A poem a day to keep all agonies away!

தேவி பாகவதம் - மூன்றாம் ஸ்கந்தம்

3#27b. ஸ்ரீ ராம சரிதம் (2)

பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தான் தசரதன்,
பட்ட மகிஷியின் மகன் மூத்தவன் ராமனுக்கு.

ஒப்பவில்லை இதற்கு இளைய மனைவி கைகேயி;
எப்போதோ பெற்ற இரு வரங்களைப் பிரயோகித்தாள்.

“நாடாள வேண்டும் என் மகன் பரதன் – ராமன்
காடாள வேண்டும் பதினான்கு ஆண்டுகள்!” எனத்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அல்லவா?
தம்பி, சீதையுடன் சென்றான் ராமன் வனவாசம்!

புத்திர சோகத்தால் உயிர் நீத்தான் தசரதன்;
இத்தனையும் செய்தவள் கைகேயி அல்லவா?

அரசாள அழைத்தான் ராமனை பரதன் – பின்பு
அரசனாக்கி விட்டான் ராமனின் பாதுகைகளை.

ராமனைக் கண்டு தன் வயம் இழந்தாள்;
காமன் கணைகள் தாக்கிய சூர்ப்பனகை.

சீதையை அசூயையால் பழித்த அரக்கியைச்
சேதித்து லக்ஷ்மணன் அங்கஹீனம் செய்தான்!

போருக்கு வந்தனர் அரக்கர்கள் கர, தூஷணர்;
போரில் மாய்ந்து விட்டனர் வந்த அரக்கர்கள்

ராவணனை நாடி ஓடினாள் சூர்ப்பனகை
ராவணனை மயக்கினாள் சீதையின் அழகில்

காமவயப் பட்ட ராவணன் நிச்சயித்தான்,
‘ராமனின் மனைவியைக் கடத்தி வருவேன்!’

பணித்தான் மாரீசனை மாய மானாக மாறிட,
துணிந்து விட்டான் சீதையைக் கடத்திவிட.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 3

3#27b. Sree Raama charitam (2)

King Dasaratha decided to crown his eldest so Raamaa as his successor. But Kaikeyi wanted her son Bharat to become the new king.

She used the two boons given to her by Dasaratha long ago and demanded that Bharat should rule Ayodhya and Raamaa should go for vana vaasam for fourteen long years. Raamaa went for vnanvaasam with his brother Lakshman and wife Seetaa.

Dasaratha could not stand the separation of Raamaa and gave up his ghost. Bharat was angry with his mother Kaikeyi who had caused all these miseries. He invited Raamaa to come back to Ayodhya and rule over it.

But Raamaa would not disobey his father’s wishes. Bharat took to Ayodhya Raamaa’s paaduga to represent him as the ruler of Ayodhya.

Soorpanaka the sister of RaavaN saw Raamaa and fell head over heels in love with him. She tried to harm Seetaa who stood between herself and Raamaa. Lakshman got very angry and cut off her ears and nose.

Soorpanaka fled to Lanka and lamented over her woes to her brother RaavaN. She described the beauty of Seetaa and got RaavanN infatutaed with the woman he was yet to set his eye upon.

RaavaN decided to abduct Seetaa. He ordered Maareecha to go and attract her as a golden deer.
 
Sreeman NArAyaNeeyam

தியான ஸ்லோகம் (1)


ஸூர்யஸ்பர்தி4 கிரீடம் ஊர்த்4வதிலக -
ப்ரோத்3பா4ஸி ப2லாந்தரம்
காருண்யாகுல நேத்ரமாத்ர -
ஹஸித்தோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க3ண்டோ3த்3யன் மகராப4 குண்ட3லயுக3ம்
கண்டோ2ஜ்வலத் கௌஸ்துப4ம்
த்வத்3ரூபம் வனமால்ய ஹாரபடல-
ஸ்ரீவத்ஸ தீ3ப்தம் ப4ஜே……..(2:1 )


சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கும் கிரீடத்தையும்; திலகத்தால் அழகூட்டபட்ட
நெற்றியையும்; கருணை வழியும் கண்களையும்; கனிந்த புன்னகையையும்;
அழகிய நாசியையும்; கன்னங்களில் பிரகாசிக்கும் இரு மகர குண்டலங்களையும்;
வனமாலை, முத்து மலை, ஸ்ரீ வத்சம் இவைகளுடன் விளங்கும் தங்கள் தோற்றத்தையும்
நான் சேவிக்கின்றேன்.
 
தியான ஸ்லோகம் (2)

கேயூராங்க3த3 கங்கனோத்தம -
மஹாரத்னாங்கு3லி யாங்கித
ஸ்ரீமத்3பா3ஹு சதுஷ்க ஸங்க3த
க3தாச2ங்கா2ரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித
லஸத் பீதாம்ப3ராலம்பி3னீம்
ஆலம்பே3 விமலாம்பு3ஜ த்3யுதிபதா3ம்
மூர்த்திம் த்வார்த்திச்சி2த3ம் || …….( 2:2)


தோள்வளைகள், கைக்கட்டு வளையல்கள், மணிக்கட்டு வளையல்கள், சிறந்த ரத்தினங்கள் பதித்த மோதிரங்கள், இவைகளால் அலங்கரிக்கப்பட்ட காந்தி பொருந்திய நான்கு கைகளில் இருக்கின்ற கதை, சங்கு, சக்கரம், தாமரைப் பூ இவைகளையும்; தங்க அரை நாணால் அலங்கரிக்கப் பட்ட பிரகாசிக்கும் பட்டுப் பீதாம்பரத்தையும்; நிர்மலமான தாமரைப்பூ போன்ற காந்தியுடைய திருப்பாதங்களையும்; துக்கங்களைப் போக்கடிக்கும் திருமேனியையும் நான் வணங்குகிறேன்
 
1570731.jpg


OM NAMO NARAAYANAAYA!
 
த3ச’கம் 37 ( 1 to 5 )

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்

ஸாந்த்3ரானந்த3தனோ ஹரே நனு புரா
தை3வாஸுரே ஸங்க3ரே
த்வத்க்ருதா அபி கர்மசே’ஷே வச’தோ
யே தே ந ஆதா கதிம் |
தேஷாம் பூ4தலஜன்மனாம் தி3திபு4வாம்
பா4ரேண தூ3ரார்தி3தா
பூ4மி: ப்ராப விரிஞ்சமாச்’ரிதபத3ம்
தே3வை: புரைவாக3தை: ||(37:1)


பூர்ண ஆனந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ கிருஷ்ணா! முன்னொரு காலத்தில், தேவ அசுர யுத்தத்தில், தங்களால் கொல்லப்பட்ட அசுரர்கள் புண்ணிய பாப கர்மங்களுக்கு வசப்பட்டு இருந்ததால் முக்தி அடையவில்லை. பூலோகத்தில் ஜனித்த அந்த கொடியவர்களின் பாரத்தால் பூதேவி மிகவும் துன்புற்று, சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்ம தேவனிடம் சென்றாள்.

ஹா ஹா து3ர்ஜன பூ4ரி பா4ரமதி2தம்
பாதோ2 நிதௌ4 பாதுகாம் -
ஏதாம் பாலய ஹந்த மே விவச’தாம்
சம்ப்ருச்ச2 தே3வாநிமாம் |
இத்யாதி3 ப்ரசர ப்ரலாப விவச’
மாலோக்ய தா4தா மஹீம்
தே3வானாம் வத3னானி வீக்ஷ்யபரிதோ
த3த்4யௌ ப4வந்தம் ஹரே ||(37 – 2)


“கஷ்டம்! கஷ்டம்! துஷ்டர்களின் பாரத்தால் வருந்துகின்ற, சமுத்திரத்தில் விழப்போகும் என்னை காப்பாற்றுங்கள்! என்னுடைய இந்த நிலையை நீர் தான் போக்க வேண்டும்!”என்று புலம்பிய பூமிதேவியைக் கண்ட பிரமதேவன்;சுற்றிலும் உள்ள தேவர்களின் முகங்களைப் பார்த்துவிட்டுத் தங்களைக் குறித்து தியானித்தார் அல்லவா?

ஊசே சாம்புஜ பூ4ரமூனயி ஸுரா:
ஸத்யம் த4ரித்ரயா வசோ
நத்வஸ்யா ப4வதாம் ச ரக்ஷண விதௌ4
த3க்ஷோ ஹாய் லக்ஷ்மிபதி:|
ஸர்வே ச’ர்வபுரஸ்ஸரா வயமிதோ
கத்வா பயோ வாரிதி4ம்
நத்வா தம் ஸ்துமஹே ஜவாதி3தி
யயுத்ஸாகம் தவாகேதனம் ||(37 – 3)


“தேவர்களே! பூமி தேவி கூறியது அனைத்தும் உண்மையே! இந்த பூமியையும், உங்களையும் காப்பாற்றுவதில் சமர்த்தன் லக்ஷ்மிபதி ஒருவனே ஆவான். நாம் எல்லோரும் பரமசிவனை முன்னிட்டுக் கொண்டு இங்கிருந்து சீக்கிரமாக பாற்கடலுக்குச் சென்று அவரை வணங்கித் துதிப்போமாகுக!” பிரமன் கூறியதும் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உங்கள் வாசஸ்தலமாகிய வைகுண்டத்தை அடைந்தனர்.

தே முக்3தா3நிலசா’லி து3க்3த3 ஜல
தே4ஸ்தீரம் க3தா: ஸங்கதா:
யாவத் த்வ்த்பத3 சிந்தனனைக மனஸஸ்
தாவத் ஸ பாதோ2ஜபூ:|
த்வத்3வாசம் ஹ்ருத3யே நிச’ம்ய ஸகலான்
த3யன்னூசிவான்
ஆக்2யாத: பரமாத்மனா ஸ்வயமஹம்
வாக்யம் ததா3 கர்ண்யதாம் ||(37 – 4)


மந்தமாருதம் வீசும் மனோஹரமான பாற்கடல் கரையை அடைந்து, ஒன்று சேர்ந்து உங்கள் திருவடிகளை தியானிப்பதில் மனத்தை ஈடுபடுத்தினர். உங்கள் திருவாக்கை உள்ளத்தில் உணர்ந்த பிரமன் கூறினான், “ஹே தேவர்களேபரமாத்மா எனக்கு உரைத்ததை உங்களுக்கு நான் உரைப்பேன்”.

ஜானே தீ3னத3சா’மஹம் தி3விஷதா3ம்
பூ4மேச்’ச பீ4மைர்ந்ருபை:
தத்க்ஷேபாய ப4வாமி யாத3வகுலே
ஸோ(S)ஹம் ஸமக்3ராத்மனா |
தே3வா வ்ருஷ்ணிகுலே ப4வந்து கலயா
தே3வாங்க3நாச்’சாவநௌ
மத்ஸேவார்த்த2மிதி த்வதீ3ய வசனம்
பாதோ2ஜபூ4ரூசிவான் ||(37 – 5)


“கொடிய அசுரர்களால் பூமிக்கும், தேவர்களுக்கும் உண்டாகும் கஷ்டத்தை அறிவேன். இவற்றைப் போக்குவதர்க்குப் பூரண கலைகளுடன் நான் யாதவ குலத்தில் அவதரிப்பேன். தேவர்கள் தங்கள் அம்சங்களுடன் வ்ருஷ்ணீ குலத்தில் பிறக்கட்டும். தேவப் பெண்களும் என்னை சேவிப்பதற்காக பூமியில் ஜனிக்கட்டும்” என்னும் தங்கள் திருவாக்கை பிரமன் எல்லோருக்கும் எடுத்து உரைத்தான்.
 
த3ச’கம் 37 ( 6 to 10)

ச்’ருத்வா கர்ணரஸாயனம் தவவசஸ் சர்வேஷு நிர்வாபித
ஸ்வாந்தேஷ்வீச’ க3தேஷு தாவாகக்ருபா
பீயூஷ த்ருப்தத்மாஸு |
விக்2யாதே மது2ராபுரேகில ப4வத்
ஸாந்நித்4ய புண்யோத்தரே
த4ந்யாம் தே3வகந்த3
னா முத்3வஹத்3
ராஜா ஸ சூ’ராத்மஜா: ||(37 – 6)

காதுக்கு இன்பமான தங்கள் திருவாக்கைக் கேட்டு எல்லோரும் தங்கள் கருணா அமிருதத்தால் திருப்தி அடைந்து மனக்கவலை நீங்கிச் சென்றனர். மிகப் புனிதமான, பிரசித்தி பெற்ற மதுராபுரியின் அரசனான சூரசேனனின்
புதல்வர் வசுதேவர், மஹாபாக்கியசாலியாகிய, தேவகனின் மகளான தேவகியைத் திருமணம் செய்து கொண்டார்.

உத்3வாஹாவஸிதௌ ததீ3ய ஸஹஜ:
கம்ஸோSத ஸம்மானய
ந்நேதௌ ஸூததயா க3த: பதி2 ரதே2
வ்யோமோத்த2யா த்வத்3கி3ரா |
அஸ்யாஸ்த்வா-மதிது3ஷ்ட-மஷ்டம-ஸுதோ
ஹன்தேதி ஹன்தேரித:
ஸந்த்ராஸாத் ஸ து ஹந்துமந்திகக3தாம்
தன்வீம் க்ருபாணீ மதா4த் ||(37 – 7)


விவாஹம் முடிந்தபிறகு, தேவகியின் உடன் பிறந்தவனான கம்சன் மணமக்களைச் சன்மானிக்க எண்ணித் தானே தேரோட்டியாகி தேரைச் செலுத்தும் போது,”இவளது எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகின்றான்” என்று விண்ணில் எதிரொலித்த அசரீரியால் அச்சம் அடைந்த கம்சன் உடனே மரணபயத்தில் அருகில் அமர்ந்திருந்த தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்!

க்3ருஹ்ணான்ச்’சிகுரேஷு தாம் கலமதி:
சௌ’ரேச்’சிரம் ஸாந்த்வனைர்
நோ முஞ்சன் புனராத்மஜார்பண கி3ரா
ப்ரீதோSத2 யாதோ க்ருஹான் |
ஆத்3யம் த்வத் ஸஹஜம் ததா2ர்ப்பிதமபி
ஸ்னேஹேன நா ஹன்னசௌ
து3ஷ்டானாமபி தே3வ புஷ்ட கருணா
த்3ருஷ்டா ஹி தீ4ரே கதா3 ||(37 – 8)

துஷ்ட புத்தியுடைய கம்சன் அவள் தலை மயிரைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் விடவில்லை! வசுதேவன் சமாதானம் செய்துபிள்ளைகள் பிறந்த உடனே அர்ப்பணம் செய்வதாக வாக்கு அளித்ததால் திருப்தி அடைந்து வீட்டுக்குச்சென்றான். முதல் மகன் பிறந்ததும் வாக்களித்தபடி கொண்டு சென்று கொடுத்தபோதும் இரக்கத்தால் கம்சன் அவனைக் கொல்லவில்லை. துஷ்டர்களின் புத்தி கூட ஏதோ ஒரு வேளை கருணை நிறைந்ததாகக் காணப்படுகிறது அல்லவா?

தாவத்த்வன் மனசைவ நாரத முனி:
ப்ரோசே ஸ போ4ஜேச்’வரம்
யூயம் நன்வஸுரா: ஸுராச்’ச யாத3வோ
ஜானாஸி கிம் ந ப்ரபோ |
மாயாவி ஸ ஹரிர் ப4வத்3 வத3க்ருதே
பா4வீ ஸுரா ப்ரார்த்த2நாத்
இத்யாகர்ண யதூ3னதூ3து4னத3சௌ
சௌ’ரேச்’ச ஸூனூனஹன் ||(37 – 9)

தங்கள் எண்ணம் போலவே வந்த நாரத முனிவர் கம்சனிடம் இவ்வாறு சொன்னார். “ஓ அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்கள் தேவர்கள் என்பதை அறியாயோ? மாயாவியாகிய விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உன்னைக் கொல்வதற்கு அவதரிக்கப் போகின்றான்.” இதைக் கேட்ட கம்சன் வசுதேவருடைய பிள்ளையைக் கொன்றான். யாதவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரட்டினான்.

ப்ராப்தே ஸப்தம க3ர்ப4தா மஹீபதௌ
ப்ரேரணான் மாயயா
நீதே மாத4வ ரோஹிணீம் த்வமபி
போஜஸ்ஸச்சித் ஸுகைகாத்மக: |
தே3வக்யா ஜட2ரம் விவிசி’த விபோ4
ஸம்ஸ்தூய மானஸ்ஸுரை:
ஸத்வம் க்ருஷ்ண விதூ4ய ரோக3படலீம்
ப4க்திம் பராம் தே3ஹி மே ||(37 – 10)


நாகராஜன் ஆகிய ஆதிசே ஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் நுழைந்தான். தங்கள் ஆணையால் யோகமாயை அதை ரோஹிணிக்கு மாற்றி விட்டாள். சச்சிதானந்த ரூபியாகிய நீங்கள் தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் பிரவேசித்தீர். தேவர்களால் துதிக்கப்பட்டவரும், தேவகியின் கர்ப்பத்தில் வசித்தவரும் ஆகிய தாங்கள் எனக்குச் சிறந்த பக்தியைத் தந்தருள வேண்டும்.
 
VINAAYAKA PURAANAM (1)

23d. அனலாசுரன்

தாபரம் நகரின் தென்பக்கத் தோப்பில்
தவமுனிவர் கௌண்டின்யர் வசித்தார்.

ஆசிரியை முனிபுங்கவரின் மனைவி.
பூசிப்பர் ஐங்கரனை நேசத்துடன் இவர்.

அனுதினம் அறுகம் புற்கள் கொணர்ந்து
அர்ச்சிப்பர் பதினாயிரம் அறுகுகளால்!

“மலர்கள் வித விதமாகக் கிடைக்கையில்
மணமில்லாத புற்களால் பூசிப்பது ஏன் ?”

ஆசிரியை கேட்டார் ஐயத்தை அவரிடம்;
நேசிக்கும் மனைவிக்கு கூறினார் முனிவர்.

“தேன் பருகும் வண்டாகச் சுவைத்தான்
தேவமாதரின் நடனத்தை யமன் அன்று.

நழுவியது திலோத்தமையின் மேலாடை.
நகர்ந்து சென்றுவிட்டாள் நாணத்துடன்.

விழுந்த மேலாடை தூண்டியது விரகத்தை
எழுந்து விரைந்தான் அந்தப் புரத்துக்கு.

அதிக விரகத்தால் வெளிப்பட்டது தேஜஸ்
அதனின்றும் தோன்றினான் அனலாசுரன்.

நடுங்கினர் தேவர்கள் அசுரனைக் கண்டு
நான்கு புறங்களிலும் ஓடி ஒளிந்தனர்.

அரக்கனைக் காண விரும்பாத யமன்
அடைக்கலம் புகுந்தான் அந்தப்புரத்தில்!

அனலாசுரன் அடைந்தான் மிகச் செருக்கு.
அடித்துத் துன்புறுத்தினான் தேவர்களை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM (1)

23d. Analaasuran

Koundinya and his wife Aasiriyai lived in a palm grove in the southern side of the Taaparam city. They both were devotees of Vinayaka. They would gather fresh green grass and select ten thousand tiny branches for the daily archanai of Vinayaka.

Aasiriyai wondered why the green grass which had no fragrance was preferred over the colorful and fragrant flowers. Koundinya told her this incident to explain the greatness of the green grass over the fragrant flowers.

Yamadharman was watching the divine dance by the celestial nymphs. During the dance, the upper garment of Thilothama came off loose. She felt shy and left the place quickly.

But Yama was badly aroused by the sight of her beauty. He too got up and rushed to his anthappuram. But before he could reach it, his tejas had emerged. From it emerged a son named Analaasuran.

He was terrifying to look at and ferocious in his behavior. All the Deva ran away at his sight and hid themselves. Yama himself did not want to set his eyes up on his son. He locked himself up in his harem (anthappuram).

This made Analaasuran more haughty and arrogant. He started harassing and troubling the Devas in various ways.
 
KANDAPURAANAM - URPATHTHIK KAANDAM


25. பாலையில் குளிர்ச்சி.

பெருமான் மறைந்தபின் தேவரும்,
முருகனும் மீண்டும் வழி நடந்தனர்;


திருவிடைமருதூர், மாயூரம் சென்றபின்
திருப்பறியலூர், திருவாரூர் சென்றனர்;

வெப்பம் மிகுந்த பாலையும் குளிர்ந்தது
அப்பன் அருளால் இனிய சோலை போல்;

பாலை நிலத்தில் செல்லும் முருகனைப்
பார்க்காமலேயே அறிந்தனர் அறுவர்!

திருப்பரம் குன்றம் நீங்கி வந்தனர்;
திருவருள் வேண்டிப் பாதம் பணிந்தனர்.

அறுவரின் கதையை முருகனுக்கு
அமரர்கோன் எடுத்து உரைத்தான்.

பராசர முனிவரின் ஆறு மைந்தர்கள்
சரவணப் பொய்கையின் நீரைக் கலக்க,

வருந்திய மீன்கள் துள்ளிப் பாய்ந்தன!
சிறுவர்கள் அவற்றைக் கரையில் போட,

சினந்த முனிவர் கனத்த சாபம் இட்டார்,
“மீன்களாகிப் பொய்கையில் கிடப்பீர்!

ஆறுமுகக் கடவுள் என்றோ தோன்றுவான்
இறைவன் அருளால் இப்பொய்கை நீரில்.

அன்னை அளிக்கும் முலைப்பால் பெருகிப்
பின்னே கலந்திடும் பொய்கை நீரிலும்.

பாலைப் பருகினால் உங்கள் பாபம் தீரும்.
பழைய உருவமும் கிடைக்கும் மீண்டும்.

பல காலம் கிடந்தனர் இவர் கயல்களாகி!
பால் அருந்திய பின்னரே பழைய உருவம்.

உன் அருள் வேண்டித் தவம் செய்தனர்,
உன் வரவைத் தம் அறிவால் உணர்ந்தனர்.”

முனிகுமரர்களும் பின் தொடர முருகன்
இனித் தொடர்ந்து வழி நடக்கலுற்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
KANDAPURAANAM - URPATHTHIK KAANDAM

1 (# 25). THE COOL DESERT!

After Siva and Uma disappeared, Murugan and his troop started walking again. They visited Thiru vidai maruthoor, Maayooram, Thiprup pariyaloor and Thiruvaroor. The desert land on which they walked became as cool as a nandavanam by the grace of lord.

Six person’s knew that Murugan was passing by – even without seeing him and his troop. They came down from Thirup parankundram and prostrated to Murugan. Indra told Murugan the story of those six brothers.

They were the sons of Sage Paraasara. They had played in the water of Saravanap poigai. The fish got disturbed and started leaping in the water.

The boys caught hold of the fish and threw them on the bank. The sage became very angry by this and cursed them to become six fish in the pond.

Their curse would be redeemed when Murugan appeared in the pond and Uma would feed him with her milk.

Some of the milk will fall in the poigai. Once they drank the milk, their sins would be absolved and they would regain their original form.

They waited for a long period before they got back their forms. The rushi’s
sons also joined Murugan’s troop and started walking with him.
 
DEVI BHAAGAVATAM _ SKANDA - 3

3#27c. ஸ்ரீ ராம சரிதம் (3)

பொன் நிறத்தில் ஓர் அழகிய புள்ளி மான்!
மின்னின உடல் மீது வெள்ளிப் புள்ளிகள்!

காதுகளை உயர்த்திக் கண்களை விரித்துச்
சாதுவாக நடை பயின்றது சீதையின் முன்பு.

விதி விளையாடியது; மதி மயங்கியது;
இது போன்ற மான் எங்காவது இருக்குமா?

“விளையாடத் தேவை எனக்கு ஒரு துணை!
இளைய பொன்மானைப் பிடித்துத் தாருங்கள்!”

சிந்திக்கவில்லை ராமனும் ஒருகணம் நின்று;
பந்தித்து இருந்தது அவன் மதியையும் விதி!

காவலாக வைத்தான் சீதைக்கு லக்ஷ்மணனை,
ஆவலோடு தொடர்ந்தான் ராமன் பொன்மானை!

கைக்கு எட்டுவது போலத் தோன்றும் – ஆனால்
கைக்கு எட்டாமல் ஓடிச் செல்லும் முன்னே.

போக்குக் காட்டி அழைத்துச் சென்றது மான்!
தாக்கியது ராமனை ஓர் எண்ணம் அப்போது.

‘மாய மான் கபட அசுரர்களின் வேலையோ?’
தூய ராமபாணத்தை எய்தான் பொன்மான் மீது.

மனிதனைப் போலவே மரண ஓலம் இட்டான்
தனிப் பெரும் ராமனின் குரலில் மாய மாரீசன்!

பதறினாள் சீதை கணவனின் குரல் கேட்டு!
உதறினாள் முற்றிலும் சிந்திக்கும் திறனை!

உதவி செய்யப் போகவில்லை லக்ஷ்மணன்;
உணர்ந்திருந்தான் அது ஒரு மாயமான் என்று.

“ராமனை அழிக்க வல்லவன் உள்ளானோ?
ராமன் குரல் அல்ல அது அஞ்சற்க தாயே!

காவல் வைத்துவிட்டுச் சென்ற அண்ணனின்
ஏவலை மீறி நான் செல்லேன் இங்கிருந்து.

உறுதியாகத் திரும்புவான் ராமன் இங்கு.
இறுதி குரல் ராமனுடையது அல்ல நம்பு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA - 3

3#27c. Sree Raama charitam (3)

A beautiful deer appeared in front of Seetaa. It had a golden body and siver spots all over the body. It perked its ears, widened its large eyes and walked attractively in front of Seetaa. Destiny played its role. Seetaa got deluded. Can there be a such a deer really?

Seetaa told Raama,” I need a companion to play with. Please give me that golden deer to have as my pet.” Raamaa also never stopped for moment to think whether such a deer could be real. He told Lakshman to guard Seetaa and went after the strange golden deer.

The deer appeared to be within Raamaa’s arm length and then suddenly it would take off fast. It dodged and ran and led him far far away from his parNasaala.

Suddenly Raamaa got a doubt that this unususal deer might be the trick played by the wicked asuras. He shot his arrow on the deer. It gave out the last wail of a dying man in Raamaa’s own voice!

Seetaa heard the cry for help in Raamaa’s voice. She got so agitated that she lost her sense completely. Lakshman did not go to help Raamaa. He already knew that such an unusual deer could not be real.

He reassured the agitated Seetaa thus: “No body can hurt Raamaa the invincible. It is not Raama shouting for help. Please do not panic dear mother!

I will not leave you alone here and go there since I do not want to disobey my brother’s orders. Raamaa will come back safe and sound. I am sure that it was not Raamaa’s voice at all”
 
Sreeman NArAyaNeeyam

த3ச’கம் 38 ( 1 to 5)

கிருஷ்ணாவதாரம்

ஆனந்த3ரூப ப4க3வன்னயி தேSவதாரே
ப்ராப்தே ப்ரதீ3ப்த ப4வதங்க3 நிரீயமாணை:|
காந்தி வ்ரஜைரிவ க4னாக4ன மண்ட3லைர்த்3யா:
ஆவ்ருண்வதி விருருசே கில வர்ஷவேலா ||(38 – 1)


ஆனந்த ரூபியாகிய பகவானே! தங்கள் திரு அவதார சமயம் நெருங்கியபோது, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்படும் கிரணக் கூட்டங்களை ஒத்த மேகக் கூட்டங்கள், வான வெளியை மறைத்துக் கொண்டு இருக்கும் மழைக் காலமாக இருந்தது.

ஆசா’ஸு சீ’தலதராஸு பயோத3தோயை
ராசா’ஸிதாப்தி விவசே’ஷு ச ஸஜ்ஜனேஷு |
நைசா’ கரோத3யவிதௌ4 நிசி’ மத்3யமாயாம்
க்லேசா’பஹஸ் த்ரிஜக3தாம் த்வமிஹாவிராஸீ:||(38 – 2)


மழை நீரால் எல்லா திசைகளும் நன்கு குளிர்ந்து, நல்லோர்கள் தாங்கள் விரும்பிய காரியம் கைகூடியதால் ஆனந்தப் பரவசம் அடைந்தபோது, நடு நிசியில், சந்திரன் உதிக்கும் வேளையில், மூவுலகங்களின் துயர்களைத் துடைக்க வந்த தாங்கள் திரு அவதாரம் செய்தீர்கள்.

பா3ல்யச்’ப்ருசா’பி வபுஷா த3து4ஷா விபூ4தி:
உத்3யத் கிரீட கனகாங்க3த3 ஹாரபா4ஸா |
ச’ங்காரிவாரிஜ க3தா3 பரி பா4ஸிதேன
மேகா4ஸிதேன பரிலேஸித2 ஸூதி க்3ருஹே|| ( 38 – 3)

பால பாவத்தை அடைந்திருந்தாலும் ஐஸ்வர்யங்களைத் தரிக்கின்றதும்; ஜொலிக்கின்ற கிரீடம், கை வளைகள், தோள் வளைகள், முத்துமாலைகள் இவற்றால் காந்தியுடன் விளங்குவதும்; சங்கம், சக்கரம், பத்மம், கதை
இவற்றுடன் விளங்குவதும்; மேகம் போன்ற நீல நிறத்தை உடையதும் ஆன திருமேனியுடன் பிரசவ அறையில் தாங்கள் விளங்கினீர்கள்.

வக்ஷ ஸ்த2லீ திருஷ்டி மகரந்த ரசம் நிலீன விலாஸி லக்ஷ்மி
மந்தா3க்ஷ லக்ஷித கடா2க்ஷ விமோக்ஷ பே4தை3: |
த்வன் மந்தி3ரஸ்ய க2லகம்ஸ க்ருதாமலக்ஷ்மிம்
உன்மார்ஜயன்னிவ விரேஜித வாஸுதே3வ ||(38 – 4)

ஹே வாசுதேவனே ! உங்கள் மார்பில் சுகமாக வாசம் செய்யும் அழகுடைய லக்ஷ்மி தேவியின் வெட்கம் கலந்த கண் பார்வையால், அந்த அறையில் துஷ்டனான கம்சனால் உண்டு பண்ணப்பட்ட அலக்ஷ்மியை நாசம் செய்தீர்கள் நீங்கள்.

சௌ’ரிஸ்து தீ4ர முனிமண்ட3ல சேதஸோபி
தூ3ரஸ்திதம் வபுருதீ3க்ஷ்ய நிஜேக்ஷணாப்4யாம் |
ஆனந்த பா4ஷ்ப புலகோத்3க3ம க3த்3க3தா3ர்த்3ர
ஸ்துஷ்டாவ த்3ருஷ்டி மகரந்த3 ரஸம் ப4வந்தம் ||(38 – 5)


வசுதேவர்,ஞானிகளாகிய முனிவர்களின் புத்திக்கு எட்டாமல் வெகு தூரத்தில் இருக்கும் தங்கள் திருவடிகளைத் தன் கண்களால் தரிசித்து; ஆனந்தக் கண்ணீர், மயிர்க் கூச்சம், குரல் தழுதழுப்பு இவற்றால் கனிந்து; கண்களுக்குப் பூந்தேன் போன்று இருக்கும் தங்களைத் துதித்தார்.
 
த3ச’கம் 38 ( 6 to 10 )

தே3வ ப்ரஸீத பரபபூருஷ தாபவல்லீ
நிர்லூனிதா3த்ர ஸமநேத்ர கலாவிலாஸின் |
கே2தா3னபாகுரு க்ருபா கு3ருபி4: கடா2க்ஷை:
இத்யாதி3 தேன முதி3தேன சிரம் நுதோSபூ4:||(38 – 6)

“ஸ்வயம் பிரகாசரூபியே! பரபிரம்ம ஸ்வரூபியே! துன்பத் தளைகளை அறுப்பதில் கத்தி போன்றவரே! எல்லோரையும் அடக்கி ஆளுகின்ற, தனது அம்சமான மாயைக் கொண்டு சிருஷ்டி முதலியவற்றைச் செய்கின்ற ஈசா! அருள்வேண்டும். கருணை நிறைந்த கடைக்கண் பார்வையால் வருத்தங்களை அகற்றவேண்டும்” என்றெல்லாம் வசுதேவர் மகிழ்ச்சியுடன் உங்களைத் துதித்தார்.

மாத்ரா ச நேத்ர ஸலிலாஸ்ருத கா3த்ரவல்யா
ஸ்தோத்ரைரபி4ஷ்டுத கு3ண : கருணாலய ஸ்த்வம்|
ப்ராசீன ஜன்மயுக3ளம் ப்ரதிபோ3த்4ய தாப்4யாம்
மாதுர்கி3ரா த3தி4த மானுஷ பா3ல்ய வேஷம் ||(38 – 7)


கண்ணீரால் நனைந்த கொடி போன்ற சரீரத்தை உடைய தாயாலும் புகழ் வசனங்களால் துதிக்கப்பட்டீர். கருணாநிதியாகிய தாங்கள் முந்தைய இரண்டு பிறவிகளிலும் அவர்களின் மகனகப் பிறந்ததைக் கூறினீர். பின்னர் தாயின் சொற்படி மானிடக் குழந்தையின் வடிவை எடுத்துக் கொண்டீர்.
(முந்தைய பிறவிகளில் பிருச்னி சுதபஸ் என்பவர்களுக்குப் பிருச்னிகர்ப்பனாகவும், அதிதி கச்யபர்களுக்கு வாமனனாகவும் விஷ்ணு அவதரித்து இருந்தார்.)

த்வத்ப்ரேரிதஸ்தத3னு நந்த3 தனூஜயா தே
வ்யத்யாஸ மாரசயிதும் ஸ ஹி ஸூர ஸூனு : |
த்வாம் ஹஸ்தயோரதி4த சித்த விதா4ர்ய மார்யை :
அம்போ3ருஹஸ்த க2ல ஹம்ஸ கிஷோர ரம்யம் ||(38 – 8)

அதன் பிறகு தாங்கள் வசுதேவரை ஏவினீர்கள் நந்தகோபனுடைய பெண்ணுடன் இடம் மாற்றுவதற்கு. யோகிகளால் மனத்தில் தரிக்க தகுந்தவரும், தாமரை மலரில் வீற்றிருக்கும்ஹம்சக் குஞ்சு போன்ற தங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டார்.

ஜாதா ததா3 பசு’பஸத்3மனி யோக3நித்3ரா
நித்3ரா விமுத்3ரித மதா2க்ருத பௌரலோகம் |
த்வத்ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்3
த்3வாரை: ஸ்வயம் வ்யக4டி ஸங்க4டிதைஸ்ஸுகா3ட4ம் ||(38 – 9 )


அப்போது தங்களுடைய ஏவுதலால் நந்தகோபர் வீட்டில் அவதரித்திருந்த யோகமாயை பட்டணத்து ஜனங்களை நித்திரையில் ஆழ்த்தினாள். அறிவற்றவைகளும், நன்கு பூட்டப்பட்டு இருந்தவைகளும் ஆகிய கதவுகளும் தாமாகவே திறந்து கொண்டன! என்ன ஆச்சரியம்!

சே’ஷேண பூ4ரிப4ணவாரித வாரிணாSத ஸ்வைரம்
ப்ரத3ர்ஷித பதோ மணி தீ3பிதேன |
த்வாம் தா4ரயன் ஸ க2லு த4ன்யதம: ப்ரதஸ்தே2
ஸோயம் த்வமீச’ மம நாச’ய ரோக3 வேகா3ன் ||(38 – 10)

அநேகம் படங்களைக் கொண்ட ஆதிசேஷன் மழைக்குக் குடை பிடித்தது. தன் தலைகளில் உள்ள ரத்தினங்களால் வழி காட்டியது. மஹா பாக்கியவனாகிய வசுதேவர், எந்தத் தடையும் இன்றித் தங்களை எடுத்துக் கொண்டு சென்றார்.
 
த3ச’கம் 39 ( 1 to 5)

ஸ்ரீகிருஷ்ண ஜன்ம உத்ஸவம்

ப4வந்தமய முத்3வஹன் யது3குலோத்3வஹோ நிஸ்ஸரன்
த3த3ர்ஷ க3க3னோச்சலஜ்ஜலப4ராம் களிந்தா3த்மஜாம் |
அஹோ ஸலில ஸஞ்சயஸ்ய புனரைந்த்3ரஜாலோதி3தோ
ஜலௌக4 இவ தத்க்ஷணாத் ப்ரபத3மேயதா மாயயௌ ||( 39 – 1)

யதுகுல சிரேஷ்டரான வசுதேவர் தங்களை எடுத்துக்கொண்டு போகும்போது யமுனை நதி ஆகாயம் வரை உயர்ந்து எழுந்த ஜலப் பிரவாஹத்துடன் கூடி இருந்தது. ஆனால் அந்த ஜலப் பிரவாஹம் இந்திர ஜாலத்தால் தோன்றியது போன்றே அக்கணமே வெறும் கணுக்கால் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஆச்சரியம்!

ப்ரஸுப்த பசு’பாலிகாம் நிப்4ருத மாருத3த்3 பா3லிகாம்
அபாவ்ருதகவாடிகாம் பசு’பவாடிகா மாவிச’த் |
ப4வந்த மயமர்பயன் ப்ரஸவ தல்பகே தத் பதா3த்3
வஹன் கபட கன்யகாம் கராலிங்கிதாம் வேகா3த்: ||(39 – 2)

இந்த வசுதேவர், நன்கு நித்திரை செய்யும் கோப ஸ்த்ரீக்களையும், மெதுவாக அழுகின்ற பெண் குழந்தையையும், திறக்கப்பட்ட கதவுகளையும் உடைய நந்தகோபருடைய வீட்டுக்குச் சென்றார். தங்களைப் பிரசவப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்த கபடப் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு மிக வேகமாகத் தம் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

ததஸ்த்வத3னுஜா ரவக்ஷபித நித்ரவேக3 த்3ரவ
த்ப4டோத்கர நிவேதி3த ப்ரஸவ வார்தயை வார்திமான் |
விமுக்த சிகுரோத்கர ஸ்த்வரித மாபதன் போ4ஜராட்
அதுஷ்ட இவ த்3ருஷ்டவான் ப4கி3னிகா கரே கன்யகாம் ||(39 – 3)

தங்கள் தங்கையான யோகமாயையின் அழுகையால் நித்திரை கலைந்து, வேகமாக ஓடிய சேவக சமூஹம் கம்சனுக்குப் பிரசவ சமாச்சாரத்தை அறிவித்தது. வருத்தம் அடைந்தவனாக , தலை விரிகோலமாக கம்சன் ஓடிவந்தான். சந்தோஷம் அடையாத அவன் கண்டது இரங்கத் தக்க தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தையை.

த்4ருவம் கபடசா’லினோ மது4ஹரஸ்ய மாயா ப4வேத்
அஸாவிதி கிஷோரிகாம் ப4கி3னிகா கராலிங்கி3தாம் |
த்விபோ நளினிகாந்தராதி3வ ம்ருணாளிகா மாக்ஷிபன்
நயம் த்வத3னுஜாமஜா முபல பட்டகை பிஷ்டவான் || (39 – 4)

இந்தக் கன்னிகை கபடசாலியாகிய மதுசூதனனின் மாயையாக இருக்கவேண்டும் என்று எண்ணிய கம்சன், இளம் தங்கை தன் கைகளால் அணைத்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தையை, தாமரைக் குளத்தின் நடுவில் இருக்கும் ஒரு தாமரைத் தண்டைப் பிடுங்கும் யானையைப் போல் பிடுங்கினான். உடனேயே ஒரு கற்பாறையில் மாயாதேவியை ஓங்கி அடித்தான்.

ததோ ப4வதுபாஸகோ ஜடிதி ம்ருத்யுபாசா’தி3வ
ப்ரமுச்ய தரசைவ ஸா ஸமதி4ரூட4 ரூபாந்தரா |
அத4ஸ்தலமஜக்3முஷீ விகஸத3ஷ்ட பா4ஹூஸ்புர
மஹாயூத4 மஹோக3தாகில விஹயஸா தி3த்3யுதே ||(39 – 5)

அப்போது தங்களை உபாசிக்கும் பக்தன் யமபாசத்தில் இருந்து விடுபடுவது போன்றே விரைவாக யோகமாயை கம்சனின் கைகளில் இருந்து விடுபட்டாள். பூமிக்கு வராமலேயே வேறு ஒரு ரூபத்தை அடைந்தாள். எட்டுக் கரங்களுடனும் அவற்றில் விளங்கும் அற்புத ஆயுதங்களுடனும் அவள் ஆகாயத்தில் ஆச்சரியமயமாக விளங்கினாள்.
 
Last edited:
த3ச’கம் 39 ( 6 to 10 )

ந்ருச’ம்சதர கம்ஸ தே கிமு மயா வினிஷ்பிஷ்டயா
ப3பூ4வ ப4வத3ந்தக: க்வசன சிந்த்யதாம் தே ஹிதம்|
இதி த்வத3னுஜ விபோ4 க2லமுதீர்ய தம் ஜக்3முஷீ
மருத்3க3ண பணாயித பு4வி ச மந்திராண் யேயுஷி ||(39 – 6 )

“மிகக் கொடியவனான ஹே கம்சனே! என்னைக் கொல்லுவதால் உனக்கு என்ன லாபம்? உன்னைக் கொல்பவன் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்திருக்கிறான். உன்னுடைய நன்மையைப் பற்றிச் சிந்திப்பாய்!” துஷ்டனான கம்சனிடம் இவ்வாறு கூறிவிட்டு, தேவ கணங்களால் துதிக்கப்பட்டவளாக, அங்கிருந்து அகன்று அனேக ஆலயங்களைச் சென்று அடைந்தாள் யோக மாயை.

ப்ரகே3புனரகாத்மஜா வசனமீரிதா பூ4பு4ஜா
ப்ரலம்ப3 ப3க பூதனா ப்ரமுக2 தா3னவா மானின: |
பவன்னித4ன காம்யயா ஜக3தி ப3ப்4ரமு நிர்ப4யா:
குமாரக விமாரகா: கிமிவ து3ஷ்கரம் நிஷ்க்ருபை:||(39 – 7)

கம்சன் மறுநாள் காலையில் யோகமாயையின் வசனத்தை பிற அசுரர்களுக்குச் சொன்னான். துரபிமானம் உடைய பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள் தங்களைக் கொல்ல விரும்பி, பிற குழந்தைகளைக் கொன்று குவித்து, பயமற்று உலகில் திரிந்தனர். கருணை அற்றவர்களால் என்ன தான் செய்ய இயலாது?

தத: பசு’ப மந்தி3ரே த்வயி முகுந்த3 நந்த3ப்ரியா
ப்ரஸூதி ச’யனே ச’யே ருத3தி கிஞ்சித3ஞ்சத்பதே3 |
விபு3த்4ய வனிதாஜனை ஸ்தனய ஸம்ப4வே கோ4ஷிதே
முதா3 கிமு வதா3ம்யஹோ ஸகலமாகுலம் கோ3குலம் ||(39 – 8)

முக்தியளிக்கும் கண்ணனே! அதன் பிறகு நந்தகோபன் வீட்டில் நந்தனின் மனைவி யசோதையின் பிரசவப் படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை உதைத்துக் கொண்டு நீங்கள் அழுதீர்கள். நித்திரை விட்டு எழுந்த ஸ்திரீக்கள் புத்திரப் பேற்றை எல்லோருக்கும் எடுத்துக் கூற, கோகுலம் முழுவதுமே ஆனந்த வெள்ளத்தில் பரவசம் அடைந்தது அல்லவா?

அஹோ கலு யசோத3யா நவகலாய சேதோஹரம்
ப4வந்த மலமந்திகே ப்ரத2ம மாபிப3ந்த்யா த்3ருஷா |
புன: ஸ்தனப3ரம் நிஜம் ஸபதி3 பாயயந்த்யா முதா3
மனோஹர தனு ஸ்ப்ருஷா ஜக3தி புண்யவந்தோ ஜிதா ||(39 – 9)

புதுக் காயாம்பூ போல் மனத்தைக் கவருகின்ற தங்கள் மேனியை அருகில் முதல் முதலில் பார்த்து; தன் ஸ்தனங்களைப் பருகச் செய்து; சந்தோஷமாக உங்கள் மனோஹரமான சரீரத்தைத் தொடும் பாக்கியம் பெற்ற யசோதை; உலகில் உள்ள அத்தனை புண்ணிய சீலர்களையும் ஜெயித்துவிட்டாள் அல்லவா? என்ன ஆச்சரியம்!

ப4வத் குச’ல காம்யயா ச கலு நந்த33கோபஸ்ததா3
ப்ரமோத3ப4ர சங்குலோ த்விஜகுலாய கின்னாத3தா3த் |
ததை2வ பசு’பாலகா: கிமு ந மங்களம் தேனிரே
ஜகத் த்ரிதய மங்கள த்வமிஹ பாஹி மாமாமயாத் ||(39 – 10)


நந்த கோபரும் ஆனந்த பரவசத்தில் தங்களுடைய க்ஷேமத்தை விரும்பி பிராமணர்களுக்கு எதைத்தான் தரவில்லை? அவ்வண்ணமே மற்ற இடையர்களுக்கும் என்ன மங்கலத்தைத் தான் செய்யவில்லை? மூவுலகங்களிலும் மங்கலங்களைச் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணா காப்பாற்று!​
 
The increased traffic in this thread has proved that
narAs and nAris are NOT against meeting NArAyaNA
but are reluctant to leave the safety of the forum and
enter the unfamiliar premises of the Wordpress blogs!
 
VINAAYAKA PURAANAM (1)

23e. அனலாசுரன்

இந்திரனை நாடி ஓடினர் தேவர்கள்;
இந்திரன் நாடினான் பிரமதேவனை;

நாரணனை நாடினார் பிரம தேவர்
நாரணன் கூறினார் தேவர்களிடம்,

“அனலாசுரனை அழிக்க வல்லவர்
ஆனைமுகன் ஒருவனே என்றறிவீர்.

ஐங்கரனை பணிந்தால் அவன் உமது
சங்கடங்களைத் தீர்ப்பான் விரைந்து!”

நாரணன் கூறியபடியே தேவர் குழாம்
நாடிச் சென்றது வேழமுக வேந்தனை.

கருத்தினை அறிந்து கொண்டார் அவர்.
உருவெடுத்தார் ஒரு பிரம்மச்சாரியாக.

ஆதிப் பரம்பொருளே அந்த பிரம்மச்சாரி
அறிந்து கொண்டு வணங்கினர் தேவர்கள்.

சங்கடங்களைக் கூறினர் விநாயகரிடம்.
ஐங்கரன் அளித்தான் உடனே அபயம்.

தேவர்களைத் தேடிவந்த அனலாசுரன்
தேவர்குழுவைக் கண்டு கொக்கரித்தான்.

“சிரமம் இல்லது செய்துவிட்டீர் நீவீர்
ஒரே இடத்தில் குழுமியதன் மூலம்!”

அஞ்சிய தேவர்கள் தஞ்சம் புகுந்தனர்
மிஞ்சிய தெய்வம் இல்லாத விநாயகரை!

நெருங்கிய அசுரனை வாரி வளைத்தார்,
நொடியில் அனலனை விழுங்கி விட்டார்.

“நீ காண வேண்டிய உலகங்கள் இன்னும்
நிறைய உள்ளன என் வயிற்றுக்குள்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM (1)

23e. Analaasuran

Whenever in trouble, the Deva seek Indra’s help; Indra seeks Brahma’s help and Brahma seeks Vishnu’s help.

Vishnu told the gathering, “Only Vinayaka can put an end to Analaasuran. Go and pray for his grace!”

The Deva went to Ganapathy who knew their innermost thoughts and transformed himself to a young attractive brahmachari.

The Deva knew that it was none other than Lord Ganesha. They told him of their suffering and sought his help in putting and end to Analaasuran.

Ganesha gave them abhayam immediately. Meanwhile Analasuran went in search of the missing Deva. He was happy to find them all with the young brahmachari.

He chuckled to himself and said,”You have made my job much easier by assembling in one place”. He approached them menacingly. The Deva hid behind Ganesha. As Analaasuran came nearer Ganesha grabbed him and swallowed him whole.

He told the ausran “There are many worlds in my stomach which you have not seen yet. Have a glimpse now!”


 
26. திருச்செந்தூர்.

திருச் செங்குன்றூரைக் கண்டனர் அவர்.
திருச் செந்தூரைச் அடைந்தனர் அவர்.


திருக் கோவில் உருவாக்கினான் இந்திரன்,
முருகன் எழுந்தருளினான் அரியணையில்.

“சூரன் போன்றோர் தோன்றியது எங்ஙனம்?
கோரத்தவம் செய்து பெற்ற மேன்மை எவை?

குற்றங்கள் செய்து அளித்த துன்பங்களையும்
முற்றிலுமாக எடுத்து உரைப்பீர்!”என்றான்.

இந்திரன் பணித்தான் குலகுரு வியாழனிடம்,
“செந்தூர் முருகனுக்கு எடுத்து உரைப்பீர் நீர்!”

“நீ அறியாதது என்று ஒன்றுமில்லை முருகா!
நீ விரும்புவதால் நான் உனக்கு உரைக்கின்றேன்”.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

[உற்பத்திக் காண்டம் முற்றியது]
 
Back
Top