A poem a day to keep all agonies away!

VINAAYAKA PURAANAM 1.


24a. Advaitham

King Janaka was an advaitha gnaani. He considered that God and jiva were one and the same. Since he considered everyone equal he did not pay obeisance even to those who deserved it.

“You are a God and I am also a God. Why should one God pay respect to another God?” he used to ask.

Narada blessed him once “You give away everything anyone needs. May you become richer and richer and may poverty disappear from your kingdom”

“God is the one who gives and God is the one who receives. Then why is there so much fuss about giving dhaanam?” Janakan asked Narada.

“You are talking from the angle of your concept Advaitham . I will prove beyond doubt that God is different from Jiva”. Narada went to sage Koundinya and sang there in praise of Lord Vinayaka.

“Janaka is blessed with everything, yet he does not realize that it is the gift of God. He thinks he is God and no different from God. Oh Lord Vinayaka! you must open his eyes to his folly and make him realize that a Jeeva can never be God”

Narada prayed to Lord Vinayaka.
 
KANDAPURAANAM - Asura Kaandam

1b. “அழகி! அருள்செய்!”

“பொற்கொடியே! உன் வரவு நல்வரவு!
மாற்றுக் குறையாத பொற்சிலையே!


யார் நீ? எந்த ஊரைச் சேர்ந்தவள்?
யார் உன் பெற்றோர்? நீ என்ன குலம்?”

“தனியான பெண்ணிடம் தகாத சொற்கள்!
புனிதர் உமக்கு இதுவும் அழகாமோ?

தவம் செய்வது உமது பணியன்றோ?
தவத்தில் தடங்கல்கள் வரலாகுமோ?”

“தவம் புரிவது வேண்டியதைப் பெற.
தவத்தின் பயனாக வந்துள்ளாயே நீயும்!

இனியும் எதற்குத் தவம் செய்ய வேண்டும்?
இனிமையானவளே! எனக்கு அருள்புரி!”

“உத்தர தேசத்தில் வசிப்பவள் நான்;
நித்தமும் செல்வேன் கங்கையில் நீராட.”

“புனித நதிகளை இங்கே அழைப்பேன்!
புனிதத் தலங்களையும் வரச்செய்வேன்!

மும் மூர்த்திகளைக் காண விருப்பமா?
மூவுலகங்களையும் காண வேண்டுமா?

அமிர்தம் அருந்த விழைகின்றாயா?
அளவற்ற மக்கட்பேறு வேண்டுமா?

விண்ணுலகில் உன்னை அமர்த்துவேன்!
விண்ணுலக மங்கையர் உன் சேடிகள்.

எது வேண்டுமானாலும் கேள் தருவேன்!
என் உயிர் உன் கைகளில் தான் பெண்ணே!”

“தனியே இருக்கும் பெண்ணிடம் நீர்
மனம் போனபடி பேசலாகுமோ ஐயா?

இந்தப் பேச்சை இத்துடன் விடுங்கள்.
சொந்த வேலைகள் எனக்கு உள்ளன!”

போக்குக் காட்டி மறைந்து போனாள்;
போக்கிடமற்ற முனிவர் புலம்பலானார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
KANDAPURAANAM - Asura Kaandam

2 (# 1.B). “HAVE PITY ON ME!”

“Welcome oh pretty damsel. You shine like a statue of the purest gold! Who are you? Where do you come from? Who are your parents? What is your varNa?”

“Sir! You must not speak such words to a woman who is all alone by herself! You must not deviate from you tapas either.”

” People do tapas to achieve what they want. You have appeared here as an answer to my tapas. Why do I need to do more tapas?”

“I live in the northern part of the country. I am going for my daily bath in the river Ganges.”

“You need not go anywhere. I cam command all the holy rivers to appear here. I can make all the holy places on earth appear here.
Do you wish to see the Trimoorthis? Do you wish to see the three worlds?

Do you wish to taste the nectar – the food of Gods? Do you wish to give birth to many valorous sons? I can place you in the high heavens and make all the Apsaras your servants.

Ask for anything you fancy and you shall have it. My life is now in your hands! Please have pity on me!”

“It is not fair on the part of a venerable sage like you to speak such words. Now please let me go my way!”

She disappeared from there. The sage was overcome with grief, unfulfilled love and lust. He started lamenting and looking for her everywhere.
 
DEVI BHAAGAVATAM - Skanda 3

3#28a. ஸ்ரீ ராம சரிதம் (6)

அஞ்சி நடுங்கி விட்டாள் சீதை இதைக் கேட்டு !
கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டாள்,

“பயனற்ற சொற்களைப் பேசுகின்றாய் நீ!
தயரதன் மருமகள் உனக்கு மனைவியா?

ராமன் வந்தால் திரும்ப மாட்டாய் உயிரோடு!
ராவணா! சென்றுவிடு இங்கிருந்து இப்போது!”

அஞ்சுபவனா இராவணன் கொஞ்சுமொழிகளுக்கு?
வஞ்சக வடிவை விடுத்ததுச் சுயவுருவெடுத்தான்!

பற்றிச் சென்றான் சீதையைப் பலவந்தமாக!
பறந்தது விமானம் லங்காபுரியை நோக்கி!

அழுதாள் சீதை “ராமா! லக்ஷ்மணா!” என்று.
அழுகுரல் கேட்டான் அருணன் மகன் ஜடாயு

தாக்கினான் பதிவிரதையைக் கடத்துபவனை;
தாக்கினான் தன் அலகு, நகங்கள், சிறகுகளால்.

வெட்டித் தள்ளினான் ராவணன் சிறகுகளை.
வெகு விரைவாக அடைந்தான் லங்காபுரியை.

அரக்கியர் காவலில் வைத்தான் சீதையை;
அரற்றி அழுதாள் ஆற்றாமையால் பேதை!

அச்சுறுத்துவான் அனுதினம் அங்கு வந்து – பின்
உச்சரிப்பான் அவளிடம் அளவு கடந்த காதலை

பத்தினியை பலவந்தம் செய்ய இயலாததால்
அத்தனை விதங்களிலும் துன்புறுத்தி வந்தான்.

சோகமே வடிவாக இருந்தாள் சீதை – அ
சோக வனத்தில் நலிந்தும், மெலிந்தும்.

‘மரண ஓலத்தைக் கேட்டு அஞ்சியதால்
தரணி மகள் என்ன செய்தளோ?’ என்று

விரைந்து வந்தான் ராமன் பர்ணசாலைக்கு;
வியந்து நின்றான் எதிர்ப்பட்டவனைக் கண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - Skanda 3

3#28a. Sree Rama charitam ( 6 )

Seetaa trembled on hearing these words. She gathered all her courage and took to task the mighty Raavan.

”You are talking meaningless words Oh Raavan! The daughter in law of Dasaratha will never become your wife. If my Raamaa returns now, you will not go back from here alive. Go away before my husband returns”

Raavan was undaunted by her anger. He took his original terrifying form now. He grabbed Seetaa and flew on his vimaanam to Lanka.

Seetaa cried pitiously calling out the names of Raama and Lakshman.
Jataayu, the son of Arunan, heard these piteous cries. He attacked RaavaN abducting Seetaa with terrible anger and fought with him using his strong beak, talons and powerful wings.

RaavaN became very angry by this unexpected interference. He cut off the wings of Jataayu mercilessly and rushed to Lanka with Seetaa.

He kept Seetaa under the constant vigil of the fearsome raakshasis in Asokha vanam. Seetaa became famished, dirty, lean and tired weeping bitter tears of self pity.

RaavaN made it a point to come to her everyday to tempt her and threaten her. He would glorify himself and tell her to accept him as her mate. He would threaten to devour her if she would not accept him.

Meanwhile Raamaa got worried about the wail made the dying asura in Raamaa’s own voice. He hurried back to the parNasaala and was shocked to see Lakshman coming to meet him – leaving Seetaa all alone in that treacherous forest.
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 44 ( 1 to 5 )

நாம கரணம்

கூ3ட4ம் வஸுதே3வ கி3ரா கர்த்தும் தே
நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காரான் |
ஹ்ருத்3க3த ஹோரா தத்வே க3ர்க3 முனீஸ்
த்வத்3 க்3ருஹம் விபோ4 க3தவான் ||(44 – 1)


பிரபுவே! வசுதேவரின் வாக்கைக் கேட்டு; எந்தக் கிரியைகளும் அற்ற தங்களுக்கு நாமகரணம் முதலிய ஸம்ஸ்காரக் கிரியைகளை யாரும் அறியாமல் ரஹசியமாகச் செய்வதற்கு; ஜோதிட நூல்களின் தத்துவங்களை அறிந்த கர்க முனிவர் தங்கள் கிருஹத்திற்கு வந்தார் அல்லவா? (44 – 1)

நந்தோ3த2 நந்தி3தாத்மா வ்ருந்தி3ஷ்டம்
மானயன்னமும் யாமினாம் |
மந்த3ஸ்மிதார்த்3ர மூசே த்வத் ஸம்ஸ்காரான்
விதா4து முனிச் : ||(44 – 2)

அப்போது நந்தகோபன் சந்தோஷம் அடைந்தவராக, தபஸ்விகளில் சிறந்த அந்த கர்க முனிவரை வெகுமானித்துத் தங்களுக்குச் செய்ய வேண்டிய சமஸ்காரங்களைச் செய்யுமாறு முனிவரிடம் மந்தஹாசத்துடன் கேட்டுக் கொண்டார் அல்லவா? (44 – 2)

யது3வம்சா’ச்சார்யத்வாத் ஸுநிப்4ருத
மித3மார்ய கார்யமிதி கத2யன் |
க3ர்கோ3 நிர்க3த புலகச்’சக்ரே
தவ ஸாக்3ராஜசஸ்ய நாமானி ||(44 – 3 ​)


“ஐயா! நான் யது குலத்திற்கு குருவாக இருப்பதால் இது மிகவும் ரஹசியமாகச் செய்ய வேண்டியது” என்று சொல்லிக் கொண்டு கர்க முனிவர் புளகம் அடைந்தவராகத் தமையனுடன் கூடிய தங்களுக்கு நாமகரணம் செய்தார் அல்லவா? ( 44 – 3)

கத2மஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர நாம்னோ
அனந்த நாம்னோ வா |
இதி நூனம் க3ர்க3 முனிச்’சக்ரே
தவ நாம ரஹஸி விபோ4 ||(44 – 4)

பிரபுவே! “ஆயிரம் பெயர்களை உடையவனுக்கு, அளவில்லாத பெயர்களை உடையவனுக்கு எவ்விதம் நாமகரணம் செய்வேன்?” என்று ஆலோசித்துத் தான் கர்க முனிவர் ரஹசியமாகத் தாங்களுக்கு நாமகரணம் செய்து இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். ( 44 – 4)

க்ருஷி தா3து ணகாரப்4யாம்
ஸத்தாநந்தாத்மதாம் கிலாபி4லபத் |
ஜக3த3க4கர்ஷித்வம் வா கத2யத்3ருஷி:
க்ருஷ்ண நாம தே வ்யதனோத் ||(44 – 5)


கர்க முனிவர், ‘க்ருஷி’ தாது ‘ண’ காரம் இவைகளைக் கொண்டு ‘சத்’, ‘ஆனந்தம்’ என்ற உருவத்துடன் இருக்கும் தன்மையை வெளிப்படுத்கின்ற (அல்லது ஜனங்களின் பாவத்தை அபஹரிக்கும் தன்மையைக் கூறும்) கிருஷ்ணன் என்ற பெயரைத் தங்களுக்கு இட்டார்.( 44 – 5)
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 44 (6 to 10)

நாம கரணம்

அன்யாம்ச்’ச நாமபே4தா3ன்
வ்யாகுர்வன் அக்3ரஜே ச ராமாதீ3ன் |
அதி மானுஷாபா4வம் ந்யகத3த்தவாம்
அப்ரகாச’யன் பித்ரே ||(44 – 6 )


அந்த கர்க முனிவர் வாசுதேவன் முதலிய மற்ற பெயர்களையும், தமையனுக்கு ராமன் முதலிய பெயர்களையும் அர்த்தத்துடன் விவரமாகக் கூறினார். தங்களை வெளிப்படுத்தாமலேயே தாங்கள் மனிதர்களைக் கடந்த பிரபாவம் உடையவர் என்பதைச் சொன்னாரல்லவா? ( 44 – 6)

ஸ்நிஹ்யதி யஸ்தவ புத்ரே
முஹ்யதி ந மாயிகை: புனச்’சோ’கை : |
த்3ருஹ்யதி யஸ்ஸ து நச்’யே தித்யவத3த்தே
மஹத்வ ம்ருஷிவர்யா: ||(44 -7)


எவன் தங்கள் புத்திரனிடத்தில் அன்பு செலுத்துகின்றானோ அவன் அதற்கு மேல் மறுபடியும் அஞ்ஞானத்தால் உண்டாகும் துக்கங்களால் மோஹம் அடைவதில்லை. எவன் துரோகத்தைச் செய்கின்றானோ அவன் நாசம் அடைவான் என்று அந்த முனி ச்ரேஷ்டர் தங்கள் மகிமையைச் சொன்னார். ( 44 – 7)

ஜேஷ்யதி ப3ஹுதர தை3த்யான்
நேஷ்யதி நிஜப3ந்து4லோகமமலபதம் |
ச்’ரோஷ்யதி ஸுவிமல கீர்த்தீரஸ்யேதி
ப4வத்3 விபூ4தி ம்ருஷி ரூசே ||(44 – 8)

அனேக அசுரர்களை இந்தக் குழந்தை ஜெயிப்பான். தனது பந்து ஜனங்களை பரபிரம்ம ஸ்வரூபத்தை அடைவிப்பான். இந்தக் குழந்தையின் மாசற்ற கீர்த்தியை ஜனங்கள் கேட்கப் போகின்றார்கள் என்றெல்லாம் தங்கள் மகிமைகளைச் சொன்னார் அல்லவா ? (44 – 8)

அமுனைவ ஸர்வ து3ர்க3ம் தாரிதாஸ்த2
க்ருதாஸ்த2 மத்ர திஷ்ட2த்4வம் |
ஹரி ரேவத்யனபி4லபன்னித்யாதி3
த்வாமவர்ணயத் ஸ முனி: ||(44 – 9)

அந்த முனிவர் தங்களைக் குறித்து இவன் மகாவிஷ்ணு தான் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் இந்தக் குழந்தையைக் கொண்டே எல்லா ஆபத்துக்களையும் தாண்டுவீர்கள். இந்தக் குழந்தையை ஆதரவுடன் நம்பி இருங்கள் என்ற எல்லாம் வர்ணித்தார் அல்லவா? (44 – 9 )

க3ர்கோ3த நிர்க3தேஸ்மின் நந்தி3த
நந்தா3தி3 நந்த்3யமானஸ்த்வம் |
மத்3க3த3 முத்3கத கருணோ
நிர்க3ம்ய ஸ்ரீ மருத்புராதீ4ச’ ||(44 – 10)


குருவாயூரப்பா! அந்த கர்கமுனி சென்ற பிறகு நந்தன் முதலியவர்கள் சந்தோஷத்துடன் தங்களைச் சீராட்டினார்கள். அப்படிப்பட்ட தாங்கள் கருணை உண்டானவராக என் அனைத்து வியாதிகளைப் போக்கிட வேண்டும். (44 – 10)
 
Last edited:
Sreeman NArAyaNeeyam


த3ச’கம் 45 ( 1 to 5)

பா3ல லீலா

அயி ஸப3ல முராரே பாணி ஜானு ப்ரசாரை :
கிமபி ப4வனா பா4கா3ன் பூ4ஷயந்தௌ ப4வந்தௌ |
சலித சரண குஞ்சௌ மஞ்ஜூ மஞ்ஜீர சி’ஞ்ஜா
ச்’ரவண குதுக பா4ஜௌ சேரதுச்’சாரு வேகா3த் ||(45 – 1)


பலராமனோடு கூடிய முராரியே! நீங்கள் இருவரும் தவழ்ந்து செல்வதால் நந்தகோபனுடைய வீட்டின் எல்லா இடங்களையும் இந்த விதம் என்று சொல்ல முடியாதவாறு அலங்கரித்தீர்கள் அல்லவா? சலிப்பிக்கபட்ட பாதாரவிந்தங்களோடு, அழகிய சலங்கையின் இனிய ஓசையைக் கேட்க விரும்பி, இங்கும் அங்கும் வேகமாகவும் சஞ்சரித்தீர்கள் அல்லவா?
(45 – 1)

ம்ருது3 ம்ருது3 விஹஸந்தா வுன்மிஷத்3 த3ந்த வந்தௌ
வத3ன பதித கேசௌ’ த்3ருச்’ய பா3தா3ப்3ஜ தே3சௌ’ |
பு4ஜ கலித கராந்த வ்யாலக3த் கங்கணாங்கௌ
மதிமஹரத முச்சை: பச்’யதாம் விஸ்வந்ரூணாம் ||(45 – 2 )


மிகவும் மெதுவாக சிரிக்கும்போது வெளியில் தெரியும் அழகிய பற்கள். திருமுகத்தில் தொங்கும் அழகிய மயிர்க் கற்றைகள் . வஜ்ரம், அங்குசம் இவற்றின் அடையாளங்கள் காணப்படும் அழகிய பாதங்கள். மேல்கைகளில் இருந்து நழுவி விழுந்து மணிக்கட்டுகளில் தங்கும் வளையல்கள் அங்கு ஏற்படுத்தும் அடையாளங்கள். இந்த விதமாக தாங்கள் காண்போர் மனத்தைக் கவர்ந்தீர்கள் அல்லவா? ( 45 – 2)

அனுஸரதி கௌதுக வ்யாகுலாக்ஷே
கிமபி க்ருத நிதா3னம் மா நௌ த்3ரவந்தௌ |
வலித வத3ன பத்3மம் ப்ருஷ்டதோ த3த்த த்3ருஷ்டி
கிமிவ ந வித3தா4தே கௌதுகம் வாஸுதேவ ||(45 – 3)

வசுதேவரின் புதல்வரே! கோகுலத்து ஜனங்கள் குதூகலத்தால் அசையும் கண்களுடன் உங்களைப் பின் தொடர்ந்து வரும்போது, அவ்யக்த மதுரமாகச் சிரித்துக் கொண்டு ஓடுவீர்கள். தாமரை முகங்களைப் பின்புறம் திருப்பிக் கொண்டு நீங்கள் பார்க்கும்போது அவர்கள் எந்த சந்தோஷத்தைத் தான் அடையவில்லை? ( 45 – 3)

த்3ருத க3திஷு பதந்தௌ உத்தி2தௌ லிப்தபங்கௌ
தி3வி முனிபி4ரபங்கை: ஸஸ்மிதம் வந்த்3யா மாநௌ |
த்3ருத மத2 ஜனனீப்4யாம் ஸானுகம்பம் க்3ருஹீதௌ
முஹுரபி பரிரப்தௌ4 த்3ராக்3 யுவாம் சும்பிதௌ ச ||(45 – 4)

வேகமாக ஓடும் போது கீழே விழுவீர்கள். அதனால் மேனியில் சேற்றைப் பூசிக் கொள்வீர்கள். பிறகு எழுவீர்கள். ஆகாயத்தில் களங்கமற்ற முனிவர்களால் வணங்கப்படும் நீங்கள் இருவரும் வேகமாக வரும்போது, தாய்மார்கள் உங்களைக் கருணையுடன் எடுத்து, அணைத்து, முத்தம் இடுவார்கள் அல்லவா? ( 45 – 4)

ஸ்னுத குசப4ரமங்கே தா4ரயந்தீ ப4வந்தம்
தர
மதி யசோ3தா3 ஸ்தன்யதா3 த4ன்யத4ன்யா |
கபட பசு’ப மத்3யே முக்3த4 ஹாஸாங்குரம் தே
த3ச’ன முகுல ஹ்ருத்3யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ ||(45 – 5)

சஞ்சலமான மனத்துடன், பால் பெருகும் குச பாரத்துடனும், தங்களை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு பால் தருகின்ற யசோதை மிகவும் பாக்கியசாலி. கபடமாக இடையார் வேடம் பூண்ட கண்ணா! பால் குடிக்கும் போது பூ அரும்பு போன்ற பற்கள் தெரியத் தங்கள் புன்முறுவல் செய்யும் போது, தங்கள் திருமுகத்தைப் பார்த்து யசோதை சந்தோஷம் அடைந்தாள் அல்லவா? ( 45 - 5)
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 45 ( 6 to 10)

பா3ல லீலா

தத3னு சரணசாரி தா3ரகைஸ் ஸாகமாரான்
நிலயததிஷு கே2லன் பா3ல சாபல்யசா’லி |
ப4வன சு’க பிடா3லான் வத்ஸகாம்ச்’சானுதா3வன்
கத2மபி க்ருத ஹாஸைர் கோ3பகை வாரிதோSபூ4: ||(45 – 6)


அதன் பின்னர் தாங்கள் நன்கு நடக்கத் தொடங்கினீர்கள். இடைப் பையன்களோடு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாலலீலைகள் செய்துகொண்டும், விளையாடிக் கொண்டும்; வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளையும், பூனைகளையும், கன்றுகளையும் பின்தொடர்ந்து செல்லும் போது சிரித்துக் கொண்டே அவர்கள் சிரமப்பட்டுத் தங்களைத் தடுத்தார்கள் அல்லவா?( 45 – 6)

ஹலத4ர ஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவச’ பதித நேத்ராஸ் தத்ர தத்ரைவ கோ3ப்ய: |
விக3லித க்3ருஹக்ருத்யா விஸ்ம்ருதா பத்ய ப்4ருத்யா:
முரஹர முஹுரத்யந்தாகுல நித்ய மாஸன் ||(45 – 7)

முரனைக் கொன்றவரே! பலராமனுடன் கூடித் தாங்கள் எங்கெங்கு சென்றீர்களோ, அங்கெல்லாம் கோப ஸ்திரீகள் சுவாதீனம் அற்றுப் பதிந்த கண்களை உடையவர்களாக; வீட்டு வேலைகளை உதாசீனம் செய்தவர்களாக; குழந்தைகளையும், வேலையாட்களையும் மறந்தவர்களாக; ஒவ்வொரு நாளும் வியாகூலம் அடைந்தார்கள் அல்லவா? ( 45 – 7 )

ப்ரதிநவ நவநீதம் கோ3பிகா த3த்தமிச்சன்
கலபத3 முபகா3யன் கோம
லம் க்வபி ந்ருத்யன் |
ஸத3ய யுவதி லோகைரர்பிதம் ஸர்பிரச்’னன்
க்வசன நவ விபக்வம் து3க்3த4மப்யா பிப3ஸ்த்வம் ||(45 – 8)

அவ்யக்த மதுரமான சப்தங்களுடன் தாங்கள் பாடிக்கொண்டும், சில சமயங்களில் ஆடிக் கொண்டும், கோபிகைகள் கொடுத்த புதுவெண்ணையை விரும்பி உண்டும்; கருணையுடன் கொடுத்த நெய்யைக் குடித்தும், புதிதாகக் காய்ச்சப் பட்ட பாலைக் குடித்தும் வந்தீர்கள் அல்லவா? ( 45 – 8)

மம கலு2 ப3லி கே3ஹே யாசனம் ஜாதமாஸ்தாம்
இஹ புன ரப3லானாமக்3ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி : கிம் தே3வ ஸந்த்யஜ்ய யாச்சாம்
த3தி4 க்ருத மஹரஸ்த்வம் சாருணா சோரணேன ||(45 – 9 )

“நான் மஹாபலியினுடைய (பலவானுடைய) க்ருஹத்தில் முன்பு பிச்சை எடுக்க நேர்ந்தது அல்லவா? அதனால் இப்போது இந்த இடத்தில் மறுபடியும் (பலமில்லாத) இந்தப் பெண்களிடம் அதைச் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா? அதனால் தாங்கள் யாசிப்பதை விட்டு விட்டு விசித்திரமாகத் தயிரையும், நெய்யையும் திருடினீர்களா? (45 – 9)

தவ த3தி4 க்4ருத மோஷே கோ4ஷ யோஷாஜனானாம்
அப4ஜத ஹ்ருதி3 ரோஷே நவகாச’ம் ந சோ’க: |
ஹ்ருத3ய மபி முஷித்வா ஹர்ஷ சிந்தௌ3 4 ந்யதா4ஸ்த்வம்
ஸ மம ச’மய ரோகான் வாத கே3ஹாதி4 நாதா 2 ||(45 – 10)

தாங்கள் செய்த தயிர் வெண்ணைத் திருட்டினால் கோபிகைகளின் மனங்களில் கோபம் இடம் பெறவில்லை. வருத்தமும் இடம் பெறவில்லை. தாங்கள் அவர்களுடைய மனங்களையும் களவாடி ஆனந்தக் கடலில் மூழ்கடித்தீர்கள் அல்லவா? அப்படிப்பட்ட குருவாயூரப்பனே! எனது ரோகங்களைத் தணித்து அருள வேண்டும்.(45-10)
 
Vinaayaka puraanam 1

24b. வினோத யாசகர்

அரசனின் அறியாமையை நீக்கிவிட,
அந்தணன் ஆனான் ஆனைமுகன்.

அடைந்தான் அரண்மனை வாயிலை!
அரசனிடம் தெரிவித்தனர் காவலர்கள்,

“நோயால் அவதியுறும் ஓர் அந்தணன்
வாய் நிறையக் கேட்கின்றான் யாசகம்!”

பசியால் மெலிந்து நலிந்தவனிடம்
“இசைவான தானம் எது கூறு!” எனப்

“பொன்னும், மணியும் வேண்டேன்!
மண்ணும், மங்கையும் வேண்டேன்!

பசி தீரும்படி நீர் அளிக்கும் உணவே
இசைவான தானம் எனக்கு!” என்றான்.

“பசியாறப் புசிப்பதற்கு உணவு தருக!”
பேசினான் மன்னன் காவலர்களிடம்.

இலை நிறைய அறுசுவை உணவிட
இலை காலியானது ஒரு நொடியில்!

உள்ளே இருந்து கொணர்ந்த உணவை
உள்ளே தள்ளினார் ஒரே நொடியில்.

தீர்ந்துவிட்டன சமைத்த பதார்த்தங்கள்
தீரவில்லை அந்தணரின் அதீதப் பசி!

“ஆசாமி லேசுப்பட்டவன் அல்ல!” என்று
அரசனிடம் கூறினார் விரைந்த காவலர்.

திகைத்த அரசன் ஓடினான் அவரிடம்!
“சமைத்ததைத் தர இத்தனை நேரமா?

வெந்தது போதும் தந்துவிடச் சொல்!”
வந்தது எல்லாம் வயிற்றில் விழுந்தது!

காலியாகின களஞ்சியங்கள் எல்லாம்!
காலியாகின ஜனங்களின் பொருட்கள்!

தளர்ந்து போனான் மன்னன் ஜனகன்
தாளாப் பசியைக் கண்ணால் கண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Vinaayaka puraanam 1

24b. The unusual Brahmin

Vinayaka decided to open Janakan’s eyes to the truth that a jiva can never be equal to Eshwara. He transformed himself to a poor and famished brahmin.

He reached Janakan’s palace. The palace guards went and told their king that a poor famished Brahmin had come for yaachakam.

The Brahmin was troubled by some strange illness and looked famished. The king Janakan asked him,

“What do you wish for?” The Brahmin replied,” I do not want gold or the gems. I do not want a land or a lady. I just want food to sate my hunger” The king ordered his guards ,”Give him food until his hunger is satisfied”

The guards took him to the dining place; spread a large banana leaf and filled it with tasty food. The stuff disappeared in one second. More food was brought from inside the kitchen and the man ate faster than they could serve him food.

Now all the cooked food was exhausted but not the Brahmin’s strange hunger. The guards were startled by the sight of the Brahmin and ran to the king to report that the man’s stomach seemed to be a bottomless pit.

Now king Janakan rushed to the Brahmin who was in a very bad temper due to his hunger. He asked the king,

“How long will your cooks take to prepare food for me? Tell them to bring the half cooked food. I can’t wait any longer”

The half cooked food was exhausted. The uncooked food items were eaten next. The contents of their food reservoirs was exhausted next. Everything edible from every house in the country was brought to the Brahmin. He just tossed them inside the cave of his stomach and kept on demanding for more and more food.

Now Janakan was scared and upset that he could not feed a Brahmin enough food to satisfy him.
 
Kandapuraanam

Asura Kaaandam

2. முனிவரின் புலம்பல்.

மாயை எற்றி வைத்த காம நோய்
மயக்கிவிட்டது மதியை முற்றிலும்!


பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்தப்
பொற்கொடியின் உருவெளித் தோற்றம்.

மான்களைக் கண்டு மயங்கி நின்றார்
மான் விழி அவள் நினைவுகளால்.

வண்டுகளிடம் விண்டார் தம் காதலை.
சண்டைக்குப் போனார் தென்றலுடன்.

குவளை மலரிடம் சென்று தம்முடைய
குறைகளை விவரித்துச் சொன்னார்;

அன்னப் பேடைகளின் அன்ன நடை
இன்னும் நினைவுறுத்தின அவளை.

குயில்களுடன் சேர்ந்து கூவினார்
மயிலிடம் தான் கொண்ட மையலை.

மயில், குயில், கிளி என்று எங்கும்
மையலைக் கூறித் திரிந்தார் அவர்.

கதிரவன் மேற்கில் மறைந்தான்
காமநோய் பெருகியது இரவில்

அனலில் இட்ட மெழுகானார் அவர்
புனிதம் மறைந்து காமம் மிகுந்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Kanda PuraaNam - Asura kaandam

2 ( # 2). THE LAMENTATION.

The love and lust churned up by Maayai made the sage burn with unfulfilled desires.

He imagined her presence everywhere. He saw the deer and was reminded of the doe-eyed Maayai. He spoke to the bees about his love for her.

He told his unfulfilled love to the flowers in the pond. The swaying walk of the swans reminded him of his lady love. He shouted to the cuckoos the love he had for her.

He got angry with the Southern wind – which blows cool on the couple and burns the separated couples. He spoke to the peacock, cuckoo and parrot of his love.

The sunset in the west. With that his desire for the woman grew stronger and he felt as if he were a piece of wax thrown into a fire.
His austerities and discipline disappeared and he was filled with lust.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#28b. ஸ்ரீ ராம சரிதம் (7)

“சீதையைத் தனியே விட்டு விட்டு வந்தாயா?
சீதைக்கு என்ன நேர்ந்ததோ?” என்றான் ராமன்.

“தீங்கான காலம் தான் அண்ணா எனக்கு இது
ஏங்கித் தேடியபடி வந்தேன் உன்னை ” என,

விரைந்தனர் இருவரும் பர்ணசாலைக்கு;
மறைந்து விட்டிருந்தாள்; சீதை அங்கில்லை!

வருந்தியபடித் தேடிச் சென்றனர் வனத்தில்;
அருமைச் சகோதரர் இருவரும் சீதையை.

கண்டனர் வாழ்வின் விளிம்பில் ஜடாயுவை!
விண்டான் தான் கண்டதைப் போரிட்டதை!

“ஆண்மைத் தினவெடுத்துத் தீமை புரிந்தான்!”
மாண்டான் ஜடாயு இதனை உரைத்த பின்பு.

சீதைக்காகப் போரிட்டு உயிர் இழ்ந்தவனுக்குச்
சிதையை மூட்டி தஹனம் செய்தான் ராமன்.

கபந்தனுக்கு அளித்தான் சாப விமோசனம்.
கபந்தன் சொற்படிச் சந்தித்தான் சுக்ரீவனை.

ஒளிந்து வாழ்ந்திருந்த சுக்ரீவனுக்கு ராமன்
அளித்தான் நாட்டை, வாலியைக் கொன்று.

திளைத்தது உலகம் மழையில் நனைந்து!
உளைந்தது மனம் சீதையை எண்ணி ஏங்கி!

“என்ன சோதனையைச் சந்திக்கின்றாளோ?
என்ன வேதனையை அனுபவிக்கின்றாளோ?

ஏதேனும் சீதைக்கு நேர்ந்துவிட்டிருந்தால்
வேதனையில் நான் உயிர் விடுவேன்.”என,

“துன்பம் இன்பம் கலந்ததே வாழ்க்கை
துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது!

தேவருக்கும் உண்டு இன்ப துன்பங்கள்;
தேவையற்ற கவலையை ஒழியுங்கள்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#28b. Sree Raama charitam (7)

Raama was stunned to see Lakshman coming in search of him, leaving Seetaa alone in the forest. “Why did you leave Seetaa alone Lakshman? Let us hope that nothing has happened to her!”

Lakshman replied,” I have a feeling that this is not a good period for us dear elder brother!”

They both rushed to the parNasaalaa. But Seetaa was not to be seen anywhere there. They went in search of her in the forest.

They came across Jataayu at the sunset of his life. Jataayu told the brothers that Raavan had abducted Seetaa and his attempt to stop the abduction was futile.

Jataayu breathed his last. Raamaa and Lakshman did the last rites for that brave bird. They came across Kabandan and delivered him from his curse. Raamaa befriended Sugreevan – who was hiding away from his powerful brother Vaali – as advised by Kabandan.

Raamaa killed Vaali and made Sugreevan the new king. The rainy months followed and they had to wait for it to get over. Raamaa was pained by worrying about Seetaa and wondering what could have happened to her.

He told Lakshman,”If anything has happpended to Seetaa I shall give up my life”

Lakshman consoled him and said,”Life is a mixture of pleasures and pains. We should not get disheartened by the difficulties and sorrows. Even the Gods have go through pleseures and pains. Please stop worrying unnecessariy. No harm would have befallen Seetaa Maataa
 
SRIMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 46 ( 1 to 5)

வாயில் உலகங்களைக் காட்டியது

அயி தேவ புராகில த்வயி ஸ்வய
முத்தானச’யே ஸ்தனந்த4யே |
பரி ஜ்ரும்ப4ணதோ வ்ய3பாவ்ருதே
வதனே விச்’வமசசஷ்ட வல்லவீ ||(46 – 1)


பால லீலைகள் செய்த தேவா! முன்பு சர்வேஸ்வரனாகிய தாங்கள் மல்லக்கப் படுத்துக் கொண்டு முலைப் பால் குடித்துக் கொட்டாவி விடும்போது; திறக்கப்பட்ட தங்கள் திருவாயில் யசோதை இந்த பிரபஞ்சத்தையே கண்டாள் அல்லவா? ( 46 – 1)

புனரப்யத2 பா3லகை: ஸமம்
த்வயி லீலாநிரதே ஜகத்பதே |
ப2ல சஞ்சய வஞ்சன க்ருதா4
தவ ம்ருத்3 போ4ஜன மூசூரர்ப4கா:||(46 – 2 ​)


ஜகதீசனே! அதன் பிறகு மறுபடியும் தாங்கள் குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது; பழங்களை மாற்றியதால் கோபித்துக் கொண்டு; குழந்தைகள் தாங்கள் மண் தின்றதைப் பற்றி யசோதையிடம் சொன்னார்கள் அல்லவா? ( 46 – 2)

அயி தே ப்ரலயாவதௌ4 விபோ4
க்ஷிதி தோயாதி3 ஸமஸ்த ப4க்ஷிண: |
ம்ருது3 பாச’னதோ ருஜா ப4வேதி3தி
பீ4தா ஜனனி சுகோப ஸா ||(46 – 3 )

சர்வ வல்லமை படைத்த ஈசனே! பிரளய காலத்தில் பிருத்வி, ஜலம் போன்ற பஞ்ச பூதங்களை உண்ணும் தங்களுக்கு; மண்ணைத் தின்றதால் வியாதிகள் உண்டாகிவிடும் என்று பயந்த அந்தத் தாய் தங்களிடம் வெகுவாகக் கோபித்துக் கொண்டாள் அல்லவா?( 43 – 3)

அயி து3ர்வினயாத்மக த்வயா
கிமு ம்ருத்ஸா ப3த வத்ஸ ப4க்ஷிதா |
இதி மாத்ரு கி3ரம் சிரம் விபோ4
விததா2ம் த்வம் ப்ரதி ஜக்ஞிஷே ஹஸன் ||(46 – 4)


“துர்விநயம் கொண்ட குழந்தையே ! நீ மண்ணை உண்டாயா என்ன?” என்று அவள் கேட்டபோது தாங்கள் வெகு நேரம் சிரித்துக் கொண்டே இருந்து,”அது பொய்!” என்று ஆணை இட்டுச் சொன்னீர்கள் அல்லவா?
( 46 – 4)

அயி தே ஸகலைர் விநிச்’சிதே
விமதிச் சேத்3வத3னம் விதா3ர்யதாம் |
இதி மாத்ரு விப4ர்த்ஸிதோ முக2ம்
விகஸத் பத்3மநிப4ம் வ்யதா3ரய : ||(46 – 5)


“அடேய் எல்லோரும் நிச்சயமாகக் கூறினார்களே! உனக்கு வித்தியாசம் தோன்றுமே ஆனால் வாயைத் திற!” என்று தாய் அதட்டியதும் தாங்கள் மலர்ந்த தாமரைக் கொப்பான திருவாயைத் திறந்தீர்கள் அல்லவா?
( 46 – 5 )
 
SRIMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 46 ( 6 to 10)

வாயில் உலகங்களைக் காட்டியது

அபி ம்ருல்லவ த3ர்ச’னோத்ஸுகாம்
ஜனனீம் தாம் ப3ஹு தர்ப்பயன்னிவ |
ப்ருதிவீம் நிகி2லாம் ந கேவலம்
பு4வனான்யப்யகி4லான்ய தீ3த்3ருசா: ||(46 – 6 )


சிறிதளவேனும் மண்ணைக் காண விரும்பிய அந்தத் தாயைத் திருப்தி செய்யும் பொருட்டு, தாங்கள் இந்த பூமி மட்டும் அல்லாது எல்லா உலகங்களையும் தங்கள் சிறு வாயினில் அவளுக்குக் காண்பித்தீர்கள் அல்லவா? ( 46 – 6)

குஹசித்3வனமம்பு3தி4: க்வசித்
க்வசித3ப்4ரம் குஹசித்3ரஸாதலம் |
மனுஜா த3னுஜா க்வசித்ஸுரா
தத்3ருசே’ கிண்ண ததா3 த்வதா3னனே ||(46 – 7)

அப்போது தங்கள் திருவாயில் ஓரிடத்தில் காடும், வேறு ஓரிடத்தில் சமுத்திரமும், மற்றும் ஓரிடத்தில் மேகங்கள் உள்ள ஆகாயமும், வேறு ஓரிடத்தில் பாதாளமும், வேறு ஓரிடத்தில் மனிதர்கள், தேவர்கள் அசுரர்கள் என்று என்னதான் காணப் படவில்லை? ( 46 – 7 )

கலசா’ம்பு3தி4 சா’யினம் புன:
பர வைகுண்ட பதா3தி4வாஸினம் |
ஸ்வபுரச்’ச நிஜார்ப4காத்மகம்
கதிதா3 த்வாம் ந ததர்ச’ ஸா முகே2 ||(46 – 8)

அந்த யசோதை தங்கள் திருவாயில் தங்களைப் பாற்கடலில் பள்ளி கொண்டவராகவும்; மறுபடியும் மிகவும் மேன்மை உடைய வைகுந்தத்தில் வீற்றிருப்பவரகவும், தன் கண்ணெதிரில் உள்ள தன் பிள்ளையாகவும் இப்படி எத்தனை விதமாகத் தான் பார்க்கவில்லை? ( 46 – 8)

விகஸத்3 பு4வனே முகோ2த3ரே
நனு பூ4யோsபி ததா2 விதா4னன: |
அனயா ஸ்புடமீக்ஷிதோ ப4வான்
அனவஸ்தாம் ஜக3தாம் ப3தாதனோத் ||(46 – 9)


பிரகாசிக்கும் சகல லோகங்களையும் உடைய தங்கள் திரு முகத்தில் மீண்டும் முன் கூறிய முகத்தை உடையவனாகவே காட்டி, உலகங்களின் முடிவு இல்லதிருக்கும் தன்மையையும் யசோதைக்கு உணர்த்தினீர்கள் அல்லவா? என்ன ஆச்சரியம்! ( 46 – 9 )

க்4ருத தத்வதி4யம் ததா3 க்ஷணம்
ஜனனீம் தாம் ப்ரணயேன மோஹயன் |
ஸ்தனமம்ப தி3சே’த்யுபாஸஜன்
ப4கவன்னத்3பு4த பா3ல பாஹிமாம் ||(46 – 10)


அதிசயக் குழந்தையே! பகவானே! அப்போது சிறிது நேரம் உண்மையை அறிந்த அந்தத் தாயை புத்திர வாஞ்சையால் மீண்டும் மோஹம் அடையச் செய்தாய். ” அம்மா ! பால் கொடு!” என்று அவள் மடியில் ஏறி அமர்ந்த தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 46 – 10)







E
 
த3ச’கம் 47 ( 1 to 5)

உலூக2ல ப3ந்த4னம்
ஏகதா3 த3தி4 விமாத2 காரிணீம்
மாதரம் ஸ முபசேதி3வான் ப4வான் |
ஸ்தன்ய லோலுபயதா நிவாரயன்
அங்கமேத்ய பபிவான் பயோத4ரௌ ||(47 – 1 )


ஒரு நாள் தாங்கள் தயிர் கடைந்து கொண்டிருக்கும் தாயிடம் சென்று பால் குடிக்க விரும்பியதால் தயிர் கடைவதை நிறுத்தி மடிமேல் ஏறி அமர்ந்து முலை குடித்தீர்கள் அல்லவா? ( 47 – 1)

அர்த்த4 பீத குசகுட்3மலே த்வயி
ஸ்நிக்3த ஹாஸ மது4ரானனாம்பு3ஜே |
து3க்3த4மீச’ த3ஹனே பரிஸ்ருதம்
த4ர்துமாசு’ ஜனனீ ஜகா3ம தே ||(47 – 2)


ஹே ஈசனே! தாங்கள் தாமரை மொட்டுப் போன்ற ஸ்தனங்களைப் பாதி குடித்துக் கொண்டு இருக்கும் போது, அன்பார்ந்த மந்தஹாசத்தால் மிகவும் அழகான வதனாரவிந்தத்தோடு இருக்கும்போது, நெருப்பில் பொங்கி வழிந்த பாலை எடுத்து வைப்பதற்காகத் தங்கள் தாய் உள்ளே விரைந்து சென்றாள். ( 47 – 2)

ஸாமிபீத ரஸ ப4ங்க3 ஸங்க3த
க்ரோத3 பா4ர பரிபூ4த சேதஸா |
மந்த2 த3ண்ட முபக்3ருஹ்ய பாடிதம்
ஹந்த தே3வ தாதி பா4ஜனம் த்வயா ||(47 – 3)

பால் குடிக்கும்போது பாதியில் ஏற்பட்ட தடையால் தங்களுகுக் கடும் கோபம் உண்டாயிற்று. தன்னை மறந்து மத்தினால் அந்தத் தயிர்ப் பாத்திரத்தை உடைத்தீர்கள் அல்லவா? ( 47 – 3)

உச்சலத்3 த்4வனித் முச்சகைஸ்ததா
ஸ்ன்னிச’ம்ய ஜனனீ ஸமாத்3ருதா |
த்வத்3 யசோ’ விஸரவத்3த3த3ர்ச’ ஸா
ஸத்ய ஏவ த3தி4 விஸ்த்ருதம் க்ஷிதௌ ||(47 – 4)


அப்போது தங்கள் தாய் யசோதை மிக பலமான சப்தத்தைக் கேட்டு விரைவாக ஓடி வந்தாள். தங்கள் கீர்த்தி பரவுவதைப் போல நிலத்தில் பரவி இருக்கும் தயிரை மட்டும் கண்டாள். ( 47 – 4)

வேத3 மார்க3 பரிமார்கி3தம் ருஷா த்வாம்
அவீக்ஷ்ய பரிமார்க3யந்த்யசௌ |
ஸந்த3த3ர்ச ஸுக்ருதி ந்யுலூக2லே
தீ3யமான நவநீத மோதவே ||(47 – 5 )

மகா புண்ணியசாலியாகிய யசோதை, வேத மார்க்கங்களால் தேடப்பட்டும் காண முடியாத தங்களைக் காணாமல், கோபத்துடன் தேடிக் கொண்டு வந்தாள். உரல் மேல் இருந்து கொண்டு பூனைக்கு வெண்ணை ஊட்டும் தங்களைக் கண்டாள் அல்லவா? ( 47 – 5)
 
த3ச’கம் 47 ( 6 to 10)

உலூக2ல ப3ந்த4னம்

த்வாம் ப்ரக்3ருஹ்ய ப3த பீ4தி பா4வனா
பா4ஸுரானான ஸரோஜ மாசு’ ஸா|
ரோஷ ரோஷித முகி2 ஸகி2 புரோ
ப3ந்தனாய ரச ‘னா முபாத3தே3 ||( 47 – 6)


அந்த யசோதை பயத்தை அபிநயிக்கின்றதால் அதிக சோபை அடைந்த தாமரைபோன்ற திருமுகத்தை உடைய தங்களை விரைவாகப் பிடித்தாள். கோபத்தில் சிவந்த முகத்துடன் தோழிகளின் முன்னிலையில் தங்களைக் கட்டுவதற்காகக் கயிற்றை எடுத்தாள் அல்லவா? கஷ்டம்! ( 47 – 6)

ப3ந்து மிச்ச2தி யமேவ ஸஜ்ஜனஸ்தம்
ப4வந்த மயி ப3ந்துமிச்சதி |
ஸாநியுஜ்ய ரஜனா குணான் பஹூன்
த்3வ்யங்கு3லோனமகி2லம் கிலைக்ஷத ||(47 – 7)

பகவனே! எந்த சாதுக்கள் தங்களையே பந்துவாக விரும்புகின்றார்களோ அப்படிப் பட்ட தங்களை பந்தப்படுத்த விரும்பிய யசோதை, அநேகம் கயிறுகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிய போதும் அது எப்போதுமே இரண்டு அங்குலம் குறைவாக இருக்கக் கண்டாள் அல்லவா? (47 – 7)

விஸ்மிதோஸ்மித ஸகி2 ஜனேக்ஷிதாம்
ஸ்வின்ன ஸன்ன வபுஷம் நிரீக்ஷ்ய தாம் |
நித்ய முக்த வபுரப்யஹோ ஹரே
ப3ந்த4 மேவ க்ருபயாsன்வமன்யதா ||(47 – 8)

பக்தர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கும் ஸ்ரீ ஹரியே! ஆச்சரியம் அடைந்து சிரிக்கின்ற தோழிகளின் பார்வையால் யசோதை வியர்த்து சோர்வடைந்து விட்டாள். அதக் கண்டு மனம் இரங்கி என்றுமே விடுதலை அடைந்துள்ள பரபிரம்மம் ஆகிய தாங்கள் தங்களை அவள் கட்ட அனுமதித்தீர்கள் அல்லவா? ( 47 – 8)

ஸ்தீ2யதாம் சிர முலூக2லே கே2லத்யாக3தா
ப4வனமேவ ஸா யதா3 |
ப்ராகு3லூக2 லபி3லான்தரே ததா3
ஸர்பி ரர்பித மத3ன்ன்வாஸ்தி2தா2 : ||(47 – 9 )


“அடே துஷ்டப் பயலே! உரலில் கட்டுண்டு வெகு நேரம் இருக்கக் கடவது!” என்று சொல்லி அந்த யசோதை எப்போது தன் வீட்டுக்குத் திரும்பி வந்தாளோ அப்போதே அதற்கு முன்பாகவே அந்த உரல் குழியில் வைக்கப்பட்டு இருந்த நெய்யைத் தின்று கொண்டு இருந்தீர்கள் அல்லவா?
( 47 – 9)

யத்3ய பாச’ ஸுக3மோ விபோ4 ப4வான்
ஸம்யத: கிமு ஸபாச’யாSனயா |
ஏவமாதி3 தி3விஜை ரபி4ஷ்டுதோ
வாதநாத பரிபாஹி மாம் க3தா3த் ||(47 – 10)

பிரபுவே! தாங்கள் ஒன்றிலும் பற்றில்லாதவர்களால் (கையில் கயிறு இல்லாதவர்களால்) எளிதாக அடைய முடிந்தவர் என்பது உண்மை என்றால் ; பற்றுதல் உள்ள (கையில் கயிறு கொண்டுள்ள ) இந்த யசோதையால் ஏன் கட்டப்பட்டீர்கள்? குருவாயூரப்பா! தேவலோக வாசிகளால் இவ்விதம் எல்லாம் துதிக்கப்பட்ட தாங்கள் என்னை ரோகத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். ( 47 – 10)
 
vinaayaka puraanam 1

24c. வினோத யாசகர்

அனைத்துப் பொருட்களும் காலி ஆயின;
அத்தனை உண்ட பின்னும் தீரவில்லை பசி.

ஜனகராஜன் தோற்று விட்டான் அவனிடம்;
ஜனங்கள் முன்பு தளர்ந்து நின்றான் ஜனகன்.

“பசியைப் போக்க உணவு தரச் சொன்னேன்;
பசியல்ல இது! பற்றியுள்ளது உம்மை நோய்!

குணப்படுத்தும் அளவுக்கு என் நாட்டில்
உணவுப் பொருட்கள் இல்லை அந்தணரே!

எல்லை இல்லா உம் பசியினைத் தீர்க்க
வல்லவரிடம் செல்லுவீர் நீர்!” என்றான்.

கலகலவென்று நகைத்தான் அந்தணன்!
வெலவெலத்து நின்றனர் அனைவரும்!

“பசியைப் போக்கிக் கொள்ள வந்தேன் – என்
பசியை மேலும் தூண்டிவிட்டாய் மன்னா!

செல்க வேறு இடம் நோக்கி என்கின்றாய்!
கொள்கை பிடிப்பு இவ்வளவு தானா கூறு?

பகவான் நீயும்; பகவான் நானும் என்றாய்!
பகவான் பகவானுக்கு உதவ வில்லையே!

பகவானின் பசியைத தீர்க்க இயலாதா?
பசியைத் தீர்க்க இயலாதவன் பகவானா?

பசியைத் தீர்க்க இயலாத உன் கொள்கைகள்
விசித்திரமாக இல்லையா என நீயே கூறு?

அர்த்தமற்ற உன் அத்வைதக் கொள்கையை
ஆற்றிலோ குளத்திலோ கொண்டு நீ வீசு!”

கோபமாகப் பேசிய அந்தணன் உடனேயே
வேகமாக வெளியேறினான் அங்கிருந்து!

சென்று அடைந்தது இன்னொரு இல்லம்,
அன்பன் அந்தணன் திரிசரனின் இல்லம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
vinaayaka puraanam 1

24c. The unusual mendicant

All the edible things were eaten by the Brahmin and yet his hunger was not satisfied. King Janakan felt defeated for the first time. He felt disheartened in front of his citizens.

“I agreed to feed you to sate your hunger. But this is not hunger. It is a rare disease afflicting you. There is not enough food in my entire country to treat your disease. You please go to that person who can feed your unsatisfiable hunger!”

The Brahmin laughed loudly and everyone felt crestfallen. “I had came here to satisfy my hunger but the food that you gave me has made me more hungry. Now you tell me to go off to the person who is capable of satisfying my hunger.

Is this your principle? Is this your policy? You keep saying that everybody is a Bhagavaan. If you and I are both Bhagavaan why is that one bhagavaan is unable to feed another?

How can you be a Bhagavaan when you can’t give enough food to a poor starving Brahmin? It is high time you discard your senseless advaitha principle and wake up to the reality”.

He spoke with anger and left in a huff from the palace. He walked straight to the house of a poor Brahmin called Thrisaran.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

3a. அவுணர் உற்பத்தி

சோர்ந்த முனிவன் மனமோகினியைப்
பார்த்து மகிழ்ந்தான் தன் கண்ணெதிரில்!


“காம நோயைத் தந்தவள் நான் தானே!
காம நோய்க்கு மருந்தும் நான் தானே!

என் அழகுக்கு ஏற்றதாகிய அழகையும்,
என் வடிவுக்கு ஏற்றதாகிய வடிவையும்

எடுப்பீர் முனிபுங்கவரே! நாம் இருவரும்
கொடும் காமநோயைத் தொலைப்போம்.”

கரும்பு தின்னக் கூலியும் கிடைத்தது – மனம்
விரும்பும் தேவ வடிவெடுத்தார் முனிவர்.

வியந்த மாயை அவர் கரம் பற்றிக்கொண்டு
விரைந்து நுழைந்தாள் முதல் மண்டபத்தில்!

முதல் யாமத்தில் இணைந்தனர் இருவரும்,
முதல் மகனாகத் தோன்றினான் சூரபத்மன்.

அப்போது வியர்வையில் தோன்றினார்கள்
முப்பதாயிரம் வெள்ளம் அவுணர்கள் அங்கு!

இரண்டாவது யாமத்தில் சென்று நுழைந்தனர்
இரண்டாவது மண்டபத்தில் இவ்விருவர்களும்,

பெண் சிங்கத்தின் வடிவு எடுத்தாள் மாயை.
ஆண் சிங்கத்தின் வடிவு எடுத்தார் முனிவர்.

ஆயிரம் சிரங்களும், ஈராயிரம் கரங்களும்,
அரிமா முகங்களும் கொண்டு பிறந்தான்!

சிங்கமுகாசுரன் என்ற இரண்டாவது மகன்
தங்கத் தம்பியானான் வீரன் சூரபத்மனுக்கு.

அவுணர்கள் நாற்பதாயிரம் வெள்ளம் பேர்
அரிமா முகத்துடன் அங்கும் வியர்வையில்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top