A poem a day to keep all agonies away!

2 (# 5 D ). THE SEARCH FOR A BRIDE.

Kuchchgar searched for a suitable bride everywhere. He questioned the sages and others he met on the road and found out from them that Sage Usaththiyar had a daughter who might fit in the description given by his son.

He visited the father of the girl. Both of them decided to get their children get duly married, at the earliest auspicious day.

Viruththai- the bide to be – went to bathe in a river with her friends. A mad rogue elephant chased them. They ran about and got separated. Viruththai fell into a well covered by thorns and bushes and gave up her life.

The friends were unable to trace her and told her father the events that took place. He went in search of his daughter and found her dead in the well. He broke down and shed bitter tears. His wife Mangalai could not be consoled at all!

Kuchchgar consoled them. He said, ” Please preserve the body of your daughter in oil. I will bring her back to life with the power of my penance”

He went to the pond and started his severe penance. The rogue elephant returned to the spot, lifted up the sage Kuchchagr onto its shoulders and started walking very fast.

The sage pondered at the significance of all these happenings using his wisdom.
 
2014 in review

Dec 31

Posted by Visalakshi Ramani

The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog.



Here’s an excerpt:
A San Francisco cable car holds 60 people. This blog was viewed about 560 times in 2014. If it were a cable car, it would take about 9 trips to carry that many people.
 
Vinaayaka Puraanam 1.

26 a. வாமனர்

அதிதி, திதி காசிப முனிவரின் மனைவியர்;
அதிதி விழைந்தாள் விஷ்ணுவை மகனாக!

திதி விழைந்தாள் இரு வலிய மகன்களை;
திதி தவித்தாள் விளைந்த விரக தாபத்தால்!

கணவனை அணுகினாள் மகன்களை வேண்டி;
கணவன் மறுத்தான், “அந்திநேரம் உகந்ததல்ல!”

என்ன சொல்லியும் கேட்க வில்லை திதி – எனவே
எண்ணத்தை நிறைவேற்றினார் காசிப முனிவர்.

அந்தி நேரத்தில் கணவனைக் கூடியதால்,
அரக்க மகன்கள் வந்து பிறந்தனர் இருவர்.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபுவைக் கண்டு
அரண்டு நின்றன அனைத்து உலகங்களும்.

கடும் தவம் செய்தான் ஹிரண்ய கசிபு;
அரும் வரங்கள் பெற்றான் தவப்பயனாக!

அஸ்திரம், ஆயுதம், மனிதன், மிருகம், பூமி,
ஆகாயம், இரவு, பகல், உள்ளே, வெளியே,

இறவா வரம் பெற்றான் இறைவனிடம்;
ரத்தம் சிந்தினால் உற்பத்தி ஆவர் பலர்.

வரத்தால் வளர்ந்தது வானளவாகச் செருக்கு!
மரணத்தை வென்றதாக மனப்பால் குடித்தான்!

தன்னைத் தவிர தெய்வம் இல்லையெனத்
துன்புறுத்துவதையே தொழில் ஆக்கினான்.

தெய்வத்தைத் தொழுபவரை மாய்த்தான்;
தயை என்பதுவே இல்லாதவான் ஆனான்!

விதிகள் எல்லாவற்றையும் உடைத்து
வதைப்பது எப்படி ஹிரண்ய கசிபுவை?

வாழ்க வளமுடன், விசாலக்ஷி ரமணி.
 
Vinaayaka Puraanam 1.

26 a. Vaamana



Adithi and Dithi were the two wives of Kasyapa rushi. Adithi wished to have Vishnu as her son. Dithi wanted two mighty sons. The very thought made her crave for union with her husband immediately.

It was the sandhi time in the evening. It was auspicious to Siva and his gana and unsuitable for procreation. But Dithi would not listen to any reason. She was adamant and sage Kasyapa fulfilled his duty as a husband.

Dithi gave birth to two powerful asuras Hiranyaakshan and Hiranyakasibu. The three worlds trembled at their very sight. Hiranyaakshan was later killed by Vishnu in Varaha avatar.

Hiranyakasibu wanted to conquer death in every form. He did severe penance and got rare boons. He could not be killed by any asthram, any weapon, any man, any animal, during the day or the night, in the sky or on the earth, inside the house or outside it. Every drop of his blood shed would produce one more asuran similar to him.

He thought that this boon was fool proof and nothing and no one could kill him. So he became very arrogant and imagined himself to be superior to God. He denied God. He proclaimed himself to be the god. He punished severely everyone who would not acce
 
Devi Bhaagavatam - skanda 4

4#3a. சக்களத்திகள் பொறாமை


ஒருமுறை அபகரித்தார் காசியப முனிவர்
வருணனின் பசுவை யாகம் செய்வதற்கு.

வருத்தத்துடன் வந்து கேட்டான் வருணன்,
“திருப்பித் தாரும் முனிவரே என் பசுவை!

“எடுத்த பொருளைத் திருப்புவதாக இருந்தால்
எடுத்திருக்கவே மாட்டேனே!” என்றார் முனிவர்.

முறையிட்டான் குறையினை பிரமனிடம் வருணன்,
“பிறப்பாய் யாதவனாக!” எனச் சபித்தான் முனிவரை.

தணியவில்லை வருணனின் சினம் இன்னமும்,
துணைவியரைச் சபித்தான் புத்திரரைப் பிரிந்திட.

பிரமனும் கடிந்து கொண்டான் மகன் காசியபரை;
“பிறர் பொருளை அபகரிப்பது தவறு அல்லவா?

பூவுலகில் மனைவியரோடு சென்று பிறந்து
ஆவினங்கள் மேய்த்து வருவாய்!” என்றார்.

அதிதியிடம் கூறினார் பிரமன் அடுத்ததாக,
“கதி கலங்குவாய் குழந்தைகளைப் பிரிந்து!”

யாதவன் வாசுதேவனாகக் காசியபர் பிறக்க
மாதவன் பிறந்தான் எட்டாவது மகனாக.

அதிதி பிறந்தாள் மனைவி தேவகியாக
அதிதி பிரிந்தாள் பிறந்த குழந்தைகளை”

ஜனமேஜயன் கேட்டான் வியாசரிடம்,
“மனமே கலங்கும் கொடிய சாபத்தால்.

இந்திரனைப் பெற்ற அன்னை அதிதிக்கு
இந்தச் சாபம் வரக் காரணம் என்ன?”

வாழ்க வளமுடன்,விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#3a. Jealousy between wives

Once Sage Kashyap stole Varuna’s cow for performing a Yaagaa. Varuna requested the sage to return his cow to him.”If I plan to return it to you, I would not have stolen it in the first place!” The sage mocked at him.

Varuna complained to Brahma. Since his anger was unabated, Varuna cursed the sage Kashyap to born on earth as a Yaadava. He cursed sage’s wives to get separated from their new born babies.

Brahma also took to task Kashyap for coveting for the cow which did not belong to him. Brahma cursed Kashyap to be born on earth along with his wives and tend the cows and calves. He cursed Adidi that she would suffer the pangs of separation from her new born babies.

Sage Kashyap was born as Vasudeva and Aditi was born as Devaki. Vishnu was born as their eighth son Krishna. Aditi reborn as Devaki got separated from all her eight children as soon as they were born.

King Janamejayan interrupted now and said, “My heart shatters to hear of such a cruel curse. Why was Adidi given such a cruel curse?”
 
[h=1]த3ச’கம் 62 ( 1 to 5)[/h] கோ3வர்த்3த4ன ப3லி


கதா3சித்3 கோ3பாலான் விஹித மக2ஸம்பா4ர விப4வான்
நிரீக்ஷ்ய த்வம் சௌரே மக3வமத3ம் உத்3த்4வம்ஸிது மனா:|
விஜானன்னப்யேதான் வினய ம்ருது3 நந்தாதி3 பசு’பான்
அப்ருச்ச: கோ வாSயம் ஜனக ப4வதா முத்3யம இதி || ( 62 – 1 )



ஹே கிருஷ்ணா! ஒருநாள் தங்கள் கோபாலர்கள் யாகத்திற்கு வேண்டிய பண்டங்களை சேகரிப்பதைக் கண்டு; இந்திரனின் மமதையை ஒழிக்க எண்ணி இருந்தபோதிலும் ,”அப்பா! இந்த முயற்சி எதற்காக?” என்று மிகுந்த வணக்கத்துடன் நந்தன் முதலிய கோபர்களைக் கேட்டீர்கள் அல்லவா? ( 62 – 1)


ப3பா4ஷே நந்த3ஸ்த்வாம் ஸுத நானு விதேயோ மக4வதோ
மகோ2 வர்ஷே வர்ஷே ஸுக2யதி ஸ வர்ஷேன ப்ருதி2வீம் |
ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகி2ல முப ஜீவ்யம் மஹிதலே
விசேஷாத3ஸ்மாகம் த்ருண ஸலில ஜீவா ஹி பச’வ:||( 62 – 2 )



“பிள்ளாய்! ஒவ்வொரு வருஷமும் நாம் இந்திர யாகம் செய்தே தீரவேண்டும். இந்திரன் மழை பொழியச் செய்து பூமிக்குச் சுகம் அளிக்கின்றான். பூமியில் உள்ளவர்களின் ஜீவன் மழையை அனுசரித்தே உள்ளது. விசேஷமாக நமக்கு மழையே வாழ்வாதாரம். ஏனென்றால் பசுக்களுக்கு புல்லும், நீரும் முக்கிய ஆகாரம்” என்று நந்தன் தங்களிடம் உரைத்தான் அல்லவா? (62 – 2)


இதி ச்’ருத்வா வாசம் பிதுரயி ப4வானாஹா ஸரஸம்
தி4கே3தன்னோ ஸத்யம் மக4வாஜனிதா வ்ருஷ்டிரிதி யத் |
அத்3ருஷ்டம் ஜீவானாம் ஸ்ருஜதி க2லு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹாராண்யே வ்ருக்ஷா: கிமிவ ப3லி மிந்த்3ராய த3த3தே||( 62 – 3 )



ஹே கிருஷ்ணா! தந்தையின் இந்த வார்த்தையைக் கேட்டுத் தாங்கள், “மழை இந்திரனால் உண்டு பண்ணப் படுவது என்பது உண்மையல்ல. பிராணிகளின் அதிருஷ்டமே மழையை உண்டு பண்ணுகிறது. பெருங்காடுகளில் மரங்கள் இந்திரனுக்கு பலியைக் கொடுக்கின்றன” என்று சரசமாக உரைத்தீர்கள் அல்லவா? ( 62 – 3)


இத3ம் தாவத் ஸத்யம் யதி3ஹ பச’வோ ந; குலத4னம்
ததா3ஜீவ்யாயாசௌ ப3லிராசல ப4ர்த்ரே ஸமுசித:|
ஸுரேப்4யோSப்யுத்க்ருஷ்டா நனு த4ரணி தே3வா: க்ஷிதி தலே
ததஸ்தேSப்யராத்4யா இதி ஜக3தீ3த2 த்வம் நிஜ ஜனான் || ( 62 – 4 )

“இவ்விடத்தில் பசுக்கள் நம் குலதனம் என்பது தான் உண்மை. இந்த யாகம் அவற்றின் உப ஜீவனத்திற்கு காரணமான மலையரசுக்குக் கொடுப்பது தான் உசிதம். பூவுலகில் அந்தணர்கள் தேவர்களைக் காட்டிலும் மேன்மை பெற்றவர்கள் அன்றோ? ஆகையால் அவர்களும் ஆராதிக்கத் தகுந்தவர்களே!” என்று தாங்கள் தங்கள் பந்துக்களிடம் கூறினீர்கள் அல்லவா/ ( 64 – 4)


ப4வத்3வாசம் ச்’ருத்வா ப3ஹுமதியுதாஸ்தேSபி பசு’பா:
த்3விஜேந்த்3ரானர்ச்சந்தோ ப3லிமத3 து3ருச்சை: க்ஷிதிப்4ருதே |
வ்யது4 : ப்ராத3க்ஷிண்யம் ஸுப்4ருச’ மன மன்னாத3ரயுதா:
த்வமாதச்’சை’லாத்மா ப3லி மகி2ல மாபீ4ரபுரத: ||( 62 – 5 )

அந்த கோபாலர்களும் தங்கள் திருவாக்கை கேட்டு வெகுமானத்துடன் பிராமணர்களை பூஜித்து மலை அரசன் கோவர்த்தனனுக்கு உயர்ந்த பலியைக் கொடுத்தனர். மிகுந்த பணிவுடன் வலம் வந்தனர். வணங்கினர். மலை ரூபியாகத் தாங்களே கோபாலர்களுக்கு எதிரில் பலி முழுவதையும் உண்டீர்கள் அல்லவா? ( 62 – 5)
 
த3ச’கம் 62 ( 6 to 10)

கோ3வர்த்3த4ன ப3லி

அவோசச்’சைவம் தான் கிமிஹ விதத2ம் மே நிக3தி3தம்
கி3ரீந்த்3ரோ நன்வேஷ ஸ்வப3லி முபபு4ங்க்தே ஸ்வவபுஷா |
அயம் கோ3த்ரோ கோ3த்ரத்3விஷி ச குபிதே ரக்ஷிதுமலம்
ஸமஸ்தாநித்யுக்தா ஜக்ருஷுரகி2லா கோகுலஜுஷ : ||( 62 – 6)


“இப்போது என் வாக்கு வீணாகவில்லை அல்லவா? இந்த மலை தன் சரீரத்துடன் தனக்கிட்ட பலியை உண்டது” என்று அவர்களைப் பார்த்துக் கூறினீர்கள். “மலைகளின் பகைவன் இந்திரன் கோபம் அடைந்தாலும் பூமியைக் காக்கும் இந்த மலை நம்மைக் காக்கும் சக்தியுடையதே!” என்று கூறப்பட்டதும் கோகுல வாசிகள் சந்தோஷித்தார்கள் அல்லவா.
( 62 – 6)

பரி ப்ரீதா யாதா: க2லு ப4வது3பேதா வ்ரஜ ஜுஷோ
வ்ரஜம் யாவத்தாவன்நிஜ மக2விப4ங்க3ம் நிச’மயன் |
ப4வந்தம் ஜனன்னப்யதி4க ரஜஸாSSக்ராந்த ஹ்ருத3யோ
ந ஸேஹே தே3வேந்த்3ரஸ் த்வது பரசிதாத்மோன்னதிரபி ||( 62 – 7)


கோகுலவாசிகள் மிகவும் சந்தோஷம் அடைந்தவர்களாக தங்களுடன் எப்போது கோகுலத்துக்குச் சென்றனரோ அப்போதே இந்திரன் தன் யாகம் தடைப்பட்டதை அறிந்தான். தங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், தாங்கள் அளித்த இந்திரப் பதவியில் அமர்ந்து இருந்தும் கூட அதிக ரஜோ குணம் கொண்டதால் இந்திரனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ( 62 – 7)

மனுஷ்யத்வம் யாதோ மகு4பி4த3பி தே3வேஷ்வ வினயம்
வித4த்தே சேன்னஷ்டஸ் த்ரித3ச’ஸத3ஸாம் கோsபி மஹிமா |
ததச்’ச த்4வம்ஸிஷ்யே பசு’பஹதகஸ்ய ஸ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ்த்வாம் ஜேதும் ஸகில மக4வா து3ர்மத3 நிதி4: ||(62 – 8)

மதுவைக் கொன்ற விஷ்ணுகூட மனுஷ்யத் தன்மை அடைந்தவராக தேவர்களிடம் அபராதம் செய்வார் ஆகில் சமஸ்த தேவர்களின் மகிமை நாசம் அடைந்துவிட்டது. இடைப் பிள்ளை கிருஷ்ணனின் ஐஸ்வரியத்தை நான் நாசம் செய்கின்றேன்!” என்று மமதைகொண்ட இந்திரன் தங்களை வெற்றி கொள்ள எண்ணினான் அல்லவா?
( 62 – 8)

த்வதாவாஸம் ஹந்தும் ப்ரளயஜல தா3னம்ப4ர பு4வி
பர்ஹிண்வன் விப்4ராண: கலிச’மய மப்4ரோப4க3மான:|
புனச்தேன்யைரந்தர் த3ஹன மருதா3த்3யௌர் விஹஸிதோ
ப4வன் மாயானைவ த்ரிபு4வனபதே மோஹயதி கம் || ( 62 – 9)

அந்த இந்திரன் தங்கள் இருப்பிடத்தை அழிப்பதற்கு ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு வஜ்ஜிராயுததைக் கையில் எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் பிரளய கால மேகங்களை ஏவி விட்டு, அக்னி, வாயு முதலியவர்கள் மனதுக்குள் பரிஹசிக்கும்படி புறப்பட்டான் அல்லவா? மூவுலகங்களுக்கும் அதிபதியான கிருஷ்ணா! தங்கள் மாயை யாரைதான் மயக்காது?
( 62 – 9)

ஸுரேந்த்3ர: க்ருத்3த4ஸ்சேத் த்3விஜ கருணா சைலக்ருபயா
Sப்யநாதங்கோSஸ்மாகம் நியத இதி விச்’வாஸ்ய பசு’பான்|
அஹோ கின்னாயாதோ கி3ரிபி4தி3தி ஸஞ்சிந்த்ய நிவஸன்
மருத்கே3ஹாதீ4ச’ ப்ரணுத முரவைரின் மம க3தான் || (62 – 10)

“தேவந்திரன் கோபம் அடைந்தாலும் பிராமணர்கள் கருணையினாலும், மலையின் அருளாலும் நமக்கு க்ஷேமம் நிச்சயம்!” என்று கோபாலர்களை நம்பச் செய்தீர். “இந்திரன் ஏன் இன்னமும் வரவில்லை?’ என்று ஆலோசித்துக் காத்திருந்த முரவைரியான குருவயூரப்பா! என் வியாதிகளைத் தாங்கள் அகற்ற வேண்டும். ( 62 – 10)
 
த3ச’கம் 63 ( 1 to 5 )

கோ3வர்த்3த4ன உத்3தா4ரணம்
த3த்3ருஷிரே3கில தத்க்ஷண மக்ஷத:
தனித ஜ்ரும்பி4த கம்பித தி3க்தடா:|
ஸுஷமயா பவத3ங்க3துலாம் க3தா
வ்ரஜபதோ3பரி வரித3ராஸ்த்வயா || ( 63 – 1)

அப்போதே கோகுலத்தின் மேல் இடைவிடாத இடிமுழக்கத்தால் திக்குகளை நடுங்கச் செய்த, நிறத்தில் தங்கள் திருமேனிக்கு நிகரான மேகங்கள் காணப்பட்டன அல்லவா? ( 63 – 1)

விபுல கரகமிச்’ரைஸ் தோய தா4ரா நிபாதை:
தி3சி’ தி3சி’ பசு’பானாம் மண்ட3லே தண்3ட்3யமானே |
குபித ஹரி க்ருதான்ன: பாஹி பாஹீதி தேஷாம்
வசன மஜித ச்’ருண்வன் மா பி3பீ4தேத்யபா4ணீ:|| ( 63 – 2)


ஒருவராலும் ஜெயிக்கமுடியாத கிருஷ்ணா! பெருத்த ஆலங்கட்டிகளுடன் கூடிய மழைத் தாரை வீழ்ந்து எல்லா இடங்களிலும் இடையர் கூட்டத்தை தண்டிக்க, “கோபம் கொண்ட இந்திரனிடமிருந்து எங்களைக் காப்பாற்று! காப்பாற்று!” என்று இறைஞ்சும் இடையர்களின் வசனத்தைக் கேட்ட தாங்கள், “பயப்படாதீர்கள்!” என்று உரைத்தீர்கள் அல்லவா? ( 63 – 2)

குல இஹ கலு கோ3த்ரோ தை3வதம் கோ3த்ரச’த்ரோ:
விஹதிமிஹ ஸ ருந்த்4யாத் கோ நு வ: ஸம்ச’யோஸ்மின்|
இதி ஸஹஸித வாதீ தே3வ கோ3வர்த4னாத்3ரிம்
த்வரித முத3முமூலோ மூலதோ பா3ல3தோர்ப்4யாம் || ( 63 – 3)


“இந்த கோகுலத்தில் பசுக்களைக் காப்பாற்றும் கோவர்த்தனமலை அல்லவா தெய்வம்? அம்மலை எல்லா மலைகளுக்குப் பகைவனாகிய இந்திரனின் இந்தக் கெடுதியைத் தடை செய்யும். இதில் உங்களுக்கு என்ன சந்தேஹம்?” இவ்விதம் சொல்லிக் கொண்டே பிரசாக ரூபியான தாங்கள் அம்மலையை சிரித்துக் கொண்டே இளம் கரங்களால் விரைவாக வேருடன் பிடுங்கி எடுத்தீர்கள் அல்லவா? ( 63 – 3)

தத3னு கி3ரிவரஸ்ய ப்ரோத்3த்4ருதஸ்யாஸ்ய தாவத்
ஸிகலித ம்ருது3தே3சே’ தூ3ரதோ வாரிதாபே |
பரிகர பரிமிச்’ரான் தே4னு கோ3பானத4ஸ்தாத்
உபநித3த4 த3த4த்தா2 ஹஸ்த பத்3மேன சை’லம் || ( 63 – 4)

அதன் பிறகு உயரத் தூக்கப்பட்ட அம்மலையின் அடியில், வெகு தூரத்துக்கு தடுக்கப்பட வெள்ளத்தை உடைய மிருதுவான இடத்தில், வீட்டுச் சாமான்களுடன் , பசுக்களையும், கோபர்களையும் இருக்கச் செய்து , தாமரை போன்ற கைகளால் மலையைத் தாங்கிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? ( 63 – 4)

ப4வதி வித்4ருத சை’லே பா3லிகாபி4ர் வயஸ்யை:
அபி விஹித விலாஸம் கேலி லாபாதி3 லோலே|
ஸவித4 மிலித தே4னூரேக ஹஸ்தேன கண்டூ3
யதி ஸதி பசு’பாலஸ் தோஷ மைஷந்த ஸர்வே || ( 63 – 5)

தாங்கள் மலையைத் தூக்கிக் கொண்டும், சிறு பெண்களுடனும் , தோழர்களுடனும் பேசுவதில் ஈடுபட்டுக் கொண்டும், பக்கத்தில் வந்த பசுக்களை ஒரு கையால் தடவிக் கொண்டும் இருந்தபொழுது எல்லா கோபர்களும் சந்தோஷம் அடைந்தனர் அல்லவா? ( 63 – 5)
 
த3ச’கம் 63 ( 6 to 10)

கோ3வர்த்3த4ன உத்3தா4ரணம்
அதி மஹான் கி3ரிரேஷு து வாமகே
கர ஸரோருஹி தம் த4ரதே சிரம் |
கிமித3 மத்3பு4த மத்3ரிப3லம் ந்விதி
த்வதவலோகிபி4 ராகதி கோ3பகை:||( 63 – 6)

“இந்த மலையோ மிகவும் பெரியது. இந்தக் கிருஷ்ணனோ தாமரைப் பூ போன்ற தன் இடக் கையால் அதை நெடுநேரம் சுமக்கின்றான். இது என்ன மாயம்? மலையின் சக்தியாக இருக்குமோ?” என்று தங்களின் மகிமையை அறியாத கோபர்கள் கூறினார்கள் அல்லவா? ( 63 – 6)

அஹஹ தா4ர்ஷ்ட்ய மமுஷ்ய வடோர்கி3ரிம்
வ்யதி2த பா3ஹு ரஸாவவரோபயேத்|
இதி ஹரிஸ்த்வயி பத்3த4விக3ர்ஹணோ
திவஸ ஸப்தக முக்3ரம வர்ஷயத் || ( 63 – 7)

“இந்தச் சிறுவனுக்கு என்ன துணிச்சல்! இவன் கை வேதனை அடைந்தால் மலையைக் கீழே இறக்கி வைப்பான்!” என்று இந்திரன் ஏழு நாட்கள் முழுவதும் கடுமையான மழையைப் பெய்யச் செய்தான் அல்லவா? ( 63 – 7)

அசலதி த்வயி தே3வ பதா3த் பத3ம்
கலித3 ஸர்வ ஜலே ச க3னோத்கரே |
அபஹ்ருதே மருதா மருதாம் பதி:
தவ த3பி4 ச’ங்கித தீ4ஸ்ஸமுபாத்3ரவத்|| ( 63 – 8 )

ஹே தேவ! தாங்கள் நின்ற இடத்தில் இருந்து ஓர் அடி கூட அசையாதிருந்தபோது ஜலம் பொழிந்த மேகங்கள் காற்றால் விரட்டப்பட்டுவிட தேவர்களின் அரசன் இந்திரன் தங்கள் விஷயத்தில் பலவித சந்தேகங்கள் எழ அங்கிருந்து சென்று விட்டான் அல்லவா? ( 63 – 8)

ச’மமுபேயுஷி வர்ஷ ப4ரே ததா3
பசு’ப தே4னுகுலே ச விநிர்க3தே|
பு4வி விபோ4 ஸமுபாஹித பூ4தர;
ப்ரமுதி3தை :பசுபை: பரிரேபிஷே|| ( 63 – 9)

அப்பொழுது பெரு மழை ஓய்ந்துபோக; கோபர்களும் பசுக்களும் வெளிவர; சர்வ சக்தனான தாங்கள் மலையைக் கீழே வைத்தீர்கள். மிகவும் மகிழ்ந்த கோபர்கள் தங்களைக் கட்டி அணைத்தார்கள் அல்லவா? ( 63 – 9)

த4ரணி மேவ புரா த்4ருதவனாஸி
க்ஷிதித4ரோத்3த4ரணோ தவ க: ச்’ரம:|
இதி நுதிஸ் த்ரித3சை': கமலாபதே
கு3ருபுராலய பாலய மாம் க3தா3த் || ( 63 – 10)

லக்ஷ்மி காந்தனான குருவாயூரப்பா! முன்பு தாங்கள் பூமியையே தூக்கி இருக்கின்றீர்கள்! அப்படிப்பட்ட தங்களுக்கு ஒரு மலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்?”: என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். அப்படிப் பட்ட தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 63 – 10)
 
KANDA PURAANAM - ASURA KANDAM

5e. தருமதத்தன்.

கலிங்க நாட்டின் வணிகன் தேவதத்தன்;
அரிபுரத்தில் வசித்து வந்தான் அவன்.


தருமதத்தன் தேவதத்தனின் மகன்;
தருமம் செய்வதே கருமம் ஆனவன்;

தாய் தந்தையர் இறந்து பட்டனர்!
தனி ஆளாகிவிட்டான் தருமதத்தன்.

இரசவாதி ஒருவன் வந்தான் வீட்டுக்கு;
நீறணிந்து பூணூலும் தரித்திருந்தான்;

கழுத்திலே ஒரு ருத்திராக்ஷக் கொட்டை,
தலயிலே மொட்டை, காதில் குண்டலம்.

போலித் துறவி என்று அறியாமலேயே
போலித் துறவியை நன்கு உபசரித்தான்.

“சிவபெருமான் அருளிய வித்தை உள்ளது!
எவருக்கும் தெரிவிக்கக் கூடாது அதை நான்!

கரிய இரும்பையும் செம்பொன் ஆக்குவேன்;
ரசத்தையும், ஈயத்தையும் நல்ல வெள்ளியாக!

ஒரு பொன் ஆகும் ஒரு கோடிப் பொன்னாக,
ஒரு கோடி பொன் ஒரு பொன் மலையாகும்.”

தன் செல்வம் அனைத்தையும் ஈந்தான் வணிகன்.
தன் நினைப்பு பொய்க்குமோ என்று ஐயத்தால்,

“என் வித்தையில் இறைபடக் கூட போதாது!”
என்று சினந்து சொன்னான் அந்த இரசவாதி.

வீடு வாசலை, நில புலன்களைவிற்றான்;
ஆடு மாடுகளை, அணி மணிகளை விற்றான்.

தான் அறியாமலேயே அதுவரை செய்த
தருமத்தையும் விற்று விட்டான் வணிகன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
2 (# 5 E ). DHARMA DATTAN.

Deva Dattan was a merchant living in Aripuram of Kalinga Desam. His son Dharma Dattan was involved in many charitable deeds. When the merchant and his wife died, Dharma Dattan became all alone in the world.

An alchemist came to his house. He wore the sacred thread and had smeared the holy ash on his forehead, He wore a rudraaksham and kundalams and his head was clean shaven. Dharma Dattan welcomed him warmly.

He told Dharma Dattan, "Siva has taught me a trick by which I can convert iron into Gold and lead and mercury into silver. Your one gold coin can become one crore coins and one crore coins can become a mountain of gold coins."

Dharma Dattan brought forth all his gold but the alchemist lost his temper and said. "This is like the gold strewn on the floor after my alchemy!"

Dharma Dattan sold his land, house, cattle and every earthly possession. Without realising he sold off the sat karmas he had done till then.

 
VINAAYAKA PURAANAM 1.

26b. நரஹரி

அரக்கனை வதைக்கும் உபாயத்தை நாடி
அமைத்தார் ஒரு மரத்தடி விநாயகரை.

விதிப்படி ஆராதித்தார் விஷ்ணு விநாயகரை;
விதிகளை உடைத்திடும் வழிகளை அறிந்திட.

காட்சி தந்தார் வேழமுகன் விஷ்ணுவுக்கு,
காட்டினார் அரக்கனை வதைக்கும் வழியை.

“உயர் திணை, அஃறிணை இரண்டும் கலந்த
நரனும், சிம்ஹமும் ஆகிய நரஹரி ஆவீர்!

பகலும், இரவும் இல்லாத அந்தி வேளையில்
புறமும், உள்ளும் ஆகாத வாயிற்படியில்

ஆகாயமும், பூமியும் அல்லாத தொடை மீது
அஸ்திரம் அல்லாத கூரிய நகங்களால்

மார்பைப் பிளந்து உதிரம் கீழே சிந்தாமல்
மாய்ப்பீர் அவனை” என்று வழி காட்டினார்.

நரஹரியாகத் தோற்றம் எடுத்தார் – கொடிய
அரக்கனை எளிதில் விஷ்ணு வதைத்தார்.

அசுரர்களின் புதிய அரசன் ஆகிவிட்டான்
அசுரன் விரோசனன், ஹிரண்யாக்ஷன் மகன்.

சூரியனை ஆராதித்துப் பெற்றான் அவன்
சுவர்ண மயமான கிரீடம் ஒன்றினை.

கிரீடம் அணிந்திருக்கும் வரை வெற்றி
சிறு அபாயம் கூட இல்லை உயிருக்கு.

சிதறும் சிரம் நூறு சுக்கல்களாகக் கரம்
கிரீடம் அணியாத தலைமேல் பட்டால்.

சூரியனிடம் வரம் பெற்ற விரோசனன்;
பார் முழுவதையும் வென்றான் எளிதில்.

மூன்று உலகங்களும் அஞ்சிப் பணிந்தன
எண் திசைகளிலும் நடந்தது அவன் ஆட்சி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
VINAAYAKA PURAANAM 1.

26b. The Lion-man

Vishnu wanted to find a way to kill Hiranya kasibu without breaking any of these rules. He established a Vinayaka under the Vanni tree and did aaraadhana in the prescribed manner to find a solution to the problem.

Vinayaka appeared to Vishnu and revealed a successful plan to put an end to the asuran. “Become Narahari or a lion-man so that you will be neither human nor an animal.

Select the sandhi kaalam since it is neither day nor night. Sit on the door step since it is neither inside the house nor outside it.

Place the asuran on your thighs, since it will be neither the sky not the earth. Use your sharp claws to rip open the chest of the asuran. Claws are not asthrams. Drink the oozing blood so that no more asuran can appear from the blood spilled down”

Vishnu took the form of narahari and killed Hiranya kasibu as told by Vinayaka. Hiranayn was killed by the huge Varaha – another avatar of Vishnu.

The new king was Virochanan – the son of Hiranyaakshan. He worshiped the Sun God and got a gold kireetam which would protect him from all dangers.

He was invincible while wearing that kireetam. But if any hand touched his head not protected by the kireeetam, it would burst into one hundred pieces.

He wore the kireetam ( CROWN) always and conquered all the worlds. His rule was established in all the eight direction.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4


4#3b. திதியும், அதிதியும்


தக்ஷனின் பெண்கள் திதியும், அதிதியும்,
தர்ம பத்தினிகள் காசியப முனிவருக்கு.

இணையற்றவன் அதிதி மகன் இந்திரன்;
இணையாகும் மகனை விழைந்தாள் திதி.

கோரினாள் வலிய மகனைக் கணவனிடம்;
கூறினார் கணவர் விரத விதிமுறைகளை.

“விரும்பும் மகன் வந்து பிறப்பான் – நீ இந்த
விரத விதிமுறைகளை மீறாமல் இருந்தால்.”

பால் அருந்தினாள்; உணவை விடுத்தாள்;
பரிசுத்தமாக உறங்கினாள் தரையில்.

பூர்த்தி ஆனது விரதம் ஒரு குறையுமின்றி.
பூர்த்தி ஆனது அவள் கோரிக்கையும் கூட.

கருவில் உருவானான் ஒரு வலிய மகன்!
கரு தந்தது திதிக்கு விரதத்தின் பொலிவை!

பொறாமை கொண்டாள் இது கண்ட அதிதி.
‘பெருமை சேரும் திதிக்கும், மகனுக்கும்.

சிறுமை சேரும் எனக்கும், இந்திரனுக்கும்!
சீரழிக்கவேண்டும் இவள் கருவை உடனே.

“உருவாகி வளர்கின்றான் உனக்குப் பகைவன்;
உன் சிற்றன்னை திதியின் வயிற்றில் இந்திரா!

உபயம் சிந்திப்பாய் மகனே இந்திரா! உடனே
அபாயம் விளைவிப்பாய் அவள் கருவுக்கு!

பிறந்தால் குறைந்து விடும் உன் பெருமை.
பிறக்கும் முன்னர் அழிப்பது அறிவுடைமை.”

இந்திரன் மனத்தைக் கலைத்தாள் அதிதி.
இந்திரன் வெறுத்தான் தன் பகைவனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 4

4#3b. Aditi and Diti

Diti and Aditi were two of the daughters of Dakshan. Both were the wives of Sage Kashyap. Aditi’s famous son was Indra. Diti wished to have a son as famous a Indra. She conveyed her wish to her husband sage Kashyap.

The sage told her to observe a vratam as it was prescribed and then her wish would get fulfilled. Diti followed the rules to the letter and observed the vratam. When the vratam was completed she became pregnant with a son as great as Indra himself.

The vratam had purified her and she shone like pure gold. Aditi became jealous of her brilliance and her pregnancy. She thought to herself,

“If Diti gives birth to a son as famous as Indra, then Indra as well as I will become less popular.” She decided to destroy the pregnancy by any means and at any cost.

She spoke to Indra” Your enemy now grows in the womb of your stepmother Diti. If he is born he will overshadow you. I do not want that to happen By hook or crook destroy the baby in her womb!”

Indra got corrupted and influenced by his mother and decided to destroy the child in his step mother’s womb.
 
SREEMAN NAARAAYANEEYAM

த3ச’கம் 64 ( 1 to 5 )

கோவிந்த3 அபி4ஷேகம்

ஆலோக்ய சை’லோத்3த4ரணாதி3 ரூபம்
ப்ரபா4வ முச்சைஸ் தவ கோ3ப லோகா:|
விச்’வேச்’வரம் த்வா மபி4மத்ய விச்வே
நந்த3ம் ப4வஜ்ஜாதக மன்வ ப்ருச்சன் || ( 64 – 1)


எல்லா கோபர்களும், மலையைத் தூக்கியது முதலான தங்களுடைய மகா உன்னதமான மகிமையைக் கண்டு வியந்து, தாங்கள் சர்வேஸ்வரன் என்ற எண்ணம் கொண்டு, நந்தனிடம் தங்கள் ஜாதகத்தைப் பற்றி விசாரித்தார்கள். ( 64 – 1)

க3ர்கோ3தி3தோ நிர்க3தி3தோ நிஜாய
வர்கா3ய தாதேன தவ ப்ரபா4வ:||
பூர்வாதி4கஸ் த்வய்யனுராக3 ஏஷாம்
ஐதி4ஷ்ட தாவத்3 ப3ஹுமான பா4ர:|| ( 64 – 2)

முன்பு கர்க்கர் கூறிய தங்கள் மகிமையைத் தங்கள் தகப்பனார் தன் மித்ர பந்துக்களுக்கு எடுத்து உரைக்க, அன்று முதல் அவர்கள் தங்கள் மீது கொண்டிருந் வாச்தல்யமும், பிரேமையும் முன்பு இருந்ததை விட அதிகம் விருத்தி அடைந்தது.( 64 – 2)

ததோSவமானோதி3த தத்வ போ3த3:
ஸுராதி4 ராஜஸ் சஹ தி3வ்ய க3வ்யா:|
உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்ட க3ர்வ:
ஸ்ப்ருஷ்ட்வா பதா3ப்ஜம் மணி மௌலினா தே || ( 64 – 3 )


அதன் பின்னர் அவமானத்தால் உண்மையை அறிந்து கொண்ட இந்திரன்,
தன் கர்வம் அழிந்தவனாகக் காமதேனுவுடன் வந்து, தன் ரத்னகிரீடம் தங்கள் பாதங்களில் படுமாறு நமஸ்கரித்தான் அல்லவா? ( 64 – 3)

ஸ்நேஹஸ் நுதைஸ்த்வாம் ஸுரபி: பயோபி:
கோவிந்த3 நாமாங்கித மப்4யஷிஞ்சத் |
ஐராவதோ பாஹ்ருத தி3வ்ய க3ங்கா3
பாதோ2பி4 ரிந்த்3ரோபி ச ஜாதஹர்ஷ: || ( 64 – 4 )


காமதேனு சிநேகத்தால் பெருக்கிய பாலைக் கொண்டு தங்களை கோவிந்தன் என்ற பெயரில் பிரசித்தி பெற்றவனாக அபிஷேகம் செய்தது. இந்திரனும் சந்தோஷம் அடைந்து ஐராவதத்தால் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கா ஜலத்தால் தங்களை அபிஷேகம் செய்தான் அல்லவா?
( 64 – 4)

ஜக3த் த்ரயேச’ த்வயி கோ3குலேசே ‘
ததா2Sபி4ஷிக்தே ஸதி கோ3ப வாட:|
நாகேபி வைகுண்ட2 பதே3Sப்ய லப்4யாம்
ச்’ரியம் ப்ரபேதே3 ப4வத: ப்ரபா4வாத் || ( 64 – 5)


மூவுலகிற்கும் நாயகன் ஆகிய தங்களை கோகுலத்துக்கு நாயகன் ஆக அபிஷேகம் செய்தபோது, தங்கள் மகிமையால் கோகுலம் சுவர்க்கத்திலும், வைகுண்டதிலும் அடையமுடியாத ஐஸ்வர்யத்தை அடைந்தது. ( 64 – 5)
 
த3ச’கம் 64 ( 6 to 10)

கோவிந்த3 அபி4ஷேகம்
கதா3சித் அந்தர் யமுனாம் ப்ரபா4தே
ஸ்னாயன் பிதா வாருண பூருஷேண |
நீதஸ்தமானேது மகா3: புரிம்த்வாம்
தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப: || ( 64 – 6 )

ஒருநாள் விடியலில் யமுனா நதியில் நீராடிக் கொண்டிருந்த தங்கள் தந்தை வருணனுடைய ஒரு தூதனால் கொண்டு போகப் பட்டான். அவரைத் திருப்பி அழைத்து வருவதற்குக் ஒரு காரணத்தால் அவதரித்து மனித உருவம் கொண்டத் தாங்கள் அந்த வருண லோகத்திற்குச் சென்றீர்கள் அல்லவா? ( 64 – 6)

ஸஸம்ப்4ரமம் தேன ஜலாதி3பேன
ப்ரபூஜிதஸ்த்வம் ப்ர்தி க்3ருஹ்ய தாதம்|
உபாக3தஸ் தத்க்ஷண மாத்ம கே3ஹம்
பிதாSவத3த் தச்சரிதம் நிஜேப்4ய: || ( 64 – 7)


ஜலத்துக்கு அதிபதி ஆகிய வருணன் பரபரப்புடன் தங்களைப் பூஜித்து தங்கள் பிதாவையும் தங்களுடன் அனுப்பி வைத்தான். தங்கள் இருப்பிடத்துக்கு வந்த பிறகு தங்கள் தந்தை அந்தச் சரிதத்தைத் தன் பந்துக்களுக்கு எடுத்து உரைத்தார். ( 64 – 7)

ஹரிம் வினிச்’சித்ய ப4வந்தமேதான்
ப4வத்பதா3லோகான் ப3த்3த4 த்ருஷ்ணான்|
நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பத3ம்
தத்3தூ3ராப மன்யைஸ்தவ மதீ3த்3ருச’ஸ்தான் || ( 64 – 8 )

எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! தங்களை சாக்ஷாத் விஷ்ணு என்று நிச்சயித்துக் கொண்டு தங்களுடைய லோகத்தைக் காண ஆசை கொண்டவர்கள் ஆன இவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களால் அடைய முடியாத பரம பதத்தைக் காட்டினீர்கள் அல்லவா? ( 64 – 8)

ஸ்புரத் பரானந்த3 ரஸப்ரவாஹ
ப்ரபூர்ண கைவல்ய மஹாபயோதௌ4 |
சிரம் நிமக்3ன: கலு கோ3ப ஸங்கா3:
த்வயைவ பூ4மன் புனருத்3த்4ருதாஸ்தே|| ( 64 – 9 )


ஹே பரிபூர்ண ஸ்வரூபியே அந்த கோபர்கள் எல்லாம் பிரகாசிக்கும் பரமானந்த ரசத்தின் பெருக்கால் நன்கு நிறைந்து விளங்கும் மோக்ஷம் என்னும் பெருங்கடலில் வெகு நேரம் மூழ்கி விட்டார்கள் அல்லவா? அவர்கள் தங்களாலேயே மீண்டும் கரை ஏற்றப் பட்டனர். ( 64 – 9)

கரப3த3ரவதே3வம் தே3வ குத்ராவதாரே
நிஜபத னவாப்யம் த3ர்சி’தம் ப4க்தி பா4ஜாம் |
ததி3ஹ பசு’ப ரூபி த்வம் ஹி சாக்ஷாத் பராத்மா
பவன புரவாஸின் பாஹி மா மாமயேப்4ய:|| ( 64 -10)


ஹே தேவா! ஒருவராலும் அடைய முடியாத தங்களுடைய ஸ்தானம் வேறு எந்த அவதாரத்தில் இவ்விதம் இலந்தைக் கனி போல பக்தர்களுக்குக் காண்பிக்கப்பட்டது? ஆகையால் இவ்விடத்தில் கோபால ரூபியாக இருக்கின்ற தாங்கள் சந்தேகமே இல்லாமல் சாக்ஷாத் பரமாத்மாவே தான்! என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
( 64 – 10)
 
த3ச’கம் 65 ( 1 to 5)


கோ3பீனாம் க3மனம்

கோ3பி ஜனாய கதி2தம் நியமாவஸானே
மாரோத்ஸவம் த்வத2 ஸாத4யிதும் ப்ரவ்ருத்த:|
ஸாந்த்ரேன சாந்த்ர மஹஸா சி’சி’ரி க்ருதாசே’
ப்ராபூரயோ முரளிகாம் யமுனாவனாந்தே ||( 65 – 1)


பிறகு தாங்கள் கௌரீ விரதத்தின் முடிவில் கோபிகைகளுக்குப் பிரதிக்ஞை செய்தபடி, காமோத்ஸவத்தை நிறைவேற்ற முயன்றவராக, நிலவினால் குளிர்ந்த யமுனா நதிக் கரையில் உள்ள ஒரு வனத்தில் இருந்து வேணுகானம் செய்தீர்கள் அல்லவா? ( 65 – 1)

ஸம்மூர்ச்சா2னபி4 ருதி3த ஸ்வர மண்ட3லாபி4:
ஸம்மூர்ச்ச2யந்த மகி2லம் பு4வனாந்தராலம் |
த்வத்3 வேணு நாத3 முபகர்ண்ய விபோ4 தருண்ய:
தத்தா த்3ருச’ம் கமபி சித்த விமோஹமாபு:|| ( 65 – 2)


ஹே பிரபு! வேணுவிலிருந்து வெளிக் கிளம்பிய ஸ்வரக் கூட்டங்களால், ஸப்த ஸ்வரங்களின் அரோஹண அவரோஹண கிரமங்களால், பூலோகம் முழுவதையும் நன்கு மயக்கும் தங்களின் வேணு கானத்தைக் கேட்டதால் , இளம் பெண்கள் உவமை அற்றதும் இன்னது என்று இனம் காட்ட முடியாததும் ஆகிய ஒரு மதி மயக்கத்தை அடைந்தனர். ( 65 – 2)

தா கே3ஹ க்ருத்ய நிரதாஸ் தனய ப்ரஸக்தா:
காந்தோப ஸேவன பராச்’ச ஸரோருஹாக்ஷ்ய:|
ஸர்வம் விஸ்ருஜ்ய முரளீ மோஹிதாஸ்தே
காந்தார தேச’மபி காந்ததனோ ஸமேதா:|| ( 65 – 3)

ஹே சுந்தரமூர்த்தியே! வீட்டு வேலைகளில் ஈடுபட்டவர்களும்; குழந்தைகளை லாலித்துக் கொண்டு இருப்பவர்களும்; பதிதேவனின் சிஸ்ருஷையில் ஈடுபட்டிருந்தவர்களும் ஆகிய அந்தத் தாமரைக் கண்ணிகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டுக் காட்டுக்கு வந்தார்கள் அல்லவா? (65 – 3)

காச்’சின் நிஜாங்க3 பரிபூ4ஷண மாத3தா4னா
வேணு ப்ரணாத3 முப்கர்ண்ய க்ருதார்த்த பூ4ஷா:|
த்வாமாகா3தா நனு ததை2வ விப4ஷிதாப்4ய :
தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசனாய || ( 65 – 4)

சிலர் தாங்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேணு நாதத்தால் இழுக்கப்பட்டு பாதி அணிந்த ஆபரணங்களுடன் அப்படியே தங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா? நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களை விடவும் அவர்களே தங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள். ( 65 – 4 )

ஹாரம் நிதம்ப3 பு4வி காசன தா4ரயந்தீ
காஞ்சீம் ச கண்ட2 பு4வி தே3வ ஸமாக3தா த்வாம் |
ஹாரித்வ மாத்ம ஜக4னஸ்ய முகுந்த3 துப்4யம்
வ்யக்தம் ப3பா4ஷ இவ முக்3த4 முகி2 விசேஷாத் || ( 65 – 5)


ஹே தேவா! ஒருவள் தன் இடையில் முத்து மாலையையும், கழுத்தில் ஒட்டியாணாத்தையும் அணிந்துகொண்டு தங்களிடம் வந்தாள் அல்லவா? அந்த அழகி தன் இடைப் பிரதேசத்தின் விசஷமான மனோ ஹரிதையைத் (முத்து மாலையுடன் விளங்கும் தன்மையைத் ) தங்களிடம் இப்படி வெளிப்படுத்தினாள் போலும். ( 65 – 5)
 
த3ச’கம் 65 ( 6 to 9)

கோ3பீனாம் க3மனம்

காச்’சித் குசே புன ரஸஜ்ஜித கஞ்சுலீகா
வ்யாமோஹத: பர வதூ4பி4 ரலக்ஷ்யமாணா |
த்வா மாயயௌ நிருபமா ப்ரணயாதிபா4ர
ராஜ்யாபி4ஷேக வித3யே கலசீ’தரேவ || ( 65 – 6 )

வேறொருத்தி மயக்கத்தால் ரவிக்கையே அணியாமல்; மற்ற ஸ்த்ரீக்களால் காணப்படாதவளாக; தன் இரு ஸ்தனங்களில் உவமையற்ற பிரேமை ஆகின்ற ராஜ்ஜியத்தில் பட்டாபிஷேகம் செய்வதற்கு இரண்டு குடங்களைத் தாங்கியவள் போலத் தங்களிடம் வந்தாள் அல்லவா?
( 65 – 6 )

காச்’சித்3 க்3ருஹாத் கில நிரேது மபாரயந்த்ய :
த்வாமேவ தே3வ ஹ்ருத3யே ஸுத்3ருட4ம் விபா4வ்ய|
தே3ஹம் விதூ4ய பரசித்ஸுக2 ரூபமேகம்
தவா மாவிச’ன் பரமிமா நனு த4ன்யத4ன்யா:|| ( 65 – 7 )


ஹே தேவ! சில கோபிகள் வீட்டிலிருந்து வெளியில் வர முடியாதவர்களாக உங்களையே த்யானித்துக் கொண்டு சரீரத்தை விடுத்து சச்சிதானந்த ரூபியான உம்முடன் ஒன்றிவிட்டார்கள் அல்லவா? அவர்கள் மகா பாக்கியசாலிகள்! ( 65 – 7)

ஜாராத்மனா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ
நார்யோ க3தா: பரம ஹம்ஸக3திம் க்ஷணேன |
தம் த்வாம் ப்ரகாச’ பரமாத்மதனும் கதஞ்சித்
சித்தே வ்ஹன்னம்ருத மச்’ரம மச்’னுவீய || ( 65 – 8)


கோபஸ்த்ரீகள் பரமாத்மா என்று உங்களை எண்ணாமல், ஒரு சோர நாயகன் என்று எண்ணத்தினாலே தங்களை தியானித்துக் கொண்டு ஒரு நொடிப் பொழுதில் ஞானிகள் அடையும் மோக்ஷத்தை அடைந்தார்கள். பிரத்யக்ஷமாக விளங்கும் பரமாத்ம ஸ்வரூபினான உங்களை எவ்விதமாகிலும் நான் மனதில் தியானம் செய்து மோக்ஷத்தைச் சிரமம் இன்றி அடைவேனாகுக. ( 65 – 8)

அப்யா4க3தாபி4 ரபி4தோ வ்ரஜ ஸுந்தரீபி:
முக்3த4 ஸ்மிதார்த்3ர வத3ன: கருணாவலோகீ |
நிஸ்ஸீமா காந்தி ஜலதி4ஸ்த்வ மவேக்ஷ்யமாணோ
விச்’வைக ஹ்ருத்3ய ஹர மே பரமேச’ ரோகான் || ( 65 – 9)


திரிலோக சுந்தரன் ஆன குருவாயோரப்பா! தங்கள் சமீபம் வந்த கோபிகளின் மனோஹரமான புன்னகையால் கனிந்த முகத்தை உடையவரும்; கருணையுடன் பார்ப்பவரும்; எல்லையற்ற காந்தியின் கடல் போன்றவரும்; நாற்புறங்களில் இருந்து தரிசிகப்படுபவருமாகிய தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.(65 – 9)
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5f. தருமதத்தன்

தேடிய பொருளைப் பொன்னாக மாற்றித்
தேடி வந்த துறவியிடம் கொண்டு தந்தான்.


இரசத்தைப் பொன்னுடன் கலந்த துறவி
இரசவாத மட்குகையில் அடைத்தான்.

புகை மண்டும் தீயில் வைத்தான் அதை.
புகையில் கண்கள் பற்றி எரியும் போது,

பொன்னை எடுத்து மறைத்துக் கொண்டு
பொன்னுக்கு பதில் இரும்பை வைத்தான்.

“காளி கோவலில் வேள்வி செய்துவிட்டு,
நாள் நான்கானவுடன் நான் திரும்புவேன்!

தனித்திருந்து, உணவு கூட உண்ணாமல்,
நினைத்திரு என்னையே, உரையாடாமல்!”

மூன்று நாட்கள் கடந்து சென்று விட்டன
முனிவன் மீண்டும் அங்கு வரவில்லை.

காளி கோவிலிலும், அந் நகரிலும் தேடிக்
களைத்துப் போனான் தருமதத்தன்.

மட்குகையில் கிடைத்தது கரிய இரும்பு.
மனம் உடைந்தவன் விழுந்து இறந்தான்.

பொருட்களை விற்கும் போது தான் செய்த
தருமத்தையும் விற்றதன் தீப் பயன் இது.

மத யானையாகத் திரிந்து உழல்கின்றவன்
மதி மோசம்போன தருமதத்தனே ஆவான்.

தீவிர தவத்தின் பயனை அளித்து அவன்
தீவினைகளை நீக்கினார் குச்சக முனிவர்.

தன் யானை வடிவம் மறைந்து தேவனாகிப்
பொன் உலகு ஏகினான் பொன் விமானம் ஏறி!

தாமதம் இன்றி குச்சிக முனிவர் தம் தீவிரத்
தவத்தைத் தொடங்கினார் பொய்கையினுள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
KANDA PURAANAM - ASURA KAANDAM

2 (# 5 F). THE DECEPTION AND DIVINITY.

Dharma Dattan bought gold with all the money he got thus. He gave it to the alchemist, who mixed it some chemicals and packed it in a mud pot. The pot was then kept on a fire emitting eyes-burning-fumes.

When Dharma Dattan was thus temporarily blinded, the alchemist hid the gold and replaced it with iron.

He told Dharma dattan,”I have to perform a yaga in the Kali temple for three days. During that time you must go on a fast and keep meditating on me in utter silence. I will come back on the fourth day”.

Dharma Dattan did as was told but the alchemist never came back. He went search of the cheat and could not find him anywhere. He came home very tired and defeated. He was shocked beyond words to see iron in the mud pot in the place of gold.

He just dropped dead. It was because unknowingly he had sold away all his punyam. The sage understood that it Dharma Dattan who was born as the angry elephant – suffering and making others suffer too.

He donated the elephant the punya earned by him by his penance done on a day. The elephant gained the form a Deva. He thanked the sage profusely, got in to a vimanam and went to heaven

The rushi went back to his penance and the pond.

 
Back
Top