DEVI BHAAGAVATAM - SKANDA 5
5#21a. சும்ப, நிசும்பர்கள் (1)
‘ஜனமேஜயனே! விரும்புகின்றாய் மேன் மேலும்
மனமொன்றி தேவியின் லீலையைக் கேட்டிட.
சும்பன் நிசும்பன் ஆவர் கொடிய அரக்கர்;
சொந்தம் உண்டு அண்ணன் தம்பி என்று.
அகம்பாவிகள், முரடர்கள், வலியவர்கள்.
ஆண்களால் கொல்ல முடியாதவர்கள்.
படை பலம் மிகுந்த அசுர சகோதரர்களின்
இடைவிடா விளையாட்டுத் துன்புறுத்துவது.
மாயாவி அசுரர்கள் இவர்களின் தளபதிகள்;
மாயப் போர் புரிந்து மாய்த்தனர் சாதுக்களை.
சண்டன், முண்டன், குரூரன், ரக்த பீஜன்
தாமிர லோசனன் அழிந்தனர் தேவியால்.
சும்ப, நிசும்பர்கள் வந்தனர் பூவுலகுக்கு
வம்பு செய்திட - பாதாளத்தில் இருந்து.
இருந்தனர் புஷ்கர க்ஷேத்திரத்தில் அவர்கள்;
புரிந்தனர் கடும் தவம் பிரமனைக் குறித்து.
உருண்டோடின பதினாயிரம் ஆண்டுகள்
மறந்தனர் அன்ன, பான, நித்திரைகளை!
மகிழ்ந்தான் பிரமன் கடும் தவத்தால்
நெகிந்து வந்தான் அன்னத்தின் மீதேறி.
“வேண்டும் வரம் கேளுங்கள்!” என்றதும்
“வேண்டும் எமக்கு அழிவில்லாத தேகம்.
கொடியது அனைத்திலும் மரண பயம்;
கொடிய பயத்தைப் போக்கி அருள்வீர்.”
வியந்தான் விரும்பிய வரத்தினால் பிரமன்!
விளக்கினான் காலத் தத்துவத்தை பிரமன்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
5#21a. சும்ப, நிசும்பர்கள் (1)
‘ஜனமேஜயனே! விரும்புகின்றாய் மேன் மேலும்
மனமொன்றி தேவியின் லீலையைக் கேட்டிட.
சும்பன் நிசும்பன் ஆவர் கொடிய அரக்கர்;
சொந்தம் உண்டு அண்ணன் தம்பி என்று.
அகம்பாவிகள், முரடர்கள், வலியவர்கள்.
ஆண்களால் கொல்ல முடியாதவர்கள்.
படை பலம் மிகுந்த அசுர சகோதரர்களின்
இடைவிடா விளையாட்டுத் துன்புறுத்துவது.
மாயாவி அசுரர்கள் இவர்களின் தளபதிகள்;
மாயப் போர் புரிந்து மாய்த்தனர் சாதுக்களை.
சண்டன், முண்டன், குரூரன், ரக்த பீஜன்
தாமிர லோசனன் அழிந்தனர் தேவியால்.
சும்ப, நிசும்பர்கள் வந்தனர் பூவுலகுக்கு
வம்பு செய்திட - பாதாளத்தில் இருந்து.
இருந்தனர் புஷ்கர க்ஷேத்திரத்தில் அவர்கள்;
புரிந்தனர் கடும் தவம் பிரமனைக் குறித்து.
உருண்டோடின பதினாயிரம் ஆண்டுகள்
மறந்தனர் அன்ன, பான, நித்திரைகளை!
மகிழ்ந்தான் பிரமன் கடும் தவத்தால்
நெகிந்து வந்தான் அன்னத்தின் மீதேறி.
“வேண்டும் வரம் கேளுங்கள்!” என்றதும்
“வேண்டும் எமக்கு அழிவில்லாத தேகம்.
கொடியது அனைத்திலும் மரண பயம்;
கொடிய பயத்தைப் போக்கி அருள்வீர்.”
வியந்தான் விரும்பிய வரத்தினால் பிரமன்!
விளக்கினான் காலத் தத்துவத்தை பிரமன்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி