DEVI BHAAGAVATAM - SKANDA 7
7#31c. தேவி தந்த வரம்
"சிவப்ரியே! பிரகிருதி ஸ்வரூபிணி! நமஸ்காரம்.
மங்கள ஸ்வரூபிணி! புவனேஸ்வரி! நமஸ்காரம்.
தவத்தால் ஜொலிப்பவளே! அக்கினி நிறத்தவளே!
தாக்ஷாயணியே! துர்கையே! நமஸ்காரம்." என
"என்ன வரம் வேண்டும் கேளுங்கள் தருவேன்!
என்ன கவலை உமக்கு நான் இருக்கும் போது?" என
"அனைத்தும் அறிவாய் நீ மஹாதேவியே!
களைத்துப் போனோம் தாரகனிடம் வாடி.
வரம் பெற்றுள்ளான் தாரகன் பிரமனிடம்;
மரணம் சிவகுமாரன் கைகளால் மட்டுமே.
தேவதேவனும், தேவியும் உள்ளனர் தனியாக!
தேவ தேவியர் சேராமல் தோன்றுவானா குமரன்?
வரவேண்டும் சிவகுமாரன் விரைவில் அவதரித்து!
தரவேண்டும் அபயம் அபாயத்திலுள்ள எமக்கு." என
"பர்வத ராஜன் பூஜிக்கின்றான் பய பக்தியோடு.
கர்வமின்றி இதயத் தாமரையில் என்னை இருத்தி.
விழைகின்றேன் அவன் புதல்வியாகத் தோன்றிட,
விளங்குவேன் பார்வதி என்னும் திரு நாமத்தோடு
மணம் செய்து வைப்பீர் என்னை சிவனுக்கு;
மனம் விரும்பும் பலன்கள் கிடைக்கும்!" என
ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் பர்வத ராஜன்!
"அரும் தவம் செய்தேனோ நூறு பிறவிகளில்?
உன்னைப் புதல்வியாக அடைவதற்கு
என்ன தவம் செய்தேனோ நான்!" என்றான்.
"அருள வேண்டும் உன் வாய் மொழியாகவே,
அருள வேண்டும் சித்தாந்தமான உன் ஸ்வரூபம்;
அருள வேண்டும் பக்தி பூர்வமான யோகத்தை.
அருளவேண்டும் சாஸ்திர ரீதியான ஞானத்தை."
உள்ளம் மகிழ்ந்தாள் தேவி இதைக் கேட்டு
உபதேசித்தாள் தன் தத்துவ ரஹசியங்களை .
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
7#31c. தேவி தந்த வரம்
"சிவப்ரியே! பிரகிருதி ஸ்வரூபிணி! நமஸ்காரம்.
மங்கள ஸ்வரூபிணி! புவனேஸ்வரி! நமஸ்காரம்.
தவத்தால் ஜொலிப்பவளே! அக்கினி நிறத்தவளே!
தாக்ஷாயணியே! துர்கையே! நமஸ்காரம்." என
"என்ன வரம் வேண்டும் கேளுங்கள் தருவேன்!
என்ன கவலை உமக்கு நான் இருக்கும் போது?" என
"அனைத்தும் அறிவாய் நீ மஹாதேவியே!
களைத்துப் போனோம் தாரகனிடம் வாடி.
வரம் பெற்றுள்ளான் தாரகன் பிரமனிடம்;
மரணம் சிவகுமாரன் கைகளால் மட்டுமே.
தேவதேவனும், தேவியும் உள்ளனர் தனியாக!
தேவ தேவியர் சேராமல் தோன்றுவானா குமரன்?
வரவேண்டும் சிவகுமாரன் விரைவில் அவதரித்து!
தரவேண்டும் அபயம் அபாயத்திலுள்ள எமக்கு." என
"பர்வத ராஜன் பூஜிக்கின்றான் பய பக்தியோடு.
கர்வமின்றி இதயத் தாமரையில் என்னை இருத்தி.
விழைகின்றேன் அவன் புதல்வியாகத் தோன்றிட,
விளங்குவேன் பார்வதி என்னும் திரு நாமத்தோடு
மணம் செய்து வைப்பீர் என்னை சிவனுக்கு;
மனம் விரும்பும் பலன்கள் கிடைக்கும்!" என
ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான் பர்வத ராஜன்!
"அரும் தவம் செய்தேனோ நூறு பிறவிகளில்?
உன்னைப் புதல்வியாக அடைவதற்கு
என்ன தவம் செய்தேனோ நான்!" என்றான்.
"அருள வேண்டும் உன் வாய் மொழியாகவே,
அருள வேண்டும் சித்தாந்தமான உன் ஸ்வரூபம்;
அருள வேண்டும் பக்தி பூர்வமான யோகத்தை.
அருளவேண்டும் சாஸ்திர ரீதியான ஞானத்தை."
உள்ளம் மகிழ்ந்தாள் தேவி இதைக் கேட்டு
உபதேசித்தாள் தன் தத்துவ ரஹசியங்களை .
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.