A poem a day to keep all agonies away!

வாழ்த்து.



ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!


புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்
நன்னெறி ஒழுகச் செய்து நவை அறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி ஆண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி!

என்னாயகன் விண்ணவர் நாயகன் யானை நாம
மின்னாயகன் மறைநாயகன் வேடர்நங்கை
தன்னாயகன் வேற்றணி நாயகன் தன்புராண
தனநாயகம் ஆம்எனக் கொள்கஇஞ் ஞாலமெல்லாம்!
 
போற்றுதல்.





காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான்
மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்றொடர்
பூண்பதின் றாய்நயம் புணர்க்கும் புங்கவன்
சேண்பொலி திருநடச் செயலை ஏத்துவாம்.


பிறப்பதும் இறப்பதும் பெயருஞ் செய்கையும்
மறப்பதும் நினைப்பதும் வடிவம் யாவையும்
துறப்பதும் இன்மையும் பிறவும் சூழ்கலாச்
சிறப்புடை யரனடி சென்னி சேர்த்துவாம்.

முழுமதி அன்ன ஆறு முகங்களும் முந்நான் காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான் அவன் தவஞ் செப்பற் பாற்றோ?

முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும்
கொன்னார்வை வேலும் குலிசமும் ஏனைபடையும்
பொன்னர் மணி மயிலுமாகப் புனக் குறவர்
மின்னாள்கண் காண வெளிநின் றனன்விறலோன்.

வற்றாவருள் சேர்கும ரேசன் வண் காதைதன்னைச்
சொற்றாரும் ஆராய்ந் திடுவாரும் துகளுறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவரன்றே.

பாராகி ஏனைப் பொருளாய் உயிர்ப் பன்மையாகி
பேரா வுயிர்கட் குயிராய்ப் பிறவற்றுமாகி
நேராகித் தோன்ற லிலாதாகி நின்றான் கழற்கே
ஆறாத காதலொடு போற்றி யடைதுமன்றே.
 
KANDA PURAANAM - URPATHTHIK KAANDAM

1 ( # 26). THIRUCH CHENDOOR.

They saw Thiruch chengundroor and reached Thiruch chendhoor. Indra built a temple for Murugan and made him sit on a throne. Murugan wanted to know these facts.

“How were Soorapadman and his brothers born? What are the boons they received after doing penance? How did they make the Devas and world suffer?”

Indra requested His kulaguru Bruhaspathi to relate everything in great detail. Bruhaspathi told Murugan. “There is nothing you do not know. Still I will relate the facts as requested by you”.

[The first section URPATHTHIK KAADAM dealing with the birth of Murugan gets completed with this].
 
DEVI BHAAGHAVATAM - SKANDA - 3

3#27d. ஸ்ரீ ராம சரிதம் (4)

சாந்த ஸ்வபாவம் கொண்டவள் தான் சீதை;
காந்தனின் குரல் கேட்டு மதியிழந்தாள் பேதை!

கொடூரமான சொற்களைக் கூரிய அம்புகளாகத்
தொடுத்தாள் சீதை அப்பாவி லக்ஷ்மணன் மீது!

“துணையாக வந்தாயா எங்களுக்கு – அல்லது
துணைவியாக்கிக் கொள்ள வந்தாயா என்னை?

பாசத்தால் வரவில்லை நீ வனவாசம் – என் மீது
நேசத்தால் வந்து காத்திருக்கிறாய் வாய்ப்புக்கு.

ராமனுக்கு எதுவும் நேர்ந்திருந்தால் – நானும்
ராமனுடனே மடிந்துவிடுவேன் அறிந்து கொள்!

காமத்துடன் காத்திருக்கும் உன்னை நான்
ஏமாற்றுவேனே அன்றி உன் வசப்படேன்!

அண்ணன் அண்ணன் என்று நீ குழைவது
உண்மை எனில் உடனே செல்! உதவி செய்!”

விம்மி விம்மி அழுதான் லக்ஷ்மணன்;
நிம்மதி அழிந்தது நச்சுச் சொற்களால்.

“எப்படி எண்ண முடிகிறது என்னைப் பற்றி
இப்படிக் கீழ்த்தரமாக அன்னையே கூறு!

விபரீதம் விளையப் போகிறது ஐயமின்றி!
அபரிமிதமான பேசிவிட்டாய் என்னிடம்.

பின் விளைவுகள் நன்மை தராது உறுதி;
என் பேச்சைக் கேள் உன் நன்மை கருதி.

தண்ட வேண்டாம் நான் வரைந்த கோட்டை
அண்டாமல் தடுக்கும் இது வரும் கேட்டை.

மனமில்லாமல் விலகிச் சென்றான் அவன்
மனக் கவலையில் மூழ்கித் தத்தளித்தபடி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGHAVATAM - SKANDA - 3

3#27d. Sree Raama charitam (4)

Seetaa by nature was calm and kindhearted. But the wail she had heard and thought to be Raamaa’s made her very rude now. She spoke cruel words to Lakshman doubting his character, his integrity and his intentions.

“Did you come here to help us in vana vaasam or did you come here to possess me when you get a chance? You have not come due your love for your elder brother. You have come here due to your lust for me.

If anything happens to Raamaa, I wil rather die along with him than become your woman. I will never belong to you! If it is true that you have any love for Raamaa, go forth now to help him in his danger!”

Lakshman crumbled down hearing these harsh and cruel words. He lamented, “How can you think of me so low?A harm is about to befall us, I have no doubts. You have spoken words which should never be spoken by anyone. I am sure the consequence of this is going to be very painful!

I will draw a line. For your own sake and for your own safety do not cross the line for any reason whatever. It will keep off the impending danger!”

He drew the Lakshman rekha and went away looking for Raamaa weeping bitter tears.
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 40 ( 1 to 5 )

பூதனா மோக்ஷம்

தத3னு நந்த3 மமந்த3 சு’பா4ஸ்பதம்
ந்ருப புரீம் கரதா3ன க்ருதே க3தம் |
ஸமவலோக்ய ஜகா3த3 ப4வத்பிதா
விதி3த கம்ஸ ஸஹாய ஜனோத்3யம: ||(40 – 1)

அதன் பிறகு கம்சனுடைய சகாய பூதர்களின் பிரயத்தனத்தை அறிந்த வசுதேவர், கப்பம் கட்ட மதுராபுரிக்குச் சென்ற, அளவற்ற நற்குணங்களின் இருப்பிடமாகிய, உங்கள் தந்தை நந்த கோபனிடம் இங்ஙனம் உரைத்தார்.

அயி ஸகே தவ பா3லக ஜன்ம மாம்
ஸுக யதேத்3ய நிஜாத்மஜ ஜன்மவத் |
இதி ப4வத் பித்ருதாம் வ்ரஜநாயகே
ஸமதி4ரோப்ய ச’ச’ம்ஸ தமாதராத் ||(40 – 2 )

“தோழனே! உமக்குப் பிள்ளை பிறந்த செய்தி எனக்குப் பிள்ளை பிறந்ததைப் போலவே என்னை ஆனந்தப் படுத்துகின்றது இப்போது. ” வசுதேவர் தங்கள் பிதாவாக இருக்கும் தன்மையை நந்தகோபரிடம் ஆரோபணம் செய்து அந்த நண்பனை ஆதரவுடன் துதித்தார்.

இஹ ச ஸந்த்ய நிமித்த ச’தானி தே
கடகஸீம்னி ததோ லகு4 க3ம்யதாம் |
இதி ச தத்3வசஸா வ்ரஜநாயகோ
ப3வத3 பாயபி4யா த்ருத மாயயௌ ||(40 – 3)

“உமக்கு இவ்விடத்திலேயே அனேக அபசகுனங்கள் தோன்றுகின்றன. ஆகையால் கோகுலத்துக்கு விரைந்து செல்ல வேண்டும்!” என்கின்ற வசுதேவரின் சொற்களால் நந்தகோபன் தங்களுக்கு ஆபத்து உண்டாகும் என்றஞ்சி விரைந்து கோகுலம் வந்தார்.

அவஸரே கலுதத்ர ச காசன
வ்ரஜபதே மது4ராக்ருதிரங்க3னா |
தரல ஷட்பத3 லாலித குந்தலா
கபடபோதக தே நிகடம் க3தா || (40 – 4)

“ஹே கபட சிசுவே! அந்த சமயத்தில் சலிக்கின்ற வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளும், மனோஹர உருவம் உடையவளும் ஆகிய ஒரு ஸ்த்ரீ கோகுலத்தில் தங்கள் அருகே வந்தாள் அல்லவா?

ஸபதி3 ஸா ஹ்ருதபா3லக சேதனா
நிசி’சரான் வயஜா கில பூதனா |
வ்ரஜ வதூ4ஷ்விஹ கேயமிதி க்ஷணம்
விம்ருஷதீஷு ப4வந்தமுபாத3தே3 ||(40 – 5)

உடனே குழந்தைகளின் பிராணனை அபஹரிப்பவளும், அரக்கர் குலத்தில் ஜனித்தவளும் ஆகிய அந்த பூதனையை, கோகுலத்தில் பார்த்த கோபஸ்திரீகள் “இவள் யார்?” என்று ஆலோசிக்கும் போதே அவள் தங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டாள் அல்லவா?
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 40 ( 6 to 10 )

பூதனா மோக்ஷம்
லலிதா பா4வ ஹ்ருதாத்மபி:
யுவதிபி: ப்ரதிரோத்4துமபாரிதா |
ஸ்தானமசௌ ப4வனாந்த நிஷேதுஷீ
ப்ரத3து3ஷீ ப4வதே கபடாத்மனே ||(40 – 6)


அந்த பூதனையின் மனோஹரமான சாத்விகபாவங்களாலும், அங்க அசைவுகளாலும் கவரப் பட்ட மனத்தை உடைய கோப ஸ்த்ரீக்களால் அவளைத் தடுக்க இயலவில்லை. அவள் வீட்டினுள் அமர்ந்து கபட ரூபியாகி தங்களுக்கு முலைப்பால் கொடுத்தாள் அல்லவா?

ஸமதி3ருஹ்ய த்வத3ங்கமஷங்கித:
தவ மத2 பா3லக லோபன ரோஷித:|
மஹதிவாம்ரபலம் குச மண்ட3லம்
ப்ரதிசுசூஷித து3ர்விஷ தூ3ஷிதம் ||(40 – 7)

உடனே தாங்கள் பல குழந்தைகளை அவள் கொன்றதால் கோபம் அடைந்தவராக, அச்சம் என்பதே அற்றவராக, அவள் மடியில் ஏறி அமர்ந்தீர்.பெரிய மாம்பழத்தைப் போன்றதும் கடும் விஷத்தால் கெடுதியுற்றதுமான ஸ்தன மண்டலத்தை அடியோடு உறிஞ்சிக் குடித்தீர் அல்லவா?

அஸுபி4ரேவ ஸமம்த4யதி த்வயி
ஸ்தனமசௌ ஸ்தநிதோபம நிஸ்வனா |
நிரபதத்3 ப4வதா3யி நிஜம் வபு :
ப்ரதிக3தா ப்ரவிஸார்ய பு4ஜாவுபௌ4 ||(40 – 8)

தாங்கள் அவள் பிராணனோடு கூடவே அவள் முலைப் பால் குடிக்கும் போது, அந்தப் பூதனை இடிக்கு ஒப்பான குரலுடன், பயத்தை உண்டு பண்ணும் தன் நிஜ உருவத்தை அடைந்து இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு கீழே விழுந்தாள் அல்லவா?

ப4யத3 கோ4ஷண பீ4ஷண விக்3ரஹா
ஸ்ரவண த3ர்ச’ன மோஹித வல்லவே |
வ்ரஜபதே3 தது3ர: ஸ்தல கே2லனம்
நனு ப4வந்த மக்3ருஹ்ணத கோ3பிகா: ||(40 – 9)

பயம் தரும் குரலைக் கேட்டும், பயங்கர சரீரத்தைக் கண்டும் மயக்கம் அடைந்தனர் கோகுலவாசிகள். அவள் மார்பில் விளையாடிக் கொண்டிருந்த தங்களை கோபிகைகள் வந்து எடுத்தார்கள் அல்லவா?

பு4வன மங்க4ள நாமபி4ரேவ தே
யுவதிபி4ர் ப3ஹுதா4 க்ருத ரக்ஷணா |
தவமயி வாதநிகேதன நாத2 மாம்
அக3த3யன் குரு தாவக சேவகம் ||(40 – 10)

ஜகத் மங்கள ரூபியாகிய குருவாயூரப்பனே! பெண்கள் தங்கள் திரு நாமங்களைக் கொண்டே தங்களுக்குப் பல விதங்களிலும் ரக்ஷை செய்தது விந்தை அல்லவா? என்னை ரோகம் அற்றவனாகச் செய்து தங்களின் சேவகனாகச் செய்திட வேண்டும்.
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 41 ( 1 to 5)

பூதனா தே3ஹ த3ஹனம்
வ்ரஜேச்’வர: சௌ’ரி வசோ நிச’ம்ய
ஸமாவ்ரஜன் நத்4வனி பீ4த சேதா: |
நிஷ்பிஷ்ட நிச்’சேஷ தரும் நிரீக்ஷ்ய
கஞ்சித் பதா3ர்த்த2ம் ச’ரணம் க3தஸ்த்வாம் ||(41 – 1)


வசுதேவர் கூறியதைக் கேட்டு நந்தகோபர் விரைந்து திரும்பி வரும்போது; வழியில் மரங்களை எல்லாம் பொடியாக்கிவிட்டு இன்னதென்று இனம் காண முடியாத ஒரு பெரிய வஸ்துவைக் கண்டார். பயந்து கொண்டு, தங்கள் ரக்ஷைக்காக பரபிரம்மா ஸ்வரூபியும் சித்பதத்தில் வசிப்பவனும் ஆகிய தங்களையே சரணமடைந்து வீட்டுக்கு அருகே வந்து தங்கள் அருகிலும் வந்தார் அல்லவா? (41-1)

நிச’ம்ய கோ3பி வசனா து3த3ந்தம்
ஸர்வேபி கோ3பா ப4ய விச்மயாந்தா4: |
தத் பாதிதம் கோர பிசா’ச தே3ஹம்
தே3ஹூர் விதூ3ரேத2 குட2ர க்ருத்தம் ||(41 – 2)

அதன் பிறகு கோப ஸ்த்ரீக்களின் வசனத்தால் நடந்த வற்றை அறிந்து கொண்ட கோபர்கள், பயத்தாலும் ஆச்சரியத்தாலும் பீடிக்கப் பட்டனர் . தாங்கள் வீழ்த்திய அந்த பயங்கரமான பூதனையின் உடலை மழுவால் வெட்டி வெகு தூரத்தில் கொண்டு சென்று எரித்தனர் அல்லவா? (41-2)

த்வத்பீத பூதஸ்தன தச்ச2ரீராத்
ஸமுச்சலன்னுச்சதரோ ஹி தூ4ம: |
சங்காமதா4தா3க3ரவ: கிமேஷ :கிம்
சந்த3னோ கௌ3ல்கு3ல வோத2வேதி || (41 – 3)


தங்களால் பானம் செய்யப் பட்டதுமே பரிசுத்தம் அடைந்த ஸ்தனங்களை உடைய அந்த பூதனையின் தேஹத்தில் இருந்து மிக உயரமாகக் கிளம்பிய புகை “இது அகிற்கட்டையின் புகையா, சந்தனந்தின் புகையா அல்லது குங்கிலியத்திலிருந்து வரும் புகையா” என்ற சந்தேஹத்தை உண்டு பண்ணிற்று அல்லவா? ( 41 – 3)

மத3ங்க ஸங்கச்ய ப2லம் ந தூ2ரே
க்ஷணேன தாவத்3 ப4வதமபி ஸ்யாத் |
இத்யுல்லபன் வல்லவதல்ல ஜேப்4ய:
ஸ்த்வம் பூதனா மாதநுதா2ஸ்ஸூக3ந்தீ4ம் || (41 – 4 )

என்னுடைய அங்க சங்கத்திற்கு (அங்கங்களின் சேர்க்கைக்கு) பலன் வெகு தூரமாகிய ஜன்மாந்தரத்தில் இல்லை. உங்களுக்கு சீக்கிரமே கிடைத்துவிடும். இதை கோப சிரேஷ்டர்களுக்குக் கூறுவதுபோல பரிசுத்தமான நாமங்கள் உடைய தாங்கள் பூதனையின் உடலைச் சுகந்தம் உடையதாகச் செய்தீர்கள் அல்லவா? ( 41 – 4)

சித்ரம் பிசா’ச்யா ந ஹத: குமார :
சித்ரம் புரைவாகதி2 சௌ’ரிணேத3ம் |
இதி ப்ரச’ம்ஸன் கில கோ3பலோகோ
ப4வந்த முகாலோக ரஸே ந்யமாங்க்ஷீத் ||(41 – 5)


பிசாசி ஆகிய பூதனையால் குழந்தை கொல்லப் படவில்லை! இது ஆச்சரியம்! வசுதேவர் இதை முதலிலேயே கூறினார். அதுவும் ஒரு ஆச்சரியம். இதைச் சொல்லிக் கொண்டே இடையர் குலத்தினர் தங்கள் திரு முகத்தைக் காணும் ஆனந்தத்தில் மூழ்கி விட்டார்கள் அல்லவா? ( 41 – 5)
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 41 (6 to 10)

பூதனா தே3ஹ த3ஹனம்
தி3னே தி3னேSத2 ப்ரதிவ்ருத்3த4 லக்ஷ்மி :
அக்ஷீண மாங்க3ல்ய ச’தோ வ்ரஜோயம் |
ப4வன்நிவாஸா த3யி வாஸுதே3வ
ப்ரமோத3 ஸாந்த்3ர : பரிதோ விரேஜே ||(41 – 6)


அதன் பிறகு வாசுதேவனே! தங்கள் அங்கு வசித்ததால் அந்த கோகுலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஓங்கி வளர்ந்த ஐஸ்வர்யத்தை உடையதாகவும், என்றும் குன்றாத மங்கள காரியங்கள் நிறைந்ததாகவும், ஆனந்தம் மேலிட்டதாகவும் இருந்தது அல்லவா? ( 41 – 6)

க்3ருஹேஷு தே கோமல ரூபஹாஸ
மித2: கதா2 ஸங்குலிதா: கமன்ய : |
வ்ருத்தேஷு க்ருத்யேஷு ப4வன் நிரீக்ஷா
ஸமாக3தா: ப்ரத்யஹமத்ய நந்த3ன் ||(41 – 7 )


கோபிகைகள் தங்கள் தங்கள் வீடுகளில் உமது அழகான உருவத்தையும், மந்தஹாசத்தையும், பற்றி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டனர். வீட்டு வேலைகள் முடிந்ததும் ஒவ்வவொரு நாளும் தங்களைக் காணவந்தனர். கண்டு மகிழ்ந்தனர். ( 41 – 7 )

அஹோ குமாரோ மயி த3த்த த்3ருஷ்டி:
ஸ்மிதம் க்ருதம் மாம் பிரதி வத்ஸகேன |
ஏஹ்யேஹி மா மித்யுபஸார்ய பாணீம்
த்வயீச’ கிம் கிம் ந க்ருதம் வதூ4பி4 : || (41 – 8 )

“ஆச்சரியம்!” “குழந்தை என்னைப் பார்த்தான்!” “குழந்தை என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான்.” “வா வா என்னிடம் வா!” என்று கைகளை நீட்டிய கோபிகள் தங்களுக்காக என்ன தான் செய்யவில்லை. (41 – 8 )

ப4வத்3 வபு ச்’பர்ச’ன கௌதுகேன
கராத் கரம் கோ3ப வதூ4 ஜனேன |
நீதஸ்த்வமாதாம்ர ஸரோஜா மாலா
வ்யாலம்பி3 லோலம்ப3 துலா மலாஸீ : ||(41 – 9)

தங்களின் திருமேனியை ஸ்பரிசிக்கும் குதூஹலத்தில் கோப ஸ்த்ரீக்களின் கையிலிருந்து கைக்கு மாறிய தாங்கள் சிவந்த தாமரைப் புஷ்ப மாலையில் உள்ள ஒரு கரிய வண்டினைப் போன்று காட்சி தந்தீர் அல்லவா ? (41 – 9)

நிபாயயந்தீ ஸ்தனமங்கக3ம் த்வாம்
விலோகயந்தீ வத3னம் ஹஸந்தீ |
தசா’ம் யசோ’தா3 கதமான்ன பே4ஜே ஸ
தாத்3ருஷ : பாஹி ஹரே க3தான் மாம் ||(41 – 10)

மடியில் அமர்த்திக் கொண்டும், ஸ்தனங்களைப் பருகச் செய்தும், தங்களின் திரு முகத்தைக் கண்டு சிரிக்கின்ற யசோதை எத்தகைய உத்தம நிலையை அடைந்தாள். ஹே கிருஷ்ணா! என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்று! ( 41-10)
 
VINAAYAKA PURAANAM 1.

23f. அறுகம்புல்

பெயருக்கு ஏற்றபடி தொழில் செய்தான்
வயிற்றில் விழுந்த கொடிய அனலாசுரன்!

வெப்பத்தைப் பெருக்கினான் உதரத்தில்.
வெப்பம் தகித்தது அண்ட சராசரங்களை!

விஷ்ணு, பிரமன், இந்திரன், தேவர்கள்
விதவிதமான உபாயங்கள் செய்தனர்.

வியர்த்தமாகின அத்தனை முயற்சிகளும்;
விநாயகரின் வெப்பம் தணியவே இல்லை!

கொட்டினர் பன்னீரைக் குடம் குடமாக!
கெட்டிச் சந்தனத்தை பூசினர் உடலில்.

தெளித்தனர் அமுதத்தைத் திருமேனியில்.
குளிர்ந்த நீரைக் கொணர்ந்து சொரிந்தனர்.

தாமரை மலர்களால் ஒற்றி எடுத்தனர்.
தாமரைக் கண்ணனின் படுக்கையாகிய

ஆதிசேஷனும் முயன்று தோற்றான் – தன்
அதீதக் குளிர்ச்சியால் வெப்பத்தை நீக்கிட.

வந்தனர் எண்பத்து எட்டாயிரம் முனிவர்;
தந்தனர் தலா இருபத்தொரு அறுகினை!

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
உலவிய வெப்பம் சென்றது எங்கோ!


“எழ்மையிலும் இருக்கலாம் சிறப்பு!” என
வேழமுகன் அறிவுறுத்தினான் உலகுக்கு!

“அறுகம் புல் நீக்கியது ஆறாத வெப்பத்தை!
அறுகம் புல் இல்லாத பூஜை இனி வேண்டாம்!

மலர்களிலும் உயரியது அறுகம் புல் ஆகும்;
பலநூறு வேண்டாம்! இருபத்தொன்று போதும்.”

தேவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
யாவரும் சேர்ந்து ஓர் ஆலயம் எழுப்பினர்.

பாலச்சந்திர விநாயகனை அமைத்தனர்;
பல ஆராதனைகள் செய்து மகிழ்ந்தனர்.

அறுகம் புல்லெனக் கருத வேண்டாம் நீ !
அறிவாய் இறைவனுக்கு உகந்தததுவே !”

ஆசிரியைக்குக் கூறினார் கௌண்டின்யர்
ஆனைமுகனின் மற்றோரு விருத்தாந்ததை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
VINAAYAKA PURAANAM 1.

23f. The cool grass

Analaasuran justified his name as he fell into Vinayaka’s stomach. He made the stomach very hot. The heat afflicted all the worlds in the universe.

Vishnu, Brahma, Indra and the Deva tried many methods to reduce the heat. But none of them had any effect on the intense body heat of Lord Vinayaka.

Rose water was poured on Vinayaka from kalasams. Thick sandal paste was smeared all over the body. The cool life giving nectar was sprinkled on his body. Cool water brought from the ponds was poured on him.

Lotus flowers were applied to his body. The cold blooded Aadhiseshan tried his best to cool the body with his chillness. He too failed miserably. Just them when every effort failed to bear fruit, eighty eight thousand rushis came there. Each of them did archana with twenty one tiny branches of fresh, cool, green grass.

It was like a miracle when the intense body heat got cooled by the cool grass. Vinayaka proved to the world that even little things can have their own greatness and they may serve great purposes.

He said,”The intense heat was cooled by the fresh green grass. There will be no more puja for me without the green grass. I prefer the grass to the thousands of fragrant and colorful flowers. Just twenty one arcs are enough for me.”

The Deva were happy since all ended well. They built a temple for Vinayaka and did prathishtaa of Balachandra Vinayaka. They did aaraadhana to their satisfaction.

Sage Koundinya told his wife Aasiriyai “Do not think low of the green grass any more. Lord Vinayaka loves the grass more than the flowers!” He then told her another incident to prove the greatness of the grass.
 
23.jpg


Kanda Puraanam - Asura Kaandam

ஊரி லான்குணங் குறியிலான் செயல்இலான் உரைக்கும்
பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுள்ளே நின்றான்.
 
1a. மாயையின் தோற்றம்.

அவுணர்களின் அரசன் அசுரேந்திரன்;
அவன் மனைவி அரக்கி மங்கலகேசி;


சுரசை தோன்றினாள்அவர்கள் மகளாக;
சுக்கிரரிடம் கற்றுத் தேர்ந்தாள் மாயைகளை!

திறமையை வளர்த்துக் கொண்ட சுரசைக்கு
குரு மறுபெயர் இட்டார் “மாயை” என்று.

“திருமால் அழித்து விட்டார் அவுணர்களை!
திறல் அழிந்து போய் விட்டான் உன் தந்தை.

அவுணர்கள் மேன்மைகள் அடைய வேண்டும்
அவர்களுக்கு மேன்மைகள் நீ தரவேண்டும்.

திருமகள் அனையத் திருக்கோலம் பூண்வாய்!
வருந்தித் தவம் செய்யும் காச்யபரிடம் செல்வாய்!

காம நோயைப் பெருக்கி அவருன் கூடி
கணக்கற்ற மகன்களைத் தோற்றுவிப்பாய்.

நம் குலத்திற்கே மேன்மை செய்வார்கள்
உன் குலக் கொழுந்தாகிய அவுணர்கள்.”

தந்தை, தாயிடம் விடை பெற்றாள் சுரசை.
சொந்தத் திறமைகளைக் காட்டலானாள்.

முனிவரின் இடத்தை அடைந்தவுடன்
கணக்கற்ற தடாகங்கள், பூம்பொழில்கள்,

அழகிய மண்டபங்கள், அவற்றினுள்ளே
அம்ச தூளிகா மஞ்சங்கள் தோற்றுவித்தாள்.

புதுமைகளைக் கண்டு திகைத்த முனிவர்,
தமது பணியான தவத்தை முதலிட்டார்.

மணிக் குன்றின் மீது கண்டார் முனிவர்,
தனிப் பெரும் அழகுடன் திகழ்பவளை,

தையலைக் கண்டதும் அறிவு விடைபெற,
மையல் மேலிட்டு வாட்டி வதைத்தது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
KANDAPURAANAM - Asura Kaandam


2 (# 1 A). THE BIRTH OF MAYA.

Asurendran was the king of asuras. Mangala kesi was his wife. They begot a daughter whom they named as Surasai.

She learned all the tricks of asuras under the guidance of Sukraachaaryaa. He was duly impressed by her skill and renamed her as Maayai.

Guru spoke to Maayai,”Vishnu has killed all the asuras. Your father has become old and infirm. Now it is you responsiblility to make the asuras regain their past glory. Transform yourself into a pretty maiden and produce numerous sons sired by sage Kaasyapa .”

Maayai agreed to so. She took leave of her parents and showed her training, talent and latent skills.

She reached the place where Kaasyapa rushi lived and created several ponds and flower gardens there. She created several mandapams and each of them contained a swan feather bed.

The sage was surprised to see these new creations but went to do penance as usual.Then he saw the pretty damsel standing on mountain of gems and fell madly in love with her. His only desire now was to possess her.
 
DEVI BHAAGAVATAM - Skanda 3

3#27e. ஸ்ரீ ராம சரிதம் (5)

சென்றான் லக்ஷ்மணன் ராமனைத் தேடி,
நின்றான் சந்நியாசி வந்து சீதையை நாடி.

கருதினாள் உண்மை சந்நியாசி என்று சீதை,
கந்த மூல பழங்கள் தந்து உபசரித்தாள் பேதை.

“யார் நீ? உன் தந்தை யார்? உன் கணவன் யார்?
யாருமில்லாத தனி வனத்தில் இருப்பது ஏன்?”

“ஜனகராஜனின் மகள், தசரதனின் மருமகள்,
வனவாசம் வந்துள்ள ராமனின் பத்தினி சீதை.

சிற்றன்னை நிபந்தனையால் வந்துள்ளோம்;
பெற்றுள்ளான் ராமன் பெரும் தோள் வலிமை!

அச்சமில்லை ராமனுடன் இருக்கையில் எனக்கு;
இச்சகத்தில் ராமனுக்கு ஈடு இணை இல்லை!”

“மண்ணாளும் மன்னன் இலங்கேஸ்வரன்,
மண்டோதரியின் கணவன் ராவணன் நான்!

அடிமை ஆகிவிட்டேன் உன் அழகுக்கு;
உடமையாக வேண்டும் இனி நீ எனக்கு.

என்ன உள்ளது வனவாசி ராமனிடம்?
என்ன இல்லை லங்காதிபதி என்னிடம்?

அழகிய நங்காய் நீ இருக்க வேண்டும்
பழகிய என் மாளிகை அந்தப்புரத்தில்.

பத்து திக்குகளையும் வென்றவன் நான் – உன்
பாதங்களில் வீழ்கின்றேன் காதல் பிச்சை தா!

தரித்திரன் ராமனைத் துறந்து வந்து விடு;
இருக்கலாம் என் ராணியாக இன்பத்தோடு.”

காம மிகுதியில் பேசினான் ராவணன்;
“ராமன் வருவானா?”ஏங்கினாள் சீதை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 42 (1 to 5 )

ச’கட அஸுர நிக்3ரஹம்
கதா3பி ஜன்மதி3னே தவ ப்ரபோ4
நிமந்த்ரித ஞாதி வதூ4 மஹீ ஸுரா |
மஹனஸஸ்த்வாம் ஸவிதே4 நிதா4ய ஸா
மஹானஸாதௌ3 வவ்ருதே வ்ரஜேச்’வரி ||(42 – 1)


பிரபுவே!ஒருமுறை தங்களுடைய பிறந்தநாள் அன்று கோகுல நாயகியாகிய அந்த யசோதை பந்துக்களையும், பெண்களையும், அந்தணர்களையும் வீட்டுக்கு அழைத்தாள். ஒரு பெரிய வண்டியின் பக்கத்தில் தங்களைப் படுக்க வைத்துவிட்டு அடுக்களையில் வேலை செய்து கொண்டு இருந்தாள். ( 42 – 1)

ததோ ப4வத் த்ராண நியுக்த பாலக
ப்ரபீ4தி ஸம்க்ரந்த3ன சங்குலாரவை :|
விமிச்’ர மச்’ராவி ப4வத் சமீப :
பரிஸ்புடத்3தா3ரு சடச்சடாரவ:||(42 – 2)

அப்போது சட சட என்ற மரம் உடையும் பெரும் சப்தம் கேட்டது. தங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட கோகுலச் சிறுவர்களின் பயந்த குரல் எழுப்பிய ஆரவாரமும் உடன் கேட்டது. (42 – 2)

ததஸ்ததா3 கர்ணன ஸம்ப்3ரம ச்’ரம
ப்ரகம்பி வக்ஷோஜப4ரா வ்ரஜாங்க3னா:|
ப4வந்த மந்தர் த3த்3ருஷுஸ் ஸமந்ததோ
விநிஷ்பதத் தா3ருண தா3ருமத்3யக3ம்||(42 – 3)

அப்போது அந்த ஆரவாரத்தைக் கேட்டு பரபரப்புடன் ஓடி வந்ததால் உண்டான சிரமத்தால் அசைகின்ற ஸ்தனங்களை உடைய கோபஸ்திரீகள் நான்கு புறங்களிலும் பயங்கரமாக வீழ்ந்திருக்கும் மரங்களையும் அவற்றின் நடுவில் இருக்கும் தங்களையும் கண்டனர். (42 – 3)

சி’சோ’ரஹோ கிம் கிமபூ4தி3தி த்3ருதம்
ப்ரதா4வ்ய நந்த3: பசு’பாச்’ச பூ4ஸுரா: |
ப4வமந்த மலோக்ய யசோ’தா3 க்4ருதம்
ஸமாச்’வஸன்னச்’ரு ஜலார்த்ர லோசனா:||(42 – 4)


“கஷ்டம்! குழந்தைக்கு என்ன நேர்ந்தது? என்ன நடந்தது?” என்று கேட்டுக் கொண்டே நந்தகோபனும், இடையர்களும், அந்தணர்களும் கண்ணும் கண்ணீருமாக ஓடிவந்து, யசோதையின் கைகளில் தங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்தனர். (42 – 4)

கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ
விச’ங்கடம் யச்சகடம் விபாடிதம் |
ந காரணம் கிஞ்சிதி3ஹேதி தே ஸ்தி2தா:
ஸ்வநாஸிகாத3த்த கராஸ்த்வ தீ3க்ஷகா:||(42 – 5)


“இது என்ன? இது என்ன? எங்கிருந்து உண்டானது? விசாலமான வண்டி உடைந்தது மிகவும் ஆச்சரியமே! இதற்கு இந்த இடத்தில ஒரு காரணமும் இல்லை!” என்று கூறி அவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து அதிசயித்துத் தங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அல்லவா?
( 42 – 5 )
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 42 (6 to 11 )

ச’கட அஸுர நிக்3ரஹம்

குமாரகஸ்யாஸ்ய பயோத4ரார்தி2ன:
ப்ரரோத3னே லோல பதாம்புஜாஹதம் |
மயா மயா த்3ருஷ்ட மனோ விபர்யகா3த்
இதீச’ தே பாலக பா3லகா ஜகு3: ||(42 – 6)

“பால் குடிக்க விரும்பிய இந்தக் குழந்தை அழுதது. அழும் போது அசைகின்ற தாமரை போன்ற காலினால் உதைக்கப்பட்ட வண்டி தலை கீழாக விழுந்ததை நான் பார்த்தேன்; நான் பார்த்தேன்!” என்று தங்களுக்குக் காவலாக இருந்த குழந்தைகள் சொன்னார்கள் அல்லவா? (42 – 6)

பி4யா ததா3 கிஞ்சித3ஜானதாமித3ம்
குமார காணா மதி து3ர்க4டம் வச: |
ப4வத் ப்ரபா4வா விது3ரை ரிதீரிதம்
மனாகி3வாச’ங்க்யத த்3ருஷ்ட பூதனை : ||(42 – 7)

அப்போது பயத்தினால் கூறும் இந்தச் சிறிய குழந்தைகளின் சொற்கள் பொருத்தம் அற்றவை என்றே எல்லோரும் எண்ணினார்கள். அவர்கள் தங்களின் மகிமையை அறியாதவர்கள். ஆனால் பூதனையின் கதியைக் கண்டிருந்த நந்தகோபன் முதலானவர்கள் சிறிது சந்தேகம் அடைந்தார்கள் அல்லவா?( 42 -7)

ப்ரவால தாம்ரம் கிமித3ம் பத3ம் க்ஷதம்
ஸரோஜ ரம்யௌ நு கரௌ விரேஜிதௌ |
இதி ப்ரஸர்பத் கருணா தரங்கி3தா:
த்வத3ங்க3 மாபச்’ப்ருஷுரங்க3னா ஜனா:||(42 – 8)


“பவழம் போன்று சிவந்த இந்தக் கால்கள் அடிபட்டனவா? தாமரை போல் இருக்கும் இரு கைகளும் புண்பட்டனவா?” என்று கருணை வெள்ளம் பெருகிய கோப ஸ்திரீகள் தங்கள் திருமேனியைத் தொட்டுத் தொட்டுத் தடவினார்கள் அல்லவா? ( 42 – 8 )

அயி ஸுதம் தே3ஹி ஜக3த்பதே: க்ருபா
தரங்க3 பாதாத்பரிபாதமத்3யமே |
இதி ஸ்ம ஸம்க்3ருஹ்ய பிதா த்வத3ங்க3கம்
முஹூர் முஹு :ச்’ளிஷ்யதி ஜாத கண்டக : ||( 42 – 9 )

ஏ கோபியே! ஜகதீசனுடைய கிருபா கடாக்ஷத்தால் ரக்ஷிக்கப்பட்ட என் குழந்தையை என்னிடம் கொடு.” தங்கள் தந்தை தங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ரோமாஞ்சனம் அடைந்து தங்களுடைய சிறிய சரீரத்தை அடிக்கடி ஆலிங்கனம் செய்துகொண்டார் அல்லவா? (42 – 9)

அனோநிலீன: கில ஹந்து மாக3த:
ஸுராரிரேவம் ப4வதா விஹிம்ஸித: |
ரஜோபி நோ த்3ருஷ்டமமுஷ்ய தத்கத2ம்
ஸ சு’த்த ஸத்வே த்வயி லீனவான் த்4ருவம் || (42 – 10)

வண்டியில் ஒளிந்து கொண்டு தங்களைக் கொல்ல வந்த அசுரன் தங்கல்ல இந்த விதத்தில் கொல்லப் பட்டான் அல்லவா? அந்த அசுரனின் பொடி கூட காணப் படவில்லை. (அந்த அசுரனின் ரஜோ குணம் காணப் படவில்லை). நிச்சயமாக அந்த அசுரன் சுத்த சத்துவ ஸ்வரூபியாகிய தங்களிடம் லயித்துவிட்டான். ( 42 – 10)

ப்ரபூஜிதைஸ்தத்ர ததோ த்3விஜாதி3பி4 :
விசே’ஷதோ லம்பி4த மங்க3லாசி’ஷா:|
வ்ரஜன் நிஜைர் பா3ல்யரசை விமோஹயன்
மருத்புராதீ4ச’ ருஜாம் ஜஹீஹி மே ||(42 – 11)

குருவாயூரப்பா! அதன்பின் அங்கு பிராமணர்கள் நன்கு பூஜிக்கப்பட்டார்கள். தங்களை அவர்கள் விசே ஷமாக மங்கள ஆசீர்வாதம் செய்தார்கள். தங்களுடைய பால்ய சேஷ்டைகளால் கோகுலத்தைக் குதூகலிக்கச் செய்த தாங்களே என் ரோகத்தைப் போக்கி அருள வேண்டும். ( 42 – 11)
 
த3ச’கம் 43 (1 to 5)

த்ருணாவர்த்த வத4ம்

த்வாமேகதா3 கு3ருமருத் புரநாத2 வோடு4ம்
கா3டா3திரூட4 க3ரிமாண மபாரயந்தி |
மாதா நிதா4ய ச’யனே கிமித3ம் ப 3தேதி
த்4யாயந்த்ய சேஷ்ட க்3ருஹேஷு நிவிஷ்ட ச’ங்கா ||(43 – 1)


குருவாயூரப்பா! கரிமா என்ற யோகா சித்தியை ஒரு நாள் நீங்கள் ஏற்று மிகவும் கனமாகிவிட்டீர்கள். தாய் யசோதை உங்கள் கனத்தைத் தாங்கமுடியாமல் கீழே இறக்கிப் படுக்கையில் விட்டு விட்டு தங்களை எண்ணிக் கவலை கொண்டவளாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அல்லவா? ( 43 – 1)

தாவத்3 விதூ3ரம் உபகர்ணித கோ4ர கோ4ஷ
வ்யாஜ்ரும்பி4 பாம்ஸுபடலி பரி பூரிதாச':|
வாத்யாவபு: ஸ கில தை3த்யவரஸ்த்ருணாவ
தார்க்2யோ ஜஹாரா ஜனமானஸ ஹாரிணீம் த்வாம் ||(43 – 2)

அப்போது வெகு தூரத்தில் பயங்கர சப்தத்துடன், உயரக் கிளம்பிய தூளிப் படலத்தால் திக்குகளை மறைத்துக் கொண்டு, சுழல் காற்றின் வடிவம் கொண்ட திருணாவர்த்தன் என்னும் பெயருடய அசுரன் ஜனங்களின் மனத்தைக் கவரும் தங்களை கவர்ந்து சென்று விட்டான் அல்லவா? (43 – 2)
உத்3தா3ம பாம்ஸு திமிராஹத த்3ருஷ்டிபாதே
த்3ரஷ்டும் கிமப்ய குச’லே பசு’பால லோகே |
ஹா பா3லகஸ்ய கிமிதி த்வது3பாந்த மாப்தா
மாதா ப3வந்தமவிலோக்ய ப்4ருச’ம் ருரோத3 ||(43 – 3 )


எல்லையற்ற புழுதிப் படலத்தால் கண்கள் மறைக்கப்பட்ட இடையர்கள், ஒன்றையும் காண முடியாமல் இருந்த போது, உங்களைக் காணாத யசோதை, “ஐயோ என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது ?” என்று கதறி உரக்கக் அழுதாள் அல்லவா? (43 – 3)

தாவத்ஸ வரோபி ச தீ3ன மூர்த்தி :
பா4வத்க பா4ர பரிதா4ரண லூன வேக3 : |
ஸங்கோச மாப தத3னு க்ஷத பாம்ஸு கோ4ஷே
கோ4ஷே வ்தாயாத ப4வஜ்ஜனனி நிநாத3 : ||(43 – 4)

அப்போது அந்த வலிய அசுரனும் உங்கள் பாரத்தைச் சுமக்க முடியாமல் வேகம் குன்றினான். பிறகு அசைவற்று நின்றுவிட்டான். அதன் பின் புழுதியும், சப்தமும் அடங்கிய கோகுலத்தில் தங்கள் தாயின் அழுகுரல் ஓசை பெருகியது அல்லவா? ( 43 – 4)

ரோதோ3ப கர்ணன வசா’து3பக3ம்ய கே3ஹம்
க்ரந்த3ஸ்து நந்த3முக கோ3ப குலேஷு தீ3ன : |
த்வாம் தா3னவஸ்த்வகி2ல முக்திகரம் முமுக்ஷு :
த்வய்ய ப்ரமுஞ்சதி பாபாத வியத் ப்ரதே3சா’த் ||(43 – 5 )


அழுகுரல் ஓசையைக் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்த நந்தன் முதலிய கோபர்களும் அழுது கொண்டு இருக்கும் போது, அந்த அசுரன் மிகவும் சோர்வடைந்து, எல்லோருக்கும் முக்தி அளிக்கும் தங்களை விட்டு விட விரும்பினான். ஆனால் தாங்கள் அவனை விடாததால் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்தான் அல்லவா?( 43 – 5)
 
த3ச’கம் 43 ( 6 to 10)

த்ருணாவர்த்த வத4ம்

ரோதா3குலஸ் தத3னு கோ3ப க3ணா ப3ஹிஷ்ட
பாஷாண ப்ருஷ்ட பு4வி தேஹமதி ஸ்த4விஷ்டம் |
ப்ரக்ஷைந்த ஹந்த நிபதந்த மமுஷ்ய வக்ஷஸி
அக்ஷிண மேவ ச ப4வந்தமலம் ஹஸந்தம் ||( 43 – 6 )


அதற்குப் பிறகு அழுது கொண்டு இருந்த இடையர்கள் வெளியில் பாறை மேல் விழுந்த மிகப் பெரிய சரீரத்தையும், அதன் மார்பில் சிறிதும் களைப்படையாமல் நன்றாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் தங்களைக் கண்டு அதிசயத்தில் மூழ்கினார்கள் அல்லவா?(43 – 6)

க்3ராவ ப்ரபாத பரிபிஷ்ட க3ரிஷ்ட தே3ஹே
ப்4ரஷ்டாசு து3ஷ்ட த3னுஜோபரி த்4ருஷ்ட ஹாஸம் |
ஆக்4னான மம்பு3ஜ கரேண ப4வந்த மேத்ய
கோ3பா த3து4ர்கி3ரிவரா திவ நீலரத்னம் ||(43 – 7)


பாறையின் மேல் விழுந்ததால் சிதைந்த பெருத்த சரீரத்திலிருந்து பிராணன் பிரிந்து போன துஷ்ட அசுரன் மேல் தாமரை போன்ற கையால் அடித்துக் கொண்டும், உரக்கச் சிரித்துக் கொண்டும் இருந்த தங்களை கோபர்களும், கோபிகைகளும் பெரிய மலையில் இருந்து ஒரு நீல நிற ரத்தினத்தை எடுப்பது போல எடுத்து வந்தார்கள் அல்லவா? (43 – 7)

ஏகைக மாசு’ பரிக்3ருஹ்ய நிகாமனந்த3
நந்தா3தி3 கோ3ப பரிரப்3த4 விசும்பி3தாங்க3ம் |
ஆதா3து காம பரிச’ங்கித கோ3பநாரீ
ஹஸ்தாம்பு3ஜ ப்ரபதிதம் ப்ரணுமோ ப4வந்தம் || ( 43 – 8)

மிகவும் சந்தோஷம் அடைந்த நந்தன் முதலிய கோபர்கள் ஒவ்வொருவராக சீக்கிரம் எடுத்து ஆலிங்கனம் செய்தும் முத்தமிட்டும் மகிழ்ந்தார்கள். தங்களை எடுத்துக் கொள்ள விரும்பிய கோபிகைகளின் தாமைரைப் பூ போன்ற கரங்களில் தாவி விழுந்த தங்களைத் துதிக்கின்றோம். ( 43 – 8)

பூ4யோபி கின்னு க்ருணும:ப்ரணதார்த்திஹாரீ
கோவிந்த3 ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந : |
இத்யாதி3 மாதர பித்ரு ப்ரமுகைஸ் ததா3னீம்
ஸம்ப்ரார்திதஸ் த்வத3வனாய விபோ4 த்வமேவ ||(43 – 9 )


“நாங்கள் என்ன செய்வோம்?தன்னை வணங்கிய அடியவர்களின் துயரங்களைப் போக்கும் மஹா விஷ்ணுவே ! எங்கள் குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று அப்போது தாய், தந்தை முதலிய கோபர்கள் தங்களைக் காப்பதற்கு தங்களையே பிரார்த்தித்தார்கள் அல்லவா?(43 – 9)

வாதாத்மகம் த3னுஜ மேவமயி ப்ரதூ4ன்வன்
வாதோத்3ப4வான் மம க3தா3ன் கிமி நோ து3னோஷி |
கிம்வா கரோமி புனரப்யநிலாலயேசா’
நிச்’சே’ஷ ரோக ச’மனம் முஹூரர்த2யே த்வாம் ||(43 – 10)

பகவானே! வாத ரூபியான (சுழலக் காற்று ரூபியான) அசுரனை இவ்விதம் சம்ஹாரம் செய்த தாங்கள் வாதத்தினால் உண்டான எனது ரோகங்களை ஏன் நாசம் செய்வதில்லை? என்னால் வேறு என்ன தான் செய்ய முடியும்? ஹே குருவயூரப்பா! மீண்டும் மீண்டும் நான் மிச்சமில்லாத ரோக நிவாரணத்தையேத் தங்களிடம் வேண்டுகிறேன். ( 43 – 10)
 
English Translation will appear tomorrow. I had posted the translation of the previous poem under this poem aslo in my blog by oversight!

3#27e. Sree Raama charitam

The moment Lakshman went in search of Raamaa, a sanyaasi stood before Seetaa. She thought he was a real sanyaasi and welcomed him by giving the fruits and roots to eat.

He asked her, "Who are you? Who is your father? Who is your husband? Why are you here all alone in this dense forest?"

Seetaa replied," I am the daughter of King Janaka. I am the daughter in law of King Dasaratha. I am the wife of Raamaa who is in vanavaasam now. We had to come here as commanded by his step mother. Raamaa is valorous and strong. There is no one who is a match for him. I do not fear the forest when he is with me"

"I am Raavan the king of Lanka. I am the husband of Queen Mandothari. I have become a slave to your beauty. I want you to become mine. What does that Raamaa possess living in this forest? What is that I do not have as king of Lanka?

Oh pretty damsel! Your rightful place is the harem in my palace. I have conquerd all the ten directions. I lie at your feet begging for your love. Forsake the good for nothing Raamaa and become my queen to live happily hereafter"

Raavan was steeped in lust and Seetaa wished the Raama should return soon.
 
VINAAYAKA PURAANAM 1.


24a. அத்வைதம்

அரசன் ஜனகன் அத்வைத ஞானி;
ஆண்டவன் வேறு அடியவன் வேறு

என்று கருதவில்லை ஜனகராஜன்.
ஒன்றே எல்லோரும் என்றான்!

பெரியோரைப் பூஜிப்பது இல்லை;
உரிய மரியாதை தருவது இல்லை;

“நானும் பகவான், நீயும் பகவான்,
எதற்கு தரவேண்டும் மரியாதை?”

“அண்டி யாசிப்பவருக்கு வள்ளல் நீ!
வேண்டியதை வழங்குகின்றாய் நீ!

செல்வம் பெருகட்டும் மேன்மேலும்;
இல்லாமை இல்லாது போகட்டும்.”

வாழ்த்தினார் ஜனகனை நாரதர்.
வாழ்த்து மொழி கேட்டு வியந்தான்.

“கொடுப்பவனும் ஈசனே மற்றும்
பெறுபவனும் அந்த ஈசனே!” என்றான்.

“பகவான் வேறு பக்தன் வேறு என்னாது
ஏகத்வம் பற்றிப் பேசுகிறாய் மன்னா!

இறைவன் வேறு, பக்தன் வேறு என
நிரூபிக்கின்றேன் ஐயம் திரிபு அற!”

கௌண்டின்ய முனியிடம் சென்றார்.
பண்ணிசைத்துப் பாடினார் விநாயகனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top