3 # 21.d. தருமகோபன் பதில்.
"நவமணிகள் பதித்த பொற்கலப்பையால்
நிலபுலன்களை உழுவது போன்றதே;
அண்டர்கோன் ஆகிய மாவீரன் நீயும்
அச்சிறுவனிடம் சென்று போர்புரிவது!
அவன் என்ன சிவபெருமானா? அல்ல!
அவன் என்ன நெடிய திருமாலா?அல்ல!
அவன் என்ன நான்முகனா? அல்லவே!
அவன் என்ன நமனா? அல்லவே!
அண்டர்கோன் சூரனான உன்னைக்
கண்டதும் ஓடி ஒளிவான் சிறுவன்!
சிறுவனோடு போரிட நீயே சென்றால்
சிறுமையால் நாணுவர் நம்குலத்தவர்.
நம்மைக் கண்டு நகைப்பர் தேவர்;
நம்மிலும் தாழ்ந்த மனிதர்கள் கூட.
அகத்தியரின் சாபத்தால் மட்டுமே
அழிந்தது கிரௌஞ்சம் அறிவாய்!
தகுந்த படைக்கலன்கள் இன்மையால்
தாரகனும், வஜ்ஜிவாகுவும் அழிந்தனர்.
ஒரு படைத் தலைவனை அனுப்புவாய்.
முருகனை அவனே போரில் வெல்வான்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
"நவமணிகள் பதித்த பொற்கலப்பையால்
நிலபுலன்களை உழுவது போன்றதே;
அண்டர்கோன் ஆகிய மாவீரன் நீயும்
அச்சிறுவனிடம் சென்று போர்புரிவது!
அவன் என்ன சிவபெருமானா? அல்ல!
அவன் என்ன நெடிய திருமாலா?அல்ல!
அவன் என்ன நான்முகனா? அல்லவே!
அவன் என்ன நமனா? அல்லவே!
அண்டர்கோன் சூரனான உன்னைக்
கண்டதும் ஓடி ஒளிவான் சிறுவன்!
சிறுவனோடு போரிட நீயே சென்றால்
சிறுமையால் நாணுவர் நம்குலத்தவர்.
நம்மைக் கண்டு நகைப்பர் தேவர்;
நம்மிலும் தாழ்ந்த மனிதர்கள் கூட.
அகத்தியரின் சாபத்தால் மட்டுமே
அழிந்தது கிரௌஞ்சம் அறிவாய்!
தகுந்த படைக்கலன்கள் இன்மையால்
தாரகனும், வஜ்ஜிவாகுவும் அழிந்தனர்.
ஒரு படைத் தலைவனை அனுப்புவாய்.
முருகனை அவனே போரில் வெல்வான்!"
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.