• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

# 32. வளையல் விற்றது.

ரிஷிகள் பெரும் தவச் சீலர்கள் என்றால்,
ரிஷி பத்தினிகள் என்ன சளைத்தவர்களா?

கற்பின் கனலென வாழ்ந்து வந்தனர்;
கற்பு நிலையை சிவன் சோதிக்கும்வரை!

அற்புத வடிவை உடைய பிட்சாடனர்;
கற்பனைக் கெட்டாத மன்மத வடிவினர்;

தாருகா வனத்தில் நுழைந்த உடனேயே,
தாறுமாறு ஆயிற்று ரிஷிபத்தினிகள் நிலை.

பருவமும், உருவமும் கொண்டவர் மீது,
நிறை அழிந்து காம வயப்பட்டனர் அந்தோ!

பிக்ஷையிடும் போது விழுந்தன அத்துடன்
ரக்ஷையாகக் கைளில் இருந்த வளைகள்!

தொழுதனர் பிக்ஷாண்டியின் திருவடிக
ளை;
அழுதனர் தம்மை ஏற்றுக் கொள்ளும்படி;

இழந்தனர் இடையணி மேகலையையும்;
நெகிழ்ந்தனர் மானம் மறைக்கும் ஆடைகள்!

"இட்டு விடுங்கள் அவிழ்ந்த வளைகளை!
கட்டி விடுங்கள் அவிழ்ந்த ஆடைகளை!"

நுட்பமாக உணர்த்த வேண்டிய காதலை,
வெட்கத்தை விட்டு வெளிப்படுத்தினர்.

"நாளை வந்து இடுவோம்!' என்று வந்த
வேலை முடிந்ததால் மறைந்து போனார்;

பசலை படர்ந்து நின்றனர் நிறை அழிந்து,
வளை, மேகலை, நாணம், ஆடை இழந்து!

அலங்கோல நிலையினைக் கண்டதுமே
துலங்கி விட்டது ரிஷிகளுக்கு அங்கே

நடந்த நாடகத்தை அறிந்து கொண்டனர்;
நடத்தியவனையும் புரிந்து கொண்டனர்.

"கணவனைத் தவிர எவரையும் விரும்பாத
மனம் அழிந்து நிலைதடுமாறினீர்கள் நீங்கள்!

வணிகர் குலத்தின் பெண்களாக நீங்கள்
மதுரையில் சென்று பிறக்கக் கடவீர்கள்!"

"சாபம் அளித்தீர்கள் எங்கள் பிழைகளுக்கு!
சாப விமோசனம் எமக்கு எப்போது கூறும்?"

"பிறை அணிந்த பெருமான் மீண்டும் வந்து
வளை அணிவிக்கும்போது விமோசனம்!"

வணிகர் குலத்தில் பிறந்தனர் பத்தினிகள்;
பணி அணி நாதனை எதிர்பார்த்திருந்தனர்.

அணிந்திருந்த வளைகளையே மீண்டும்
அணிவிக்க விழைந்தான் சிவன் அவர்க்கு!

வளைச்செட்டி வேடம் பூண்டு அவர்கள்
வளைகளைக் ஒரு கயிற்றில் கோர்த்தான்.

"வளையல்!" எனக் கூவித் தன் வடிவால்
தொளை இட்டான் காண்பவர் மனங்களில்!

மீண்டும் காமுற்றனர் அதிசய வணிகனைக்
கண்டதும் வணிகர் குலத்துப் பெண்கள்!

கரம் பற்றி வளையல்களை அணிவித்தவன்
பெருக்கினான் மேலும் காம விகாரத்தை!

வளைகளுக்குப் பணம் தர விரும்பியவரிடம்,
"நாளை பெற்றுக் கொள்ளுகின்றேன்!" என்றான்.

வளைஅணிந்து கொண்ட பெண்கள் எல்லோரும்
வளைச்செட்டியின் ஸ்பரிசத்தால் கர்ப்பமுற்றனர்!

முருகனை நிகர்த்த அழகிய மகன்களைப்
பெறுவதில் பெருமிதம் அடைந்தனர் அவர்;

கருமவினை தீரும் வரை பூமியில் வாழ்ந்து
திருவருளால் சென்றடைந்தனர் சிவலோகம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 32. THE BANGLE SELLER.

The rushis of Taarukaa Vanam were great and their wives were no less great. But when Lord Siva approached them for Bikshaa, their minds got filled with lust at the sight of the mendicant resembling Manmathan.

They dropped their bangles along with their Bikshaa. They prostrated to him. Their waist ornament became loose and their clothes disheveled.

They invited the mendicant Siva openly to put back their bangles and tie up their clothes. Siva said that he would come on the next day and disappeared.

The rushis became angry at the sight of the womenfolk with their disheveled dresses. They knew immediately what had happened there.

They cursed their wives to be born in the family of the merchants in Madurai. They would get saapa vimochanam when Lord Siva would touch their hands.

The rushi pathnis were born in the family of merchants in Madurai. They grew up into pretty maidens.They were waiting for their saapa vimochanam. Siva knew it was the right time to release them from their saapam.

He took the form of a bangle seller. He took the same bangles dropped by the rushi pathnis earlier in his Bikshaa.
He was so handsome that the maidens came out running at the sight of the bangle seller.

He put bangles in the hands of all the maidens. When they wanted to pay him he said he would collect the money the next day and vanished.

All the maidens conceived due to the divine touch of Siva's hands and gave birth to sons as great as Skanda himself. They lived till their karma was completed and went to
Sivalokam.
 
# 33 (a). அஷ்டமாசித்தி உபதேசித்தது.

மையலும், கருணையும் கொண்ட உமையாள்
கையால் தரும் வெற்றிலையைச் சுவைத்து,
கயிலையில் ஒரு கல்லால மரத்தடியில்,
கயிலைநாதன் இனிதே அமர்ந்திருந்தான்.

சனக, சனந்தன் முதலியவருக்கும்,
கணக் கூட்டத் தலைவர்களுக்கும்,
சொல்லிக் கொண்டிருந்தான் சிவன்
நல்லுரைகள் பலவும் இனிமையாக.

கார்த்திகேயனை எடுத்து வளர்த்த,
கார்த்திகைப் பெண்கள் வணங்கினர்;
"அஷ்ட மா சித்திகளை எங்களுக்கு நீர்
இஷ்டத்துடன் உபதேசிப்பீர் ஐயனே!"

"அஷ்டமா சித்திகள் நீங்கள் அறியக்
கஷ்டமானவைகள் அல்லவே அல்ல!
இஷ்டத்துடன் குற்றேவல் புரியும்
அஷ்ட மா சித்திகள் உமையிடம்!

நினையுங்கள் மனதில் உமையை;
அனைத்து வினைகளும் அகலும்;
சித்திகள் எட்டும் தாமே தேடி வந்து
சித்திக்கும் உங்கள் அறுவருக்கும்!"

உபதேசித்தார் அஷ்டசித்திகளை,
உமா மகேஸ்வரன் அப்பெண்களுக்கு!
என்ன காரணத்தினாலோ அவர்கள்
உன்ன மறந்தனர் உமை அன்னையை!

கற்ற கல்வியும் வீணாகி விட்டது!
சிற்பரனின் சொற்கள் வீணாகலாமா?
குற்ற உணர்வுடன் நின்றவர்களுக்கு
சொற்பதம் கடந்தவனின் சாபம் இது!

"பட்ட மங்கை என்னும் இடத்தில்
கெட்டிப் பாறைகளாகக் கிடப்பீர்!
ஆல மரத்தின் அடியில் இருந்து,
காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு!"

"சாபம் அளித்தீர் எம் தவறுக்கு!
சாப விமோசனம் எப்போது?" என,
தாபம் தீர்க்கும் பதில் தந்தார்,
பாபம் தீர்க்கும் கயிலை நாதர்!

"ஆயிரம் ஆண்டுகள் போன பின்,
போய்விடும் சாபம் தானாகவே!
காலம் வரும்வரைத் காத்திருங்கள்
கோலம் புனைந்து தவம் செய்தபடி!"

பட்ட மங்கையை அடைந்தனர் பெண்கள்;
கெட்டுப் போனது அவரது உயரிய வாழ்வு!
கெட்டிப் பட்ட பாறைகளாக கிடந்து
அவர்
கட்டுப் பட்டனர் ஈசனின் சாபத்துக்கு!

ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடின!
ஆயிரம் சூரியனின் ஒளியுடன் கூடி,
ஞான ஆசாரியனாக வந்த சிவன்
ஞானம் தந்து சாபம் நீக்கினான்!

அணிமா முதலிய அஷ்ட சித்திகளைப்
பணிவாகக் கேட்டு கிரஹித்தனர்;
அணிந்தனர் மனத்தில் உமை நாமம்,
பணிந்தனர் ஈசன் திருப்பாதங்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
# 33 (a). ASHTA SIDHDHI UPADESAM.

One day Lord Siva was chewing the thaamboolam given with love by his consort Uma Devi. He was imparting some important messages to Sanakan and his brothers as well as the leaders of His Siva ganam.

The six women who brought up Kaarthigeyan prayed to Lord Siva to teach them about the Ashta Sidhdhi. Siva told them,"The Ashta Sidhdhi are servants of Uma Devi.
You can attain them merely by praying to Uma Devi!"

He then elaborated on the eight Sidhdhis. The six Kaarthigai women learnt His upadesam well. But for some reason, they did not meditate on Devi Uma and seek her blessings.

They for got all the upadesam given by lord Siva.He got angry and cursed them to spend one thousand years as insentient rocks under Bunyan tree in a place called
Pattamangai.The ladies would be relieved of the curse by the grace of Siva who would appear as an Achaarya.

The women were transformed to rocks and lay under a Bunyan tree for a thousand years. When the time of their Saapa Vimochanam arrived, Lord Siva appeared As a Gnaana Guru with the brilliance of a thousand Suns!

He did the upadesam again on Ashta Sidhdhi. The six women listened with deep reverence and absorbed everything taught by Siva.

They worshiped Devi Uma seeking Her blessings.Then they returned to Kailash in their original form and glory with the knowledge of the Ashta Sidhhdi.

 
# 33 (b). அஷ்ட சித்திகள்!

சித்திகள் எட்டும் நம் வசப்படும், உடல்
சக்கரங்கள் ஏழும் எழுப்பப்பட்டால்!

சித்தி பெற்ற சித்த புருஷர்கள்
செய்வர் பற்பல அற்புதங்கள்!

அணுவாகத் தன் உடலைக் குறைக்க
“அணிமா” என்னும் சித்தி உதவிடும்.

மலை போலத் தன் உடலை வளர்க்க
“மகிமா” என்னும் சித்தி உதவிடும்.

கரியை நிகர்த்த உடல் எடை அடைய
“கரிமா” என்னும் சித்தி உதவிடும்.

லேசான இறகு போல உடலை மாற்ற
“லகிமா” என்னும் சித்தி உதவிடும்.

பிரியப்பட்ட இடத்துக்கு உடனே செல்ல
“பிராப்தி” என்னும் சித்தி உதவிடும்.

விரும்பிய பொருட்களை அடைந்திட
“பிரகாம்ய” என்னும் சித்தி உதவிடும்.

ஈசனுக்கு நிகரான சக்தி அடைவது
“ஈசத்வம்” எனப் பெயர் பெற்ற சித்தி.

யாராகிலும் தன் வசப்படுத்துவது
“வசத்வம்’ என்கின்ற சித்தி ஆகும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 33 (b). ASHTA SIDHDHI.

If all the seven chakrAs in a human body are activated through Yoga

SAdanA in the prescribed form, the person develops various special

powers known as Ashta Sidhdhi. He can perform many miracles, not

possible for a normal human being.

The ability to reduce the size of one’s body to an atom is called “animA”

The ability to increase the size of the body to resemble a huge mountain

is called “mahimA”

The ability to become as heavy as an elephant is called “garimA”.

The ability to become as light as a feather is ‘lagimA”

The ability to reach any desired destination is “prApthi”.

The ability to get any desired object is called “prAkAmyA”.

The ability to become like a God in his powers is called “Esathvam”.

The ability to conquer and win over anybody’s mind is “Vasathvam”.
 
# 34. விடை இலச்சினை.

முத்தமிழ் வேந்தர்கள் மத்தியில்
சத்தம் இன்றி நிலவிவந்தது பகை;
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளும்,
ஒரு மொழி மாந்தரும் பகைவர்களே!

குலபூஷணன் ஆண்ட பாண்டிய நாட்டில்,
குடியிருந்த சோமசுந்தரப் பெருமானின்,
அடிமையாக விளங்கினான் அந்நாளில்
முடி புனைந்த 'காடு வெட்டிச் சோழன்.'

"ஒரு முறையேனும் காணுவேனோ ஐயன்
திருவுருவத்தை என் கண்கள் மகிழ்ந்திட?"
அருகே சென்று தொழ முடியாதபடி அன்று
குறுக்கே நின்றது கொடும் பகையுணர்வு .

கனவில் சித்தனாக வந்தா
ர் பிரான்,
"தனியே வா நீ மதுரைக்கு இரவில்!
என்னைக் காண விழையும் உனக்கு
என்னால் உதவமுடியும், அஞ்சற்க!"

நம்பினான் சோழன் ஈசன் மொழிகளை;
நள்ளிரவில் தனியனாகப் புறப்பட்டான்!
சிவ பக்தியே அவனது பரியாயிற்று!
சிவ பஞ்சாக்ஷரம் அவனது உடைவாள்!

வைகயின் கரையை அடைந்த சோழன்
வெள்ளத்தைக் கண்டு அதிர்ந்து போனான்;
"பாண்டிய மன்னன் பகைவன் என்றால்,
யாண்டும் சுழித்தோடும் நீரும் பகையா?"

விக்கித்து நின்றான் 'காடு வெட்டிச் சோழன்',
திக்குத் தெரியாமல் காரிருளில் தனியனாக!
சித்தர் பிரான் உடனே தோன்றினார் அங்கே;
வற்றச் செய்தார் பொங்கிய சிவ கங்கையை.

கடந்தனர் இருவரும் நீர் வற்றிய ஆற்றை,
அடைந்தனர் இருவரும் மதுரைக் கோட்டை;
திறந்தார் திருவருளால் வடக்கு வாயில்,
புகுந்தனர் திருக்கோவில் காவலை மீறி!

பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
சொக்கலிங்கதைச் செய்தான் தரிசனம்;
மீனாட்சித் தாயையும் துதித்து வணங்கி,
தேனா
ம் தேவியை நன்கு போற்றினான்.

"விடியும் முன்னர் திரும்ப வேண்டும்!"
வடக்கு வாயில் வழியே வெளி வந்தனர்.
வடக்குக் கரையில் வைகை நதியின் ,
விடப்பட்டான் 'காடுவெட்டிச் சோழன்'.

திருநீற்றை அணிவித்து வாழ்த்தினார்
திருவருளுடன் கூடிய சித்தர் பிரான்,
பரபரப்புடன் சோழன் நாடு திரும்பிட,
அவசரத்துடன் திருக்கோவில் சென்றார்!

வடக்கு வாயிலுக்கு முத்திரை இட்டார்
விடை இலச்சினையால் சித்தர் பிரான்,
சிவன் கோவிலுக்குள் சென்று மறைந்து
சிவலிங்கத்துடன் ஐக்கியம் ஆனார்!

காலையில் பார்த்துத் திகைத்து நின்றனர்
காரணம் புரியாத அரசுக் காவலர்கள்.
மூன்று கதவுகளிலும் மீன் இலச்சினை!
ஒன்றில் மட்டும் விடை இலச்சினையா?

குல பூஷணனின் கனவில் வந்தார்,
குல தெய்வமாகிய கருணைக் கடல்;
நடந்தவற்றைக் கூறி தெளிவு தந்தார்.
வடக்கு வாயிலில் தன் விளையாட்டை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 34. THE DIVINE SEAL.

The three kings of Tamil Nadu never got along smoothly. There was always an under current of suspicion and enmity among them. Blood brothers often become enemies.
It was the same thing with the three brotherly kings of Tamil Nadu!.

'Kaadu Vettich chozhan' ruled over the Chozha Kingdom when Kulabooshanan ruled over Paandiyan kingdom. He was a sincere devotee of Soma Sundareswarar of Madhuraapuri.
He wished with all his heart that he could have at least one dharshan of his lord!

Lord Siva appeared in his dream as a sidhdha purusha. He told the Chozha king,

" Come to Madhuraapuri alone at night time. I will help you to get a dharshan of the lord in the temple".

Chozha king trusted his words implicitly. He disguised himself and left to Madurai on foot all alone in the middle of the night. Siva Bhakthi was the horse he rode on and Siva panchaaksharam was the protective sword he carried!

He reached the bank of Vaigai and stood aghast to find the river in spate.The same sidhdha who came in his dream appeared there.He made the swollen waters shrink. Now they both could cross the river.

They reached the Northern gate of the fort.Sidhdha opened the door and led the Chozha king into the temple. The chozha king has a holy dip in the Pond of Golden Lotuses.He had a dharshan of Somasundareswarar and Meenakshi Devi.

They hurried back to the bank of river Vaigai.The Chozha king had to go back to the safety of his own country before the day break.

The sidhdha applied holy ash on the forehead and sent him away to safety.He himself hurried back into the temple and sealed the Northern door with His bull emblem.

Next morning people were surprised to find the fish emblem on three doors and bull emblem in the Northern door.No one could explain the mystery.

Lord appeared in the dream of Kulabooshanan and explained the events of the previous night. Thus the lord solved the mystery of the bull emblem in the northern door.
 
# 35. தண்ணீர்ப் பந்தல் வைத்தது.

'காடு வெட்டி காஞ்சிச் சோழன்' தன்
நாடு விட்டு நாடு சென்று பலமுறை
தொழ விரும்பினான் சோமசுந்தரரை,
தோழமை உணர்வுடன் அச்சம் இன்றி!

காணிக்கைகள் பல அனுப்பிவைத்தான்
சாணக்கியத்தனத்துடன் பலமுறைகள்,
ராஜேந்திர பாண்டிய மன்னனுக்கு,
ராஜசிம்மனின் அருமை அண்ணனுக்கு!

உறவை உறுதிப்படுத்துவதற்கு ஒருவழி
திருமணம் செய்து தருவதும் ஆயிற்றே!
மகளை ராஜேந்திரனுக்கு மணம் செய்வித்து,
மகளால் நாடுகளை இணைக்க எண்ணினான்.

ராஜேந்திரனின் நல்வினையைப் பொறாத
ராஜசிம்மன் தானே மணக்க விரும்பினான்,
காஞ்சிச் சோழ மன்னனை நேரில் சந்தித்து
கெஞ்சிக் கூத்தாடியேனும் அவன் மகளை.

மாறுவது மனித மனம் என்பது உண்மையே!
மாறிவிட்டது சோழ மன்னனின் மன ஓட்டம்.
ராஜசிம்மனுக்கே தன் மகளை அளித்தான்,
ராஜசிம்மனை மன்னனாக்கவும் விழைந்தான்!

பேரிகை, முரசுகள் முழங்கப் புறப்பட்டது,
பெரிய சதுரங்க சேனைக் கடல் சோழனது!
மதுராபுரியின் மீது பெரிய படை எடுப்பு!
மதுரைக்கு மருமகனை மன்னனாக்கிவிட.

"முன்னம் சோழன் இரவில் ஒளிந்து வந்தான்
உன்னிடம் பக்தி செய்வதற்காக மதுரைக்கு!
இன்று கடலனைய ஆரவாரத்துடன் வருகை
என்னை சமரில் தோற்கடிப்பதற்
கு விரும்பி.

பக்திக்கு ஈடு செய்தீர்கள் அன்று என் ஐயனே!
பகைமைக்கும் ஈடு செய்வீர்களா இன்று கூறும்"
அசரீரி ஒன்று கேட்டது அங்கு, அரனுடையது.
"அஞ்சவேண்டாம் ராஜேந்திரா! வெற்றி உனதே!"

"விடியற்காலையில் எழுந்தான் பாண்டியன்,
முடித்தான் காலை பூஜை, புனஸ்காரங்களை!
அடைந்தான் அமர்க்களத்தைச் சேனைகளுடன்;
இடிமுழக்கத்துடன் அங்கே போர் தொடங்கியது.

சேனை பாண்டியனது ஒரு சிற்றாறு எனில்
சேனை சோழனது ஒரு பெரும் கடல் ஆகும்!
பெருமான் அருளால் பாண்டியவீரர்களில்
ஒருவனே பலராகக் காட்சி அளித்தான்.

உச்சி வெயில் தகித்துப் பொசுக்கிடவே
எச்சில் உலர்ந்து வாடி வதங்கினர் வீரர்கள்;
தட்சணம் தோன்றியது ஒரு தண்ணீர் பந்தல்;
லட்சணம் மிகுந்த நீர்ஆளனுடன், குடிநீருடன்;

பாண்டியப் படைவீரர்கள் பெற்றனர்
வேண்டிய அளவு தெள்ளிய குடிநீர்!
தாகவிடாய் தீர்ந்ததால் புத்துணர்வுடன்
மேகங்கள் போல் மீண்டும் பொருதனர்.

வெற்றிவாகை ராஜேந்திர பாண்டியனுக்கு!
சுற்றிவளைத்தனர் சோழ மன்னனையும்,
வஞ்சனையாளன் தம்பி ராஜசிம்மனையும்
கொஞ்சமும் அஞ்சாத பாண்டிய வீரர்கள்.

"திருவுள்ளம் என்னவோ என் ஐயனே?" என,
"தருமநெறி நன்கு அறிந்தவன் தான் நீயும்!
விருப்பப்படிச் செய்வாய் ராஜேந்திர பாண்டியா!
இருவரையும் பிணைத்துப் பிடித்த நீ!"என்றார் ஈசன்.

சதுரங்க சேனையையும், ஆபரணங்களையும்,
மதுரை மன்னன் சோழனுக்கு அளித்தான்!
நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து நாடாக்கி,
சூட்டினான் மகுட
ம் தம்பி ராஜசிம்மனுக்கு.

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி.
 
# 35. THE REFRESHING DRINKING WATER.

The Chozha king wanted to visit Soma Sundareswaran frequently without any fear or danger. He started sending costly gifts to Paandiya king Rajendran in order to befriend him. Rajendra Paandian also returned his favor by sending costly gifts.

Marriages could seal the friendship between Kings and countries. Chozha King wanted to marry his daughter to Rajendra Paandian.

Rajasimman-the younger brother of Rajendran-went in person to the Chozha kingdom and impressed the Chozha king favorably. He married to the king's daughter. Now the Chozha king wanted to crown his son in law as the new Paandiya king!

He set out with a huge army to battle with Paandiyan.
Rajendran was shocked at the sudden developments.He prayed to Siva to handle the delicate situation.

Siva assured the king through asareeri that the victory would be Rajenda Paandian's and the Chozha army would be defeated.

The next morning Rajendra Paandian did his puja and went to the battle field.The Chozha army could be compared to an ocean while the Paandian army could be compared to a river.

By Lord's grace each Paandia soldier appeared as many soldiers to the enemy's eyes.The battle went on for a long time. The scorching sun dehydrated both the armies.

Suddenly a pandal appeared on the Paandian's side. A handsome man started distributing cool refreshing drinking water to the Paandiya soldiers.With their thirst quenched they felt refreshed and attacked he Chozha army with renewed vigor.

The Chola army became weak and tired and were easily defeated by the smaller Paandian army. The Chozha king and Rajasimman were arrested and brought to Rajendran.

He asked the lord," How am I supposed to deal with those two?" Siva replied "In the way you deem fit since you know all the dharma saathrass!"

Rajendran offered chaturanga sena and ornaments to the Chozha king and sent him back safely. He divided his kingdom into two and made Rajasimman the king of one of those two countries.

 
# 36. ரசவாதம் செய்தது.

வைகை நதியின் தென் கரையில்
விளங்கியது ஒரு சிவக்ஷேத்திரம்.
திருப் பூவனம் என்பது அதன் பெயர்,
திருப் பூவணநாதரின் உயரிய இடம்.

பொன் போன்ற மேனிப் பெண்ணுக்கு,
'பொன்னனையாள்' தகுந்த பெயரே!
விண்ணோரும் மயங்கும் பேரழகி!
மண்ணில் விழுந்துவிட்ட தேவதை?

ஆடற்கலையில் அற்புதத் திறமை,
பாடலிலும், வீணையிலும் தேர்ச்சி;
ஆடலையும், பாடலையும் அவள்
ஆடல் அரசுக்கே அ
ர்ப்பணித்தாள்!

வைகறையிலே எழுவாள் தினமும்,
வைகை நதியில் நன்னீராடி விட்டு,
பூவண நாதரைத் தரிசித்துத் தன்
பூஜை நிகழ்ச்சிகளை முடிப்பாள்.

அறுசுவை உணவைத் தினமும்
திரு அடியவருக்கு அளித்தாள்;
திருப்படிவத்தைப் பொன்னாலேயே
திரும்பவும் படைக்க விழைந்தாள்.

"கைக்கும் வாய்க்குமான வாழ்வில்
காண்பது எப்போது பொன் படிவம்?
உலவாக்கிழி மன்னனுக்கு அளித்து
உதவிய அரனே உதவவேண்டும்!"

ஏங்கிய பாவையின் ஏக்கம் தீர்க்க,
தாங்கினான் அரன் சித்தர் வடிவம்;
யோகியரின் உடை, வெண்ணீறு,
யோகப்பட்டம் கட்டிய இடை, சடை.

பொன்னனையாள் இல்லத்தில்
அன்னம் புசிக்கவில்லை அவர்!
உள்ளே எழுந்தருளும்
டி வேண்ட,
உள்ளே எழுந்தருளினார் அவர்.

"ஏன் இப்படி மெலிந்து உள்ளாய்?
என்ன கவலை உனக்கு
ச் சொல்?
அன்னமிடுகின்றாய் தாயாக,
அனைத்து அடியவர்களுக்கும்!"

"பொன்னர் மேனியனுக்கு ஒரு
பொன்படிவம் பண்ண வேண்டும்!
என் நாள் நிறைவேறும் என் கனவு
என்பதே எந்தன் கவலை இன்று!"

"தானத்தில் சிறந்து அன்னதானம்,
தயங்காமல் செய்து வருகின்றாய்;
மனம் போல் எல்லாம் நடக்கும்,
உணவுக் கலயங்க
ளைக் கொண்டு வா!"

இரும்பு, ஈயம், செம்பு, பித்தளை,
வருகை தந்தன அவர் முன்பு!
தெளித்
தார்
விபூதியை அள்ளி!
அளித்தார் ஓர் அரிய வரமும்!

"புடம் போடுவாய் இவற்றை,
தடை இன்றி இரவு முழுதும்,
இரசவாதத்தினால் அத்தனையுமே
இரணியமாக நாளை மாறிவிடும்!

சித்தர் சொன்னபடியே அவள்
மொத்த இரவும் புடம் இட்டாள்.
என்ன விந்தை! விடியற்காலை
பொன்னாகி இருந்தன அத்தனையும்!

சொன்னபடியே அமைத்தாள் அவள்
பொன்னால் ஆன புதிய விக்ரஹம்;
பூவண நாதரை பிரதிஷ்டை செய்து,
பூக்களால் அர்ச்சித்து மகிழ்ந்தாள்.

தினம் தவறாமல் தொழுதாள்.
மனம் கவர்ந்த பொன்படிவத்தை,
பிறகு சென்றாள் சிவலோகம்,
மறைந்தது அப்பொன் மேனியும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 36. THE ALCHEMIST.

In the southern bank of river Vaigai, there was a Siva Kshethram called Thiruppoovanam. The lord residing there was called Thiruppoovana Naathar.

A woman lived there. Her name was Ponnanaiyaal. She was very beautiful and was a devotee of Siva. She was well versed in dance, music and veena. She used all her talents in worshiping Siva.

She had two more passions in her life. She wanted to feed all the devotees of Siva and she could accomplish this easily. Her other aim was to make a vigraha of her lord in solid gold.

She was spending all her earnings in feeding the Siva bakthas. She could not save money to buy the gold for the vigraha.

It seemed to be an impossible dream! She thought that only the God who presented a bag of gold coins to the king would have to help her also.

Siva wanted to put an end to her despair. He took the form of a Sidhdhar and reached her house. He was dressed like a yogi and smeared with holy ash.

He asked the woman, "What is the cause of your constant worry that you look so famished and thin?"

The woman replied, "It has been my life's ambition to get the vigraha of my lord made in gold. Poor as I am, my dream may remain a dream for ever!"

The sidhdha told her to bring all the vessels in the house. He sprinkled them with holy ash. He told her to heat them overnight in a constant fire.The next day they would all be transformed to pure gold.

The woman heated all the vessels as told and lo behold they had become pure gold the next day. She got the vigraha made in gold and did puja everyday as long as she lived.

When she died she went to Sivalokam. God hid his true nature and became an ordinary statue again.

 
# 37. சோழனை மடுவில் தள்ளியது.

ராஜேந்திர பாண்டியனின் வம்சத்தில்
ராஜாவானான் சுந்தரேச பாதசேகரன்.

சிவ நேசனாக விளங்கியவனுக்கு ஒரு
சிறு படையே போதுமானதாயிற்று.

தேர்ப் படை என்பது பத்தே தேர்கள்;
யானைப் படை என்பது நூறு யானைகள்;

குதிரைப் படை ஓராயிரம் குதிரைகள்;
காலாட் படை என்பது பதினாயிரம் பேர்;

சுருங்கிய சேனையைக் கண்டவுடன்
விரும்பி
னான் மதுரை மேல் படையெடுப்பு;

கடல் அனைய சேனையுடன் சோழன்
படையெடுத்தான் திட நம்பிக்கையுடன்;

"உன் அருளை நம்பியே ஆளுகின்றேன்,
என் வலிமையை நம்பி அல்ல ஐயனே!

கடல் போன்ற சேனையை என் செய்யும்
படகு போன்ற என்
பாண்டிய சேனை?"

"நானும் களம் வருவேன் உன்னோடு
நாளை நடக்க இருக்கும் போருக்கு!

அஞ்ச வேண்டாம் நீ கொஞ்சமும்
தஞ்சம் அடைந்தவரைக் கைவிடேன்!"

வேதப் பரி மீது ஏறி வந்தான் பிரான்;
வேட வடிவு எடுத்து வந்தான் பிரான்;

தந்தக் குழைகள், முத்து மாலைகள்,
தந்தக் கடகங்கள், மயிலிறகு, வெட்சி,

கையில் கொல் வேல் ஏந்திய வண்ணம்
மையத்தில் படை முன்னர் சென்றான்.

வேடனின் வீரத்தைக் கண்டு அஞ்சிச்
சோழன் புறமுதுகிட்டு ஓடலானான்!

வேடன் மறைந்து அருளவும், அங்கு
சோழனை
ப் பாண்டியன் துரத்தினான்.

வேடனைக் காணோம் என்றறிந்ததும்
சோழன் துரத்தலானான் பாண்டியனை!

மதுரைக்கு விரைந்த பாண்டியன்
மடு ஒன்றில் இடறி விழுந்தான்.

திரும்பத் துரத்திய சோழனும் அவன்
விரும்பாமலேயே மடுவில் விழுந்தான்.

இறைவன் திருவருளால் பிழைத்தான்;
கரையேறி வந்தான் பாண்டியமன்னன்.

இறைவன் திருவுளப்படியே மடுவில்
இறந்தான் மூழ்கிய சோழ மன்னன்.

சோழனின் சேனையைக் கவர்ந்தான்,
சோழனை வென்ற பாண்டிய மன்னன் .

சுந்தரபாத சேகரன் தொடர்ந்தான் தன்
சுந்தரேஸ்வர பெருமான் தொண்டுகளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 37. PUSHING CHOZHAN INTO A POND.

Sundaresa Paada Sekaran was born in the lineage of Rajendra Paandian. He was peace loving by nature. He maintained a very small army with just ten chariots, one hundred elephants, one thousand horsemen and ten thousand soldiers.

Kaverich Chozhan was attracted by the prospect of easy victory over the Paandian. So he descended on Paandian with a large army.

Sundara Paada Sekaran prayed to Siva,"I rely more on you than my own army. Don't you know this my lord? Won't you save me my people?"

Siva replied, " I myself will appear in the battlefield to help you!" The limited army of the Paandian marched on to the battle field. Siva appeared as a hunter. He rode on the Vedas transformed into a horse, leading the army.

He wore ornaments made of Ivory on his ears and wrists. He wore peacock feather on his hair and held a terrifying spear in his hand.

Chozha got frightened by the sight of this unknown warrior. He rode away in an effort to escape. The hunter who was Siva disappeared.

So Paandiyan chased the Chozhan. When Chozhan saw that the mighty hunter has disappeared he started chasing the Paandian.

Now it was Paandian's turn to try to escape. He rode towards Madurai very fast and fell into a pond. Chozha who was chasing the Paandian also fell into the pond.

Paandian came out unhurt while Chozhan got killed by the fall. Paandian took over the army of Chozha. His charitable acts continued as before.
 
# 38. உலவாக் கோட்டை அளித்தது.

அடியார்க்கு நல்லான் ஒரு வேளாளன்;
அடியவருக்கு அமுது செய்விப்பவன்;
துணைவி தருமசீலை மிக்க அன்புடன்
துணை நிற்பாள் தரும காரியங்களுக்கு!

ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு வரி;
ஆறில் ஐந்து பங்கு தான தருமங்கள்;
எத்தனை அடியவர் வந்த போதும்
அத்தனை பேருக்கும் அன்னம் உண்டு.

அடியவர் பெருமையை உலகு உணர,
இடியெனும் சோதனைகளைத் தருவான்;
நடம் செய்யும் திருப்பாதனும் அவனுக்கு
இடர் தந்திட முடிவு செய்து விட்டான்!

விளைச்சல் குறைந்து விட்டது வயலில்!
விருந்தோம்பலுக்குப் பொருள் இல்லை;
கடன் வாங்கி அன்ன தானம் செய்தான்;
கடன் தர ஆளில்லாமல் போகும்வரை!

"அடியவருக்கு அமுது படைக்காத இவ்
வுடல் இருந்தென்ன போயென்ன?" என்று
திடமான மனத்துடன் மனைவியுடன்,
தினம் உபவாசம் இருந்தான் நல்லான்.

"உதவாக்கரை உயிர் எதற்கு?" என்று
மதுராபுரி ஈசனின் கோவில் சென்று,
"இது காறும் நடத்திய அன்னதானம்
ஒரு போதும் இனித் தொடராதா ஐயா?

கடன் தந்து உதவும் ஆட்களை
உடனே எமக்குக் காட்டாவிடில்;
திடமாக எங்கள் உயிரை விடுவோம்
நடம் ஆடும் ஈசா உன் மேல் ஆணை!"

"சில காலம் உன்னைச் சோதித்தேன்!
பல காலம் தொடரும் உன் நற்பணிகள்;
உலவாக்கோட்டை அளித்தேன் உனக்கு;
செலவாக்கு அரிசியை வேண்டியபடி!"

எடுக்க எடுக்க குறையாத கோட்டையைக்
கொடுத்தான் ஈசன் சோமசுந்தரேஸ்வரன்.
கெடுமோ தன் நற்பணிகள் எனப் பலவாறு
நடுக்கம் உற்றவன் மனம் குளிர்ந்திட.

தூப தீபம் காட்டி, மலர் மலைகள் சூட்டி,
தேவைக்கு ஏற்ப அரிசியை எடுத்தான்;
அன்றைக்கு அன்னம் சமைப்பதற்கும்,
அன்றைக்குக் காய்கறிகள் வாங்கவும்.

அன்ன தானம் தொடர்ந்து நடந்தது;
சொன்ன சொல் தவறவில்லை அவன்;
என்னோ ஆண்டுகள் கழிந்த பின்னர்,
பொன்னுலகு ஏகினான் மனைவியுடன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
# 38. THE INEXHAUSTIBLE CONTAINER OF RICE.

Adiyaarkku Nallaan was a farmer. He used to feed all the devotees of Siva. His fields were fertile and their yields were good. He used to pay one sixth of his produce as tax to the king and spend the rest for feeding the devotees.

God proves the greatness of his devotees by subjecting them to hardships.Siva made the yield of the field grow less and less. Nallan could not feed the devotees any more.

He borrowed money and continued his service. Very soon no one was willing to lend him any more money.

The feeding of the devotees came to a stop. Nallaan and his wife also starved since they could not continue their service.

They decided to end their useless lives and went to the temple. Nallaan told Siva, "Either you show me people who would lend me money or you let us die now and here".

Siva spoke to him, "I subjected you to hardship to prove your greatness to the world. Do not despair!. I have kept a container of rice in your house. It is inexhaustible. Use the rice to feed the devotees as before!"

Nallaan and his wife were happy to find the large container of rice. They did puja to it with dhoopam, deepam and flowers.

Everyday they took out enough rice to cook for the devotees and buy the vegetables for the day.

Their charitable activities were resumed. They lived for a long time and left for Sivapuram when their time came.
 
# 39. மாமனாக வந்து வழக்கு உரைத்தது.

வணிகன் ஒருவன் வாழ்ந்திருந்தான்;
தனபதி என்பவன் மதுராபுரியினிலே!
புத்திரப்பேறு இல்லாததால் அவன்
தத்தெடுத்து வளர்த்தான் மருமகனை!

மறு பிறவியிலேனும் தம் இருவருக்கும்
குறைவின்றிக் குழந்தைப் பேறு வேண்டி,
மருமகனுக்குச் சொத்தை அளித்துவிட்டு,
மாமன் மாமியுடன் சென்றான் வனவாசம்.

தனியாக மகனுடன் வாழ்ந்தவளை,
இனிதாக வென்று விடலாம் என்று,
தாயாதியர் பொய்வழக்குகள் உரைத்து
தனபதி தந்த சொத்தைப் பிடுங்கினார்.


நில புலன்கள், வீடு, வாசல் மற்றும்
நகை நட்டுக்கள், பிற பொருட்கள்,
மாடு, கன்று என்று எல்லாம் போக;
நடு வீதிக்கே வந்து விட்டனர் பாவம்!

ஈசன் கோவிலுக்குச் சென்று, அன்பர்
நேசனிடம் புலம்பித் தீர்த்து விட்டாள்.
"பாலகனுடன் பரிதவிக்கின்றேன் நான்!"
கோலம் புனைந்தான் அந்தணனாக ஈசன்!

"வருந்த வேண்டாம் பெண்ணே நீ!
இறைவனே துணை திக்கற்றோருக்கு!"
மறுமுறை சென்று உன் வழக்குரைப்பாய்
வருவான் ஈசன் உனக்கு சாட்சி சொல்ல!"

மறையவர் தந்த அருள் வாக்கினால்,
மறுமுறை தாயாதிகளிடம் சென்றாள்;
"தருமம் இன்றிப் பிடுங்கிக் கொண்டீர்,
அருமை மகன் சொத்து அத்தனையும்!"

யாருமில்லை உதவுவதற்கு என்றதும்,
தாறுமாறாகப் பேசி அடித்தனர் அவளை;
கோவலனிடம் சென்று வழக்கு உரைக்கக்
காவலர்கள் இட்டு வந்தனர் தாயாதிகளை.

வானப் பிரஸ்தம் சென்ற வணிகன்
தனபதி உருவில் வந்தான் சிவன்;
"காவலன் இல்லையா? கடவுள் இல்லையா?
நியாயம் இல்லையா? தருமம் இல்லையா?"

தங்கையைத் தனயனை அணைத்துத்
தனபதி தாங்கினான் பெருகிய அன்புடன்;
தனயன் அணிந்திருந்த நகைகளை
தனபதி பட்டியல் இட்டான் அவையில் !

தனபதி அல்ல வந்திருப்பது என்று
தாயாதியர் புது வழக்குரைத்தனர்.
குடும்பம், குடி, பெயர், பட்டம், என்று
எடுத்துரைத்தான் தனபதி சரியாக!

தாயாதிகள் வழக்குப் பொய்யானது!
தனபதியின் வழக்கு மெய்யானது!
தாயாதிகள் திருப்பித் தந்துவிட்டனர்
தனயனிடம் பறித்த சொத்துக்களை.

அஞ்சி ஓடினர் அனைத்து உறவினரும்!
மிஞ்சியது தனபதி அளித்த சொத்து;
தத்துப் புத்திரனின் கதையைக் கேட்டதும்,
தந்தான் பல பரிசுகள் பாண்டிய மன்னனும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
# 39. PLEADING ONE'S CASE.

Dhanapati was a merchant living in Madurai. He did not have any children. So he adopted his nephew and brought him up in a rich life style.

Later Dhanapati and his wife decided to go to Vaanaprastham in order to pray for a fuller life with children in their next birth.They gave away all their wealth to their adopted son and went to Vanavaasam.

His agnates (Dhaayaathis) easily took away all the properties from his sister and nephew claiming to be the legal heirs of the merchant Dhanapati.

Lands, house, cattle, gold, silver, money and jewels were taken away leaving the child and his mother penniless!
The mother went to the temple and prayed to Siva to help her since she had no one else to help her.

Siva appeared as a brahmin and told her,"God helps those who are helpless.Bring the case to the court again and lord appear as your witness".

She went straight to the agnates and told them to return the properties taken away from her. They ill treated her, beat her and scolded her. She ran to the king and lodged a complaint. The soldiers brought the offenders to the court.

Siva appeared as the merchant Dhanapati and started exclaiming, "Is there a king in this land? Is there a God? Is there any justice in this land?" He embraced his sister and her son with great affection.He recited the long list of various jewels his nephew used to wear earlier.

The agnates tried to twist the case stating that the man was an impostor and not Dhanapati. Now Dhanapati recited all the details about every one of the agnates.

It was proved beyond doubts that the man was Dhanapati and he had gifted all his properties to his nephew.

All the properties were returned to the nephew promptly. When the king heard the story, he was so happy that he too conferred many gifts on the nephew.

 
# 40 (a). பிரம்மஹத்தி தோஷம்.

சுந்தர பாத சேகர மன்னனின் மகன்
வந்தனைக்குரிய வரகுண பாண்டியன்;
மன, மொழி, மெய்களில் தூயவன்;
குணக்குன்று, அழகன், பக்திமான்.

மன்னர்களின் ஒரு வீர விளையாட்டு
வனவிலங்குகளை வேட்டை ஆடுவது!
பன்றி, புலி, யானையை வேட்டையாடிக்
கொன்று, மதுரைக்கு விரைந்தான் மன்னன்.

கனவட்டம் என்னும் மன்னனது பரி
கண நேரத்தில் நன்கு மிதித்துவிட்டது,
கண் மூடி சயனித்து இருந்த அந்தணனை;
கண் மூடிவிட்டான் அவன் கண நேரத்தில்!

ஏதும் அறியாமலேயே மன்னன் விரைந்து
மதுரையம்பதி அரண்மனையை அடைந்தான்;
இறந்தவனின் உறவினர் சுமந்து வந்தனர்
இறந்த மறையவனின் சடலத்தை அங்கே!

அறியாமல் செய்த பிழை தான் அது!
பரியால் நிகழ்ந்த பாதகம் தான் அது!
கொலை செய்த பாவத்தை எப்படித்
தொலைப்பது என்று தெரியவில்லை!

பொன் பொருள் அளித்து, மனம் வருந்தி,
தன்னைப் பற்றிக் கொண்ட கொலைப்பழி
பிரம்ம ஹத்தியைப் நீக்கி விடுவதற்கு,
பிரம்ம பிரயத்தனம் செய்தான் மன்னன்.

தானம், தருமம், பரிஹாரம் செய்தான்,
மானம் மறைந்தது; தேஜஸ் குறைந்தது!
கண்களுக்கு நன்கு தெரியும் வண்ணம்
கணம் விடாமல் தொடர்ந்தது தோஷம்.

பெருகி வரும் தன் தோஷத்தைக் கண்டு
மறுகி வருந்துபவனிடம் வேதியர் கூறினர்;
"ஆயிரத்து எட்டு முறை வலம் வந்தால்
மாய்த்திடுவான் அரன் அத்தோஷத்தை!"

அம்மை அப்பனை வலம் வந்தான் தினம்,
செம்மை நிலையுடன் வரகுண பாண்டியன்;
பத்து நாட்கள் உருண்டு ஓடிவிட்டன!
அத்தனின் அருட்பார்வை கிட்டியது!

"சமருக்கு வருவான் காவிரிச் சோழன்,
அமர்க்களம் நீங்கி புறமுதுகு இடுவான்;
திருவிடைமருதூர் வரை துரத்திச் செல்!
திருவருளால் பிரம்மஹத்தி நீங்கிவிடும்!"

படை எடுத்தான் காவிரிச் சோழன்,
இடையிலேயே புறமுதுகு இட்டான்;
துரத்திய வரகுணன் சென்றடைந்தான்
நிரம்பிய காவேரி நதிக் கரையினை!

புனித நீராடிவிட்டு திருவிடைமருதூர்
புனிதன் மகாலிங்கத்தை தரிசிப்பதற்கு,
கிழக்குவாயில் வழியே உட்புகுந்தான்,
கிழக்கு வாயிலில் நின்றுவிட்டது தோஷம்.

பொற்பதங்கள் தொழுதெழு
ந்தவனிடம்
அற்புதநடனம் செய் நாதன் பணித்தான்,
"மேற்கு வாயில் வழியே வெளியே செல்!
மற்ற வாயிலில் நிற்கிறது தோஷம்!"

பல நற்பணிகளைச் செய்து முடித்தான்,
சில காலம் கழித்து நாடு திரும்பினான்,
பல சான்றோர்கள் கூறுவதைக் கேட்டான்,
உலகங்களில் சிறந்தது அந்த சிவலோகம்!

காண விழைந்தான் சிவலோகத்தினை!
பேண விழைந்தான் ஈசன் திருவடிகளை,
சிவ ராத்திரியன்று அடைந்தான் கோவில்,
சிவ லோக தரிசனத்தை விழைந்தபடி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 40 (a). BRAMMAHATHTHI DOSHAM.

Varaguna Paandian was the son of Sundaresa Paada Sekaran. He was pure in mind, body and speech. He was very handsome and was a sincere devotee of lord Siva.

Kings of the past used to hunt wild animals for fun and to prove their valor. One day Varaguna Paandian killed many wild boards, tigers and elephants. He was riding back to Madurai. His horse stamped on a sleeping Brahmin and killed him instantly. Unaware of this the king returned to Madurai.

The relatives of the dead Brahmin brought his body to the king.The king was both shocked and sad! He tried to compensate for his crime by paying a good sum of money.

But since he had killed a Brahmin, Brammahaththi dosham afflicted him! Day by day, the king lost his tejas and beauty.The evil effects of the dosham became visible to everyone!

The pundits and priests told the king to do 1008 pradakshinams everyday for 10 days. Surely Siva would be moved to pity and would show some way to get rid of the brammahaththi.The king did as he was told. After ten days God took pity on him.

God told Varaguna Paandian,"Kaaverich chozhan will wage a war with you. He will get frightened and take to heels from the battle field. Chase him up to Thiruvidai Maruthoor. You will be rid of your Brahmahaththi there!"

Kaaverich chozhan waged a war. He took to heels and deserted the battle field. Varaguna Paandian chased him as told by God and reached the bank of river Kaaveri.

He took a holy dip and entered the temple through the eastern entrance-to have a dharshan of Sree Mahalingam.

The brammahathi could not enter the temple and stood outside the eastern entrance. God told the king to use the western entrance while going out, in order to escape from the dosham waiting in the eastern entrance .

He did as he was told. He did several charitable work there and returned to Madurai.

He listened to several great men and learnt that Siva lokam was the best among all the different lokams. He wished he could have a dharshan of the Siva lokam. He visited the Siva temple on Siva Raathri with a desire to see the Siva lokam!
.
 
40 (b). சிவலோகம் காட்டியது.

"பெருமானே! அடியவர் சூழ நீவீர்
திருக்காட்சி தந்தருள வேண்டும்;
சிவலோகத்தில் இருப்பதைப்போலவே
இகலோகத்திலும் ஒரு முறையேனும்!"

பக்திக்கு எளியவனான பிரான் அவன்
பக்திக்கு மெச்சி திருவருள் புரிந்தான்;
ஐயனின் உள்ளக் கிடக்கையை அறிந்து
மெய்யாகவே இறங்கியது சிவலோகம்.

எங்கும் வீசியது தெய்வப் பேரொளி !
மங்கலம் பொங்கித் ததும்பியது எங்கும்;
நந்தி தேவனிடம் சொன்னார் சிவபிரான்,
"இந்த உலகை இவருக்குக் காட்டி அருள்க!"

கற்பனையைக் கடந்து விட்ட ஒரு
அற்புதமான உலகம் சிவலோகம்!
மந்த மாருதம் தொட்டுத் தழுவியது,
சிந்தையைக் கவரும் கற்பூர மணம்!

தேவ கானம் என்றால் என்ன என்று
தேவர்களின் கானம் தெரிவித்தது;
இணைந்து இசைத்த இசைக்கருவிகள்
இன்னிசை விருந்தைப் பரிமாறின.

கமலப்பூ உதித்த பிரமனின் லோகம்,
கமலப்பூ அமர்ந்த வாணியின் உலகம்,
கமலக் கண்ணன் திருமால் உலகம்,
கமலவாசினி அலைமகளின் இடம்.

ஏகாதச ருத்திரர்களின் நகரங்கள்,
ஏவாமல் காவல் செய் திக்பாலர்கள்,
ஏக போகனான இந்திரனின் உலகம்,
ஏற்றதுடன் காட்டினார் நந்திதேவர்.

சிவலோகத்திலேயே வசிக்கும்
சிவ சாரூப்யர்கள், சிவ பக்தர்கள்,
சிவபதம் அடைந்த மன்னர்கள்,
சிவனடியார்க்கு உதவிய சீலர்கள்!

வேதங்களும், ஆகமங்களும் நின்று
துதிபாடின மனித உருவில் அங்கே;
தும்புரு, நாரதர் இன்னிசை யாழுடன்,
ரம்பை ஊர்வசியின் நடன விருந்து!

ஆனைமுகன், ஆறுமுகன், வீர பத்திரன்,
ஆணைகள் நிறைவேற்றக் காத்திருக்க,
அரி, அயன், அஷ்ட திக்பாலகர்களுடன்,
மரியாதையாக நின்றான் இந்திரன்.

சோமசுந்தரர் அரியணையில் அமர,
உமா மகேஸ்வரி புன்னகை சிந்த,
"ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!"
ஜெபித்தது அடியார்களின் குழாம்.

மெய் சிலிர்த்து, நாக் குழறி, தள்ளாடி,
மெய்ப்புளகம் அடைந்தான் வரகுணன்;
தன் மயமான பாண்டியனின் கண்களின்
முன்னே இருந்த சிவலோகம் மறைந்தது.

கண்முன் கண்டான் மதுரைக் கோவிலை!
கண் நிறைந்த அம்மையை, நம் அப்பனை!
"கொலை பாதகனின் பழியைத் துடைக்க
அருளலைகளை அனுப்பிய இறைவனே!

நாயேனுக்கும் அளித்தாய் உன்னருள்!
தீயேனின் பாவங்களைக் களைந்தாய்!"
இகலோகத்திலேயே சிவலோகம் காட்டியவன்,
'பூலோக சிவலோகம்' ஆக்கினான் மதுரையை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
[FONT=comic sans ms,sans-serif]# 40 (b). A GLIMPSE OF SIVA LOKAM.

"Lord! Let me have a glimpse of Siva lokam in all its glory!.Let me see your Siva lokam on earth on this day!" Varaguna Paandian prayed with utmost sincerity. Lord took pity on him and the Siva lokam descended to the earth!

The place was glowing with a divine light and everything seen everywhere was auspicious. Siva called Nandhi Devan and told him to show Siva lokam to Varaguna Paandiyan.

A gentle breeze was blowing carrying the fragrance of pure camphor. The Deva gaanam was played by the Deva ganam. The musical instruments sounded in resonance and in unison producing delightful music.

They visited the Brahma lokam, the Vishnu lokam, the place of Saraswathi seated on a lotus flower, the seat of Lakshmi Devi, the cities of the eleven Rudraas, the eight dig paalakaas and the city of Indra.

They came to Siva lokam and saw the saroopya mukthaas, bakthaas, the kings of the past and the devotees who had served the other devotees.

Vedas and Aagamaas took the form of human beings, stood there and were singing the praise of the lord. Thumburu and Narada played on their veena and sang melodious songs.The apsaraas did divine and eye capturing dance.

Ganapathy, Skandan and Veera Badran were waiting to carry out the orders of the lord. The whole heaven stood there in attendance.

Lord Siva was seated on a throne. Uma Maheswari was with him -all smiles. The group of devotees sang in unison,"Jaya Jaya Sankara! Hara Hara Sankara!"

The king was overwhelmed with happiness. He could neither stand not talk due his emotional fulfillment.

At that time the Siva lokam disappeared and he was standing in front of the Deities in his temple at Madurai. He sang the praise of lord and thanked him for the rare glimpse of Siva lokam on earth.

Madurai got one more new name: the "Booloka Sivalokam!"

[/FONT]
 
Dear friends,

A minor repair work is going on involving masons and plumbers.

So I did not get a minute of peace and quiet I need to write poetry.
smash.gif


So no new poems today. I am sorry to disappoint you.
frown.png


Please bear with me! :pray2:

with warm regards,
V.R.
 
41 (a). விறகு வெட்டி ஆனது.

வரகுண பாண்டியனின் ஆட்சிக்காலம்;
வடக்கிலிருந்து வந்தான் ஏமநாதன்;
யாழுடன் இணைந்து பாட வல்லவன்
யாவரும் விரும்பும் இனிய தேவகானம்.

இன்னிசையைக் கேட்ட மன்னன் மயங்கி,
பொன்னும், பொருளும் வாரி வழங்கினான்;
தங்குவதற்கு ஒரு பெரிய மாளிகை தந்து,
அங்கேயும் வசதிகள் செய்து கொடுத்தான்.

கருவம் வளர்ந்து பெருகியது ஏமநாதனுக்கு!
யாரும் தனக்கு ஒப்பரும் மிக்காரும் இல்லை!
மன்னன் அறிந்து கொண்டான் மன ஓட்டத்தை;
பின்னர் வருமாறு விளித்தான் பாணபத்திரரை.

"வடக்கிலிருந்து வந்து இருந்து கொண்டு,
திடமாகத் தனக்கு ஒப்பார் இல்லை என,
நடமாடும் ஏமநாதனை வென்று உம்முடைய
கடமையை ஆற்ற வல்லவரா நீங்கள்?"

"அவன் அருள் இருக்கும்போது நான்
இவனை எளிதாக வெல்லுவேன் மன்னா!
சிவன் அருள் வேண்டிப் பாடும் என்னை,
எவன் வெல்ல முடியும் சொல்லுங்கள்!"

நகரெங்கும் பாடி வந்தனர் பலர்;
புகழ் பெற்ற ஏமநாதனின் சீடர்கள்;
"சீடர்கள் இசையே இத்தனை இனிமையா?
பாடகன் இசையிலினிமை எத்தனை இருக்கும்?"

"எக்காலத்திலும் நான் தோற்கக்கூடாது!
மைக்காலனை உதைத்துத் தள்ளிய நாதா!
இக்காவலனிடம் சொன்ன சொல் மெய்ப்பட
முக்காலமும் நீயே எனக்குத் துணை!"

இல்லம் சென்றடைந்தான் பாணபத்திரன்,
மெல்ல உறங்கினான் கவலைகளோடு!
நாளை என்ன நடக்கும் என்பதை அந்தக்
காளை வாகனனே அறிவான் அல்லவா?

பக்தனின் பயத்தைக் கண்டு இரங்கிய
பக்தவத்சலன் வெளிப்பட்டான் அங்கு!
போட்டி இல்லாமலேயே பாண பத்திரனை
பாட்டிலே வெற்றி பெறச் செய்வதற்கு!

வயது முதிர்ந்த தளர்ந்த உருவம்,
வலது புறம் சொருகிய கொடுவாள்;
இடுப்பிலே நைந்து போன கந்தை!
இரு
ந்தது காலில் தேய்ந்த செருப்பு!

விறகுக் கட்டு ஒரு சுமை தலையில்,
உறையில் தொங்கியது ஒரு யாழ்;
"விறகு வாங்கலையோ விறகு!" என
விற்பனை அறிவிப்பு உரத்த குரலில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
.
 
41 (a). THE WOOD CUTTER.

It was the reign of Varaguna Paandiyan. A musician named Emanathan came from the north India. He mesmerized everyone with his sweet music. The king was very pleased with his music. So he showered gifts on Emanathan and gifted him a palatial house with all comforts.

Emanathan became very proud and arrogant. He thought that no one could match his music.The king knew these changes in the mental attitudes of the musician. He called his own temple musician Paanabadhran.

"Can you win over Emanathan in a music contest and put him in his place?"

Paanabadhran was sure he could do so_On the way home, he listened to the sweet songs of the disciples of Emanathan.

He got a doubt for the first time whether he could really win over their guru. He prayed to Siva to help him succeed in the contest and went to bed with a troubled mind.

Siva felt pity on Panabadhran. He decided to make him win the contest even before a contest could be held. He took the form of an old wood cutter.

He was dressed in rags; he had a knife on his right hip, a yaazh on his shoulder, a bundle of fire wood on his head and wore a worn out pair of old foot wear. He cried out "Fire wood for sale!" and walked on the streets of Madurai. .
 

Latest ads

Back
Top