலையில்
பார்வதியுடனும், சிவ கணங்களுடனும்.

“வன்னிப் பத்திரத்தில் மகன் கணபதிக்கு
என்ன காரணத்தால் இத்தனை பிரியம்?”

பார்வதி தேவி கேட்டாள் பரமசிவனிடம்.
பார்வதிக்குப் பரமசிவன் கூறினார் இதை.

"பிரியவிரதன் ஒரு மிகவும் நல்ல அரசன்;
அரிய பல தருமங்கள் செய்து வந்தான்.

கீர்த்தி பரவி இருந்தது உலகு எங்கும்;
கீர்த்தி, பிரபை என்று அரசியர் இருவர்!

பிரபை அழகிய இளம் மனைவி.
பிரியம் சற்று அதிகம் அவள் மீது.

பெரியவள் கீர்த்தி நல்ல குணவதி.
குறையாத அன்பு கொண்டிருந்தாள்.

பத்மநாபன் பிறந்தான் பிரபைக்கு;
பாஞ்சாலன் மகளை மணந்தான்.

பெருமை ஓங்கி விட்டது பிரபைக்கு
பெரியவளை மதிப்பதே இல்லை.

கணவனைக் காண வந்தாள் கீர்த்தி
கணவன் இருந்தான் பிரபை அறையில்.

எரிந்து விழுந்தாள் கீர்த்தி மீது பிரபை
எட்டியும் உதைத்துத் தள்ளினாள் கீழே.

கண்டும் காணாது இருந்த கணவனைக்
கண்டு மனம் வெதும்பினாள் கீர்த்தி.

சக்களத்தியின் வெறுப்பு சஹஜமே
சக்களத்திக்குத் துணை கணவனுமா?

உயிர் வாழ்வதில் பயன் இல்லையோ?
உலகமே இருண்டுபோய்க் காட்சி தந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
VINAAYAKA PURAANAM 1

27a. Keerti

Siva was seated in Kailash with Parvathi and the siva ganas. Parvathi asked Siva, “Why does Ganapathy love the Vanni patram so much?” Siva told her this story.


Priya Vrathan was a good-natured king. He took good care of his country and citizens and did a lot of charitable work. His fame had spread all over the world. His two queens were Keerti and Prabha. He was very fond of his younger queen Prabha. Keerthi the elder queen was treated with indifference.


Prabha had a son called Padmanaabhan. he grew up and married the daughter of the king of Paanchaalaa. So Prabha became even more arrogant and haughty. She treated with contempt the elder queen Keerthi.


One day Keerthi came to meet her husband who was in Prabha’s room at that time. Prabha abused her and kicked her down on the floor. The king saw the happening but remained silent.


Keerthi felt very bad by the king’s indifference. It was usual for the other wife to hate her but if her husband also joined hand with her, what is the point in her living?
 
Back
Top