VINAAYAKA PURAANAM 2
6e. காலநேமி
அங்குசத்தைப் பணித்தார் ஐங்கரன்,
“இங்கும் அங்கும் தேடி பந்திப்பாய்
தொந்தரவு செய்யும் காலநேமியை!”
வந்தது, போன வேகத்திலேயே அது.
பந்தித்துக் கொணர்ந்தது கயவனை; .
பகவான் முன் நிறுத்தியது அவனை!
கண்டோர் அஞ்சும் கொடிய உருவம்!
கண்களில் கனல், கோரைப் பற்கள்!
விநாயகரிடமிருந்து தப்பினான் அவன்;
விந்தையாக நீரின் உருவம் எடுத்தான்!
பிரளய ஜலம் போல பிரவகித்தான்;
மிரண்ட உயிர்களை மூழ்கடித்தான்!
உள்ளங்கையில் நீரை அடக்கிவிட்டு
அள்ளிப் பருக முயன்றார் ஐங்கரன்
காக்கை உருவில் பறந்தான் காலநேமி
சாகரம் வற்றியது; மலைகள் நடுங்கின!
தாமரை மலரை வீசினார் ஐங்கரன்!
தாமதம் இன்றித் தீ ஜ்வாலை ஆகி
எரித்தான் அதீத உஷ்ணத்தினால்
மிருகங்கள், பயிர்கள் உயிர்களை.
விநாயகர் மாறினார் மழையாக!
அனாயசமாக அணைத்தார் தீயை!
புயலாக மாறினான் காலநேமி!
புயலைத் தடுத்தார் விநாயகர்.
மலையாக உருவத்தை மாற்றினார்.
மலையைத் தாக்கினான் காலநேமி.
வேலை எறிந்தார் விநாயகர் அவன் மீது!
வேல் உண்டது சீறி வந்த பாணங்களை.
'வேலிடமிருந்து தப்ப வழி உள்ளதா?
வேழமுகனிடமிருந்து தப்பமுடியுமா?'
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
6e. காலநேமி
அங்குசத்தைப் பணித்தார் ஐங்கரன்,
“இங்கும் அங்கும் தேடி பந்திப்பாய்
தொந்தரவு செய்யும் காலநேமியை!”
வந்தது, போன வேகத்திலேயே அது.
பந்தித்துக் கொணர்ந்தது கயவனை; .
பகவான் முன் நிறுத்தியது அவனை!
கண்டோர் அஞ்சும் கொடிய உருவம்!
கண்களில் கனல், கோரைப் பற்கள்!
விநாயகரிடமிருந்து தப்பினான் அவன்;
விந்தையாக நீரின் உருவம் எடுத்தான்!
பிரளய ஜலம் போல பிரவகித்தான்;
மிரண்ட உயிர்களை மூழ்கடித்தான்!
உள்ளங்கையில் நீரை அடக்கிவிட்டு
அள்ளிப் பருக முயன்றார் ஐங்கரன்
காக்கை உருவில் பறந்தான் காலநேமி
சாகரம் வற்றியது; மலைகள் நடுங்கின!
தாமரை மலரை வீசினார் ஐங்கரன்!
தாமதம் இன்றித் தீ ஜ்வாலை ஆகி
எரித்தான் அதீத உஷ்ணத்தினால்
மிருகங்கள், பயிர்கள் உயிர்களை.
விநாயகர் மாறினார் மழையாக!
அனாயசமாக அணைத்தார் தீயை!
புயலாக மாறினான் காலநேமி!
புயலைத் தடுத்தார் விநாயகர்.
மலையாக உருவத்தை மாற்றினார்.
மலையைத் தாக்கினான் காலநேமி.
வேலை எறிந்தார் விநாயகர் அவன் மீது!
வேல் உண்டது சீறி வந்த பாணங்களை.
'வேலிடமிருந்து தப்ப வழி உள்ளதா?
வேழமுகனிடமிருந்து தப்பமுடியுமா?'
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி