DEVI BHAAGAVATAM - SKANDA 6
6#23a. தீரமும், திருமணமும் (1)
திருமகள் திருமகன் திருமுகம் மலர்ந்தான்.
“தீரத்தைக் காட்டி மீட்பேன் ஏகாவலியை.
சிறையிலிருந்து விடுதலை செய்வேன் அவளை;
தெரியவேண்டும் அவள் சிறைப் பட்டுள்ள இடம்.
காட்டுவாய் அங்கு செல்லுகின்ற வழியை.
காட்டுவேன் காலகேதுவுக்கு என் வீரத்தை!”
“முன்னதாக உபதேசம் பெற்றுக் கொள்ளுங்கள்
என்னிடமிருந்து தேவியின் திரு மந்திரங்களை.
காட்டுகின்றேன் காலகேதுவின் பட்டணத்தை
போட்டிருக்கிறான் அசுரர்களின் பலத்த காவல்.”
உபதேசித்தாள் தேவியின் மந்திரத்தை யசோவதி;
உபாசித்தான் ஏகவீரன் தேவியின் அருளை நாடி.
ஆற்றல் பெற்றான் எண்ணங்களைக் கண்டு அறிந்திட;
ஆற்றல் பெற்றான் அருகிலிருப்பது போல் அறிந்திட.
காவல் காத்திருந்தன சர்ப்பங்கள் பாதாளத்தை!
காவல் காத்திருந்தனர் அசுரர் பட்டணத்தை!
படை எடுத்தான் ஏகவீரன் அசுரரின் மீது - ஆனால்
தொடை நடுங்கினர் இவனைக் கண்ட அசுர வீரர்.
“வந்திருப்பவன் யாரோ தெரியவில்லை மன்னா!
இந்திரனோ, முருகனோ, ஜயந்தனோ அறியோம்!
பிரமாதமான வீரத் தோற்றம் பெற்றுள்ளான்;
பிரம்மாண்டமான சேனையும் பெற்றுள்ளான்;
புறப்படுவீர் அவனோடு போர் புரிய – அன்றேல்
சிறை விடுவீர் இந்தப் பொற்கொடியை! என்றனர்
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.