DEVI BHAAGAVATAM - SKANDA 5
5#31c. சும்பாசுரன் வதம் (3)
“வீரமங்கையே! என் வந்தாய் போர்க்களம்?
வீரம் ஆண்களின் லக்ஷணம் என்றறியாயோ?
மங்கையர் போர்க்களம் வேறு ஒன்று உண்டு;
தங்க உடலுக்கு ஏற்றது அந்தப் போர்க்களம்.
கண்கள் அம்புகள், புருவங்கள் விற்கள்,
காம லீலைகளே சிருங்கார ஆயுதங்கள்;
காமக் கலையில் தேர்ந்த புருஷன் குரு,
கலவி இச்சையே ஏறிச் செல்லும் ரதம்;
மந்த வார்த்தைகள் ஒலிக்கும் முரசு;
சந்தனப் பூச்சுக்களே போர் முயற்சி;
வில் அம்புகளால் விளையாது நன்மை!
சொல்வேன் நன்மை விளைவிப்பதை.
நாணமே பெண்களுக்கு அணிகலன் ஆகும்.
நாணத்தைத் துறப்பது பெண்ணின் தோல்வி.
வில் ஏந்தினால் கெட்டு விடும் உடல் மென்மை;
தண்டம் ஏந்தினால் கெட்டு விடும் அன்ன நடை;
இனிமையாகப் பாடவல்ல நீ எழுப்பலாம்
இடியோசை போன்ற குரலை இக்களத்தில்.
யுத்தம் செய்ய இயலேன் உன்னுடன் நான்!
யுத்தம் செய்ய முயல்வேன் இவளுடன் நான்!
தொங்கும் உதடுகள், தொங்கும் வயிறு
அங்க லக்ஷணம் இல்லாத கரிய நிற எதிரி;
கோர உருவமும், கோரைப் பற்களும் கொண்ட
பூனைக் கண் பெண் என் எதிரில் நின்றால்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
5#31c. சும்பாசுரன் வதம் (3)
“வீரமங்கையே! என் வந்தாய் போர்க்களம்?
வீரம் ஆண்களின் லக்ஷணம் என்றறியாயோ?
மங்கையர் போர்க்களம் வேறு ஒன்று உண்டு;
தங்க உடலுக்கு ஏற்றது அந்தப் போர்க்களம்.
கண்கள் அம்புகள், புருவங்கள் விற்கள்,
காம லீலைகளே சிருங்கார ஆயுதங்கள்;
காமக் கலையில் தேர்ந்த புருஷன் குரு,
கலவி இச்சையே ஏறிச் செல்லும் ரதம்;
மந்த வார்த்தைகள் ஒலிக்கும் முரசு;
சந்தனப் பூச்சுக்களே போர் முயற்சி;
வில் அம்புகளால் விளையாது நன்மை!
சொல்வேன் நன்மை விளைவிப்பதை.
நாணமே பெண்களுக்கு அணிகலன் ஆகும்.
நாணத்தைத் துறப்பது பெண்ணின் தோல்வி.
வில் ஏந்தினால் கெட்டு விடும் உடல் மென்மை;
தண்டம் ஏந்தினால் கெட்டு விடும் அன்ன நடை;
இனிமையாகப் பாடவல்ல நீ எழுப்பலாம்
இடியோசை போன்ற குரலை இக்களத்தில்.
யுத்தம் செய்ய இயலேன் உன்னுடன் நான்!
யுத்தம் செய்ய முயல்வேன் இவளுடன் நான்!
தொங்கும் உதடுகள், தொங்கும் வயிறு
அங்க லக்ஷணம் இல்லாத கரிய நிற எதிரி;
கோர உருவமும், கோரைப் பற்களும் கொண்ட
பூனைக் கண் பெண் என் எதிரில் நின்றால்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி