3 # 13. சதமுகன்.
ஆயிரம் பேரைக் கொன்ற வீரவாகுவின்
ஆற்றல் கண்டான் அசுரன் சூரபத்மன்.
அருகில் இருந்த சதமுகனிடம் சொன்னான்,
"விரைந்து பிடித்து இழுத்துகொண்டு வா!"
சூரபத்மனின் ஆணையைக் கேட்டவன்
நூறு ஆயிரம் வீரர்களுடன் சென்றான்.
வீரவாகுவை வழிமறித்தான் சதமுகன்
"விட்டுவிடுவேன் என எண்ணினாயா?"
நூறு ஆயிரம் வீரர்களும் எய்தனர்
ஒருசேரப் பற்பல படைகலன்களை.
முடிகள் இருபதினாயிரம் கொண்ட
மலையைப பறித்து எறிந்தார் வீரவாகு.
படைஞர்கள் உடல் உடைந்து போனது.
படையின்றிப் பொருதான் சதமுகன்.
மலையைப் பிடுங்கி வீரவாகு வீச
கணைகளால் அழித்தான் சதமுகன்.
வில்லை முறித்துவிட்டார் வீரவாகு.
தொல்லை தரக் கரங்களை நீட்டினான்.
மார்பில் தாக்கி, நிலத்தில் வீழ்த்தி
மண்ணில் தேய்த்துக் கொன்றார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
ஆயிரம் பேரைக் கொன்ற வீரவாகுவின்
ஆற்றல் கண்டான் அசுரன் சூரபத்மன்.
அருகில் இருந்த சதமுகனிடம் சொன்னான்,
"விரைந்து பிடித்து இழுத்துகொண்டு வா!"
சூரபத்மனின் ஆணையைக் கேட்டவன்
நூறு ஆயிரம் வீரர்களுடன் சென்றான்.
வீரவாகுவை வழிமறித்தான் சதமுகன்
"விட்டுவிடுவேன் என எண்ணினாயா?"
நூறு ஆயிரம் வீரர்களும் எய்தனர்
ஒருசேரப் பற்பல படைகலன்களை.
முடிகள் இருபதினாயிரம் கொண்ட
மலையைப பறித்து எறிந்தார் வீரவாகு.
படைஞர்கள் உடல் உடைந்து போனது.
படையின்றிப் பொருதான் சதமுகன்.
மலையைப் பிடுங்கி வீரவாகு வீச
கணைகளால் அழித்தான் சதமுகன்.
வில்லை முறித்துவிட்டார் வீரவாகு.
தொல்லை தரக் கரங்களை நீட்டினான்.
மார்பில் தாக்கி, நிலத்தில் வீழ்த்தி
மண்ணில் தேய்த்துக் கொன்றார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.