DEVI BHAAGAVATAM - SKANDA 7
7#32d. தேவி கீதை (4)
தோன்றியது ஆதித் தத்துவத்திலிருந்து சப்த தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் சப்த தன்மாத்திரையிலிருந்து ஆகாயம்.
தோன்றியது பின்னர் ஆகாயத்திலிருந்து ஸ்பரிச தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் ஸ்பரிச தன்மாத்திரையிலிருந்து வாயு.
தோன்றியது பின்னர் வாயுவிலிருந்து ரூப தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் ரூப தன்மாத்திரையிலிருந்து அக்கினி.
தோன்றியது பின்னர் அக்கினியிலிருந்து ரசத் தன்மாத்திரை;
தோன்றியது பின்னர் ரசத் தன்மாத்திரையிலிருந்து ஜலம்.
தோன்றியது பின்னர் ஜலத்திலிருந்து கந்தத் தன்மாத்திரை
தோன்றியது பின்னர் கந்தத் தன்மாத்திரையிலிருந்து ப்ருத்வீ.
பஞ்ச தன்மாத்திரைகள் கலக்கப் பட்டன பஞ்சீகரணத்தில்
பஞ்ச பூதங்களை பின்னர் உருவாக்குவதற்கு என்று அறிவீர்.
ஓசை, ஊறு , ஒளி , சுவை, நாற்றம் என்ற ஐந்தும் நிலத்திலும்;
ஓசை, ஊறு , ஒளி , சுவை என்னும் நான்கும் ஜலத்திலும்;
ஓசை, ஊறு , ஒளி என்ற மூன்றும் நெருப்பிலும் ;
ஓசை, ஊறு என்னும் இரண்டு மட்டும் காற்றிலும்;
ஓசை என்னும் ஒன்று மட்டும் ஆகாயத்திலும் விளங்கும்.
ஓங்கி விளங்கும் இவைகள் ஐந்தும் வரிசைக் கிரமமாக .
தோன்றும் சூக்ஷ்ம சரீரம் பஞ்ச தன்மாத்திரைகளில்
தோன்றும் ஸ்தூல சரீரம் சூக்ஷ்ம சரீரத்தை ஒட்டியபடி.
பஞ்ச தன்மாத்திரைகளின் பஞ்சீகரணம் என்பது இதுவே
பஞ்ச பூதங்களை உருவாக்குகின்ற முறையும் இதுவே.
ஐந்து தன்மாத்திரைகளும் கலந்திருக்கும் ஒன்றாக
ஐம்பெரும் பூதங்களிலும் வேறு வேறு அளவில்.
விகிதாசாரம் மட்டும் மாறுபடும் ஒவ்வொன்றிலும்;
வேறு வேறு பஞ்ச பூதங்கள் உருவாகிட ஏதுவாக.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.