A poem a day to keep all agonies away!

நினைப்பதும் ........நிகழ்வதும்!

தமிள் வாள்க = > தமிழை ஒழிப்பது :smash:


புறக்கணிப்பது => தழைக்க வைப்பது


ஓரம் கட்டுவது = > உயர்த்தி விடுவது. :thumb:


ஹைலைட் செய்வது => அண்டர்லைன் செய்வது.

அறிவைப் பறைசாற்றுவது => அறியாமையைத் தமுக்கடிப்பது. :drum:


அவையில் முந்துவது => நகைப்புக்கு ஆளாவது

செல்வாக்கைச் செப்புவது => இல்லாததை நிரூபிப்பது. :deadhorse:


கூட்டம் கூட்டுவது => இயலாமையை ஒப்புக் கொள்வது.
 
தமிளை வாள வைக்க எண்ணிச் சிளர்

கிலம்பும் வேலையை எண்ணுகையிள்

உல்லம் மகிள்ந்து அத்துடன் உடளும்

புள்ளரித்து நிள்ளாமள் தல்லாடுகிறது!
நம் தந்தை நகைச்சுவையாகச் சொல்லும் இரண்டு, நினைவுக்கு வருகின்றன!

1. ஆசிரியர் மாணவனிடம்:
''நீ அறிந்து கொல்ல வேண்டியது 'லகர, லகர, லகர' வேறுபாடுகல்!'' :decision:


2. ஓர் அரசியல்வாதி, மேடைப் பேச்சில்:

''எந்த மொளியிலும் இல்லாத இந்த எளவு எளுத்து, தமிள் மொளியில் மட்டும் ஏன்? சனி ஒளியட்டும்!'' :director:
 
பேசும் போது நம் :violin:
காதை ராவுகிறார்கள்!

எழுதும் போது நம் :scared:
கண்ணை ராவுகிறார்கள்!!

அமிழ்து அமிழ்து என்று
தொடர்ந்து கூறினால்

தமிழ் தமிழ் என்ற ஓர்
இனிய சொல் கேட்கும்! :ear:

அமில்தை அல்லது
அமிள்தைக் கூறினால்

காதுகள் அமிழ்ந்து விடும்
அல்லது அவிந்துவிடும்!
:faint:
 
#20. A poem a day to keep agonies at bay!

கலை விழா

புத்தாண்டை நாம் வரவேற்கா விட்டால்
அது வராமல் இருந்துவிடும் கோபத்தால்.

எத்தனை இடர்கள் வருமோ தெரியாது!
எத்தனை துயர்கள் தருமோ தெரியாது!!

ஆனாலும் கொண்டாடவேண்டும் அதை
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்!

மேடை அமைப்பார்கள் பெரிதாக!
ஜோடிப்பார்கள் திரைகளால் அதை.

இரவைப் பகல் ஆக்கும் விளக்குகள்.
இரவைப் பகல் ஆக்குவர் மக்களும்.

அந்த மேடையில் தான் நடக்கும்
அத்தனை நிகழ்சிகளும் அன்று.

பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள் .
ஆடத் தெரிந்தவர்கள் ஆடுவார்கள்.

சிறு குழந்தைகள் உலா வருவார்கள்
மாறு வேடங்கள் அணிந்துகொண்டு

குட்டிக் குட்டி நாடகங்கள் உண்டு
குட்டிக் குட்டிப் பாடல்களும் உண்டு

எல்லாம் முடிந்ததும் உண்டு ஒன்று
நல்லோரை ஓடவைக்கும் ஒரு கூத்து!

குத்துப் பாடல் ஒன்றை அலறவிட்டு
மொத்தக் கூட்டமும் மேடை ஏறும்!

எதுவுமே தெரியாதவர்கள் செய்வது
இது ஒன்று தானே இருக்க முடியும்!!!

அத்தனை நேரம் கண்டு ரசித்தவர்கள்
அத்தனை பேரும் நாலுகால் பாய்ச்சல்!

ஊராரின் உறக்கத்தையும் கெடுத்து
ஓர் கை பார்ப்பார்கள் ஓசி மேடையை!!

தில்லானா தெரிந்தவர் அதை ஆடுவார்!
தில்லாலங்கடி தெரிந்தவர் அதை ஆடுவார்!!
 
#21. A poem a day to keep agonies at bay!

தாயம் பன்னிரண்டு.


வெறும் ஒன்று இரண்டானது!
இரண்டு பின்னர் நான்கானது!!

நான்கு ஆறாகி, ஆறு எட்டாகி,
இன்று ஆனது பன்னிரண்டாக!

ஜனத்தொகை அல்ல இந்தத் தொகை.
ஜனங்கள் படிக்கும் blog தொகை இது.

நுழையார் கர்மமே என்று கருதுபவர்.
நுழைவர் கற்க விரும்புவர் விரும்பி.

பன்னிரண்டு பல்கிப் பெருகி இன்னும்
பன்மடங்காகிட அருளிட வேண்டும்

ஆனை முகனும், ஆறு முகனும்,
அன்னை கலைவாணி தேவியும்,

அஞ்சன வண்ணக் கண்ணனும்,
அஞ்சனா குமாரன் அனுமனும்!
 
Last edited:
#22. A poem a day to keep agonies at bay!

கிணற்றுத் தவளை.

"அவள் சரியான கிணற்றுத் தவளை!"
அவளுக்குக் கணவன் இட்ட பெயர்.

"என்ன தெரியும் அவளுக்கு? ஜடம்!"
இன்னும் என்னென்னவோ சொல்வார்

வம்பளக்க வருகின்ற நண்பர்களிடம்.
வம்பு வளரக் கேட்பானேன் அதன்பின்.

'அமெரிக்க ரஷ்யா உறவு தெரியாது!
அமைதி இல்லாமல் தவிக்கும் பல

நாடுகளைப் பற்றி ஏதும் தெரியாது!!
வீடே கதி என்று கிடப்பாள் எப்போதும்!"

ஐயா அளக்கிறாரே என்று நீங்கள்
மெய்யாகவே மயங்கி விடாதீர்கள்!

ஐயாவுக்கு அமெரிக்கா பற்றித் தெரியும்
"பையன் என்ன படிகிறான்?" தெரியாது.

பெண் எதிர் வீட்டுப் பையனை பார்த்துக்
கண்ணால் சேதி சொல்வது தெரியாது.

ராக்கெட் போல எகிறும் விலைவாசியில்
பாக்கெட்மணிச் சம்பளம் எப்படிப் போதும்?

வயிறு வாடாமல் அனைவரின் தேவையை
வாயைத் திறக்காமல் பூர்த்தி செய்வது எப்படி?

"இதெல்லாம் நான் ஏன் சிந்திக்க வேண்டும்?
இதையெல்லாம் சிந்திக்க எனக்கு நேரம் ஏது?

அதற்குத் தான் ஒரு ஜடம் இருக்கிறதே!
அதன் பெயர் கூடக் கிணற்றுத் தவளை !!"
 
Last edited:
#22. A poem a day to keep agonies at bay!

#23. நிஜமும் நிழலும்.

குழந்தையும், தெய்வமும்
கொண்டாடும் இடத்திலே!

குழந்தையின் முதல் தேவை
குடும்பத்தினரின் அரவணைப்பு.

எல்லோரும் கொஞ்சவேண்டும்
எடுத்துத் தன்னை முத்தமிட்டு!

கண்களால் அவர் கண்களுக்குள்
கண் சிமிட்டாமல் உற்று நோக்கி,

யார் வந்தாலும் ஸ்கேன் செய்யும்
யாரை நம்பலாம் என்பதைச் சரியாக!

உடனே அவரிடம் பாய்ந்து செல்லும்!
உடனே பின்வாங்கும் பிடிக்காவிட்டால்!!

skype chat சௌகரியமானது நமக்கு!
போன் போலப் பேசலாம், பார்க்கலாம்!

ஸ்க்ரீன் 32" என்றால், தெரிவார்கள்
உண்மையில் எதிரில் இருப்பதுபோல்.

எடுத்துக் கொள்ளச் சொல்லி அழும்
எடுத்துக் கைகளை முன்னாள் நீட்டி!

அவர்களும் கைகளை நீட்டினால் சற்று
அழுகை குறையும், ஆனாலும் ஐயம்...

"என்னை எடுத்துக் கொள்ளாதது ஏன்?
என்னை எடுத்துக் கொஞ்சாதது ஏன்?"

ஆறு மாதங்களில் ஆறிவு வளரவே இன்று
அறிந்து கொண்டது பேதங்களை நன்று!

இப்போதெல்லாம் அழுவது இல்லை.
இரண்டு கைகளால் தொடும் அவர்களை.

தட்டையான 2D என்றால் வெறும் நிழல்!
உருண்டையான 3D என்றால் நிஜம்! :clap2:
 
Last edited:
Hello VR Mam,post 1607 ,too good makes us to feel,imagine these lines as its happening in front of our vision.( I just luv your style of presentation,simple & superb.):yo: :cheer2:.
 
#24. Larks and Owls

ஒவ்வொருவரின் உடலிலும் உண்டு
ஒரு விசேஷ biological clock என்பர்.

அந்த நேரப்படி உண்டு உறங்கினால்
எந்த வியாதியும் வராது உடலில்.

சொந்த வேலை காரணமாகவோ
சொந்த சௌகரியத்துக்காகவோ

அதை நாம் ஒரு கை பார்த்தால்
அது பழுதாகிப் பிறகு பயன் தராது.

இங்கு குழந்தைகளின் நேரத்தையே
தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றுகிறார்கள்.

விளைவு.....???

உணவு கிடைக்காது பசிக்கும் போது!
உறங்க முடியாது விரும்பும் போது!

எப்போது எவ்வளவு உண்ணும் ???
எப்போது எவ்வளவு உறங்கும்???

எவருமே அறியார்; குழந்தையும் கூட.
எங்குமே கண்டதில்லை நான் இதுபோல!
 
விசாலாக்ஷி ரமணி Madam
Excellent work, it is Gift from God you got.
I read a few of your Kavithai, i really enjoyed it. Can i share them with my contacts in yahoo/Face Book?
God Bless you
Regards
Padmanabhan.J
 
விசாலாக்ஷி ரமணி Madam
Excellent work, it is Gift from God you got.
I read a few of your Kavithai, i really enjoyed it. Can i share them with my contacts in yahoo/Face Book?
God Bless you
Regards
Padmanabhan.J

dear sir,
namaskars.

I firmly believe that every lab-dab of our heart, every breath we take and every thought we think and every action we do is a gift of God. You are welcome to share my poems with your friends.

Here is the link of my blog of 185 poems for easy sharing with your contacts.

எணà¯￾ணஙà¯￾களினà¯￾ வணà¯￾ணகà¯￾ கலவை | A rainbow of thoughts relating Mankind to God and the World.


<visalramani.wordpress.com> will also work equally well!

In the home page you find the links of two other blogs of poems namely
64 Thriu Vilaiyaadalagal (128 poems) and Kandha Puranam (360 poems)

T
he English translation of the poem is given below each of them .
So even those who do not know Tamil can still benefit from these stories and morals.

with warm regards,
Visalakshi Ramani.
 
Last edited:
#25. ரோஸும், சேறும்!

நம் எண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை.
நம் செயல்களும் ஏற்படுத்தும் தாக்கங்களை.

நல்ல தாக்கங்கள் ஏற்படும் நாம் செய்கின்ற
நல்ல செயல்களால், நல்ல எண்ணங்களால்!

கூடை நிறைய ரோஜா மலர்களை எடுத்துக்
கூட்டத்தினருக்குக் கொடுக்கும் கரங்கள்

மலர்களின் மணம் பெறும்; வாசம் வீசும்.
மனம் மகிழும்; நற்செயல்கள் விளையும்.

கூடை நிறைய சேற்றை எடுத்துச் சென்று
கூட்டத்தின் மீது வாரி வீசினால் உடல்

நாறும் வாரி வீசிய சேற்றின் நாற்றத்தால்!
நாறும் மனமும் தீச் செயலின் தாக்கத்தால்.

ரோஸா? சேறா? எது வேண்டும் நமக்கு?
மணமா? நாற்றமா? எது வேண்டும் நமக்கு??


 
#26. A poem a day to keep agonies at bay!

ஜடமும், ஐட்டமும்.

ஜடம், ஜடம் என்று சொல்லிச் சொல்லிச்
சலித்துக் கொள்ளாதீர்கள் அன்பர்களே !

ஜடமாக அவள் இருப்பதால் தான்
ஜம்பம் சாய்கின்றது உங்களுடையது.

ஐட்டதைப் பார்த்து ஜொள்விடுபவரே!
ஐட்டம் உமது மனைவியாகி இருந்தால்,

அடுத்த வீட்டு ஆபீசர்
பையனுடன் சேர்ந்து
கடுக்காய் கொடுத்து மறைந்திருப்பாளே!

 
Last edited:
#27. A poem a day to keep agonies at bay!


பயம் காட்டு அல்லது boycott.

இன்றைய உலகின் தாரக மந்த்ரம்
"பயம் காட்டு அல்லது boycott."

இருக்கும் இல்லாத செல்வாக்கைக் காட்டி
பிறரை அச்சுறுத்துவது முதல் படி ஆகும்!

மொத்தமாக நிராகரித்து விடுவது அல்லது
மொத்தமாகத் தள்ளி வைப்பது என்பது

கற்பனை வளம் இல்லாதவர்கள் செய்யும்
அற்பமான ஒரு செயல் ஆகும் உலகினில்.

அவர்கள் அறியவில்லை இன்னமும் இதை.
எவராலும் சிலரை நிராகரிக்க முடியாததை.

நயந்து கொண்டு வருபவரைத் தள்ளலாம்!
சுயம் பிரகாசியை என்ன செய்ய முடியும்???

 
Foot notes:-

Boycott




Captain Charles Cunningham Boycott was an agent for a land lord in Ireland, in the 19Th Century. When the landlords tried to impose heavy taxes on their tenants, the rebel leaders advised the tenants to isolate the greedy land owners like the leper in the past!

Boycott became the first victim of this excommunication from the rest of the society.The lives of his family members was made so difficult by the non cooperation of the others that soon the entire family had to flee to England.

The name of Captain Boycott became a part of English language meaning “refuse social or commercial relations with a person or nation by common consent and refusing to handle his goods.”
 
#28. A poem a day to keep agonies at bay!

Trump card!

பெண் பார்ர்க்க வந்த ஓர் இடத்தில்
பெண் வெளிய வரவே இல்லையாம்.

பின்னர் தெரிந்ததாம்அந்தப் பெண்
இன்னமும் பால்குடியை விடவில்லை!!!

பதினைந்துவயத்தில் தாய்ப்பால் குடியா??
பைத்தியம் அன்னைக்கா பெண்ணுக்கா??

நான் முதலில் நம்பவில்லை இந்தச் செய்தியை.
நான் இன்று நம்புகின்றேன் இந்தச் செய்தியை!

இங்கே ஐந்துஆறு வயதுக் குழந்தைகள் சிலர்
இன்னமும் தாய்ப்பால் தினமும் குடிக்கிறார்கள்!!!

தாய்மார்களே சொல்லுவதால் இதனை ஒரு
பொய்யென்று தள்ளவும் ஒரு வழி இல்லை.

அன்று என் தந்தையும் தாயும் கூறினார்கள்
நன்று ஒரு வயதில் தாய்ப்பாலை நிறுத்துவது.

இங்கோ அதை நிறுத்தும் எண்ணமும் இல்லை.
இங்கு அது செல்லுபடியாகும் ஒரு trump கார்டு!

எதற்கும் அடிபணியாத குழந்தைகளை மிரட்ட
"எதிர் பார்க்காதே இனி special privileges !!!"

எத்தனை நாட்கள் தொடரும் இந்தக் கதை ???
எப்படி மிரட்டுவர்கள் அதை நிறுத்திய பின்னர்???

எதற்கும் மசியாத அந்த முரட்டுக் குழந்தையின்
எதிர்காலம் என்ன ? எண்ணவே அஞ்சுகிறேன் !

 
சிறியதும், பெரியதும்!

உணவு அருந்த அழைத்தார்கள்
உள்ளன்புடன் ஒரு வீட்டினர்.

மெல்லிய இனிய இசை ஒலிக்க,
மெல்லிய விளக்கொளி ஒளிர,

வீடு ஒரு கோவில் போல இருக்க
வீண் போகவில்லை எங்கள் பயணம்.

உணவும் வீட்டுத் தயாரிப்பு என்பதால்
காணவும் இனிமை, உண்ணவும் சுவை

எல்லாம் முடிந்ததும் நாங்கள் விடை
சொல்லிக் கொண்டு கிளம்பும் வேளை;

பெரியவருக்குப் போகவே மனம் இல்லை!
"இருந்து விடலாமா நான் இங்கேயே?"

நல்ல கேள்வி கேட்டார் இவர் என்றால்,
செல்லக் குட்டியும் உடனே சொல்கிறாள்.

"இருந்து விடுகிறேன் நானும் இங்கேயே!"
விருந்து உண்ட இடத்தில் தங்கி விடுவதா???

 
Thanks Madam.
Your poems are special , it is not hurting any culture, any land, any religion and thought provoking.
God Bless you
Regards
Padmanabhan.J
 
Thanks Madam.
Your poems are special , it is not hurting any culture, any land, any religion and thought provoking.
God Bless you
Regards
Padmanabhan.J


The Bheeshma pitaamaha of the forum also

considers me as a non-controversial writer -

in the true sense of the term.
Thank you very much sir :pray2:

I study human nature and behavior and

do not find pleasure in condemning any country or culture.

 
Thanks Madam.
Your poems are special , it is not hurting any culture, any land, any religion and thought provoking.
God Bless you
Regards
Padmanabhan.J

dear Sir,

If you wish to read all my posts consisting of funny stories, humorous

episodes and messages with morals (undiluted by the other posts)

please visit my website by clicking on the link given below.

The World of Words


K. Howzaat? consists of 180 such posts.

Q.
சிந்திக்க, சிரிக்க! has 150 such posts.

The blog is a treasure house of words in English and Tamil and many other useful info besides.

with warm regards,
Visalakshi Ramani.
 
#30. A poem a day to keep agonies at bay!

Buffet

உடல் வீங்கி விடுகிறார்கள் இங்கு
உள்ள மனிதர்கள் எல்லோருமே!

"அடித்து இறக்குவது" என்று கேட்டுள்ளேன்!
அதை நேரில் கண்டேன் உணவு விடுதியில்!

கொடுத்த பணத்துக்கு வஞ்சனை இன்றி
அடித்து இறக்குகிறார்கள் உணவை உள்ளே!

பத்து டாலர் கொடுத்துவிட்டு உண்பதோ
பார்க்கும் உணவுவகைகள் எல்லாமே!

எப்படிக் கட்டுப் படியாகும் ஓனருக்கு?
எப்படியோ ஆகின்றது நிச்சயமாக!

இல்லாவிட்டால் என்றைக்கோ இதை
இழுத்துப் பூட்டி இருப்பார்கள் அன்றோ!

நினைவுக்கு வந்தது இந்தப் பொன் மொழி!
Don't dig your grave with your fork and knife!
 
நம்மூரிலும் வந்து விட்டது இந்த புஃப்ஃபெ சாப்பாடு முறை..கொடுத்த காசுக்கு வஞ்சனயில்லாமல் சப்பிட்டு விட்டு தாம்பூலமும் தரிக்கிறார்கள். ஆனால் இதை “ உங்கள் கைககளால் உங்கள் சவக்குழியயை தோண்டாதீர்கள் என்று தான் சொல்லவேண்டும்..ஏன்னென்றால் இங்கே சாப்பிடுவது கைகளால்தான்...

Cheers VR Maam.!!!
 
dear Mr. Manohar kumar,
In India, people do not eat out as often as they do here in USA.
(At least the people in my circle).
Here is food bought outside is cheaper, tastier and offers more varieties.
No need to have a kitchen, wash vessels or stock your pantry and fridge.
Just buy, eat, toss the containers/plates and walk away fully stuffed and satisfied!

 
A few years ago during one of our visits to Hyderabad, my nieces wanted to treat us in a fancy new place famous for snacks. The cost per head was a mere 80 Rs and the choices were 32 - if I remember correctly.

Everything edible and vegetarian was there... idlies, vada with saambar, dahi vada, bajji, bonda, pakoda, all kinds of dosas, many kinds of sweets, bread, cakes, buns and dokla and what not.

Believe me we tasted everything offered there! Thinking back I am amazed that I was brainwashed enough to try such a feat!

People are encouraged to overeat in such places with unlimited choices and limited charges!
 
# 31. A poem a day to keep the agonies at bay.

"ஜெட் லேக் எப்போப் போகும்?"

நாடு நாங்கள் திரும்பும் முன்னரே,
வீடு நாங்கள் திரும்பும் முன்னரே,

விசிட் செய்யத் தயார் ஆகிவிட்டனர்
விருந்தாளிகள் இந்தியாவில் சிலர்!

ஆறு மாதங்கள் பூட்டிக் கிடந்த வீடு
தாறுமாறாக இருக்கும் அல்லவா?

தூசி தட்டி, சுத்தம் செய்து, வீட்டின்
மாசுக்களைச் சரிசெய்ய வேண்டாமா?

"அடுந்த நாளே வர வேண்டாம் நீங்கள்,
அடுத்த வாரம் வாருங்கள்!" என்றால்...

அதி மேதாவித்தனமான கேள்வி வரும்!
"அது சரி எப்போப் போகும் உன் ஜெட்லேக்?"

ஜெட்லாக் நாம் அழைத்து வரும் விருந்தாளியா?
ஜெட்லாக் ஒரு நாளும் இருக்கலாம் அல்லது

ஒரு வாரம் பத்து நாள் இருக்கலாம் அல்லவா?
சரியாகப் பன்னிரண்டு மணி நேரம் வேறுபாடு!

ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடாமல் பாடி
ஆடிச் சரியாக வேண்டும் இந்திய நேரத்துக்கு!

பகல் எல்லாம் தூக்கம் கண்களைச் சுழற்றும்;
இரவெல்லாம் பசி சிறு குடலைப் பிசையும்.

அடுக்களையில் சமைக்க எதுவும் இருக்காது!
அடுக்க வேண்டும் அத்தனையையும் வாங்கி!

வாழ்க்கையில்
பாலக்கா
ட்டையும், பழனியையும்
வழக்கமாகத் தாண்டி இராதவர்களுக்கும்;

எதையும் கேட்டுப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும்;
இது புரியும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய தவறே!

 
Last edited:
Back
Top