A poem a day to keep all agonies away!

6#24g.திருமணம்

இறந்து விழுந்தவர் சுற்றத்தினர்;
வருந்தி நின்றாள் வள்ளியம்மை.


சென்றான் முருகன் பொழில் நீங்கி.
பின் தொடர்ந்தாள் வள்ளியம்மை.

நாரதர் அங்கே தோன்றிக் கூறினார்;
“இறந்தவர் உயிர் பெற வேண்டும்”

பொழிலுக்கு வந்தான் முருகன்,
“எழுப்புவாய் உன் சுற்றத்தினரை!”

விழுந்தவர்கள் பிழைத்து எழுவீர்!”
விரும்பி வேண்டினாள் வள்ளியம்மை.

பிழைத்து எழுந்தனர் இறந்தவர்கள்!
தழைத்தது மகிழ்ச்சி மீண்டும் அங்கு.

திரு உருவைக் காட்டினான் வேடன்
பெருமிதம் கொண்டனர் வேடுவர்

தங்கள் ஊரிலேயே மணம் புரியத்
தாள் பணிந்து இறைஞ்சி வேண்டிட,

வேடுவர்களின் வேண்டுகோளுக்கு
வேற்படை வேந்தன் இணங்கினான்.

நாரத முனியுடன் ஊரை அடைந்தான்.
ஆறுமுகன் வள்ளியை நோக்கவும்,

மறைந்தது அவள் வேடுவக் கோலம்!
நிறைந்தது தெய்வத் திருக் கோலம்!

நீர் வார்த்து நம்பி பெண்ணைத் தர
நாரதர் செய்தார் திருமணச் சடங்கு.

பெருமானுடன் தோன்றினர் உமை,
திருமால், பிரமன், இந்திரன், தேவர்.

வாழ்த்துரை வழங்கினர் அனைவரும்
வாழ்த்தித் தூவினர் மங்கல அரிசியை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
6#24h. திருத்தணிகை

“வள்ளியுடன் உறைவேன் தணிகையில்”
வள்ளிக் கணவன் உரைத்தான் நம்பியிடம்.


வள்ளி விடைபெற்றாள் தன் தோழியரிடம்.
வள்ளியும் முருகனும் அடைந்தனர் தணிகை.

திருத் தணிகையின் சிறப்பினை முருகன்
விருப்பத்துடன் வள்ளிக்கு எடுத்துரைத்தான்.

“சூரபத்மனோடு செய்த போரிலும் பின்னர்
வீர வேடுவர்களோடு நான் செய்த போரிலும்

பெருகிய சினம் இங்கு முற்றும் தணிந்ததால்
செறுத்தணி ஆகித் திருத்தணி ஆனது இது.

மலர்களில் மிகச் சிறந்தது தாமரை மலர்.
மலைகளில் மிகச் சிறந்தது செறுத் தணி

நதிகளில் மிகவும் சிறந்தது கங்கை நதி
பதிகளில் மிகவும் சிறந்தது காஞ்சியம்பதி

திருக் கயிலையில் உறைவான் ஈசன்
திருத் தணிகையில் உறைவேன் நான்

இச் சுனையில் நான் தினம் அணிவதற்கு
இந்திரன் உண்டாக்கினான் குவளை மலர்.

காலை, நண்பகல், மாலை என்று அவை
காலம் தவறாமல் மலரும் எந்த நாளும்.

ஐந்து நாட்கள் இங்கு தங்கி வழிபட்டால்
வந்து சேரும் விரும்பிய பேறுகள் எல்லாம்.

அறச் செயல்கள் பல்கிப் பயன் அளிக்கும்
மறச் செயல்கள் தேய்ந்து மறைந்து விடும்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
.
 
6#24h. Thiruth thanigai.

Murugan told Nambi,”I will be in Thiruth thanigai with Valli”.

Valli took leave of her friends.They reached Thiruth thanigai.

Murugan explained to Valli the greatness of that sthalam,

“My anger fueled by the wars with Soorapadman and

the group of the hunters got reduced in this place.

So it was called seruth thani( reduction of anger).

Lotus is the best among flowers.

Thiruththani is the best among mountains.

Ganges is the best among rivers.

Kanchipuram is the best among kshethrams.

Siva prefers to live on Mount Kailas and I prefer to live on this mountain.

Indra had arranged for the water lilies to bloom everyday to adorn me

during the morning, noon and evening. These flowers will always bloom without fail.

If a person spends five days here in doing worship he will get all he desires.

The good deeds performed here multiply their good effects and bad deeds become less evil.”

 
6#24i. கந்தவெற்பு

கந்த வெற்பு சென்றான் வள்ளியுடன்,
வந்து வணங்கினாள் தெய்வயானை.


வள்ளியைக் கண்டதும் வியந்தாள்.
“வள்ளியின் வரலாற்றைக் கூறுங்கள்!”

“திருமாலின் திருக் குமரிகள் இருவர்,
திருமணம் செய்யவிரும்பினர் என்னை.

அமிர்தவல்லி சுந்தரவல்லி இருவரும்
அருந்தவம் செய்தனர் முற்பிறப்பில்.

அமிர்தவல்லி அமரர்கோன் மகள் நீ!
சுந்தரவல்லி நம்பியின் மகள் வள்ளி.

தவம் பலித்தது மணம் புரிந்தேன் நான்
தேவராஜன், நம்பிராஜன் பெண்களை!”

உடன் பிறந்தவர்கள் என்று அறிந்து
உடன் ஆரத் தழுவிக் கொண்டனர்.

கந்த வெற்பில் விளங்கினான் இரு
காதல் மனைவியருடன் கந்தபிரான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

தக்க காண்டம் நிறைவு பெற்றது.

கந்த புராணம் நிறைவு பெற்றது.

 
6#24i. Kanda Verppu.

Murugan went to Kanda verpu with Valli.

Devayaani was surprised to see the beautiful Valli.

She wanted to know the life history of Valli.

Murugan told her, “Vishnu’s two daughter Amirtha valli and Sundara valli

wished to marry me and did severe penance.

Amirtha valli is you Devayaani and Sundara valli is this Valli.

You prayers have been answered and I have married both of you”

The two sisters embraced each other with great affection.

Kandan lived in Kanda verpu with his beautiful wives.

Daksha Kaandam gets completed with this.

Kanda puranam get completed with this.
 
6#24j. முடிவுரை

தினம் தவறாமல் இந்தக் கந்தபுராணத்தைப் படித்தவர்களுக்கு

மனம் விரும்பும் எல்லா நலன்களும் உறுதியாகக் கிடைக்கும்.


ஆனைமுகன் வாழ்க! வாழ்க! ஆறுமுகன் வாழ்க! வாழ்க!

அகில உலகின் அன்னையும், தந்தையும் வாழ்க! வாழ்க!

அடியவர்கள் வாழ்க! அவர்கள் குடும்பத்தினர்கள் வாழ்க!

அனைத்து உலகமும் அமைதியாக வாழ்க! வாழ்க! வாழ்க!

கந்தனின் அரிய திருவடிகளில் இந்த எளிய புராணத்தைப்

பணிவன்புடனும், பக்தியுடனும் சமர்ப்பணம் செய்கின்றேன்.

உங்கள் உண்மையுள்ள, விசாலாக்ஷி ரமணி.
 
வாழ்த்து.




ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்சை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!




புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்

நன்னெறி ஒழுகச் செய்து நவை அறு காட்சி நல்கி

என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி ஆண்ட

பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி!



என்னாயகன் விண்ணவர் நாயகன் யானை நாம

மின்னாயகன் மறைநாயகன் வேடர்நங்கை

தன்னாயகன் வேற்றணி நாயகன் தன்புராண

தனநாயகம் ஆம்எனக் கொள்கஇஞ் ஞாலமெல்லாம்!
 
போற்றுதல்.





காண்பவன் முதலிய திறமுங் காட்டுவான்
மாண்புடை யோனுமாய் வலிகொள் வான்றொடர்
பூண்பதின் றாய்நயம் புணர்க்கும் புங்கவன்
சேண்பொலி திருநடச் செயலை ஏத்துவாம்.



பிறப்பதும் இறப்பதும் பெயருஞ் செய்கையும்
மறப்பதும் நினைப்பதும் வடிவம் யாவையும்
துறப்பதும் இன்மையும் பிறவும் சூழ்கலாச்
சிறப்புடை யரனடி சென்னி சேர்த்துவாம்.


முழுமதி அன்ன ஆறு முகங்களும் முந்நான் காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான் அவன் தவஞ் செப்பற் பாற்றோ?


முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும்
கொன்னார்வை வேலும் குலிசமும் ஏனைபடையும்
பொன்னர் மணி மயிலுமாகப் புனக் குறவர்
மின்னாள்கண் காண வெளிநின் றனன்விறலோன்.


வற்றாவருள் சேர்கும ரேசன் வண் காதைதன்னைச்
சொற்றாரும் ஆராய்ந் திடுவாரும் துகளுறாமே
கற்றாரும் கற்பான் முயல்வாரும் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவரன்றே.


பாராகி ஏனைப் பொருளாய் உயிர்ப் பன்மையாகி
பேரா வுயிர்கட் குயிராய்ப் பிறவற்றுமாகி
நேராகித் தோன்ற லிலாதாகி நின்றான் கழற்கே
ஆறாத காதலொடு போற்றி யடைதுமன்றே.
 

images


6#14f. கணபதி


இந்திரன் புலம்பினான் துயர்களை
நொந்த உள்ளத்துடன் பிரமனிடம்.


நான்முகன் கூறினான் தேவர் துயரை
நாரணன் உள்ளத்தை உருக்கும்படி!

சென்றனர் அனைவரும் கயிலை மலை,
செப்பினர் தம் துயர்களைச் சிவனிடம்.

“வருந்த வேண்டாம் நீங்கள் எவரும்
பெருந்துயர் நீங்கும் என் திருமகனால்”

சிவனும் உமையும் சென்றனர் ஒருநாள்
சிறந்த ஓவியங்கள் உள்ள ஓர் இடத்துக்கு.

பிரணவ எழுத்துத் தோன்றியது தேவிக்கு
இரண்டுருவாக யானை வடிவாக இணைந்து!

திங்களணிச் சடையும், மூன்று கண்களும்,
தொங்கும் வாயும், ஐந்து கரங்களும் கொண்டு!

யானை முகப் புதல்வன் தோன்றி விட்டான்
ஏனைய தெய்வங்களுக்குத் தலைவனாக!

அறிவுக்கு அறிவாகி எங்கும் நிறைந்தவன்;
அறிவுக்கு அப்பாற்பட்டு என்றும் நிற்பவன்.

அருளே வடிவாகி உருவான ஒரு மகன்;
பொருள் ஆவான் நான்கு மறைகளுக்கும்!

சிவனையும், உமையையும் வணங்கிய
அவனை வாழ்த்தினர் தாய் தந்தையர்.

“எப்பணி இயற்றுமுன் எவ்வித இடையூறும்
அப்பனே உன்னை நினைந்தால் அகலட்டும்!

கணங்களுக்கும் தேவர்களுக்கும் நீயே
கணாதிபதியாக விளங்கி வருவாய்!

கரிமுக அவுணனை அழித்து விடு!
திருமால் சாபத்தை மாற்றி விடு!”

கோவிலில் எழுந்தருளினர் இருவரும்
கோவிலின் வாயிலில் இருந்தார் கணபதி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
உலக மகா அதிசயங்கள்! - Dirty Baker's Dozen of thirteen

'நல்லது' நடக்கும்போது புகை மூச்சு விடுபவர்கள்

'அல்லது' நடக்கும்போது புளகாங்கிதம் அடைவது!

'மெத்தப் படித்தவன்' என்றும் மற்றும் அளவிலாத

'சொத்து பத்து உள்ளவன்' என்றும் இடைவிடாது

தானே பறை சாற்றிக் கொண்டு உலகில் திரிபவர்கள்

"தான் யார்" என்பதை மட்டும் ரகசியமாக வைப்பது!

தன்னால் முடியாததை இன்னொருவர் செய்யும் போது

"என்ன பெரிய சாதித்துவிட்டான்?" என்று பொறுமுவது!

தன் திறமையை நிரூபிக்காமல் / அல்லது முடியாமல்

"என்னைப் போல யார்?"என்று தானே மெச்சிக் கொள்வது!

சிண்டு முடிந்து விட்டு, அதன் பின் நடப்பவைகளைக்

கண்டு களித்து, அதைக் கனிரசத்துடன் கொண்டாடுவது!

அனைவரையும் மனம் மகிழ வரவேற்கும் ஒருவரை

"இனத் துரோகி!!" என்று பொய்யாக அடையாளம் காட்டுவது!

தானே இருக்கும் (இல்லாத) பேர்களைத் திரட்டிக் கொண்டு

வீணே சேற்றை வாரி இறைத்து முழு அசிங்கம் செய்வது!

தொல்லைக் காட்சியில் தொல்லை நிகழ்ச்சிகள் போலவே,

தொல்லை இழைகளில் நுழையாமல் தான் தள்ளியிருந்து,

அல்லல்களைத் தவிர்க்கும் அடிப்படை அறிவும் இல்லாமல்,

பொல்லாங்கு கூறி, பாசாங்கு செய்து, வெறுப்பில் இருப்பது!

ஆயிரம் இழைகள் இருக்கும் போது, அவற்றை விடுத்துப்

போய் நுழைவது பிடிக்காத /காணப்படாத ஒன்றில் என்பது!

சந்தடிச் சாக்கில் உள்ளே நுழையும் விஷமிகள், சிறு

கல்லூரிப் பிரச்சனையைப் போல பெரிதாக்கிவிடுவது!

'மூடு விழாவை' இனிப்புடன் கொண்டாடுபவர்கள் தம்

'திறப்பு விழாவை' எண்ணி நொந்து நூடுலாவது கண்டு !

ஆக்கத் தெரியாதவன் அழித்து இன்பம் அடைவது - ஒன்றை

அடைய முடியாதவனும் அழித்து இன்பம் அடைவது!

அறுவது எழுவது வயது முதிர்ந்த ஆண்சிங்கங்கள்

ஒரு வெறும் பெண்ணைக் கண்டு அச்சம் கொள்வது!

நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை செய்யும் வாய்ச் சொல் வீரர்களிடம்

தஞ்சம் அடையும் தொடை நடுங்கி அல்ல நான்!

வெஞ்சினம் கொண்டவனையே அழித்து விடும்!


கெடுவான் கேடு நினைப்பான்! தன் வினை

சுடும் தன்னையே
! உணர்வீர் விரைவிலேயே !
 
புரியாத புதிர்கள் பல!

வெளிச்சப்பாடு என்று ஒரு அரிய வழிபாடு உண்டு!
வெளிச்சம் போடும் உள்ளே ஒளிந்திருப்பவனை!!

கோவிலுக்குப் போகாமலேயே, அங்கு உள்ள
கூட்டத்தில் இடிபடாமலேயே, காணும் வாய்ப்பு
கூடி வந்தால் அதை எவரேனும் விடுவாரோ?

"மேம்மீ! மேம்மீ!" என்று அழுதுகொண்டு தேடி ஓடும்
மூன்று வயதைத் தாண்டி சிலர் வளராதது ஏன் ?

"நோ பல்" பரிசு என்றும் ஒன்று உண்டு - சிலருக்கு
"நோபல்" கிடைக்கவிட்டாலும் "நோ பல்" கிடைக்கும்!

கிடைப்பதை விட்டுவிட்டு கிடைக்காததற்கு வீணே
கிடந்தது தவிப்பானேன் அரிய பெரிய மேதாவிகள்?

கிட்னி டாக்சினை கழிக்கும் முக்கியமான உடல் உறுப்பு.
கிட்னி டாக்சினை பரப்புவது அல்ல - நம்பாவிட்டாலும்
'டாக்டர்' நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாதது ஏன் ?

தளிர் / கொழுந்து வளர்ந்து இலையாகாமல் என்றென்றும்
தளிர் ஆகவே இருக்கும் அரிய மர்மம் எவர் எவர் அறிவார்?

சிறப்பு விருந்து என்று சப்புக் கொட்டிப் போவார்களா?
சிறப்பு ஐடெம் என்னவென்று தானே கூறிவிட்ட பின்பும்!

இறக்கி விடுவதற்கும், வெளியே போகச் சொல்வதற்கும்
உரிமை வழிப்போக்கனுக்கு எப்போது இருந்துள்ளது?

சத்திரத்தில் இருப்பவர்கள் சொந்தம் கொண்டாடுவதும்,
சத்திரம் தனது என்று நினைப்பதும் விந்தையல்லவா?

இன்னமும் வரலாம்!
 
தாத்தாவிடம் பாட்டி (நான்) கேட்டது !

"வருண் கண்ணா! வருண் கண்ணா!"என்று

விடாமல் கொஞ்சினால் மட்டும் போதுமா? :blabla:

மடியில் அமர வைத்து அந்தக் குட்டியை

முத்தம் இட்டுக் கொஞ்ச வேண்டாமா?" :kiss:

தாத்தாவால் செய்ய முடிந்ததே அது தான்! :nerd:

தாத்தா அதையும் செய்யாவிட்டால் எப்படி? :)
 
கவிதை எழுதப் புராணத்தைப் படிக்க வேண்டாம். :nono:

கவிதை எதைப் பற்றியும் எழுதலாம் அல்லவா! :)

சிந்தையில் நின்ற, நிற்கும் விந்தை மனிதர்கள் :spy:

இந்த நூலில் இனி வெளிப்படுவார் கவிதைகளாக! :typing:
 
எப்போதும் செய்திகளில் அடிபடும்
தப்பான ஸ்வாமிஜியின் தோழி
கோழிக்குஞ்சு (சிக் ) பற்றி 4 வரிகள்.

வாடியம்மா வாடி!

ஜாடிக்கேத்த மூடி!!

ஜேடிக்கேத்த ஜோடி!

கேடிக்கேத்த லேடி!!
 
மாய வலையும் மாய மோகினியும்!

மோகினிகளுக்குப் பஞ்சம் என்பது
மேதினியில் இருந்தது இல்லை!

மாய வலை வந்த பிறகு எவரும்
மாய மோகினியாக மாறலாம்.

கால் அடியைப் பார்த்து மயங்கி
காதலித்தவர்களின் திருமணம்

சிக்கலான பிரச்சனையாக உருவெடுத்து
விக்கிரமனையே வாட்டி வதைத்தது!

குரலைக் கண்டு மயங்கியவன் கதைத்
திரைப்படம் ஆகமாறி வெற்றி பெற்றது!

எதுவுமே தெரியாமல் மயங்குபவர்கள்
என்றும் தயாராகுங்கள் ஏமாற்றத்துக்கு!

மாசற்ற பெயர் இருக்கும் வலையில்!
பேசுவதோ பொய்யும் புனை சுருட்டும்!!

பேரிளம் பெண்ணாக இருப்பார் வயதில்!
பேரழகி ஆவார் மாய வலைத் தளத்தில்!!

இஷ்டம் போல வாழ்க்கையை வாழுவார்கள்!
"இல்லை என்னைப் போல யாரும்!" என்பார்கள்!!

உண்மை முகத்துடன், உண்மை பேசினால்
உற்சாகமாகக் கூடி ஓரம் கட்டுபவர்கள்

பொய் முகத்துடன், பொய் பேசுபவருக்குப்
போய் விரிப்பார்கள் சிவப்புக் கம்பளம்.

இது தான் மாய வலையின் மகிமை!
இது தான் மனித மனங்களின் மடமை!!
 
[h=1]தன்னைப் போலவே![/h]
உலகைத் துறந்து, மனத்தை அடக்கி,
உண்மை சமாதியில் இருந்தார் ஒருவர்.

களவு புரிந்து ஓடி வந்தவன், அவரைக்
களவாளி ஒருவன் என்றே நினைத்தான்.

“வீரர்கள் வருமுன் நான் ஓடிச் சென்று
வீட்டை அடைந்தால் பிழைப்பேனே!”

நொடியில் மறைந்தான் அக்களவாளி.
ஆடியபடியே வந்தான் மிடாக்குடியன்.

“வயிறு முட்டக் கள் குடித்து விட்டு
வழியில் கிடப்பதைப் பாருங்களேன்!

ஒரு பானைக் கள் நான் குடித்தாலும்
தெருவில் விழுந்து புரண்டதுண்டோ ?”

யார் வந்து போனதையும் அறியாமல்,
யார் சொன்ன சொல்லையும் கேளாமல்,

வசை மொழிகளையும் கூட உணராமல்,
அசையாமலேயே இருந்தார் அம்மனிதர்.

மகான் ஒருவர் வந்தார் அவ்வழியே.
மண்ணில் கிடக்கும் மா மனிதனைக்

கண்டதும் கீழே அமர்ந்து மிருதுவாக,
கால்களை வருடலானார் மகிழ்வுடன்!

“எத்தனை பெரிய மகானோ இவர்!
என் பாக்கியம் தொண்டு செய்வதே!”

தன்னைப் போலவே சக மனிதர்களை
உன்னுகின்றான் ஒவ்வொரு மனிதனும்.

நல்லவருக்கு எல்லோரும் நல்லோரே!
அல்லாதவருக்கு அனைவரும் தீயோரே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
வீணே பழிப்பது ஏன்?

"நல்லவன் ஒருவனைக் கண்டு வா!"என்று
பொல்லாத துரியோதனை அனுப்பினால்

நாடு முழுவதும் அலைந்து திரிந்த பின்னர்
"தேடுவது வீண்!" என்றவாறு திரும்பினானாம்.

"பொல்லாதவன் ஒருவனைக் கண்டு வா!" என்று
நல்லவன் தருமனை அனுப்பினால் அவனும்

நாடு முழுவதும் அலைந்து திரிந்த பின்னர்
"தேடுவது வீண்!" என்றவாறு திரும்பினானாம்.

ஒரே நாட்டில், ஒரே நேரத்தில், எப்படி எல்லோரும்
கெட்டவர்களாகவும், நல்லவர்களாகவும் முடியும்?

மக்கள் மாறவில்லை, கண்ட கண்கள் வேறு வேறு.
மக்கள் பிரதிபலித்தனர் காண்பவர் மனநிலையை!

பொல்லாதவனுக்கு எல்லோரும் பொல்லாதவர்களே!
நல்லவருக்கு எல்லோரும் மிகவும் நல்லவர்களே!

மனிதத்தை இழந்தவன் காண்பது விலங்குகளையே!
புனிதத்தை இழந்தவன் காண்பது போக்கிரிகளையே!

தனித்துவத்தை இழந்தவன் காண்பது கும்பலையே!
இனிப்பை இழந்தவன் காண்பது கசப்பினையே!

மோசக்காரன் காண்பது மோசடி செய்பவனை!
நேசம் அற்றவன் காண்பது கல்நெஞ்சினையே!

அத்தனை குறைகளும் தனக்குள் குடியிருக்க
அத்தனை மனிதரையும் வீணே பழிப்பது ஏன்?
 
#8. A poem a day to keep agonies at bay!

எழுத எதற்கு மதுவும், மாதுவும்???

ஓமர் காயம் முதல் லீ போ வரை
ஒரு போலவே விரும்புவார்கள்

ஒரு கையில் மதுக் கிண்ணமும்,
ஒரு தோளில் இளம் பெண்ணும்!

மது உள்ளே இறங்கிய பின்னர்
மாதுடன் கூடிக் கிறங்கிய பின்

ஊற்றெடுக்கும் அவர் கவிதைகள்
மற்றபடி உருவாகாது எதுவுமே!

பெண்கள் எப்படிப் புனைகிறார்கள்
மண்ணில் சிறந்த கவிதைகளை

மயங்கிக் கிறங்காமலும் மற்றும்
மயக்கும் மது அருந்தாமலும்???
 
Last edited:
#51. மூன்று வகை மனிதர்கள்!


உலகின் அனைத்துப் பொருட்களிலும்
உண்டு மூன்று வெவ்வேறு வகைகள்;
உத்தமம் எனவும், மத்தியமம் எனவும்,
உருப்படா அதமம் எனவும் மூவகைகள்.

தேனைத் தவிர எதையுமே உண்ணாத
தேனீக்கள் உன்னதமான உத்தம வகை;
தேன் கிடைக்காவிடில் இறக்குமேயன்றி,
தேடிச் செல்லா அவை வேறு உணவை!

தேனை உண்ட பின்னும், தேடிச் சென்று
தெருவில் இருக்கும் கழிவுகளையும்
பேதம் இன்றி உண்ணும் வெறும் ஈக்கள்
பெயர் பெரும் மத்தியம வகை என்று!

சாணப் புழுக்கள் என்ற ஒரு வகையோ
சாணத்திலே பிறந்து, வளர்ந்து, வாழ்பவை.
தேனில் இட்டால் உடனே மடிந்து போகும்,
சாணத்திலே ஊறும் அவ்வகைப் புழுக்கள்.

நாம் காணும் மனிதரும் மூவகையினர்.
நல்லதை மட்டுமே நாடிச் செல்பவர்;
நல்லதையும், அல்லதையும் நாடுபவர்;
அல்லதை மட்டுமே என்றும் நாடுபவர்.

ஆறு அறிவும், அரிய மனிதப் பிறவியும்
அடைந்தும், அவற்றை வீணாக்கலாமா?
நல்லதையே நாடி, நன்மைகளே செய்து,
நல்லதையே எண்ணி நலம் பெறுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE THREE TYPES OF PEOPLE.

Everything in the world can be divided into three types – the Uththamam, the Madhymam and the Adhamam. Men can also be divided into these three types.

The honey bees spend their entire lives looking for nectar. They will settle for nothing less than the best – the nectar. If they can not find enough nectar, they would rather die than eat anything else. These form the Uththamam among the various insects.

The house fly will drink honey. It will also go and eat the garbage strewn on the road. It has no discretion between the good and the bad and will accept anything it finds. It forms the Madhyamam among the insects.

The maggots found in the rotting cow-dung can survive only there! If offered honey, they will die! These form the Adhamam among the insects.

Men are also of these three types. Those who like the honey bee always go in search of the best are the Uththmam. Those who accept the good and the bad without any discretion are the Madhyamam and the men who always go in pursuit of the bad things are the Adhamam.

Human life is a precious gift of God. We should not waste it in lowly things and pursuits. We should always aim for the good things which will help us both in worldly matters and spiritual matters.
 
Bees do sting, yet their predominant behaviour is described uththamam. If you ruffle them too often you can experience their Adhamam side too.
 
Back
Top