A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#1a. ஜனமேஜயனின் ஐயங்கள்

“எல்லாம் அறிந்த வியாச முனிவரே! எனக்குச்
சொல்ல வேண்டும் சில அற்புத சரித்திரங்களை.

சிறந்த வசுதேவனையும், தேவகியையும்
சிறைப்படுத்தினான் கம்சன் எனும் கயவன்.

கொன்று தீர்த்தான் பிறந்த சிசுக்கள் அறுவரை!
சென்றாள் ஏழாவது குழந்தை வானில் பறந்து!

அஷ்ட புஜங்களுடன் ஒரு தெய்வீகக் கன்னியாகி
இஷ்ட தெய்வமாகிக் குடியேறினாள் கோவிலில்.

எட்டாவதாகப் பிறந்தவர் ஸ்ரீமன் மகாவிஷ்ணு;
விட்டுப் பிரிந்தார் தாயைப் பிறந்தவுடனேயே!

யாதவ குலத்தில் வளர்ந்தார் கண்ணனாக;
மாதவனாகப் புரிந்தான் லீலைகள் அநேகம்.

கர்ப்ப வாசம் செய்யும் அவல நிலை எப்படி
அற்பனைப் போல ஏற்பட்டது கண்ணனுக்கு?

தர்ம தேவதையின் இரு புத்திரர்கள் இவர்கள்;
தர்மத்தைக் காக்கும் விஷ்ணுவின் அம்சங்கள்.

நர, நாராயணர் என்னும் அற்புதத் தபஸ்விகள்;
பிறந்தனர் பார்த்தன், கிருஷ்ணனாக அடுத்து.

தன் குலஆசாரம் தவறாமல் வாழ்பவர்
தன் குலத்திலும் உயர்ந்ததில் ஜனிப்பர்.

பிராமணர்கள் ஆகிய நர, நாராயணர்கள்
பிறந்தது ஏன் க்ஷத்ரிய குலத்தில் சென்று?

யாதவ குலம் ஏன் நசித்தது சாபத்தால்?
மாதவன் ஏன் மாண்டான் சாபத்தால்?

கண்ணன் மீண்டும் வைகுண்டம் சென்றதும்
கண்ணன் மனைவியர் துயருற்றதும் ஏன்?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#1a. Janamejayan’s doubts

King Janamejayan asked Sage Vyaasaa, ” Please tell me these wonderful stories! Wicked Kamsan imprisoned Vasudevan and his wife Devaki.

He killed their six sons as soon as they were born. The seventh child was a girl. She flew up into the sky when Kamsan tried to kill her. She became a goddess with eight arms and now resides in the temples.


Mahaa Vishnu was born as their eighth child. He got separated from his mother as soon as he was born. He grew up in Gokulam and performed many miracles. Why did Vishnu have to dwell in the womb of a women like a normal human being?

Nara and Naaraayan were the amasam of Vishnu. They became Arjun and Krishna in thier next birth. Those who live faultless lives are usually born in a better race in their next birth. How and why did these brahmins Nara and Naaraayan have to be born in Kshatria race?

Why did the Yaadava race perish due to a curse? Why did Krishna have to return to Vaikuntam? Why were the wives of Krishna troubled by the band of thieves?”
 
SREEMAN NAARAAYANEEYAM


த3ச’கம் 52 ( 1 to 5)

ப்3ரஹ்ம க3ர்வ ச’மனம்

அன்யாவதார நிகரேஷ்வ நிரக்ஷிதம் தே
பூ4மாதிரேக மபி4வீக்ஷ்ய ததாsக4மோக்ஷே |
ப்3ரஹ்மா பரக்ஷிதுமனா : ஸ பரோக்ஷ பா4வம்
நின்யேத2 வத்ஸக க3ணான் ப்ரவிதத்ய மாயாம் ||( 52 – 1)

மற்ற அவதாரங்களில் காணாத தங்களின் ஐஸ்வரியத்தின் மேன்மையை அகாசுர வதத்தில் கண்கூடாகக் கண்ட பிரமன் அதை மறுபடியும் சோதிக்க விரும்பினார். தம் மாயையினால் கன்றுக் கூட்டங்களைக் கண்களுக்குப் புலப்படாத வண்ணம் மறைத்து விட்டார்.( 52 – 1)

வத்ஸானவீக்ஷ்ய விவசே’ பசு’போத்கரேதான்
ஆனேது காம இவ தா4த்ரு மதானுவர்தீ |
த்வம் ஸாமிபு3க்த கவளோ க3தவாம்ஸ்ததா3நீம்
முக்தாம் ஸ்திரோதி4த ஸரோஜ ப4வ குமாரான் ||( 52 – 2)


கன்றுகளைக் காணாமல் கோப பாலர்கள் கலங்கியபோது, அவற்றை மீட்டுக் கொண்டு வரவிரும்பியவர் போலத் தாங்கள் பாதி உண்ட அன்னக் கவளத்துடனேயே விலகிச் சென்றீர்கள். பிரமனின் உள்ளக் கருத்தைத் தாங்கள் அறிந்திருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அப்போது பிரமன் பாதி உண்டு கொண்டிருந்த கோபச் சிறுவர்களையும் தம் மாயையினால் முற்றிலுமாக மறைத்துவிட்டார் அல்லவா? ( 52 – 2)

வத்ஸாயிதஸ் தத3னு கோ3ப க3ணாயிதஸ்த்வம்
சி’க்யாதி3 பா4ண்ட3 முரளீ க3வலாதி3ரூப:|
ப்ராக்3வத்3விஹ்ருத்ய விபினேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயாSத ப3ஹுதா4 வ்ரஜ மாயயாத2 ||( 52 – 3 )

அதன் பிறகு தாங்கள் தங்கள் மாயையினால் அத்தனை கன்றுகளாகவும், அத்தனை கோப பாலர்களாகவும், அவர்களின் உரிகளாகவும், அதில் உள்ள பாத்திரங்களாகவும், மற்றும் அவர்களின் கொம்பு வாத்தியங்களாகவும், அவர்களின் புல்லாங்குழல்களாகவும், உருவெடுத்தீர்கள். வழக்கம் போலக் காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்குக் கூட்டத்துடன் திரும்பினீர்கள். ( 52 – 3)

தாமேவ சிகா கவலாதிமயம் ததானோ
பூயச்தமேவ பசு வத்சக பாலரூப:|
கோ3ரூபிணீபி4 ரபி கோ3பவதூ4மயீபி:
அஸாதி3தோSஸி ஜனனீபி4 ரதிப்ரஹர்ஷாத் ||( 52 – 4)


கன்றுகளாகவும், சிறுவர்களாகவும், மற்ற பொருட்களாகவும் உரு மாறி இருந்த தங்களளைக் கண்டு அன்று அத்தனை தாய்மார்களும் அதிக ஆனந்தம் அடைந்தனர் அல்லவா?( 52 – 4)

ஜீவம் ஹி கிஞ்சித3பி4மான வசா’த் ஸ்வகீயம்
மத்வா தனூஜ இதி ராக3ப4ரம் வ்ஹந்த்ய:|
ஆத்மான மேவது ப4வந்த மவாப்ய ஸூனும்
ப்ரீதிம் யயுர்ன கியதீம் வனிதாச்’ச கா3வ: ||(52 – 5)

யாரென்று தெரியாத ஒரு ஜீவனை பிள்ளை என்ற அபிமானம் காரணமாகத் தன்னைச் சார்ந்தவன் என்று எண்ணி அதிக வாத்சல்யம் கொள்கிறான் மனிதன். ஆத்மாவகவே உள்ள தங்களை மகனாகவும், கன்றாகவும் பெற்ற கோபிகைகளும், ஆவினங்களும் அன்று எத்தனை மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்! ( 52 – 5)
 
த3ச’கம் 52 ( 6 to 10)

ஏவம் ப்ரதி க்ஷண விஜ்ரும்பி4த ஹர்ஷா பா4ர
நிச்’சே’ஷா கோ3ப க3ணான் லாலித பூ4ரி மூர்த்திம்|
த்வா மக்3ரஜோபி பு3பு3தே கில வத்ஸராந்தே
ப்ரஹ்மாதமனோரபி மஹான் யுவயோர் விசே’ஷ: ||( 52 – 6)


வினாடிக்கு வினாடி வளர்ந்து வரும் அன்பின் பெருக்கால் திக்கு முக்காடிய கோபிகைகள் தங்கள் மகன்கள் என்றே கருதித் தங்களின் பல வேறு உருவங்களையும் சீராட்டிப் பாராட்டினார்கள். இந்த ரகசியத்தைத் தங்கள் தமையன் பலராமன் ஒரு வருடம் கடந்த பின்னரேஅறிந்துகொண்டார் அல்லவா? பர பிரம்மத்தின் ஸ்வரூபங்களாக நீங்கள் இருவரும் இருந்த போதிலும் உங்கள் இருவரிடையே மகத்தானபேதங்கள் உண்டு.( 52 – 6)

வர்ஷாவதௌ3 நவ புராதன வத்ஸ பாலான்
த்3ருஷ்ட்வா விவேக மஸ்ருணே த்3ருஹிணே விமூடே4 |
ப்ராதீ3த்3ருஷ: ப்ரதி நவான் முகுடாங்க3கதா3தி3
பூ4ஷாச்’சதுர் பு4ஜ யுஜஸ்ஸஜலாம்புதா3பா4ன் ||(52 – 7)

வருடத்தின் முடிவில் பிரமன் கண்டது பழைய கோப பாலர்களுடனும், கன்றுகளுடனும், அவர்களைப் போன்ற புதிய கோப பாலகர்களும், கன்றுகளும். இனம் பிரித்து அறியமுடியாமல் மயங்கிய பிரமனுக்குத் தாங்கள் புதிய கோபர்கள், புதிய கன்றுகள் ஒவ்வொருவரையும் நீலநிறம் கொண்டவராகத் தோள்வளை கிரீடம் அணிந்தவராக, நான்கு கரங்கள் உடையவராகக் காட்டினீர்கள் அல்லவா?( 52 – 7)

ப்ரத்யேகமேவ கமலா பரிலாலிதாங்கா3ன்
போ4கீ4ந்த்ர போ4க3 ச’யனான் நயனபி4ராமான் |
லீலா நிமீலித த்3ருஷஸ் ஸனகாதி3 யோகி3
வ்யாஸேவிதான் கமலபூ4ர் ப4வதோ த3த3ர்ஷ ||(52 – 8)

ஒவ்வொருவரும் லக்ஷ்மி தேவியால் சீராட்டப்பட்டவராக, சர்ப்ப ராஜன் ஆதிசேடனின் உடலில் படுத்து இருப்பவராக, கண்களுக்கு ஆனந்தம் அளிப்பவராக, யோகநித்திரை செய்பவராக, யோகிகளால் சேவிக்கப்படுகிறவராக பிரமன் கண்டார்.( 52 – 8)

நாராயணாக்ருதி மஸங்க்யதாமான் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வ்மவேக்ஷ்ய தா4தா |
மாயா நிமக்3ன ஹ்ருத3யோ விமுமோஹ யாவத் 3
ஏகோ ப3பூ4வித2 ததா3 கப3லார்த4பாணி: ||( 52– 9)

எண்ணமுடியாத நாராயண மூர்த்திகளை ஏக காலத்தில், எல்லா இடங்களிலும் கண்டு மாயையில் மூழ்கின் அறிவிழந்தான் பிரமன். அதே கணத்தில் பழையபடிக் கையில் பாதி உண்ட கவளத்துடன் தாங்கள் மீண்டும் காட்சி அளித்தீர்கள் அல்லவா? ( 52 – 9)

நச்’யன்மதே3 தத3னு விச்’வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூனவதி தா4தரி தா4ம யாதே |
போதைஸ்ஸமம் ப்ரமுதி3தை: ப்ரவிச’ன் நிகேதம்
வாதாலயாதி4ப விபோ4 பரிபாஹி ரோகா3த் ||( 52 – 10 )

ஹே கிருஷ்ண! கர்வம் நசித்த பிரமன், அதன் பிறகு லோகநாதனானத் தங்களை பலமுறை நமஸ்கரித்து எழுந்தான். பலவாறு துதித் துவிட்டு சத்ய லோகம் சென்றான். மிக குதூகலத்துடன் எப்போதும் போல நண்பர்களுடனும், கன்றுகளுடனும் வீடு திரும்பிய குருவாயூரப்பா! தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பற்றவேண்டும். ( 52 – 10)
 
Last edited:
த3ச’கம் 53 ( 1 to 5)

தே4னுகாஸுர வதம்
அதீத்ய பா3ல்யம் ஜக3தாம் பதே த்வம்
உபேத்ய பௌக3ண்ட3வயோ மனோக்ஞம் |
உபேத்ய வத்ஸாவன முத்ஸவேன
ப்ராவர்ததா2 கோ3க3ண பாலனாயாம் ||( 53 – 1 )


ஹே கிருஷ்ணா! ஐந்து வயது முடிந்து ஆறாவது வயதை அடைந்ததும் கன்றுக் குட்டிகளை மேய்ப்பதை விட்டு விட்டு உற்சாகத்துடன் பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள் அல்லவா? ( 53 – 1)

உபக்ரமஸ்யானு கு3ணைவ ஸேயம்
மருத் புராதீ3ச’ தவ ப்ரவ்ருத்தி : |
கோ3த்ரா பரித்ராண க்ருதேவதீர்ணஸ்
ததே3வ தே3வாSரப4தா2ஸ் ததா3 யத் ||(53 – 2)

பூமிப் பசுவைக் காப்பாற்ற அவதரித்த நீங்கள் அந்தச் சிறு வயதிலேயே அதை செய்ய ஆரம்பித்த இந்தப் பிரவிருத்தியானது மிகவும் பொருத்தமானதே!( 53 – 2)

கதா3பி ராமேண ஸமம் வனாந்தே
வனச்’ரியம் வீக்ஷ்ய சரன் ஸுகேன ||
ஸ்ரீதா3ம நாம்ன:ஸ்வஸக2ச்ய வாசா
மோதா3த3கா தே4னுக கானனம் த்வம் ||( 53 – 3 )


ஒரு நாள் பாலராமனுடன் நடுக் காட்டில் அதன் அழகை ரசித்தவாறு சுகமாகத் திரிந்து கொண்டு இருந்தீர்கள். ஸ்ரீ தாமா என்ற நண்பனின் சொற்களைக் கேட்டு சந்தோஷமாக தேனுகாசுரனின் காட்டிற்குச் சென்றீர்கள் அல்லவா? ( 53 – 3)

உத்தால தாலீநிவஹே த்வது3க்த்யா
ப3லேன தூ4தேSத2 பலேன தோ3ர்ப்4யாம் |
ம்ருது3: க2ரச்’சாப்4ய பதத் புரஸ்தாத்
ப2லோத் கரோ தே4னுக தா3னவோபி ||( 53 – 4)

தங்கள் விருப்பப்படி பலராமன் உயர்ந்த பனை மரக் கூட்டத்தை இரண்டு கரங்களாலும் பலமாகக் குலுக்கினான். பழுத்ததும், பழுக்கததும் ஆக பனம் பழங்கள் நாலாப் பக்கங்களிலும் விழுந்தன. மர்த்தனம் செய்யப்படவிருந்த தேனுகாசுரனும் கழுதை வேடத்தில் எதிர்த்து வந்தான். ( 53 – 4)

ஸமுத்3யதோ தே4னுக பாலனேஹம்
கத2ம் வத4ம் தே3னுகமத்ய குர்வே |
இதீவ மத்வா த்4ருவமக்3ரஜேன
ஸுரௌக4 யோத்3தா4ர மஜீக4தஸ்த்வம் ||( 53 – 5)


“பசுக்கூட்டத்தைக் காப்பாற்ற முயலும் நான் தேனுகனை எவ்வாறு வதம் செய்வேன்?”என்று ஆலோசித்த தாங்கள் அண்ணன் பாலராமனைக் கொண்டு தேவர்களின் சத்ருவான தேனுகாசுரனைக் கொல்லச் செய்தீர்கள் அல்லவா?
(53 – 5)
 
த3ச’கம் 53 ( 6 to 10)

தே4னுகாஸுர வதம்

ததீ3ய ப்4ருத்யானபி ஜம்பு3கத்வேன
உபாக3தாநக்3ரஜ ஸம்யுதஸ்த்வம் |
ஜம்பூ3 பலானீவ ததா நிரச்தஸ்
தாலேஷு கே2லன் ப4கவன் நிராஸ்த:||( 53 – 6)

பகவானே! அப்போது நரி வேடம் அணிந்து கொண்டு நெருங்கி வந்த அவனுடைய வேலையாட்களை, பலராமனும் நீங்களும் சிரமம் இல்லாமல் விளையாட்டுப் போலவே நாவல் பழங்களை வீசுவது போல எடுத்துப் பனை மரங்களின் மீது எறிந்தீர்கள் அல்லவா?( 53 – 6)

வினிக்4நதி த்வய்யத2 ஜம்பு3கௌக4ம்
ஸ நாமகத்வாத்3 வருணஸ் ததா3நீம் |
பயாகுலோ ஜம்பு3க நாம தே4யம்
ஸ்ருதி ப்ரஸித்3த4ம் வ்யதி4தேதி மன்யே ||( 53 – 7)

தாங்கள் ஜம்புகக் கூட்டத்தைக் (நரிகளின் கூட்டத்தைக்) கொல்லத் துணிந்த போது, அதே பெயரை உடைய வருணன் அஞ்சிக் கலங்கினான் போலும். அதன் காரணமாக அதன் பின் சம்புகன் என்ற தன் பெயரை வேதத்தில்மட்டும் பிரசித்தி பெறச் செய்தான் போலும். ( 53 – 7)

தவாவதாரஸ்ய ப2லம் முராரே
ஸஞ்ஜாத மத்3யேதி ஸுரைர் நுதஸ்த்வம் |
ஸத்யம் பலம் ஜாத மிஹேதி ஹாஸீ
பா3லைஸ்ஸமம் தால ப2லான்ய பு4ங்க்தா: ||( 53 – 8 )

“ஹே முராரியே! தங்கள் திரு அவதாரத்திற்குப் பலன் இப்போது தான் உண்டானது!” என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். “உண்மைதான்! இந்த இடத்தில் பலன் (பழம்) சித்தித்தது (கிடைத்தது)” என்று சிரித்துக் கொண்டே கூறினீர்கள். பிறகு மற்ற சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு பனம் பழங்களை உண்டீர்கள் அல்லவா? ( 53 – 8)

மது4 ஸ்ரவந்தி ப்3ருஹந்தி தானி
ப2லானி மேதோப4ர ப்4ருந்தி பு4க்த்வா |
த்ருப்தைச்’ச த்3ருப்தைர் ப4வனம் ப2லௌக4ம்
வஹத்3பி4ராகா: க2லு பா3லகைஸ்த்வம் ||(53 – 9)

தேனைப் பெருக்குகின்ற, பெருத்துப் பருத்த, தசைப்பற்றுள்ள அந்தப் பழங்களைத் தின்று திருப்தி அடைந்த பின்னர் பழக் குவியலையும் எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் வீடுதிரும்பினீர்கள் அல்லலவா?
( 53 – 9)

ஹதோ ஹதோ தே4னுக இத்யுபேத்ய
ப2லான்யத3த்3பி4ர் மது4ராணி லோகே:|
ஜயேதி ஜீவேதி நுதோ விபோ4த்வம்
மருத்புராதீ4ச்’வர பாஹி ரோகா3த் ||(53 – 10)

ஹே குருவாயூரப்பா! தேனுகசுரன் கொல்லப்பட்டான் என்று உற்சாகத்துடன் அருகில் வந்து இனிப்பான பழங்களை உண்ட மக்கள் “தாங்கள் மேன்மை பெற்று வெகு காலம் ஜீவித்து இருக்க வேண்டும்” என்று தங்களை வாழ்த்தினார்கள் அல்லவா? அப்படிப் பட்ட நீங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.( 53 – 10)
 
Vinaayaka puraaNam 1

24f. குபேரன்

ரிஷிபத்தினியை வணங்கினான் குபேரன்
ரிஷிபத்தினியை கௌரவித்தான் குபேரன்.

“என் பொக்கிஷங்கள் உள்ளன இங்கே;
எடுத்துக் கொள்வீர் எது தேவையோ”

“உன் செல்வம் வேண்டாம் குபேரா!
என் தேவை எடைக்கு எடை பொன்!”

தராசை நடுவில் நிறுவினான் குபேரன்;
தங்கக் கட்டியை வைத்தான் மறுதட்டில்!

தாழ்ந்து நின்றது புல் வைத்த தட்டு.
தங்கக் கட்டிகளை அதிகரித்தான்.

கூடைப் பொன்னை வைத்தபோதும்
எடைகள் சமமாகவே ஆகவில்லை.

தேவர்களின் சம்பத்து வந்தது அங்கு;
தேவசம்பத்து ஈடாகவில்லை புல்லுக்கு!

மும்மூர்த்திகள் ஏறினர் தங்கத் தட்டில்;
அம்மூர்த்திகளும் சமன் செய்யவில்லை!

விநாயகருக்கு அர்ச்சித்த ஓர் அறுகினை
அனாயாசமாக சமன் செய்ய முடியுமா?

“இல்லை இதற்கு ஈடாக எதுவும்” என
எல்லோரும் விரைந்தனர் முனிவரிடம்.

“அறுகம் புல்லின் மகிமையை உணர்த்த
அனுப்பினீர் போலும் இதை எம்மிடம்!

ஆதி காரணனை அர்ச்சித்த அறுகுக்கு
ஏதும் ஈடாகாது என்று உணர்ந்தனர்.

அன்புடன் அனுதினமும் அறுகினால்
அர்ச்சிக்கும் உமக்கு யார் இணை?”

கணங்கள் அறிவித்தன முனிகளுக்கு
கேவலம் அல்ல அறுகம் புல் என்று.

அறுகுகளால் ஐங்கரனை அர்ச்சித்து
அவர்களும் ஏகினர் விண்ணுலகம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Vinaayaka puraaNam 1

24 f. Kuberan

Kuberan welcomed the rushi patni. He did several honors to her and said, “Here is all my wealth. You may take anything you desire.” The rushi patni replied, “I do not covet your treasures Kubera. I was told to get gold equivalent to this green grass.”

Kuberan set up a pair of scales. He put the grass in one plate and a piece of gold in the other. The grass was heavier. He went on increasing the gold in the other plate and yet the grass remained heavier.

Now all the riches of the Deva was on the scales and even then they could not balance the grass. The Trimurthis themselves climbed on to the plate – which kept expanding to give more space – but the grass was heavier than all of them put together.

The truth dawned on them at last. The grass offered to Vinayaka was superior to everything else. Nothing can ever become equal to it.

They all went down to meet the sage Koundinya. They told him,”Sire! you have made us realize the real worth of the grass. You worship lord Vinayaka with ten thousand arcs of grass everyday. No one in the three worlds can become equal to you “

The Devagana told these to make the pujaaris understand the greatness of the green grass. The pujaaris did archanai with the green grass and found a place in the vimaanam and in the heaven when they left the world.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5a. மிருகண்டூயர்.

கடகம் நகரில் கவிச்சிகன் தோன்றினான்
குச்சகர் என்னும் மறையவர் மகனாக.


மறைகளைக் கற்றுத் தேர்ந்த கவுச்சிகன்
பிறவிக் கடலைக் கடக்க விழைந்தான்.

ஊண், உறக்கம் ஒழித்துத் தவம் செய்தான்;
மாண்பு மிக்க ஐந்தெழுத்தை ஜெபித்தான்.

உடல் தினவு தீரத் தேய்க்கும் விலங்குகள்
ஜடம் போல் அமர்ந்திருக்கும் அவன் மீது!

தவத்தை மெச்சித் தோன்றினார் திருமால்;
தடவிக் கொடுத்து “மிருகண்டூயா!” என்றார்.

தந்தையிடம் திரும்பினான் கவுச்சிகன்;
தந்தை மகிழ்ந்தார் திருமால் அருளால்.

“முறைப்படி இல்லறத்தில் நீ நிற்பாய்!”
மறையவன் சொன்னான் தன் மகனிடம்.

“பிறவித் தளையையை அறுக்கவேண்டும்;
மறுபடித் தளையில் அகப்பட மாட்டேன்!

நல்ல தவம் தவிர்த்து இல்லறம் புகுதல்
நல்ல நீர் தவிர்த்து சகதியில் புகுதலே!

பெண்களைப் படைத்தான் பிரம தேவன்
மண்ணில் உள்ள தீவினைகளைத் திரட்டி.

துன்பங்களை உண்டாக்கும் பெண்ணாசை!
பின்னாளில் கொண்டு தள்ளும் நரகத்தில்.

பெண்ணிலும் இனியது கொடிய நஞ்சு!
பெண்ணுள்ளம் கடலினும் ஆழமானது.

காம வசப்பட்ட தேவர்கள் முனிவர்கள்
சோ காத்தனர் சொல்லிழுக்குப் பட்டு.

பிறவித் துன்பத்தை தொலைப்பதை விட்டு
பிறவிக் கடலில் மீண்டும் விழுவேனோ?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 ( # 5 A) MRUGANDOOYAR.

Kouchchigan was born as the son of a brahmin named Kuchchagar in the city called Kadagam. He studied the scriptures well and decided to end the endless cycle of birth and death called Samsaara.

He did severe penance forgetting his food and sleep. He was completely immersed in his Self. The animals passing by would rub their bodies against his, to scratch themselves, but he would be completely oblivious to this.

Vishnu was pleased with his penance . He appeared to him, touched the young man with affection and called him as “Mrugandooyaa!”

The son returned to his father.The father was pleased by the grace of Vishnu. He told his son that it was time for him to get married and settle down in life.

“I want to get out of Samsara and you want to push me deeper into. Giving up penance in favour of married life is similar to shunning the clean water and bathing in the slush.

Brahma created the women from all the vices in the world. They cause nothing but suffering in this world and push us into hell in the after-life. I will rather prefer a deadly poison to a woman. Women’s minds are unfathomable.

The Devas and rushis who fell in love with damsels lost their honour and fame. Please do not push me in to the quicksand called Samsara!”

Kouchchigan refused firmly to get married.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#1b. ஜனமேஜயனின் ஐயங்கள் (2)

பூபாரத்தைத் தீர்க்க வந்தவர் கிருஷ்ணர்;
துவாரகை சென்றார் பகைவருக்கு அஞ்சி.!

உத்தமர்களைக் கொன்றார் பாரதப் போரில்;
பத்தினிகளைக் கவர்ந்த கள்வர்களை அல்ல.

கிருஷ்ணனுக்கு மிகவும் நெருங்கியவர்கள்;
கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.

ராஜாசூய யாகம் செய்தவர்கள் பாண்டவர்கள்;
ராஜ்ஜியதைப் பாண்டவர்கள் இழந்தது ஏன்?

அல்லல் பட்டது ஏன் வனவாசம் சென்று?
அஞ்ஞாத வாசத்தில் ஒளிந்திருந்தது ஏன்?

அவதரித்தாள் திரௌபதி அக்கினியில்!
பத்தினியானாள் பஞ்சபாண்டவருக்கு!

பக்தி கொண்டிருந்தாள் கிருஷ்ணனிடம்;
இத்தனை இருந்தும் எத்தனை சோதனை?

இழுத்து வந்தனர் கூந்தலைப் பற்றி சபைக்கு!
இழுத்து ஆடையைச் செய்தனர் மானபங்கம்!

அரசியின் சேடியாக வாழ்ந்தாள் ஓராண்டு!
அரற்றினாள் கீசகன் தந்த இம்சையினால்!

அபகரித்துச் சென்றான் அவளை ஜயத்ரதன்!
அபலையை மீட்டனர் கணவர்கள் பாண்டவர்!

இத்தனை துயரம் அடைவதற்கு அவள்
எத்தனை பாவம் செய்திருந்தாள் முன்பு?

கௌரவ வம்சம் கண்ணனால் அழிந்தது ஏன்?
கௌரவமான பரீட்சித்தின் துர்மரணம் ஏன்?

பந்தாடுகின்றன இந்த ஐயங்கள் என் மனதை.
தந்தருள்வீர் மன அமைதியினை வியாசரே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 54 ( 1 to 5)

கோ3பானாம் உஜ்ஜீவனம்

த்வத் ஸேவோத்கஸ் சௌப4ரி நாம பூர்வம்
காளிந்த்3யன்தர் த்3வாத்3சா’ப்3த3ம் தபஸ்யன் |
மீனவ்ராதே ஸ்நேஹவான் போ4க3லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷா தை3க்ஷதாக்3ரே கதா3சித் ||( 54 – 1)


தங்களை சேவிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் சௌபரி என்ற முனிவர். முற்காலத்தில் யமுனா நதிக்குள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்து கொண்டு இருந்தபோது அவர் மீன்களிடத்தில் அன்பு கொண்டார். ஒரு நாள் கருடனைத் தன் கண் முன்னே பிரத்தியக்ஷமாகக் கண்டார்.
( 54 – 1)

த்வத்3வாஹம் தம் ஸக்ஷுத4ம் த்ருக்ஷஸூனும்
மீனம் கஞ்சிஜ் ஜக்ஷதம் லக்ஷயன் ஸ:|
தப்தச்’ சித்தே ச’ப்தவானத்ர சேத்தம்
ஜந்தூன் போ4க்தா ஜீவிதஞ்சாபி மோக்தா ||( 54 – 2 )

அந்த முனிவர் பசியுடன் கூடியவனும், ஒரு மீனைத் தின்றவனும், தங்கள் வாகனமும் ஆகிய கருடனைப் பார்த்து கோபம் கொண்டார். “நீ இங்கே வந்து பிராணிகளை உண்டால் உயிரை இழந்து விடுவாய்!” என்று கருடனையும் சபித்தார்.( 54 – 2)

தஸ்மின் காலே காலிய: க்ஷ்வேல த3ர்பாத்
ஸர்பாராதே: கல்பிதம் பா4க3மன்னம் |
தேன க்ரோதா4த் பதா3ம் போ4ஜபா4ஜா
பக்ஷ க்ஷிப்தஸ் தத்3து3ராபம் பயோகா3த் ||(54 – 3)


காளீயன் என்ற கொடிய விஷப் பாம்பு, கருடனுக்கு வைக்கப் பட்டிருந்த பாகத்தைத் தின்று விட்டான். தங்கள் திருவடிகளை சேவிக்கும் கருடன் கோபம் கொண்டு இறக்கையால் அடித்து விரட்டவும், காளீயன் அந்த கருடன் வரமுடியாத யமுனை நதியை அடைந்தான். ( 54 – 3)

கோ4ரே தஸ்மின்
ஸூரஜாநீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா: க்ஷ்வேலவேகா3த் |
பக்ஷி வ்ராத: பேதுரப்ரே பதந்த:
காருண்யார்த்3ரம் த்வன்மவஸ்தேன ஜாதம் ||(54 – 4 )

கொடியவனாகிய அந்தக் காளீயன் யமுனை நதியில் வசிக்கும் போது அவன் விஷத்தின் வீரியத்தால் நதிக் கரையில் இருக்கும் மரங்கள் நாசம் அடைந்தன. ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் மயங்கி விழுந்தன. உங்கள் மனம் கருணையினால் கனிந்தது. ( 54 – 4)

காலே தஸ்மின் ஏகதா3 ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுனம் கானனாந்தம் |
த்வய்யுத்3தா3ம க்3ரீஷ்ம பீ4ஷ்மோஷ்ண தப்தா
கோ3: கோ3பாலா வ்யாபிப3ன் க்ஷ்வேலதோயம் ||( 54 – 5 )


அக்காலத்தில் ஒருநாள் தாங்கள் பலராமன் இல்லாமல் இடைப் பிள்ளைகளுடனும் பசுக்களுடனும் யமுனையின் கரையில் உள்ள காட்டுக்குச் சென்றீர்கள். பொறுக்க முடியாத உஷ்ணத்தினாலும், தாகத்தினாலும் தவித்த பசுக்களும், இடையர்களும் யமுனையின் நீரைப் பருகினார்கள் அல்லவா? ( 54 – 5)
 
த3ச’கம் 54 (6 to 10)

கோ3பானாம் உஜ்ஜீவனம்

நச்’யஜ்ஜீவன் விச்யுதான் க்ஷ்மாதலே தான்
விச்’வான் பச்’யன் நச்யுத த்வம் தயார்த்ர: |
ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித2 த்3ராக்3
பீயூஷாம்போ4வர்ஷிபிச்’ ஸ்ரீகடாக்ஷை:||( 54 – 6)

தன்னைச் சரண் அடைந்தவர்களைக் கைவிடாத கிருஷ்ணா! நண்பர்களும், பசுக்களும் விஷ நீரைப் பருகியதால் உயிர் இழந்து தரையில் விழுவதைக் கண்டதும் கருணை கொண்டு அவர்கள் அருகில் சென்று அமிர்தத்தை வர்ஷிக்கும் கடைக்கண் பார்வையால் அவர்களை உயிர்ப்பித்தீர்கள் அல்லவா? ( 54 – 6)

கிம் கிம் ஜாதோ ஹர்ஷவர்ஷா திரேக:
ஸர்வாங்கே3ஷ் வித்யுத்தி2த கோ3ப ஸங்கா3:|
த்3ருஷ்ட்வாக்3ரே த்வாம் த்வத்க்ருதம் தத்3வித3ந்த :
த்வாமாலிங்கன் த்3ருஷ்டனானா ப்ரபா4வ:||( 54 – 7 )


கோபர்கள் “இது என்ன ஆச்சரியம்? உடல் முழுவது ஆனந்தம் பொங்குகிறதே!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தனர். எதிரில் உங்களைக் கண்டதும் அது உங்கள் கருணையின் வெளிப்பாடே என்று அறிந்து அன்புடன் உங்களை ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் அல்லவா?( 54 – 7)

கா3வச்’ சைவம் லப்3த4 ஜீவா: க்ஷணேன
ஸ்பீதானந்தா3ஸ்த்வா ச த்3ருஷ்ட்வா புரஸ்தாத் |
த்3ராகா3வவ்ருஸ் ஸர்வதோ ஹர்ஷ பா3ஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்த3 முத்3யன் நிநாதா3:||(54 – 8)

அவ்விதமே பசுக்களும் ஒரே நொடியில் உயிர் பெற்று எழுந்தன. எதிரில் தங்களைக் கண்டு ஆனந்தம் பெருகி கண்களில் நீர் வழிய மெதுவாகக் கத்திக் கொண்டு தங்களைச் சுற்றி நின்றன அல்லவா? ( 54 – 8)

ரோமாஞ்சோSயம் ஸர்வதோ ந: ச’ரீரே
பூயஸ்யந்த : கதா3சிதா3னந்த3 மூர்ச்சா2 |
ஆச்’சர்யோயம் க்ஷ்வேல வேகோ3 முகுந்தே3தி
உக்தோ கோ3பைர் நந்தி3தோ வந்தி3தோ பூ4: ||(54 – 9)

“முக்தியைக் கொடுக்கும் ஈசா! எங்கள் தேகங்களில் எங்கும் மயிர் கூச்செரிகிறது. உள்ளத்தில் இனம் தெரியாத ஆனந்தம் பெருகுகிறது. இந்த விஷத்தின் வேகமோ ஆச்சரியமாக இருக்கிறது!” என்று கூறிய கோபாலர்கள் தங்களைக் கொண்டாடி வணங்கினார்கள் அல்லவா?
( 54 – 9)

ஏவம் பக்தான் முக்த ஜீவானபி த்வம்
முக்3தா4பாங்கை3ரஸ்தரோகா3ம்ஸ்தனோதி |
தாத்3ருக்3 பூ4த ஸ்பீத காருண்யா பூ4மா
ரோகா3த் பாயா வாயுகே3ஹாதி4நாத2 ||(54 – 10)


இவ்விதம் உயிர் இழந்த தங்களின் பக்தர்களைக் கூடத் தங்களின் கடைக்கண் பார்வையால் உயிர் பெறச் செய்கின்றீர்கள். அப்படிப்பட்ட கருணையை உடைய தாங்கள் என்னையும் வியாதிகளில்இருந்து காப்பாற்ற வேண்டும். ( 54 – 10)
 
த3ச’கம் 55 ( 1 to 5)

காளிய மர்த்த3னம்

அத2 வாரிணி கோ4ரதரம் ப2ணினம்
ப்ரதி வாரயிதும் க்ருத தீ4ர்ப4க3வன் |
த்ருதமாரித2 தீரக3 நீபதரும் விஷ
மாருதசோ’ஷித பர்ணசயம் ||(55 – 1)

ஹே கிருஷ்ணா! அதன் பிறகு யமுனா நதியில் வசிக்கும் கொடிய காளீயனை அங்கிருந்து விரட்ட நிச்சயித்துக் கொண்டீர்கள் நீங்கள். நதிக் கரையில் இருந்த, விஷக் காற்றினால் உலர்ந்த இலைகளைக் கொண்ட, கதம்ப மரத்தில் விரைவாக ஏறினீர்கள் அல்லவா? ( 55 – 1)

அதி4ருஹ்ய பதா3ம்பு3ருஹேன ச தம்
நவபல்லவ துல்ய மனோக்ஞ ருசா |
ஹ்ருத3 வாரிணி தூ3ரதரம் ந்யபத:
பரி கூர்ணீத கோ3ர தரங்க க3ணே ||( 55 – 2)


இளம் தளிர்களை ஒத்த மிருதுவானதும், அழகான நிறத்தை உடையதும் ஆகிய தாமரை போன்ற கால்களினால் அந்த மரத்தின் மீது ஏறிய நீங்கள் , நீர்ச் சுழிகளும், பயங்கர அலைகளும் நிறைந்த அந்த மடுவில் குதித்தீர்கள் அல்லவா? ( 55 – 2)

பு4வனத்ரயா பா4ர ப்4ருதோ ப4வதோ
கு3ரு பா3ர விகம்பி விஜ்ரும்பி4 ஜலா |
பரிமஜ்ஜயதி ஸ்ம த4னுச்’ச’தகம்
தடிநீ ஜடிதீ ஸ்புட கோ4ஷவதி ||( 55 – 3)


மூவுலகங்களுடைய பாரத்தைச் சுமக்கும் தங்களுடைய அதிகமான பாரத்தால் சலித்து உயரக் கிளம்பிய யமுனை நீர் விரைவாக நூறு வில்லிடை நிலத்தைத் தண்ணீரில் மூழ்கடித்தது அல்லவா? ( 55 – 3)

அத2தி2க்ஷு விதி3க்ஷு பரிக்ஷுபி4த
ப்4ரமி தோத3ர வாரி நிநாத3ப4ரை: |
உத3கா3 துத3கா3 து3ரகாதி4பதி:
த்வதுபாந்த மசா’ந்த ருஷாந்த4மனா: ||(55 – 4)


அதன் பின்னர் திக்குகளும் விதிக்குகளும் கலக்கப்பட்டு சுழி உண்டாகும்படி செய்யப்பட யமுனை ஜலத்தாலும், அதன் அதிக ஒலியாலும், சினம் அடைந்த காளீயன் தங்கள் அருகில் மெய்மறந்து வந்து அடைந்தான் அல்லவா? (55 – 4 )

ப2ண: ச்’ருங்க3 ஸஹஸ்ர வினிஸ்ஸ்ருமர
ஜவலத3க்னி கணோக்3ர விஷாம்பு3த4ரம் |
புரத; பணினம் ஸமலோகயதா2
ப3ஹு ச்’ருங்கி3ண மஞ்சன சை’லமிவ ||( 55 – 5 )


ஆயிரம் படங்களின் நுனிகளில் இருந்து வெளிக் கிளம்பும் ஜ்வலிக்கின்ற தீக்கனலை உடையவனும், கொடிய விஷத்தை உடையவனும், அநேகக் கொடுமுடிகள் கொண்ட கரிய மலை போன்று இருப்பவனும் ஆகிய காளீயனைத் தாங்கள் தங்கள் எதிரில் கண்டீர்கள் அல்லவா? (55 – 5)
 
த3ச’கம் 55 ( 6 to 10)

காளிய மர்த்த3னம்

ஜ்வலத3க்ஷி பரிக்ஷர து3க்3ரவிஷ
ச்’வஸநோஷ்மப4ர: ஸ மஹா பு4ஜக3:|
பரித3ஷ்ய ப4வந்த மனந்த ப3லம்
ஸம வேஷ்டய த3ஸ்புட சேஷ்டமஹோ ||(55 – 6)

ஜ்வலிக்கும் கண்களும், விஷ வாயுவாகிய வெப்பமான மூச்சுக் காற்றும், கொண்ட காளீயன் அளவற்ற பலம் கொண்ட தங்களைக் கடித்தான். தாங்கள் அசைவற்று இருப்பதைக் கண்டு தங்களைச் சுற்றிக் கொண்டான் அல்லவா? ( 55 – 6)

அவிலோக்ய ப4வந்த மதா2குலிதோ
தடகா3மினி பா3லக தே4னு கணே:|
வ்ரஜ கே3ஹ தலேSப்ய நிமித்த ச’தம்
ஸமுதீ3க்ஷ்ய க3தா யமுனாம் பசு’ப:||( 55 – 7)


அதன் பிறகு யமுனைக் கரையில் இருக்கும் சிறுவர்களும், பசுக் கூட்டமும் தங்களைக் காணமல் வருந்தும் பொழுது கோகுலத்திலும் அனேக அபசகுனங்களைக் கண்ட கோபர்களும் யமுனைக் கரைக்கு விரைந்தார்கள் அல்லவா? ( 55 – 7)

அகி2லேஷு விபோ4 ப4வதீ3ய த33சா’ம்
அவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவப4ரம் |
பணி ப3ந்த4ன மாசு’ விமுச்ய ஜவாத்
உத3க3ம்யத ஹாஸ ஜூஷா ப4வதா ||(55 – 8 )


ஹே கிருஷ்ணா! அவர்கள் தங்கள் நிலையை எண்ணி வருந்தி உயிரை விடத் துணிந்தபோது விரைவாக பாம்பின் கட்டை அவிழ்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே தாங்கள் நீரின் அடியிலிருந்து நீருக்கு மேலே வெளியே வந்தீர்கள் அல்லவா? ( 55 – 8)

அதி4ருஹ்ய தத: ப2ணிராஜ ப2ணான்
நந்ருதே ப4வதா ம்ருது3 பாத3 ருசா|
கலசி’ஞ்ஜித நூபுர மஞ்ஜுமிலத்
கரகங்கண ஸங்குல ஸங்வணிதம் ||(55 – 9 )


அதன் பிறகு சர்ப்ப ராஜனின் படங்களில் எறிக் கொண்டு; அழகான காந்தியுடைய தங்கள் திருவடிகளின் சலங்கைகளின் இனிய ஒலியும், இரு கைகளில் குலுங்கும் வளைகளின் ஒலியும் பின்னிப் பிணைந்து ஒலிக்கும்படி அழகிய நர்த்தனம் செய்தீர்கள் அல்லவா? ( 55 – 9)

ஜஹ்ருஷு பசு’பாஸ் துதுஷுர் முனயோ
வவ்ருஷு: குஸுமானி ஸுரேந்த்3ர க3ணா:|
த்வயி ந்ருத்யதி மாருத கே3ஹபதே
பரிபாஹி ஸ மாம் த்வமதா3ந்த க3தா3த் ||( 55 – 10)


ஹே குருவாயூரப்பா! இங்ஙனம் தங்கள் நர்த்தனம் செய்யும் பொழுது கோபர்கள் ஆனந்தம் அடைந்தனர்; முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர்; இந்திராதி தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அப்படிப்பட்ட தாங்கள் என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும். ( 55 – 10)
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#1b. ஜனமேஜயனின் ஐயங்கள் (2)

பூபாரத்தைத் தீர்க்க வந்தவர் கிருஷ்ணர்;
துவாரகை சென்றார் பகைவருக்கு அஞ்சி.!

உத்தமர்களைக் கொன்றார் பாரதப் போரில்;
பத்தினிகளைக் கவர்ந்த கள்வர்களை அல்ல.

கிருஷ்ணனுக்கு மிகவும் நெருங்கியவர்கள்;
கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.

ராஜாசூய யாகம் செய்தவர்கள் பாண்டவர்கள்;
ராஜ்ஜியதைப் பாண்டவர்கள் இழந்தது ஏன்?

அல்லல் பட்டது ஏன் வனவாசம் சென்று?
அஞ்ஞாத வாசத்தில் ஒளிந்திருந்தது ஏன்?

அவதரித்தாள் திரௌபதி அக்கினியில்!
பத்தினியானாள் பஞ்சபாண்டவருக்கு!

பக்தி கொண்டிருந்தாள் கிருஷ்ணனிடம்;
இத்தனை இருந்தும் எத்தனை சோதனை?

இழுத்து வந்தனர் கூந்தலைப் பற்றி சபைக்கு!
இழுத்து ஆடையைச் செய்தனர் மானபங்கம்!

அரசியின் சேடியாக வாழ்ந்தாள் ஓராண்டு!
அரற்றினாள் கீசகன் தந்த இம்சையினால்!

அபகரித்துச் சென்றான் அவளை ஜயத்ரதன்!
அபலையை மீட்டனர் கணவர்கள் பாண்டவர்!

இத்தனை துயரம் அடைவதற்கு அவள்
எத்தனை பாவம் செய்திருந்தாள் முன்பு?

கௌரவ வம்சம் கண்ணனால் அழிந்தது ஏன்?
கௌரவமான பரீட்சித்தின் துர்மரணம் ஏன்?

பந்தாடுகின்றன இந்த ஐயங்கள் என் மனதை.
தந்தருள்வீர் மன அமைதியினை வியாசரே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

King Janamejayan asked Sage Vyaasaa more and more doubts.
He continued, ” Krishna took avatar to rid the earth of its excess population. But he ran away to Dwaaraka to escape from his enemies.

He killed many good persons in the Mahaa Bhaarata yuddham and yet he did not kill the thieves who insulted his own wives.

PaaNdavaas were very close to Krishna. They had intense bhakti towards Krishna. They performed Rajasooya yaagam. Despite all these, they lost their kingdom. They had to go to vana vaasam. They had to live hiding their real identities for one full year.

Droupati was born out of the yaagaa fire. She married the five valorous PaaNdavaas. She had paripoorna bhakti on Krishna. But what kinds of troubles she had to go through!

She was dragged by her hair to the Durbar. She was disrobed in an assembly of men. She worked as a maid under a queen for one full year.

She had to tolerate the sexual harassment given by Keechakan. She was abducted by Jayadradan. PaaNdavaas has to free her from him.

To suffer so much, what sins had she committed in the poorva janmaas (previuous births)?

Why was the race of Kouravas destroyed by Krishna ? Why did the honorable king Pareekshit die in a dishonorable manner?

These doubts and troubling my mind. Kindly clarify my doubts and give me peace of mind Oh sage!”
 
Vinaayaka Puraanam 1.

25a. வன்னிப் பத்திரம்

பிரமனிடம் கேட்டான் மன்னனின் தந்தை,
“அறுகு இல்லாவிடில் செய்ய வேண்டியது?”

“சமம் ஆகும் வன்னிப் பத்திரம் அறுகுக்கு!
சமம் ஆகும் மந்தார மலர் அறுகினுக்கு!

வேடன் வீமன் கொடுமையின் வடிவம்;
வாழ்ந்து வந்தான் அதேயம் நகரில்.

வாழ்வாதாரம் வழிப்பறிக் கொள்ளை!
வருந்தியது இல்லை வழிப்பறி செய்ய.

அந்தணர் வந்தனர் அக்காட்டு வழியே.
அடித்து அபகரித்தான் அவர் பொருளை.

அரக்கன் கண்டான் அங்கு நடந்தவற்றை;
அடையத் துடித்தான் அவனும் அவற்றை.

அரக்கன் துரத்தினான் வேடன் வீமனை;
அரக்கனுக்கு அஞ்சி ஏறினான் வன்னி மரம்!

அசைந்த மரத்திலிருந்து விழுந்தது ஓரிலை;
அடியில் இருந்ததோ ஆனைமுகன் சிலை.

வீமனைத் தொடர்ந்து ஏறினான் அரக்கன்;
விழுந்தது மேலும் ஓரிலை அச்சிலை மீது!

சண்டை இட்டனர் கட்டிப் பிடித்துக் கொண்டு;
மண்டை உடைந்திட கீழே வீழ்ந்து மடிந்தனர்.

வன்னிப் பத்திரம் அச்சிலை மீது விழுந்ததால்,
விண்ணுலகு ஏகினர் அவர் திவ்ய ரூபத்துடன்!

அன்பு என்பதையே அறியாத அவ்வேடனும்
துன்புறுத்துவதே ஒரு தொழிலான அரக்கனும்,

ஒற்றை வன்னி இலையின் மகிமையால்
பெற்றனர் சீரிய விண்ணுலக வாழ்வினை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Vinaayaka Puraanam 1.

25A. The Vanni leaf

King Kruthaveeryan’s father asked Brahma, “What is to be done, if we do not have the green grass for the Vinayaka Puja?”

Brahma replied to him,”The leaf of the Vanni tree is as great as the green grass. The flower of the Mandaara tree is as great as the green grass. Listen to this story to learn about the greatness of the Vanni leaf.

There lived a hunter named Beeman. He was the very personification of cruelty. He lived near a city called Adheyam. His mode of life was waylaying the passers by and looting their wealth. He never regretted nor repented for his action.

A few Brahmins were passing through the forest. He killed them all and took hold of their belongings. An asuran was watching the happenings. He himself coveted the loot and started chasing the hunter Beeman.

Beeman ran fast and climbed up on a Vanni tree. As he climbed a leaf of the tree fell down on the statue of Vinayaka sitting in its shade. The asuran also climbed on the same tree. Now one more leaf fell on the statue of god.

They fought on the tree for a while and fell down together from it and died. Since they had each offered a leaf of Vanni tree to Vinayaka, they were given divya sareeram and a place in the heaven.

Beeman did not know what was kindness and the asuran had lived by harassing people. Even such seasoned sinners are released from their sins by offering to Vinayaka a single Vanni leaf – knowingly or unknowingly.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM


5b. தந்தை வற்புறுத்தல்.

தவப்புதல்வன் தவத்தின் மீது கொண்ட
தாளாத பற்றினை உணர்ந்தான் குச்சகன்.


“இல்லறம் புகுந்து மக்கட்பேறை அடைந்து
துறவறம் புகுவதே மனிதனுக்கு நல்லறம்;

இறந்த முன்னோர்கள் நரகம் தவிர்த்திட
மேற்கொள்ள வேண்டும் இனிய இல்லறம்.

மலை மீது ஏறவேண்டும் படிப்படியாக,
மலை உச்சி என்னும் துறவறத்தை அடைய.

வசிட்டர் மணந்தார் அருந்ததி தேவியை,
சிவபிரான் மணந்தார் உமை அன்னையை,

இல்லறம் புகாமல் துறவறம் பூண்டால்
நில்லாமல் வந்து சேரும் காம விகாரம்.

நாம் செய்கின்ற நல்லதும், தீயதும்,
நமது ஊழ்வலியின் வினைப்பயனே!

இல்லறம் புகுந்து வாழ்ந்த பின்னர்
துறவறம் புகுவாய் மகனே கவுச்சிகா!”

"தாய், தந்தை, குருவின் சொற்களை
தவறாமல் நிறைவேற்றுவது கடமை.

கற்புடைய மாதைக் கடிமணம் புரிவேன்
சொற்படி நடப்பேன் தாய், தந்தையரின்.

நான் கூறும் நல்லியல்புகள் கொண்ட
நங்கை கிடைத்தல் புரிவேன் திருமணம்.”

சிறப்பித்தாய் என் சொற்களை ஏற்று
சிறப்படையும் நம் சுற்றமும் இதனால்.

உன் நோக்கத்தை கூறுவாய் கவுச்சிகா!
உன் கருத்துப்படி தேடுவேன் மங்கையை.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
Last edited:
KANDA PURAANAM - ASURA KAANDAM


2 (# 5 B). PERSISTENCE OF THE FATHER.

Kuchchagan realised the reverence his son had for penance. But he persisted and went on to say,” A man must live his life As a gruhastha before becoming a vaanaprastha or a sanyaasi. A man must get a son to prevent his forefathers from suffering the pangs of hell.

If you want to climb a mountain and reach the top, you must climb from the base step by step. If you want to reach the pinnacle called renunciation of the world, you must start from the life of gruhastha.

Vasishtar married Arundathi. Siva married Uma. If you renounce the world straight away, the unfulfilled lust will haunt you later on in life. Whatever we do is due to our sanchitha karma. It is proper to get married and live the life of a gruhastha before moving on to tapas and penance.”

Kouchchigan said,”A man must obey the words of his mother, father and guru. “If you can find a girl who I think will be most suitable, I will marry her!”

Kuchchagan was overwhelmed and said he would find a girl exactly as required by his son.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2a. கர்மவினைப் பயன்கள்

வியாசர் கூறினார் தான் அறிந்தவற்றை;
விசனப்படும் மன்னன் ஜனமேஜயனுக்கு.

“வலிமை கொண்டது கர்மவினைகளின் பயன்;
பொலிவுறும் பிரம்மாண்டம் முக்குணங்களால்!

கட்டுப் படுத்தும் பிரம்மாண்டத்தை முக்குணங்கள்;
உட்படுத்தும் உயிரினங்களைக் கர்மவிதி நியதிக்கு.

கர்ம விதியினை அறிய இயலாது நம்மால் !
கர்ம விதியினை ஆராய இயலாது நம்மால்!


ஜீவன்கள் ஆதியந்தம் அற்றவைகள் – அந்த
ஜீவன்களின் உடல் கர்ம வினைப் பட்டவை.

உடல் எடுக்கின்றன பல யோனிகளில் பிறந்து!
உடல் எடுக்கின்றன பல யோக, போகங்களுடன்!

இல்லை கர்ம வினைபயன்கள் என்றால் – அப்போது
இல்லை கர்ம வினைகளால் உண்டாகும் உடல்கள்!

நல்வினை தீவினை கலந்த புண்ணிய பாவங்கள்
சொல்லப்படும் மூன்று வகைப் பட்டவை என்று.

சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று
மிஞ்சிடும் பிறக்கும் உடல்களில் இவை.


தேவர்களும் உட்பட்டவர்கள் கர்ம வினைக்கு
தேவர்களுக்கும் உண்டு இன்ப, துன்பங்கள்

எந்த யோனியில் சென்று பிறந்தாலும் – உண்டு
அந்த யோனியில் உண்டாகும் குண விகாரங்கள்.

வலம் வருகின்றான் சூரியன் உலகினை;
வளர்ந்து தேய்கின்றான் சந்திரன் வானில்.

கர்மமும், மாயையும் நித்தியமானவைகள்;
கர்ம, மாயை வசப்பட்ட உலகம் அநித்தியம்.

கர்ம வினைகள் காரணம் ஆகும் உலகுக்கு;
கர்ம வினைகளின் காரியம் உலக உற்பத்தி!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#2a. The Effect of Karma

Sage Vyaasaa explained to the troubled king Janamejayan whatever he knew.

“The effect of karma actions is very strong and binding. The creation is made of the three guNaas. The three guNaas control the jeevaas. We can not know the effects of karma nor try to find it out.

The jeevaa has neither a beginning nor an end. The body given to every jeeva depends on its karma.The jeeva is born in one of the many thousands of yonis. The jeevaa takes birth with many good and bad fortunes in its life.

If there is no karma and if its effect has been nullified, there will be no more births. The effect of the Karma is a mixture of the puNya and paapa and is classified into three types viz Aagamiyam, Sanchitm and Praarabdam.

Even Deva are subjected to these three guNaas. Even the Deva suffer joys and sorrows.The guNaas decide the yoni of birth and the yoni imparts to the jeevaa the associated guNaas.

The Sun travels in the sky. The moon waxes and vanes. Karma and Maaya are the permanent factors in creation. The creation itself is not permanent.

In short Karma is the cause of the creation. The creation is the effect of Karma.
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 56 ( 1 to 5)

காலிய அனுக்3ரஹம்

ருசிர கம்பித குண்ட3லமண்ட3லஸ்
ஸுசிரமீச’ நநர்தி2த பன்னகே3 |
அமர தாடி3த து3ந்து3பி4 ஸுந்தரம்
வியதி கா3யதி தை3வத யௌவதே ||( 56 – 1 )

ஹே கிருஷ்ணா! ஆகாயத்தில் அப்ஸர ஸ்திரீக்களும், தேவர்களும் துந்துபிகளை முழக்கியபடி இனிமையாகப் பாடும்போது, அழகிய குண்டலங்கள் அசையத் தாங்கள் பாம்பின் மேல் வெகு நேரம் ஆடினீர்கள் அல்லவா?(56-1)

நமதி யத்3யத3முஷ்ய சி’ ரோ ஹரே
பரிவிஹாய தது3ன்னதமுன்னதம் |
பரிமத3ன் பத3 பங்கருஹா சிரம்
வ்யஹரதா கரதால மனோஹரம் ||( 56 – 2 )

ஹரே ஸ்ரீ கிருஷ்ணா! அந்தக் காளீயனுடைய வணங்கிய தலைகளை விட்டுவிட்டு, மேலே கிளம்புகின்ற தலைகளைத் தங்கள் திருவடி மலர்களால் மிதித்துக் கொண்டு, தாளத்துடன் வெகு நேரம் நர்த்தனம் செய்தீர்கள் அல்லவா? ( 56 – 2)

த்வத3 ப4க்ன விபு4க்ன ப2ணாக3ணே
க3லித சோ’ணித சோ’ணித பாத3ஸி |
பணி பதா வவஸீத3தி ஸன்னதாஸ்
தத3பலாஸ்தவ மாத3வ பாத3யோ:||( 56 – 3 )


ஹே லக்ஷ்மி காந்தா! தங்கள் கால்களால் நசுக்கப்பட்டு தொங்கிய படங்களுடனும், பெருகும் இரத்தத்தால் நதி நீரை சிவப்பாக்கிய காளீயன் சோர்வடைந்த பொழுது, அவன் பத்தினிகள் தங்கள் திருவடிகளை வந்து வணங்கினார்கள் அல்லவா? ( 56 – 3)

அயி புரைவ சிராய பரிச்’ருத
த்வத3னுபா4வ விலீன ஹ்ருதோ3 ஹிதா:|
முனிபி4ரப்யனவாப்ய பதைஸ் ஸ்தவைர்
நுநுவு ரீச’ பவந்த மயந்த்ரிதம் |( 56 – 4 )

ஹே கிருஷ்ணா! வெகு நாட்களுக்கு முன்பே தங்கள் மகிமையைக் கேட்டு அதில் மனத்தை ஈடுபடுத்தி இருந்த அவர்கள் முனிவர்களுக்கும் அரிதாகிய அழகிய தோத்திரங்களால் தங்களைத் தங்கு தடை இன்றி துதித்தார்கள் அல்லவா? ( 56 – 4)

பணி வதூ4ஜன ப4க்தி விலோகயன்
ப்ரவிகஸத் கருணாகுல சேதஸா |
பணி பதிர் ப4வதாச்’யுத ஜீவிதஸ்
த்வயி ஸமர்பித மூர்த்தி ரவானமத் ||( 56 – 5 )


தங்களைச் சரண் அடைந்தவரைக் கை விடாத அச்யுதனே! காளீயனுடைய பத்தினிகளின் பக்தியைக் கண்டு கருணை மேலிட்ட தாங்கள் சர்ப்ப ராஜனை முன்போலவே ஆக்கினீர்கள். அவனும் மதம் ஒடுங்கியவனாகத் தங்களை வணங்கி நின்றான். ( 56 – 5)
 
Back
Top