A poem a day to keep all agonies away!

த3ச’கம் 56 ( 6 to 10)

காலிய அனுக்3ரஹம்

ரமணகம் வ்ரஜ வாரிதி4 மத்4யகம்
பணிரிபுர் ந கரோதி விரோதி4தாம் |
இதி ப4வத் வசனான்யதி மானயன்
பணிபதிர் நிரகா3 து3ரகை ஸமம் ||( 56 – 6 )


“சமுத்திரத்திற்கு நடுவில் இருக்கும் ரமணகத் தீவுக்குப் போ! கருடன் உன்னை விரோதிக்க மாட்டான்” என்னும் தங்கள் வார்த்தைகளை மதித்து காளீயன் தன் பாம்புக் கூட்டத்துடன் கிளம்பிச் சென்றான். ( 56 – 6)

பணிவது4ஜன தத்த மணி வ்ரஜ
ஜ்வலித ஹார து3கூல விபூ4ஷித : |
தடக3தை: ப்ரமதா3ச்’ரு விமிச்’ரிதை:
ஸமக3தா2: ஸ்வஜ்னைர் தி3வஸாவதௌ4 ||( 56 – 7 )

நாகபத்தினிகள் அளித்த பிரகாசிக்கும் மாலையையும், பட்டுத் துகிலையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்ட நீங்கள்; கரையில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பொழியும் தங்கள் பந்துக்கள் நண்பர்களிடம் சென்று சாயங்காலத்தில் ஒன்று சேர்ந்தீர்கள் அல்லவா? ( 56 – 7)

நிசி’புனஸ் தமஸா வ்ரஜமந்தி3ரம்
வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜனோத்கரே |
ஸ்வபதி தாத்ரா ப4வச்சரணாச்’ரயே
த3வக்ருஷானு ருருந்த4 ஸமந்தத: ||( 56 – 8 )

இரவு நேரத்தில் கோகுலத்துக்குத் திரும்புவது கடினம் என்பதால் தங்கள் திருவடிகளையே ஆச்ரயித்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர் அனைவரும். இரவு தூங்கும் பொழுது காட்டுத்தீ வந்து நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டு விட்டது அல்லவா? ( 56 – 8)

ப்ரபு3தி4தானத2 பாலய பலயேதி
உத3யதா3ர்த ரவான் பசு’பாலகான் |
அவிது மாசு’ பாபாத2 மஹானலம்
கிமிஹ சித்ர மயம் க2லு தேமுக2ம் ||( 56 – 9 )

அப்போது விழித்துக் கொண்டு “காப்பாற்று! காப்பாற்று!” என்று வருந்திக் கூக்குரல் இடும் கோபர்களைக் காக்க அந்தப் பெரும் தீயை விரைந்து தாங்கள் பானம் செய்தீர்கள் அல்லவா? இதில் என்ன அதிசயம் இருக்கிறது? இந்த அக்கினியே தங்கள் திருவாய் அல்லவா? ( 56 – 9)

சி’கி2னி வர்ணத எவ ஹி பீததா
பரிலஸத் யது4னா க்ரியயாSப்யசௌ |
இதி நுத: பசு’பைர் முதி3தைர் விபோ4
ஹர ஹரே து3ரிதை: ஸஹ மே க3தா3ன் ||( 56 – 10 )

“அக்கினி இடத்தில் மட்டும் தான மஞ்சள் நிறம் (பீதத்வம்) பிரகாசிக்கின்றது? இப்போது அதைக் குடித்ததிலும் பீதத்வம் பிரகாசிக்கின்றது அல்லவா? பாவங்களைப் போக்க வல்ல பிரபுவே!” என்று சந்தோஷம் அடைந்த கோபர்கள் தங்களைத் துதித்தார்கள் அல்லவா? இப்படிப் பட்ட தாங்கள் எனது ரோகங்களையும் அதற்குக் காரணமான பாவங்களையும் போக்கடிக்க வேண்டும். ( 56 – 10)
 
த3ச’கம் 57 ( 1 to 5 )

ப்ரலம்பா3ஸுர வத4ம்

ராமஸக2: க்வாபி தி3னே காமாத
ப4க3வன் க3தோ ப4வான் விபினம் |
ஸூனுபி4ரபி கோபானாம் தே3னுபி
ரபி4 ஸம்வ்ருதே லஸத்3வேஷ: ||( 57 – 1 )


பக்தர்களின் இஷ்டதைக் கொடுக்கும், துஷ்டர்களின் இஷ்டதைக் கெடுக்கும் பகவானே! தாங்கள் ஒரு நாள் பலராமனுடன் கூட, ஆபரணங்கள் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்டவராக, கோப குமாரர்களாலும், பசுக்களாலும் சூழப் பட்டவராக காட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா? ( 57 – 1)

ஸந்த3ர்ஷயன் ப3லாய ஸ்வைரம்
ப்3ருந்தா3வனச்’ரியம் விமலாம் |
காண்டீ3ரை: ஸஹ பாலைர்
பா4ண்டீ3ரக மாக3மோ வடம் க்ரீட3ன் ||( 57 – 2)


நிர்மலமான பிருந்தாவனத்தின் அழகினை பலராமனுக்குக் காட்டியபடியே, கையில் தடி எடுத்துக் கொண்ட சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு, பாண்டீரகம் என்ற ஆலமரத்தை அடைந்தீர்கள் அல்லவா? ( 57 – 2)

தாவத் தாவக நித3னஸ்ப்ருஹயாலுர்
கோ3ப மூர்த்தி ரத3யாலு: |
தை3த்யை ப்ரலம்ப3 நாம
ப்ரலம்ப3 பா3ஹும் ப3வந்த மாபேதே3 ||( 57 – 3)


அப்பொழுது தங்களைக் கொல்ல விரும்பிய, கருணை அற்ற கொடிய பிரலம்பன் என்னும் அசுரன் நீண்ட கரங்களை உடைய தங்களிடம் வந்தான். (57 – 3)

ஜானன்யப்ய விஜானன்னிவ
தேன ஸமம் நிப3த்3த4 சௌஹார்த்3ர: |
வடநிகடே படுபசு’ப வ்யாபத்3த4ம்
த்3வந்த3 யுத்3த4 மாரப்3தா4:||( 57
- 4 )

தாங்கள் அவனை அறிந்து இருந்த போதிலும் முற்றிலும் அறியாதவர் போல அவனுடன் சிநேகம் செய்து கொண்டு பிறகு ஆலமரத்தடியில் நிபுணத்வம் வாய்ந்த கோபபாலர்களுடன் துவந்த யுத்தம் செய்யத் தொடங்கினீர்கள் அல்லவா? ( 57 – 4)

கோ3பான் விப4ஜ்ய தன்வன்
ஸங்க4ம் ப3லப4த்3ரகம் ப4வத்கமபி |
த்வத்3 ப4லபீ4தம் தை3த்யம் த்வத்3 ப3லக3த
மன்வ மன்யதா2 ப4கவன் ||( 57 – 5 )

எல்லாம் அறிந்த பகவானே! கோபர்களை இரண்டு குழுவாகப் பிரித்து ஒரு குழுவுக்கு பலராமனைத் தலைவன் ஆக்கினீர்கள். ஒரு குழுவுக்குத் தாங்களே தலைவராக ஆனீர்கள் அல்லவா? தங்கள் பலத்தைக் கண்டு பயந்த அசுரனைத் தங்கள் குழுவிலேயே சேர்த்துக் கொண்டீர்கள். ( 57 – 5 )
 
த3ச’கம் 57 ( 6 to 11 )

ப்ரலம்பா3ஸுர வத4ம்

கல்பித விஜேத்ரு வஹனே ஸமரே
பரயூதக3ம் ஸ்வ தயிததரம்|
ஸ்ரீ தாமான மத4த்தா2: பராஜிதோ
பக்த தாஸதோ ப்ரத2யன் ||( 57 – 6)


ஜெயித்தவர்களைத் தோற்றவர்கள் தோளில் தூக்கிச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய விளையாட்டுப் போரில் தோற்ற தாங்கள், எதிர் பக்ஷத்தில் இருக்கும் தங்களுக்கு மிகவும் பிரியமான ஸ்ரீதாமா என்பவனைச் சுமந்து சென்று, அதன் மூலம் தாங்கள் பக்தனின் தாசன் என்று நிரூபித்தீர்கள் அல்லவா? ( 57 – 6 )

ஏவம் ப3ஹுஷு விபூ4மன் பா3லேஷு
வஹத்ஸு பா3ஹ்யமானேஷு |
ராம விஜித: ப்ரலம்போ3 ஜஹார
தம் தூ3ரதோ ப4வத்3 பீ4த்யா ||( 57 – 7)

எங்கும் நிறைந்து விளங்கும் ஈசா! இவ்விதம்மாக அநேகம் சிறுவர்களை அநேகம் சிறுவர்கள் தூக்கிச் சென்று விளையாடும் பொழுது, பலராமனிடம் தோற்றுப் போன பிரலம்ப அசுரன், தங்களிடம் உள்ள பயத்தால் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகு தூரம் சென்று விட்டான் அல்லவா? ( 57 – 7)

த்வத்3 தூ3ரம் க3மயந்தம் தம் த்3ருஷ்ட்வா
ஹலினி விஹித க3ரிம ப4ரே|
தை3த்ய :ஸ்வரூப மாகா3த்3 யத்3ரூபாத்
ஸ ஹி ப3லோSபி சகிதோSபூ4த் ||( 57 – 8)

தங்களிடம் இருந்து தன்னை வெகு தூரம் சுமந்து செல்வதைக் கண்ட பலராமன் தன் உடலின் எடையை அதிகரித்த போது , அசுரனும் தன் சுய வடிவத்தை எடுத்துக் கொண்டான் அல்லவா? அந்த உருவத்தைக் கண்ட பலவான் ஆகிய பலராமன் கூட அஞ்சினான். ( 57 – 8)

உச்சயதோ தைத்ய தனோஸ்
தவன் முகமாலோக்ய தூ3ரதோ ராம: |
விக3த ப4யோ த்3ருட3 முஷ்ட்யா
ப்3ருஷ து3ஷ்டம் ஸபதி3 பிஷ்டவாநேனம் ||( 57 – 9)

அந்த அசுரனின் உடல் வெகு உயரமாக இருந்தது. அதனால் வெகு தொலைவில் இருந்தும் கூடத் தங்கள் திரு முகத்தைக் கண்ட பலராமன் உடனேயே பயம் நீங்கியவனாக அந்த துஷ்ட அசுரனைத் தன் கை முஷ்டியால் சதைத்து விட்டான் அல்லவா? ( 57 – 9 )

ஹத்வா தா3னவ வீரம் ப்ராப்தம் ப3ல
மாலிலிங்கி3த ப்ரேம்ணா |
தாவன் மிலதோர் யுவயோ:
ஸிரஸி க்ருதா புஷ்பா வ்ருஷ்டி ரமரகணை : ||( 57 – 10)

அசுர வீரனைக் கொன்று விட்டுத் திரும்பி வந்த பலராமனைத் தாங்கள் அன்புடன் ஆலிங்கனம் செய்து கொண்டீர்கள். அப்போது ஒன்று சேர்ந்து இருந்த உங்கள் இருவர் மீதும் தேவர்கள் பூ மாரி பெய்தார்கள். ( 57 – 10)

ஆலம்போ3 பு4வனானாம் ப்ராலம்ப3ம்
நித4ன மேவ மாரசயன் |
காலம் விஹாய ஸத்3யோ
லோலம்ப3ருசே ஹரே ஹரே க்லேசா’ன் ||( 57 – 11)

வண்டின் நிறத்துக்கு நிகரான நிறம் உடைய ஸ்ரீ ஹரியே! உலகங்களுக்கு ஆச்ரயம் ஆனவரும் பிரலம்பாசுரனின் வதத்தை செய்வித்தவரும் ஆகிய தாங்கள் தாமதம் செய்யாமல் என் வியாதிகளை இப்போதே போக்க வேண்டும்.( 57 – 11)
 
VINAAYAKA PURAANAM 1.

25b. சாம்பன்

புண்ணியகீர்த்தி விதர்ப்பதேச மன்னன்;
கண்ணிய அரசனின் மனைவி மதனாவதி.

எல்லாச் செல்வங்களும் பெற்றவர்களுக்கு
இல்லை தலையாய மழலைச் செல்வம்.

காலம் முடிந்தது, வாழ்வை நீத்தனர்;
ஞாலம் ஆண்டிட இல்லை ஒரு வாரிசு!

துத்தரிடனும் வருந்தியவன் புத்திரனின்றி;
புத்திரன் பிறக்கவில்லை அரக்கர் நட்பால்.

புத்திரன் பிறந்தான் அவன் மனைவிக்கு,
எத்தன் ஒரு செம்படவன் தொடர்பால்!

செம்படவனுக்குப் பிறந்தவன் சாம்பன்;
அம்சம் பெறவில்லை அரசனுக்குரியவை!

துத்தரிடன் ஆவான் மன்னனின் சுற்றம்;
துத்தரிடன் மகனை ஆக்கினர் அரசனாக!

தாய்க்குப் பிள்ளை தப்பாது பிறந்ததால்,
துய்த்தான் காமசுகம் சதாசர்வ காலமும்!

ஆட்சிப் பொறுப்பை அளித்து விட்டான்
மாட்சிமை இல்லாத துர்புத்தியினிடம்.

சொல்லொணாத் துயர் அடைந்தது நாடு
பொல்லாத துர்புத்தியின் அரசாட்சியில்.

வேட்டைக்குச் சென்றனர் அனைவரும்;
வேழமுகன் ஆலயம் இருந்தது அங்கே.

அமைத்தவர் வசிஷ்டர் தசரதனுக்காக;
ஆராதித்தனர் அங்கு வாழும் மக்கள்.

பக்தி என்ற ஒன்று இல்லாது போயினும்,
படைத்தான் தன் பொருட்களை ஐயனுக்கு!

வேடிக்கையாகச் செய்த இச்செயல்
விடிவு காலத்தைத் தந்தது பின்னர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1.

25b. Saamban

Punyakeerthi was the king of Vidarpa desam. His queen was Madanaavathi. They had everything except children to make their happiness complete. When their time came, they left the world without leaving a prince to take over the rulership.

Duththaridan was the king’s close relative. He too had suffered without any child for long. Because of his close association with asuras, he did not have any child.

Later his wife conceived through a fisherman and Saamban was born to her. Saamban was born in the royal family but did not have the qualities associated with it – since his father was after all common fisherman.

Saamban was made the new king. He took after his mother and spent all his time in enjoying carnal pleasures. He appointed Durbuddhi as his representative to rule the country. Durbuddhi was a wicked man as his name suggested. He made the lives of the citizens miserable.

One day they all went for on a hunting expedition. They hunted many wild animals. On the way back, they saw a Vinayaka temple. It had been established by Vasishtar for King Dasarathan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2b. வியாசரின் பதில்

“தருமத்தை நிலை நாட்டிய மஹாவிஷ்ணு
விருப்பத்துடன் எடுத்தாரா அவதாரங்களை?

கர்ம வினைகளால் நிகழ்ந்தவை அவை !
கர்ம வினைகள் இன்றி அவதாரங்கள் ஏது?

ஜலக்ரீடை இன்பமாகச் செய்து கொண்டு,
மலர் செண்டுடன் விளையாடிக் கொண்டு

சொக்கட்டான் ஆடியபடி காலத்தைக் கழித்து;
சுக போகங்களை லக்ஷ்மியுடன் அனுபவித்து;

காலம் கழித்திருக்கலாம் வைகுந்தத்திலேயே.
கர்ப்ப வாசம் செய்வதற்கு அவசியம் என்ன?

கர்ப்ப வாசத்திலும் நரகம் வேறொன்று உண்டோ?
கர்ப்பத்தில் தலைகீழாக இருப்பதே ஒரு கொடுமை!

முடங்கிக் கிடக்க வேண்டும் சிறிய பையில்!
தொடங்கும் வாழ்க்கை கருப் பாதையிலிருந்து.

உண்டோ பிறந்த பின்னே வாழ்வில் சுகம்?
மண்டும் துயர்கள், நோய்கள், துன்பங்கள்!

தேவர்களுக்கும் உண்டு கர்ம பலன் – எனவே
தேவர்கள் பிறந்தனர் குரங்குளாக ஒருமுறை.

கிருஷ்ண அவதாரத்தின் பெருமை சொல்வேன்;
கிருஷ்ணன் ஆவான் விஷ்ணுவின் அவதாரம்.

வசுதேவராகப் பிறந்தார் காசியப முனிவர்;
பசு மேய்க்கும் தொழில் வந்தது சாபத்தால்.

மனைவி தேவகி அதிதியின் அவதாரம்;
மனைவி ரோஹிணி சுரசையின் அவதாரம்.

வருணன் தந்த சாபத்தால் வந்து பிறந்தனர்
வசுதேவரின் இரு மனைவிகளாக பூமியில்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2b.Sage Vyaasaa’s reply

Sage Vyaasaa continued ,” Did Vishnu the restorer of Dharma took the avatars willingly? No! They happened as a result of his karma actions. Without Karma, there will be no avatar nor birth.

Vishnu can spend his time in Vaikunta happily doing jalakreeda, playing with balls of flowers, playing dice with Lakshmi Devi and indulging with her.

Why should he live in the womb and be born as any normal jeeva? Is there a greater punishment than living in a womb? One has to remain packed tightly in a small bag and hang upside down till the time of birth.

The birth though the small birth canal itself is a harrowing exerience. Is there any happiness after being born? Life is filled with problems, difficulties and diseases. Even Deva suffer the effects of Karma. They were born as monkeys once due to the effect of karma.

I shall tell you about Vishnu’s avatar as Krishna now. Sage Kashyap was born as Vasudeva. His wife Aditi was born as Devaki. Rohini was Surasa’s avatar. Due to a curse given by Varuna these three were born thus on the earth.
 
Sreeman Naarayaneeyam

த3ச’கம் 58 ( 1 to 5)

தா3வாக்3னி மோக்ஷ:

த்வயி விஹரணலோலே பா3ல ஜாலை: ப்ரலம்ப3
ப்ரமத2ன ஸவிலம்பே3 தே4னவ: ஸ்வைரசாரா:|
த்ருணா குதுக நிவிஷ்டா தூ3ரம் தூ3ரம் சரந்த்ய:
கிமபி விபின மைஷீகாக்2யமீஷாம் ப3பூ4வு:||(58 – 1)


தாங்கள் கோப பாலர்களுடன் விளையாட விருப்பம் உடையவராகப் பிரலம்பாசுரனைக் கொல்லுவதற்காகத் தாமதித்த பொழுது பசுக்கள் தம் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டு புல்லை உண்ண விரும்பி வெகு தூரத்தில் உள்ள ஐஷீகம் என்ற பெயர் உடைய ஒரு வனத்தை அடைந்தன.( 58 – 1)

அனதி4க3த நிதா3க4 க்ரௌர்ய ப்3ருந்தா3வனாந்தாத்
ப3ஹி ரித3 முபயாதா : கானனம் த4னவசஸ்தா:|
தவ விரஹ வஷண்ணா ஊஷ்மல க்3ரீஷ்ம தாப
ப்ரஸர விஸர த3ம்ப4ஸ்யாகுலா: ஸ்தம்ப4மாபு:||( 58 – 2)


அந்தப் பசுக்கள், வேனல் காலத்தின் கொடுமை அறியப்படாத பிருந்தாவனத்தில் இருந்து, இந்தக் காட்டை வந்து அடைந்ததால், தங்கள் பிரிவினால் மிகவும் வருந்தியும், மிகக் கடுமையான க்ரீஷ்ம ருதுவின் தாபத்தால் உண்டான தாகத்தால் தம் வசம் இழந்தும், அசைவற்று நின்றன. ( 58 – 2)

தத3னு ஸஹ ஸஹாயைர் தூ3ரமன்விஷ்ய சௌ’ரே
க3லித ஸரணி முஞ்ஜாரண்ய ஸஞ்ஜாத கே2த3ம் |
பசு’குலமபிவீக்ஷ்ய க்ஷிப்ர மாநேஷு மாரா
த்வயி க3தவதி ஹீ ஹீ ஸர்வதோSக்னிர் ஜஜ்ரும்பே4 ||( 58 – 3)

சூரஸேனகுலத்தில் ஜனனம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணா! அப்போது தோழர்களுடன் வெகு தூரம் தேடிப் பிறகு வழி பிழைத்து, முஞ்சிக் காட்டில் கஷ்டப்படுகின்ற பசுக் கூட்டதைக் கண்டு, விரைவாக ஒட்டிக் கொண்டுவரத் தாங்கள் பக்கத்தில் சென்ற பொழுது, நான்கு புறங்களிலும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. ஹா!ஹா! என்ன கஷ்டம்! ( 58 – 3)

ஸகல ஹரிதி தீ3ப்தே கோ4ர பா4ங்கார பீ4மே
சி’கி2னி விஹத மார்கா3 அர்த4 த3க்3தா4 இவர்தா:|
அஹஹ பு4வனா ப4ந்தோ பாஹி பாஹீதி ஸர்வே
ச’ரண முபக3தாஸ்த்வாம் தாபஹர்தார மேகம் ||(58 – 4)

காட்டுத் தீ எல்லா திக்குகளிலும் கோரமான சத்தத்துடன் பயங்கரமாக எரியும் பொழுது, அவர்கள் எல்லோரும் வழி மறிக்கப்பட்டு, பாதி எரிந்தர்வர்கள் போல வருந்தி “லோக பந்துவே! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று மூன்று வகைத் தாபங்களையும் போக்கடிக்க வல்ல தங்களையே சரணம் அடைந்தார்கள். ( 58 – 4 )

அலமலமதிபீ4த்யா ஸர்வதோ மீலயத்4வம்
த்3ருச’மிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |
க்வனு த3வ த3ஹனோSசௌ’ குத்ர முஞ்சாடவி ஸா
ஸபதி3 வவ்ருதிரே தே ஹந்த பா4ண்டீ3ர தே3சே’ ||( 58 – 5)

“போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் ” என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்! ( 58 – 5 )
 
த3ச’கம் 58 ( 6 to 10)

தா3வாக்3னி மோக்ஷ:

ஜெய ஜெய தவ மாயா கேயமீசே’தி தேஷாம்
நுதிபி4 ருதித ஹாஸோ ப3த்3த3னானா விலாஸ:|
புனரபி விபினாந்தே பப்ராசார: பாடலாதி3
ப்ரஸவ நிகர மாத்ரா க்3ராஹ்ய க3ர்மானுபா4வே ||(58 – 6)


“ஹே ஈசா! தங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும்! தங்களுடைய மாயை எப்படிப் பட்டது!” என்று பலவாறான புகழ் உரைகளைக் கேட்டு மந்தஹாசத்துடன், பல லீலைகள் புரிந்து கொண்டு, வேனல் நிலவும் வன மத்தியில் மீண்டும் சஞ்சரித்தீர்கள் அல்லவா? ( 58 – 6)

த்வயி விமுக2 மிவோச்சைஸ் தாப பா4ரம் வஹந்தம்
தவ ப4ஜன வத3ந்த: பங்க முச்சோஷயந்தம்|
தவ பு4ஜ வது3த3ஞ்சத் பூ4ரிதேஜ: ப்ரவாஹம்
தபஸ மய மனைஷீர் யாமுநேஷு ஸ்த2லேஷு ||( 58 – 7)


தங்களிடத்தில் பக்தி இல்லாததைப் போல அதிகமான ஆத்யாத்மகம் முதலிய தாபத்தை (உஷ்ணத்தை) வஹிக்கின்றதும், தங்கள் சேவையைப் போல உள்ளத்தில் இருக்கும் பாபச் சேற்றை போக்கடிப்பதும் (உலர்த்துவதும்), தங்கள் கைகளைப் போல உயரக் கிளம்புகின்ற அதிகமான பராக்கிரமத்தின் பெருக்கை (வெய்யிலின் பெருக்கை) உடையதும் ஆகிய வேனற் காலத்தை யமுனா தீரத்தில் உள்ள பிரதேசங்களில் கழித்தீர்கள் அல்லவா? ( 58 – 7)

தத3னு ஜலத3 ஜாலைஸ் தவத்3வ்புஸ்துல்ய பாபி4:
விகாஸ தமல வித்3யுத் பீதவாஸோ விலாசௌ:|
ஸகல பு4வன பா4ஜாம் ஹர்ஷதா3ம் வர்ஷவேலாம்
க்ஷிதி த4ர குஹரேஷு ஸ்வைரவாஸீ வ்யனைஷீ: ||( 58 – 8 )

அதன் பிறகு, தங்கள் திரு மேனியை ஒத்த நிறமுடையவைகளும், மஞ்சள் பட்டாடை போல பிரகாசிக்கும் மின்னற் கொடிகளை உடையவைகளும், ஆகிய மேகக் கூட்டங்கள், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் ஆனந்தம் அளிக்கும் மழைக் காலத்தில் மலைக் குகைகளில் தங்கள் இஷ்டம் போல வசித்தீர்கள் அல்லவா? ( 58 – 8)

குஹரதல நிவிஷ்டம் த்வாம் க3ரிஷ்டம் கி3ரீந்த்3ரா:
சி’கி2குல நவ கேகா காகுபி4: ஸ்தோத்ரகாரி |
ஸ்புட குடஜ கத3ம்பசஸ்தோம புஷ்பாஞ்ஜலிஞ்ச
ப்ரவி த3த4னு பே4ஜே தே3வ கோ3வர்த4னோSசௌ ||( 58 – 9)

ஹே தேவா! மலை அரசனான கோவர்த்தனன் தன் குகைகளில் வசிக்கும் தங்களை மயில்களின் கோகா சப்தங்களால் மகிழ்வித்துக் கொண்டும், தங்களைப் புகழ்ந்து கொண்டும், மலர்ந்த புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து சேவித்துக் கொண்டும் இருந்தான் அல்லவா?( 58 – 9)

அத2ச’ரத முபேதாம் தாம் ப4வத்3 ப4க்த சேதோ
விமலா ஸலில பூராம் மானயன் கானனேஷு |
தருண மமல வனாந்தே சாரு ஸஞ்சாராயன் கா:
பவனபுரபதே த்வம் தே3ஹிமே தே3ஹ சௌக்2யம் ||(58 – 10 )

அதன் பிறகு தாங்கள், தங்கள் பக்தர்கள் உள்ளம் போல நிர்மலமான ஜலப் பிரவாகத்தை உடைய அந்த சரத் காலத்தை காடுகளில் அனுபவித்துக் கொண்டும், நிர்மலமான் காடுகளில் பசுக்களை நன்கு மேய்த்துக் கொண்டும் இருந்த குருவாயூரப்பா! எனக்கு தேக சுகத்தைத் தந்தருளும்!
( 58 – 10)
 
த3ச’கம் 59 ( 1 to 5)

வேணு கா3ன வர்ணனம்

த்வத்3 வபுர் நவ கலாய கோமலம்
ப்ரேம தோ3ஹன மசேஷ மோஹனம் |
ப்ரஹ்ம தத்வ பரிசின் முதா3த்மகம்
வீக்ஷ்ய ஸம்முமுஹு ரன்வஹம் ஸ்த்ரிய:||( 59 – 1)


புதுக் காசாம்பூ போலக் கோமளமானதும்; பிரேமையைப் பெருக்குகின்றதும்; எல்லோரையும் முற்றிலும் மயக்குவதும்; சச்சிதானந்த ரூபம் ஆனதும்; பர பிரம்மமும் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டு கோபிகைகள் ஒவ்வொரு நாளும் மயக்கம் அடைந்தனர். ( 59 – 1)

மன்மதோன் மதித மானஸா: க்ரமாத்
தத்3விலோகன ராதஸ் ததஸ்தத:|
கோ3பிகாஸ் தவ ந ஸேஹிரே ஹரே
கானநோப க3தி மப்யஹர்முகே2 ||( 59 – 2)


ஹே கிருஷ்ணா! கோபிகைகள் மன்மதனால் கலக்கப்பட்ட மனதை உடையவர்களாகி, எல்லா இடத்திலும் எப்போதும் தங்களையே காண விரும்பினர். காலையில் தாங்கள் காட்டுக்குச் செல்வதைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.( 59 – 2)

நிர்க3தே ப4வதி த3த்த3 த்3ருஷ்ட்ய:
த்வத்3 க3தேன மனஸா ம்ருகே3க்ஷணா:|
வேணு நாத3 முபகர்ண்ய தூரத:
த்வத்விலாஸ கத2யாபிரேமிரே ||( 59 – 3)

காட்டுக்குப் புறப்பட்ட தங்கள் இடத்திலேயே கண்களைச் செலுத்திய மான் கண்ணியர், உங்களுடனேயே அவர்களும் மனம் சென்றுவிட, வெகு தூரத்தில் இருந்தே வேணு கானத்தைக் கேட்டுக் கொண்டும், தங்கள் லீலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் களித்தனர் அல்லவா? ( 59 – 3)

கானனாந்த மிதவான் ப4வானபி
ஸ்நிக்3த4 பாத3ப தலே மனோரமே |
வ்யத்யயாகலித பாத3மாஸ்தித:
ப்ரத்ய பூரயத வேணு நாலிகாம் ||( 59 – 4)


காட்டுக்குச் சென்ற தாங்களும் மநோஹரமான நல்ல நிழல் உள்ள ஒரு மரத்தினடியில் கால்களை மாற்றி வைத்து நின்று புல்லாங்குழல் ஊதினீ ர்கள் அல்லவா? ( 59 – 4)

மார பா3ணது4த கே2சரீ குலம்
நிர்விகார பசு’பக்ஷி மண்ட3லம் |
த்3ராவணம் ச த்3ருஷதா3 மபிப்ரபோ4
தாவகம் வ்யஜனி வேணு கூஜிதம் ||( 59 – 5)

ஹே கிருஷ்ணா! தங்களுடைய வேணு நாதம் அப்சர ஸ்திரீக்களைக் கூடக் காமவிகாரத்தால் சலிக்கச் செய்தது. பசு, பக்ஷிக் கூட்டங்களை அசைவற்றதாகச் செய்தது. கல்லையும் கரையச் செய்தது. ( 59 – 5)
 
த3ச’கம் 59 ( 6 to 10)

வேணு கா3ன வர்ணனம்

வேணுரந்த்4ர தரலங்கு3லீ த3லம்
தாள சஞ்சலித பாத3 பல்லவம் |
தத்ஸ்திதன்ய தம் தவ பரோக்ஷ மப்யஹோ
ஸம்விசிந்த்ய முமுஹூர் வ்ரஜாங்கனா ||( 59 – 6)

வேணுவின் துவாரங்களில் சலிக்கின்ற விரல் நுனிகளையும், தாளத்தை அனுசரித்து அசைகின்ற துளிர் போன்ற கால்களையும் உடைய தங்களின் அந்த நிலையை நேரில் காணாது இருந்த போதிலும், கற்பனை செய்த காட்சியிலேயே மோஹம் கொண்டனர் கோப ஸ்திரீக்கள். என்ன ஓர் ஆச்சரியம்! ( 59 – 6)

நிர்விஷங்க ப4வத3ங்க3 த3ர்ஷினீ :
கேசரீ :க2க3ம்ருகா3ன் பசூ’னபி |
த்வத பத3 ப்ரணயி கானனம் ச தா:
த4ன்ய த4ன்யா மிதி நன்வமானயன் ||( 59- 7)

தங்கு தடையின்றித் தங்கள் திருமேனியைத் தரிசிக்கின்ற தேவ ஸ்த்ரீக்களையும், பறவைகளையும், பசுக்களையும் அந்த பிருந்தாவனத்தையும் மிகவும் பாக்கியசாலிகள் என்று அந்த கோபிகைகள் கருதினார்கள் அல்லவா? ( 59 – 7)

ஸம்பிபே3ய மது4ராம்ருதம் கதா3
வேணு முக்த ரஸ சேஷமேகதா3 |
தூரதோ ப3த க்ருதும் து3ராச’யேதி
ஆகுலாமுஹிரிமா: ஸமாமுஹன் ||( 59 – 8)

“வேணுவினால் அனுபவிக்கப்பட்டு மீதியான ரசத்தை உடைய அந்த அதராம்ருதத்தை என்றாவது ஒரு தடவையாவது நான் பானம் செய்வேனா? ஆ கஷ்டம்! வெகு தூரத்தில் இருக்கும் பேராசையால் என்ன பிரயோஜனம்?” என்று மனம் கலங்கி மயங்கினார்கள் கோபஸ்த்ரீக்கள். ( 59 – 8)

ப்ரத்யஹஞ்ச புனரித்த2 மங்க3னா :
சித்தயோனி ஜனிதா த3னுக்3ராஹாத் |
பத்3த4 ராக3 விவசா’ஸ்த்வயி ப்ரபோ4
நித்ய மாபுரிஹ க்ருத்ய மூட4தாம் ||( 59 – 9)

ஹே பிரபுவே! ஒவ்வொரு நாளும் கோபிகைகள் மறுபடியும் இவ்விதம் மன்மதனால் உண்டு பண்ணப் பட்ட அனுக்ரஹத்தால் தங்களிடத்தில் ஆசை வைத்து அதனால் பரவசர்கள் ஆகி வீடுகளில் செய்ய வேண்டியதை மறந்து அறியாமையை அடைந்தனர். ( 59 – 9 )

ராக3ஸ் தாவஜ் ஜாயதே ஹி ஸ்வபா4வான்
மோக்ஷோ பாயோ யத்னத: ஸ்யான்ன வாஸ்யாத் |
தாஸாம் த்வேகம் தத்3த்3வயம் லாப்3த4 மாஸீத்
பா4க்யம் பா4க்யம் பாஹி வாதாலயேச’ ||( 59 – 10)


அனுராகம் என்னும் ஆசை சுபாவத்திலேயே உண்டாகிறது அல்லவா? மோக்ஷதிற்கு உபாயம் நம் முயற்சியால் உண்டாகலாம். அல்லது உண்டாகாமல் போகலாம். கோபிகளுக்கு அவர்களின் அனுராகமே மோக்ஷத்திற்கு உபாயமாகி விட்டது அல்லவா! அவை இரண்டும் ஒன்றாகக் கிடைத்த அவர்களின் பாக்கியமே பாக்கியம். குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 59 – 10)
 
KANDA PURAANAM - ASURA KAANDAM


5c. நல்லியல்புகள்.

“திருமணத்துக்கு உரிய மணமகளின்
சிறப்புக்களை உரைக்கின்றேன் நான்.

தந்தை, தாயை இழந்தவள் கூடாது;
தங்கை, தமக்கை அற்றவள் கூடாது;

உடன் பிறந்தவன் இல்லாதவள் கூடாது,
ஒற்றைப் பெண்ணானவளும் கூடாது;

உறவினர் அற்றவள், நோயாளியின் மகள்,
உயர்க்குடிப் பிறவாதவள், அழகற்றவள்;

விலங்குகளின் பெயரை உடையவள்;
விலக்கிவிட வேண்டிய பிற சமயத்தவள்;

செவிடர், முடவர், ஊமையர் கூடாது;
தெரு வாசலில் நின்று நோக்குபவள்;

மிகுதியாக அலங்கரித்துக் கொள்பவள்,
மிகுதியாக உணவு உட்கொள்ளுபவள்;

பேருறக்கம் உடையவள், முதிர்ந்தவள்,
கோத்திரத்தில் நம்மை ஒத்தவள் கூடாது;

நெட்டையானவள், மெலிந்தவள் கூடாது;
குட்டையானவள், பருத்தவள் கூடாது.

கருநிறம், பொன்னிறம், பசப்பையுடையவர்;
குருதி நிறம் கொண்டவர்கள் கூடவே கூடாது.

நாணம் இல்லாதவள், பெரு வலிவுடையவள்;
நகைப்பவள், சினம் மிகுந்தவள் கூடாது,

அத்தன், அம்மை சொல் கேளாதவள்;
கூத்துப் பார்க்க விரும்புபவள் கூடாது.

சிவனிடத்தில் அன்பு கொள்ளாதவள்;
முனிவரை இகழ்பவள் கூடவே கூடாது.

அருள் அற்றவள், தீக் குணம் உடையவள்;
நிறை அற்றவள், தேவரைக் கல் என்பவள்;

இடி முழங்குவது போலப் பேசுபவள்;
இடுங்கிய கண்களை உடையவள்;

நரை மயிர், பெருங்கூந்தல் உடையவள்;
சிறுத்த கண்களை உடையவள் கூடாது;

நீண்ட மூக்கை உடையவள் கூடாது;
நீட்டிய பற்களும், வளைந்த கழுத்தும்

மயிர்ப் பரந்த கால்களை உடையவள்;
மனத்தைக் கவரும் அன்னநடை அற்றவள்;

உள்ளங் கைகளும், நகமும், வாயும்,
உள்ளங் கால்களும் சிவந்து இராதவள்;

இந்தக் குற்றங்கள் இல்லாதவள் ஆகிய
எந்தப் பெண்ணையும் மணப்பேன் நான்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

பெண்மையின் நல்லியல்புகள் புதுமைப் பெண்களிடம்
அண்மைக் காலமாகக் காண அரிதாகி வருகின்றனவோ?
:(
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (#5 C). THE QUALITIES OF A GOOD BRIDE.

” Dear father! I shall enlist the good qualities of a bride to be.
She should not have lost her parents.
She must have brothers and sisters.
She must be from a good family.
She must have several relatives.
She must not have sickly parents.
She must not be named after any animal.
She must not belong to another religion.
She must not be physically challenged.
She must not stand outside the home and gaze at the men passing by.
She must neither eat nor sleep too much nor decorate herself too much.
She must not be older than me.
She must not belong to the same gothram.
Her complexion must not be very dark,
vary fair or greenish yellow.
She must not be very tall or very lean.
She must not be very fat or very short.
She must not be very daring or very strong.
She must not laugh and get angry beyond decent limits.
She must obey her parents.
She should not wish to see vigorous entertainments.
She must have love for Lord Siva and the venerable sages.
She must be chaste, kind, good natured, and pious.
She must not have grey hair or too long a hair.
She must not speak like the thunder claps.
She must not have light coloured eyes like a cat.
She must not have a very long nose, large teeth, bent neck, or hairy legs.
She must walk like a swan.
Her palms, nails, mouth and feet must be pink in colour.
If you can locates such a girl, I am ready to marry her!”

Note:-
A good mental exercise to locate how many of our dear women still retain these delicate feminine qualities in the 21st Century!!!



 
Today the posting order got jumbled since I could not enter my website

and I had to post directly from the different blogs.

So I avoided too many jumps and leaps from blog to blog! :)

#4482 ONWARDS HAVE NBEEN POSTED TODAY.
 
VINAAYAKA PURAANAM 1.


25c. சாம்பன்

பொல்லாத சாம்பனின் காலம் முடிந்தது;
எல்லோரும் ஏகும் எமலோகம் சென்றான்.

பட்டியலைப் படித்தான் சித்திரகுப்தன்
பட்டியல் முழுவதும் பண்ணிய பாவங்கள்!

ஒருமுறை விளையாட்டாக சாம்பன்
பொருட்களைப் படைத்தான் ஐயனுக்கு.

ஆலயத்தைச் சுற்றி வந்து மக்களுடன்
ஆராதித்தான் ஆனைமுகத் தேவனை.

பாவங்களுக்கு உழன்றான் நரகத்தில்!
பல பிறவி எடுத்தான் விலங்குகளாக!

சாம்பன் பிறந்தான் வேடன் வீமனாக;
அமைச்சன் துர்புத்தியே அந்த அரக்கன்!

விநாயகரை வேடிக்கையாகத் தொழுதது
விரும்பி ஏறச் செய்தது வன்னி மரத்தில்!

விழுந்த வன்னி இலைகள் இவர்களை
விடுவித்தன பாவப் பிறவிகளில் இருந்து.”

பிரமன் தொடர்ந்தான் மன்னன் தந்தையிடம்,
மரத்தடி விநாயகரின் அருமை பெருமைகளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
25c. Saamban

The wicked Saamban died one day. He was taken to the Yamalokam. Chitragupthan read his long list of sins. The only good act done by Saamban was his playful praying and worshiping of Vinayaka during the hunting expedition.

He was sent to the hell to suffer severe punishments. Later he was born as various animals. Finally he was born as the cruel hunter Veeman. Dhurbuddhi suffered similarly in hell, took birth as various animals and was born as the asuran.

The playful worship of Vinayaka made them climb the Vanni tree in the forest – rather than any other ordinary tree. The leaves which got shed fell on Vinayaka’s statue and delivered them from their sinful lives.

Brahma continued to relate the greatness of the Vinayaka vigraha established under the trees.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2c. ஜனமேஜயனின் கேள்விகள்

குறுக்கிட்டான் ஜனமேஜயன் இப்போது.
"சிறந்த அறிவு படைத்த முனிவரே கூறுங்கள்!

எந்தப் பாவச் செயலைச் செய்தார் காசியபர்?
எந்த சாபத்தினால் அவர் பிறந்தார் வசுதேவராக?

விஷ்ணு ஏன் மானிடப் பிறவிகள் எடுத்தார்?
விஷ்ணு ஏன் அடைய வேண்டும் இன்னல்கள்?

துக்கமே கர்ப்பவாசம்; துக்கமே பிறப்பு;
துக்கம் அஞ்ஞானம், துக்கம் காம வேதனை.

ராமாவதாரத்தில் ராமன் துயருற்றது ஏன்?
ராஜ்ஜியமிழந்து வனவாசம் சென்றது ஏன்?

மனைவியைப் பறி கொடுத்துவிட்டு
மனம் கலங்கி புலம்பித் திரிந்தது ஏன்?

பிறந்தான் கண்ணன் க்ஷத்திரிய குலத்தில்,
வளர்ந்தான் கண்ணன் யாதவ குலத்தில்;

மாடு கன்றுகளை மேய்த்தான் இளமையில்;
கொடுங்கோலன் கம்ஸனைக் கொன்றான்.

அஞ்சி வெளியேறினான் மதுராபுரியிலிருந்து;
தஞ்சம் புகுந்தான் கண்ணன் த்வாரகாபுரியில்!

சம்சாரத் துக்கங்கள் விஷ்ணுவுக்கு எதற்காக?”
சம்சயங்களைத் தீர்க்கவேண்டும் குருதேவரே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2c. Doubts raised by Janamejayan

King Janamejayan interfered now. He asked the sage Vyaasaa some more of his doubts,

“Oh sage Vyaasaa! Please tell me what was the sin committed by Kashyapa that he had to be born as Vasudeva. Why did Vishnu take avatars as human beings? Why did he suffer like any normal human being?

Life in a womb is a torture; being born is a torture. Ignorance gives us sorrow. Desires make us sad. Why did Raamaa suffer so much in his avatar? Why did he go for vanavaasam ? Why did he lose Seetaa and roam around in the jungle crying out her name?

Krishna was born as a Kshatriya. But he grew up as a Yadava. He looked after the cows and calves in his childhood. He killed the wicked Kamsan. He left Maduraapuri and went to Dwaarakaapuri to escape from his enemies.

Why did Vishnu have to suffer the sorrows of samsaaram? Please clarify my doubts sire!” the King requested the Sage.
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 60 ( 1 to 5)

கோ3பி வஸ்த்ர அபஹரணம்
மத3னாதுர சேதஸோSன்வஹம்
ப4வத3ங்க்4ரி த்3வயதாஸ்ய காம்யயா |
யமுனா தட ஸீம்னி சைகதீம்
தரலாக்ஷ்யோ கி3ரிஜாம் ஸமார்ச்சிசன் ||( 60 – 1)

ஒவ்வொரு நாளும், காமத்தால் பரவசம் அடைந்த மனத்தையுடைய சஞ்சலாக்ஷிகள் ஆகிய கோபிகைகள், தங்கள் திருவடிகளை சேவிக்கும் விருப்பத்தினா,ல் யமுனா நதிக் கரையில், மண்ணால் உண்டாக்கப்பட்ட மலைமகள் பார்வதி தேவியை பூஜை செய்தனர். ( 60 – 1)

தவ நாம கதா2ரதா: ஸமம்
ஸுத்3ருஷ:ப்ராதருபாக3தா: நதீ3ம் |
உபஹார ச’தை ரபூஜயன்
த3யிதோ நந்தசஸுதோ ப4வேதி3தி||( 60 – 2)

அழகான கண்களை உடைய அவர்கள் தங்கள் திருநாமத்தை உச்சரிப்பதில் விருப்பம் உடையவர்களாய் விடியற்காலையில் ஒன்று சேர்ந்து யமுனா நதிக்குச் சென்று ‘”நந்த குமாரன் எனக்குக் கணவனாக வேண்டும்” என்று பிரார்த்தித்து அநேகம் காணிக்கைகளுடன் தேவியைப் பூஜை செய்தார்கள் அல்லவா? ( 60 – 2)

இதி மாஸ முபாஹித வ்ரதா:
தரலாக்ஷீ :அபி4 வீக்ஷ்ய தா ப4வான் |
கருணா ம்ருது4லோ நதீ3 தடம்
ஸமாயாஸீத் ததனுக்3ரஹேச்ச2யா ||( 60 – 3)

இவ்வாறு ஒரு மாதம் மழுவதும் விரதம் அனுஷ்டித்தவர்களும், சஞ்சலிக்கும் கண்களை உடையவர்களும் ஆகிய அந்த கோபிகைகளைக் கண்டு தாங்கள் கருணையால் மனம் கனிந்தீர்கள். அவர்களை அனுக்ரஹிக்க விரும்பி யமுனை நதிக் கரைக்குச் சென்றீர்கள். ( 60 – 3)

நியமாவஸிதௌ நிஜாம்ப3ரம்
தட ஸீமனி அவமுச்ய தாஸ்ததா3 |
யமுனாகுல கே2லனாகுலா:
புரதஸ்த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா:||( 60 – 4)


விரதம் முடிந்த பிறகு அவரவர் வஸ்திரத்தைக் கரையில் அவிழ்த்து வைத்துவிட்டு அவர்கள் யமுனா ஜலத்தில் விளையாடும்போது தங்களை எதிரில் கண்டு மிகுந்த வெட்கம் அடைந்தனர். ( 60 – 4)

த்ரபயா நமிதானனாஸ்வதோ
வனிதா ஸ்வம்ப3ர ஜாலமந்திகே |
நிஹிதம் பரிக்3ருஹ்ய பூ4ருஹோ
விபடம் த்வம் தரஸா(S)தி4ரூட4வான் || ( 60 – 5)

அப்போது அந்தப் பெண்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும்போது கரையில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் வஸ்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு விரைந்து மரக்கொம்பில் ஏறிக் கொண்டீர்கள் அல்லவா? ( 60 – 5)
 
த3ச’கம் 60 ( 6 to 11)

கோ3பி வஸ்த்ர அபஹரணம்
இஹ தாவது3பேத்ய நீயதாம்
வஸனம் வ: ஸுத்3ருஷோ யதா2யத2ம் |
இதி நர்ம ம்ருது3ஸ்மிதே த்வயி
ப்3ருவதி வ்யாமுமுஹே வது4 ஜனை:||( 60 – 6)

“கட்டழகிகளே! இங்கே வந்து அவரவர் ஆடைகளை மாறாமல் எடுத்துக் கொண்டு போகலாம் !” என்று தாங்கள் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டு சொல்லும்போது என்ன செய்வது என்று அறியாத அந்த கோபிகைகள் மோஹம் அடைந்தார்கள் அல்லவா? ( 60 – 6)

அயி ஜீவ சிரம் கிஷோர ந:
தவ தாஸீ ரவசி’ கரோஷி கிம் |
ப்ரதி3சா’ம்பர மம்பு3 ஜேக்ஷணேதி
உதி3தஸ்த்வம் ஸ்மிதமேவ த3த்தவான் ||( 60 – 7)

“ஹே கிஷோர! நீ நீண்ட நாள் வாழவேண்டும்! உன் பணிப் பெண்களாகிய ( பிரேமைக்கு உரியவர்களாகிய) எங்களை ஏன் இப்படிப் பரவசப்படுத்துகின்றாய்? (உன் வசப்படுத்திக் கொள்ளவில்லை?) ஹே தாமரைக் கண்ணா! (கணவன் கொடுக்க வேண்டிய) வஸ்த்திரத்தைக் கொடு! ” என்ற கூறத் தங்கள் வஸ்திரத்தைக் கொடுக்காமல் மந்தஹாசத்தை மட்டும் கொடுத்தீர்கள்! ( 60 – 7)

அதி3ருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலி :
பரிசு’த்3த4 ஸ்வக3தி நிரீக்ஷ்ய தா:|
வசனான்யகி2லான் யனுக்3ரஹ்ம்
புனரேவம் கி3ர மப்யதா முதா3|| ( 60 – 8)


கரையில் ஏறிக் கும்பிட்டு வணங்கியவர்களும், அதனால் பரிசுத்தம் அடைந்தவர்களும், தன்னையே சரணம் அடைந்தவர்களும் ஆகிய அந்தப் பெண்களைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்து எல்லா வஸ்திரங்களையும் அளித்துப் பிறகு அனுகிரஹம் செய்யும் ஒரு வசனத்தையும் தந்தருளினீர்கள் அல்லவா? ( 60 – 8)

விதி3தம் நனு வோ மனீஷிதம்
வதி3தாரா ஸ்த்விஹ யோக்3ய முத்தரம் |
யமுனா புலினே ஸ சந்த்3ரிகா:
க்ஷணதா3 இத்ய ப3லாஸ்த்வ மூசிவான் ||( 60 – 9 )

“ஓ பெண்களே! உங்கள் விருப்பம் என்னால் அறியபட்டது. ஆனால் இதற்குத் தகுந்த பதிலை யமுனை நதியின் மணல் திட்டில் நிலவுடன் கூடிய இரவுகள் சொல்லும்!” என்று தாங்கள் அந்தப்பெண்களிடம் சொன்னீர்கள் அல்லவா? (60 – 9)

உபகர்ண்ய ப4வன் முக2ச்யுதம்
மது4 நிஷ்யந்தி3 வசோ ம்ருகீ3 த்3ருஷ: |
ப்ரணயா த3யி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே
வதனாப்3ஜம் ச’னகைர் க்ருஹம் க3தா: ||( 60 – 10)

பகவானே! அந்த மான் கண்ணியர் தங்கள் திருமுகத்தில் இருந்து வெளிவந்த, தேனைப் பெருக்குகின்ற திருவாக்கினைக் கேட்டு, பிரேமையுடன் திரும்பிப் பார்த்தபடியே மெல்லத் தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள் அல்லவா? ( 60 – 10)

இதி நன்வனுக்3ருஹ்ய வல்லவீ :
விபினாந்தேஷு புரேவா ஸஞ்சரன் |
கருணா சி’சி’ரோ ஹரே ஹர
த்வரயா மே ஸகலா மாயாவலிம் ||( 60 – 11)


ஹே ஸ்ரீதரா! இவ்விதம் கோபிகைகளை அனுக்ரஹித்து முன்போலவே காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த தாங்கள் எனது எல்லா வியாதிக் கூட்டத்தையும் விரைவில் போக்க வேண்டும். ( 60 – 11)
 
த3ச’கம் 61 ( 1 to 5)

விப்ர பத்னீ அனுக்ரஹம்
ததச்’ச ப்3ருந்தா3வனதோதிS தூ3ரதோ
வனம் கதஸ்த்வம் கலு கோ3ப கோ3குலை: |
ஹ்ருத3ந்தரே ப4க்த்தர த்3விஜாங்க3னா
கத3ம்ப3 கானுக்3ராஹணா க்3ரஹம் வஹன் ||( 61 – 1)

அதன் பிறகு தாங்கள் மனதில் தங்களுடைய பக்த சிரேஷ்டைகள் ஆகிய பிராமணப் பெண்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு கோபாலர்களுடனும், பசுக் கூட்டத்துடனும் பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள காட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா? (61 – 1)

ததோ நிரீக்ஷ்ய ச’ரணே வனாந்தரே
கிசோ’ர லோகம் க்ஷுதி4தம் த்ருஷாகுலம் |
அதூ3ரதோ யக்ஞா பரான் த்3விஜான் ப்ரதி
வ்யஸர்ஜயோ தீ3தி3வியாசனாய தான் ||( 61 – 2)


பிறகு புகலிடம் ஒன்றும் இல்லாத காட்டின் நடுவில் கோபகுமாரர்கள் பசியாலும், தாகத்தாலும் வருந்துவதைக் கண்டு அருகில் யாகம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் பிராமணர்களிடத்தில் அன்னத்தை யாசிப்பதற்கு அவர்களை அனுப்பினீர்கள் அல்லவா? ( 61 – 2)

க3தேஷ்வதோ2 தேஷ்வபி4தா4ய தேSபி4தா4ம்
குமாரகேஷ்வோத3ன யசிஷு ப்ரபோ4 |
ச்’ருதி ஸ்தி2ரா அப்யபி4 நின்யுரச்’ருதிம்
ந கிஞ்சி தூசுச்’ச மஹீ ஸுரோத்தமா ||(61 – 3)

ஹே பிரபோ! அதன் பிறகு அவ்விதம் சென்ற அந்தச் சிறுவர்கள் தங்கள் திருநாமத்தைச் சொல்லி யாசிக்கும்போது, அந்த பிராமண உத்தமர்கள் வேதங்களை நன்கு அறிந்தவர்கள் ஆயினும் (காது நன்றாகக் கேட்பவர்கள் ஆன போதிலும்) வேதங்களை அறியாதவர்கள் போல (காது கேட்காதவர்கள் போல) அபிநயித்து ஒன்றும் பதில் கூறவில்லை. ( 61 – 3)

அனாத3ராத் கி2ன்னதி4யோ ஹி பா3லகா:
ஸமாயுயுர யுக்தமிதம் ஹி யஜ்வஸு |
சிராத3 ப4க்தா: கலு தே மஹீஸுரா:
கத2ம் ஹி ப4க்தம் த்வயி தை: ஸமர்ப்யதே ||( 61 – 4)


பிராமணர்கள் அநாதரவு செய்ததால் அந்தச் சிறுவர்கள் மனம் வருந்தித் திரும்பி வந்தார்கள் அல்லவா? விதிப்படி யாகம் அனுஷ்டிக்கும் தீட்சிதர்கள் அநாதரவு செய்வது என்பது யுக்தம் தான். என்றால் அந்த பூலோகத் தேவர்கள் வெகு காலமாகவே தங்களிடம் பக்தி இல்லாதவர்கள் (அன்னம் இல்லாதவர்கள்) அல்லவா? அப்படிப்பட்ட அவர்களால் தங்களிடத்தில் அன்னத்தை (பக்தியை) எப்படிக் கொடுப்பார்கள்?( 61 – 4)

நிவேத3யத்4வம் க்3ருஹிணீ ஜனாய மாம்
தி3சே’யுரன்னம் கருணாகுலா இமா: |
இதி ஸ்மிதார்த்3ரம் ப4வதேரிதா க3தா:
தே தா3ரகா தா3ரஜனம் யயாசிரே ||( 61 – 5 )


“தீக்ஷித பத்தினிகள் இடத்தில் என்னைப் பற்றித் தெரிவியுங்கள். கருணை கூர்ந்த அவர்கள் அன்னத்தைக் கொடுப்பார்கள்!” என்று புன்னகையுடன் தாங்கள் கூற, அந்தச் சிறுவர்கள் தீக்ஷித பத்தினிகள் இடத்தில் சென்று அன்னம் யாசித்தனர். ( 61 – 5)
 
த3ச’கம் 61 ( 6 to 10)

விப்ர பத்னீ அனுக்ரஹம்

க்3ருஹீதநாம்னி த்வயி ஸம்ப்4ரமாகுலா:
சதுர் வித4ம் போ4ஜ்ய ரஸம் ப்ரக்3ருஹ்ய தா:|
சிரம் த்4ருத த்வத்ப்ரவிலோகநாக்3ரஹா :
ஸ்வகைர் நிருத்3தா4 அபி தூர்ண மாயயு: ||( 61 – 6)

தங்கள் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வெகு கலாமாகத் தங்களை தரிசிக்கும் ஆவல் கொண்டிருந்த அந்த தீக்ஷித பத்தினிகள் பரபரப்பு அடைந்தவர்களாகி காத்தியம், சோஷ்யம், லேஹியம், பேயம் என்ற நான்கு வகை பக்ஷணங்களையும் எடுத்து கொண்டு, தங்கள் கணவர்களால் தடுக்கப்பட்டவர்கள் ஆனபோதும் விரைந்து வந்தனர். ( 61 – 6)

விலோல பிச்ச2ம் சிகுரே கபோலயோ:
ஸமுல்லஸத் குண்ட3ல மார்த்ர மீக்ஷிதே |
நிதா4ய பா4ஹும்ஸுஹ்ருதம் ஸஸீமனி
ஸ்தி2தம் பவந்தம் ஸமலோகயந்த தா:||( 61 – 7)


கொண்டையில் சலிக்கின்ற மயில் தோகையை உடையவரும், இரு கன்னங்களில் நன்கு பிரகாசிக்கும் குண்டலங்களை உடையவரும், கடைக் கண்களில் கனிவுகொண்டவரும், தோழனின் தோளில் கை வைத்து நிற்பவரும் ஆன தங்களைக் கண்டனர். ( 61 – 7)


ததா3 ச காசித் த்வது3பாகமோத்3யதா
க்3ருஹீத ஹஸ்தா த3யிதேன யஜ்வனா |
ததை3வ ஸஞ்சிந்த்ய ப4வந்த மஞ்ஜஸா
விவேச’ கைவல்ய மஹோ க்ருதின்யசௌ ||( 61 – 8)

மற்றவர்கள் எல்லோரும் சென்றபோது தங்களிடம் வரயத்தனித்த ஒருவள் அவன் கணவனால் கைகளால் பிடித்துத் தடுக்கப்பட்டு, தங்களை தியானித்துக் கொண்டு தத்க்ஷணமே சிரமம் இல்லாமல் மோக்ஷத்தை அடைந்தாள். அவள் அன்றோ பாக்கியசாலி! ( 61 – 8)

ஆதா3ய போ4ஜ்யாநனுக்3ரஹ்ய தா: புன:
த்வத3ங்க3 ஸங்க3 ஸ்ப்ருஹயோஜ்ஜதீ க்3ருஹம் |
விலோக்ய யக்ஞாய விஸர்ஜயன்னிமா :
சகர்த2 ப4ர்த்ரூனபி தாஸ்வக3ர்ஹணான் ||( 61 – 9)

பக்ஷணங்களை அங்கீகரித்துக் கொண்டு; அவர்களை அனுக்ரஹித்துப் பிறகு, தங்களுடைய அங்க சங்கம் விரும்பி அவர்கள் வீடுகளை புறக்கணிப்பதைக் கண்டு, யாகத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களை அனுப்பினீர்கள். அவர்கள் கணவர்களையும் தீய எண்ணம் அற்றவர்களாகச் செய்தீர்கள் அல்லவா? ( 61 – 9)

நிரூப்ய தோ3ஷம் நிஜமங்க3னா ஜனே
விலோக்ய ப4க்திம் ச புனர் விசாரிபி4:|
ப்ரபுத்3த4 தத்வைஸ் த்வமபி4ஷ்டுதோ த்3விஜை :
மருத்புராதீ4ச’ நிருந்தி4 மே கதா3ன் ||( 61 – 10)

ஹே குருவாயூரப்பா! தம் தோஷங்களை உணர்ந்த; தம் பத்தினிகளின் பக்தியைக் கண்டு விசாரம் செய்த; அதன் மூலம் உண்மை அறிந்த; அந்தணர்களால் நன்கு துதிக்கப்பட்ட; தாங்கள் என் வியாதிகளைப் போக்க வேண்டும். ( 61 – 10)
 
Kanda puraanam - Asura kaandam

5d. பெண் தேடுதல்.

உலகம் எங்கும் தேடினார் பெண்ணை;
உசாவினார் எதிர்ப்பட்ட முனிவர்களிடம்;


உசத்திய முனிவரின் உசத்தியான மகள்
விருத்தையைப் பற்றி அறிந்து கொண்டார்.

குச்சக முனிவரின் மகன் கவுச்சிகனுக்கு
விருத்தையைத் தர இசைந்தார் உசத்தியர்.

காட்டாற்றில் நீராடினார்கள் பெண்கள்;
காட்டு மதயானை ஒன்று துரத்தலானது! .

புதர்கள் மூடிய கிணற்றில் விழுந்ததால்
பூத உடல் நீத்தாள் மணமகள் விருத்தை.

தோழியைத் தேடித் துவண்டுவிட்ட பிற
தோழிகள் சென்று சேதி சொன்னார்கள்!

மகளைத் தேடிச் சென்ற உசத்தியமுனிவர்
மகளைக் கண்டார் கிணற்றில் பிணமாக!

தேற்ற முடியவில்லை தாய் மங்கலையை.
துயரம் எல்லை மீறியது எல்லோருக்கும்.

மணமகள் பிணமானதை அறிந்த பின்னும்
மணத்தை நிறுத்தவில்லை குச்சக முனிவர் ;

“எண்ணைத் தோணியில் இட்டுவையுங்கள்;
என் தவத்தால் உயிர்ப்பிக்கின்றேன் இவளை!”

பொய்கையில் மூழ்கிக் கடும் தவம் செய்தார்;
பொய்கையின் அருகே வந்தது அதே யானை;

குச்சகரை வாரிப் பிடரிமேல் வைத்துக்கொண்டது
குச்சகரைச் சுமந்தபடி விரைந்து நடக்கலானது.

ஆராயத் தொடங்கினார் அறிவுக் கண்ணால் முனிவர்;
“ஆனை என்னை எங்கே, எதற்குக் கொண்டு செல்கிறது?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
Back
Top