• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

#16 (b). வேதத்தின் பொருளை உரைத்தது.

குரு வடிவெடுத்து
வந்த யுவ சிவன்,
அருள் வேண்டிய முனி புங்கவருடன்
சிவ லிங்கத்தின் திரு முன்பு அமர்ந்து,
சிறந்த பொருளை உரைக்கலானார்.

"உத்தமர்களில் எல்லாம் உத்தமன் சிவன்;
தத்துவ வடிவாக விளங்குபவன் அவன்;
நித்திய வேதத்தின் ஆதி காரணன் சிவன்;
சுத்த அத்வைத ஸ்வயம் பிரகாசன் அவன்.

பராபரன் சிவன்; ஸ்வயும்புவாக வந்தவன்;
நிராமயன் அவன்; விஞ்ஞான கனரூபன்;
பர பிரம்ம ஸ்வரூபன் ஆன மூர்த்தி
பரம சிவனே அன்றி வேறு எவருமல்ல!

வேதத்தின் திருவுருவே சிவ லிங்கம்;
வேதமே சிவ லிங்கத்தின் நுண்பொருள்;
வேதம் வேறு சிவ லிங்கம் வேறு அல்ல!
வேதமே லிங்கம், லிங்கமே வேதம் ஆகும்!"

சிவலிங்கத்தின் தத்துவங்களையும்,
சிவ குரு விரிவாக எடுத்து உரைத்தார்;
அகார, உகார, மகார தத்துவங்கள்,
அழகிய பிந்து, நாதங்களின் பெருமை;

சீரிய காயத்திரியின் தனிச் சிறப்புக்கள்,
சிவாகமங்கள் இருபத்தெட்டின் சிறப்பு,
நான்கு வேதங்கள் தோன்றியது எப்படி,
கன்ம, ஞான காண்டங்களின் உற்பத்தி;

நித்திய, நைமித்திக, காமிய கர்மங்கள்;
முக்திஅளித்திடும் சிவன் முன் செய்தால்;
வேதப் பொருளை விரும்பியபடியே,
வேத நாயகன் விரித்து உரைத்தான்!

மருட்சி நீங்கி மகிழ்ச்சி அடைந்தவர்களை,
அருட் கரத்தால் அன்புடன் தடவினான்;
சிவ யுவ குரு ஆலயக் கருவறையில் புக்கு,
சிவலிங்கத்துடனே ஒன்றிக் கலந்தான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ராணி.
 
[FONT=comic sans ms,sans-serif]# 16 (B). THE GREATNESS OF VEDAS.[/FONT]

[FONT=comic sans ms,sans-serif]The Siva yuva guru approached the rushis.They all sat in front of the Sivalingam and the exchange of knowledge began earnestly!

"The best among the Gods is Siva. He is the personification of Tatvam. The Vedas have originated from Siva. He is the real advaitha, sudhdha, swayam prakaasan. He is the paraaparan!

He is the swayambu. He is sinless and pure. He is the personification of knowledge. He is the para Brahma swaroopan. He is the most auspicious of all the Gods.

The roopam of the Vedas is the Sivalingam.The meaning of the Sivalingam is the Vedas. Sivalingam and the Vedas are related as closely as a word and its meaning. Lingam and Vedas are one and the same."

The Siva guru went on to explain the tatvam behind the Sivalingam. He explained the greatness of the three letters forming the Pranavam viz 'a', 'u' and 'm'.

He explained the greatness of Naadam and Bindu; the Gaayadri manthraa; the 28 Siva aagamaas; the birth of the four Vedas; the need for the Karma Kaandaa and the Gnaana Kaandaa; the need for performing one's nithya, naimithika karmaas, the kaameeya karmaas and the promise of mukthi -if these are performed in front of a Sivalingam!

The uththama guru explained everything the rushis ever wanted to know. He then stroked the heads of his old disciple rushis very gently, blessing them further and imparting to them pure knowledge, pure bliss and pure peace of mind!

He then walked back into the garba gruha and merged with the main deity right in front of their eyes!.!
[/FONT]
 
[FONT=comic sans ms,sans-serif]# 17. மாணிக்கம் விற்றது.[/FONT]

# 17 (a). பயிரும், களையும்

மன்னர்களில் அநேகர் திருமணம்
மகாராணியுடன் புரிந்துகொண்டாலும்,
காமசுகத்தை அனுபவிக்க விரும்பிக்
காமக் கிழத்தியரை ஆதரிப்பார்கள்!

பொன்னும், மணியும் விரும்பியே
மன்னனுடன் கூடுவார்கள் அவர்கள்;
ராணிகளைப் போல ராஜ்ஜியத்தைப்
பேண வேண்டிய அவசியம் இல்லையே!

வீரபாண்டியனுக்குப் பிறந்தனர் முழு
வீணர்களாகிய மகன்கள் அநேகர்!
குலத்தை வளர்க்கப் பிறக்கவில்லை
குல மனைவியிடம் ஒரு மகன் கூட!

மகனை வேண்டி மன்னனும் மனைவியும்
மாதவம் செய்தனர், விரதம் காத்தனர்;
நல்ல வேளையாக ஒரு நல்ல நாளில்,
செல்ல மகன் ஒருவன் வந்து பிறந்தான்.

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்தான் அவன்;
என்ன நடக்கும் நாளை எனச் சற்றும்
எண்ணாமலே வாழ்த்து வந்தனர் அவர்.

வேட்டைக்குச் சென்ற வீரபாண்டியன்
வேட்டையாடப்பட்டான் வரிப்புலியால்!
குலப்பயிருக்குக் களையாக முளைத்த
குலத் துரோகிகள் காத்திருந்த வாய்ப்பு!

யானை, குதிரை, இரத்தினம், மணிகள்,
பொன், பொருள், அரசுச் சின்னங்கள்;
மாயமாக மறைந்து போயின! கூடவே
மாயமானார்கள் அந்த மாயாவிகளும்!

அந்திமக் கிரியைகளை செய்வித்து அவர்
சொந்த மகனுக்குப் பட்டம் சூட்டிட
விரும்பிய அமைச்சர்கள் கண்டது என்ன?
இரும்புச் சுவர் கஜானாவில் கொள்ளை!

மணி மகுடமும் இல்லை, நவமணிகளும்,
மன்னரின் சின்னங்களும் காணவில்லை!
பொன்னும், பொருளும், பிற செல்வங்களும்;
போன திசை எவருக்குமே தெரியவில்லை!

புதிய மகுடம் செய்து அணிவிக்கத் தேவை
புதுமையான நவமணிகள், ரத்தினங்கள்;
மகுடம் இல்லையேல் மன்னன் இல்லை!
மன்னன் இல்லையேல் அரசாட்சி இல்லை!

அரசாட்சி இல்லையேல் அரசியல் இல்லை!
அரசியல் இல்லாத நாட்டுக்குத் தொல்லை!
அரனே நமக்கு வழி காட்டுவான் என்று,
அரசிளங்குமரனுடன் அமைச்சர்கள் குழு

அரன் திருக் கோவிலைச் சென்று அடைந்தது.
அரனே அங்கு நின்றான் வியாபாரி வடிவில்!
ரத்தினங்களின் ஓர் அழகிய மூட்டையுடன்,
சித்திரம் போன்றதொரு அழகிய வடிவுடன்.

"என்ன கவலை உங்களை வருத்துகின்றது?
என்னிடம் தயங்காமல் நீங்கள் கூறலாமே!"
"மகுடம் புனைய வழில்லை குமரனுக்கு!
கபடமாகக் கவர்ந்து சென்றனர் முன்பே!"

"கவலையை விட்டு ஒழியுங்கள் நீங்கள்!
நவரத்தினங்கள் பல உள்ளன என்னிடம்;
பதினாறு கோடிப்பொன் விலை பெரும்
புதுமையான நவமணிகள், ரத்தினங்கள்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 17.(a). THE CROP AND THE WEEDS.

The ancient kings married queens to bear them princes fit to rule the country, but they also had many other women to satisfy their lust. These women always had their eyes on the King's gifts and riches.They cared little about the king or his kingdom.

King Veerapaandian had many such women. They also bore him several wicked sons-shaped after their own selves. The lawfully wedded queen did not have any offspring.The king and Queen observed several vrathams and finally a son was born to them. They became very happy, little knowing what the future had in store for them!

The king went for hunting and got killed by a ferocious tiger. This was the opportunity the wicked women and their sons were waiting for. Using their influence they stole the royal elephants, horses, gold, silver, diamonds and even the king's crown and sceptre.

After performing the last rites to the dead king, the ministers wanted to crown the young prince as his successor.When they visited the royal treasury, they were in for severe shock! The treasury had been looted!

They wanted to make a new crown for the prince but they had no diamonds.Without a crown, there could not be a king.Without a king, there could not be a government. Without a government they would become vulnerable to the enemy's attack.

They decided to seek the blessing of Lord Siva in solving this problem.They saw a diamond merchant standing outside the temple. He held a bundle of beautiful gems and was extremely handsome to look at!

He asked the ministers as to what was bothering their minds! The ministers told him their tale of woe. He told them not to worry any more since he had the most exquisite collection of diamonds in the world worth 16 crore gold coins.
 

# 17 (b). வலனின் வைரங்கள்.

தரையில் அமர்ந்து கொண்டார் வியாபாரி,
தன் முன் விரித்தார் ஒரு கறுப்புக் கம்பளி.
மாணிக்கத்தை நடுவில் அமைத்துவிட்டு,
மணிகளை அதைச் சுற்றிலும் அமைத்தார்.

"விலைமதிப்பில்லாத இந்த ரத்தினங்கள்
வித்தியாசாமாக உள்ளனவே ஐயா?"
வலன் என்னும் நல்ல சிவபக்தனுடைய
வஜ்ஜிர உடலின் பாகங்களே இவைகள்!

வலன் என்னும் அசுரன் பெரும் சிவபக்தன்,
வரம் வேண்டிப் பெற்றான் சிவபிரானிடம்;
"மடியக் கூடாது நான் எந்தப் போரிலுமே!
மடிந்த பின் மாறவேண்டும் மணிகளாக!"

மனிதர்கள் விரும்பி அணியும் நவ
மணிகளாக மாற விரும்பியவனின்,
அரிய கோரிக்கையை ஏற்றான் சிவன்;
அரிய வரத்தையும் அளித்துவிட்டான்.

வலன் போர் புரிந்தான் இந்திரனுடன்,
வலன் வென்றான், இந்திரன் தோற்றான்;
"வலிமை பொருந்திய வலனே! உன்
வலிமையைப் போற்றி வரம் தந்தேன்!"

இந்திரனின் மொழிகளைக் கேட்ட வலன்,
சிந்தினான் சிரிப்பு அலைக் கூட்டத்தை;
"சிவனிடம் பெற்றுள்ளேன் அரியவரம்,
எவனிடமும் எனக்கு எதுவும் வேண்டாம்!

இந்திரா! உனக்கு வேண்டியதைக் கூறு!"
இந்திரனின் சூழ்ச்சி பலித்து விட்டது!
கொல்ல வேண்டும் வலிய வலனை,
நல்ல தருணத்தை நன்கு பயன்படுத்தி!

"வெள்ளிமலையின் சாரலிலே செய்ய
உள்ளுகின்றேன் இணையில்லாத யாகம்!
யாகத்தில் அர்ப்பணிப்பதற்கு எனக்கு
யாகப் பசு ஒன்று தேவைப்படுகின்றது!"

"யாகப் பசுவை பலி இடுவாய் இந்திரா!
யாகப் பசுவைப் புசிப்பார் தேவர்கள்;
புகழ்ந்து போற்றுவர், புண்ணியம் கிட்டும்,
இகழ்ந்து இதை நான் ஏற்க மறுப்பேனா?"

மகனுக்கு மகுடம் சூட்டினான் வலன்;
தகவுடைய யாகப் பசுவாக மாறினான்;
அத்தனை லட்சணங்களும் கொண்ட பசு!
எத்தனை வஞ்சகம் எத்தன் இந்திரனுக்கு?

தன்னையே யாகப் பசுவாக மாற்றி,
உன்னர்க்கரிய செயல் செய்த வலன்;
கண்ணைக் கவரும் நவமணிகளாகவே
அண்ணல் அருளால் மாறிவிட்டான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
[FONT=comic sans ms,sans-serif]# 17 (b). DIAMONDS OF VALAN.

The merchant sat on the ground and spread a black cloth in front of him. He set an exquisite red diamond in the center and set the other gems around it. Those diamonds looked very different and were vary rare. The ministers exclaimed to this effect.

The merchant told them,"You are right! These are not just the usual gem stones.These are the body parts of a great Siva bhakthan named Valan."

Then he told them the story of Valan. Valan was an asuran but a great devotee of Lord Siva. He begged his Lord for an unusual boon,

"I should not not die in any battle or war. When I die all my body parts must get transformed to beautiful gem stones which will please the eyes of the beholders!"

Lord Siva granted him the boon and Valan became very happy.

Some time later a battle broke out between Indra and Valan. Valan defeated Indra very easily. Indra thought of a new plan to get rid of Valan once for all! He told Valan,

"I am very much impressed by your valor and strength. I want to present you with a rare boon! What do you want?"

Valan had a hearty laugh and replied, "I have been blessed by Lord Siva himself. So I do not need any more boons. You tell me what you want and you will have it."

This was what Indra had in his mind all along! He told Valan,

"I want to perform a a rare yaga to please the Gods. I need an animal to be sacrificed in the yaaga. Can you become one?"

"The yaaga pasu will be sacrificed and all the Devas would eat it. It will fetch me honor and the blessings of the Gods. Surely I will oblige your request!"

Valan crowned his son as the new king of his country. He transformed himself to a yaaga pasu. It was perfect in every aspect. Indra was secretly happy that his wicked scheme had borne fruit!

[/FONT]
 
# 17 (c ) அபிஷேக பாண்டியன்.

தன்னலமற்ற வலனின் தியாகத்தால்,
மின்னத் தொடங்கின உடல் உறுப்புகள்.
அண்ணல் அளித்த அரிய வரத்தினால்,
வண்ண, வண்ண நவமணிகள் ஆனான்!

முத்துக்கள் ஆயின முப்பத்திரு பற்கள்,
ரத்தம் ஆயிற்று சிவந்த நிற மாணிக்கம்;
வைடூரியம் ஆனது முடிக் கற்றைகள்,
வைரங்களாயின வஜ்ஜிர எலும்புகள்.

கோமேதகம் ஆனது உடலின் கொழுப்பு,
கோழை மாறியது புஷ்பராகங்களாக!
நீலமணிகளாயின அழகிய இரு கண்கள்,
நீண்ட தசைகளோ பவளங்கள் ஆயின.

ரத்தினங்கள் தோன்றும் இடங்கள்,
ரத்தினங்களின் நிறங்கள், இனங்கள்;
ரத்தினங்களின் வகைகள், பலன்கள்;
இத்தனையும் எடுத்துரைத்தார் அவர்.

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு,
இடர்கள் நீக்கும் அரிய பூஜைகளைப்
புரிந்து, குமரனை வாழ்த்தி, மணிகளைச்
சிரித்துக் கொண்டே அளித்தார் அவர்.

"புது மகுடம்
செய்விப்பீர் இவைகளால்
புது மன்னன் ஆகும் இளம் குமரனுக்கு!
அபிஷேக பாண்டியன் என்ற பெயரில்
சுபிட்சமான ஆட்சி புரிவான் இவன்!"

வியாபாரிக்கு மணிகளின் விலையைத்
தயார் செய்து அளிக்க விரும்பிய அந்த
அமைச்சர்கள் குழு கண்ட காட்சி என்ன?
உமையுடன், அவர் கோவிலில் நுழைவதே!

வந்தவர் வெறும் வைர வியாபாரி அல்ல!
சந்திர மௌலியின் திருவிளையாடல் இது;
வந்தனம் செய்து வணங்கினர் அவர்கள்
எந்தையும், தாயும் எழுந்தருளிய காட்சியை!

மகுடம் தயாரானது மகேசன் ஆணைப்படி;
மகுடம் புனைந்தான் மகேசன் ஆணைப்படி;
அபிஷேக பாண்டிய மன்னனுடைய நல்ல
சுபிட்சமான ஆட்சி அங்கு தொடங்கியது.

அவன் வீரத்தால் தன் பகை வென்றான்;
அவன் ஈரத்தால் மனங்களை வென்றான்;
தீரத்தால் அவன் மீட்டான் திருட்டுப்போன
அரசுச் சின்னகளையும், மற்றவற்றையும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
[FONT=comic sans ms,sans-serif]# 17 (c). ABISHEKHA PAANDIYAN.

Valan's selfless sacrifice did not go in waste. As blessed by Lord Siva the parts of his body turned into precious and rare gems.

His teeth became beautiful pearls; his blood became red carbuncle; his locks of hair became Vaidooryam (lapis lazuli); his strong bones became diamonds; the fat in his body became sardonyx; his phelm became topax; his large eyes became sapphires and his muscles became corals.

The merchant went on to describe about the gems, where they were found, their colors, varieties, types and the benefits of wearing them.

Then he sat facing north. He did special puja for those diamonds, gave them to the prince and blessed him.

He told the ministers,
"Make the new king a new crown with these diamonds and gems. Name him as Abishekha Paandian. His rule will be the golden period in the history of your country!"

The ministers wished to pay the merchant the huge sum of money they owned him. To their utter surprise He was seen entering the temple accompanied by Uma Devi!

They realized that the merchant was none other than Lord Siva himself.They did vandanam and namaskaram to them.

A new crown was made as ordered by Lord Siva.
The prince as crowned as ordered by Lord Siva.
His new name was Abisheka Paandian.
He ruled his country very well.

His valor conquered his enemies,
His kindness conquered his citizens;,
He recovered all the treasures stolen by

his treacherous half brothers in due course of time.
[/FONT]
 
#18. கடலை வற்றச் செய்தது.

நவமணிகளை அளித்து, நல்லாசி தந்த,
சிவபிரானை மன்னன் மறக்கவில்லை.

சித்திரா பௌர்ணமி தவறாமல் தன்
நித்திரையைத் துறந்து ஆராதித்தான்.

கற்பூரம் கரைத்த நீரால் குளிர்வித்து,
கற்பூர சுந்தரேசனைத் தொழுவான்;

தேவர்களும் வந்து பூஜை செய்வதுண்டு;
சிவனுக்குச் சித்திரா பௌர்ணமி அன்று.

அபிஷேக பாண்டியன் செய்து வந்த
அபிஷேகத்தால் தாமதம் ஆயிற்று,

தேவர்கள் தலைவன் அங்கு செய்யும்
திவ்விய வருடாந்திர பூஜைகள் அன்று.

வருணன் இந்திரனிடம் வந்து கேட்டான்,
"ஏன் இந்த முகவாட்டம் உங்களுக்கு?" என.

"பாண்டிய மன்னனின் பூஜைகளால் என்
ஆண்டவன் பூஜை தாமதமாகின்றது!

"அங்கேயே சென்று வருடம் தோறும்
அதே லிங்கத்தைப் பூஜிக்க வேண்டுமா?

எத்தனையோ லிங்கங்கள் உள்ளனவே!
அத்தனை அங்கேயும் நீர் பூஜிக்கலாமே!"

"விருத்திரனைக் கொன்றதால் பீடித்த,
பிரம்மஹத்தியை போக்கியது அதுவே!

துர்வாசரின் கொடிய சாபத்தினின்று,
ஐராவதம் பிழைத்தது அதனாலேயே!

எத்தனையோ லிங்கங்கள் இருந்தாலும்
அத்தனையிலும் சிறந்து அந்த லிங்கமே!

சொக்கலிங்கத்துக்கு நிகர் உலகினில்
எக்கடவுளும் இல்லை என்றறிவாய்!"

"பெரு வயிற்று நீரைப் போக்கிட அச்
சிறு லிங்கத்தால் முடியுமா கூறும்!

பெருந் தொல்லை தருகின்றது அதைச்
சரி செய்ய இயலவில்லை எவராலும்!"

"முடியாதது என்று எதுவுமில்லை தன்
அடியார் குறை தீர்க்கும் சிவனுக்கு!

சோதித்து நீயே அறிந்து கொள்வாய்!
போதிக்க வேண்டிய தேவை இன்றியே!"

கடலைப் பொங்கி எழச் செய்தான் அவன்,
கடுகி மதுராபுரியை அழிக்கச் சொன்னான்;

பொங்கி எழுந்தது கடல் நீர் அங்கு!
ஓங்கி எழும்பின கடல் நீர் அலைகள்!

வேரோடு சாய்ந்த மரங்கள் எல்லாம்
நீரோடு அடித்துச் செல்லலாயின!

அபிஷேக பாண்டியன் ஈசனிடம் தஞ்சம்!
அபயம் அளித்தான் கொன்றை மலரவன்.

நிலவுடன் தன் தலையில் உலவிடும்
நிகரில்லாத நான்கு மேகங்களிடம்,

"பருகுவீர் சென்று பொங்கிய கடல் நீரை,
செருக்கு ஒழிந்து அது அடங்கும் வரை!"

முழங்கிக்கொண்டு புறப்பட்ட மேகங்கள்,
முழங்காலுக்கு வற்றச் செய்தன கடலை;

மதுராபுரி பிழைத்தது வெள்ளத்திலிருந்து!
மன மகிழ்ந்தனர் மன்னனும், மக்களும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி. .


மதுரைக் காண்டம் முற்றுப் பெறுகின்றது.

 
# 18. SUBSIDING THE SWOLLEN SEA WATER.

Abisheka Paandian never forgot Lord Siva even for a moment. He did special abishekam to the Lord on every Chitraa Pournami day, with the fragrant water in which pure camphor was dissolved. He would stay up till very late on those nights.

Indra also used to come down to earth to do puja to the Sivalingam. Indra's puja got delayed since he had to wait till the king left the temple. Indra was not happy with this state of affairs.

Varuna asked Indra what was bothering him. Indra told about the King's puja and how it delayed his own puja.

"Why should you do puja to the same Lingam as he does? You may worship another Lingam. There are so many Lingams on the earth."

Indra replied to Varuna,"There may be many Lingams on earth. But only that Chokkalingam was able to free me from the brahmahathi dosham and liberate Airavatham from the curse of Durvasa rishi. Chokklingam is the best of all the Lingams."

Varuna told Indra,"I am suffering from heaviness of the stomach. Can Chokkalingam cure me of the pain and suffering?"


Indra replied,"Nothing is impossible for Sivalingam. You may test Him and convince yourself."

Varuna ordered the sea to swell up and destroy Madhuraapuri. The sea rose very high, uprooted many trees and carried them along with its giant waves..

The King Abisheka Paandian sought the protection of Lord Siva. Siva gave him abhayam and ordered the four clouds residing on his matted coils, along with the crescent moon, "Go forth and drink up all the swollen waters of the sea!"

The clouds left with a loud noise and drank up the water from the swollen sea till the sea became shallow and calm.
Madhuraapuri was saved. The king and his citizens thanked Lord Siva .

Madurai Kaandam is completed.

 
#19. (a ). ஏழு மழை மேகங்கள்.

அடங்கி விட்டது கடலின் வலிமை;
சுருங்கி விட்டது பெருகிய கடல் நீர்;
சிவந்தன வருணனின் கண்கள் இரண்டும்;
சீறினான் வளரும் சினத்தினால் அவன்!

கடல் தோற்றதால் என்ன ஆகிவிடும்?
அடல் மிக்க மேகங்கள் ஏழு உள்ளனவே!
அழைத்தான் அந்த ஏழு மேகங்களையும்,
"பிழைக்க முடியாதபடி அழித்து விடுங்கள்!"

கறுத்த ஏழு கன மேகங்கள் புறப்பட்டன;
கண்களைப் பறிக்கும் மின்னல் வெட்டின.
ககனம் நடுங்கும் இடி முழக்கம் செய்து
கள்ளம் இன்றி மழை பொழியலாயின!

மண்டையைப் பிளக்கும் ஆலங்கட்டிகள்,
மதுராபுரி மீது வந்து விழத் தொடங்கின!
ஊழிக் காற்றும் உடன் உருவாகியது;
சூழ்ந்தன காரிருளும், பெரும் புயலும்!

உலகையே அழிக்கும் ஊழியிலிருந்து;
உலக நாயகனே காக்க வல்லவன்;
"அபயம்! அபயம்!" என்று அலறியயபடி,
அம்பலத்தை அடைந்தனர் நகர மக்கள்.

நிலவுடன் கூடித் தலை மேல் உலவும்,
நிகரற்ற நான்கு கன மேகங்களிடம்;
நீலகண்டன் மீண்டும் பணித்தான்,
"நீக்குவது இடரை உங்கள் கடமை!

நான்கு திசைகளில் இருந்தும் நீங்கள்
நன்கு சூழ்ந்து கொள்வீர் மதுரையை!
நான்கு மாடங்கள் போலக் கூடிநின்று
நன்கு மழையைத் தடுப்பீர் நீங்கள்!"

விரைந்து சென்றன நான்கு மேகங்கள்;
பரந்து விரிந்தன வெண்நிறக்குடையாக!
மாட மாளிகைகள், கூட கோபுரங்களைக்
கூடாரம் போலக் குவிந்து காத்தன!

வருணன் மேகங்கள் பொழிந்த மழை
பெருங்குடை மீது பட்டுத் தெறித்தது!
ஒரு துளி நீர் கூட அதைத் தாண்டி
மதுரை நகர் மீது விழவில்லை!

முள்ளை முள்ளால் எடுப்பார்கள்!
நெருப்பை நெருப்பால் அழிப்பார்கள்.
மேகக் கூட்டத்தின் தாக்குதலை ஈசன்
மேகங்களின் உதவியுடனே எதிர்த்தான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
19 (A). THE SEVEN RAIN CLOUDS OF VARUNA.

The swollen waves subsided! The sea lost its destructive power and became tamed. Varuna became red with rage.

"The sea has been tamed! But I still have my unfailing clouds seven in number.They can cause the destruction and deluge the sea failed to cause!"

He ordered his loyal clouds to flood and destroy Madhuraapuri completely. Those were the dark rain clouds. They crackled with lightning, roared with a thunderous noise and left on their mission.

There was a terrifying hail storm. A single hailstone was large enough to crack the skull of fully grown man. The wind blew as a storm and the whole city became dark and sinister,

The only refuge left was Lord Siva and the only safe place His temple. Every one gathered there praying for His mercy and protection.

Siva summoned the four clouds residing on his matted coils of hair.He told them, "It is now your duty to protect the city and its citizens. Go forth and form a protective umbrella from the four direction of the city!"

The four clouds left on their new mission, swifter than thoughts. They took position one in each direction and spread themselves out forming a giant protective umbrella over the whole city.

The hailstorm could not penetrate the shield formed by these four clouds. The hail stones got thrown in all directions and not a single stone could penetrate the umbrella of the four clouds. The shield saved the city.

A thorn is removed by a thorn. A fire is extinguished by a fire. But here the onslaught of clouds was fought back by clouds themselves! Isn't it a wonderful concept? .
 
#19.(b) நான்கு மாடக் கூடல்.

பயந்து, நாணி, வெட்கிய வருணன்,
தயங்கிப் பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்து செய்ய விழைந்தான்
லிங்க பூஜை சொக்கநாதருக்கு.

வயிற்றுநீர் வியாதி நொடிப்பொழுதில்
கயிற்றை அவிழ்த்த கன்றாக ஓடியது!
ருத்திராக்கமும், திருநீறும் அணிந்து
ருத்திரனை உபாசித்தான் வருணன்.

கண்ணிய நதி நங்கைகள் தங்கள்
தண்ணிய நீரைத் தங்கக் குடங்களில்
அண்ணலின் அபிஷேகத்துக்கு அளித்து
புண்ணியம் எய்திப் புளகம் அடைந்தனர் !

வாசனைத் திரவியம், மலர்கள், சந்தனம்,
பூசனைக்கு வேண்டிய சில பொற்கலங்கள்,
அற்புதமான பொன்னாடைகள் இவற்றை,
கற்பகத் தரு மனமுவந்து அளித்தது.

பஞ்சாமிர்தம், ஐந்து வகைக் கனிகள்,
பஞ்சகவ்வியம், நைவேத்தியங்கள்,
தூப தீபங்களைக் காமதேனு உவந்து
தூய மன
த்துடன் அவனுக்கு அளித்தது.

முறை தவறாமல் செய்தான் வருணன்,
நிறைவான பூஜை சொக்கலிங்கத்துக்கு;
ஆயிரம் நாமங்களை அர்ச்சனை செய்து
ஆயிரம் முத்துக்களை அர்ப்பணித்தான்.

வரம் தர விரும்பினான் கருணைக்கடல்,
வரம் தேவை இல்லையே இப்போது!
நீங்கிவிட்டது வயிற்று நீர் வியாதி,
நீலகண்டன் திருவருளால் வருணனுக்கு!

"சோதனை செய்தேன், பிழை பொறுப்பீர்!
வேதனை அடைகின்றேன், மதியிலி நான்!
போதனை பெற்றேன், தேவன் உங்களிடம்,
சாதனை மன்னர் நீங்களே! ஐயம் இல்லை!"

நான்கு மேகங்கள் நாற்புறமும் சூழ்ந்து
நான்கு மாடங்களாக நகரைக் காத்ததால்,
நான்கு மாடக் கூடல் நகர் என்ற பெயர்
நம் மதுராபுரிக்கு அமைந்து விட்டது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 19 (B). THE FOUR STORIED PROTECTION.

Varuna got frightened and ashamed at the failure of his daredevil plans and thoughtless actions. He wished to make up for his folly by worshiping Lord Siva in the form of Chokkalingam.

Even as he was making up his mind to worship the Lord, the problem due to his extended stomach vanished without a trace.

He had a holy dip in the Pond of Golden Lotuses. He adorned himself with holy ash on his forehead and rudraaksha maalas.

The rivers gave him their holy water in golden pots for doing abishekam. Karpaga Vruksham gave him the sandal paste, flowers, gold vessels, new dresses and the incenses needed for the puja.

Kaamadhenu gave him the panchaamrutham, pancha gavyam, dhoop and deepam for the puja. Varuna did an elaborate pooja in the prescribed manner.He did the sahasranaama archana for Siva with 1000 beautiful pearls.

Lord Siva was pleased with Varuna and wanted to bestow him with a boon. But Varuna had already got rid of his problem and desired nothing,

Varuna begged for Lord's pardon for his thoughtless actions in challenging the all powerful god.

Since the four clouds protected the city of Madhuraapuri, it got new name "The city with four storied protection!" .
 
#20. எல்லாம் வல்ல சித்தர் ஆனது.

அபிஷேக பாண்டிய மன்னன் மாறாத
அபிமானம் கொண்டிருந்தான் சிவன் மீது;
அன்புக்கு அடிமையான ஈசன் அவனோடு
அன்புடன் விளையாட விரும்பினான்!

வடிவடுத்தான் அழகிய சித்தர் பிரானாக;
முடிக் கற்றைகள், புலித்தோல், இளவயது;
தங்க நிற நெற்றியில் திருநீற்றுப்பட்டை;
தங்கப் பூண்கள் இட்ட அழகிய ஒரு பிரம்பு!

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்;
கடை வீதிகள், சித்திரக் கூடங்கள்;
நிலவு முற்றம், நாற்சந்திகள்
எங்கும்
அலகிலா இந்திரஜாலங்கள் செய்தார்!

ஆண் மகனைப் பெண்ணாக்கி விடுவார்;
ஆண்மகன் ஆக்குவார் அழகிய பெண்ணை;
வாலிபர்கள் வயோதிகர்கள் ஆனார்கள்;
வயோதிகர்கள் வாலிபர்கள் ஆனார்கள்;

கூனனை நிமிர்த்தி அழகனாக்குவார்;
குருடனுக்குக் கண் பார்வை தருவார்;
செவிடன் கேட்பான்; ஊமை பேசுவான்;
முடவன் காலை வீசி நன்கு நடப்பான்;

இரும்பு உருமாறி பொன்னாகிவிடும் ;
ஈயம், தாமிரம், வெள்ளியும் கூட;
பண்டிதன் ஆவான் பாமரன் நொடியில்;
சண்டிராணி அழகிய மடந்தை ஆவாள்;

சித்தரின் சித்து விளயாடல்களால்
சித்தம் பறி போனது பாண்டியனுக்கு!
"வித்தகர் அவரைக் கண்டு நான் என்
அத்தனாகவே வணங்குவேன் அவரை!"

ஏவினான் தன் ஆணைக்கு அடிபணியும்
ஏவலர்கள் சிலரைச் சித்தர் பிரானிடம்;
பணியாட்கள் சித்து விளையாடல்களில்
பணிமறந்து சிலையாக நின்றுவிட்டனர்;

மதி மந்திரிகள் அனுப்பப்பட்டனர் பிறகு
மதி மயக்கும் சித்தரை
அழைத்துவர;
"மன்னனுக்கு எந்த நன்மையையும்
என்னால் விளையாது! வரமாட்டேன்!"

மதி மந்திரிகளின் இத்தகையதொரு
பதிலைக் கேட்டு எண்ணினான் மன்னன்,
"தேவருலக மன்னனையே மதியாதவர்
பூவுலக
மன்னனையா மதிக்கப் போகின்றார்?"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
#20. THE BEWITCHING SIDHDHA PURUSHA.

Abisheka Paandian held Lord Siva in highest esteem. Lord loves His devotees as much as they love Him. He wanted to play a prank with the king.

He assumed the form of a young Sidhdha Purusha. He had long thick matted hair, wore a tiger skin and held a stick with decorated golden tips. His forehead was adorned with the holy ash and he was bewitchingly handsome.

He performed many fascinating tricks in various spots of the city-on tall buildings, in the streets, in the market place and in open terraces.

He would transform a man into a woman and a woman into a man. A young man would be changed to a very old man and an old man into a youth.

He could make the blind people see things, the deaf hear words, the dumb to speak and the lame to walk and run. He transformed hunchbacks to handsome persons.

He could transmute all the base metals in to pure gold!
The illiterate became learned and the rude women were made demure when he performed his tricks.

The king heard the stories about this wonderful man and wanted to meet him in person. He sent his servants to bring the sidhdha to the palace but the servants forgot their mission and stood transfixed like statues by the miracles performed by the man.

The king's ministers were sent to bring the sidhdha to the palace. But the sidhdha said that it would not serve any purpose and refused to go to the king.

The king was disappointed by the answer. He knew that such an accomplished sidhdha would not fear even Indra- the king of heaven! Why would he care for a king of a small country?

Yet his heart yearned to meet this Sidhdha Purusha in person and get to know him better.
 
Last edited:
#21. கல் யானைக்குக் கரும்பு அளித்தது.

"சித்து வேலைகள் புரிந்திடும் அந்த அற்புத
வித்தகரை நானே சென்று வணங்காமல்;
இங்கே அவரை வரச் சொல்லி அழைத்து
இங்ஙனம் அவமதித்து விட்டேனே நான்!"

சித்தருக்கும் மன்னனைக் காணும் ஆவல்
சித்தத்தில் நிரம்பி வழியலாயிற்று;
மகர சங்கராந்தி மாதப் பிறப்பன்று
நிகரற்ற இந்திர விமானத்துக்கு அருகே,

எதிர் நோக்கி அமர்ந்திருந்தார் அவனைப்
புதிர் ஆக விளங்கிய இளம் சித்தர்பிரான்;
மன்னனுக்கு வழி செய்துகொண்டு வந்தவர்கள்
சன்னியாசி உடையில் இருந்தவரையும் விரட்ட,

மன்னனே வந்துவிட்டான் அங்கே அவரருகே,
சன்னியாசியிடம் கேள்விக் கணைகளுடன்!
"உமது நாடு யாது? உம் உறவினார்கள் எவர்?
உமது சக்திகள் என்ன? உம் தொழில் என்ன?"

"காசியே எனக்கு இடமும், என் நாடும்;
நேசிக்கும் சிவனடியார்களே உறவினர்;
சித்து வேலைகள் செய்து மகிழ்வித்துப்
புத்துணர்ச்சி ஊட்டுவது என் தொழில்!"

கம்பீரமாகப் பேசினார் இளம் சித்தர்பிரான்;
கம்பீரமா அன்றி கர்வமா தெரியவில்லை!
வல்லமையைச் சோதித்து அறிவதற்கு ஒரு
கல்யானையைத் தேர்வு செய்தான் மன்னன்.

பருத்து, விளைந்து, நீண்டு, உயர்ந்த ஒரு
கரும்பினை வேளாளனிடம் பெற்ற மன்னன்
"வல்லவருக்கு வல்லவர் நீங்கள் ஆயின்,
கல்யானைக்குக் கரும்பு அளிப்பீர்!" என;

கல்யானையைக் கடைக் கணித்தவர்,
வெள்ளமென மன்னனிடம் பேசினார்;
"கரும்பு தின்கின்றதே கல்யானை இன்று!
திரும்பி அதனை நீ நோக்குவாய் மன்னா!"

திரும்பிய மன்னன் திகைத்து நின்றான்;
கரும்பை விரும்பிச் சுவைத்தது யானை!
திறந்த கண்கள் விரிய, துதிக்கை ஆடிட,
சிறந்த கரும்புச் சாறு வாயிலிருந்து வழிய!

கரும்பு தின்றபின், மன்னன் மாலையை
க்
குறும்புக் கல்யானைப் பற்றி இழுத்தது!
மெய்க்காவலர்கள் பிரம்பை உயர்த்தவே,
மெய்யாக மாலையை விழுங்கிவிட்டது!

காவலர் கோபம் சித்தர் மீது திரும்பியது!
கோவலன் மணிமாலை தொலைந்ததால்!
சித்தரை நோக்கிப் பிரம்பை உயர்த்தினர்;
சித்தர் 'நில்' எனச் சிலை போலாயினர்!

கோபம் மறைந்து ; ஞானம் பிறந்தது;
தாபம் தீர்ந்தது; உளப்பரிவு பெருகியது;
மண்மீது தன் மணிமுடி நன்கு பதியத்
தண்ணருள் ஈசனின் தாள் பணிந்தான்.

"வேண்டும் வரம் கேள் மன்னா!" என்றிட ,
"மண்ணாள ஒரு மகன் வேண்டும்" என்றான்.
தந்தார் சித்தர் மன்னன் விரும்பிய வரத்தை;
தந்தது யானை மன்னன் மணிமாலையை ;

பெற்றுக்கொள்கையில் சித்தர் மறைந்தார்;
கற்சிலையானது யானை முன்போலவே!
ஏக்கம் தீர்க்க வந்து பிறந்தான் ஒரு மகன்;
ஊக்கம் நிறைந்த விக்கிரம பாண்டியனாக!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
.
 
# 21. FEEDING A STONE ELEPHANT.

"I should have gone and met that mahaan! It was wrong on my part to order him to come to meet me in the palace!"
The king kept on musing in this line of thought.

Apparently the Sidhdha also was keen on meeting the king!
On a Makara Sankaraanthi day, the Siddha purusha sat on the north western side of the Indra Vimaanam. The King was doing Pradakshinam of the temple.

The king's bodyguards would make way for the king in crowded places. They ordered the Sidhdha Purusha to move away and make way for the king. By that time he king himself had reached that spot.

He threw many questions at the sidhdha,"Which is your place and city? Who are your relatives? What is your business here?"

The sidhdha replied with a smile, "I come from Kasi. All the devotees of Siva are me relatives. My business is performing miracles and refreshing people with my tricks!"

The confidence with which the sidhdha spoke, made the king want to test his ability. He took a sugarcane and told the sidhdha to feed it to the stone elephant seen in the temple.

The sidhdha told the king to turn back and look at the stone elephant. It had already opened its eyes wide. It waved its trunk and was chewing the sugarcane, dripping its rich juice all over the place.The King stood wonder struck!

Now the naughty elephant grabbed the gold haaram of the king. The bodyguards threatened the elephant with their sticks raised. It gobbled the king's haaram!

Now the anger of the bodyguards turned on the sidhdha purusha. They raised their sticks to beat him. He said, "Stop!" and they all froze like statues in mid action.

Now the truth dawned on the king that the sidhdha was none other than Lord Siva Himself. He prostrated to the mahaan. He was offered a boon. The king wished for a successor in the form of a worthy son.

Sidhdha gave him the boon and the elephant returned his haaram. At that moment the sidhdha disappeared and the elephant became a stone elephant once again!

The King was blessed with a worthy son whom he named a as Vikrama Paandian.
 
# 22. யானை எய்தது!

# 22 (a). கரிய மலை வேழம்.

விக்கிரம பாண்டியன் ஆட்சியில்
அக்கிரமங்களுக்கு இடமில்லை!

நல்லாட்சி புரிந்த அவன் புகழ் பரவிச்
செல்லாத இடம் இல்லை என்றானது!

சிவநெறி நன்கு தழைத்து ஓங்கியது!
புறநெறிகள் மங்கி வீழ்ச்சி அடைந்தன;
அமண மதமும், புத்த மதமும் தேய்ந்தன;
அமலன் புகழோ ஏறுமுகம் ஆயிற்று.

சூரியகுலச் சோழமன்னன் மனத்தைச்
சூரியன் போலத் தகித்தது எது அறிவீரா?
சமணனாகிய அவனுக்குக் கோபம்,
சமணமதம் அழியத் தொடங்கியதால்.

பலமுறை நேருக்கு நேர் பொருதும்,
பாண்டியனை வெல்ல இயலவில்லை!
மறைமுகத் தாக்குதல் மூலமேனும்
மாறனை அழித்துவிட விரும்பினான்.

எட்டு மலைக் குகைகளில் வசித்திருந்த
எட்டு ஆயிரம் சமணக் குரவர்களையும்;
ஓலைகள் அனுப்பி வரவழைத்தான் தன்
கோலத் தலைநகர் காஞ்சி மா நகருக்கு!

"வசியம் முதலான அறுதொழில்களையும்
வசப்படுத்தி வைத்துள்ளவர்கள் நீங்கள்!
பாண்டியனை யாகம் செய்து அழித்தால்,
பாதி ராஜ்ஜியம் உங்களுக்கு அளிப்பேன்!"

பாலி ஆற்றங்கரையில் கொடிய யாகம்
பாண்டியனைக் கொல்வதற்கு நடந்தது.
யாகசாலையின் பரப்பில் நடுவில் ஆழமான
யாக குண்டம் ஒன்று எட்டு கோண வடிவில்;

அபிசார ஹோமம் தொடங்கியது அங்கு!
அகோரமான முறையில் தொடர்ந்தது!
அழிக்கும் செயல்களைச் செய்ய விரும்பியவர்,
அழிக்கும் விஷங்களையே பயன்படுத்தினர்.

எட்டியைப் போன்ற விஷ சமித்துக்களை,
வேம்பின் நெய்யுடன் ஹோமத்தில் இட்டனர்.
கொட்டினர் ஹோம குண்டத்தில் மேலும்,
கொழுப்பு விஷ ஜந்துக்களின் உடலிலிருந்து.

நச்சு வேள்வி தொடர்ந்து நடந்தது அதில்
அச்சம் தரும் யானை வெளிப்படும் வரை!
பெரிய மாமலையா? அன்றிக் கரிய மாமலையா?
தெரியவில்லை! ஆனால் அது கொல்லும் யானை!

"விக்கிரம பாண்டியனை அழித்துவிடுவாய்!
சொக்கனின் மதுராபுரியையும் அழிப்பாய் நீ!
உற்பத்தியான காரணத்தை அறிவாய் நீ!
தற்போதே விரைந்து மதுராபுரி செல்வாய் நீ!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 22 (A). THE KILLER ELEPHANT.

Vikrama Paandian's rule was a glorious period for the religion of Siva namely Saivism. His fame spread far and wide. Buddhism and Jainism deteriorated and Saivism flourished.

The Chola King who belonged to Soorya Dynasty and was a Jain, was seething with anger at the decline of Jainism and the growing popularity of Vikrama Paandian.

His efforts to defeat Paandian in battles were futile. He decided to employ Black magic and dark arts to have his revenge.

He invited the 8,000 Jain gurus living in eight huge caves, to his capital city. He told them," You have mastered all the dark arts. If you can perform a yaaga and kill Vikrama Paandian, I shall give half my kingdom to you!"

The Jain gurus were not fools to reject such an offer. Immediately they set up a large yaaga saala. They dug deep yaaga kundam in the center of the yaaga saala. It was octagonal in shape.The evil homam was lalunched.

The samithu used for the homam were parts of poisonous plants and trees. The ghee used was extracted from Neem trees. The fat of the all the poisonous creatures and animals were poured in to the homa gundam.

This went on until a killer elephant emerged from the homa kundam. It was created exclusively for destroying the Paandiya king and his capital city.

The elephant which resembled a large black mountain was ordered to proceed to Madhuraapuri and accomplish its deadly mission.
 
# 22 (b ). வில்வீரனும், கொல் யானையும்.

மலை
போல உயர்ந்தும், நிமிர்ந்தும்,
அலை போல அசைந்தும் நடந்தது யானை;
சோழர் குலத்தின் நால்வகைப் படையும்,
சோர்வில்லாச் சமணரும் பின்தொடர்ந்தனர்.

புழுதிப் படலத்துடன் வரும் பெரும் படையை
பொழுதில் கண்டு விட்ட விக்கிரம பாண்டியன்,
மலை நிகர்த்த கரிய கொல்யனையை வெல்ல
மலை மகள் மணாளனைச் சரணடைந்தான்!

"பாண்டியா! அஞ்ச வேண்டாம் வீணாக மனம்!
அண்டிய படையையும், மந்திர யானையையும்,
தண்டிப்பேன் வில் வீரனாக உருவெடுத்து!
மண்டபம் ஒன்று கிழக்கில் அமைத்திடுக!"

பதினாறு தூண்களை உடைய அழகிய
அதியுறுதியான அட்டாலை மண்டபம்
அமைத்தான் பாண்டியன் கிழக்கு திசையில்,
உமைமணாளன் தன்னிடம் கோரிய விதத்தில்!

வந்தான் ஒரு வாலிப வில் வீரன் அங்கு!
வண்ண மயில்பீலி அவன் கரியகுடுமியில்;
இழுத்துக் கட்டிய சிவப்பு நிறக் கச்சை!
இடுப்பில் தொங்கிய நீண்ட உடைவாள்!

இடது தோள் மீது ஒரு நீண்ட வலிய வில்!
வலது முதுகில் அழகிய அம்பறாத்துணி;
கண்களைக் கவரும் வடிவழகன் அவன்!
கருநிறம் எடுத்து வந்தானோ மன்மதன்?

மண்டபத்தின் மேல் ஏறி நின்றான் வீரன்;
கண்டவுடன் யானையைக் கொல்லுவதற்கு;
கூப்பிடு தூரத்தில் யானை வந்தவுடனே
கூ
ரிய நரசிங்கக் கணையை விடுத்தான்.

சிங்கம் போலவே கர்ஜித்தது அக்கணை!
மேகம் போல இடி முழக்கியது அக்கணை!
வேல் போலப் பாய்ந்து சென்றது அக்கணை!
வேழத்தின் தலையைத் துளைத்தது அக்கணை!

கொல்ல வந்த கொல் யானையே அங்கு
கொல்லப் பட்டது வில் வீரன் கணையால்!
இருள் மலையைப் போன்ற கரிய யானை,
இறந்து விழுந்தது ரத்தம் பெருக்கெடுத்து!

தெய்வ வில்வீரனின் திருப் பாதங்களைத்
தொழுதான் பக்தியுடன் பாண்டிய மன்னன்;
தொடர்ந்த சமணரையும், சேனையையும்,
துரத்தினான் தக்கப்படி தண்டித்த பிறகு.

ராஜகளையுடன் பிறந்த தன் மகனுக்கு
ராஜசேகரன் எனப் பெயரிட்டான் அவன்.
ராஜகுமாரனுக்குப் பயிற்சிகள் அளித்து
ராஜாவாகும் தகுதிகளை வளர்த்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 22 (B) THE ARCHER AND THE ELEPHANT.

The elephant which was tall and dark resembling a huge mountain walked majestically towards Madhuraapuri.The army of the Chola King and the group of Jain followed it closely-not wishing to miss the fun!

Vikrama Paandiyan saw the approaching elephant and the army. He knew that only Siva could save him and his capital city from this killer elephant.He heard an asareeri - the voice of god instructing him thus:

"Do not be afraid Paandiya! I will appear as an archer and kill the devilish elephant myself. Put up a strong and tall mandapam in the eastern side of Madhuraapuri"

The King constructed strong and tall mandapam with sixteen pillars.

There appeared a young archer! His dark hair was tied up and decorated with peacock feathers! He worse a red sash and had a long sword at his waist. He had a powerful bow and and many arrows.

He was so handsome that anyone would wonder whether he was a dark skinned Manmatha! He waited on the mandapam till the elephant came close enough to be shot by an arrow.

He then set his Narasimha Asthra on his bow and released it with a great force. The arrow roared like a lion. It made a thunderous noise. It sped like a spear. It tore open the forehead of the mighty killer elephant.

The killer elephant got killed. It collapsed in a pool of blood and died. The king held the feet of the divine archer with gratitude. He then set his army to fight the Chola army and drove them back to their country.

In due course the king was blessed with a worthy son. He had all the markings of a good king. The prince was named as Rajasekaran and everything he needed to learn to become noble king, was taught to him by his loving father Vikrama Paandian.
 
# 23 விருத்தர், குமாரர், பாலர் ஆனது.

# 23 (a). சிவனடியார் வருகை.

வேதியன் விரூபாக்ஷனுக்கும், அவன்
தேவியான நங்கை சுபவிரதைக்கும்,

விரத பயனாக வந்து அவதரித்தாள்;
பிறவிப் பிணியை வெறுத்த கௌரி.

மாறுபட்டிருந்தாள் கௌரி மிகவும்
மற்ற சிறு குழந்தைகளிடமிருந்து!

பொம்மைக்காக அவர்கள் அழ, இவள்
இம்மையிலேயே முக்தி வேண்டினாள்!

பிறவிப் பிணியை ஒழிக்க வல்ல ஒரு
சிறந்த மருந்தினை தேடினாள் அவள்.

மகளின் விருப்பத்தை மதித்த தந்தை
மகா மந்திரத்தை உபதேசம் செய்தார்.

பரா சக்தியின் மகா மந்திரத்தை
பயபக்தியுடன் ஜெபித்துவந்தாள்.

"பிறவிப்பிணிகளை ஒழிக்கவேண்டும்!
இறையோடொன்றாய்க் கலக்கவேண்டும்!"

கண்கவர் கன்னியாக வளர்ந்து அவள்
கல்யாண வயதை அடைந்து விட்டாள்.

விடுதலை விரும்பியவளின் தந்தை
தடுமாறினான் மனம் விதிப்பயனால்!

பிக்ஷை கேட்டு வந்த அயலூர்க்கார
பிரம்மசாரிக்குப் பெண் கொடுத்தார்.

குலம், கோத்திரம் சமம் ஆனாலும்,
கும்பிடுவது விஷ்ணுபிரானை அன்றோ!

இரு தரப்புப் பெற்றோர்களுக்குமே
இருந்தது கவலை, மன வாட்டம்.

மணமகன் வீட்டில் ஒரு சிவபக்தையை
மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை
.

சிவன் அடியாருக்கு உதவமுடியவில்லை.
சிவனடியாரைப் பார்ப்பதும் தொல்லை!

உமா மகாமந்திரத்தை ஜெபித்த கௌரி
சுமாரான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

திருமணத்துக்குச் சென்றது குடும்பம்,
திருமகள் கெளரியைத் தனியே விட்டு!

வீட்டை வெளியே பூட்டிக்கொண்டு
ஒட்டு மொத்தமாகச் சென்றுவிட்டனர்.

சிவன் அடியாரைக் காணவும் ஆவல்,
சிவன் அடியாருக்கு உணவிட ஆவல்.

பக்தையின் மனப்பாங்கை அறிந்ததால்,
பக்தவத்சலன் ஒரு சிவப்பழம் ஆனான்!

வாழ்க வளமுடன்! விசாலாக்ஷி ரமணி.
 
[FONT=comic sans ms,sans-serif]# 23 (A). THE ARRIVAL OF THE OLD DEVOTEE.

During the reign of Vikrama Paandian, there lived a brahmin couple named Viroopaaksha and Subhavratha.They observed several severe penance and were blessed with a female child. They named her after a Goddess as Gowri.

This child was very different from the other children. While the other children begged for toys to play with, Gowri wanted to know the divine mantra which would rid her of the cycle of births and deaths.

Her father was very happy with his daughter's request. He taught her the Devi Paraasakthi mahaa manthram. Gowri started chanting it regularly with utmost devotion.

Years rolled by and she had grown to a pretty young woman and attained the marriageable age. Fate played a strange game to fulfill Gowri's desires.

A Vaishnava brahmachaari came for bikshaa. Viroopaakshan decided to marry his daughter to him-against the wishes of his wife Subhavratha.

The parents of the brahmachari were not happy with this marriage. They could accept Gowri who worshiped Siva only halfheartedly. Gowri was treated like an alien and a stranger by her in laws.

One day they had to attend a wedding. Since they did not want Gowri to go with them, they left her in the house. The locked up the house and went for the weeding.

Gowri was feeling sad that she could neither meet any Siva Baktha nor feed him with her hands in this strange house. Lord Siva took pity in His Baktha and turned Himself into an very old devotee of Lord Siva. .
[/FONT]
 
# 23 (b). சாரூப்ய முக்தி.

முதிர்ந்த
வயதுடைய சிவபக்தனாகித்
தளர்ந்த நடையுடன் வீட்டினருகே வந்தார்;

நெற்றியிலே மூன்று விபூதிப் பட்டைகள்,
கழுத்திலே ருத்திராக்ஷக் கொட்டைகள்;

பசித்து வந்த விருத்தருக்கு அன்னம்,
புசிக்க அளிக்க விரும்பினாள் கௌரி;

"பூட்டிய கதவு திறந்து கொள்ளும்,
நீட்டிய உன் கரத்தால் தொட்டால்!"

தொட்டவுடன் திறந்து கொண்டது கதவு,
தொண்டுக் கிழவர் ஓய்வெடுக்கையில்;

பர பர வென்று சமையல் செய்தாள்;
பரமசிவ பக்தனுக்குப் பரிமாறினாள்.

அமுது செய்தவுடன் குடுகுடு கிழவர்,
அழகிய வாலிபனாக ஆகி விட்டார்!

வெண்ணீறு ஆனது சந்தனப் பொட்டு;
பொன்மணிகள் ஆயின ருத்திராக்ஷம்.

தளர்ந்த உடல் கட்டுடல் ஆயிற்று,
தாத்தா இப்போது கண்கவர் வாலிபன்.

திகைத்தாள் கௌரி,"இதென்ன சோதனை?"
பதைத்தாள் மனம்,"தவறு நடக்கக்கூடாது!"

மிகுந்த பயத்துடன் உடல் நடுங்க அவள்
ஒதுங்கி ஒரு ஓரமாக ஒளிந்து நின்றாள்.

பூட்டிவிட்டுச் சென்றவர்கள் கூட்டம்
வீட்டுக்குத் திரும்பும் அரவம் கேட்டவர்,

பச்சைக் குழந்தையாக உடனே உருமாறி,
பாயில் படுத்துக் ஓங்கிக் குரலெடுத்து அழ;

"யார் குழந்தை இது சொல்லுவாய் நீ!
பூட்டின வீட்டில் இது வந்தது எப்படி?"

குழந்தையும், கையுமாக அவளைக்
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள,

உமா மஹா மந்திரத்தை கௌரி
உளமார ஜபித்தபடியே நின்றாள்.

மாயமாகக் கைக்குழந்தை மறைந்துபோக,
மலர் மாரி பொழிந்தது விண்ணிலிருந்து!

உமைவடிவாகவே மாறிவிட்டாள் அவள் ;
உமையுடனேயே ஒன்றிவிட்டாள் அவள் ;

உமையுள் உமையாகவே உறைந்த அவள்,
உமா மகேஸ்வரருடன் கயிலை அடைந்தாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 

Latest ads

Back
Top