• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

48 (a). நாரைக்கு பக்தி கொடுத்தது.

தாமரைக் குளம் என்னும் அழகிய ஊர்,
தாமரைகள் நிறைந்த தடாகங்களுடன்.

துள்ளி விளையாடும் வண்ண மீன்கள்;
அள்ளி விழுங்கும் அவற்றை நாரைகள்.

நீரின்றி வாழாது உலகும், உயிர்களும்;
நீரின்றிப் போய்விடும் வானம் பொய்த்தால்.

வானம் பொய்த்து விட்டது அங்கே!
வானம் பொழிய மறந்து விட்டது!

நீர்நிலைகள் முற்றும் வற்றலாயின!
நீரிலுள்ள மீன்கள் எங்கே போயின?

உணவும் இல்லை, நீரும் இல்லை!
உலர்ந்த இடத்தி
ல் செய்வது என்ன?

நாட்டை விட்டுப் பறந்தது நாரை,
காட்டை அடைந்து சோர்ந்து விழுந்தது.

ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தனர் அங்கே,
ஜீவனை போஷிக்கும் வற்றாத தடாகம்!

'அதோ தீர்த்தம்' என்ற பெயர் அதற்கு.
அதில் தீர்த்தம் வற்றவே வற்றாதாம்!

படித் துறைகள் இருந்தன அங்கே
வடிவில் சதுரம், சீரிய முறையில்!

சந்தியா மடம் ஒன்று அங்கிருந்தது!
விந்தையான இடம், மரங்கள் சூழ
ந்தது!

நல்ல பாதிரி, வேங்கை, வஞ்சி, மருது,
வெல்லும் மணம் வீசி மலர்ந்திருந்தன!

தண்ணீரிலே முங்கிக் குளிப்பார்கள்
தண்ணருள் பெற்ற ஜீவன் முக்தர்கள்.

முடிக் கற்றைகள் நீரில் புரளும் போது,
ஒளிந்து விளையாடும் மீன் கூட்டம்!

"புண்ணிய சீலர்களைத் தீண்டுவதற்கு
என்ன தவம் அவை செய்திருந்தனவோ?

உணவே இன்றி உயிரே போனாலும்
உண்ணக்கூடாது புண்ணியசாலிகளை!"

சந்தியா மடத்தில் நடக்கும் தினம்
சத்சங்கம் ஜீவன் முக்தர்களின்!

மதுரையைப் பற்றிப் பேசுவதற்கு
மதுரமான விஷயங்கள் எத்தனை?

மதுரைப் புராணத்தை ஓதுவார்,
மதுரையின் சிறப்பை அலசுவார்.

மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
கீர்த்திகள் பெற்றது மதுரையம்பதியே!

வயிற்றுக்கு உணவு இல்லாது போயினும்
செவிக்கு உணவு கிடைத்தது நிறையவே.

கேட்கக் கேட்க வயிற்றுப் பசி மறைந்து
கேட்கக் கேட்க அறிவுப்பசி நிறைந்தது!

அறியாமை இருள் அகன்று போயிற்று!
அறுந்து போனது இருவினைத் தொடர்பு!

கர்மவினைகளைத் தொலைத்து நாரை,
சர்வமும் அறிந்து சிவபக்தி பெற்றது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 48. THE GIFT OF BHAKTI TO THE STORK.

A lovely village was named as Thaamaraik Kulam - since there were lovely ponds with many blooming lotuses. The colorful and frisky fish leaped and played in the water. The stork living near the pond had satisfying meals of fish everyday.

Times changed from good to bad. The rains failed completely. All the water bodies dried up slowly and steadily. What happened to all the colorful frisky fish? The stork found neither water nor fish in the pond!

Life had become impossible there.

The stork flew back to the forest hoping to find better living conditions there. There was a pond in the forest and it never dried up. Many Jivan mukthaas lived there.The pond was called Adho Teertham.

The pond had steps running all around it in a beautiful square shape. The place was called Sandhiyaa Mandapam. Trees surrounded this wonderful place laden with colorful and sweet smelling flowers.

The Jivan Mukthaas bathed in the pond Adho Theertham. The fish in the pond used to play hide and seek in the matted coils of their hair when they bathed.

The stork wondered at the good fortune of the fish which could actually come into contact with the Jivan Mukthaas. It made a harsh decision."Even if I am starved and famished, I would never eat a fish from this pond!"

Sat Sang wold be held every day in the Sandhyaa mandapam. The Jivan Mukthaas could go on talking about Madhuraapuri for hours together - the holiest of all holy places with the best Sthalam, Theertham and Moorthy.

The stork was starving due to the self imposed restrictions but its ears feasted on the greatness of Madhuraapuri and Soma Sundareswarar. It forgot its pangs of hunger and its mind became calm and peaceful.

Its intellect gathered useful knowledge. It got out of its bonds of karma. It learned what needs to be learned for liberation. Its bakthi for Siva ripened.





 
48 (b). நாரைக்கு முக்தி கொடுத்தது.

சிவபக்தி பற்றி இழுத்தது நாரையை,
தவநெறி நிறைந்த மதுரையம்பதிக்கு!

"இனி எனக்கு இங்கென்ன வேலை?
இனி நான் சேர வேண்டியது மதுரை!"

சோர்வின்றிப் பறக்கலாயிற்று நாரை;
சேர்ந்தது சென்று மதுரையம்பதியை!

பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
சுற்றி வந்தது ஐயன் விமானத்தை வலம்!

தொடர்ந்தன உபவாசம், வலம் வருதல்,
தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு அங்கு!

பசி வந்திடப் பத்தும் பறந்து போம் அன்றோ?
பசி மேலிட்டு விட்டது செங்கால் நாரைக்கு.

புசிக்க விரும்பியது வண்ண மீன்களை;
புசிக்கவில்லை அத்திருக்குள மீன்களை!

சிவன் தோன்றினான் நாரையின் முன்னே!
தினம் அது தியானித்த உருவத்திலேயே!

"என்னருமை நாரையே கூறுவாய்!
என்ன வரம் வேண்டும் உனக்கு?' என,

"சிவலோகப் பதவி வேண்டும் ஐயனே!
இகலோகத்தில் எதுவும் வேண்டாம்!"

"அங்ஙனமே ஆகுக! " என்றான் ஐயன்.
செங்கால் நாரையின் தாபம் தீர்ந்தது.

"இன்னும் ஒரு வரம் வேண்டும் என் ஐயனே!"
"என்னவாயினும் சொல் என் நாரையே!" என,

"தண்ணருள் பெற்ற தீர்த்தத்தில் உள்ள,
புண்ணிய மீன்கள் உண்ணப்படலாகாது!

இல்லாமல் செய்வீர் குளத்தில் மீன்களை!
பொல்லாத பறவைகள் தின்னாதவாறு!"

அருளினான் அதையும் கருணாகரன்,
அருளினான் நாரைக்குச் சாரூப்யம்!

மூன்று கண்களும், நான்கு தோள்களும்
தோன்றின நாரையின் திருமேனியில்!

வெண்ணீற்று மேனி, வரிப் புலித்தோல்,
அண்ணலின் உருவம் பெற்றது நாரையும்!

அற்புத விமானம் வந்து இறங்கியது!
கற்பகலோகம் சென்றது நாரை சிவன்!

கூடற்காண்டம் முற்றுப் பெற்றது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 48 (b). THE GIFT OF MUKTHI TO THE STORK.

Siva Bhakti drew the stork to Madhuraapuri. It flew forgetting its hunger, thirst and weakness. It reached the holy place as quickly as was possible.

It took a holy dip in the Pond Of Golden Lotuses. It did pradakshinam of the holy vimaanam of the Lord's temple. It meditated of Lord Siva in its own way.

It did neither eat nor sleep! This holy dip, the vimaana pradakshinam and meditation went on for fifteen days.

The frisky fish tempted the stork everyday while it took the holy dip. But its intellect ruled its instinct and it refrained from eating the fish.

Lord appeared to the stork in the same form it had meditated on Him! He asked in a kind voice,

"What is that you desire my little bird?"

"Lord! I want to be a part of Sivalokam. I have no other desires in this Boolokam! "

Lord smiled kindly and said,"Be it so!"

"I have one more request my Lord! The holy fish in this pond should not be eaten by the wicked birds. So please bless that the pond will remain devoid of any fish in the future."

"Be it so!" said the Lord and gave the stork Saaroopya Mukthi.

The stork grew three eyes and four arms! Its forehead shone with the holy viboothi. It was dressed in a tiger skin and became an exact replica of Lord Siva himself!

A divine vimaanam came down and carried the stork turned Siva to the Sivalokam.

KOODAL KAANDAM GETS COMPLETED WITH THIS.
 
சந்திர சேகர இஷா இஷா ..............

நான் விரும்பிப் பாடும், கற்பிக்கும் இந்த சிந்துபைரவி ராகப் பாடல்,

ஆலத்தூர் சகோதரர்களால் பிரசித்தமானது. பாட்டு பட்ட பாட்டைக் கண்டு,

எனக்குத் தாங்கவில்லை! இதோ, சரியான பாடல்:



சந்த்ரசேகரா ஈசா ஈசா


சுந்தரேஸ்வரா கௌரீசா


செஞ்சடாதரா ஈசா



அந்தி வண்ணனே சம்போ


அருள் முக்கண்ணனே ஸ்வயம்போ


சிந்தை தீர வந்தாய் சிதம்பரேசா


கைலாசவாசா

:pray2:
 

நான் விரும்பிப் பாடும், கற்பிக்கும் இந்த சிந்துபைரவி ராகப் பாடல்,

ஆலத்தூர் சகோதரர்களால் பிரசித்தமானது. பாட்டு பட்ட பாட்டைக் கண்டு,

எனக்குத் தாங்கவில்லை! இதோ, சரியான பாடல்:



சந்த்ரசேகரா ஈசா ஈசா


சுந்தரேஸ்வரா கௌரீசா


செஞ்சடாதரா ஈசா



அந்தி வண்ணனே சம்போ


அருள் முக்கண்ணனே ஸ்வயம்போ


சிந்தை தீர வந்தாய் சிதம்பரேசா


கைலாசவாசா

:pray2:

naan virumbhi ketpadhu smt.nithyashri...for me she is like m s subbulakshmi who transports me to daiva lokam :)

http://www.youtube.com/watch?v=pGnY4OzeODQ
 
Last edited by a moderator:
# 49 (a). திரு ஆலவாய் கண்டது.

சுகுணபாண்டியனுக்குப் பின்னர் மதுரையைச்
சுபிட்சமாக ஆண்டனர் பாண்டிய மன்னர் பலர்;

பாண்டிய மன்னன் சித்திர விரதன் முதலாக,
பாண்டியன் மன்னன் அதுல கீர்த்தி ஈறாக!

அதுல கீர்த்தியின் அருமை மகன் ஆகிய
கீர்த்தி பூஷணனின் ஆட்சி நடந்த காலம்;

ஏழு கடல்களிலும் பொங்கியது பிரயளஜலம்!
ஏழு தீவுகளும், அனைத்தும் அழிந்து போயின!

ஊழிக் காலத்தில் பொங்கிய பேரலையில்
மூழ்கிப் போகாமல் இருந்தவை சிலவே!

அன்னை மீனாட்சியின் அழகிய கோவில்,
பொன்னார் மேனியனின் அற்புத விமானம்,

பொற்றாமரைக்குளம், ரிஷபமலை, யானை மலை
பன்றி மலை, பசு மலை, நாக மலை என்பவைகள்!

பிரளய ஜலத்தில் அழிந்து போய்விடாமல்,
ஸ்திரமாக நின்று இருந்தவைகள் இவைகளே.

சிருஷ்டி நிகழ்ந்தது மீண்டும் முன்போலவே,
சிவன் அருளால் அனைத்தும் தோன்றலாயின;

சந்திரக் குலத்தின் மன்னன் ஆனான்,
வங்கிய சேகர பாண்டியன் என்பவன்.

அண்ணலின் திருக்கோவிலைச் சுற்றி ஒரு
வண்ணமிகு ஊரை அமைத்து ஆண்டான்.

நல்லாட்சியில் பெருகின நல்ல வளங்களுடன்
நற்குடி மக்களின் எண்ணிக்கையும் கூடவே!

எல்லோரும் இனிதே வாழ்வதற்கு ஏற்றதான
நல்லதொரு நாட்டைச் சமைக்க விழைந்தான்;

எல்லைக் கோடுகள் தெரியவில்லை எவருக்கும்!
எல்லாமே பிரளயத்தில் அழிந்து போய்விட்டதால்!

அண்ணலின் திருக்கோவில் சென்று வணங்கி
விண்ணப்பித்தான் தன் மனக் கோரிக்கையை;

அம்பலத்தில் தோன்றினான் நம்பிரான் உடனே;
தம்மிடத்தில் அருள் வேண்டி நின்ற மன்னனுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 49 (a). THIRU AALAVAAI - THE NEW CITY.

Suguna Paandiyan was succeeded by a line of kings from Chitra Virathan up to Athula Keerthi.

It was during the reign of Keerthi Bhooshanan- Athula Keerthi's son that the seven seas swelled up and swallowed all the creation.

But for a few things everything vanished. The only things that were spared by the pralaya jalam were the Meenakshi temple, the vimaanam of Soma Sundareswarar, The Pond of Golden lotuses, the Rishaba Giri, the Hasthi Giri, the Varaaha Giri, the Pasu malai and the Nagaamalai.

The srushti was resumed by the divine grace of lord Siva. The new Paandiya king was Vangiya Sekaran. He built a small city around the Soma Sundara temple and ruled well.

Auspiciousness, prosperity and wealth grew. So also the population of his citizens. He wished to construct a new bigger city to accommodate his countrymen.

No one knew the boundaries of the old city. He prayed to Lord Siva to help him build the new city exactly where the old city was situated originally.

Siva answered to his sincere prayers and appeared almost immediately.
 
# 49 (b). பாம்பலங்காரச் சித்தர் பிரான் .

பாம்பலங்காரச் சித்தர் வடிவெடுத்து நின்றார்!
பாம்பே ஓர் அரை ஞாண், பாம்பே ஒரு பூணூல்,

பாம்புகளே வண்ண மாலைகள், பாம்புகளே கங்கணங்கள்;
பாம்புகளே கால்கிண்கிணிகள், பாம்புகளே அணிகலன்கள்!

கங்கணப் பாம்பிடம் கங்காதரன் கூறினார்,
"வங்கி வளைந்து எல்லையைக் காட்டுவாய்!"

"நான் எல்லையைக் காட்டும் இந்த ஊர்
என் பெயராலேயே விளங்கிட வேண்டும்!"

கங்கண நாகம் மிகமிக நீண்டு வளர்ந்தது!
அங்கு பதித்துக் கொண்டது வால் நுனியை,

கிழக்கு திசைக்குச் சென்று அடைந்தது,
வலக்கைப் புறமாக அந் நகர எல்லைக்கு!

ஊர்ந்து சென்றது ஒரு பெரிய வட்டத்தில்,
சேர்ந்து கவ்வியது தன் வால் நுனியை,

வட்டத்துக்குள் சுட்டிக் காட்டியது அங்கே
கட்டப் படவேண்டிய புத்தம் புது நகரத்தை!

மீண்டும் சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு
ஆண்டவன் கைக் கங்கணம் ஆகிவிட்டது.

கண்முன் இருந்து கணத்தில் மறைந்துபோனான்
அண்ணல் சிவபிரான் அனைத்து நாகங்களுடன்.

நன்கு அமைத்தான் சக்ரவாளகிரியை,
வங்கிய சேகரன் வலிய மதில் சுவராக!

தெற்கு வாசலில் அழகிய திருப்பரங்குன்றம்,
வடக்கு வாசலில் உயர்ந்த ரிஷப மலை,

மேற்கு வாசலில் மதிக்கத்தக்க திருவேடகம்.
கிழக்கே அருள்மிகு திருப்பூவனம் அமைந்தன.

ஆலம் ஆகிய நஞ்சை வாயில் கொண்ட நாகம்
அருளிக் காட்டிப் பெற்று விட்ட அரிய வரத்தால்,

ஆலவாய் மதில் ஆகிவிட்டது சக்ரவாளகிரி.
ஆலவாய் ஆகிவிட்டது புதிய நகரம் மதுராபுரி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 48 (b). THE SIDHDHA WITH SNAKES!

As soon as the Paandiya King Vangiya Sekaran prayed to Lord Siva, He emerged as an unusual sidhdha. He was decorated by poisonous snakes all over His body!

He wore a snake in his waist, another as a garland, two more as kankanam, and two more as kinkini. His poonool was also a snake. All his ornaments were invariably snakes.

Siva spoke to his Kankana snake, "Show the King the original boundary of the city of Madhuraapuri!"

The snake wanted a boon that the new city must be named after it. God granted the boon.

The snake now became very long. It fixed the tip of its tail firmly in the east as a mark. It slithered forward to enclose a huge area of land and grabbed the tip of its own tail, forming a huge circle.

The area inside its coil was the area where the new city should be built.

It then reduced to it original size and became a kankan again. The sidhdha vanished with all his snakes.

Vangiya Sekara Paandiyan built a very strong wall to mark the boundary of the new city. It was named as Chakravaala Giri.

The four gates of the wall were constructed thus: Thirupparam Kundram formed the Southern gate, Rishaba Giri the Northern gate, Thiru Vedagam formed the Western gate and Thirupoovanam was the Eastern gate.

Aalam means poison. Since the snake which had deadly poison in it mouth showed the boundary, the city was named as Aaalavaai Nagaram. The boundary was known as Aalavaai Mathil.
 
# 50. சுந்தரேச அம்பு எய்தது.

# 50 (a). தோல்வியின் விளிம்பில்!

வங்கிய சேகரபாண்டியன் ஆட்சியில் நாட்டில்
தங்கினர் அன்புடன் கலைமகள், அலைமகள்;

நிலமகள் ஈந்தாள் தன் வளம் அனைத்தும்,
நிலத்தில் வாழும் செல்லப் பிள்ளைகளுக்கு.

நன்றாக வாழ்ந்தால் காணப் பொறுக்குமா எதிரிக்கு?
பொன்றாவது மகிழ்ச்சியைக் குலைக்க வேண்டுமே!

விக்கிரம சோழமன்னன் தன் நண்பர்களுடன்
அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டான்.

வடநாட்டு அரச நண்பர்கள் உதவியுடன்
படை எடுத்து வந்தான் பாண்டியன் மீது!

உடைத்து எறிந்தான் வாவிகள், ஏரிகளை!
கடத்திச் சென்றான் கறவைப் பசுக்களை!

கடலனைய சேனையும், வட நண்பர்களும்
படையெடுத்து வரும் செய்தி கேட்டதும்,

சமுத்திரம் அனைய சேனையை வெல்வதற்கு
சோமசுந்தரரிடமே பாண்டியன் சரணாகதி!

செஞ்சடையும், பிஞ்சு நிலவும் திகழும் ஈசன்
செங்கழல்கள் தவழும் பாதங்கள் பற்றினான்;

"அஞ்சற்க பாண்டிய மன்னா! நம்பி என்னிடம்
தஞ்சம் அடைந்த உனக்கே வெற்றி நிச்சயம்!"

ஓடி வந்த ஒற்றன் சொன்ன செய்தி இது,
"நாடிச் சேனைகள் நெருங்கின ரிஷபகிரியை!"

நொடியில் நால்வகைப் படைகள் புடை சூழ
இடிபோல் முழங்
கும் அமர்க்களத்தை அடைந்தான்.

ஆலவாய் மதிலின் வெளிப்புறம் நின்றது
அலை அலையாகப் பகைவர் அணி வகுப்பு!

இரு படைகளும் பொருதலாயின நேருக்கு நேர்
பெருத்த ஆரவாரத்துடனும், ஆர்வத்துடனும்!

தேருடன் குலுங்கிப் பொருதன தேர்கள்!
வீரர்களுடன் பொருதனர் பிற வீரர்கள்!

குதிரையுடன் குதிரையும், யானையுடன்
எதிர் நின்று யானையும் பொருதலாயின.

வடவர்கள் சேனை திடமாக முன்னேற
திடுக்கிட்ட பாண்டியர் மருண்டுவிட்டனர்!

போட்டது போட்டபடி ஓடலாயினர்
தேட்டம் இழந்து விட்ட அந்த வீரர்கள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி!
 
# 50 (a). SHOOTING THE SUNDARESA BAANAM.

Vangiya Sekara Paandiyan was a just king. The Goddess of Prosperity and the Goddess of Learning blessed his citizens. The land was fertile and gave the best yield to the people.

The enemies could not tolerate the well being of a good king. Vikrama Chozhan wanted to wage a war with Paandiyan with the help of his friends - the kings of North India.

He waged a war. The cows were captured. The ponds and dams were destroyed. The news about this reached the Paandiya king.

He knew that his own army was inadequate to confront the combined forces of Chozhan and his friends.

He did charanaagathi to Lord Siva, the lovely lord who sported a crescent moon on his matted coils.

An asareeri comforted him,"Do not fear! I never let down any one who trusts in me. The victory will be yours!"

A spy came running to report that the army of the enemies has reached the Rishaba Giri. Paandiayn left with his chaturanga sena and reached the war front. The enemies were waiting like waves to enter the Aalavaai Mathil.

The two armies ran into each other and the war began. Charioteers fought Charioteers, horsemen fought horsemen and elephants fought elephants.

Suddenly the army of the North Indian Kings seemed to be advancing. The Paandiya sena had to fall back. The soldiers started running away confused - much to the joy of the Chozha King! .
 
Last edited:
# 50 (b). சிவன் போர் புரிய வந்தார்!

வெற்றியின் விளிம்பைத் தொட்டுவிட்ட சோழன்
வெற்றிச் சங்கை எடுத்து முழங்கலானான்;

"இதுவே தக்க தருணம்!" என்று, வேடர் மன்னன்
உருவெடுத்து
ப் படைத் தலைவன் ஆனார் பிரான்.

விடுத்த அம்பு ஒவ்வொன்றும் போர்க்களத்தில்
அடித்து வீழ்த்தியது நூறு நூறு வீரர்களை!

வியப்பில் ஆழ்ந்த சோழமன்னன் கண்டது
மயக்கிய அம்பில் பொறித்த ஈசன் பெயர்!

"சுந்தரேச" என்னும் பெயர் தாங்கிய பாணம்
சுந்த
ரேசப் பெருமானின் சொந்தம் ஆயிற்றே!

எந்த வீரனுடன் பொருது வென்றாலும்
சுந்தரேசனை ஒருவர் வெல்ல இயலுமோ?

ஓட முற்பட்டான் போர்க்களத்தில் இருந்து
பேடியாக மாறிவிட்ட விக்கிரம சோழன்.

வேடிக்கை பார்க்கவில்லை வட அரசர்கள்,
ஓடவும் விடவில்லை சோழனை அங்கிருந்து.

மீண்டும் தொடர்ந்தது ஒரு கடும் போர்!
மீண்டும் அம்பு மழை பொழிந்தார் ஈசன்.

பத்துக் கணைகள் வீழ்த்தின நூற்றுவரை!
நூறு கணைகள் வீழ்த்தின ஆயிரம் பேரை!

எங்கு நோக்கினும் பிண
க் குவியல்கள்;
பொங்கி ஓடலாயிற்று ஒரு செந்நிற ஆறு.

வட நாட்டு நண்பர்களும் போரில் மடியவே
பிடித்தான் ஓட்டம் சோழன் புறமுதுகு இட்டு.

வெற்றி வாகை சூடினான் வங்கிய சேகரன்
வெற்றிச் சங்கை ஊதி முழங்கினான் அவன்,

அஷ்ட மங்கல ஆரத்திகளுடன் அரசன்
அரண்மனை சேர்ந்தான் அரன் அருளால்.

வெற்றியைத் தந்த சிவ பெருமானைச்
சற்றும் மறக்கவில்லை வங்கிய சேகரன்

மாணிக்கம் இழைத்த ஆணிப் பொன் வில்லுடன்,
பாணமும் அவன் பெயர் பொறித்துச் சமர்ப்பித்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.



 
50 (B). SIVA APPEARS IN THE BATTLE FIELD.

The Chozha king was so sure of his victory that he started to blow the conch of victory. Siva decided that it was the right time for his entry in the battle field.

He assumed the form of the chief of the hunters. Each of his arrows killed a hundred persons. The Chozha king was wonder struck to read the name of the Lord Sundaresa in each of his arrows.

So it was Siva himself in a human form! Who could win Siva in a war? He tried to run away from the battle field and escape. The kings of the North made fun of him and held him back.

The war continued. Siva's arrows killed hundreds, thousands and tens of thousands of horses, men, elephants and charioteers.

The enemy's army was wiped out in no time! Dead bodies piled up into huge heaps and a river of blood started flowing.

Paandiyan emerged victorious. He reached is palace in safety and amidst celebrations. He never forgot Siva's timely help.

He offered to God a pure gold bow studded with gem stones and an arrow of gold with the Lord's name inscribed on it.
 
# 51 (a). அக்ஷரப் புலவர்கள் தோற்றம்.

ஆலவாய் அம்பதியில் ஆட்சி புரிந்தான்
அழகிய முறையில் வங்கிய சேகரன்;

அசுவமேத யாகங்கள் பத்துப் புரிந்தார்
காசியில் பிரமன் மும்மனைவியருடன்.

நீராடச் சென்றான் பிரமன் கங்கைக்கு,
சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரியருடன்.

செல்லும் வழியில் நின்றாள் சரஸ்வதி,
உள்ளம் கவரும் ஓரிசையில் மயங்கி.

சரஸ்வதிக்குக் காக்கவில்லை பிரமன்,
சாவித்திரி, காயத்திரியுடன் நீராடினார்.

கரையேறிவிட்ட கணவனைக் கண்டதும்
சரஸ்வதிக்குக் கோபம் மூண்டு விட்டது.

"என்னைத் தனியே விட்டு விட்டு நீர்
இன்னும் இருவருடன் நீராடியது
ஏன்?"

கோபம் அனைவருக்கும் பொது ஆயிற்றே!
கோபம் கொண்டார் இப்போது பிரமனும்!

"உன் மேல் குற்றம் உள்ளபோதே நீ
என் மேல் சீறிச் சினந்து கொண்டாய்!

எண்ணற்ற மனிதப் பிறவிகள் எடுத்து
மண்ணில் உழன்று குற்றம் நீங்குவாய்!"

"மண்ணில் பிறவியே வேண்டாம் எனக்கு!
எண்ணற்ற பிறவிகளில் என்ன செய்வேன்?"

கண்ணீரால் சினம் தணிந்தார் பிரமன்,
பெண்ணின் சாபத்தை எளிதாக்கிவிட்டார்.

"ஆ"காரம் முதல் "ஹா"காரம் வரையுள்ள
அக்ஷரங்கள் நாற்பது எட்டும் உனக்குதவும்!

நலம் திகழும் நாற்பது எட்டு எழுத்துக்களும்
பலவேறு வர்ணங்களில் பிறவி எடுப்பார்கள்.

அகரம் ஆவது நம் தனிப்பெரும் தலைவன்
அரன் ஆகிய சோமசுந்தரேஸ்வரனே அன்றோ?

அவனும் ஒரு புலவனாகி, பின் தலைவனாகி,
சங்கம் வைத்துத் தங்கத் தமிழ் வளர்ப்பான்."

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 51. (a). THE AKSHARA POETS.

Vangiya Sekaran ruled over Thiru Aalavaai well.

Brahma performed ten Aswamedha yaagaas with the help of his three wives Saraswathi Devi, Savithri Devi and Gayatri Devi.

One day Brahma went to the Ganges with his wives for the morning bath. On the way Saraswathi Devi listened to the divine music of a Vidhyaadhari and lingered on.

Brahma proceeded with his other two wives and finished his morning dip. Saraswathi Devi got annoyed to find that he had not waited for her arrival. She demanded to know why he had not waited for her arrival.

Now it was Brahma's turn to get angry. He told her,
"It is your fault that you came late. But you are taking me to task. May you be born on earth as a human being until all your sins are absolved!"

"I do not want to be born on the earth as a human being even once. Why should I suffer several births as a human?"

Saraswathi's tears moved Brahma's heart. He told her,
"The forty eight Aksharaas from 'aa' to 'haa' will be born as human beings in various varnaas. They will become famous poets and help Tamil flourish.

The first letter 'a' represents Lord Soma Sundara Himself. He too will become a poet- the leader of the group and let knowledge and wisdom bloom"!
 
# 51 (b). அக்ஷரப் புலவர்களின் மேன்மை.

பிரமனின் ஆணைபடிச் சென்று பிறந்தனர்
வேறு வேறு இனங்களில் அவ்வக்ஷரங்கள்.

அக்ஷரக் குழந்தைகள் ஆன அவர்கள்
சிக்ஷை இன்றியே அறிவொளி வீசினர்.

வயது வளர வளர உடன் வளர்ந்தன,
பயனுள்ள கல்வி, கேள்வி, புலமை.

கலைகளிலும் தேர்ந்து காணப்பட்டனர்,
விலைமதிப்பற்ற தமிழ்மொழி அறிவுடன்.

பதினெட்டு மொழிகளிலும் பாண்டித்திய
ம்,
புதுமையான புலமைத் திறன் நற்றமிழில்.

பெண்களை வெறுத்தனர்! ருத்திராக்கம்,
வெண்ணீறுடன் அணிந்து திகழ்ந்தனர்.

சிவன் மேல் இருந்தது அளவற்ற பக்தி;
அவன் பூஜையிலேயே கழிந்தது காலம்.

பூமாலையுடன் சூட்டினர் பாமாலைகள்,
பூஜைகள் பரமனுக்குச் செய்யும்போது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 51 (b). THE GREATNESS OF THE AKSHARAA POETS.

The forty eight Aksharaas (or letters) were born as human beings in different varnaas. They shone with intellectual brilliance even as small children.

As they grew up, they became well versed in all the arts and the eighteen languages. They all excelled in Tamil.

They disliked pomp and show and preferred to wear Rudraaksham instead of gold. They preferred Viboothi over sandal paste.

They had no interest in women and spent all their time in worshiping Lord Siva on whom they had boundless bhakti.

They decorated Him with many floral garlands as wall as by the poetic garlands of their own beautiful Tamil compositions.
 
# 51 .(c). சங்க மண்டபம் தந்தது.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!
உற்றோர் மட்டுமன்றி மற்றோரும் விரும்புவர்;

நாடு முழுவது சுற்றி வந்தனர் புலவர்கள்,
நாடி வந்தவர்களை வாதத்தில் வென்றனர்.

ஆலவாய் அம்பதியைச் சென்று சேர்ந்தனர்,
ஆலவாய் அழகனைக் காண விழைந்தனர்.

அனைத்துப் புலவர்களும் ஒருமித்த கருத்துடன்
இனத்தை மறந்துவிட்டு ஒன்றாகச் சென்றனர்.

அழகிய புலவரின் வடிவெடுத்தார் இறைவன்;
பழகியவர் போல் எதிர் வந்து நின்றார்!

"நீவீர் யாவர்? எங்கிருந்து உங்கள் வருகை?"
"தேவர் பிரானைத் தொழ ஆலவாய் வந்தோம்!"

"அடைந்தவர் துன்பத்தைப் போக்குவது ஆலவாய்!
கடைத்தேற்றும் பிரானைத் தொழுதிட வாரீர்!" என்றுத்

திருக் கோவில் அழைத்துச் சென்றார் பிரான்;
பெருமானை வழிபடச் செய்து மறைந்தார்!

வங்கிய பாண்டியன் அரசவை சென்றனர்;
பொங்கிய மேன்மையும், தமிழ்ப்புலமையும்;

தங்கிய அறிவும், அடக்கமும், ஒழுக்கமும்,
அங்கிருந்தோர்களை வியப்பில் ஆழ்த்தின!

பரிசுகள் பல வழங்கினான் பாண்டியன்;
வரிசைகள் தந்து அவரை கௌரவித்தான்!

சங்க மண்டபம் ஒன்றை நிறுவினான்;
தங்கச் செய்தான் அங்கு புலவர்களை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 51 (c). MEETING THE PAANDIYA KING

The educated people are welcomed wherever they go!

These forty eight poets went round the country. They won over easily anyone who wished to indulge in debates with them.

They wished to go to Thiru Aalavaai to have a dharshan of Soma Sundareswarar. They all went there together as a group.

Siva donned the form of a Tamil Poet and approached them. "Who are you people? Where are you coming from?"

They replied unanimously," We have come for a dharshan of Soma Sundareswarar!"

"Yes! Aalavaai is the place which absolves all the sins. Soma Sundareswarar is the giver of mukthi. Let us worship Him together!"

Siva led them to the temple and helped them to have a dharshan. He just vanished immediately after that.

The poets realized that it was the Lord Himself who had helped them with the dharshan.

They went to meet the Paandiya king to his durbaar. Their greatness, their simplicity, their intelligence and their good manners impressed everyone favorably.

The king showered costly gifts on all of them. He got a big mandapam made for them. They stayed in the Sanga Mandapam together happily.
 
51 (d) சங்கப் பலகை தந்தது.

புதுப் புலவர்கள் வருகையால், சிறப்பால்,
புழுங்கினர் புகழ் மங்கிவிட்ட புலவர்கள்.

சங்கப் புலவரிடம் வாதிட்டுத் தோற்றதால்
எங்கும் தலை காட்ட முடியாமல் தவித்தனர்.

தருக்கு முற்றுமாக அழிந்து ஒழிந்தது!
செருக்கும், மிடுக்கும் மறைந்து போயின.

"தன்னைப் போல் யாரும் இல்லை!" என்றவர்
இன்னொருவருக்கு இளைத்ததை உணர்ந்தனர்.

திருக்கோயில் சென்றது புலவர் குழாம்.
பெருமானிடம் வேண்டியது அரிய கருவி.

புலமையை கணித்து அளப்பதற்காக
கலப்படம் இல்லாத ஒரு சீரிய கருவி.

"வாது புரிய எங்களை நாடி வருபவரைத்
தோதாக மதிப்பீடு செய்ய உதவிட நீ

சங்கப் பலகை எமக்குத் தரவேண்டும்
மங்காத் தமிழை வளர்க்க அது உதவும்!"

வலியச் சென்று பாணனுக்குப் பொற்பலகை
அளித்த ஈசனுக்குத் தயக்கமும் உண்டோ?

களித்த முகத்துடன் புலவர் வடிவில் தோன்றி
அளித்தார் அரிய சங்கப் பலகை ஒன்றை!

"இரண்டு சாண் சதுர அளவே கொண்டது!
இருந்தும் நிலவைவிட வெண்மையானது.

அறிவில் தூயது, திறமையில் அரியது,
சிறந்த மந்திரத் தன்மைகள் வாய்ந்தது.

திறமை உடைய புலவருக்கு இடம் தர
அரிய பலகை வளரும் ஒரு முழம்! "

அறிவை அளக்கும் அரிய பலகையை
நிறைவாய்ப் பெற்றுக் கொண்டனர் புலவர் .

மண்டபத்தை அடைந்தனர் மன மகிழ்வுடன்,
கண்டவர் வியக்கும் சங்கப் பலகைக்குப் பூஜை.

விண்டது மெய்யே! சற்றும் பொய்யல்ல!
நீண்டு வளர்ந்தது புலவருக்கு இடம் தர!

நக்கீரர், கபிலர், பரணர் முதலிலும்,
மக்கள் மதிக்கின்ற மற்றவர் பிறகும்

ஏறி அமர்ந்திட வளர்ந்து இடம் தந்தது!
ஊறி வரும் கவிதைத் திறனை அளந்தது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 51 (d). THE GIFT OF SANGAP PALAGAI.

The old poets whose glory was diminished by the arrival of the talented young poets resented their presence. They grumbled about these poets and felt very unhappy.

Those who had lost in the debates were shy to go out and face people known to them. They felt even more miserable and sadder than the others.

The Akshara poets went to Siva temple and prayed to Him,

"God ! Several people come to us for debating. If we can have an instrument to measure their poetic talent, it will be of great use to us."

God had given a plank studded with the nava rathna to Paanan when he was shivering with cold! Why would he withhold a plank these poets were praying for?

The Lord appeared to them as a Tamil Poet. He gave them a square plank with its sides measuring 18 inches.


He told them,

"This plank is magical in nature. It is fairer and purer than the moon! It can measure the poetic talent of a person. If he is really talented, it would grow by 18 inches more to accommodate him on it!"

The poets were very happy to receive the magical plank called Sangap palagai.

They went back to the mandapam. They performed elaborate pooja to the plank. It grew in length to give place to the famous poets Nakkeeran, Kapilan and Baranan.

Later the other poets also were given place on the plank.
The forty eight poets were very happy that they now had an infallible method of measuring a person's poetic talents.



cleardot.gif
 
# 52 (a). தருமிக்குப் பொற்கிழி தந்தது.

வங்கிய சூடாமணி மன்னன் ஆனான்
வங்கிய சேகர பாண்டியனுக்குப்பின்;
குலபிரான் ஆகிய சிவ பெருமானிடம்
குறைவற்ற பக்தியுடன் விளங்கினான்.

மூன்று கால பூஜைகளுக்கு உகந்ததாகத்
தொன்று தொட்டு பயன்படும் மலர்களை,
நந்தவனம் அமைத்து நன்கு வளர்த்தான்
நண்பகல், காலை, மாலை வழிபாட்டுக்கு.

பொன்னிற சண்பக மலர்களின் மீது
மன்னனுக்கு உண்டு கொள்ளைப் பிரியம்!
பொன்னிற மலர் மாலைகள் தாம் எத்தனை
பொருத்தம் நம் பொன்
னார் மேனியனுக்கு?

எத்தனை வகை மாலைகள் உள்ளனவோ
அத்தனையையும் தொடுத்து அளித்தான்.
அண்ணலின் பெயர் சண்பக சுந்தரன் எனவும்
மன்னனின் பெயர் சண்பக மாறன் என்றானது!

இளவேனில் காலத்தில் சுகமான அனுபவம்!
மலர் வனத்தில் தன் மனைவியுடன் ஏகாந்தம்.
சண்பக வனத்தில் இருந்தனர் தனிமையில்
சண்பக மாறனும், அவன் பட்டத்து ராணியும்.

தென்றலில் கலந்து வீசியது அங்கு
முன் கண்டிராத ஒரு புது நறுமணம்!
மலர்மணத்தை அறிந்த மன்னனாலும்
நவமணத்தை இனம் காண இயலவில்லை!

கேள்விக்குறியுடன் தேவியை நோக்க,
கேள்விக்குரிய மணம் அவளிடமிருந்தே!
எங்கிருந்து வருகின்றது என்று ஆராய்ந்தான்!
பொங்கும் நறுமணம் அவள் கூந்தலில் இருந்தே!

அடுத்
து அராய்ச்சி செய்தான் - கூந்தல்
விடுத்த மணம் இயற்கையா? செயற்கையா?
தொடுக்கும் கேள்விக்கணைகளுக்கு விடை
கொடுக்கவல்லவர் யாரோ தெரியவில்லை!

"மனத்தில் நிலவும் மருட்சியை உணர்ந்து,
இனிக்கும் செய்யுளால் ஐயம் தீர்க்கும்
கவிக்குப் பரிசு பொற்கிழி ஒன்றுண்டு!
கவின் மிகு ஆயிரம் பொற்காசுகளுடன்!"

சங்க மண்டபத்துக்கு கொண்டு சென்று
அங்கு தொங்கவிட்டனர் அப்பொற்கிழியை!
மன்னன் மனதின் ஐயம் என்னவோ என
நன்கு ஆராய்ந்தது சங்கப்புலவர் குழாம்.

பாராளும் மன்னன் மனத்தில் ஐயங்கள்
ஏராளமாக எழ வாய்ப்புக்கள் உள்ளனவே!
யாராலும் காண முடியவில்லை அன்று
தாராளமான பரிசை வெல்லும் வழியை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 

Latest ads

Back
Top