A poem a day to keep all agonies away!

KANDA PURAANAM - ASURA KAANDAM

2. ( # 3 A). THE BIRTH OF ASURAS.

The depressed rushi suddenly saw the lady who had stolen his heart, right in front of him. She told him, “I am the cause of your fever of love. I am the medicine that will cure you. Come let us get rid of the love-fever. You must take a beautiful form to match mine.”

The rushi took the form of a Deva. She took his hand and entered the first mandapam. There Soorapadman was born in the first quarter of the night. From their sweat thirty thousand units of asuras were born.

Then they entered the second mandapam. She took the form of a lioness and he took the form of a lion. In the second quarter of the night a son was born to them. He has a thousand lion faces and two thousand arms.

From their sweat forty thousand units of asuras were born and all of them were lion-faced.
 
DEVI BHAAGAVATAM SKANDA - 3

3#29a. நவராத்திரி விரதம் (1)

நாரதர் வந்தார் சாம கானம் இசைத்தவாறு;
நாரதரை வரவேற்று உபசரித்தான் ராமன்.

“சுவர்க்கம் சென்றபோது அறிந்தேன் ராமா
சுவையான சில பழைய நிகழ்வுகளை நான்.

அஞ்ஞானத்தால் கவர்ந்து சென்றான் ராவணன்;
அவன் மரணத்துக்குக் காரணமாகும் சீதையை.

அவதரித்துள்ளாய் நீ ராவணனை அழிக்க;
அவதார காரியம் நிறைவேறப் போகின்றது!

பூர்வ ஜன்ம சம்பந்தம் உடையது – அவன்
ஆர்வத்துடன் சீதை மேல் கொண்ட மோஹம்.

அரிய தவ முனிவரின் புதல்வி வேதவதி;
வரித்தாள் நாரணனையே மணாளனாக!

கடும் தவம் செய்து அமர்ந்திருந்தவள் மீது
சுடும் மோஹம் கொண்டுவிட்டான் ராவணன்!

வற்புறுத்தினான் தனக்கு வசப்பபடும்படி;
கற்புடன் மறுத்தாள் நாரணனை வரித்தவள்!

கண்ணிருந்தும் குருடன் ஆனான் காம வெறியில்;
பெண்ணை பலவந்தம் செய்யவும் முற்பட்டான்.

“உன்னைக் கொல்வதற்கு மீண்டும் வந்து
மண்ணில் பிறப்பேன் மண்ணின் மகளாக!

தீண்டிய உடலைத் தரியேன் இனிமேல்!”
மண்டிய தீயினில் வீழுந்து மறைந்தாள்.

கழுத்தில் பாம்பைப் போட்டுக் கொள்வது போல்
அழிவுக்கே புரிந்துள்ளான் அக்கிரமச் செயல்!

அம்சம் கொண்டுள்ளாய் மஹா விஷ்ணுவின்;
த்வம்சம் செய்வாய் ராமா ராக்ஷஸ குலத்தை!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM SKANDA - 3

3#29a. Naarada’s visit

Naarada visited Raamaa singing saama gaanam. Raamaa welcomed the Deva rushi. Naarada imparted some important information to Raamaa.

“During my recent visit to the Swarggam, I learned a few interesting facts Raamaa. RaavaN is a fool to have abducted Seetaa who is born to bring about his complete destruction.

You have taken avatar only to kill RaavaN and that is going to happen very soon. The lust RaavaN has for Seetaa is from her previous birth.
Vedavati was the beautiful daughter of a rushi. She had decided to marry none other than Lord Naaraayan. She sat in intense penance to make her wisehes come true.

RaavaN saw her and longed to possess her. He tried to convince her but she refused. Then he tried to molest her. Vedavati told him thus:

“I will be born again as the daughter of the Earth just to destroy you. I do not wish to live in this body defiled by you any more.” She jumped into a roaring fire and died.

Now RaavaN has done a thing as foolish as draping a poisonous snake around one’s own neck. You are the amsam of Lord Naaraayan. You will destroy the race of Raavan very soon.”
 
SRIMAN NAARAAYANEEYAM


த3ச’கம் 48 ( 1 to 5)

நளகூப4ரன் மணிக்3ரீவன் சா’பமோக்ஷம்
முதா3 ஸுரௌகை4 ஸ்த்வமுதா3ர ஸம்மதை3
உதீ3ர்த்ய தா3மோத3ர இத்யபி4ஷ்டுத: |
ம்ருதூ3த3ர: ஸ்வைர முலூக2லே லக3ன்
னதூ3ரதோ த்3வௌ ககுபா4வுதி3க்ஷித: ||(48 – 1)


அதிகமான சந்தோஷத்தை உடைய தேவ சமூகங்கள் தங்களை தாமோதரன் என்று துதித்தன. கோமலமான உதரத்தை உடைய தாங்கள் உரலிலேயே சுகமாகக் கட்டுண்டு இருந்து கொண்டு அருகில் இருந்த இரண்டு மரங்களைக் கண்டீர்கள் அல்லவா? ( 48 – 1)

குபே3ர ஸூனுர் நலகூப3ராபி4த:
பரோ மணிக்ரீவ இதி ப்ரதாம் கத:|
மஹேச’ ஸேவாதி4க3த ஸ்ரியோன் மதௌ3
சிரம் கில த்வத்3 விமுகா2வகே2லதாம் ||( 48 – 2 )


குபேரனின் புத்திரனும் நலகூபரன் என்ற பெயர் உடையவனும்; வேறு ஒருவன் மணிகிரீவன் என்று பிரசித்தி பெற்றவனும்; ஸ்ரீபரம சிவனை ஆராதித்து அடைந்த ஐஸ்வரியத்தால் மதம் மேலிட்டவர்களாகத் தங்களிடம் பக்தி என்பதே இல்லாமல் வெகு காலம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அல்லவா? ( 48 – 2)

ஸுராபகா3யாம் கிலதௌ மதோ3த்கடௌ
ஸுராபகா3யத்3 ப3ஹு யௌதகா வ்ருதௌ |
விவாஸசௌ கேலி பரௌ ஸ நாரதோ
ப4வத் பதை3க ப்ரவணோ நிரைக்ஷத ||(48 – 3)

கங்கை நதியில் மதத்தால் மெய் மறந்தவர்களாக, கள் குடித்தவர்களாக, பாட்டுப் பாடுபவர்களாக, அழகிய இளம் பெண்களால் சூழப்பட்டவர்களாக, இடுப்பில் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டு இருந்தவர்களைத் தங்கள் திருப்பதங்களிலே மனத்தைப் பதித்துவிட்ட நாரதமுனிவர் கண்டார் அல்லவா? ( 48 – 3)

பி4யா ப்ரியாலோக முபாத்த வாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மாதா3ந்த4 சேதசௌ |
இமௌ ப3வத்3 ப4க்த்யுப சா’ந்தி சித்3த4யே
முனிர் ஜகௌ3 சா’ந்தி ம்ருதே குதஸ் ஸுக2ம் ||(48 – 4)

பெண்கள் சாபத்துக்கு அஞ்சி வஸ்திரங்களை எடுப்பதைக் கண்ட பிறகும், மதத்தால் மதி மயங்கி நிற்பவர்களைக் கண்ட நாரதர், தங்களிடம் பக்தியும் மன சாந்தியும் கிடைப்பதற்காக அவர்களைச் சபித்தார். சித்த சுத்தி இல்லாமல் சுகம் எவ்விதம் உண்டாகும்? ( 48 – 4)

யுவாமவாப்தௌ ககுபா4த்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்யாத2 பத3ம் ஸ்வமாப்னுதம் |
இதீரிதௌ தௌ ப4வ தீ3க்ஷ
ண ஸ்ப்ருஹாம்
க3தௌ வ்ரஜாந்தே ககுபௌ4 ப3பூ4வது : ||(48 – 5)

“நீங்கள் இருவரும் வெகு காலம் மரமாக இருக்கும் தன்மையை அடைவீர்கள்! ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்து அதன் பிறகு உங்கள் இடத்துக்குத் திரும்புவீர்கள்.” என்று நாரதர் சபித்த பிறகு ,தங்களை தரிசிக்க ஆசை கொண்டவர்களாக, கோகுலத்துக்குப் பக்கத்தில் இரண்டு மரங்களாகப் பிறந்தார்கள். ( 48 – 5)
 
த3ச’கம் 48 ( 6 to 10)

நளகூப4ரன் மணிக்3ரீவன் சா’பமோக்ஷம்

அதந்த்ர மிந்த்ர த்3ரயுக3ம் ததா2 வித4ம்
ஸமேயுஷா மந்த2ர கா3மினா த்வ்யா |
திராயிதோலூக2ல ரோத3 நிர்து4தௌ
சிராய ஜீர்ணை பரிபாதிதௌ தரூ ||(48 – 6)


சோம்பல் இல்லாமல் மெதுவாகச் சென்று அந்த இரண்டு மருத மரங்களை அடைந்தீர்கள். குறுக்காக உள்ள உரல் மரங்களின் அடிபாகத்தைத் தகைத்ததால் வேரறுக்கப்பட்டன வெகு காலமாக நின்று இருந்ததால் ஜீரணமடைந்த அந்த இரண்டு மரங்கள். ( 48 – 6)

அபாஜி சா’கி2 த்3விதயம் யதா3 த்வயா
ததை3வ தத்3 க3ர்ப4தலான்னிரேயுஷா |
மஹத் விஷா யக்ஷ யுகே2ன தத்க்ஷணாத்
அபாஜி கோ3விந்த3 ப4வானபி ஸ்தவை: ||(48 – 7)


எப்போது தங்களால் அந்த இரண்டு மரங்களும் முறிக்கப்பட்டனவோ அப்போதே அம்மரங்களின் நடுவில் இருந்து வெளிக் கிளம்பினர் மிகவும் காந்தி உடைய இரண்டு யக்ஷர்கள். ஹே கோவிந்தா! அவர்களும் தங்களைத் தோத்திரங்களைக் கொண்டு துதித்தனர் அல்லவா? ( 48 – 7)

இஹான்ய ப4க்தோபி ஸமேஷ்யதி க்ரமாத்
ப4வந்த மேதௌ கலு ருத்3ர ஸேவகௌ |
முனி ப்ரஸாதாத் பவத3ங்க்4ரி மாக3தௌ
கதௌ வ்ரணானௌ கலு ப4க்தி முத்தமாம் ||(48 – 8 )

இவ்வுலகில் மற்ற தேவர்களுடைய பக்தன் கூட கிராமமாக வந்து தங்களை அடைவான். ருத்திரனையே சேவித்து வந்த இவர்களும், நாரதர் மகிமையால் தங்கள் திருவடிகளைச் சரணடைந்து சிறந்த பக்தியை வரமாகப் பெற்றுச் சென்றனர் அல்லவா? ( 48 – 8)

ததஸ்தரூத்3தா3ரண பாஹி மாம் கதான்
ப்ரகம்பி ஸம்பாதினி கோபமண்ட3லே |
விலஜ்ஜித தவஜ்ஜனநீ முகேக்ஷிணா
வ்யாமோக்ஷி நந்தேன ப4வான் விமோக்ஷத:||(48 – 9)


அதன் பிறகு இடையர் கூட்டம், மரங்கள் முறிந்து விழுந்த போது உண்டான பயங்கர சப்தம் கேட்டு நடு நடுங்கிக் கொண்டு வந்தபோது, வெட்கி நின்றிருந்த யசோதையைப் பார்த்துவிட்டு நந்தகோபன் ஜீவன்களுக்கு விடுதலை அளிக்கும் தங்களுக்கே உரலில் இருந்து விடுதலை அளித்தான் அல்லவா? ( 48 – 9)

மஹீருஹோர் மத்3ய க3தோ ப3தார்ப3கோ
ஹரே: ப்ரபா4வா த3பரிக்ஷதோS து4னா |
இதி ப்3ருவாணைர் க3மிதோ க்3ருஹம் ப4வான்
மருத்புராதீ3ச்’வர பாஹி மாம் க3தா3த் ||( 48 – 10)

“இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்ற குழந்தை இப்போது ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹத்தால் சிதைக்கப்படாமல் இருந்தான்! ஆச்சரியம் தான்!” என்று வியந்துகொண்டே நந்தன் முதலியவர்கள் தங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள் அல்லவா? ( 48​ ​- 10)
 
த3ச’கம் 49 ( 1 to 5)

ப்ருந்தா3வனப் ப்ரவேச’ம்

ப4வத் ப்ரபா4வாத்3 விது3ரா ஹி கோ3பா:
தரு ப்ரபா4தி3க மத்ர கோ3ஷ்டே |
அஹேது முத்பாதக3ணம் விச’ங்க்ய
ப்ரயாது மன்யத்ர மனோ விதேனு : ||(49 – 1)


இடையர்கள் தங்கள் மகிமையை அறியவில்லை. காரணம் இல்லாமல் மரங்கள் விழுவது போன்ற அனேக துர் நிமித்தங்களைக் கண்டு சந்தேகம் அடைந்து வேறு ஒரு நல்ல இடத்துக்குச் செல்லத் தீர்மானித்தார்கள்.
( 49 – 1)

தத்ரோப நந்தா3பி4த4 கோ3பவர்யோ
ஜகௌ3 ப4வத் ப்ரேரணைவ நூனம் |
இத: ப்ரதீச்யாம் விபினம் மனோக்ஞம்
ப்3ருந்தா3வன நாம விராஜதீதி ||(49 – 2)

அந்த இடையர்களில் ஒரு சிறந்தவன் உபனந்தன் என்னும் பெயர் உடையவன். “இங்கிருந்து மேற்கு திசையில் பிருந்தாவனம் என்னும் அழகிய காடு ஒன்று உள்ளது!” என்று நிச்சயமாகத் தங்கள் பிரேரணையால் தான் அங்கு தெரிவித்தான் அல்லவா? ( 49 – 2 )

ப்3ருஹத்3வனம் தத்க3லு நந்த3 முக்2யா
விதா4ய கௌ3ஷ்டீ3ன மத3 க்ஷனேன |
த்வத3ன்வித த்வஜ்ஜனநீ நிவிஷ்ட
க3ரிஷ்ட யனானுகதா விசேலு: ||(49 – 3)


உடனே நந்தன் முதலியவர்கள் பிருஹத்வனம் என்னும் அந்த இடத்தை ஒரே நொடியில் பழைய பசுக்களின் கொட்டிலாகச் செய்துவிட்டு; தங்களும், தாங்கள் தாயார் யசோதையும் ஏறிக் கொண்ட வண்டியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார்கள் அல்லவா? ( 49 – 3)

அனோ மனோக்ஞ த்4வனி தே4னுபாலீ
கு2ர ப்ரணாதா3ந்தரதோ வதூ4பி: |
ப4வத்3 வினோதா3லபிதாக்ஷராணி
ப்ரபீய நாக்ஞாயத மார்3க தை4ர்க்யம் ||(49 – 4)

வண்டிகளின் இன்பமான த்வனிகளாலும், பசுக் கூட்டங்களின் குளம்பு சப்தங்களாலும், தங்களுடைய அவ்யக்த மதுர மழலைகளாலும் வசீகரிக்கப்பட்டதால், நீண்ட பயணத்தின் களைப்பை அந்த கோபிகைகள் அன்று உணரவில்லை அல்லவா? ( 49 – 4)

நிரீக்ஷ்ய ப்3ருந்தா3வனமீச’ நந்த3த்
ப்ரஸூன குந்த3 ப்ரமுக2 த்3ருமௌக4ம் |
அமோதா3தா2: சா’த்3வல ஸாந்த்ர லக்ஷ்ம்யா
ஹ்ரின்மணி குட்டித2 புஷ்ட சோ’பம் ||(49 – 5)

அடர்ந்த புஷ்பங்களை உடைய குந்தமரம் முதலிய மரக் கூட்டங்களை உடையதும்; அடர்ந்த பச்சைப் புல் தரைகளால் பச்சைக் கல் பதித்த இடம் போல் சோபை உடையதும் ஆகிய பிருந்தாவனத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தீர்கள் அல்லவா? (49 – 5)
 
த3ச’கம் 49 ( 6 to 10)

ப்ருந்தா3வனப் ப்ரவேச’ம்
நவாக நிர்வ்யூட4 நிவாஸ பே4தே3ஷு
அசே’ஷ கோ3பேஷு ஸுகாஸிதேஷு |
வனச்ரியம் கோ3ப கிஷோர பாலீ
விமிச்’ரித: பர்யவலோகதாஸ்த்வம் ||(49 – 6)


அர்த்த சந்திரன் போலப் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் எல்லா கோபர்களும் சுகமாக வசிக்கத் தொடங்கினார்கள். தாங்கள் பால கோபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பிருந்தாவனந்தின் சோபையை நான்கு புறங்களிலும் சென்று கண்டீர்கள் அல்லவா? ( 49 – 6)

அரால மார்கா3க3த நிர்மலாபாம்
மரால கூஜாக்ருத நர்மலாபாம் |
நிரந்தர ஸ்மேர ஸரோஜ வக்த்ரம்
கலிந்த3 கன்யாம் ஸமலோக யஸ்த்வம் ||(49 – 7)


வளைந்து தூய ஜலத்துடன் ஓடுவதும்; அன்னங்களின் கூவுதலால் நிரம்பிய சாதுர்யமான பேச்சினை உடையதும்; எப்போதும் புன்னகை பூக்கின்ற தாமரைப் பூக்களாகிய முகத்துடனும் கூடிய; களிந்தன் பெண்ணாகிய யமுனை நதியைத் தாங்கள் நன்றாகப் பார்த்தீர்கள் அல்லவா? ( 49 – 7)

மயூர கேகா ச’த லோப4நீயம்
மயூக 2மாலா ச’ப3லம் மணினாம் |
விரிஞ்ச லோக ச்’ப்ருஷ முச்ச ச்’ருங்கை:
கி3ரிம் ச கோ3வர்த்த4ன மைக்ஷதஸ்த்வம் ||( 49 – 8)


மயில்களுடைய அகவல்களால் மனோஹரமானதும்; ரத்தினங்களுடைய கிரணங்களால் பல நிறங்களில்பொலிவதும்; உயர்ந்த கொடுமுடிகளால் சத்தியலோகத்தைத் தொடுவதும் ஆகிய கோவர்த்தன மலையையும்
தாங்கள் கண்டீர்கள் அல்லவா? ( 49 – 8)

ஸமம் ததோ கோ3ப குமாரகைஸ்த்வம்
ஸமன்ததோ யத்ர வனாந்தமாகா: |
ததஸ்ததஸ்தாம் குடிலாமுபச்’ய:
களிந்த3ஜாம் ராக3வதீ மிவைகாம் ||(49 – 9)

பிறகு தாங்கள் பாலகோபர்களுடன் காட்டின் நான்கு புறங்களிலும் எங்கெங்கு சென்றீர்களோ, அங்கெல்லாம் தங்களிடம் ஆசை கொண்டவள் போல் தனியாகச் சுற்றிவந்து கொண்டிருந்த அந்தக் களிந்தன் பெண்ணாகிய யமுனையைக் கண்டீர்கள் அல்லவா? ( 49 – 9)

ததா விதே4ஸ்மின் விபினே பச’வ்யே
ஸமுத்ஸுகோ வத்ஸ க3ண ப்ரசாரை |
சரன் ஸராமோSத குமாரகைஸ் த்வம்
ஸமீர கே3ஹாதி4ப பாஹி ரோகா3த் ||(49 – 10)


பசுக்களுக்கு ஹிதமான, மேலே வர்ணித்தபடி அமைந்துள்ள அந்த பிருந்தாவனத்தில், கன்றுகளை மேய்ப்பதில் ஆவல் கொண்டவராக, இடைப் பையன்களுடனும் பலராமனுடனும் கூடிய தாங்கள், என்னைத் துன்புறுத்தும் வியாதிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். ( 49 – 10)
 
VINAAYAKA PURAANAM 1.

24d. திரிசரன்

ஏழை அந்தணன் ஆவான் திரிசரன்;
வேழ முகத்தோனின் தீவிர பக்தன்!

விரோச்சனை இல்வாழ்வின் துணை;
விநாயக பக்தியில் அவனுக்கு இணை!

சதாகாலமும் செய்து வந்தனர் இவர்கள்
விடாமல் பூஜை, ஆராதனை, தியானம்!

பிராமணரைக் கண்டதும் வணங்கினர்,
திரிசரனும், விரோச்சனையும் பணிந்து.

“திரிசரா! பசிதீரஅரசனிடம் சென்றேன்
அதிகரித்தான் பசியை அற்ப உணவால்.

வேறிடம் சென்று பசி தீர்க! என்றான்
நேராக வந்தேன் இந்த இல்லத்துக்கு!”

விரோச்சனையின் விழிகளில் அருவி!
“விநாயகர் அனுப்பினார் சோதிப்பதற்கு!

தேசத்தை ஆள்பவன் தராத உணவு
யாசகம் செய்து வாழும் நம்மிடமா?

இன்றைக்கு என்று எதுவுமே இல்லை!
ஒன்று மிகுந்துள்ளது பூஜையின் அறுகு.”

“தினைத் துணை பனைத் துணை ஆகும்.
மனப்பூர்வமாக அளிக்கப்படும் பொழுது!

பனைத் துணை தினைத் துணை ஆகும்
மனம் ஒன்றாமல் தரும் பொருட்கள்.

உணவு இல்லை என வருந்த வேண்டா.
மனமுவந்து அளிப்பீர் அறுகினை!” என

கொண்டு தந்தாள் அதை விரோச்சனை;
மென்று தின்றார் அதை அந்த அந்தணர்.

தீரப் பசி தீர்ந்து விட்டது ஒரு விந்தை!
மாறாத வறுமை மாறியதும் விந்தை!

மாட மாளிகை ஆனது திரிசரனின் வீடு;
கூடவே வந்தன செல்வமும் செழிப்பும்.

மன்னன் மாளிகையில் நிதிக் குவியல்!
மக்கள் இல்லங்களில் செல்வக் குவியல்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
VINAAYAKA PURAANAM 1.

24#d. Thrisaran
Thrisaran was a poor Brahmin. His wife was named Virochanai. Both of them were sincere devotees of Vinayaka. They would spend all their time in pooja, aaraadhana and dhyaanam on Vinayaka. When they saw a strange Brahmin approaching they welcomed him and paid him their obeisance.

The Brahmin spoke,”Thrisara! I went to king Janakan to get my hunger satisfied. But he has increased it further by giving me insufficient food. Now he tells me to go to anyone who is capable of satisfying my hunger. So I have come straight to your house!”

On hearing the words spoken by the Brahmin, tears started to flow down in streams from the eyes of Virochanai. “Surely Vinayaka wants to test us in this strange manner. If the king of a country could not satisfy your hunger, what can we living on yaachakam offer you sir? Today of all the days there is nothing in the house – save an arc of the green grass brought for the pooja”

“Please do not feel sorry that there is no food in your house. When given with affection a tiny morsel becomes a feast and when given without affection a feast becomes a tiny morsel. Please bring the arc of grass and give it to me”

Virochanai brought that arc of green grass and gave it to the Brahmin. He chewed it well and swallowed it. Lo and behold his hunger was finally satisfied.

At the same moment the humble hut of the devout couple became a palatial house. Wealth filled their house, the palace of Janakan and the house of every single citizen of that country – who had offered food to the strange hungry Brahmin on that day.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

3b. அவுணர் உற்பத்தி

மூன்றாவது யாமத்தில் நுழைந்தனர்
மூன்றாவது மண்டபத்தில் இருவரும்.

பெண் யானை வடிவெடுத்தாள் மாயை;
ஆண் யானை வடிவெடுத்தார் முனிவர்.

ஆனை முகத்துடன் வந்து தோன்றினான்
அசுரன் தாரகன் சூரபத்மனின் இளவலாக!

அவுணர் நாற்பதாயிரம் வெள்ளம் பேர்
அங்கும் தோன்றினர் வியர்வையிருந்து.

நான்காவது யாமத்தில் நுழைந்தனர்
நான்காவது மண்டபதில் இருவரும்.

பெண் ஆடு வடிவெடுத்தாள் மாயை,
ஆண் ஆடு வடிவெடுத்தார் முனிவர்.

அஜமுகி என்னும் பெண் பிறந்தாள்,
அவுணர்களின் ஆட்டுமுக மகளாக!

அப்போதும் வியர்வையில் தோன்றினர்
முப்பதாயிரம் ஆட்டுமுக அவுணர்கள்.

யாளி, புலி, குதிரை, மான் மற்றும்
கூளி, பன்றி, கரடி, பசு வரிசையில்

பற்பல வடிவெடுத்துக் கூடினார்கள்
பற்பல மண்டபங்களில் இருவரும்.

அறுபதாயிரம் வெள்ளம் அவுணர்கள்
உருவாகினர் அவர்களிடமிருந்து.

கதிரவன் கீழ் திசையில் எழுகையில்
புதிதாகத் தோன்றிய நான்கு மக்களும்

இரு நூறு ஆயிரம் வெள்ளம் அவுணர்களும்
பெரு மகிழ்ச்சி அளித்தனர் மாயைக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM SKANDA - 3

3#29b. நவராத்திரி விரதம் (2)

“கற்புக்கரசி வாடுகிறாள் உன் நினைவாகவே.
தற்போது மெலிந்து, நலிந்து போய் விட்டாள்.

அனுப்பினான் இந்திரன் காமதேனுவின் பாலை;
அருந்தினால் மறைந்துவிடும் பசி, தாகம் என்று.

உபாயம் கூறுவேன் இராவணனை வெல்வதற்கு;
உபவாசம் இருந்து நவராத்திரி பூஜை செய்வாய்.

நிஜமான வெற்றி கிடைக்கும் எளிதாக ராமா!
பூஜை, ஜபம், ஹோமம் முறையாகச் செய்தால்”

எடுத்துக் கூறினார் நாரதர் ராமனுக்கு விரிவாக,
அடுத்துச் செய்யவேண்டிய விரத முறையினை.

திரவியங்கள் சேகரித்தான் ராமன் – தன்
விரதத்துக்கு குருவாக்கினான் நாரதரை.

விதிப்படி பூஜித்தான் மால்யவான் மலையில்;
அதிசயக் காட்சி தந்தாள் அஷ்டமி நள்ளிரவில்,

மலையுச்சியின் மேல் சிங்க வாகனத்தில்!
மகிழ்வுடன் கூறினாள் ராமனிடம் இதனை.

“மச்சமாகிக் காத்தாய் நால்வேதங்களை!
மந்தரகிரியைத் தாங்கினாய் கூர்மமாகி!

வராஹமாகி நிலை நிறுத்தினாய் பூமியை!
நரசிம்மமாகி அழித்தாய் இரண்யகசிபுவை!

நன்மை புரிந்தாய் தேவருக்கு வாமனனாகி!
வென்றாய் க்ஷத்திரியரைப் பரசுராமானகி!

தசரதன் மகனாகத் தோன்றியுள்ளாய் நீ
தசமுகனை அழிப்பதற்கு என்றறிவாய்.

அம்சம் ஆவாய் நீ மகா விஷ்ணுவின்;
அம்சம் லக்ஷ்மணன் ஆதிசேஷனின்!

அம்சம் ஆவர் வானரர் தேவர்களின்!
த்வம்சம் செய்வீர் நீங்கள் அரக்கர்களை!”

பூர்த்தி செய்தார் நவராத்திரி விரதத்தை;
ஆசி தந்தார் வெற்றியடைவதற்கு நாரதர்.

விஜய தசமியன்று பயணம் தொடங்கியது.
விஜயம் கிடைத்தது அசுரருடன் போரில்.

சிறைபட்ட மனைவி சீதையை மீட்ட ராமன்,
குறைவற்ற ஆட்சி செய்தான் அயோத்தியில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


தேவி பாகவதம் மூன்றாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது
 
DEVI BHAAGAVATAM SKANDA - 3

3#29b. Nava raathri puja

Naarada continued to tell Raamaa about the pathetic condition of Seetaa in Asokha vanam. “Oh Raamaa! Seeta is pining for you. She has become thin, weak and famished. Indra had sent her the milk of the divine cow Kamadhenu to keep off her hunger and thirst.

I will tell you a sure method of defeating RaavaN easily. Do Nara raatri puja and observe upavaasam. Do the japam and homam as prescribed. It is sure to bring you an easy victory over RaavaN.

Naarada explained the rules of the puja. Raama collected the various articles requird for the puja and homam. He made Naarada himself his guru.

The puja went on as per the rules on the Maalyavaan mountain. Devi gave her stunning darshan on the midnight of Ashtami on her simha vaahanam. She was very pleased and told Rama thus:

“You saved the four Vedas in the form of a fish. You lifted the Mandargiri in the form of a tortoise. You re-established the earth in the form of Varaaha. You killed the arrogant HiraNyan in the form of Narasimham.

You helped the Devas in the form of Vaamana. You put an end to the wicked Kshatriya in the form of Parasu Raamaa. You are born as the son of Dasaratha only to kill the Dasa mukha RaavaN.

You are the amsam of Mahaa Vishnu, Lakshman of Aadhiseshan and the vaanraas of Deva. Together you will put an end to the race of Raavan”

The puja was duly completed and Naarada blessed Raamaa to emerge victorious. They left for the war on the Vijya dasami day. Raamaa won in the war, killed the wicked RaavaN and released Seetaa from her prison in Asokhavaam. He returned to Ayodhya and ruled Raama Raajyam very well and for very long.

 
SRIMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 50 ( 1 to 5)

வத்ஸாஸுர ப3காஸுர வத4ம்

தரல மது4க்ருத்4 வ்ருந்தே3 ப்3ருந்தா3வனே மனோஹரே
பசு’ப சி’சு’பி4ஸ் ஸாகம் வத்ஸானுபாலன லோலுப: |
ஹலத4ர ஸகோ2 தே3வ ஸ்ரீமன் விசேரித தா4ரயன்
க3வல முரளீ வேத்ரம் நேத்ராபி4ராம தனு த்3யுதி: ||( 50 – 1)

ஸ்வயம் பிரகாசியாகிய மஹா விஷ்ணுவே! சுற்றித் திரியும் வண்டுக் கூட்டங்களை உடையதும்; மனத்தைக் கவருவதும் ஆகிய பிருந்தாவனத்தில்;கண்களுக்கு இனிமையான சரீர காந்தியை உடையவரும்; பலராமனுடன் கூடியவரும் ஆன தாங்கள் கன்றுக் குட்டிகளை மேய்க்க விருப்பம் கொண்டீர். கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், பிரம்பு இவற்றை எடுத்துக் கொண்டு கோப பாலர்களுடன் அங்கு சுற்றித் திரிந்தீர்கள் அல்லவா? ( 50 – 1)

விஹித ஜக3தீ ரக்ஷம் லக்ஷ்மி கராம்பு3ஜ லாலிதம்
த3த3தி சரணத்3வந்த்3வம் வ்ருந்தா3வனே த்வயி பாவனே |
கிமிவ ந ப3பௌ4 ஸம்பத் ஸம்பூரிதம் தருவல்லரீ
ஸலில த4ரணீ கோ3த்ர க்ஷேத்ராதி3கம் கமலாபதே ||( 50 – 2)


லக்ஷ்மி கந்தா! மிகவும் பரிசுத்தமான பிருந்தாவனத்தில், உலகங்களை ரக்ஷித்ததும், லக்ஷ்மி தேவியின் தாமரைக் கரங்களால் லாளிக்கப்பட்டதும் ஆகிய இரண்டு திருவடிகளை வைத்தபோது மரங்கள், கொடிகள், ஜலம், பூமி, மலை, வயல் முதலிய எது தான் மேன்மை பெற்று விளங்கவில்லை? ( 50 – 2)

விலஸது3லபே காந்தாராந்தே ஸமீரண சீ ‘தலே
விபுல யமுனா தீரே கோ3வர்த4னாசல மூர்த4ஸு |
லலிதா முரளி நாத3 சஞ்சாரயன் கலு வாத்ஸகம்
க்வசன தி3வஸே தை3த்யம் வத்ஸாக்ருதீம் த்வமுதை3க்ஷதா2: ||(50 – 3)

பச்சைப் புற்களுடன் கூடி விளங்குகின்ற வனத்தின் நடுவிலும், காற்றினால் சீதளமான விசாலமன யமுனை நதிக் கரையிலும், கோவர்த்தன மலையின் சிகரங்களிலும் தாங்கள் இனிமையாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு கன்றுக் குட்டிகளை மேய்க்கும் போது ஒருநாள் கன்றின் உருவில் வந்திருந்த ஓர் அசுரனைக் கண்டீர்கள் அல்லவா?( 50 – 3)

ரப4ஸ விலஸத்3 புச்ச2ம் விச்சா2ய தோஸ்ய விலோகயன்
கிமபி வலிதஸ் ஸ்கந்த4ம் ரந்த்4ர ப்ரதீக்ஷ முதீ3க்ஷிதம் |
தமத2 சரணே விப்4ராத்3 விப்4ராமயன் முஹுருச்சகை:
குஹசன மஹா வ்ருக்ஷே விக்ஷேபித2 க்ஷத ஜீவிதம் ||(50 – 4)

விரைவாக வாலை ஆடிக் கொண்டும், சிறிது கழுத்தைத் திருப்பிக் கொண்டும், தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டும், சுற்றித் திரிகின்ற அந்த அசுரனைத் தாங்கள் இனம் கண்டு கொண்டீர்கள். உடனே
அவன் கால்களைப் பற்றி, அவனை விரைவாகச் சுழற்றி, உயிர் அற்றவனாகச் செய்து, ஒரு பெரிய மரத்தின் மீது தூக்கி எறிந்தீர்கள் அல்லவா? ( 50 – 4)

நிபததி மஹா தை3த்யை ஜாத்யா து3ராத்மனி தத்க்ஷணம்
நிபதன ஜவ க்ஷுண்ண க்ஷோணீ ருஹ க்ஷத கானனே |
தி3வி பரிமிலத்3 ப்3ருந்தா3:ப்3ருந்தா3ரக குஸுமோத்கரை:
ஸிரஸி ப4வதோ ஹர்ஷாத்3 வர்ஷந்தி நாம ததா3 ஹரே ||(50 – 5)


ஹே கிருஷ்ணா! பிறவியிலேயே துஷ்டனாகிய அந்த அசுரன் விழும்போது உண்டான வேகத்தால் மரங்கள் பொடிப் பொடியாகி வனம் உருவழிந்தது! அப்போது ஆகாயத்தில் தேவர்கள் அதிகசந்தோஷம் அடைந்து தாங்கள் தலை மேல் புஷ்பங்களை வர்ஷித்தார்கள் அல்லவா? ( 50 – 5)
 
SRIMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 50 ( 6 to 10)

வத்ஸாஸுர ப3காஸுர வத4ம்

ஸுரபிலதமா மூர்த4ன் யூர்த்4வம் குத: குஸுமாவலி
நிபததி தவேத் யுக்தோ பா3லைஸ்ஸஹேல முதை3ரய : |
ஜடிதி த3னுஜ
க்ஷேபணோர்த்4வம் க3தஸ் தருமண்ட3லாத்
குஸும நிகரஸ்ஸோயம் நூனம் ஸமேதி ச’னைரிதி ||(50 – 6)


“மிகவும் நறுமணம் வாய்ந்த இந்தப் புஷ்பக் குவியல் தங்கள் தலை மேல் எங்கிருந்து விழுகின்றது?” என்று கோபாலர்கள் கேட்டபோது, “அசுரனை எறிந்ததால் மரக் கூட்டத்தில் இருந்து விரைவாக உயரச் சென்ற அந்தப் புஷ்பக் குவியல் மெதுவாகக் கீழே விழுகின்றது என்று நினைக்கின்றேன்!” என்று விளையாட்டாகத் தாங்கள்பதில் அளித்தீர்கள் அல்லவா?
( 50 – 6)

க்வசன தி3வஸே பூ4யோ பூ4யஸ்தரே பருஷா தபே
தபன தனயாபாத2: பாதும் க3தா3 ப4வதா3த3ய : |
சலித க3ருதம் ப்ரேக்ஷா மாஸுர் ப3கம் கலு விஸ்ம்ருதம்
க்ஷிதித4ர க3ருச்சே2தே3 கைலாஸ சை’லாமிவாபரம் || (50 – 7 )


பிறகு ஒரு நாள் கடுமையான வெப்பம் இருந்தபோது யமுனா நதி நீரைப் பருகத் தாங்களும், மற்றவர்களும் சென்றீர்கள். மலைகளின் சிறகுகள் வெட்டப் பட்டபோது மறைக்கப்பட்ட மற்றொரு கைலாச மலையைப் போலிருக்கும் ஆனால் சிறகுகளை அசைத்துக் கொண்டிருக்கும் அந்த பகாசுரனைக் கண்டீர்கள் அல்லவா? ( 50 – 7)

பிப3தி ஸலிலம் கோ3பவ்ராதே ப4வந்தமபி4 த்ருத:
ஸ கில நிகி3லன்னக்3னி ப்ரக்2யம் புனர்த்3ருத முத்3வமன் |
த3லயிது மகா3த் த்ரோட்யா: கோட்யா ததா3 து ப4வான் விபோ
க2லஜன பி4தா3 சஞ்சுச்’சஞ்சு ப்ரக்3ருஹ்ய ததா3ரதம் ||(50 – 8 )

கோபர்கள் நீர் பருகும் போது அந்த பகாசுரன் தங்களை எதிர்த்து வந்து விழுங்கினான். நெருப்புக்கு ஒப்பான தங்களை உடனேயே வாந்தியும் எடுத்தான். மறுபடியும் தங்களை அலகின் கூரிய நுனியால் கிழிக்க வந்தான் அல்லவா? ஆனால் துஷ்ட ஜனங்களைக் கொல்லுவதில் தேர்ச்சி பெற்ற தாங்கள் அவன் இரு அலகுகளையும்பிடித்து வலித்து அவனை இரண்டாகப் பிளந்துவிட்டீர்கள் அல்லவா? ( 50 – 8)

ஸபதி3 ஸஹஜாம் ஸந்த்3ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதனாம்
அனுஜ மக4 மப்யக்3ரே க3த்வா ப்ரதீக்ஷிது மேவ வா |
ச’மன் நிலயம் யாதே தஸ்மின் ப3கே ஸுமனோக3ணே
கிரதி ஸுமனோவ்ருந்த3ம் ப்3ருந்தா3வனாத் க்ருஹமையதா2 :||
( 50 – 9)


முதலில் இறந்த தன் சஹோதரியாகிய பூதனையை சீக்கிரம் பார்ப்பதற்கோ, அல்லது முதலில் சென்றுதம்பியாகிய அகாசுரனை வரவேற்பதற்கோ, அந்த பகாசுரன் யமலோகத்தை அடைந்த போது தேவர்கள் புஷ்பக் குவியலை வாரி இறைக்கும்போது, பிருந்தாவனத்தில் இருந்து தாங்கள் வீட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா? ( 50 – 9)

லலித முரளீ நாத3ம் தூ3ரன்னிச’ம்ய வதூ4 ஜனை:
த்வரித முபக3ம்யாராத்3 ஆரூட4 மோத3 முதீ3க்ஷித : |
ஜனித ஜனனீ நந்தா3னந்த3 ஸமீரண மந்திர
ப்ரதி2த வஸதே சௌரே தூ3ரி குருஷ்வ மமாமயான் ||(50 – 10)


குருவாயூரில் பிரசித்தமாக வாழும் சூரவம்சத்தில் பிறந்த ஹே கிருஷ்ணா! தூரத்தில் இருந்து வரும் தங்கள் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு சீக்கிரமாகப் பக்கத்தில் வரும் கோபிகைகளால் மிகவும் ஆனந்தத்துடன் பார்க்கப் பட்டவரும், யசோதைக்கும் நந்தகோபனுக்கும் ஆனந்தத்தை உண்டு பண்ணியவரும் ஆகிய தாங்கள் என் ரோகங்களைப் போக்கி அருள வேண்டும். ( 50 – 10)
 
Last edited:
த3ச’கம் 51 ( 1 to 5)

அகா4ஸுர வத4ம்; வன போஜனம்

கதா3சன வ்ரஜ சி’சு’பி4ஸ் ஸமம் ப4வான்
வனாச’னே விஹித மதி: ப்ரகே3தராம் |
ஸமாவ்ருதே ப3ஹுதர வத்ஸ மண்ட3லை:
ஸதே மனைர் நிரக3ம தீ3ச’ஜேமனை:||(51 – 1)


ஸர்வேஸ்வரனே! பால கோபர்களுடன் வனபோஜனம் செய்ய தீர்மானித்த நீங்கள், அதிகாலையில் பற்பல பசு, கன்றுகளின் கூட்டத்துடன், ஊறுகாயும், கட்டுச் சோறும் எடுத்துக்கொண்டு வெளிச் சென்றீர்கள் அல்லவா? ( 51 – 1)

விநிர்யதஸ்தவ சரணாம்பு3ஜ த்3வயாத்3
உத3ஞ்சிதம் த்ரிபு4வன பாவனம் ரஜ:|
மஹர்ஷய : புலகத4ரை: கலேப3ரை:
உதூ3ஹிரே த்4ருதப4வ தீ3க்ஷணோத்ஸவா : ||(51 – 2)

வெளியே செல்லுகின்ற தங்கள் திருவடித் தாமரைகளில் இருந்து கிளம்பிய, மூவுலகங்களையும் பரிசுத்தம் ஆக்குகின்ற பாததூளியை, மயிர்சிலிர்த்த தேஹங்களுடன் மஹரிஷிகள் அனுபவித்தனர் அல்லவா? ( 51 – 2)
ப்ரசாரயத்யவிரல சா’த்3வலே தலே
பசூ’ன் விபோ4 ப4வதி ஸமம் குமாரகை:|
அகா4சஸுரோ ந்யருண தகா3ய வர்த்தநீம்
ப4யானகஸ்ஸபதி3 ச’யானகாக்ருதி:||(51 – 3)

ஸர்வேஸ்வரனே! பாலகோபர்களுடன் தாங்கள் பசும்புல் நிறைந்த இடத்தில் கன்றுகளை மேய்க்கும் போது, அகாசுரன் தங்களுக்குத் தீங்கு இழைப்பதற்கும் (தன்னுடைய பாபங்கள் நசிப்பதற்கும்) பெரிய மலைப் பாம்பின் உருவில் தங்களை வழி மறித்தான் அல்லவா? ( 51 – 3)

மஹாசல ப்ரதி மதனோர் குஹா நிபா4
ப்ரசாரித2 ப்ரதி2த முகஸ்ய கானனே |
முகோ2த3ரம் விஹரண கௌதுகாத்3 க3தா
குமாரகா : கிமபி விதூ3ரகே3த்வயி ||(51 – 4 )


தாங்கள் சற்று எட்டிச் சென்றதும், கோபச் சிறுவர்கள் காட்டில் விளையாடும் ஆவல் மேலிட்டு, குஹை போன்று அகன்று திறந்திருந்த அகாசுரனின் வாயில் நுழைந்து சென்றனர் அல்லவா? ( 51 – 4)

ப்ரமாத3த ப்ரவிச’தி பன்னகோ3த3ரம்
க்வத2தனௌ பசு’பகுலே ஸவத்ஸகே |
வித3ன்னித3ம் த்வமபி விவேசி’த2 ப்ரபோ4
ஸுஹ்ருஜ்ஜனம் விச’ரண மாசு’ ரக்ஷிதும் ||( 51 – 5)


ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா? ( 51 – 5)
 
த3ச’கம் 51 ( 6 to 10)

அகா4ஸுர வத4ம்; வன போஜனம்

க3லோத3ரே விபுலித வர்ஷ்மணா த்வயா
மஹோரகே3 லுட2தி நிருந்த3 மாருதே |
த்3ருதம் ப4வான் வித3லித கண்ட2 மண்ட3லோ
விமோசயன் பசு’ப பசூ’ன் வினிர்யயௌ ||(51 – 6 )


ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா?( 51 – 6)

க்ஷணம் தி3வி த்வது3பக3மார்த2 மாஸ்தி2தம்
மஹாஸுர ப்ரப4வ மஹோ மஹோ மஹத் |
விநிர்க3தே த்வயி து நிலீனா மஞ்ஜஸா
நப4: ஸ்தலே நந்ருரதோ2 ஜகஸ்ஸுரா: ||(51 – 7 )

அந்த அசுரனிடமிருந்து வெளிப்பட்ட பெரிய ஜோதியானது தாங்கள் வெளிவருவதற்காக ஆகாயத்தில் சிறிது நேரம் காத்து நின்றது. தாங்கள் வெளிப்பட்டதும் தங்களிடம் விரைந்து புகுந்து லயித்தது அல்லவா? அதைக் கண்ட தேவர்கள் ஆடினார், பாடினர், கொண்டாடினர். ( 51 – 7)

ஸவிஸ்மயை: கமல ப4வாதி3பி4ஸ்ஸுரை:
அனுத்3ருதஸ் தத3னு க3த: குமாரகை: |
தி3னே புனஸ்தருண த3சா’ முபேயுஷி
ஸ்வகைர் ப4வானதனுத போஜநோத்ஸவம் ||(51 – 8)

ஆச்சரியம் அடைந்த பிரமன் முதலான தேவர்கள் பின் தொடரவும், தங்கள் நண்பர்களுடன் வேறு இடத்துக்குச் சென்று, உச்சிப் பொழுதில் வன போஜனம் செய்தீர்கள் அல்லவா? ( 51 – 8)

விஷாணிகாமபி முரளீ நிதம்ப3கே
நிவேச’யன் கப3லத4ர: கராம்பு3ஜே |
ப்ரஹாஸயன் கலவசனை : குமாரகான்
பு3போ4ஜித2 த்ரித3ச’ க3ணைர் முதா3நுத: ||( 51 – 9)


கொம்பு, புல்லாங்குழல் இவற்றை இடையில் சொருகிக் கொண்டும் , தாமரை போன்ற கைகளில் ஒரு கவளம் அன்னத்தை வைத்துக் கொண்டும் , இனிய சொற்களால் அனைவரையும் மகிழச் செய்து கொண்டும், தேவ கணங்களால் துதிக்கப் பட்டும் தாங்கள் வனபோஜனம் செய்தீர்கள் அல்லவா? ( 51 – 9)

ஸுகா2ச’னன்த்விஹ தவ கோ3ப மண்ட3லே
மகா2ச’னாத் ப்ரிய மிவ தே3வமண்ட3லே |
இதி ஸ்துதஸ் த்ரித3ச’ வரைர் ஜக3த்பதே
மருத்புரீ நிலய க3தாத் ப்ரபாஹிமாம் ||(51 – 10)


குருவாயூரில் குடி கொண்டிருக்கும் கிருஷ்ணா! தேவர்கள் கூட்டத்தில் யாகத்தில் தரப்படும் ஹவிஸ்ஸைப் புசிப்பதைவிடவும், இந்த வனத்தில் கோபர்கள் கூட்டத்தில் புசிக்கும் போஜனமே அதிகப் பிரியமானது என்று தேவர்களும், பெரியவர்களும் எண்ணினார்கள். அப்படிப்பட்ட குருவாயூரப்பா! தாங்கள் தான் என்னை வியாதிகளின் கூட்டத்தில் இருந்து
காப்பாற்ற வேண்டும். ( 51 – 10)
 
The translation is missing in the blog!!!

Please give me time to trace it or rewrite it!

2 (# 3 B). THE BIRTH OF ASURAS.

In the third quarter of the night, they entered the third mandapam. Maayai took the form of a female elephant and the rushi a male elephant.

A son was born to them with an elephant face. From their sweat forty thousand units of asuras were born and all of them had elephant faces!

During the fourth quarter of the night they entered the fourth mandapam. They assumed the form of a female goat and a male goat.

A daughter was born with the head of a goat. From their sweat were born thirty thousand units of asuras -all with the head of a goat.

They took the form of other animals like yaali, tiger, horse, deer, demon, pig,bear, cattle an produced sixty thousand more asuras.

When the sun rose in the east, Maayai was happy to see her four children and the two hundred thousand units of auras born out of her sweat.
 
VINAAYAKA PURAANAM 1.

24e. அறுகின் பெருமை

அந்தணனாக வந்து தம் முன் நிற்பவர்
சிந்தையில் நிலைத்த விநாயகரே எனத்

தொழுது பணிந்தனர் தம்பதியர் இருவரும்
வேழமுகன் தந்தான் தன் திவ்ய தரிசனம்

திருவடிகளில் இணையும் வரம் வேண்டிட
திருவருள் புரிந்து வரம் தந்தான் ஐயன்!

ஜனகன் உணர்ந்தான் தன் தவற்றினை!
ஜனகன் விரைந்தான் திரிசரன் இல்லம்.

“மாயையை அகற்றி அறிவு புகட்டினீர்;
மார்க்கம் சொல்வீர் முக்தி அடைந்திட!”

உபதேசித்தான் கணபதி ஜனகனுக்கு;
உய்ந்தான் அவன் அதைப் பின்பற்றி!”

முனிவரின் மொழிகளைக்கேட்டு முடித்த
மனைவி ஆசிரியை கேட்டாள் இதனை.

” சாயுஜ்யம் தந்தார் ஒரு அறுகுக்கு – பதி
னாயிரத்துக்கு எதுவும் தரவில்லையே?”

‘பொன்னும், மணியும் விரும்பும் இந்தப்
பெண்ணை உணரச் செய்வேன் உண்மை!’

ஆனைமுகனை அர்ச்சித்த அறுகு ஒன்றை
அவளிடம் தந்து இம்மொழி பகன்றார் அவர்.

“கொடு இந்தப் புல்லை இந்திரனிடம் சென்று;
எடைக்கு எடை பொன் தருவான் உனக்கு!”

அறுகை எடுத்துச் சென்றாள் ஆசிரியை;
அமரர் கோனிடம் வேண்டினாள் பொன்!

“குபேரனிடம் செல்வீர் தாயே!” என்றான்;
“குபேரன் தருவான் எடைக்கு எடை பொன்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1.

24e. The greatness of green grass

Thrisaran and Virochanai realized that the Brahmin standing in front of them was none other than Lord Vinayaka. They prostrated in front of him.

Vinayaka revealed himself in his full glory. The couple prayed for the boon of merging with his lotus feet. Lord Vinayaka granted them saayujya mukthi.

King Janakan realized his folly. He too rushed to the house of Thrisaran. He worshiped the lord and said, “You have removed my ignorance and given me the right knowledge. Please tell me how to attain liberation from samsaara.”

Lord taught him the right path. king Janakan followed it austerely and got liberated from the samsaara when his time came.

After listening to this Asiriyai asked her husband sage Koundinya this question. “For a single arc of green grass Lord Vinayaka gave that couple saayujya mukthi. We are doing archanai with ten thousand arcs everyday. Yet he has not given us anything!”

Sage Koundinya decided to teach her the futility of the earthly wealth and the greatness of bhakti. He gave her a single arc of the green grass offered to Lord Vinayaka and told her, “Take this to Indra. He will give you an equal amount of gold”

She took the grass and went to Indra. He paid his respects to her and said, “Mother ! please go to Kuberan. He will give you an equal amount of gold for this grass.”
 
KANDAPURAANAM - ASURA KAANDAM

4. தந்தையின் அறிவுரை.

உடன் பிறந்தோருடன் சென்ற சூரபத்மன்
உடன் பணிந்தான் தன் தாய் தந்தையரை.


“தாங்கள் ஆணை இடுங்கள் எமக்கு.
நாங்கள் செய்ய வேண்டியது என்ன?”

“அறவழியில் நின்று ஆராய்வீர்களாகுக
அறிவின் துணையோடு மெய்ப்பொருளை.

ஐந்தெழுத்து மந்திரங்களுக்கு உரிய சிவனே
ஐந்தொழில்களையும் செய்பவன் ஆவான்.

சிவன் பெருமையைக் கூறுவது என்பது
எவனுக்குமே ஆகும் ஓர் அரியசெயல்!

மும்மலங்களால் கட்டப்பட்ட உயிர்கள்
மூழ்குகின்றன எழுவகைப் பிறவிகளில்.

காணப்படும் பொருட்கள் அனைத்துமே
கணத்தில் மறையும் நீர்க் குமிழி போல்.

அறம் மட்டுமே அளிக்கும் உயிர்களுக்கு
அருளும், அன்பும், தவமும், சிவமும்!

மும்மலத்தினின்றும் விடுபடப் பற்றுவீர்
முக்கண்ணனின் இரு பொற்பாதங்களை!

ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்து
ஐயனுடன் ஒன்றுவதே வாழ்வின் பயன்.

பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவர்
இருமையிலும் எய்தப் பெறார் இன்பம்.

தவத்தின் நிகர் ஆகும் தவம் ஒன்றே.
தவம் புரிவீர் மேன்மை அடைவீர்.

மறத்தை மறந்தும் கைப்பற்றிவிடாதீர்!
அறத்தை ஒருபோது கை விடாதீர்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDAPURAANAM - ASURA KAANDAM

2 (#4). The advice given by the sage.

Soorapadman went along with his brothers and sister and paid his respect to the sage.”Please tell us what we should do now”

“Stand on the path of righteousness and find out the truth about the God. Siva is worshipped by the pancha aksharam and he does the five jobs of a God. It is very difficult to explain the greatness of Siva.

The living things are affected by the three doshas of the intellect and they take one of the seven types of births. Everything which we can see will get destroyed like a bubble of water. Worship Siva. Hold on the Dharma.

Those who make the others suffer will have happiness neither here nor later. Do penance for realising the God and your REAL selves.” .
 
Back
Top