• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

41 (b). விறகு விற்றது.

யானை விலை குதிரை விலை என்பார்களே!
யானை விலை தான் கூறினான் விறகுக்கு!
யாருமே வாங்கிட முடியாத ஒரு விலை.
யாருமே வாங்கிடவும் இல்லை அதை.

ஊரெல்லாம் சுற்றியும் ஒரு பயனில்லை;
ஒரு விறகு கூட விற்க முடியவில்லை.
ஏமநாதனின் வீட்டை அடைந்தான்;
சேமமாகத் திண்ணையில் அமர்ந்தான்.

பொழுதைக் கழிக்கப் பாடலானான்;
பழுதில்லாத ஓர் இன்னிசைப் பாடல்;
மலரால் இழுக்கப் பட்ட வண்டானான்
இசையால் இழுக்கப்பட்ட ஏமநாதன்.

"யாரப்பா நீ?" என்றும் "உன்னுடைய
"பேர் என்ன?" என்றும் வினவினான்;
"பேர் சொல்லும் அளவுக்கு இன்னமும்
பெரியவனாகவில்லை ஐயா நான்!

பாண பத்திரனின் அடிமை நான்;
பாண பத்திரனின் பாடலுக்கும் கூட;
கற்க விரும்பினேன் கீதம் அவரிடம்,
கற்பிக்கவில்லை கீதம் அவர் எனக்கு;

வயதாகிவிட்டது போ என்று என்னிடம்
இயம்பவே விறகு வெட்டி விற்கின்றேன்!"
"மீண்டும் ஒரு முறை பாடுவாய்! கேட்க
வேண்டும் காதாற இன்னும் ஒருமுறை!"

சுருதி சேர்த்தான் தன் யாழை எடுத்து;
சுருதி சுத்தமாகப் பாடத் தொடங்கினான்.
சாதாரிப் பண் இசைப்பது என்பது ஒரு
சாதாரண விஷயமா என்ன? கூறுங்கள்!

உடல், உள்ளம், ஆவியுடன் அவன்
நாடிகள், நரம்புகள், மயிர்க்கால்கள்,
எல்லாம் மயங்கிச் சிலிர்த்தன அங்கு
வெள்ளமாக வந்த இசைமழையால்!

"வேண்டாம் என்று தள்ளியவனிடம்
யாண்டும் கேட்டிராத இசைமழையா!
இப்படி விறகு வெட்டியே பாடினால்,
எப்படிப் பாடுவான் இவன் குருநாதன்?"

இரவோடு இரவாக ஓடிவிட்டான் அவன்
அரசனிடம் கூடச் சொல்லாமலேயே!
பாணன் கனவில் தோன்றிய பிரான்,
"பண் பாடி விரட்டி விட்டோம்!" என்றார்.

ஏமநாதன் சிஷ்யர்கள் கூட்டத்துடன்,
யாமத்தில் ஓடி விட்ட விவரம் அறிந்து;
யானை மீது ஊர்வலம் செய்வித்தான்
பாண பத்திரனுக்கு பாண்டிய மன்னன்.

பரிசு மழையைப் பொழிந்தான் மன்னன்
பரிசுகளைப் பகிர்ந்தளித்தான் பாணன்;
ஈசன் புகழ் பாடிப் பூசனை செய்வதே
நேசம் மிகுந்த ஆசைத் தொண்டானது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
41 (b). SELLING FIRE WOOD.

The wood cutter demanded an astronomical price for his firewood. Nobody bought them since nobody could afford to buy them!

He went round the whole city and sat outside Emanathan's house to relax and rest for a awhile.He started singing in order to relax. Emanathan was drawn by the music like a bee by a flower.

He asked the wood cutter, "Who are you? What is your name?"

The woodcutter replied ,"I am not so famous as to be known by my name. I am an admirer of Paanabadhran and his music. I wanted to learn from him. But he would not teach me as I am too old to learn.So I became a wood cutter."

Emanathan requested him to sing again. The wood cutter set the strings of his yazh and sang a difficult raga.Emanathan began to melt in the music.

If a man who had not even learnt music can sing so well, what bout the guru whom he admires so much? He got frightened by the possibility of his defeat and ran away in the middle of the night with all his disciples.

When the king summoned Emanathan for the contest, the house was found deserted.

Siva appeared in the dream of Paanan and told him that Emanaathan had fled during the night.The King came
to know the part played by Siva in this drama.

He was very happy to honor Panan with a ride on the royal elephant in the streets of Madurai. He showered many gifts on Paanan-who shared them with his disciples.

Paanan continued to worship Siva though his songs and music as before.
.

 
dear friends!

I am posting two poems and their translations today

41 (a) and 41 (b).

to make up for yesterday's loss!

Hope you will enjoy them as usual.

with warm regards,
V.R.
 
# 42. திருமுகம் தந்தது.

அரசன் அவையில் பாடிய பாணபத்திரன்
அரன் ஆலயத்தில் பாடத் துவங்கினான்.
அரசன் அளித்தப் பரிசுப் பொருட்களை
உறவினர்களுக்குப் பங்கிட்டு அளித்தான்.

முக்காலங்களிலும் சொக்கனைப் பாடினான்;
அக்காலத்தில் வறுமை தொடங்கிவிட்டது.
முக்கண்ணன் உதவி செய்தான் பாணனுக்கு,
சொக்கத் தங்கம் பரிசாக அளிக்கலானான்.

பாண்டிய மன்னனின் பொக்கிஷத்திலிருந்து
ஆண்டவன் கொண்டு வந்து தரலானான்;
பொற்காசுகள், நகைகள், மணிகள்;
பொற்பிடிகள், தகடுகள், ஆடைகள்.

பொன்னை விற்று அனைவரையும்
போஷிக்கலானான் பாண பத்திரன்;
பின்னர் நின்றுவிட்டது பரிசளிப்பு
முன்போல் வறுமை வந்துவிட்டது.

கனவு ஒன்று கண்டான் பாண பத்திரன்,
கனவில் வந்தான் சோம சுந்தரேச்வரன்;
"பாண்டியனும் என்னுடைய பக்தனல்லவா?
ஆண்டி ஆக்கி விடலாகாது அவனை நாம்!

திருமுகம் ஒன்று தருகின்றேன்;
அருமைச் சேரமான் பெருமானுக்கு;
பரிசுகளை வாரி வழங்குவான் அவன்,
திருவஞ்சைக் களம் செல்வாய் நீ!"

கண் விழித்தெழுந்த பாண பத்திரன்
கண்டான் திருமுக ஓலையினை;
அண்ணல் ஓலையின் சாராம்சம்,
"மன்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே!"

பட்டுத் துணி ஒன்றில் திருமுகத்தைப்
பத்திரப் படுத்தி எடுத்துச் சென்றான்;
திரு வஞ்சைக் களம் என்னும் நகரைத்
திருவருளால் சென்றடைந்தான்!

தரும தேவதை வசித்தாள் அங்கே.
திருமகள் புரிந்தாள் திரு நடனம்;
இரு மொழிகளிலும் புலமை பெற்று
இருந்தனர் நகரில் வாழ்ந்த மாந்தர்.

அரசன் சேரமான் பெருமான் கனவில்
அரன் தோன்றினான் ஒரு சித்தனாக!
"திருமுகம் பெற்று வந்த பாணனுக்குச்
சீரிய பொருள் தந்து விரைந்தனுப்பு!"

கண்டனர் பாணபத்திரனை அங்கோர்
தண்ணீர் பந்தலில் காவலர்கள்,
வந்தான் அரசன் பரிவாரங்களுடன்
சிந்தாகுலம் தீர்ப்பதற்கு பாணனின்.

திருமுகத்தைப் பெற்று மகிழ்ந்தான்;
திருமாளிகைக்கு அழைத்துச் சென்றான்;
பதினாறு உபசாரங்கள் செய்தான்
அதியற்புதமாக சேரமான் பெருமான்.

அழைத்துச் சென்றான் தன்னுடன்,
அரசனின் பொக்கிஷ அறைக்கு;
"அரன் அருள் பெற்றுள்ள நீங்கள்
பெறவேண்டும் எல்லாச் செல்வமும்!"

"உமது செல்வதைக் கவர மாட்டேன்!
எனக்கு வேண்டியவை கொஞ்சமே!"
ஆடை, ஆபரணங்கள், பொன், காசு,
ஆனை, குதிரை, சிவிகை பெற்றான்.

குசேலனாகச் சென்றவன் திரும்பினான்
குபேரனாகப் பாண்டிய நாட்டுக்கு!
தான தர்மங்களைத் தொடர்ந்தான்;
கானம் செய்வதையும் விடவில்லை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 42. LETTER TO CHERAMAAN PERUMAAN.

Paanabadhran used to sing in the king's court. He was later ordered to sing in front of the deity. Paanan had distributed all the kings gifts and became very poor. He used to sing for all the three daily puja. God took pity on him and started presenting him the gold articles stolen from the Paandiyan's treasury.

Paanan sold the gold and continued his charities.After sometime this stopped. Lord appeared in his dream and said, "Paandiyan is also a baktan. I should no empty his treasury. I shall give you a letter for the Chera king. He will give you rich gifts. Go to Thiruvanjaikkalam."

Paanan found the letter given by god. It instructed the Chera king to give rich gifts to Paanan and send him back without delay.He became very happy.He wrapped the letter in a silk cloth and carried it to the Thiruvanjaikkalam .

The city was auspicious with the presence of Dharma Devata, Lakshmi Devi and people well versed in Tamil and Sanskrit. He stayed in a water distributing pandal.

God appeared in Cheran's dream and told him about Pannan, the purpose of his visit and the letter sent through him. The king's men traced Paanan to the water pandal.

The Chera king went to receive him with due honors. He was brought to the palace and treated with great respect. King took him to his treasury and told him to take whatever he wanted.

Paanan just took some dresses, gold, ornaments, a palanquin, a horse and an elephant.

He returned to his land a rich man. He continued his charitable activities and he continued to sing to lord as before.

 
# 43. பலகை இட்டது.

மூன்று ஜாம பூஜைகளிலும் நிதம்
முக்கண்ணனைப் பாடிவந்த பாணன்;

நான்கு ஜாம பூஜைகளிலும் பின்பு
நாள் தவறாமல் பாடலானான்!

அடாது மழை பெய்தாலும் தொண்டு
விடாது நடை பெறும்என்று காட்ட,

அரன் மழை பொழியச் செய்தான்;
இரவு நடு ஜாம பூஜை சமயத்தில்!

மேகக் கூட்டங்கள் மோதின!
ஏகப்பட்ட மின்னல்கள் சிதறின!

இடி முழக்கி வெருட்டியது உலகை,
தொடர்ந்து நடந்தான் பாணபத்திரன்.

முனைந்து கோவிலை அடைந்தான்,
நனைந்து தொப்பலான பாணபத்திரன்;

நனைந்த யாழ் இசைக்க மறுத்தது!
நனைந்தவனின் குரல் நடுங்கியது!

வெடவெட என
உடல் நடுங்கியது!
கடகட என்று பற்கள் கிட்டிப் போயின!

முழங்கால்கள் மோதிக் கொண்டன!
வழிந்தது மழை நீர் உடையிலிருந்து!

"இதன் மீது இருந்து பாடுவாய் பாணா!"
அரன் குரல் அசரீரியாகக் கேட்டது.

நவரத்தினங்கள் பதித்த ஒரு பலகை;
சிவன் அன்புடன் அளித்த பலகை.

அதன் மீது இருந்து பாடியபடியே
அரனை மகிழ்வித்தான் பாணன்;

அரனின் பரிசை அறிந்த மன்னன்
அதன் மீது அவனை அமரச் செய்தான்.

நஞ்சை நிலத்தின் பெறும் பகுதியை
வஞ்சனை இன்றி வழங்கினான்.

வறுமை நீங்கிய பாண பத்திரன்
பிறழாது நிதம் இசை பயின்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
















cleardot.gif



 
Last edited:
# 43. A PLANK OF GOLD AND GEMS.

Paanabadhran used to sing during the thrikaala pooja. Later he started singing during the midnight puja also. He was very regular and sincere so that nothing could keep him away and make him miss the puja.

Siva wanted the world to recognize Paanabadhran's sincerity and devotion. One night thick dark clouds gathered in the sky. Thunderstorm with lightnings and a heavy rain followed. But this did not deter Paanabadhran from walking to the temple.

He got drenched to the skin. He was shivering violently due to the cold. His lute would not produce any music neither would his voice sing. In spite of everything he tried to sing at his best.

God produced a plank of gold studded with the nine rathnas and told Paanabadhran to stand on it and sing. Paanabadhran was elated by the God's concern and the rare gift.

When the king heard the story, he made Paanabadhran sit on the gold gem studded plank and presented him with fertile lands and fields. Paanabadhran started living a comfortable life, but he never ever failed in his duty of singing in the temple during all the pujas.
 
# 44 (a). ஈழத்துப் பாடினி.

வரகுண பாண்டியனுக்குப் பின்
அரியணை ஏறினான் ராஜராஜன்;
பல மனைவிகளுடன் அவனுக்குப்
பல காமக் கிழத்தியரும் உண்டு!

காதல் மிகக் கொண்டிருந்தான்
காமக் கிழத்தி ஒருத்தியிடம்;
பாடல் பாடுவதில் வல்லவள்;
பாலினும் இனிய குரல் வளம்.

தான் உண்டு தன் வேலை உண்டு என
மாண்போடு நடந்து கொள்பவரையும்,
தேடி வரும் பகைமையின் செந்தழல்,
நாடி வருவதன் காரணம் அசூயை!

பாண பத்திரனின் கற்புக்கரசியைக்
காணப் படவில்லை காமக்கிழத்திக்கு;
சபையில் அவளை அவமதிக்க எண்ணிச்
சமயம் பார்த்துத் தன் ஆவலைக் கூற,

பெண்ணாசையில் மூழ்கிய மன்னன்
கண்ணிருந்தும் குருடன் போலானான்;
"பழி வந்து சூழுமே!" என்று அஞ்சாமல்,
"வழி ஒன்று சொல்வாய்!" அதற்கு என,

"நம் நாட்டுப் பாடினிகள் போதாது!
நம் அண்டை நாட்டில் வசிக்கின்றாள்
ஈழத்துப் பாடினி ஒருத்தி! அவள்,
தோழமையால் வென்றிட முடியும்!"

ஓலை சென்றது ஈழத்துப் பாடினிக்கு!
வேளையில் வந்தாள் மாணவிகளோடு;
இள வயதினள், அவள் பேரழகியும் கூட;
இளைஞர்களைக் கவர வல்ல பாடினி!

மன்னன் பாடச் சொன்னான் அவளை;
கின்னர கீதம் போல அவள் இசைத்தாள்;
"இன்னம் ஒரு பணி உள்ளது உனக்கு;
முன்னம் அதைக் கூறுகின்றேன் நான்.

பாணன் மனைவியைப் பாட அழைப்பாய்!
பாணன் மனைவி மறுத்திட்ட போதிலும்
வஞ்சினம் கூறியேனும் தடுத்து நிறுத்தி
அஞ்சாமல் அவையில் நீ வாது தொடுப்பாய்!

பொன் பொருள்களை அள்ளித் தந்தான்!
மன்னன் அவைக்கு வரச் சொன்னான்;
தன் கின்னர கானத் திறனாலும் மேலும்
மன்னன் அளித்த பரிசாலும் மகிழ்ந்தாள்!

பாணபத்திரனின் மனைவியை அழைத்து,
"பாட்டுப் போட்டியில் வென்று பாடினியின்
செருக்கை ஒடுக்க முடியுமா உன்னால்?
செப்புவாய்!" என்று சொன்னான் மன்னன்.

"இறையருள் நிரம்பவும் உள்ளது மன்னா!
நிறையருள் பலமும் உன்னது என்னிடம்;
அம்பிகை நாதனின் அருளால் வென்றிடும்
நம்பிக்கை உள்ளது பாட்டுப் போட்டியில்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
# 44 (A). THE SINGER FROM CEYLON.

Raja raja Paandian succeeded Varaguna Paandian. He had several lawfully wedded wives and a few lady loves besides. He loved one of those lovers best since she could sing with a sweet voice.

Even non-interfering people minding their own business end up making powerful enemies.The main reason is jealousy. Paanabadhran's wife was a very talented singer and king's lover could not stand her sight!

Paanan's wife must be belittled and put to shame in public! This was the only aim of the king's lover. She knew she could twirl the king around her little finger. So she hatched an infallible plan.

They would bring a renowned singer from Ceylon, trap Paanan's wife in a music competition and defeat her to enslave her for life.

The singer from Ceylon came with all pomp and show -accompanied by her many students. She was young, talented and very beautiful.

The King told her to sing. She rendered a song as sweet as that of Gandharvaas and Kinnaraas. The secret plan was revealed to her.

She had to get Paanan's wife to enter a contest with her by hook or crook.The king would take care of the other things. He showered many gifts on the Ezhaththup paadini.

Later the king summoned Paanan's wife and told her,
"The singer from Ceylon is very proud and arrogant. Can you take part in a contest to defeat her and put an end to her pride?"

Paanabadhran's wife replied with respect,"I have the grace of Lord Siva and blessings of my husband. I should be able to defeat her. Even if I can't I won't take it to my heart and suffer!" .
 
Last edited:
# 44 (b). இசை வாது.

இருவரும் அரச சபைக்கு வந்தனர்;
இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்;
"யாழ் வாசியுங்கள்" மன்னன் குரல்
கேள்விக் கணைகளில் கேட்கவில்லை!

"இசை அறிவு உள்ளவள் ஆனால் கூறு!
இசைக் கலையில் குற்றங்கள் யாவை?
இசைக் கலையில் குணங்கள் யாவை?
இசையில் யாழின் தெய்வம் எது கூறு!

எதிரே வந்து அமர்ந்து விட்டதால்
என்னுடன் போட்டிபோட முடியாது!
என் கேள்விகளுக்குப் பதிலளித்தால்
என்னுடன் போட்டி போட முடியும்!"

"இசைப் போட்டி என்று எண்ணி வந்தேன்!
வசைப் போட்டி என்னால் இயலாது!
கல்விச் செருக்கை, வாதத் திறனை,
எல்லோருக்கும் காட்ட வந்தாயோ?"

"போதும் போதும் நீங்கள் பேசியது!
மேலும் அவையின் நேரம் குறைவு!
கற்றவர் மத்தியில் நடக்கும் போட்டியில்
தோற்றவர் வென்றவரின் முழு அடிமை!"

ஈழ நாட்டுப் பாடினியின் பாடல்கள்
பழச் சுவையாயிற்று மன்னனுக்கு!
பாணன் மனைவியின் பக்திப் பரவசம்
ஏனையோர் உள்ளம் கவர்ந்து விட்டது.

மன்னன் மட்டுமே பாராட்டினான்
மனம் கவர்ந்த ஈழத்துப் பாடினியை.
மற்றவர் எல்லோரும் பாராட்டினார்கள்
கற்றறிந்த பாணபத்திரன் மனைவியை.

என்றைக்குமே ஒரு உலகநியதி உண்டு;
இன்றைக்கும்கூட அதுவே நடைமுறை.
"மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!"
மன்னனுடன் மக்கள் இணைந்தனர்.

"ஒரே நாளில் இது போன்ற இசைவாதில்
ஒரு முடிவை எட்டுவது மிகக் கடினம்;
நாளையும் தொடரும் இசை வாது;
வேளையில் கூடட்டும் இந்த அவை!"

சபை கலைந்து சென்று விட்டது அங்கே,
சலசலப்புடன் சற்றே விரைந்தபடியே.
மறு நாள் அங்கு என்ன நடக்கும் என்று
அறிந்து
கொள்ளும் விருப்பம் மேலிட்டது.

பாடினியோ சீடர்கள் புகழ் மொழியிலும்,
பாண்டிய மன்னன் புகழ் மொழியிலும்,
மூழ்கித் திளைத்து மகிழ்ச்சி அடைந்து,
தாழ்வாக எண்ணினாள் பாணினியை.

நடுநிலைமை இல்லாதவர்களிடையே
கடும் போட்டியில் வெல்வது எப்படி?
மனம் கலங்கிய பாணன் மனைவி
தினம் தொழும் சிவனிடம் சென்றாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 44 (B). THE MUSIC COMPETITION.

Both the singers came to the durbar. They sat facing each other.The king commanded them to play their lutes. But his voice got completely lost in the list of queries raised by the singer from Ceylon.

"If you really know something about music, then answer my questions? What are the common mistakes committed by the singers? What is the greatness of music? Who is the God of the lute?"

You can't compete with me just because you are sitting in front of me.I will take part in the competition only if you answer my questions!"

Paanan's wife replied, "I thought it was a music competition. I did not know it is also a heated debate.You have come here with the idea of displaying your vast knowledge to the gathering"

The king intervened and said," Enough of talking. You are wasting the time of the gathering. Start to sing. Remember the loser will become the slave of the winner for life"

The Eezhathup paadini's song was like the sweet ripe fruits for the king. Paanan's wife sang with utmost devotion. The whole crowd applauded her singing.

The king spoke highly of the singer from Ceylon.Now the crowd got confused as to whom to praise! They did not want to anger their king. So they too joined him in applauding the singer from Ceylon!.

The king said, "It is very difficult to judge such competitions in one day! Let the contest continue tomorrow also!"

The singer from Ceylon was happy to hear the praises of her students and the king. Paanan's wife got worried that the king was partial and not neutral. She went to the Siva temple where she used to pray everyday. .
 
# 44 (c). ஆஹா ! நல்ல தீர்ப்பு !

"பார பட்சம் காட்டும் ஒரு மன்னன்,
தூர தேசத்தின் ஒரு அழகிய பாடினி;
மன்னிடம் மருண்டுள்ள இம்மக்கள்;
என்ன முறையில் வெல்லுவேன்?"

"மகளே! நீயே வெல்லுவாய் நாளை!
திகில் கொள்ள வேண்டாம் வீணாக!"
மன மயக்கம் ஒழிந்து தன் இல்லம்
மன அமைதியுடன் திரும்பினாள்.

மறு நாள் வந்தனர் அவையினர்;
இரு பெரும் வாதுப் பாடினிகளும்;
அத்தின முடிவிலும் மன்னனுடன்
ஒத்து ஊதினர் அச்சபையினரும்!

"மனிதர்கள் பாரபட்சம் உடையவர்
கள்!
இசைக்கும் ஒரு இசை வாதிலும் கூட;
தனிப் பெரும் இறைவன் சிவன் முன்
இனித் தொடருவோமா இவ்வாதினை?"

பாணனின் மனைவியின் கூற்றை
பாண்டிய மன்னன் மறுக்கவில்லை!
மறுநாள் இசைவாது நடக்கும்
இறைவனின் திரு அம்பலத்தில்.

மூன்றாவது நாள்
சென்றான் மன்னன்
முக்கண்ணின் திரு
க் கோவிலுக்கு!
சுருதி, தாளம், கீதம், இலக்கியம்,
அறிந்த அறிஞர் குழாம் ஒன்றுடன்.

அறிஞரைப் போலவே உருவெடுத்து
அணிகலன், ஆடை அணிந்து கொண்டு,
அரனும் கலந்து வந்தான் அந்த இசை
அறிஞர்களின் உயர்ந்த குழுவினிலே.

"இன்று இவளை எளிதாக இசையில்
வென்று விடுவேன் என் அடிமையாக!"
கர்வம் பொங்க வந்தாள் ஈழத்தின்
சர்வமும் அறிந்த இசைப்பாடினி!

இறைவன் அருளின் மீதும், காக்கும்
நிறையின் திறனின் மீதும், மாறாத
நம்பிக்கையுடன் வந்து அமர்ந்தாள்
அம்பிகை நாதனின் அருள் பெற்றவள்.

ஈழத்துப் பாடினி அருமையான ஒரு
ஈர்க்கும் பாடலைப் பாடினாள் அன்று!
பக்திரசம் சொட்டச் சொட்ட
ப் பாடலை
பக்தியுடன் பாடினாள் பாணன் மனைவி.

இறையின் சந்நிதியில் மன்னன் மனக்
குறைகள் மறைந்து நிறைந்தது நடுநிலை!
"பாணன் மனைவி வென்றாள்!" என்றதும்,
காணாமல் போனார் "ஆஹா!" என்ற அறிஞர்!

காணாமல் போன அறிஞராகத் தன்
கோணாத தீர்ப்பை அங்கீகரிக்கவே;
சிவனே தன் உருமாறி அவைக்கு
அவனாக வந்தது புரிந்துவிட்டது.

பாணன் மனைவிக்குப் பல பரிசுகள்!
பாடினிக்கும் தந்தான் பல பரிசுகள்!
வலிமையில் தெய்வம் மன்னனை மிஞ்சும்!
வலிமையில் சிவன் அனைவரையும் மிஞ்சுவான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 44 (C). THE FAIR JUDGEMENT.

"The king is biased. The girl from Ceylon is pretty and young! The gathering dances to the king's whims and fancies. How am I going to win?"

Siva spoke in asareeri," Dear child! Do not worry! You will defeat the singer from Ceylon." Paanabadhran's wife felt comforted and returned home with a calmed mind.

The sabha assembled and the singers sang. The king repeated his statement that it was difficult to judge the contest and it would continue the next day also.

"Human beings are biased and partial. Can we continue the contest in the temple in the presence of lord Siva who is unbiased and neutral ?" The king could not refuse the request of Paanabadhran's wife.

The venue for the contest was changed to the temple on the third day.The king brought with him a group of experts in music, lyrics, thaalam etc. Siva transformed himself as a vidhwaan, dressed and wore ornaments as they did and was among the group of experts.

The singer form Ceylon arrived so sure of her success. both haughty and proud. Paanabdhran's wife appeared confident and took her seat. The girl from Ceylon sang very attractive song.Paanan's wife sang a divine and moving song.

In the presence of the deity the king could not waver or speak lies. He announced to the crowd that Paanan's wife was the winner. Siva disguised as vidhvaan exclaimed, "Excellent!" and vanished immediately.

Everyone realized that it was none other than Siva. The king showered gifts on Paanabadhra's wife and to the singer from the Ceylon since she had done him a favor by accepting his invitation.

He realized that god was superior to man and Siva was superior to all the other Gods.
 
Dear friends!
I am happy to resume this thread (as promised earlier) from today-exactly after a month of suspended animation! :)
I will try to keep up the daily delivery schedule as before so that I can finish the remaining 20 stories before Mid September :typing:
when my younger son and family will be visiting us! :thumb:
Thank you for your patience!
with warm regards, :pray2:
Visalakshi Ramani.
 
# 45 (a). வியாழ பகவானின் சாபம்.

குருவிருந்துரை என்னும் ஓர் இடம்,
இருந்தது வைகையின் தென்கரையில்;
குருபகவான் அங்கே இருந்து கொண்டு
இறைஅருள் வேண்டித் தவம் செய்ததால்.

சுகலன் அவ்வூரில் ஒரு வேளாளன்,
சுகலை அவனுடைய தர்மபத்தினி;
பன்னிரு புதல்வர்கள் செய்த தவறுகளை,
முன்னிருந்து திருத்தவில்லை அவர்கள்.

'செல்லம் கொடுத்ததால் குட்டிச் சுவராகி'த்
தொல்லைகள் பலவும் செய்து வரலாயினர்;
வயது பெருகிக் கொண்டே போயிற்று! ஆனால்
வயதுக்குத் தக்க ஒழுக்கம் அவர்களுக்கு இல்லை!

பெற்றோர்கள் திடீரென இறந்து விடவே,
மற்றோர் தயவில் வாழ வேண்டி இருந்தது.
வேளாளர் தொழிலைத் துறந்து விட்டு அவர்
வேட்டையாடும் தொழிலில் இறங்கினர்.

பிரஹஸ்பதி அமர்ந்து தவம் புரிந்திருக்க,
சிரமங்கள் பல தந்தனர் தேவ குருவுக்கு;
கல்லையும், மண்ணையும் வாரி வீசிச்
சொல்லாலும் அவரைத் துன்புறுத்தினர்.

தவத்துக்கு இடையூறு நேர்ந்ததால் அவர்
மனத்துக்குள் சினம் பொங்கி எழுந்தது!
"நிலத்தை உழுவதே உமது குலத்தொழில்!
நிலத்தைத் தோண்டும் பன்றிகள் ஆவீர்!

பெற்றோரை இழந்து திரிவது போன்றே,
பெற்றோரை இழந்து அங்கும் வாடி நிற்பீர்!
பெரியவரை மதிக்கத் தெரியாதவருக்குச்
சரியான தண்டனை இதுவே ஆகும்!"

பாவம் செய்தவர்கள் சாபம் பெற்றனர்;
"சாப விமோசனம் எப்போது கிட்டும்?"
கோபம் நீங்கிய குருபகவான் சொன்னார்,
"தாபம் நீக்கும் சிவன் அருள் தரும்போது!

தாயை இழந்து வாடும் பன்றிகளுக்குத்
தாயாக வந்து பால் தருவான் சிவன்;
அறிவையும்,ஞானத்தையும் அளித்து
மரியாதைக்குரிய மனிதர் ஆக்குவான்!

பாண்டிய மன்னனின் மந்திரிகளாகி
ஆண்டுகள் பல ஆட்சிக்கு உதவுவீர்!
தாண்டவம் ஆடும் ஈசன் அருள்வான்,
மீண்டு வரத் தேவை இல்லாத முக்தி!"

காட்டுப் பன்றி ஒன்று வாழ்ந்திருந்தது;
காட்டும் வீரத்தால் தலைவன் ஆனது!
பெட்டைப் பன்றியின் வயிற்றில் இருந்து
குட்டிப் பன்றிகளாக ஜனித்தனர் இவர்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
45 (a).THE CURSE OF BRUHASPATI.

On the Southern bank of the river Vaigai, there was a place called Guruvirunthurai. Deva guru Bruhaspati had done penance in that place.

Sukalan was a farmer living there . He and his wife Sukalai had twelve sons.

The boys were ill bred and behaved badly but the parents failed to correct their mistakes. So the boys grew up to become public nuisances and had neither good manners nor good habits.

Both Sukalan and hos wife died suddenly and the twelve boys were left to fend for themselves. They gave up farming and started to hunt for food.

One day, they say Bruhaspati doing tapas and started throwing stones, sand and mud on him. Guru baghavaan got angry and cursed the boys thus,

"Since digging the soil is your family profession, you will become pigs that dig the soil. You will become orphans in that birth also and suffer a lot!"

The wicked boys got punished thus but they wanted to know when they would be freed from this curse. Guru baghavaan replied,

"When lord Siva takes pity on you and appears to give you milk in the form of a female pig-your mother. You will gain intelligence and wisdom from the milk and become respectable citizens.

You will become the honorable minister of the Paandiya King and serve him well for many years. Finally you will reach the heavenly abode and gain liberation or mukti"

There lived a very strong and courageous boar. He had become the leader of his gang by virtue of his strength. These twelve boys were born to the boar and its wife as twelve piglets.
 
# 45 (b). பன்றிகள் ஆனது.

வேட்டை ஆடுவது ஒரு வீர விளையாட்டு,
நாட்டை ஆண்டு வந்த நம் மன்னர்களுக்கு!

சேனையுடன் வனம் சென்ற ராஜ ராஜன்,
சேதப்படுத்தலானான் வன விலங்குகளை!

பறை, உடுக்கை, கொம்பு என்னும் பல
கருவிகள் ஒலிக்க, விலங்குகள் மருள;

மான், கரடி, புலி, யானை, பன்றிகள் என
மன்னன் அங்கே வேட்டை ஆடினான்.

பன்றித் தலைவனுக்குத் தகவல் சென்றது,
பாண்டியன் படை செய்த அட்டூழியங்கள்!

பன்றி அரசன் போருக்குப் புறப்பட, அவன்
பன்றிகள் கூட்டமும் பின் தொடர்ந்த
து!

பன்றிக் கூட்டம் பாய்ந்து, பாய்ந்து,
பாண்டியன் படையைத் தாக்கி
து.

இடைவிடாமல் போர் தொடர்ந்தது,
இரண்டு பக்கங்களிலும் பெருத்த சேதம்!

அரசன் குதிரையைப் பன்றி அழித்துவிடவே,
அரசன் பன்றியை உலக்கையால் அடித்தான்.

பெண் பன்றி தொடர்ந்து போர் செய்யவே,
கொன்றுவிட்டான் அதை வேடர்
த் தலைவன்.

பன்றிகள் விழுந்து மடிந்த இடம் ஒரு
பன்றி மலையாகவே மாறிவிட்டது!

பன்றிகள் சாதாரணப் பன்றிகள் அல்ல!
பன்றிகளாகும்படிச் சபிக்
ப்பட்டவை!

அரங்க வித்யாதரன் என்னும் யக்ஷன்;
குரங்குத்தனமாக இடையூறு செய்தான்.

புலத்திய முனிவரின் தவத்தைக் கெடுத்து
ப்
பிறவி எடுத்தான் ஒரு பன்றி அரசனாக!

தாய் தந்தையரை இழந்து வாடின,
வெய்யில், பசி, தாகத்தால் பன்றிகள்!

மனம் இறங்கிய பெருமான் தானே தன்
மனம் போல் மாறினான் தாய்ப்பன்றியாக!

தாய் வடிவில் வந்து நின்றான் சிவன்;
சேய்கள் சுற்றி விளையாடிக் களித்தன!

தாயிடம் தெய்வப் பால் அருந்தியவுடன்,
பேய்குணம் மறைந்து புனிதர்கள் ஆயினர்!

தெய்வப் பால் அருந்திய பன்றிகுட்டிகள்,
தெய்வ அறிவு பெற்று விட்டன உடனே!

அறிவு, திறமை, தகமை, வலிமையுடன்
பிறவும் பெற்றுச் சான்றோர்கள் ஆயின.

முகத்தைத் தவிர மற்ற பகுதிகளைத்
திகைக்கும்படி மாற்றிவிட்டான் சிவன்,

பன்றி முகமும், மனித உடலும் பெற்றவர்,
பன்றி மலையில் வாழ்ந்தனர் பன்னிருவர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
45 (b). THE TWELVE PIGS.

Hunting down the wild animals was a favorite past time of our ancient kings. Paandiya king Rajarajan went with his army and started hunting down the animals indiscriminately.

Various horns, bugles and drums were employed to frighten the animals form their safe hiding places into the open areas. Deers, bears, tigers, elephants and boars were hunted in large numbers.

The news of the massacre was taken to the Boar king. He wanted to retaliate and all the other boars and pigs joined hands with him.The boars flung themselves violently on the army and fought valiantly.The damage to both the sides was great indeed.

The boar king killed the king's horse. The king killed the boar with a blow of his iron pestle.The boar's wife fought bravely and got killed by the chief of the hunters.

The dead bodies of the pigs transformed into a mountain called Pandri Malai (The mountain of pigs). Those pigs were not ordinary pigs but were in fact Yakshas cursed to become pigs!

Aranga Vidyaadara was a Yaksha. He disturbed the penance of Pulastiya rishi and got cursed to become a boar.

The twelve piglets were orphaned once again. They were hungry, thirsty, famished and suffered! Lord Siva took pity on them. He assumed the form of their mother pig. He came to the hungry orphans and let them drink His divine milk.

The piglets were transformed to intelligent and respectable beings -the moment they drank his milk. Siva changed their bodies to resemble human beings-all but their faces.

So the orphans were now intelligent and well versed pig faced human beings living on the Pig Mountain.

 
# 46. பன்னிரு மந்திரிகள்.

பன்னிரு பன்றிக் குட்டிகளும் அப்போதே,
பன்னிரண்டு ஆதித்யர்கள் போலாயினர்!
முன்னர் சிவனிடம் பால் பருகியவர்கள்,
பின்னர் பன்றி மலையில் வசிக்கலாயினர்;

அன்னை கேட்டாள் ஐயனிடம் இதை,
"பன்றிகள் ஆகும்படிச் சபிக்கப்பட்ட
பன்னிரண்டு கொடியவர்களுக்கு இ
ங்கி
பன்றி உருவில் சென்று பாலூட்டியது
ஏன்?"

"சகல ஜீவ தயாபரன் என்று எனக்குப் பெயர்!
சகல ஜீவர்களுக்கும் தயை புரியவேண்டும்;
தாயை இழந்து தவிக்கும் குட்டிகளுக்குத்
தாயுருவில் சென்று ஞானப் பால் அளித்தேன்.

ஞானம், கல்வி, வலிமை பெற்றவர்
பேணப் படுவர் மதி மந்திரிகளாக!
வளங்களைப் பெருக்கி வாழ்ந்த பின்னர்,
கணத் தலைவர்கள் ஆகி விடுவார்கள்;

அன்றிரவே கனவில் தோன்றினான் சிவன்
அன்று ஆட்சி செய்த ராஜராஜ பாண்டியனின்;
"பன்னிரு குமாரர்கள் வசிக்கின்றனர்,
பன்றி மலையில், பன்றி முகங்களுடன்;

கல்வி அறிவில் சிறந்து விளங்குபவர்கள்,
ல்வழிப்படுத்தும் அமைச்சர்களாக நீயும்,
ஆக்கிக் கொண்டு ஆட்சி புரிந்தாயானால்,
போக்கிக் கொள்ளலாம் பிரச்சனைகளை!

விழித்து எழுந்த ராஜ ராஜ பாண்டியன்,
அழைத்தான் மதி மந்திரிகளை உடனே!
கண்ட கனவின் விவரம் கூறினான், பின்
கொண்டு வரச் சொன்னான் குமாரர்களை!

பன்றி மலைக்குச் சென்ற அமைச்சர்கள்
பன்றி முகக் குமாரர்களைக் கண்டனர்!
பன்னிருவரையும் தம்முடன் அழைத்து
மன்னனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தனர்.

இறைவனே பரிந்துரை செய்திருந்ததால்,
குறைவற்ற வரவேற்பு அளிக்கப்பட்டது!
மந்திரிகளாக அவர்களை நியமித்துத் தன்
மந்திரி குமாரிகளை மனைவிகள் ஆக்கினான்.

உடல்கள் இருந்தன பன்னிரண்டாக!
உயிர் இருந்து வந்தது ஒரே ஒன்றாக!
கடமை, கல்வி, அறிவில் சிறந்தவர்
உதவி புரிந்தனர் மன்னன் ஆள்வதற்கு!

மன்னனுக்கு அறிவுரைகள் கூறினர்,
மன்னனை நல்வழிப் படுத்தினார்கள்;
தங்களின் காலம் முடிந்தபின்னர் அவர்
தாங்கினர் சிவகணங்களின் தலைமை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 46. THE TWELVE MINISTERS.

The twelve pigs started to glow like the twelve Aadithyaas-after drinking Siva's milk.

Uma Devi asked Lord Siva,"Why did you take pity on the twelve wicked boys who were cursed to be born as pigs?"

Siva replied ,"One of my names is Sakala Jiva Dayaa
paran. I have to be kind to all forms of lives! So I gave the piglets my divine milk. Now they have acquired all knowledge, talent and wisdom, They will serve the Paandiya king as his ministers and finally reach my abode to become the leaders of my Siva ganam."

Lord Siva appeared in the dream of the Paandiya king Rajarajan. He spoke very highly about the twelve pig-faced-men living on the Mountain of Pigs. He advised the king to appoint them as his new ministers.

The next day the King revealed his unusual dream to his ministers and ordered them to fetch the pig faced men. The ministers traced them and lead them to the King with due honors.

The twelve bothers were appointed as new minsters. They were married to the lovely daughters of the old ministers. They served the king well. They were twelve in body but their opinion was always one and the same.

When the time came for them to leave this mortal world, they were duly appointed as the leaders of the Siva ganam.
 
# 47. கரிக் குருவிக்கு உபதேசம் செய்தது.

பாண்டியன் ராஜராஜனுக்குப் பிறகு,
பாண்டியன் சுகுணன் முடி சூடினான்;

கர்ம வினையால் வலியவன் ஒருவன்,
கரிக் குருவியாகப் பிறவி எடுத்தான்.

காக்கை முதலிய வலிய பறவைகள்
யாக்கையைக் கொத்தித் துன்புறுத்தின.

குருதி வழியும் தலையுடன், பெரும்
அவதிக்கு உள்ளானது கரிக் குருவி.

பல தினங்கள் நகர வாசம் செய்தது;
பலன் இன்றிப் பின் காடு திரும்பியது!

மலர்கள் குலுங்கும் மரக்கிளையில்,
மன வருத்ததோடு அமர்ந்திருந்தது!

தீர்த்த யாத்திரை செல்பவர், மரத்தைப்
பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்தார்.

நல்லுபதேசம் அவர் மற்றவர்களுக்குச்
சொல்லும் போது அவர் குரல் கேட்டது.

"உலகிலேயே உன்னதமான இடம் எனக்
கலக்கம் இன்றிச் சொல்வேன் மதுரையை!

பொற்றாமரைக் குளத்தின் தீர்த்தம்
மற்றெல்லாவற்றையும் பின் தள்ளும்!

வல்லவருக்கு வல்ல ஈசன் என்பவர்
எல்லோரும் வணங்கும் சோமசுந்தரர்!

ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி என்னும்
பல சிறப்புகள் பெற்றுள்ளது மதுரை!"

ஞானம் பிறந்தது கரிக் குருவிக்குத் தன்
ஈனப் பிறவிக்குக் காரணம் புரிந்தது!

பிறவிப் பிணியை ஒழித்துக் கட்டிட
ஒரே வழி உடனே மதுரை செல்வதே!

பறந்து சென்றது மதுரையை நோக்கி!
சிறந்த பொற்றாமரைக் குளத்தில் முங்கி,

சோமசுந்தரரின் விமானம் வலம் வந்து,
தாமதம் இன்றிச் செய்தது மானஸபூஜை.

அன்னை கேட்டாள் அண்ணலிடம்,
"என்ன காரணத்தால் இக்கரிக்குருவி

இத்தனை சிரத்தையோடும், உம்மை
சித்த சுத்தியோடும் பூஜிக்கின்றது?"

வரலாற்றைக் கூறினான் தேவிக்கு,
பரம தயாபரன் சோமசுந்தரேச்வரன்;

ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தையும் ஈசன்
ம்ருத்யுபயத்தை போக்க உபதேசித்தான்.

மந்திரத்தைக் கேட்ட உடனேயே தன்
சொந்த அறிவைப் பெற்றது குருவி.

தொந்தரவு செய்யும் பிற பறவைகளை
அந்த நேரத்தில் தெரிவித்தது ஈசனுக்கு.

"கொடிய பறவைகளுக்கு எல்லாம்
வலியவனாக ஆகிவிடுவாய் நீ!"

"மரபில் வரும் அத்தனை பறவைகளும்
வலியவராகத் திகழ வேண்டும் ஐயனே!"

ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சரிவர
உச்சரிக்க வேண்டிய விதிகளின்படி,

ம்ருத்யுஞ்ஜயனிடமே கற்றுக் கொண்டது,
வலியவனாகி விட்ட அந்தக் கரிக் குருவி!

இடைவிடாமல் ஓதி வாழ்ந்து விட்டு
விடையேறும் ஈசனின் அடி சேர்ந்தது !

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
# 47. UPADESAM TO THE BLACK BIRD.

Suguna Paandiyan succeeded Rajaraja Paandiyan.

A man had been born as a long tailed black bird.This bird was always chased and attacked by the other black birds like the crows. It had bleeding wounds on its head all the time!

It could not live in the populated areas and flew back to the forest. It sat on a branch of a beautiful tree leaden with flowers-but its heart was nonetheless heavy.

A holy man on his theertha yaathraa saw the tree. He liked it very much and sat underneath its branches for taking rest.Soon the others gathered round him for a
sat sang.

The holy man said,

"Madhuraapuri is the holiest place in the whole world. The water in the Pond of Golden Lotus is holier than all the other theertham.The best among all Gods is Soma Sundareswarar.So Madhuraapuri has all the three features namely Theertham, Sthalam and Moorthy."

The black bird listened very carefully. Now it understood the real cause of its misery and how to set things right.It must go to Madhuraapuri immediately!

It flew away to the holy city. It took a dip in the Pond of Golden Lotuses. It started its Maanasa Puja of Lord Siva after doing pradakshinam to the temple vimaanam

Uma Devi asked Siva,"Why does the little bird do puja with so much sincerity and devotion?"

Lord related the story of the bird to Uma. He did the upadesam of the Mruthyunjaya Mahaa Mantram-to help the bird overcome the fear of death.

The bird listened to it with devotion. It put in a word of complaint to the Lord about the other black birds which were attacking it.

God promised to make the bird Valiyan (the mighty one).
The bird further requested that all the birds of his race must become Valiyans.The lord agreed with a smile.

The black bird learned to chant the Mruthyunjaya Mahaa mantram from the Mruthyunjayan Himself. It kept on chanting the mantra until it was freed from all its previous sins and reached Siva lokam.
 
chandra shekara isha isha sundareshwaa gowrisha chenjadha dhara

andhi vannamay shambho arul mukha nadha swayambho

chindhai theera vandhaay chidambaresha isha kailasha

chandra shekara isha isha......
 
சந்திர சேகர இஷா இஷா சுண்டறேஷ்வர கோவ்ரிஷா செஞ்சஆதர

அந்தி வண்ணமே ஷம்ப்ஹோ அருள் முக்ஹா நாதா ச்வயம்ப்ஹோ

சிந்தை தீர வந்தாய் சிடம்பரேஷ இஷா கைலாஷ

சந்திர சேகர இஷா இஷா
 
தமிழில் தவறுகளைத் தவிர்க்கலாமே!

அது முடியாது என்ற பக்ஷத்தில்
தமிழையே தவிர்த்து விடலாமே!

தாயின் மீது கருணை காட்டுங்கள்!

தாய் = தமிழ்த் தாய் மட்டும் அல்ல!

நானும் கூட ஒரு தாய் தான்
!
 

Latest ads

Back
Top