DEVI BHAAGAVATAM - SKANDA 4
4#6e. “வரம் தாரும்!”
“உம் திருவடிகளை அடைந்தோம் பக்தியோடு.
யாம் விரும்பவில்லை இந்திரலோகம் திரும்ப!
வேண்டும் வரத்தைக் கேளுங்கள் என்றீர்கள்!
வேண்டும் வரத்தைக் கேட்கின்றோம் நாங்கள்.
நாயகன் ஆகவேண்டும் நீரே எமக்கு – மனதில்
நாதன் நீரே என்று யாம் உறுதி பூண்டுள்ளோம்.
இருப்போம் நாங்கள் இங்கேயே உம்மோடு-நீர்
உருவாக்கிய பெண்கள் செல்லட்டும் அங்கு
அருளுங்கள் யாம் கோரிய வரத்தை – யாம்
விரும்புகின்றோம் உம் உறவை மட்டுமே.”
நாராயணன் கூறினார் புன்முறுவலுடன்
நாதனாகக் கோரும் அப்சரஸ்களிடம்,
“நிறைவான தவம் செய்தேன் பல ஆண்டுகள்
குறைவின்றி வென்றேன் ஐம்புலன்களையும்.
குலைக்க மாட்டேன் என் அரிய தவத்தை!
நிலையில்லாத காம சுகத்தை விழையேன்.
சகஜமான புலன் இன்பங்களை விழைவர்
சாமான்ய மனிதர்கள் மட்டுமே உலகில்.
புலன்களை அடக்கிவிட்ட புத்திசாலி
அலையமாட்டன் காம சுகத்தை நாடி!
ஒப்புக் கொள்ளவில்லை அப்சரஸ் இதை,
தப்பு நாராயணனின் கருத்து என்றனர்.
ஐம்புலன்களும் ஆனந்தம் தரும் எனினும்
ஐந்திலும் சிறந்தது ஸ்பரிச சுகம் ஒன்றே.
சுவர்க்கமும் ஈடாகது இந்த சுகத்துக்கு!
சுகமாக இருப்போம் அனைவரும் இங்கு.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
4#6e. “வரம் தாரும்!”
“உம் திருவடிகளை அடைந்தோம் பக்தியோடு.
யாம் விரும்பவில்லை இந்திரலோகம் திரும்ப!
வேண்டும் வரத்தைக் கேளுங்கள் என்றீர்கள்!
வேண்டும் வரத்தைக் கேட்கின்றோம் நாங்கள்.
நாயகன் ஆகவேண்டும் நீரே எமக்கு – மனதில்
நாதன் நீரே என்று யாம் உறுதி பூண்டுள்ளோம்.
இருப்போம் நாங்கள் இங்கேயே உம்மோடு-நீர்
உருவாக்கிய பெண்கள் செல்லட்டும் அங்கு
அருளுங்கள் யாம் கோரிய வரத்தை – யாம்
விரும்புகின்றோம் உம் உறவை மட்டுமே.”
நாராயணன் கூறினார் புன்முறுவலுடன்
நாதனாகக் கோரும் அப்சரஸ்களிடம்,
“நிறைவான தவம் செய்தேன் பல ஆண்டுகள்
குறைவின்றி வென்றேன் ஐம்புலன்களையும்.
குலைக்க மாட்டேன் என் அரிய தவத்தை!
நிலையில்லாத காம சுகத்தை விழையேன்.
சகஜமான புலன் இன்பங்களை விழைவர்
சாமான்ய மனிதர்கள் மட்டுமே உலகில்.
புலன்களை அடக்கிவிட்ட புத்திசாலி
அலையமாட்டன் காம சுகத்தை நாடி!
ஒப்புக் கொள்ளவில்லை அப்சரஸ் இதை,
தப்பு நாராயணனின் கருத்து என்றனர்.
ஐம்புலன்களும் ஆனந்தம் தரும் எனினும்
ஐந்திலும் சிறந்தது ஸ்பரிச சுகம் ஒன்றே.
சுவர்க்கமும் ஈடாகது இந்த சுகத்துக்கு!
சுகமாக இருப்போம் அனைவரும் இங்கு.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி