• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
There was an Irishman, a Mexican, and a blond guy, who were construction workers working on top of a building. It was lunch time and the Irishman opened his lunch pail, finding cabbage and beef. "If I get one more beef and cabbage for lunch I'm gonna jump off of this building," he says. Then the Mexican opens his lunch pail and finds a burrito. "If I get one more burrito for lunch I'm gonna jump off this building," he says. The blond man opens his lunch pail and finds a bologna sandwich. "If I get one more bologna sandwich I'm gonna jump off of this building." The next day the Irishman opened his lunch pail and found cabbage and beef, so he jumped off the building to his death. Next, the Mexican opened his lunch pail, and upon finding a burrito he jumped off as well. Finally, the blond guy opened his lunch pail and found a bologna sandwich. He too jumped off the building. The next day at their funeral the Irishman's wife said, "If only I knew that he didn't like cabbage and beef, I would surely have packed him something else." The Mexican's wife said, "If only I knew he didn't like burritos, I would have packed something else." Finally, the blonde man's wife spoke. "I don't know what his problem was. He packed his own lunch."
 
கள்ளப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கணும்னு சொன்ன எதிர் கட்சிங்க இப்ப 500 ரூபா நோட்டையும் 1000 ரூபா நோட்டையும் செல்லாதுன்னு சொன்ன உடனே எதிர்க்கிறாங்களே.

இதெல்லாம் ஜனங்க படற கஷ்டத்தைப்பாத்து அவங்க சொல்லல்லே. அவங்களுக்கும், அவங்க கட்சிக்கும் ஏற்பட்ட நஷ்டத்தைப் பாத்து வயிறு எரிஞ்சு சொல்றாங்க
 
வருஷக் கணக்குலே தூங்கிக்கிட்டு இருந்த அக்கௌண்டு ஏழை ஜனங்க கேஸ் மான்யத்துக்காக ஆரம்பிச்ச சின்னச்சின்ன அக்கௌண்ட் எல்லாம் ரொம்ப பிஸி ஆயிடுச்சி. எப்பவாவது அஞ்சு பத்து போடறவங்க இப்ப எல்லாம் அவங்க கணக்குலே ஒரு லக்ஷம், ரெண்டு லக்ஷம்னு போடறாங்க. ஒண்ணும் புரியல்லே.

இதுலே புரியறதுக்குஎன்னங்க இருக்கு. இன்னும் ரெண்டு நாள்லே எல்லாத்தையும் திரும்ப எடுப்பாங்க அப்ப உங்களுக்குப் புரியும்.
 
சாது: புகை பிடிக்கக்குடாதுன்னு போர்டு போட்டிருக்கே. பார்க்கலே? நீங்க பாட்டுக்க புகை பிடிச்சிக்கிட்டு இருக்கீங்களே?
அடாவடி: நான் எங்கே புகை பிடிக்கிறேன். புகையை விடத்தானே செய்யறேன். அதுகூடவா தெரியல்லே. பெரிசா பேச வந்துட்டான்.
 
Last edited:
ஒருவர்: அவர் ஏன் இறக்கணும், இறக்கணும்னு கத்திக்கிட்டு இருக்கார்?அவருக்கு அப்படி என்ன கஷ்டம் வந்துட்டுது?
மற்றவர்: அதெல்லாம் ஒண்ணுமில்லே.அவர் பரண்லே இருக்கிற சாமான்களையெல்லாம் கீழே இறக்கணும்னு கத்தறாரு.அவ்வளவுதான்.
 
இந்த மாசம் பட்ஜெட்டுலே துண்டு விழக் காரணம் நீங்க, நான் சொல்லச் சொல்ல கேட்காமல், ரெண்டு வேட்டி, ரெண்டு துண்டு வாங்கினதுதான் காரணம்.

நீ வாங்கின நாலு சேலையால விழாத துண்டு நான் வாங்கின ரெண்டு துண்டாலே தான் விழுந்துட்டதாக்கு
 
திருடன் 1: என் கெட்ட நேரம் 7ம் தேதி ராத்திரி கொள்ளை அடிச்ச பணம் பூராவும் வீணாயிட்டுது. நம்ம கஷ்டத்தைப் கண்டுக்கிறவங்க யாரும் இல்லே

திருடன் 2: அப்படிச் சொல்லாதே அண்ணே. நமக்காகத்தான் எதிர்கட்சிங்க எல்லாம் சேர்ந்து போராடுறாங்க.
 
கருப்புப் பணமுதலைகள்: அடே, இது தெரியாம போச்சே. நமக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா? கருப்புப் பணத்தை ஒழின்னு கத்தின இவ்வளவு எதிர்கட்சிகளும் நம்மை ஆதரிக்கிறது தெரியாம நாமதான் அனாவசியமா பயந்துட்டோம்.
 
Why have you written the list of provisions which you want to purchase in Facebook?

When I opened my Timeline in Facebook in my iPad, it only said "what is in your mind''
 
நெத்தியிலே ஏன் இப்படி பட்டை போட்டுக்கிட்டுத் திரியறே. பிறக்கும்போது பட்டையோடேயா பிறக்கறோம்? சிந்திச்சுப் பாரு.

அப்படிப் பார்த்தா பிறக்கும்போது நாம டிரஸ் போட்டுக்கிட்டா பிறக்கிறோம்?
 
Tv நிகழ்ச்சி தொகுப்பாளர்: இன்றைய சமையல் நிகழ்ச்சிக்கு கணவன் மனைவி இரண்டுபேர் வந்திருக்கீங்க. சரி.
(கணவனைப்பார்த்து) சார் நீங்க இப்ப என்ன பண்ணப்பேறீங்க?
கணவர்: இப்ப நான் வேப்பங்காயையும் அத்திக்காயையும் கலந்து ஒரு புது மாதிரியான சென்னை பீட்ஸா டிஷ் பண்ணப்போறேன்
தொகுப்பாளர்: அதுக்கு ஏன் சென்னை பீட்ஸான்னு பேர் வெச்சிருக்கீங்க?
கணவர்: இந்தக்காலத்துப் பசங்களெல்லாம் நம்ம ஊர் இட்லி, தோசை, உப்புமா மாதிரி பேரை வச்சா சாப்பிடவே மாட்டாங்க. அதனாலே அதுக்கு இந்த மாதிரி மாடர்ணா வெளிநாட்டுப் பேர் வச்சா அது எப்படி இருந்தாலும் சந்தோஷமா சாப்பிட்டு விட்டுப் போவாங்க.
தொகுப்பாளர்: ஆமாம், மேடம் நீங்க என்ன பண்ணப்போறீங்க?
மனைவி: அவர் செஞ்சுத்தர டிஷ்ஷை எப்படி சாப்பிடறதுன்னு சொல்லித்தரப்போறேன்
 
அவங்க என்ன போராட்டம் நடத்தறாங்க?
அவங்க எல்லாம் தமிழ் நாட்டுலே யாரும் கர்நாடக சங்கீதம் பாடக்கூடாதுன்னு போராடறாங்க.
ஏன்?
கர்னாடகா நமக்குத் தண்ணீர் தராத போது நாம மட்டும் ஏன் கர்னாடக சங்கீதத்தைப் பாடணும்னு கேட்கிறாங்க. என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க.
 
அப்பா: இப்ப நம்ம நாட்டினுடைய ஜனத்தொகை 60 கோடி.
அசட்டுப்பிச்சு: நான்பிறந்தது எவ்வளவு நல்லதாப்போச்சு பாத்தீங்களா?
அப்பா: என்னடா நல்லதாப்போச்சு?
அ. பிச்சு: நான்மட்டும் பிறக்காம இருந்திருந்தா நம்மநாட்டோட ஜனத்தொகை இப்ப 59,99,99,999 ஆ ஆயிருக்கும். சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்வளவு கஷ்டமாப் போயிருக்கும்?
 
You said that some airlines offers loafers. What has it got to do with loafers and what does it offer?


No. I said that airlines offers "low fares". You have not heard me properly.
 
அமெரிக்காவுக்குப் போனது தப்பாப் போச்சு.


ஏன் அப்படிச் சொல்றே?

இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தான் என் வொய்ஃப் சமைக்கிறா. ஏன்னு கேட்டா அமெரிக்காவுலே எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தானே சமைக்கிறாங்கன்னு சொல்றா.
 
என் வொய்ஃபோட அமெரிக்காவுக்குப் போனது தப்பாப் போச்சு.

ஏன் அப்படிச் சொல்றே?

இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தான் என் வொய்ஃப் சமைக்கிறா. ஏன்னு கேட்டா அமெரிக்காவுலே எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தானே சமைக்கிறாங்கன்னு சொல்றா.
 
ஜோசியர் :மூணாம் வீட்டிலிருந்து கேது பார்வை படறதாலே உங்களுக்கு ஆபத்து காத்துக்கிட்டு இருக்கு.
அவர்: உண்மைதாங்க. ஆனா அது மூணாம் வீட்டிலிருந்து இல்லீங்க.எதிர்த்த வீட்டுலே இருக்கிற சேதுவாலே தாங்க. அவன் என் பொண்ணை பார்க்கிற பார்வையே சரியில்லீங்க.
 
வீடு வாடகைக்குக் கேட்க வந்தவர்: இந்த வீட்டிலே எலிகளோடே தொந்திரவு ஜாஸ்தியா இருக்குமோ?
வீட்டுக்காரர்: எதனாலே அப்படிக் கேட்கறீங்க?
வந்தவர்: வீடு வயற்காட்டிற்குப் பக்கமா இருக்கறதாலே கேட்கிறேன்
வீட்டுக்காரர்: அந்தக்கவலையே வேண்டாம். இங்கே பாம்புகள் நிறைய இருக்கிறதாலே எலிகளே கிடையாது
 
இத்தினி நாளா தேர்தல்லே ஜனங்க விரல்லே மை வெச்சிக்கிட்டுதானே இருந்தாங்க. இப்ப வெக்கிற மையை மாத்திரம் நம்ம தலைவர் ஏன் எதிர்க்கிறார்?
இப்ப வெக்கிற மை அவருக்கு அவரைச் சேர்ந்தவங்களுக்கும் ஒவ்வாமை.
 
ரொம்ப ஆச்சரியமா இருக்கு நம்ம தலைவர் கருப்புப் பணத்துக்கு எதிரான இந்த சட்டத்தை ஆதரிக்கிறதைப் பாத்தா.
அதுவா. மத்தவங்க மாதிரி இல்லாம இவர் கருப்புப்பணத்தை பணமா வெச்சிக்காம, நிலமாவோ தங்கமாவோ மாத்திடுவார். அதனாலே அவர் இந்த சட்டத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அதே சமயத்திலே இந்த சட்டத்தை ஆதரிச்சா, பொதுமக்கள்கிட்டே நல்ல பேர் கிடைக்குமில்லே.
 
என்ன அப்பா? போன வாரம்தானே புது செருப்பு வாங்கினே. அதுக்குள்ளாறே இன்னொரு செருப்பு வாங்கணும்னு சொல்றே?

ஆமாம்பா. முந்தாநாள் ஒரு மந்திரியோட கூட்டத்துக்குப் போயிருந்தேன். அப்போ கோபத்துலே புது செருப்புங்கறதைக்கூட மறந்துட்டு மந்திரிமேலே அதை வீசி எறிஞ்சுட்டேன்
 
Some Kejriwal jokes

Parents: our boy is crying

Doc: Since?

Parents: since birth

Doc: Ohh! It's normal

Parents: No, he is 48 years now

Doc: is his name Kejriwal?

*******

Normal boys: I'm a Complan boy

Kejriwal: I'm a complain boy

*******

2011: Anti corruption march

2016: Anti anti- corruption march

**********
 
சின்னப்பெண்: யாரைப்பார்த்தாலும் என்னை பாட்டி மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல்லை.
அக்கா: நீ பாட்டி ஜாடையா இருக்கேங்கறதை அப்படி சொல்றாங்க.
 
தமிழாசிரியர்: (ஒரு மாணவனைப்பார்த்து ) தமிழ் மொழியை விட இனிமையான வேறு ஒரு மொழி ௨ண்டா?
மாணவன்: உண்டு ஐயா. அது தான் உங்க மகள் தேன்மொழி
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top