A poem a day to keep all agonies away!

VINAAYAKA PURAANAM 1


27c. Kippirap Prasad

Vinayaka spoke to Keerthi in her dream,” Do not worry any more my dear child. You will win your husband’s love and attention once again. You will get a good son named Kippira Prasad. The other queen will poison his food. But Kruchadamar will save your son. Kippira Prasad will live a long happy life. Your days of sorrow are over. It will be only happiness in the future.”

Keerthi woke up from the dream. It had strong influence on her for a long time. Prabha developed a disease which left her unsightly. The king was not in love with her any more. He came back to Keerthi. Soon they were blessed with a male child . It was named as Kippira Prasad. The child was smart and grew up well.

Prabha knew that as long as this little boy lived, her son Padmanaabhan could never become the king of the country. She managed to poison the food kept for the young prince.

The child ate the food and fell down unconscious. The King’s vaidhyas rushed in and tried everything they knew. The treatment with gem, with chanting and with medicines all failed. Keerthi remembered her dream vividly. The only person who could save her son was Kruchadamar. She carried her son and ran to the ashram of Kruchadamar.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5b. இந்திரனின் சினம்

இந்திரன் கேட்டான் இரு முனி குமாரர்களிடம்,
தந்திரமாக அவர்கள் தவத்தைக் குலைப்பதற்கு.

“தவத்தின் நோக்கம் என்னவென்று கூறுங்கள்,
தருவேன் அவற்றை நான் உமக்கு வரங்களாக!”

கூறவில்லை ஒரு பதிலும் முனி குமாரர்கள்,
கோரவில்லை ஒரு வரமும் முனி குமாரர்கள்!

‘சிறுமைப்படுத்துகிறார்களோ இவர்கள் என்னை?’
சிறிது சினந்தான் இந்திரன் இரு குமாரர்கள் மீது !

மாயையினால் இன்னல்களை விளைவித்தான்!
மழை பெய்தது இடிகள், மின்னல்களோடு கூடி!

சுழன்று வீசியது கடும் புயல் காற்று – அத்துடன்
கனன்று எரிந்தது நாற்புறங்களிலும் தீச்சுடர்கள்.

உருவாக்கினான் அச்சம் தரும் விலங்குகளை!
பெருமைகளைச் சிறிதும் அறியாத இந்திரன்!

கலங்கவில்லை நர, நாராயணர் இதனால்!
கலையவில்லை அவர்களது தீவிரத் தவம்!!

தேவியை தியானித்துச் செய்தனர் மந்திர ஜபம்;
தேவேந்திரனின் மாயை தீண்டமுடியவில்லை.

காமம் வீழ்த்திவிடும் எத்தகைய மனிதனையும்!
காமதேவனை அழைத்து ஆணையிட்டான் அவன்.

“வசந்த காலத்தின் உதவியோடும், ரதியோடும்,
இசை நடனங்களில் சிறந்த தேவ மகளிரோடும்,

மோசம் செய்வாய் நர நாராயணர்களை நீ!
நாசம் செய்வாய் அவர்களின் தவத்தை நீ!

என்ன உதவி வேண்டுமோ கேள் எனிடம்,
என்ன வரம் வேண்டுமோ கேள் என்னிடம்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4


4#5b. Indra’s anger

Indra told the two brothers Nara and Naaraayanan in order to foil their deep penance,”What is the purpose of your severe penance? Please tell me and I shall grant them to you as my boons!” But the two brothers neither replied nor asked for any boons.

Indra felt slighted and therefore became angry. He caused a lot of troubles to the two brothers immersed in deep penance by the power of his Maayaa. He created a stormy wind, accompanied by thunder claps and raining clouds.

Flames of fire appeared all around the brothers. He created frightfully strange animals. He did not realize the greatness of the two brothers.
Nara and Naaraayanan were unruffled by all these things. They concentrated on Devi and were doing her japam so that none of the Maayaa tricks could affect them in the least.

Lust can destroy anyone and everyone. So now Indra decided use the irresistible power of Manmathan and Rati – the gods of love. He summoned Manmathan and said,

“Make use of the spring season, your beautiful consort Rati , the apsaras talented in singing and dancing and disturb and destroy the penance of the two brothers Nara and Naaraayanan. I will extend to you any help you may need. I will give you any boons you wish to seek”
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

6. மாயையின் அறிவுரை.

காச்யப முனிவரின் அறிவுரைகளை
கவனமாகக் கேட்டாள் அந்த மாயை;


“வீடு பேறு விரும்பும் வயோதிகருக்கும்,
காடு சென்று கடும் தவம் புரிவோருக்கும்,

முனிவரே! உம் சொற்கள் பொருந்தும்!
இனிய வாழ்வை நாடுபவருக்கு அல்ல!

இன்பத்தை, நீண்ட ஆயுளை, நல்ல புகழை,
மேன்மையை, செல்வதைப் பெற அல்ல!

கூறுங்கள் அவற்றை அடையக் கூடிய
குறுக்கு வழி என்று ஒன்று இருந்தால்!”

அதிர்ந்து போனார் முனிவர், அதன் பின்
முதிர்ந்த அறிவுரைகளைக் கூறவில்லை.

“இந்த உலகில் மாந்தர் விழைவது இந்த
இரண்டு வகைச் செல்வங்களே அறிவீர்!

கல்விச் செல்வமும், பொருட்செல்வமும்
இல்லாத ஒரு வாழ்வு வெறும் பாழே!

கல்வியிலும் சிறந்தது பொருட் செல்வம்.
கல்லாத செல்வர்க்கும் உண்டு செல்வாக்கு.

செல்வத்தை அடையத் தேவை ஊக்கம்;
செல்லாமல் நிற்க வேண்டும் ஊக்கத்தில்.

எனக்குப் பிறந்து விட்டதால் நீங்களும்
அனைத்து தேவர்களுக்கும் பகைவர்கள்.

தேவர்களிலும் சிறந்த வாழ்வு நீர் பெற
ஆவது அனைத்தும் உரைப்பேன் நான்.

வடதிசை நோக்கிச் செல்லுங்கள் நீங்கள்!
திடமாகத் தவம் செய்ய நல்லஇடம் அது;

நச்சு சமித்துக்களால் வளர்த்துங்கள் தீயை!
பச்சை ஊனையும், குருதியும் சொரியுங்கள்!

சிவபெருமான் மகிழ்ந்து வெளிப்படுவான்;
அவனருளால் பல மேன்மைகள் பெறுவீர்!”

சூர பத்மன் புறப்பட்டான் வடதிசைக்கு
தாரகன், சிங்கமுகன், அஜமுகியருடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM


2 (#6). MAYAI’S ADVICE.

Maayai listened to the sage’s long advice with rapt attention and then she spoke thus; “Your words are applicable to the old people who want to get liberated and to the tapasvis living in the jungle.

They are not useful to the people who desire a long life of pleasure and happiness. Not to those who seek wealth, fame and greatness. If there is a short cut method to achieve these things, teach that to our children”

The sage was shocked to learn the true motives of Maayai. He spoke no more.

Maayai continued: “The people of the world desire two things – Knowledge and Wealth. Of these wealth is preferred to knowledge. Even if a wealthy person does not have knowledge, he will still be respected, But not the other way!

You are my children. So all the Devas are now your enemies. I will tell you how to become superior even to the Devas and live a life better than theirs.

Go to the north. That place is ideal for doing penance. Do yagna with the poisonous samiththu and pour blood and meat in it. Siva will be pleased and emerge. You can get all the boons from him and become powerful”

Soorapadman left with Tarakan and Ajamukhi and went northwards.
 
த3ச’கம் 78 ( 1 to 5)

ருக்மிணி ஸந்தே3ச’ம்

த்ரி த3ச’ வர்த்தி4க வர்த்தி4த கௌச’லம்
த்ரித3ச’ த3த்த ஸமஸ்த விபூ4தி மத் |
ஜலதி4 மத்4யக3தம் த்வமபூ4ஷயோ
நவபுரம் வபுரஞ்சித ரோசிசா’|| ( 78 – 1)


தேவ சிற்பியான விஸ்வகர்மா அதைத் தன் கைத் திறனால் விருத்தி செய்தான். இந்திராதி தேவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்தனர். சமுத்திரத்தின் நடுவில் அமைந்திருந்த புதிய நகரமான துவாரகையை தங்கள் சரீர காந்தியால் அலங்கரித்தீர்கள் அல்லவா? ( 78 – 1 )

த3து3ஷி ரேவத பூ4ப்4ருதி ரேவதீம்
ஹலப்4ருதே தனயாம் விதி4 சா’ஸனாத் |
மஹித முத்ஸவ கோ4ஷ மபூபுஷ:
ஸமுதி3தைர் முதி3தைஸ் ஸஹ யாத3வை || ( 78 – 2 )


ரேவதன் என்ற அரசன் தன் மகள் ரேவதியை பிரம்மதேவன் கட்டளைப்படி பலராமனுக்கு திருமணம் செய்தபோது மகிழ்ச்சியுற்ற யாதவர்களுடன் நீங்களும் அந்த விவாஹத்தை மேன்மைப்படுத்தினீர்கள் அல்லவா?
( 78 – 2 )

அத2 வித3ர்ப்ப4 ஸுதாம் க2லு ருக்மிணீம்
ப்ரணயினீம் த்வயி தே3வ ஸஹோத3ர:|
ஸ்வயமதி3த்ஸத சேதி மஹீ பு4ஜே
ஸ்வதமஸா தமஸாது4முபாச்’ரயன் || ( 78 – 3)


தங்களிடம் அனுராகம் கொண்டிருந்தாள் விதர்ப்ப தேச மன்னனின் பெண் ருக்மிணி. அவன் சகோதரன் ருக்மி தன் மதியீனத்தால் அவளை சேதி ராஜன் ஆகிய சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து தர விரும்பினான் அல்லவா? ( 78 – 3)

சிர த்4ருத ப்ரணயா த்வயி பா3லிகா
ஸபதி3 காங்க்ஷித ப3ங்க3ஸமாகுலா |
தவ நிவேத3யிதம் த்3விஜமாதி3ச’த்
ஸ்வகத3னம் கத3னங்க விநிர்மிதம் || ( 78 – 4 )

தங்களிடம் வெகு நாட்களாக அன்பு செலுத்திவந்த அந்தப் பெண் ருக்மிணி, தன் விருப்பத்துக்கு மாறாக நடப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தாள். கருணையே இல்லாத மன்மதனால் தனக்கு ஏற்படும் துயரத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரு பிராமணனைச் சொல்லியனுப்பினாள்.
( 78 – 4 )

த்3விஜ ஸுதோSபி ச தூர்ண முபாயயௌ
தவபுரம் ஹி து3ராச’ து3ராஸத3ம் |
முத3 மவாப ச ஸாத3ர பூஜித:
ஸப4வதா ப4வதாப ஹ்ருதாஸ்வயம் || ( 78 – 5 )

அந்த பிராமண குமாரன் துர் எண்ணம் கொண்டவர்களால் அடையவே முடியாத தங்கள் நகரை விரைவாக வந்து அடைந்தான். ஜனன மரண துக்கங்களை அகற்றவல்ல தாங்களால் ஸ்வயமாகப் பூஜிக்கப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தான் அல்லவா? ( 78 – 5 )
 
த3ச’கம் 78 ( 6 to 10)

ருக்மிணி ஸந்தே3ச’ம்

ஸ ச ப4வந்த மவோசத குண்டி3னே
ந்ருப ஸுதா க2லு ராஜதி ருக்மிணீ |
த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீ4ரதா
ரஹிதயா ஹி தயா ப்ரஹி தோஸ்Sம்யஹம் || ( 78 – 6 )

“குண்டினபுரத்தில் ருக்மிணி என்கின்ற ஒரு அரச குமாரி இருக்கின்றாள் அல்லவா? தங்கள் இடத்தில் ஆசை வைத்தவளும், தன் தைரியத்தை இழந்து விட்டவளும் ஆகிய அவளால் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேன்” என்று அந்த குமாரன் தங்களிடம் தெரிவித்தான் அல்லவா? ( 78 – 6 )

தவ ஹ்ருதாSஸ்மி புரைவ கு3ணைரஹம்
ஹரதி மாம் கில சேதி3 ந்ருபோSதுனா |
அயி க்ருபாலய பாலய மாமிதி
ப்ரஜக3தே3 ஜக3தே3கபதே த்வயா || ( 78 – 7 )

“நான் தங்கள் குணங்களால் முன்பே கவரப்பட்டுள்ளேன். இப்போதோ சிசிபாலன் என்னை அடையப் போகின்றானாம். கருணைக்கு இருப்பிடமான லோக நாதா! என்னை தாங்களே காத்து அருள வேண்டும்!” என்று அவள் கூறினாள். ( 78 – 7 )

அச’ரணம் யதி3 மாம் த்வமுபேக்ஷஸே
ஸபதி3 ஜீவிதமேவ ஜஹாம்யஹம் |
இதி கி3ரா ஸுதனோ ரதனோத்3 ப்4ருச’ம்
ஸுஹ்ருத3யம் ஹ்ருத3யம் தவ காதரம் || ( 78 – 8 )


“வேறு கதி இலாத எனைத் தாங்கள் கை விடுவீர்களேயானால் நான் அந்த க்ஷணத்தில் என் உயிரை விட்டுவிடுவேன்” என்ற அந்த சுந்தரியின் வார்த்தைகளைக் கூறி அந்த நல்ல மனம் படைத்த பிராமண குமாரன் தங்கள் மனதையும் பயமுற்றதாகச் செய்தான் அல்லவா? ( 78 – 8 )

அகத2யஸ் த்வமதை2 நமயே ஸகே2
தத3தி4கா மம மன்மத3 வேத3னா |
ந்ருப ஸமக்ஷ முபேத்ய ஹராம்யஹம்
தத3யி தாம் தயிதா மஸிதேக்ஷணாம் || ( 78 – 9)


அப்போது தாங்கள் அந்த பிராமண குமாரனிடம் ” ஹே நண்பரே! என்னுடைய விரகதாபம் அவளுடைய காமவேதனையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆகையால் நான் அங்கே வந்து அரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவிழிகளை உடைய அந்த அழகியை அபகரிப்பேன்” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 78 – 9 )

ப்ரமுதி3தேன ச தேன ஸமம் ததா2
ரத2க3தோ லகு4 குண்டி3ன மேயிவான் |
கு3ருமருத்புர நாயக மே ப4வான்
விதனுதாம் தனுதாம் நிகி2லாபதா3ம் || ( 78 – 10)


குருவாயூரப்பா! அப்போதே மிகவும் சந்தோம் அடைந்த அந்த குமாரனுடன் தேரில் ஏறிக் கொண்டு விரைவாகக் குண்டினபுரத்தை அடைந்தீர்கள அல்லவா? அப்படிப்பட்ட தாங்களே என் ஆபத்துக்களைக் குறைத்துக் காக்க வேண்டும. ( 78 – 10
 
Last edited:
த3ச’கம் 79 ( 1 to 4)

ருக்மிணீ ஹரணம்

ப3ல ஸமேத ப3லானுக3தோ ப4வான்
புர மகாஹத பீ4ஷ்மக மானித:|
த்விஜ ஸுதம் த்வது3பாக3ம வாதி3னம்
த்4ருத ரஸா தரஸா ப்ரணநாம ஸா || ( 79 – 1 )


தாங்கள், சேனையுடன் கூடிய பலராமன் பின்தொடரக் குண்டினபுரத்தில் பிரவேசித்தீர்கள். அப்ப்போது பீஷ்மக ராஜா தங்களை வெகுமானித்தார். தங்கள் வரவைத் தெரிவித்த அந்த பிராமண குமாரனை ருக்மிணி விரைவாக வந்து வணங்கினாள். ( 79 – 1 )

பு4வன காந்த மவேக்ஷ்ய ப4வத்3 வபு:
ந்ருப ஸுதஸ் ய நிச’ம்ய ச சேஷ்டிதம் |
விபுல கே2த3 ஜுஷாம் புர வாஸினாம்
ஸருதி3தை ருதி3தை ரக3மன்நிசா’ || ( 79 – 2 )


ஜகன் மோகனன் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டும், அரச குமாரன் ருக்மியின் செயலைக் கேட்டும் ஜனங்கள் அளவற்ற வருத்தம் அடைந்தனர். பட்டணத்து ஜனங்களின் அழுகை, பேச்சு இவற்றுடன் அந்த இரவு கழிந்தது.(79-2)

தத3னு வந்தி3து மிந்து3 முகி3 சி’வாம்
விஹித மங்க3ள பூ4ஷண பா4ஸுரா |
நிரக3மத்3 ப4வத3ர்பித ஜீவிதா
ஸ்வபுரத: புரத:ஸப4டாவ்ருதா || ( 79 – 3 )

அதன் பிறகு அடுத்த நாட்காலை விவாஹத்திற்கு உரிய ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்ட, பௌர்ணமி நிலவு முகம் உடைய ருக்மிணி; உயிரை உங்களிடத்தில் அர்ப்பணம் செய்தவளாகவும் , சிறந்த காவலர்களால் சூழப்பட்டவளாகவும், மங்கள ரூபிணி ஆகிய பார்வதியை வணங்குவதற்குத் தன் அந்தப்புரத்தில் இருந்து முன் சென்றாள் ( 79 – 3 )

குலவதூ4பி4ருபேத்ய குமாரிகா
கி3ரிஸுதாம் பரி பூஜ்ய ச ஸாத3ரம் |
முஹுரயாசத த்வத் பத3 பங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம் || ( 79 – 4 )

கன்னியான ருக்மிணி குலஸ்த்ரீக்களுடன் ஆலயத்துக்குச் சென்றாள். பார்வதி தேவியை மிகுந்த ஆதரவுடன் பூஜித்தாள். தேவியின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். தாங்களே அவள் பதியாக ஆகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் பிரார்த்தித்துக் கொண்டாள்.
( 79 – 4 )
 
த3ச’கம் 79 ( 5 to 8)

ருக்மிணீ ஹரணம்

ஸமவலோக குதூஹல ஸங்குலே
ந்ருப குலே நிப்4ருதம் த்வயி ச ஸ்திதே|
ந்ருபஸுதா நிரகா3த்3 கி3ரிஜாலயாத்
ஸுருசிரம் ருசிரஞ்ஜித தி3ங்முகா2 || ( 79 – 5 )


அரசர் கூட்டம் ருக்மிணியைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும்போது, தாங்களும் தனிமையில் இருக்கும் பொழுது, அரசகுமாரி ருக்மிணி தன் சரீர காந்தியினால் திக்குகளை விளங்கச் செய்து கொண்டு பார்வதியின் ஆலயத்தில் இருந்து மிகவும் அழகாக வெளிக் கிளம்பினாள். ( 79 – 5 )

பு4வன மோஹன ரூப ருசா ததா3
விவசி’தாகி2ல ராஜ கத3ம்ப3யா|
த்வமபி தே3வ கடாக்ஷ விமோக்ஷணை:
ப்ரமத3யா மத3யாஞ்ச க்ருஷே மனாக் || ( 79 – 6 )


அப்போது உலகங்களை எல்லாம் மயக்கக் கூடிய சரீர காந்தி படைத்தவளும், அரசர் கூட்டத்தை பரவசம் ஆக்கியவளும், யௌவன வயதின் மதம் உடையவளும் ஆகிய ருக்மிணியின் கடைக்கண் பார்வைகளால் தாங்களும் பரவசம் அடைந்தீர்கள் அல்லவா? ( 79 – 6 )

க்வனு க3மிஷ்யஸி சந்த்3ரமுகீ2தி தாம்
ஸரஸமேத்ய கரேண ஹரன் க்ஷணாத் |
ஸமதி4ரோப்ய ரத2ம் த்வமாஹ்ருதா2
பு4வி ததோ விததோ நினதோ3 த்3விஷாம் || ( 79 – 7 )


“சந்திரன் போன்ற முகம் உடையவளே! எங்கு செல்கின்றாய்?” என்று சொல்லிக் கொண்டே மிகுந்த காதலுடன் அவள் அருகில் சென்றீர்கள். அவளைக் கையால் பிடித்துக் கொண்டு, ஒரு நொடியில் தேரில் ஏற்றிக் கொண்டு, அபஹரித்துச் சென்றீர்கள் அல்லவா? அப்போது பகைவர்களின் கூக்குரல் உலகெங்கும் பரவியது! ( 79 – 7 )

க்வனு க3த: பசு’பால இதி க்ருதா4
க்ருத ரணா யது3பி4ச்’ச ஜிதா ந்ருபா:|
ந து ப4வானுத3சால்யத தைரஹோ
பிசு’னகை: சு’னகைரிவ கேஸரி || ( 79 – 8)


“அந்த இடையன் எங்கே சென்று விட்டான்?” என்று சொல்லிக் கொண்டு கோபத்துடன் போருக்கு வந்த அரசர்களை யாதவர்கள் ஜெயித்தார்கள். நாய்களிடைய சிங்கம் கம்பீரமாக இருப்பது போன்றே அரசர்கள் இடையே தாங்கள் கம்பீரமாக இருந்தீர்கள் அல்லவா? ( 79 – 8 )
 
த3ச’கம் 79 ( 9 to 12)

ருக்மிணீ ஹரணம்

தத3னு ருக்மிண மாக3த மாஹவே
வத4 முபேக்ஷ்ய நிப34த்த்ய விரூபயன்|
ஹ்ருத மத3ம் பரிமுச்ய ப3லோக்திபி4:
புரமயா ரமயா ஸஹ காந்தயா|| ( 79 – 9 )

அதன் பிறகு போருக்கு வந்த ருக்மியைக் கொல்லாமல், அவனைக் கட்டி வைத்து, விரூபம் செய்து, மதம் அழிந்த அவனை பலராமன் சொற்படி அவிழ்த்து விட்டீர்கள். பிறகு லக்ஷ்மி தேவியின் அவதாரமான ருக்மிணியுடன் துவரகாபுரி சென்றீர்கள் அல்லவா? ( 79 – 9 )

நவ ஸமாகம லஜ்ஜித மானஸம்
ப்ரணய கௌதுக ஜ்ரும்பி4த மன்மதா2ம் |
அரமய கலு நாத2யதா2 ஸுக2ம்
ரஹஸி தம் ஹஸிதாம்சு’ லஸன்முகீ2ம் || ( 79 – 10)

ஈசா! புதுச் சேர்க்கையால் வெட்கம் கொண்ட மனதை உடையவளும்; அன்பினாலும், சந்தோஷத்தினாலும் அதிகாரித்த காமவிகாரத்தை உடையவளும்; மந்தஹாசத்தின் காந்தியால் விளங்குகின்ற முகத்தை உடையவளும்; ஆகிய ருக்மிணியை ஏகாந்தத்தில் சுகம் அனுபவிக்கச் செய்தீர்கள் அல்லவா? ( 79 – 10 )

விவித4 நர்மபி4 ரேவமஹர்நிச’ம்
ப்ரமத3 மாகலயன் புனரேகதா3|
ருஜுமதே: கில வக்ர கி3ரா ப4வான்
வரதனோ ரதனோத3தி லோலதாம் || ( 79 – 11 )


இவ்வாறு பல பிரிய வசனங்களால் இரவும் பகலும் மிகவும் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்த தாங்கள், ஒரு நாள் விபரீதமான கடுஞ் சொற்களால் நேர்மையான அறிவையுடைய அந்த அழகிய பெண்ணுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணினீர்கள் அல்லவா?( 79 – 11 )

தத3தி4க ரத2 லாலன கௌச’லை:
ப்ரணயினீ மதி4கம் ஸுக2யன்னிமாம்|
அயி முகுந்த3 ப4வச்சரிதானி ந:
ப்ரக3த3தாம் க3த3தாந்தி மபாகுரு || ( 79 – 12 )


பிறகு கடுஞ் சொற்களைக் காட்டிலும் அதிகமான லாலனம் செய்வதில் உள்ள சாமர்த்தியத்தினால் அன்பு கொண்ட அந்த ருக்மிணியை மீண்டும் சந்தோஷப் படுத்தினீர்கள். முக்தியைக் கொடுக்கும் கிருஷ்ணா! தங்கள் சரிதத்தை கானம் செய்யும் எங்களுடைய வியாதிகளால் உண்டாகும் சோர்வை அகற்ற வேண்டும். ( 79 – 12 )
 
VINAAYAKA PURAANAM 1

27d. கிருச்சத்மர்

வாரியணைத்த சிறுவனுடன் செல்கையில்
ஆவி பிரிந்தது பாதி வழி செல்கையில்.

“தெய்வ வாக்குப் பொய்க்கலாகுமா?’ என்று
செய்வதறியாமல் கதறி அழுதாள் கீர்த்தி.

ஞான திருஷ்டியில் நடந்ததைக் கண்டார்;
போனார் அவளிடம் கிருச்சதமர் விரைந்து.

“தாயே! கலங்காதே மகன் பிழைத்தெழத்
தத்தம் செய் வன்னிப் பத்திர பூஜாபலனை!”

வன்னிப் பத்திரத்தால் கணபதியை பூஜித்த
புண்ணிய பலனைத் தத்தம் செய்தவுடன்;

விஷக் கொடுமை நீங்கிய கிப்பிரப் பிரசாதன்
விழித்து எழுந்தான் நீண்ட உறக்கத்திலிருந்து!

தாயும், மகனும் வலம் வந்து வணங்கினர்
தந்தை போல் வந்து காத்த தயா பரனை.

“அறுகம்புல் இல்லையே என நான் மனம்
மறுகியபடி பூசித்தேன் வன்னி இலையால்!

விஷத்தை வெல்லும் மகிமை அதற்கு
விளைந்தது எப்படி கூறுங்கள் ஸ்வாமி!”

“வாயினால் வன்னி என்ற மாத்திரத்தில்,
வாக்கினால் விளைந்த பாவம் மறையும்!

மனதினால் வன்னியை நினைத்தவுடன்,
மனதினால் விளைந்த பாவம் மறையும்.

தரிசித்து வன்னியை வலம் வந்தால்,
தீரும் உடலால் விளைந்த பாவங்கள்.

வன்னியின் பெருமையை வாயால் கூற
என்ன முயன்றாலும் முடியாது தாயே!’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
VINAAYAKA PURAANAM 1

27d. Kruchchadamar

When Keerthi was half way to the ashram of Kruchchadamar, the young prince died. She was shattered that God’s words had proved false and her son was not saved by Kruchchadamar. She cried most piteously.

Kruchchadamar knew of these happenings by his gnaana drushti. He rushed out from his ashram to the place where Keerthi was crying over her son. He told her, “Do not cry oh mother! If you will give away your vanni-patra pooja-palan to your son he will come back to life.”

She gave away her vanni patra pooja palan to her son and the boy woke up as if from a long deep sleep. Keerthi was overwhelmed with joy. She and her son prostrated in front of the rushi who had saved the boy from death.

Keerhthi asked the sage Kruchchadamar,”Sire, once I could not get the fresh green grass for Vinayaka puja and used the leaves of the vanni tree instead. How do the vanni leaves possess so much power as to defeat deadly poison?”

Te sage replied,”It is very difficult to relate the greatness of vanni tree with mere words. The word vanni uttered will remove all the sins incurred through our speech. The thought about the vanni tree will remove all the sins incurred through our thoughts.

Going round the tree will remove all the sins incurred by our actions. Vanni is too great to be spoken about in mere words.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5c. மன்மதன்

“எதை வேண்டுமானாலும் ஆணையிடு இந்திரா!
இதை என்னால் செய்யவியலாது!” என்றான் மதன்.

“பிரமன், விஷ்ணு, சூரியன் போன்ற தேவர்
பிறர் அனைவரையும் வெல்ல வல்லவன்.

வசப் படமாட்டார்கள் நர, நாராயணர்கள்.
வசீகரிக்க முடியாது பராசக்தியின் பக்தரை!

எத்தனை முயன்றாலும் யத்தனம் பலிக்காது,
சித்த யோகிகள் ஆகிய நர, நாராயணர்களிடம்!”

“அரிய செயல்கள் புரிந்தால் அல்லவா – நல்ல
பெரிய புகழ் வந்து சேரும் உனக்கு மன்மதா?

முயன்றால் முடியாதது என்றும் உண்டோ?
இயலாதது என்று எதுவுமே இல்லை உலகில்!

வெய்யில் என தகிக்கும் தவாக்னி – நீ
செய்யும் செயலால் அணைந்துவிடும்!

வாழ்த்துகின்றேன் வெற்றி உனதே என!
வருவாய் வென்ற பின் எனைக் காண!”

எத்தனை மறுத்தாலும் ஏற்கவில்லை இந்திரன்,
அத்தனை வாதங்களும் விழலுக்கிறைத்த நீர்!

வேறு வழியின்றிச் சென்றான் பதரிகாசிரமம்,
ஊறு விளைவிப்பதற்குக் கடும் தவத்துக்கு!

காம பாணங்கள், வசந்த காலம், ரதி தேவி,
கரும்பு வில், குயில்கள், அப்சரஸ்களுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#5c. Manmathan

Manmathan refused to oblige to Indra’s request. “I can do anything but this O Indra! This is beyond my power! I can infatuate Brahma,

Vishnu and the Sun God but Nara Naaraayanan are Devi’s devotees. It is impossible to mislead or confuse them ” said Manmathan to Indra.

Indra told Manmathan, “You will earn greater fame by doing what you consider as an impossible thing. There is nothing that one can not accomplish by sincere efforts.

You can put off the heat of the Agni produced by the tapas done by the brothers Nara and Naaraayanan. I am sure you will emerge victorious. Please meet me again after accomplishing your mission!”
Manmathan tried his best to refuse but Indra would not let him do so.

Finally Manmathan had to give in. He left to disturb the penance of the two brothers Nara and Naaraayanan with his retinue which consisted of flower arrows, the Spring Season, his consort Rati Devi, his sugar cane bow, cuckoos and several Apsaras well accomplished in music and dance.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

7. மாயை நீங்குதல்.

மக்களோடு புறப்பட்டு விட்டாள் மாயை;
விக்கித்துப் போனார் காசியப முனிவர்;


தையல் மீது கொண்ட மையல் – உச்சி
வெய்யில் போல எரித்தது அவரை.

“அன்பன் என்னை நீங்குதல் முறையோ?”
பின் தொடர்ந்து அரற்றினார் முனிவர்!

“மன்னியுங்கள் முனிவரே என்னை நீங்கள்;
மக்கட்பேறை விழைந்து வந்தேன் உம்மிடம்;

சொந்தம் கொண்டாடி வாழ்வதற்கல்ல!
வந்த நோக்கம் நன்கு நிறைவேறியது.

என் பெயர் மாயை. நானும் ஒரு மாயை!”
கண் முன்னேயே மறைந்தன அனைத்தும்.

மகனின் மனக் கலக்கத்தை அறிந்த – நான்
முகன் வந்தான் அவனைத் தேற்றுவதற்கு.

“அருந்தவம் புரிவதை விட்டு விட்டு நீ
வருந்தி நிற்பது ஏன் கூறு என்னிடம்!”

மாயையின் திடீர் வருகை, நோக்கம்;
தேவை முடிந்தபின் உதறிச் சென்றது;

மறைக்காமல் கூறினான் மறைமுனிவன்
மறைகள் ஓதும் தந்தை நான்முகனிடம்.

“மறைகள் கற்ற முனிவன் நீயும்,
அறிவற்றவன் போலப் புலம்பலமா?

கள், காமம் என உண்டு இரண்டு எதிரிகள்.
கள்ளினும் கொடியது ஐயமின்றுக் காமமே!

உண்டவர் மனத்தைத்தான் மயக்கும் கள்.
கண்டவர் மனத்தையே மயக்கும் காமம்.

ஆழ்த்தும் இம்மையில் துன்பக் கடலில்!
வீழ்த்தும் மறுமையில் பிறவிக் கடலில்!

இழிவு பட்டாய் வஞ்சகியோடு இணைந்து
இழிவு தீரக் கடும் தவம் புரிவாய் மகனே!”

மனம் தெளிந்த முனிவன் முன்போல்
கனத்த தவத்தைச் செய்யலுற்றான்.

வேண்டியதைத் தரும் தவத்தை மாயை
ஆண்டவனை நோக்கிச் செய்யலுற்றாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (#7). MAAYAI DESERTS THE SAGE.

Maayai got ready to go off with her children. The sage was shocked by this . His lust for Maayai scorched him like the midday Sun. “You can’t desert me like this!” He lamented following her closely.

“I came to get offspring from you and not to live with you. Please pardon me! I must go with my children. My name is Maayai. I am also a maayai.”

Along with her all her creations, the mandapams, ponds and gardens disappeared.The sage was steeped in sorrow.

Brahma, the father of the sage, saw his son wallowing in self pity and sorrow. He consoled him and demanded to know what had upset him thus?

The sage told everything, Maayai’s arrival, the night he had spent with her and the way she had deserted him the very next morning”

Brahma told him, “You are a learned sage but You have behaved like a fool. You have degraded yourself by spending the night with her producing offspring. It is time to go back to your penance for the shameful act you have just performed.

There are two things which ruin a man – the wine and the woman. The wine disturbs the mind of one who drinks it. The women disturbs the minds of even the onlookers. The women make you miserable and bind you in samsaaram.”

The sage got consoled and returned to do penance. At the same time Maayai was also doing the yagna which would give her whatever she sought.
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 80 ( 1 to 4)

ஸ்யமந்தக உபாக்யானம்

ஸத்ராஜிதஸ் த்வமத2 லுப்த3வத3ர்க லப்3த4ம்
தி3வ்யம் ஸ்யமன்தக மணிம் ப4க3வன்னயாசீ:|
தத் காரணம் ப3ஹு வித4ம் மம பா4தி நூனம்
தஸ்யத்மஜாம் த்வயி ரதாம் ச2லதோ விவோடு4ம் || ( 80 – 1)

சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த பகவானே! சத்ராஜித் என்ற யாதவனுக்கு ஸ்யமந்தகம் என்ற அபூர்வ ரத்தினம் சூரிய பகவானிடமிருந்து கிடைத்தது. தெய்வத் தன்மை வாய்ந்த அந்த ரத்தினத்தைத் தங்கள் அந்நியன் பொருள் மேல் ஆசை கொண்டவனைப் போல யாசித்தீர்கள் அல்லவா? எனக்கு அதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது. தங்கள் மேல் ஆசைவைந்த அவன் பெண் சத்யபாமாவைத் திருமணம் செய்வதற்கே என்று. ( 80 – 1)

அத3த்தம் தம் துப்4யம் மணிவர மனேலாப்ய மனஸா
ப்ரஸேனஸ் தத்3 ப்4ராதா க3ல பு4வி வஹன் ப்ராப ம்ருக3யாம் |
அஹன்னேனம் ஸிம்ஹோ மணி மஹஸி மாம்ஸ ப்4ரம வசா’த்
கபீந்த்3ரஸ்தம் ஹத்வா மணி மபி ச பா3லாய த3தி3வன் || ( 80 – 2)


அல்ப புத்தி படைத்த சத்ராஜித் அந்த ரத்தினத்தைத் தங்களுக்குத் தரவில்லை. அதை அவன் தம்பி பிரசேனன் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். ரத்தினத்தின் காந்தியால் அதை மாமிசம் என்று கருதிய ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டது. ஜாம்பவான் அந்த சிங்கத்தைக் கொன்று விட்டு அந்த ரத்தினத்தைத் தன் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டான். ( 80 – 2 )

ச’ச’ம்ஸு ஸத்ராஜித் கி3ர மனுஜனாஸ்த்வாம் மணிஹரம்
ஜனானாம் பீயுஷம் ப4வதி கு3ணினாம் தோ3ஷ கணிகா|
ததஸ் ஸர்வக்ஞோSபி ஸ்வஜன ஸஹிதோ மார்க3ண பர:
ப்ரஸேனம் தம் த்3ருஷ்ட்வா ஹரிமபி க3தோபூ4: கபி கு3ஹாம்||
( 80 – 3 )


சத்ராஜித்தின் சொல்லை நம்பியது மக்கள் கூட்டம். தாங்களே ரத்தினத்தைத் திருடியதாகப் பேசிக் கொண்டார்கள். நற்குணம் படைத்தவர்களின் சிறு தவறு கூட வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவுல் ஆகிறது. அதனால் தாங்கள் தங்கள் பந்துக்களுடன் சென்று ரத்தினத்தைத் தேடினீர்கள். முதலில் பிரசேனனையும் சிங்கதையும் கண்டு பின்னர் ஜாம்பவான் குஹையை அடைந்தீர்கள் அல்லவா?
( 80 – 3 )

ப4வந்த மவி தர்கயன்னதிவயா: ஸ்வயம் ஜாம்ப3வான்
முகுந்த3 ச’ரணம் ஹி மாம் க இஹா ரோத்3து4 மித்யாலபன்|
விபோ4 ரகு4பதே ஹரே ஜயஜயேத்யலம் முஷ்டிபி
ச்’சிரம் ஸ்தவ ஸமர்ச்சனம் வ்யதி4த ப4க்த சூடா3மணி:|| ( 80 – 4 )

வயது முதிர்ந்தவனும், சிறந்த பக்தனும் ஆன ஜாம்பவான்; தங்கள் இன்னார் என்று அறியாமலேயே, “விஷ்ணு பக்தன் என்னைத் தடை செய்ய யார் உண்டு?” என்று கேட்டான். “பிரபுவே! ராமா! ஸ்ரீ ஹரி! தாங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும்!” என்று அடிக்கடி உரக்கக் கூறிக் கொண்டு, த்வந்த யுத்தத்தில் இடது வலது சாரியாகப் பிரதக்ஷிணம் செய்து கொண்டு கை முஷ்டிகளால் நன்கு பூஜை செய்தான் அல்லவா? ( 80 – 4 )
 
த3ச’கம் 80 ( 5 to 8 )

ஸ்யமந்தக உபாக்யானம்

பு3த்3த்4வாத தேன த3த்தாம் நவ ரமணீம்
வர மணீம் ச பரிக்ருஹ்ணன்|
அனுக்3ருஹணன்னமு மாகா:
ஸபதி3 ச ஸத்ராஜிதே மணிம் ப்ராதா3:|| ( 80 – 5)


பிறகு தங்களை இன்னார் என்று அறிந்து கொண்டு தன் பெண் ரத்தினம் ஜாம்பவதியையும், ஸ்யமந்தக ரத்தினத்தையும் தங்களுக்குச் சமர்பித்தான் அல்லவா ? அவனை அனுக்ரகம் செய்து விட்டு வந்து உடனேயே ச்யமந்தக மணியை சத்ராஜித்திடம் திரும்பத் தந்தீர்கள் அல்லவா?
( 80 – 5 )

தத3னு ஸ கலு வ்ரீடா3லோலோ விலோசனாம்
து3ஹிதர மஹோ தீ4மான் பா4மாம் கி3ரைவ பரார்பிதாம்|
அதி3த மணினா துப்4யம் லப்4யம் ஸமேத்ய ப4வானபி
ப்ரமுதி3த மனாஸ் தஸ்யை வாதா3ன் மணிம் க3ஹனாச’ய:||
( 80 – 6 )


அதன் பின்னர் வெட்கத்தால் மனம் இளகிய சத்ராஜித் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்தான். வாக்கினால் மட்டும் சதாதன்வா என்ற வேறு ஒருவனுக்கு அளிக்கப் பட்டிருந்த சலிக்கின்ற கண்களை உடைய தன் பெண் சத்யபாமையை ரத்தினதுடன் தங்களுக்கு அளித்தான். தாங்களும் அந்த ரத்தினத்திடமிருந்து கிடைக்கும் சுவர்ணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மணியை சத்ராஜித்திடமே திருப்பிக் கொடுத்து விட்டீர்கள் அல்லவா? ( 80 – 6 )

வ்ரீடா3குலம் ரமயதி த்வயி ஸத்யபா4மாம்
கௌந்தேய தா3ஹ கத2யாத2 குரூன் ப்ரயாதே|
ஹீ காந்தி3நேய க்ருத வர்ம கி3ராநிபாத்ய
ஸத்ராஜிதம் ச’ததனுர் மணி மாஜஹார || ( 80 – 7 )


வெட்கம் அடைந்த சத்யபாமையுடன் தாங்கள் ரமித்து இருக்கும்போது குந்தியின் பிள்ளைகள் தீயில் வெந்தனர் என்ற செய்தி கேட்டு உடனேயே குருதேசத்துக்குச் சென்றீர்கள். அப்போது அக்ரூரன், கிருதவர்மன் ஆகியோரின் பேச்சைக் கேட்டு சததன்வா சத்ராஜித்தைக் கொன்றுவிட்டு ரத்தினத்தை அபகரித்தான். ( 80 – 7 )

சோ’காத் குரூனுபாக3தா மவலோக்ய காந்தாம்
ஹத்வா த்3ருதம் ச’தத3னும் ஸமஹர்ஷயஸ்தாம்|
ரத்னே ஸச’ங்க இவ மைதி2ல கே3ஹமேத்ய
ராமோ க3தா3ம் ஸம சி’சி’க்ஷித தா4ர்த்தராஷ்ட்ரம்|| (80 – 8 )


தகப்பன் இறந்த வருத்தத்தால் குருதேசத்திற்கு வந்த மனைவியைக் கண்டு விரைந்து சததன்வாவைக் கொன்று அவளை சந்தோஷப்படுத்தினீர்கள் அல்லவா? பலராமன் ரத்தினத்தின் விஷயத்தில் சந்தேகம் கொண்டு மிதிலை அரசன் அரண்மனைக்குச் சென்று துரியோதனனுக்கு கதாயுதப் பயிற்சி அளித்தார். ( 80 – 8)
 
த3ச’கம் 80 ( 9 to 11)

ஸ்யமந்தக உபாக்யானம்

அக்ரூர ஏஷ ப4க3வன் ப4வதி3ச்ச2யைவ
ஸத்ராஜித குசரிதஸ்ய யுயோஜ ஹிம்ஸாம்|
அக்ரூரதோ மணிமனா ஹ்ருதவான் புனஸ்த்வம்
தஸ்யைவ பூ4தி முபதா4து மிதி ப்3ருவந்தி || (80 – 9)

அக்ரூரன் தங்கள் விருப்பத்தாலேயே துர்நடத்தை உடைய சத்ராஜித்தின் மரணத்தை நிகழச் செய்தார். தாங்களும் அக்ரூரனுக்கு அளிப்பதற்காகவே சத்ராஜிதனிடம் இருந்து ரத்தினத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். ( 80 – 9 )

ப4க்தாஸ் த்வயி ஸ்திரதர: ஸ ஹி கா3ந்திநேய :
தஸ்யைவ காபத2 மதி:கத2 மீச’ ஜாதா |
விஞ்ஞானவான் ப்ரச’ம வானஹ மித்யு தீ3ர்ணம்
க3ர்வம் த்4ருவம் ச’மயிதும் ப4வதா க்ருதைவ || ( 80 – 10)


ஹே ஈச! அந்த அக்ரூரன் தன்ளிடம் மிகவும் ஸ்திரமான பக்தி உடையவன் அல்லவா? அப்படிப்பட்டவனுக்கே புத்தி ஏன் தீய வழியில் சென்றது? “நான் அறிவுடையவன். நான் மன சாந்தி உடையவன்” என்னும் அவனுடைய கர்வத்தை அடக்கத் தங்களால் செய்யப்பட்டதே அது. ( 80 – 10 )

யாதம் ப4யேன க்ருத வர்மயுதம் புனஸ்தம்
ஆஹூய தத்3 விநிஹிதம் ச மணி ப்ரகாச்’ய |
தத்ரைவ ஸுவ்ரதத4ரே விநிதா4ய துஷ்யன்
பா4மா குசாந்தர ச’ய பவ
னேச’ பாயா: || ( 80 – 11)

ஹே! குருவாயூரப்பா! பயத்தால் கிருதவர்மனுடன் ஓடிச் சென்ற அக்ரூரனை மறுபடியும் வரவழைத்து சததன்வா அவனுக்கு ரத்தினத்தைக் கொடுத்ததாக பிரகடனப் படுத்தினீர்கள். விரத, பூஜைகளை செய்து வந்த அக்ரூரனிடத்திலேயே அதைக் கொடுத்துவிட்டீர்கள். சந்தோஷமாக சத்யபாமையின் குசங்களின் இடையே பள்ளி கொண்டிருந்த தாங்களே காப்பாற்ற வேண்டும. ( 80 – 11 )
 
த3ச’கம் 81 ( 1 to 3)

பாரிஜாத ஹரணம்

ஸ்நிக்3தா4ம் முக்3தா4ம் ஸததமபி
தாம் லாலயன் ஸத்யபா4மாம்
யாதோ பூய ;சஹ க2லு தயா
யாக்ஸேனீ விவாஹம் |
பார்த்த2 ப்ரீதியை புனரபி மனாகா3
ஸ்திதோ ஹஸ்தி புர்யாம்
ச’க்ர ப்ரஸ்த2ம் புரமபி விபோ4
ஸம்விதா4யா க3தோபூ:|| (81 – 1)


மிகவும் பிரியம் உள்ளவளும், அழகுள்ளவளும் ஆகிய சத்தியபாமையை எப்போதும் இன்புறச் செய்து கொண்டு இருந்தீர்கள். பிறகு அவளுனடனேயே திரௌபதி விவாஹத்திற்குச் சென்றீர்கள். பாண்டவர்கள் சந்தோஷத்திற்காக சில நாள் ஹஸ்த்தினாபுரத்தில் வசித்தீர்கள். இந்திரப் பிரஸ்தம் என்ற பட்டணத்தையும் உருவாக்கினீர்கள் அல்லவா? ( 81 – 1 )

ப4த்3ராம் ப4த்3ராம் ப4வத3வ ரஜாம்
கௌர வேணார்த்2ய மானாம்
த்வத் வாசா தாமஹ்ருத குஹ
நாமஸ்கரி ச’க்ர ஸூனு:|
தத்ர க்ருத்3த4ம் ப3ல மனுநயன்
ப்ரத்ய கா3ஸ்தேன ஸார்த்த4ம்
ச’க்ர ப்ரஸ்த2ம் ப்ரிய ஸக2 முதே3
ஸத்யபா4மா ஸஹாய:|| ( 81 – 2 )

மிகுந்த அழகியாகிய தங்கள் தங்கை சுபத்திரையை துரியோதனன் விரும்பினான். ஆனால் உங்கள் திருவாக்கின்படி கபட சந்நியாசி ஆகிய அர்ஜுனனன் அவளை அபகரித்தான். இந்த விஷயத்தில் மிகுந்த கோபம் கொண்டார் பலராமன். அவரை சமாதானப்படுத்தி சத்யபாமையுடன் இந்திரப்ரஸ்தம்சென்றீர்கள் அல்லவா?
( 81 – 2 )

தத்ர க்ரீட3ன்னபி ச யமுனாகூல
த்3ருஷ்டாம் க்3ருஹீத்வா
தாம் காலிந்தீம் நக3ர மக3ம:
கா2ண்ட3வ ப்ரீணி தாக்3னி:|
ப்3ராத்ருத்ராஸ்தாம் ப்ரணய விவசா’ம்
தேவ பைத்ருஷ்வ ஸேயீம்
ராக்ஞாம் மத்4யே ஸப3தி ஜஹிஷே
மித்ரவிந்தா3 மவந்தீம் || ( 81 – 3)


அப்போது இந்திரப்பிரஸ்தத்தில் பொழுதுபோக்கிக் கொண்டு இருந்த தாங்கள் காண்டவ வனத்தைக் கெடுத்து அக்னியைத் திருப்தி செய்தீர்கள். யமுனைக் கரையில் காணப்பட்ட காலிந்தீ என்பவளைப் பெற்றுக்கொண்டீர்கள். துவாரகை திரும்பினீர்கள். சகோதரர்களிடம் அஞ்சிய, தங்கள் மேல் உள்ள காதலால் தன் வசம் இழந்த, அத்தை மகளாகிய, அவந்தி தேசத்து அரசன் மகளாகிய மித்ரவிந்தை என்பவளை, அரசர்களுக்கு மத்தியில் விரைந்து அபகரித்தீர்கள் அல்லவா? ( 81 – 3 )
 
த3ச’கம் 81 ( 4 to 7)

பாரிஜாத ஹரணம்

ஸத்யாம் க3த்வா புனருத3வஹோ
நக்3ன ஜின்னந்தனாம் தாம்
ப3த்3த4வா ஸப்தாபி ச வ்ருஷ வரான்
ஸப்த மூர்த்திர் நிமேஷாத்|
பத்ராம் நாம ப்ரத3து3 ரத2 தே
தே3வ ஸந்தர்த3நாத்3யாஸ்
தத் ஸோத3ர்யா வரத3 பவதஸ்
ஸாபி பைத்ருஷ்வ ஸேயீ || ( 81 – 4)


ஒருநாள் அயோத்திகுச் சென்று ஏழு உருவங்களை எடுத்துக் கொண்டீர். ஏழு சிறந்த காளைகளை ஒரு நொடியில் கட்டினீர்கள். நக்னஜித் என்ற அரசன் மகளாகிய சத்தியை என்பவளை விவாஹம் செய்தீர்கள் அல்லவா? பிறகு சந்தர்த்தனன் முதலியவர்கள் பத்ரை என்னும் அவர்களின் சகோதரியைத் தங்களுக்குத் தந்தார்கள். அவளும் தங்கள் அத்தை மகளே. ( 81 – 4 )

பார்தா2த்2யை ரப்ய க்ருத லவனம்
தோய மாத்ராபி4 லக்ஷ்யம்
லக்ஷம் சி2த்வா ச’பர ம்வ்ருதா2
லக்ஷ்மணாம் மத்3ர கன்யாம்|
அஷ்டாவேவம் தவ ஸமப4வன்
வல்லபா4ஸ் தத்ர மத்4யே
சு’ச்’ரோத2 த்வம் ஸுரபதி கி3ரா
பௌ4ம து3ச்’சேஷ்டிதான் || ( 81 – 5)


அர்ஜுனன் முதலானவர்களால் கூட அறுக்கப் படாததும், நீரில் மட்டுமே பார்க்கக்கூடியதும், மீன் உருவம் கொண்ட இலக்கத்தை அறுத்து மத்ர தேசத்து அரசன் பெண் லக்ஷ்மணை என்பவளை வரித்தீர்கள். இப்படித் தங்களுக்கு எட்டுப் பத்தினிகள் அமைந்தார்கள். இதற்கிடையில், தாங்கள் நரகாசுரனுடைய தீச்செயல்களை தேவேந்திரன் கூறக் கேட்டீர்கள் அல்லவா? ( 81 – 5 )

ஸ்ம்ருத்யாம் பக்ஷி ப்ரவர
மதி4 ரூட4ஸ்த்வ மக3மோ
வஹன்னங்கே பாமா முபவன
மிவாராதி ப4வனம் |
விபி4ந்தன் து3ர்கா3ணி த்ருடித
ப்ருதனா சோ’ணி ஹதரசை:
புரம் தாவத் பராக்3 ஜ்யோதிஷ
மகுருதா2ச்’ சோ’ணித புரம் || (81 – 6 )


தாங்கள் நினைத்த மாத்திரத்தில் வந்த பக்ஷிராஜன் கருடன் முதுகின் மேல் ஏறிக்கொண்டு மடியில் சத்யபாமையை வைத்துக் கொண்டு நந்த வனத்துக்குச் செல்பவர் போல சத்ருவின் இருப்பிடத்துக்குச் சென்றீர்கள். சென்ற உடனேயே கோட்டையை உடைத்தீர். கொல்லப்பட்ட சேனைகளின் ரத்தநீரால் பிராக்ஜோதிஷபுரம் என்ற பட்டணத்தைச் சோணிதபுரமாக மாற்றிவிட்டீர்கள் அல்லவா? ( 81 – 6 )

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி4
வன மத்4யா து3த3பதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரத3லித
சி’ரா மங்க்ஷு ப4வதா |
சதுர் த3ந்தைர் த3ந்தாவல பதிபி4
ரிந்தா4ன ஸமரம்
ரதா2ங்கே3ன ந சி2த்வா நரக
மகரோஸ் தீர்ண நரகம் || ( 81 – 7 )


ஐந்து தலைகளை உடைய முரன் என்பவன் சமுத்திர நீரின் நடுவில் இருந்து தங்களை எதிர்த்து வந்தான். விரைந்து சக்கர ஆயுதத்தால் அவன் தலைகளை அறுத்துத் தள்ளினீர்கள். நான்கு கொம்புகள் உடைய சிறந்த யானைகளுடன் மேலும் மேலும் விருத்தி அடைந்த போர் புரியும் நரகாசுரனை சக்கர ஆயுதத்தால் வெட்டி, நரகத்தைத் தாண்டி மோக்ஷம் அடைந்தவனாகச் செய்தீர்கள் அல்லவா? ( 86 – 7 )
 
த3ச’கம் 81 ( 8 to 10 )

பாரிஜாத ஹரணம்

ஸ்துதோ பூ4ம்யா ராஜ்யம் ஸபதி3
ப4க3த3த்தேSஸ்ய தனயே
கஜஞ்சைகம் த3த்வா ப்ரஜிக3யித2
நாகா3ன் நிஜ புரம் |
க2லேனா பத்3தா4னாம் ஸ்வக3த
மனஸாம் ஷோட3ச’ புன:
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணா மபி ச
த4னராசீ’ம் ச விபுலம் || ( 81 – 8)


பூமி தேவியால் துதிக்கப்பட்டு, உடனே நரகாசுரானின் மகனான பகதத்தனிடம் ராஜ்ஜியத்தையும், ஒரே ஒரு யானையையும் ஒப்படைத்தீர். மற்ற யானைகள், நரகாசுரனால் பந்திக்கப்பட்டுத் தங்களிடத்தில் மனம் லயித்திருந்த பதினாறாயிரம் பெண்களையும், செல்வக் குவியலையும் தங்கள் நகருக்கு அனுப்பினீர்கள் அல்லவா? (81 – 8 )

பௌ4மாபாஹ்ருத குண்ட3லம் தத3தி3தேர்
தா3தும் ப்ரயதோ தி3வம்
ச’க்ராத்3யைர் மஹித ஸம்மதயியா
த்3யு ஸ்த்ரஷு த3த்தா ஹ்ரியா |
ஹ்ருத்வா கல்பதரூம் ருஷாSபி4 பதிதம்
ஜித்வேந்த்3ர மப்4யாக3ம:
தத்து ஸ்ரீமத3 தோ3ஷ ஈத்3ருச’ இதி
வ்யாக்2யாது மேவா க்ருதா2:|| ( 81 – 9 )


தேவமாதர் நாணும் அழகுடைய சத்யபாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, சுவர்க்கலோகம் சென்றீர்கள். இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்! கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்துத் துவாரகைக்குத் திரும்பினீர். ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே இவ்வாறு செய்தீர்கள் அல்லவா? ( 81 – 9)

கல்ப த்3ருமம் ஸத்யபா4மா ப4வனே பு4வி
ஸ்ருஜன் த்3வ்யஷ்ட ஸாஹஸ்ர யோஷா:
ஸ்வீ க்ருத்ய ப்ரத்யகா3ரம் விஹித ப3ஹு வபு
லீலயன் கே2லி பே4தை3:|
ஆச்சர்யான் நாரத3 லோகித விவித4
க3திஸ் தத்ர தத்ராபி கே3ஹே
பூ4ப: ஸர்வாஸு குர்வன் த3ச’ த3ச’ தனயான்
பாஹி வாதாலயேசா’|| ( 81 – 10 )


கற்பக விருக்ஷத்தை சத்யபாமையின் வீட்டில் கொல்லைப் புறத்தில் நடச் செய்தீர்கள். பதினாறாயிரம் சரீரங்களை எடுத்துக் கொண்டீர்கள். பதினாராயிரம் ஸ்திரீக்களை விவாகம் செய்து கொண்டு, பல கிரீடைகள் புரிந்து கொண்டு, எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்து பிள்ளைகளை உண்டாக்கி, நாரதரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய, தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 61 – 10 )
 
VINAAYAKA PURAANAM 1

27e. வன்னி, மந்தாரம்

ஒரு நல்ல முனிவர் நந்தி கோத்திரர்;
ஔரவர் நந்திகோத்திரரின் புதல்வர்.

சுமேதை ஔரவரின் அன்பு மனைவி,
சுமேதை ஈன்றாள் சமியை மகளாக.

மணப் பருவம் எய்தினாள் சமி வளர்ந்து!
மந்தாரன் சௌனகமுனிவரின் ஒரு சீடன்.

மகளுக்கு ஏற்ற மணாளன் அவன் என்று
மகளை மந்தாரனுக்கு மணம் முடித்தனர்.

தாய் தந்தையரைக் காணச் செல்லுகையில்
தம்பதிகள் கண்டனர் தும்பிக்கை முனியை.

வேழமுகனின் உருவம் பெற்ற அவரை
ஏளனம் செய்து சிரித்தனர் இருவரும்.

புருசுண்டிக்குக் கோபம் பொங்கியது;
புருவம் நெற்றி உச்சிக்குச் சென்றது!

” என்னைக் கண்டு நகைத்த நீங்கள்
ஒன்றுக்கும் உதவாத மரமாகக் கடவீர்.”

சாபம் பிறந்தது கோபம் பிறந்ததால்.
தாபம் பிறந்தது சாபம் பிறந்ததால்.

மன்னிக்கும்படி வேண்டினர் முனிவரிடம்
கண்ணீர் மல்கக் கணவன் மனைவியர்.

முனிவருக்குத் தோன்றியது கனிவு.
கனிவிலிருந்து தோன்றியது கருணை.

“துதிக்கையைக் கண்டு நகைத்தீர்கள்!
துதிக்கையனால் வளரும் சிறப்புக்கள்!

நிழலில் அமர்ந்து வெளிப்படுத்துவான்
வேழமுகன் உங்கள் பெருமைகளை.

மரவுருவம் மாறாமலேயே செல்வீர்
கரிமுக நாதனிடம் காலம் முடிந்தபின்!”

மாறிவிட்டாள் வன்னி மரமாக சமி;
மாறினான் மந்தார மரமாக மந்தாரன்.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top