யமன்: உன் பதிபக்தியை மெச்சினேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதேனும் வரம் கேள்.
நவீன சாவித்திரி: தர்மராஜனே. என் கணவரும் நானும் இப்போது டிவியில் முடிவே இல்லாதது என்ற சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சீரியல் முடியும் வரை அவர் உயிரோடு இருக்க வரம் தருமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
யமன்: (சற்று யோசித்து) சரி. அப்படியே தருகிறேன். ஆனால் அந்த சீரியல் முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உன் கணவனை நான் கூட்டிச் சென்று விடுவேன்.
ந. சாவித்திரி: நன்றி பிரபோ. அப்படியே ஆகட்டும்.
(யமன் அவள் கணவனை விட்டுவிட்டு தன் லோகம் சென்றடைகிறான்.)
சித்திரகுப்தன்: என்ன மகாராஜா. வெறும் கையோடு வந்திருக்கிறீர்கள். சென்ற காரியம் என்ன ஆயிற்று?
யமன்: அவர்கள் இருவரும் முடிவே இல்லாதது என்ற சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அதைப் பார்த்து முடிந்த பிறகு அந்தப் பதிவிரதை தன் கணவன் சத்தியனை யமலோகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு மன்றாடி வரம் கேட்டாள். நானும் அவ்வாறே செய்வதாக அவளுக்கு வரம் கொடுத்து விட்டேன்.
சி. குப்தன்: தவறு செய்து விட்டீர்களே பிரபோ. சீரியல் பெயரோ முடிவே இல்லாதது. அது ஒரு கெகா சீரியல்.
யமன்: அப்படியென்றால்?
சி. குப்தன்: மெகாசீரியலென்றாலே அதில் நடிக்க வரும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்து முடிக்கும் வரையில் உயிரோடு இருந்தால் கிழவனாகவோ, கிழவியாகவோ ஆகிவிடுவார்கள். அப்படி நடித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் அவர்கள் நடித்த பாத்திரத்தைக் கதையில் சாகடித்து விட்டோ அல்லது அவருக்குப் பதில் இவர் என்று வேறு ஒருவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோ சமாளித்து விடுவார்கள். மெகாசீரியலை முழுவதுமாகப் பார்த்தவர்களே பூலோகத்தில் யாரும் கிடையாது. நாமே அந்த மாதிரி பல பேரை இங்கே பார்த்திருக்கிறோம். இப்போது சத்தியன் பார்த்துக்கொண்டு இருப்பதோ கெகா சீரியல். பெயர்வேறு முடிவே இல்லாதது. இதை எடுத்து முடிக்க ஒருயுகம் போதவே போதாது. மெகா சீரியலை விட பல மடங்கு பெரியது. அதனால் இப்போது அவனை இங்கு கொண்டு வர வாய்ப்பேயில்லை. நீங்கள் இப்போது அவனுக்குக் கொடுத்திருக்கும் வரம் சாகாவரம். இப்படி ஏமாந்து விட்டீர்களே.
இது வரையிலும் மற்றும் இனியும் எழுதப் போகும் ஜோக்குகள் யாவும் என்னுடைய சிரி நானூறு என்னும் தமிழ் ஜோக் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவையே/ எடுக்கப் படுபவையே
![]() |
(இதில் முதல்பாதி முற்றிலும் உண்மை. அதன்அடிப்படையில் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட கற்பனைக் கதை இது)
ராமானுஜர் பரம்பரையில் வந்த ஜெயலலிதாவை விட்டுவிட்டு ராவணானுஜர் பரம்பரையில் வந்த கருணாநிதி ஆச்சாரியார் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், வேங்கடநாதனின் பரிபூரண அனுக்கிரகம் அன்னாருக்குக் கிட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும் அவருடைய ராமானுஜர் என்ற டிவி தொடரின் மூலம் பாமர மக்களுக்கும் ராமானுஜரின் பெருமையை எடுத்துச் சொன்ன அவருடைய தெய்வ சேவையைப் போற்றும் வகையிலும், திருப்பதி திருமலை தேவ ஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஆச்சாரியர்களும், பட்டர்களும், ஜியர்களும், வேதவிற்பன்னர்களும், பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு என்று கோபாலபுரம் அதிர பல்லாண்டு பாடியபடி மேளதாளங்களுடனும் வேத கோஷங்களுடனும் கருணாநிதி ஆச்சாரியார் அவர்களின் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி அவருக்குத் திருமலையானின் துளசி தீர்த்தத்தையும் லட்டுப் பிரசாதங்களையும் அளித்து, டிவியின் மூலம் அவர் செய்த இராமானுஜர் சேவையைப் பாராட்டி அதைத் தெலுங்கில் டப் செய்து வெளியிட அனுமதி கேட்டதை நாடே கண்டு வியக்க, நானும் மனதிற்குள் கருணாநிதி ஆச்சாரியாருக்குப் பல்லாண்டு பாடி மகிழ அந்த நேரத்தில் என் கற்பனைக் குதிரை கட்டவிழ்ந்ததன் விளைவுதான் கீழ்க் கண்ட கற்பனை.
ஆரிய ராவணனுன் பெருமையையும் மகிமையையும் பாமர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து, ஶ்ரீலங்கா அதிபர் சிரிசேனா வரையிலும் அனைவராலும் ஏகமனதுடன் பாராட்டப்பட்ட டிவியில் ராவண காவியம் வடித்த வீரமணி சிவாச்சாரியாரின் ராவண சேவையைப் புகழ்ந்து அன்னாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும்,கௌரவப்படுத்தும் வகையிலும் வடநாட்டிலுள்ள அயோத்தியிலிருந்து ராவண பக்த கோடிகள் பலரும், ராவண பஜனை கோஷ்டியினர் சிலரும் வீரமணிக்கு வீபூதிப் பிரசாதமும் மற்றும் கங்கை சொம்பும் அளித்து விஸ்ரவசுவின் புதல்வனும், பிரம்மாவின் பேரனுமான சிவபக்தனான ராவணனன் என்ற பிராமணனைப் போற்றியும் திராவிட ராமனைப் பழித்தும் பல உண்மைகளை உலகிற்கு எடுத்துக் கூறியமைக்கு பொன்னாடை போற்றியும் அந்த டிவி தொடரின் இந்தித் தொடரை தாங்கள் வெளியிட அனுமதி கோரி அதே நேரத்தில் கிறுத்துவ, முஸ்லிம் மற்றும் பிற மதத்தினரின் முழு ஆதரவுடனும் ,ஒத்துழைப்புடனும், நிதி உதவியுடனும் அயோத்தியில் அவர்கள் கட்ட இருக்கும் ராவணன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவும், கட்டி முடித்தபின் அந்தக் கோவிலுக்கு ஒரே ஒரு பூசாரி மட்டும் இருப்பதாலும், சமூக நீதிப்படி பங்கு போட்டு அதை அளிக்க இயலாததாலும் அதற்கு அவரே பூசாரியாகவும் இருந்து அங்குள்ள மற்ற வேலைகளுக்கு சமூக நீதிப்படி ஆட்களை நியமிக்க வேண்டும் என்று காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அவருடைய ஆசி பெற்றுச் சென்றனர்.
R.guruswamy
![]()
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.