• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 10

10# 8. ஸ்வாயம்பு மனு

பெற்றான் பகையற்ற அரசை ஸ்வாயம்பு மனு;
இயற்றினான் நற் கர்மங்களை விரும்பியபடி.

பிறந்தனர் மகன்கள் பிரியவிரதன், உத்தானபாதன்;
சிறந்தனர் பெரும் புகழைப் பெற்று இந்த இருவரும்.

இரண்டாவது மனுவானான் சுவாரோசிஷன்;
பிரியவிரதனின் மகனாகப் பிறந்தவன் இவன்.

அமைத்தான் பர்ணசாலை காளிந்தி நதிக்கரையில்;
சமைத்தான் தேவியின் திருவுருவம் மண்ணினால்.

தவம் செய்தான் பன்னிரு ஆண்டுகள் பக்தியுடன்;
தவிர்த்தான் சருகுகள் தவிர பிற அனைத்தையும்.

காட்சி தந்தாள் கண்முன்னே மனம் கனிந்த தேவி;
மாட்சிமை வாய்ந்த வரங்கள் பல தந்தாள் தேவி!

“ஆதிபத்யம் தந்தேன் எல்லா மன்வந்தரங்களிலும்!”
அம்பிகையின் பெயர் ஆகும் ஜகத் தாத்ரி தாரிணி.

மூன்றாவது மனு பிரியவிரதனின் புத்திரன் உத்தமன்;
மூன்று ஆண்டுகள் இருந்தான் உபவாசம் உத்தமன்.

கங்கைக் கரையில் உச்சரித்தான் வாக்பவத்தை;
தந்தாள் தேவி பயமற்ற ஆட்சியும், சந்ததிகளும்.

நான்காவது மனு பிரியவிரதனின் மகன் தாமசன்;
நர்மதைக் கரையில் ஜெபித்தான் காமபீஜத்தை.

மகிழ்வித்தான் தேவியை நவராத்திரி பூஜையில்;
வழிபட்டான் வசந்த காலம், சரத் காலங்களில்!

பெற்றான் பகைவர் பயமில்லாத அரசாட்சியை;
பெற்றான் வலிமை மிக்க பத்துப் புத்திரர்களை.

ஐந்தாவது மனுவானான் சகோதரன் ரைவதன்;
வந்தித்தான் காளிந்தி கரையில் காமபீஜத்தால்!

தந்தாள் தேவி சகல சித்திகள் தரும் வலிமையை!
தந்தாள் அச்சமில்லா அரசும், அழியாத சந்ததியும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

10#8. The lineage of the Manus

SWAymabuva Manu had two mighty sons named Priyavrata and UttAnapAda. They governed their kingdoms well and attained great fame.

The son of Priyavrata, SWArochisha became the second Manu. He had indomitable valour and wisdom. He built his hermitage near the banks of river KAlindi. He made an image of the Devi with clay and worshiped the her with great devotion,

He practiced very severe austerities, eating only dry leaves, and passed twelve years in the forest. Devi Bhagavati with brilliance of the thousand Suns, gave darshan to him.

She was pleased with his devotional stotrams. The Devi granted to him the sovereignty for one Manvantara. This Devi became famous by the name TAriNi JagaddjAtri.

SvArochisha obtained safely of a kingdom which had no enemies. Then establishing the Dharma duly, he enjoyed his kingdom with his sons; and when the period of his manvantara expired, he went to the Heaven.

Priyavrata’s son named Uttama became the third Manu. On the banks of the Ganges, be practiced penance and repeated the Bheeja mantra of Vaagbava. After three years Devi blessed him many boons. He got the foe-less-kingdom and a continual succession of sons and grandsons.

TAmasa another son of Priyavarata became the fourth Manu. He practiced severe penance repeating the KAma Bheeja Mantra, on the southern banks of river NarmadA.

In the spring and in the autumn he observed the nine nights’ vow. He too enjoyed the large kingdom without any fear from any foe or from any other source of danger. He was blessed with ten powerful and mighty sons. Raivata, the young brother of TAmasa, became the Fifth Manu. He practised austerities on the banks of KAlindi repeating the KAma Beeja Mantra.

He obtained indomitable power and a continual line of sons, grandsons, etc. Raivata Manu established the several divisions of Dharma. He enjoying all the worldly pleasures while he lived and went to the Heaven after his life on earth
.
 
SEkkizhArin Periya PurANam

#37a . திரு கழறிற்றறிவார் நாயனார் (1)

மலை வளம் மிகுந்த அழகிய சேர நாட்டுக்குத்
தலைநகர் கொடுங்கோளூர் என்ற மாகோதை.

ஆலயத்தின் பெயர் திருவஞ்சைக் களம் - அதில்
ஆண்டவனின் பெயர் ஆகும் அஞ்சை களத்தீசுரர்.

சிவகங்கை புண்ணிய தீர்த்தம் அத்தலத்தில்;
சிவகாமியான அன்னை இங்கு உமையம்மை.

மாகோதையார் பிறந்தார் சேரமன்னரின் குலத்தில்;
மாகோதையார் விரும்பவில்லை அரச போகங்களை.

மன்னருக்குரிய படைக்கலப் பயிற்சி பெறவில்லை!
மனம் விரும்பிக் கற்றார் இவர் சிவாகம நூல்களை!

செய்து வந்தார் நறுமண மலர்களால் அரன் வழிபாடு
செய்து வந்தார் பயனுள்ள சிவத் தொண்டுகள் பல.

பூமாலைகளைச் சாற்றி வழிபட்டதுடன் - உளமுருகிப்
பாமாலைகளையும் சாற்றினார் சிவபெருமானுக்கு.

செங்கோற்பொறையன் ஆவான் அன்று சேரமன்னன்;
செங்கோலைத் துறந்தான்; ஆற்றினான் அருந்தவம்.

அரசன் ஆக்கினர் மாக்கோதையாரை அமைச்சர்கள் ;
அரசப் பதவி அரன் தொண்டுக்கு இடையூறு அன்றோ?

"அரசன் ஆவேன் அரன் அனுமதி அளித்தால் மட்டுமே.
அரசுக் கட்டில் ஏற மாட்டேன் அனுமதி இன்றேல்!" என

ஆலயம் சென்றார் அமைச்சருடன் மாகோதையார் - அரன்
அளித்தான் மாகோதையாருக்குச் சேர நாடாளும் அனுமதி.

அளித்தான் அரன் வல்லமை, வள்ளண்மை, வாகனம் - மேலும்
அளித்தான் ஆயுதங்களும், விலங்குகள் பேச்சை அறியும் திறனும்.

மணிமுடி தரித்தார் மாகோதையர் - சென்றார் அரன் ஆலயம் ;
பணியச் சென்றார் திருவஞ்சைக் களத்தீசுவரர் திருவடிகளை.

கண்டார் உவர்மண் மேனியுடைய ஒரு வெற்றுடல் வண்ணானை;

கண்டார் வெண்ணீற்றைக் காய்ந்த உவர்மண்ணின் சுவடுகளில்.

வணங்கினார் சேரமன்னர் அந்த வெற்றுடல் வண்ணானை;
வணங்கினர் மக்கள் அதிசயித்துத் தம் புதிய சேர மன்னனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#37a. Thiru ChEramAn PerumAL nAyanAr (1)

The capital city of the mountainous ChEra kingdom was MAkOdhai. Thiru vanjaik kaLam was the name of the temple situated in it. The name of the Siva residing there was Anjai KaLatheeswarar. The name of God's consort was Umai Ammai and the holy theertham was the river Sivagangai.

MAkOdhaiyAr was born in the family of the ChEra kings. He was not interested in the life of luxury and pleasure associated with the kings and palaces. He was not interested in learning the arts and sciences needed for ruling a kingdom. He was eager to learn the Siva Agamas very thoroughly.

He worshiped Lord Siva with fresh fragrant flowers. He did many acts of pure service to his fellowmen. In addition to offering Lord Siva with the flower garlands, he also offered the garland made of his padhigams singing the praise of Lord Siva.

SengOl Poraiyan who the king ruling ChEra kingdom at that time decided to spend the rest of his life in doing severe penance. He gave up his kingdom to become seeker and went to the forest to live a life filed with austerities and penance.

The ministers decided to make MAKOdhaiyAr as their new king. But becoming a king would have so many responsibilities attached to it that a calm life devoted to serving Lord Siva and his devotees would become impossible.

MAkOdhaiyAr said,"I will agree to become the new king only if Lord Siva grants me the permission, not otherwise." Lord Siva gave him not just His permission but also strength, valor, generosity, vehicle, weapons and the ability to understand the speech of animals.

So MAkodhaiyar was made the new king of ChEra kingdom. He went to the temple of Lord Siva on his royal elephant. He came across a washer man who was carrying a load of sand drown used for washing dirty clothes. The salt in that sand had dissolved in his sweat and dried up again making it look like a coating of Vibhoothi - the holy ash.

MAkOdhaiyAr got down from his elephant and paid his obeisance to the bare bodied washer man. The citizens were thrilled by the simplicity and humility of their new king and praised him for those fine qualities.



 
bhagavathy bhaagavatam - skanda 10

10# 9. ஆறாவது மனு

அடைந்தான் ராஜ்ஜியம் தேவியை உபாசித்து
ஆறாவது மனுவாகிய அங்க புத்திரன் அன்று.


சரணடைந்தான் புலக முனிவரை மன்னன்;
பெற விரும்பினான் பெரும் சம்பத்துடன்


பூமண்டல ஆதிபத்தியம், தோள் வலிமை,
பூமியில் அரிய அஸ்திரங்கள்; சஸ்திரங்கள்;


நீண்ட ஆயுள்; ராஜ போக வாழ்வு;
நிறைய சந்ததி, இறுதியில் மோக்ஷம்!


“அருள்வாள் இவை அனைத்தையும் தேவி!
அரசே பூஜிப்பாய் இடைவிடாது தேவியை!”


“கூறி அருளுங்கள் எது தேவி பூஜை என்றும்,
கூறி அருளுங்கள் எப்படிச் செய்வது என்றும்!”


“மந்திரங்களில் சிறந்தது வாக்பவ மந்திரம்!
தந்து உயர்த்தும் புத்தியையும், சித்தியையும்.


தந்தது முத்தொழில்கள் செய்யும் வல்லமையை
இந்த மந்திரமே பிரம்மன், விஷ்ணு, ருத்திரனுக்கு!”


வழங்கினார் ஆசிகள் புலக முனிவர் – மன்னன்
தொழுதான்; ஏகினான் விரஜ நதிக் கரைக்கு!


தளிர்கள் மட்டுமே உணவு முதலாம் ஆண்டு;
தண்ணீர் மட்டும் உணவு இரண்டாம் ஆண்டு;


காற்று மட்டுமே உணவு மூன்றாம் ஆண்டு – என
மாற்றி மாற்றிச் செய்தான் பன்னிரண்டு ஆண்டு.


ஜெபித்தான் வாக்பவ மந்திரத்தை இடைவிடாது;
சுப மயமானது அவன் உள்ளம் மெல்ல மெல்ல.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


10#9a. The Sixth Manu

ChAkshusha – the son of King Anga – became the Sixth Manu and obtained the ruler-ship of the world by worshiping Devi. He went to Sage Pulaka with this request.


“I wish to obtain unlimited wealth, the ruler-ship of the whole earth, power, valor, the rarest asthras and sasthras, a long life span, all the pleasures of the kingly life, worthy sons and grandsons and at last total liberation or mukti”


Sage Pulaka told the king, “Devi can grant you everything you wish for and even much more. Worship her to get your desires fulfilled Oh King!”


SAkshusha asked the sage Pulaka,”Please instruct me about Devi worship and the way to do it correctly”


“VAgbhava Mantra is the best among all the Devi mantras. It bestows buddhi and siddhi and uplifts a person. It is this mantra which has given the Trinity the knowledge and power to do their duty flawlessly. ”


The king paid his obeisance to the sage and took leave of him. He went to the banks of river VirajA.


He observed strict austerities for twelve long years. He lived only on the tender leaves during the first year. He would drink only water during the second year. He would breathe only the air during the third year. He repeated this cycle of penance for twelve long years.




 
SEkkizhArin Periya PurANam

#37b . திரு கழறிற்றறிவார் நாயனார் (2)

நட்புப் பூண்டனர் அவருடன் பாண்டிய, சோழ அரசர்கள்;
கப்பம் கட்டினர் சேர மன்னனுக்குப் பற்பல சிற்றரசர்கள்.

வளர்ந்தன அறநெறிகள்; தழைத்தன சிவநெறிகள்;
வளர்ந்தது நாட்டின் வளமை; தழைத்து சிவன் மீது பக்தி.

வழிபட்டார் அரனை மாகோதையார் ஆகமவிதிப்படி;
வழிபாட்டின் முடிவில் ஒலிக்கும் அரன் காற்சிலம்பு!

பாணபத்திரர் மதுரையில் ஒரு தமிழ்ப் புலவர் - அவர்
பாடி வந்தார் சிவபெருமானின் புகழை அனவரதமும்.

விரும்பினான் ஈசன் பாணரின் வறுமையைப் போக்க;
கரும்பினும் இனிய தமிழால் தன்னைப் பாடுபவனுக்கு

தந்தார் திருவோலை சேரமான் மாகோதையாருக்கு;
"தருவாய் செல்வம் என் அன்பன் பாணபத்திரனுக்கு"!

போற்றினான் சேரமான் இறைவன் தந்த திருமுகத்தை;
போற்றினான் ஈசனை, "மதி மலி புரிசை மாடாக கூடல் "

தந்தான் தன் செல்வத்தை, பசுக்களை, அரசை அன்போடு;
தந்து விட்டான் பாணன் அவற்றை மீண்டும் சேர அரசருக்கு.

பெற்றுக் கொண்டான் தனக்குத் தேவையானவற்றை மட்டும்
பெற்றுக் கொண்டான் பாணன் பிரியாவிடை சேரமன்னனிடம்.

கேட்கவில்லை கழற் சிலம்பொலி ஒருநாள் வழிபாட்டின் போது!
வாட்டம் கொண்டான் மனம் வருந்திய சேரமன்னன் இதனால்!

துணிந்தான் தன் உயிர்த் தியாகம் செய்வதற்கு - ஆனால்
இனிதே ஒலித்தது கலீர் கலீர் என்று அரனின் சிலம்பொலி.

"பொன்னம்பலத்தில் சுந்தரன் பாடினான் தமிழ்ப் பதிகம்
வண்ணத் தமிழ் இசையில் வசம் இழந்துவிட்டேன் நான்!" என

ஆட்சிப் பொறுப்பை அளித்தார் மூத்த அமைச்சர்களிடம்;
மாட்சிமை வாய்ந்த அரசப் பதவியை முற்றிலும் துறந்தார்.

அடைந்தார் சென்று தில்லை சிதம்பரத்தை மாகோதையார்;
அடைந்தார் மெய்ப்பு
கம் அரன் திருவடிகளைத் தொழுது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#37b. Thiru ChEramAn PerumAL nAyanAr (2)

The kings of PANdya kingdom and ChOzha kingdom became ChEramAn PerumAL nAyanAr's friends. Many kings subordinate to him paid him their tributes. Dharma flourished; Saivism flourished; prosperity grew and the devotion to Lord Siva was revived.

MAkOdhaiyar aka ChEramAn PerumAL nAyanAr used to worship Lord Siva as prescribed by the Siva Agamas. At the end of his worship he would hear the sound made by the Kazhal or the anklet of Lord Siva.

PANa Badhran was a poor poet living in Madurai. He used to sing the praise of Lord Siva all the time. Lord Siva wanted to put an end to the dire poverty of PANa Badhran. He gave a palm leaf to PANan which was addressed to ChEramAn PerumAL instructing the king to honor PANar with many rich gifts.

ChEramAn appreciated the message sent to him by Lord Siva. He praised Lord Siva in a beautiful padhigam and offered PANan with immense wealth, many cows, and his kingdom. PANan returned everything after taking just a few of the gifts he needed. He took leave of ChEramAn and went back to Madurai.

One day ChEramAn could not hear the sound of the Kazhal of Siva. ChEraman became sad not knowing the reason for this unusual silence of Siva. He decided to end his own life for whatever fault he might have committed.

Then he heard the usual sound of the kazhal. Siva explained his silence. "In Ponnambalam Sundaramoorthi was singing padhigam in the sweet Tamizh. I forgot myself listening to it"

Now ChEramAn decided to give up his throne and become a devotee devoted only to Siva. He wished to visit the various holy places and the temples associated with Lord Siva.

He gave up his rulership and entrusted his kingdom with senior ministers. He reached Thillai Chidambaram. He prayed to and praised Lord Siva and felt extremely happy to do so.










 
bhagavathy bhaagavatam - skanda 10

10#10a. வைவஸ்வத மனு

ஏழாவது மனுவாக விளங்கினான் வைவஸ்வதன்;
எட்டாவது மனுவானவன் சூரியன் மகன் சாவர்ணி.

பூர்வ ஜன்மத்தில் சாவர்ணி மனு இருந்தான்
சைத்ர வம்சத்தைச் சேர்ந்த அரசன் சுரதனாக.

கல்வி, கேள்வி, கலைகளில் சிறந்திருந்தான்;
தோல்வியடைந்து விட்டான் பகைவர்களிடம்.

தப்பிச் சென்றான் ஓர் அடர்ந்த வனத்துக்கு – அங்கு
தனியே அலைந்து திரிந்தான் தன் குதிரையின் மீது.

கண்டான் காட்டினுள் ஓர் அழகிய ஆசிரமத்தை;
விண்டற்கரிய மன அமைதியைத் தந்தது அது.

இருந்தார் அதில் முனிவர் சுமேதர் தம் சீடருடன்;
பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார் சீடனாக.

அணுகினான் முனிவர் தனித்திருக்கும் போது;
வணங்கிக் கூறினான் தன் உள்ளக் கருத்தை.

“அறிவேன் பிரபஞ்ச வாழ்வு பொய் என்பதை!
அறியேன் மனத் துயரை மாற்றும் வழியை!

அறியவில்லை என் அகந்தையை அழித்திட!
அழியவில்லை நாடாளும் ஆசை இன்னமும்!

நிலைமை என்னவாகும் என்று கூறுங்கள்;
கவலையைப் போக்கிட வழி கூறுங்கள்!”

முக்காலமும் உணர வல்லவர் அந்த முனிவர்;
பிற்காலத்தைக் கண்டார் தீர்க்க திருஷ்டியில்!

“நிலைமை மாறும்; கவலை வேண்டாம் மன்னா!
நிறைவேறும் விருப்பங்கள் தேவியின் தயவால்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

10#10a. King Suratha


In his previous birth, The Eighth Manu SAvarNi had been a famous and powerful king Suratha, born of the family of Chaitra. He was clever in the arts of warfare and archery; he had amassed a great wealth; he was a generous donor; he was a good king and a celebrated poet. He was honored and respected by everyone.

Some of his enemies destroyed his city and laid a siege of his capital city. Suratha went out to fight with the enemies but he got defeated by them. Taking advantage of the situation, the king’s ministers robbed him of all his wealth.

King Suratha went out of the city all alone, riding on his horse back, to the nearby forest. The king saw the hermitage of the Muni SumedhA – who had the power to foresee the future.

The hermitage was surrounded by animals living in peace and harmony, It was filled with the disciples of the sage. Suratha’s mind found peace there and he lived in the hermitage.

One day, when the Muni was alone after finishing his worship, the king went to him and told him, “Oh revered Muni! I am suffering terribly from my mental agony. Why do I suffer thus as if I am quite an ignorant man – even though I know everything you have been teaching me ever since I came here.

What am I to do now? Where do I go? What can make me happy? Please tell me these. O Muni! Now I need you your grace and advice!”

The sage foresaw his future and reassured him,”Do not worry oh king! You worries will vanish very soon by the divine grace of Devi!”

 
SEkkizhArin Periya PurANam

#37c . திரு கழறிற்றறிவார் நாயனார் (3)

பாடினார் 'பொன்வண்ணத் தந்தாதி'யைச் சேரமான்
பக்தியில் கசிந்து உள்ளுருகிச் சிற்றம்பலம் சென்று;

தொழுதார் தோணியப்பரைச் சீர்காழித் தலத்தில்;
தொழுதார்; தழுவினார் சுந்தர மூர்த்தி நாயனாரை.

'திருவாரூர்த் திகழும் மணிக் கோவை' பிறந்தது
தியாகேசனைத் தொழுத சுந்தரமூர்த்தியிடமிருந்து.

விரும்பினர் இருவரும் பாண்டிய நாடு செல்வதற்கு;
திருத்தலங்கள் பல கண்டனர் செல்கின்ற வழியில்.

வரவேற்றான் பாண்டியன் அன்போடு அவர்களை;
வரவேற்றான் சோழனும் அன்போடு அவர்களை ;

வணங்கினர் திருக் கண்டியூர் உறையும் அரனை;
வணங்க வேண்டும் ஐயாற்றுப் பெருமானையும்.

கரை புரண்டு ஓடியது பக்தி வெள்ளம் அவர்களிடம்;
கரை புரண்டோடியது புதுவெள்ளம் காவிரி ஆற்றில்!

பாடினார் சுந்தரர் கண்டியூர் உறையும் நீலகண்டனை;
பாட்டிலே அழைத்தார் அந்த நீலகண்டப் பெருமானை.

நிகழ்ந்தது அற்புதம் பெருகிய ஆற்று வெள்ளத்தில்;
திகழ்ந்தது ஒரு பாதை இரண்டாகப் பிரிந்த ஆற்றில்!

தரிசித்தனர் ஐயாற்றுப் பிரானை வடகரை சென்று;
தலயாத்திரையைத் தொடர்ந்தனர் மிக்க ஆவலுடன்.

சென்றனர் இருவரும் திருவஞ்சைக்களம் ஆலயத்துக்கு.
சொல்லரிய சுந்தரர் பாடினார் 'முடிப்பது கங்கை' பதிகம்.

அடைந்தனர் அரண்மனையை பட்டத்து யானை மீது;
நடத்தினான் பாத பூஜை சேரமான் சுந்தரமூர்த்திக்கு.

அளித்தான் பிரியாவிடை சேரமான் சுந்தரமூர்த்திக்கு;
அளித்தான் பரிசுகள் பல சேரமான் சுந்தரமூர்த்திக்கு.

அடைந்தார் சுந்தரர் குழுவுடன் திருமுருகன் பூண்டியை;
வேடுவர்கள் கவர்ந்தனர் பரிசுப் பொருட்களை எல்லாம்.

வேடுவர்கள் கவர்ந்தனர் என்ற கண்ட போதிலும்
வேடுவர்கள் வேடத்தில் வந்தவை சிவகணங்கள்!

'கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்' பதிகத்தைப் பாடவும்
குவிந்தன மலை போலக் களவு போன பரிசுப் பொருட்கள்!

"கொடைக் கழறிற்றறிவார்க்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
#37c. Thiru ChEramAn PerumAL nAyanAr (3)

Thiru ChEramAn PerumAL nAyanAr sang Pon vaNNaththu andhAdhi in Chitrambalam. He worshiped ThONiyappar in SeerkhAzhi. He met Sundhara moorthi. They paid obeisance to each other and then embraced each other.

Sundharar sang ThiruvAroor Thigazhum MaNik kOvai after visiting ThyAgEsan of ThiruvAroor. Now ChEramAn and Sundharar wished to visit the holy places in the PANdya kingdom. They visited many holy places on their way.

The PANdya king welcomed them heartily. The ChOzha king who was to marry the daughter of PANdya king also welcomed them heartily. Thus the three kings of the three kingdoms of Tamil Nadu became bosom friends.

Then ChEramAn and Sundharar worshiped Neelakantan residing in Thiruk kaNdiyoor. They wished to visit the temple of AiyAtru Piran lying across the river Kaveri on the opposite bank. Just as their devotion was forming a flood, the water in river Kaveri was also in floods.

Sundharar praised the Neelakantan of Thiruk kaNdiyoor and called out for AiyAtrup PirAn. A miracle took place then. The river Kaveri in spate divided into two - making a path for the nAyanmArs to reach the opposite bank safely.

After praying in the AiyAru temple, the nAyanmArs continued their pilgrimage and reached MAkOdhai. They visited the Thiru vanjaik kaLam temple. Sundharar sang a padhigam in praise of Anjai KaLatheeswarar.

Then the two nAyanmArs reached the palace of ChEramAn riding on his royal elephant. ChEramAn performed the pAdha poojai to Sundharar and showerd him with many rich gifts. Sundharar took leave of ChEramAn and reached Thiru Murugan PoNndi with his followers.

A group of hunters stole away all the rich gifts given to Sundharar. The hunters were in fact Siva GaNas in disguise. When Sundarar sang a padhigam all the stolen articles were returned to him in a huge heap




 
Bhagavathy bhaagavatam - skanda 10

10#10b. அரசன் சுரதன்

“விந்தையே இதைச் சிந்தித்து ஆராய்ந்தால்!
சிந்தையைத் தன் வசப்படுத்துகிறாள் தேவி!

தருகிறாள் துன்பங்களை மட்டுமே வாழ்வில்!
தருகிறாள் துக்கத்தின் வழியே மோஹத்தை!

படைக்கின்றாள் அனைத்தையும் பிரம்ம ரூபிணியாக;
காக்கின்றாள் அனைத்தையும் விஷ்ணு ரூபிணியாக;

அழிக்கின்றாள் அனைத்தையும் ருத்ர ரூபிணியாக;
அழிக்கின்றாள் அனைத்தையும் காளராத்திரியாக.

வழங்குகின்றாள் கர்மங்களை மஹா மாயையாக;
வழங்குகின்றாள் செல்வத்தை லக்ஷ்மி தேவியாக;

நிலை பெறுகிறது பிரபஞ்சம் தேவியிடம்;
லயம் அடைகிறது பிரபஞ்சம் தேவியிடம்.

தாண்டுவான் மோஹத்தை ஒரு மனிதன்,
தண்ணருளை தேவி அவனுக்குத் தந்தால்!

தாண்ட முடியாது மோஹத்தை மற்றவரால்
தாண்டுவிக்க தேவி அருள் புரியாவிட்டால்!”

விளக்கினார் சுமேதமுனிவர் மன்னனுக்கு;
வியந்தான் மன்னன் தேவியை எண்ணி!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

10#10b. King Suratha (2)

The Sage spoke to King, “O King Suratha! Listen to the wonderful glories of Devi who can fulfil one’s desires. She is the MahA MAyA, who is everything in this world. She is the Mother of Brahma, VishNu and Mahesa.

She attracts the hearts of all the Jeevas. She steeps them in complete delusion. She is the Creator, Preserver and Destroyer of the Universe in the forms of the Trinity BrahmA, VishNu and Rudra.

This MahA MAyA fulfills the desires of all the Jeevas. and She is the KAlarAtri. She is KAli. She is Lakshmi Devi sitting on a lotus.

Know that this whole world is supported by Her and it will get dissolved in Her. She the Highest and the Best of all the gods.

O King! He alone come out of delusion on whom Devi showers her divine grace. Otherwise no one can escape from this eternal delusion afflicting all the jeevas.

 
SEkkizhArin Periya PurANam

#37d . திரு கழறிற்றறிவார் நாயனார் (4)

சிறக்க வாழ்ந்து வந்தார் சுந்தரர் பரவை நாச்சியாருடன் இன்பமாக
பிறந்தது ஓர் ஆவல் சேரமான் பெருமாள் நாயனாரைக் காண்பதற்கு

விடை பெற்றுக் கொண்டார் பரவை நாச்சியாரிடம் ஒரு நன்னாள்
அடியவர் புடைசூழச் அவர் புறப்பட்டார் திருவஞ்சைக்களம் நோக்கி

அலங்கரித்தார் நகரைச் சேரமான் பெருமாள் நாயனார்
அன்பர் சுந்தரரின் அரிய வருகையை அறிந்து கொண்டு.

அறிவித்தார் வருகையை பறையறைந்து நாடெல்லாம்!
அடைந்தார் நகர எல்லையைத் தன் பரிவாரங்களுடன்;

ஆனையிலிருந்து இறங்கினார் சுந்தரரைக் கண்டவுடன்;
ஆரத் தழுவிக்கொண்டார் சுந்தரை அன்பில் மிகுதியால்.

அமர்த்தினார் சுந்தரரைத் தன் பட்டத்து யானையின் மீது;
அன்புடன் ஏந்தினார் அழகிய வெண்கொற்றக் குடையை.

அமரச் செய்தார் தன் அரியணையில் சுந்தரரை - தானே
அன்புடன் செய்தார் அனைத்து வித உபசாரங்களையும்.

கண்டு களித்தனர் இருவரும் சென்று சிவத்தலங்களை;
தொண்டு புரிந்தனர் தூய தமிழ்ப் பதிகங்கள் பல பாடி;

நீராடுவர் இருவரும் அழகிய பொய்கை ஒன்றில் - பின்
நிர்மலமாகச் சென்று தொழுவர் ஈசனை ஆலயத்தில்.

சுந்தரர் சென்று விட்டார் முந்திக் கொண்டு ஆலயம்
சேரமான் பெருமாள் நீராடிக் கொண்டிருக்கையில்.

பொங்கியது அரன் அருள்; பெருகியது கண்ணீர் ;
பொங்கியது பேரொளி; சிவப்பழமாக ஆ
னார் சுந்தரர்;

பாடினார் "தலைக்குத் தலை மாலை" என்ற பதிகம்;
ஆடல் அரசன் விரும்பினான் அவரை ஆட்கொள்ள;

ஆணையிட்டான் அமரர்களிடம் ஆடல் அரசன் அரன்;
"அழைத்து வருவீர் சுந்தரரை வெள்ளை யானைமீது"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#37d. ChEramAn PerumAL nAyanAr (4)


Sundarar wished to meet ChEramAn PerumAL nAyanAr and took leave of Paravai. The King announced the about the visit of Sundara moorthy to his citizens. They decorated the whole city beautifully in order to extend a warm welcome to Sundarar.

The King ChEramAn PerumAL nAyanAr reached the outskirts of his city with his retinue in full attendance. When Sundarar arrived, the King got down from his royal elephant. He embraced Sundarar and made him sit on his royal elephant. He himself held the royal white silk umbrella over Sundarar's head.

Having reached his palace, the King made Sundarar sit on his throne and did all the ubachArams to show his deep respect and love. Then these two nAyanmArs visited many holy temples of Siva together and praised Him in their songs.

They both would take a holy dip in one of the ponds. Then they both would visit the temple and sing the praise of Lord Siva. But one fine day Sundarar went to the temple ahead of the king.

He was deeply moved and shed copious tears due to his intense devotion. He became very brilliant and emotional as he sang the padhigam "thalaikkuth thalai mAlai".

Siva decided to call him back to Kailash and ordered to the Devas,
" Bring back here Sundarar seated on the celestial white elephant"















 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 10

10#11a. மஹா காளி (1)

முனிவரிடம் வினவினான் மன்னன் இதை – “மா
முனிவரே! நீங்கள் கூறும் தேவி என்பவள் யார்?


மோஹத்தில் ஆன்மாக்களை அழுத்துவது யார்?
போகத்தில் ஆன்மாக்களை அழுத்துவது யார்?


எப்படித் தோன்றினாள்? ஏன் தோன்றினாள்?
என்ன அவள் இயல்பு? என்ன அவள் உருவம்?”


“யுக சங்கார காலம் அது – ஆதிசேஷன் மீது
யோக நித்திரையில் இருந்தார் விஷ்ணு.


தோன்றினர் இரு அரக்கர்கள் மது, கைடபர்கள்;
தூங்கும் விஷ்ணுவின் செவிக் குரும்பிலிருந்து!


சென்றனர் இருவரும் பிரம்மனைக் கொல்வதற்கு.
சென்றான் பிரம்மன் விஷ்ணுவின் உதவியை நாடி.


நித்திரை வயப்பட்டிருந்தான் நாரணன் – எனவே
நித்திரா தேவியைத் துதித்தான் பிரம்ம தேவன்.


“ஜகத் தாத்ரீ! ஜகன்மாயே ! மஹாமாயே! சிவே!
ஜகத்தில் நடப்பவை எல்லாம் உன் ஆணையால்!


காள ராத்ரீ! மோஹ ராத்ரீ! மஹா ராத்ரீ!
வியாபினி! வசகா! மான்யா!


மஹனீயா! மாயா ! மதுமதி ! மஹீபராபரே!
லஜ்ஜா ! புஷ்டீ ! க்ஷமா ! கீர்த்தி!


காந்தி! காருண்ய விக்ரஹா! கமனீயா!
ஜகத் வந்த்யா!” என்று போற்றித் துதித்தார்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


10#11a. MahA KALi (1)

King Surata asked the sage Sumedha,”Who is this Devi you speak about sire? Who is the Devi who steeps all the jeevas in utter delusion? Who is the Devi who steeps all the jeevas in utter confusion?


How did this Devi appear first? Why did she appear? What is her form? What is her nature? Please tell me all about this Devi.”


The Sage SumedhA told the King Suratha, “It was the time of PraLaya – the great dissolution. The whole earth was immersed under water. Vishnu was sleeping on Aadhiseshan in the water.


Two asuras named Madhu and Kaitaba appeared from the dirt in the ears of VishNu. They saw BrahmA and wished to kill him immediately.


BrahmA sought the help of VishNu but he was in his deep Yoga Nidra (all-knowing-sleep). To wake him up BrahmA prayed to the Goddess of Sleep (NidrA Devi) who had taken control over the sleeping VishNu.


Brahma prayed to her thus: “Jagath DhAthree! Jagan MAyE! MahAmAyE! SivE! Everything happens according to your commands. KAla rAtree! MOha rAtree! MahA rAtree! VyApini! MAnyA! MahaneeyA! MAyA! Mathumathee! MaheeparAparE! LajjA! Pushtee! KshamA! Keerti! KAnti! KAruNya VigrahA! KamaneeyA! JagathvandhyA!”




 
SEkkizhArin Periya PurANam

#37e . திரு கழறிற்றறிவார் நாயனார் (5)

சென்றனர் அமரர் அரன் ஆணையால் திருவஞ்சைக்களம்;
செப்பினர் அரன் இட்ட ஆணையை அன்பர் சுந்தரருக்கு;

விண் நோக்கிச் சென்றார் வெள்ளை யானை மீது சுந்தரர்;
மண் மீது திகைத்து நின்றார் சேரமான் அவரைக் காணாது!

அறிந்து கொண்டார் தன் தவ வலிமையால் அனைத்தையும்;
செறிந்த ஆவல் கொண்டார் சுந்தரரைத் தொடர்ந்து சென்றிட.

அமர்ந்தார் தன் வெண் புரவியின் மீது சேரமான் பெருமாள்;
"நமச்சிவாய!" மந்திரத்தை ஓதப் பறந்தது புரவி விண்ணில்!

வலம் வந்தார் சேரமான் சுந்தரரை வெள்ளை யானையுடன்;
விரைந்தார் முந்திக் கொண்டு கயிலைக்கு வாயு வேகத்தில்.

தடுத்தது சேரமான் பெருமாளை அடைத்திருந்த கோவில் வாசல்;
அடுத்து வந்த சுந்தரருக்குக் காத்து நின்றார் சேரமான் பெருமாள்;

கயிலை மலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார்
பயின்றபடியே "தானெனை முன் படைத்தான்" பதிகத்தைச் சுந்தரர்;

விடுத்தனர் இருவரும் தத்தம் வெண் வாகனங்களை அங்கேயே
நடந்தும், கடந்தும், அடைந்தனர் திருவணுக்கன் திருவாயிலை.

தடுத்தது வாயில் சேரமான் பெருமாள் நாயனாரை - ஆனால்
விடுத்தது சுந்தரை மட்டும் பெருமான் திருமுன்பு சென்றிட !

ஒலித்தது வேத கோஷம், ஒலித்தது இனிய தேவ கானம்;
ஒலித்தன தேவ துந்துபிகள்; வாழ்த்தினர் முனிவர்கள்;

கற்பக மலர்களைத் தூவினர் தேவர்கள், கந்தருவர்கள்;
கற்பகவல்லித் தாயார் காட்சி தந்தாள் எம்பெருமானுடன்.

"ஆரூரானே நீ வந்தனையோ?" என வினவினான் ஈசன்;
ஆட்கொண்ட அரன் அருளைப் போற்றினார் சுந்தரமூர்த்தி.

"தடைபட்டு நிற்கின்றார் சேரமான் பெருமாள்!" என்றதும்
விடையேறும் பிரான் உடன் அனுப்பினான் நந்தி தேவனை.

நாடி வந்தான் சேரமான் பெருமாள் ; வணங்கினான் ஈசனை;
பாடித் தந்தான் ஞான உலா என்னும் திருக்கயிலாய உலாவை.

ஆகிவிட்டனர் சிவகணங்களின் தலைவர்களாக இருவரும்!
ஆகிவிட்டனர் உமையின் சேடிகளாக இரு நாச்சியார்களும் !

விடுத்தனர் பற்றுக்களை பரவையார் சங்கிலியார் நாச்சியார்;
அடுத்தனர் உமையைக் கமலினி, அநிந்திதையாக மாறியபின்.

திருச் சிற்றம்பலம்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

# 37e. ChEramAn PerumAl nAyanAr(5)

The Devas went to ThiruvAnchai kaLam and conveyed the wish of Lord Siva. Sundarar sat on the white elephant and started going towards the sky. SEramAn was surprised not to find Sundarar anywhere after he emerged from the pond. He realized by the power of his penance what had actually happened and wished to follow Sundarar.

He sat on his white horse. He chanted in the ears of the white horse the Siva panchAkshara "namasivAya" continuously and the white horse started flying in the sky. He saw Sundarar on a white elephant and went round him clockwise. He proceeded to the Kailash faster than Sundarar. But he could not enter Kailash and and was forced to wait for Sundarar.

Sundarar reached the gate on the Southern side singing "thAnenai mun padaiththan". He could walk through the entrance unstopped. There was a fusion of the sounds of Vedic chanting, celestial music, the playing of dhundhubis and the blessings by rushis. Ghandharvas and Devas sprinkled flowers.

Siva and PArvathi gave a divine dharshan. Siva asked Sundarar, "AroorA! Have you come back to Kailash?" Sundarar praised the infinite grace of God for taking him back in Kailash"

He informed Siva that his dear friend SEramAn PerumAl nAyanAr was stopped at the entrance and was waiting there. Siva sent Nandhi DEvan to bring SEramAn into Kailash. SEramAn came in and paid his obeisance to Siva and Parvathy . He sang The JnAna ulA aka Thiruk KayilAya ulA.

Sundarar and SEramAn were made the leaders of the Siva gaNas. ParaviyAr and ChangiliyAr gave up all worldly attachments to the earthly things. They returned as Kamalini and Aninthithai to become the attendents of Uma Devi as before.

Thiruch chitrambalam















 
bhagavathy bhaagavatam - skanda 10

10#11b. மஹா காளி (2)

இரங்கினாள் நித்திரா தேவி பிரம்மனிடம்;
இறங்கினாள் விஷ்ணுவின் உடலை விட்டு.


சென்றாள் அசுரரர்கள் மது, கைடபர்களிடம்;
வென்றாள் அசுரர் மனத்தை மோஹத்தால்!


எழுந்தார் விஷ்ணு யோக நித்திரையிலிருந்து;
எழுந்தது கடும் துவந்த யுத்தம் அசுரர்களுடன்.


கழிந்து விட்டது ஐயாயிரம் ஆண்டுகள் – ஆனால்
களைப்படையவில்லை அசுரர் சிறிதளவேனும்!


அபாயத்தை வெல்ல வேண்டும் தந்திரமாக என்று
உபாயத்தைச் சிந்தித்தார் மஹா விஷ்ணு மூர்த்தி.


புகழ்ந்தார் அசுரர்களின் வலிமையைப் பெருமையை;
மகிழ்ந்தனர் அசுரர் விஷ்ணுவின் புகழ் மொழிகளால்!


வரம் தர வேண்டினார் விஷ்ணு மது, கைடபர்களிடம்,
வரம் தந்து விட்டனர் மோஹ வயப்பட்டிருந்த அசுரர்!


“மடிய வேண்டும் நீங்கள் இருவரும் என்னால்!” எனக்
கொடிய அசுரர்கள் சிந்தித்தனர் ஒரு புதிய உபாயம்.


“நீரற்ற உலர்ந்த இடத்தில் கொல்வாய் எங்களை!”
நீரில் மூழ்கியிருந்தது உலகம் முழுதும் அப்போது!


விஸ்வரூபம் எடுத்தார் விஷ்ணு – அசுரரைத் தன்
விரிந்து பரந்த தொடை மீது வைத்துக் கொன்றார்!


மது, கைடபரைக் கொல்வதற்காகத் தோன்றினாள்
மஹாகாளியாகவும், யோகேஸ்வரியாகவும் தேவி.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


10#11b. MahA KAli (2)

The Goddess of Sleep (NidrA Devi) took pity on BrahmA. She left the body of the sleeping VishNu and appeared as a very beautiful Devi in front of the asuras Madhu and Kaitaba. She deluded their minds bu her beauty and prepared the ground for VishNu’s victory.


VishNu came put of his sleep and a dwandha yuddham started between him and the two ausrAs. The one-to-one fight went on for five thousand years. Since the AsurAs took fought and took rest alternately, they did not grow tired at all.


VishNu decided to win over them by playing a trick. He praised the valor and strength of Madhu and Kaitaba highly. Pleased with the words of praise, the already deluded Asuras offered to grant VishNu a boon.


Vishnu used the opportunity to win over them. He said,”I want you both to wish to be killed by me” These Asuras had a rare boon that they could not be killed – unless they themselves wished to be killed!


Now the Ausras were caught in a trap and thought of an alternative plan to escape the death in VishNu’s hands. They granted the boon with a condition that VishNu must kill them only on a dry land. The whole earth was submerged under water at that time!


VishnU took viswaroopam, placed the two Ausuras on his sprawling and dry thigh and killed them.
Devi appeared first as MahA KAli and YogEswari to Help VishNu kill the wicked Asuras Madhu and Kaitaba.”




 
SEkkizhArin Periya PurAnam

#38. திரு கணநாத நாயனார்

மறையவர் குலத்தில் கணநாதர் அவதரித்தார்- சம்பந்தர்
பிறந்த பெருமை வாய்ந்த சீர்காழி எனும் திருத்தலத்தில்.

தோணியப்பரை வழிபட்டார் தன் குலத்தின் மரபிற்கு ஏற்ப;
பேணினார் பல திருத் தொண்டுகளைத் தினம் தவறாமல்.

சீர்ப்படுத்தினார் மணம் மிகுந்த நறுமலர்ச் சோலைகளை;
சீர்ப்படுத்தினார் பொற்றாமரைக் குளத்தையும் கணநாதர்.

பன்னிற மலர்களைப் பாங்குடன் தொடுப்பார் வகைப்படுத்தி;
அன்புடன் அளிப்பார் அவற்றை ஆலயத்தில் அரனை வழிபட.

தொண்டுகள் புரிந்தார் தன்னலம் இன்றி கணநாதர்- அதனால்
தொண்டர்கள் பலர் தோன்றினர் இந்த மெய்த் தொடண்ருக்கு.

இல்லறம் என்னும் நல்லறம் பேணினார் கணநாதர் - அதுவும்
வள்ளுவர் கூறிய இல்லறமென்னும் நல்லறத்தைப் போலவே.

பெற்றார் கணநாதர் அரன் அளிக்கும் அரிய பேரின்ப வீட்டினை;
பெற்றார் கணநாதர் சிவகணங்களின் தலைமைப் பதவியை.

"கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#38. GaNanAthar nAyanAr

GaNanAthar nAyanAr was born in a brahmin family in SeerkAzhi, which is the place of birth of the great Thiru JnAna Sambanthar. He worshiped ThONiyappar everyday without fail. He did several action benefiting the general public. He did his best to make the flower gardens and to the Pond of Golden lotuses better.

He would pluck all the fresh flowers and make garlands to decorated the Deity in the temple. Sine he was serving others without any selfish motives, soon he had many followers who had similar lofty ideals. He was happily married and lived a life as defined by ThiruvaLLuvar himself.

Lord Siva bestowed on GaNanAthar nAyanAr the final liberation as well as the leadership of all His Siva gaNas.



 
bhagavathy bhaagavatam - skanda 10

10#12a. மஹாலக்ஷ்மி (1)

ஏகாதிபத்திய வெறி கொண்டான் மஹிஷாசுரன்;
ஏகாக்கிர சிந்தையோடு வென்றான் மூவுலகையும்.

ஆக்கினான் தேவர்களைத் தன் அடிமைகளாக!
ஆக்கினான் திக்பாலகர்களைத் தன் ஏவலர்களாக!

சென்றனர் தேவர்கள் பிரமனுடன் சேர்ந்துகொண்டு;
செப்பினர் துயரங்களை விஷ்ணுவிடம், சிவனிடம்!

சினம் பொங்கியது சிவசங்கரன் முகத்தில்;
சினம் பொங்கியது விஷ்ணுவின் முகத்தில்.

சினம் பொங்கியது குழுமியிருந்த தெய்வங்களிடம்;
சினம் பொங்கியது குழுமியிருந்த தேவர்களிடம்;

சினம் வெளிப்பட்டது ஓர் ஒளி வடிவாக!
சினம் கலந்தது ஒளிகளின் கலவையாக!

தோன்றியது ஒரு முகம் சிவனின் ஒளியில்;
தோன்றியது கருங்கூந்தல் யமனின் ஒளியில்;

தோன்றின இரு கரங்கள் விஷ்ணுவின் ஒளியில்;
தோன்றின இரு ஸ்தனங்கள் சந்திரனின் ஒளியில்;

தோன்றியது சிறு இடுப்பு இந்திரன் ஒளியில்;
தோன்றின முழங்கால்கள் வருணன் ஒளியில்;

தோன்றியது நிதம்பம் பூமியின் ஒளியில்;
தோன்றின பாதங்கள் பிரமனின் ஒளியில்;

தோன்றின கால் விரல்கள் கதிரவன் ஒளியில்;
தோன்றின கை விரல்கள் வசுக்களின் ஒளியில்.

தோன்றியது நாசி குபேரனின் ஒளியில்;
தோன்றின பற்கள் பிரஜாபதியின் ஒளியில்;

தோன்றின கண்கள் அக்னியின் ஒளியில்;
தோன்றின புருவங்கள் சாத்தியர் ஒளியில்;

தோன்றின செவிகள் வாயுவின் ஒளியில்;
தோன்றினாள் மஹா லக்ஷ்மியாகத் தேவி!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

10#12a. MahA Lakshmi(1)

The powerful Asura Mahisha – born as the son of a man and a female buffalo – defeated all the Devas and became the Lord of the whole universe. He began to enjoy the pleasures of all the three worlds.

The defeated Devas were expelled from their abodes in Heaven. The DevAs went along with Brahma to meet Siva and VishNu. They said very sadly to the Gods, “The atrocities of MahishAsura have become unbearable. He has taken possessions of the heaven and has driven us out of it. Please save us from him!”

Hearing these words of the Devas, all the Gods and Devas assembled there became very angry. From the face of the angry Hari emanated a Fire as brilliant as one thousand Suns. Fire emanated from each and every God and Deva present there and fused to form a brilliant glow of fire.

From the fire was born a beautiful Female Figure. The face of this figure was formed out of the fire that emanated from the body of MahA Deva. Her hairs were formed out of the fire of Yama and Her arms were formed out of the fire that emanated from VishNu.

The fire of the Moon formed her two breasts; The fire of Indra formed her midriff, The fire of VaruNa formed Her loins and thighs; The fire of Earth formed Her hips ; The fire of BrahmA formed Her feet ; The fire of the Sun formed Her toes; The fire of the Vasus formed her Her fingers; Kubera’s fire formed Her nose; the tejas of PrajApati formed her teeth; the fire of Agni formed Her three eyes; the fire of the twilights formed Her eye-brows and the fire of VAyu formed Her ears.

 
SEkkizhArin Periya PurANam

#39. திரு கூற்றுவ நாயனார்

ஆண்டனர் குறுநில மன்னர் திருக்களந்தைத் தலத்தை;
தோன்றினார் கூற்றுவ நாயனார் களப்பாளர்கள் மரபில்;

கூற்றுவனாக இருந்தார் இவர் தன் பகைவர்களுக்கு;
'கூற்றுவன்' என்னும் பட்டத்தில் மறைத்தது இயற்பெயர்.

வாள் சுழற்றி வெற்றி பெறும் வீரம் மட்டுமல்ல - அரன்
தாள் பணிந்து போற்றும் பக்தியும் கொண்டவர் இவர்.

பெற்றார் வெற்றி தான் சென்ற இடம் எல்லாம் நாயனார்;
பெற்றார் வெண்கொற்றக்குடையின் கீழ் பரந்த நாட்டை.

வெற்றிகள் தோற்றுவித்தன ஒரு வினோத எண்ணத்தை!
விருப்பம் எழுந்தது சோழரின் மணிமுடியைச் சூடுவதற்கு!

மணிமகுடம் இருந்தது தில்லை வாழ் அந்தணர்களிடம்;
அணிய விரும்பினார் அதனை அவர்களின் உதவியுடன்.

துணிவுடன் நிராகரித்தனர் அந்தணர் கோரிக்கையை,
"அணிய முடியும் அதைச் சோழ மன்னர்கள் மட்டுமே!" என

வருந்தினார் மனம் கூற்றுவ நாயனார் இதைக் கேட்டு;
அணிய விரும்பினார் அரன் பாதத்தைச் சென்னி மீது!

எழுந்தருளினான் முக்கட் பிரான் நாயனார் கனவினில்;
அழுத்தினான் மலர்ப் பாதத்தை சென்னிமேல் மகுடமாக!

அரன் திருவடி மணிமகுடமானது கூற்றுவ நாயனாருக்கு;
விரிந்து பரந்தது மேன் மேலும் அவர் வென்று ஆண்ட நாடு!

நடந்தன காலம் தவறாமல் ஆலயத்தில் அரன் வழிபாடுகள்
தடையின்றி நாயனார் அளித்த பொன், மணி, பொருளால்.

சஞ்சித வினைகளைத் தீர்க்கும் தூய அம்பலத்து அரசனின்
குஞ்சித பாதங்களில் ஒன்றிக் கலந்தார் கூற்றுவ நாயனார்.

"ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்"

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி

#39. Kootruva nAyanAr

Thiruk KaLanthai was a small kingdom under the rule of a Chieftain who was expected to pay tribute to the superior kings above him. Kootruva nAyanAr was born in the family of such a chieftain.

He was a terror to his enemies who considered him as a 'Kootruvan' meaning 'The God of death'. In due course of time his original name was eclipsed by his title 'Kootruvan'.

Kootruva nAyanAr was good not in just warfare and winning. He was a staunch devotee of Lord Siva. He conquered every land he set his feet on. Very soon he had a vast land under his rule.

These victories and confidence gave birth to a strange desire in him. He wished to be decorated by the Crown of the Chozha kings. The crown was under the custody of the 3000 Brahmins of Thillai.

He expressed his wish to them and expected them to oblige. But the 3000 Brahmins said in unison that the crown could be worn only by a Chozha king and no one else. Kootruva nAyanAr felt really very disappointed by their stern reply.

He now wished that Lord Siva would plant his lotus feet on his head as a crown for him. Siva appeared in his dream and planted his lotus like foot on the head of the Kootruva nAyanAr.

The king was overwhelmed that Siva had fulfilled his wish. He went on to win over more and more land. He donated gold, gems and everything else needed to make sure that the worship at all temples went on smoothly and without fail.

He later merged with the lotus feet of Siva with a beautiful arch (kunjitha pAdam) which had the power to destroy all the bundles of sins incurred and accumulated over many births ( sanchitha pApam)


 
How could any one win many battles and acquire vast lands and bring them under his rule without killing many people and looting them of their gold, gems and other riches and possessions? If so, how can Lord Shiva condone all the slaying of lives and stealing of property and confer the boon of placing His lotus-like foot on his head? What sort of worship is this and what sort of God who pleases all villains? Is there no value attached in those days to the very sanctity of life, integrity of one's limbs and inviolability of one's property which was presumed to represent the product one's labour? Strange are such stuff!
 
How could any one win many battles and acquire vast lands and bring them under his rule without killing many people and looting them of their gold, gems and other riches and possessions? If so, how can Lord Shiva condone all the slaying of lives and stealing of property and confer the boon of placing His lotus-like foot on his head? What sort of worship is this and what sort of God who pleases all villains? Is there no value attached in those days to the very sanctity of life, integrity of one's limbs and inviolability of one's property which was presumed to represent the product one's labour? Strange are such stuff!

Dear Sir,

We are not sure whether this king burned down cities, looted the kahzAna and molested women.

The duty of king is to protect his kingdom and citizens. For this he might have to fight with the enemy or even wage wars. It is part of King's duty. If he fails in it, he is not worthy of being king.

The king coveted to be adorned by the famous crown of the ChOzha Kings. His request was denied by the 3000 Thillai VAzh andhanargaL for right reason.

Then he wished to be crowned by the lotus feet of Lord Siva. God fulfilled his wish by planting His Lotus feet on the king's head IN HIS DREAM!

Is it a crime to get one's wish fulfilled at least in his dream?

We all know that whatever we have been thinking about appears in our dreams. The king wished to bear the Lord's feet on his head in humility and he did dream about it. This need not render him to the level of a villain.

If wishing for God's grace makes one a villain, then all the pious people, all the saints, all the sanths and all seers who have lived on earth from time immemorial are villains!
 
GOOD and EVIL have always coexisted in the world.
They form one of the inseparable pairs of opposites.
Day and Night,
Light and Darkness,
Hot and cold,
Good and bad,
Love and hatred!
 
bhagavathy bhaagavatam - skanda 10

10#12b. மஹாலக்ஷ்மி (2)

தந்தார் தேவிக்குத் தன் திரிசூலத்தை சிவன்;
தந்தார் தேவிக்குத் தன் சக்கரத்தை விஷ்ணு;


தந்தார் தேவிக்குத் தன் சங்கினை விஷ்ணு;
தந்தான் தேவிக்குத் தன் சக்தியை அக்னி;


தந்தான் தேவிக்குத் தன் அம்பு, வில்லை வாயு;
தந்தான் தேவிக்கு வஜ்ஜிராயுதத்தை இந்திரன்;


தந்தது தேவிக்குக் கண்டாமணியை ஐராவதம்;
தந்தான் தேவிக்குக் காலதண்டத்தை யமன்;


தந்தான் தேவிக்குக் காந்தி மாலையைச் சூரியன்;
தந்தான் தேவிக்குக் கட்க கவசங்களைக் காலன்;


தந்தான் தேவிக்குக் கடலரசன் ஹாரம், வஸ்திரம்
குண்டலம், சூடாமணி, தோள்வளை, கண்டசரம், நூபுரம்!


தந்தான் தேவிக்கு மோதிரங்களை விஸ்வகர்மா;
தந்தான் தேவிக்குச் சிம்மவாஹனத்தை இமவான்;


தந்தான் தேவிக்கு சுரா பாத்திரத்தைக் குபேரன்;
தந்தான் தேவிக்கு நாக ஹாரத்தை ஆதிசேஷன்;


வாழ்த்தி வழியனுப்பினர் தேவியை அனைவரும்
“சென்று மகிஷனை வென்று வருவாய்!” என்று!


அழித்தாள் தேவி அசுர சேனையைத் தளபதிகளை;
அழித்தாள் மஹிஷனைப் பாசத்தால் கட்டியும் வெட்டியும்!


மஹாசக்தியே மஹிஷனை சம்ஹரிக்க வந்தாள்
மஹாலக்ஷ்மியாகத் தேவர்களின் சினத்திலிருந்து!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


10#12b. MahA Lakshmi (2)


S’iva gave Devi his trident; VishNu gave her his Chakra; VaruNa gave her his conch shell; Fire gave her his power of burning; VAyu gave her his bow and arrows; Indra gave her his thunderbolt; AirAvat gave her his bell; Yama gave Her the staff of Destruction; BrahmA gave Her his RudrAksha and KamaNdalu;

the Sun gave Her his wonderful rays; the KAlA the Time gave Her a sharp axe and shield; the king of oceans gave Her beautiful necklace and new clothes, Kataka, Angada, ChandrArdha and many other ornaments;

VishwakarmA gave her a crown, earrings; HimAlayAs gave Her a Lion to ride on and various gems and jewels. Kubera gave Her a cup filled with drink; Ananta gave Her a necklace of snakes.


Thus Devi was honored by all the Devas. Devi worshiped by the DevAs, shouted aloud the War-Cry. MahishAsura got startled by that War-Cry and came to fight with Devi with all his army.


A fierce fight ensued. Devi became red-eyed with anger and began to kill the Asura generals. She tied Mahishan with her noose tightly and cut off his head with her Her axe.


Thys MahA Shakti appeared as Maha Lakshmi in order to kill Mahishan!




 
SEkkizhArin Periya PurANam

#40. திரு பொய்யடிமை இல்லாத புலவர்கள்

மெய்த்தொகை அடியார் ஆவர் தில்லைவாழ் அந்தணர் எனில்
பொய்யடிமை இல்லாத புலவர்களும் மெய்த்தொகை அடியவரே.

சொற்களின் மெய்ப்பொருளை நன்கு ஆராய்ந்து உணர்வர்;
கற்றவருக்குத் தாமே உற்ற வரப்பாகவும் இவர் விளங்குவர்.

கடைச் சங்கத் தமிழ்ப் புலவர்கள் நாற்பத்து ஒன்பதின்மருமே
தடையின்றி விளங்கினர் பொய்யடிமை இல்லாத புலவர்களாக.

பரமனையே உளமார பாடிப் பரவி உருகிய இந்தப் புலவர்கள்
அரன் திருவடிகளையே சென்று அடைந்ததில் என்ன வியப்பு?

"பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி

#40. The truthful poets

The Three Thousand Brahmins of Thillai are considered as the truthful devotees of Lord Siva. In the same way the Forty Nine Poets of the Last Tamil Sangam are also considered as the truthful devotees of Lord Siva.

They understood every word of what they read. They taught those to the others and made sure that they themselves formed some kind of barrier stopping the other from crossing over the true meanings .

Is it really surprising that these poets, who were committed to singing the praise of Lord Siva day in and day out, ultimately reached his lotus feet?






 
I still have my doubts! Who could have recorded all these as history? If it has come through folklore, by word of mouth than through writings, who could have known about the wishes of a king, who was a conqueror of many lands because it was his 'duty' to march his able-bodied subjects to battles and vanquish the real (or rumoured to be) enemies, and in the process taking a heavy toll of life, limbs, liberty and property of his own subjects and, of course, those of his enemies, who are naturally the 'villains' because they were losers of the battles and ultimately, his wishes being fulfilled by 'God Himself' in his dreams? Is it possible that in the same world of His own creation, 'God' can be on one king's side and not on the other? The vanquished then must naturally be presumed to be the villains, those who do evil! Or, is it possible that there were / there are many 'Gods' for different people at different times and they did not see eye to eye with each other and set their favoured kings with their subjects upon the other? To overcome, presumably, evil personified? Or, is all that simply folklore that we have expressed in 'elegant' (no pun intended) language? Or is there any content worth noting here that has a message for all the readers? Is the message here one of 'humility' on the part of the king concerned as against the 'rigidity' of the brahmins concerned and the concerned 'God's own desire to grant all boons' to His favoured king in his dreams at least? To conclude, who can verify a soul's journey to God's own place? What about his subjects then who gave their life, limbs and all for his conquests? No mention need be made?
 
The sins committed by the citizens get added to the King's account.

The sins committed by a wife get added to her husband's account.

WHY?

If the king had educated and guided the citizens properly and

if the husband had educated and guided his wife properly

those sins would NEVER have been committed by them.

Even now we come across some heads of institutions and governments

resigning taking on themselves the moral responsibility for some mistake

committed by their subordinates.

So the system works both ways!

It adds to the credit of the topman the credit of the people below him.

It adds to the discredit of the topman the discredit of the people below him.
 
Last edited:
We humans are too ignorant, too deluded, too short sighted and too

foolish to understand the designs made by the divine God.

We have no choice but to accept what He has ordained for us!

Who are we to judge a king or GOD???

KAraNam indrik kAriyam illai!

Nothing ever happens without a proper reason or a cause!

If we fail to see it, then it is the defect in our own vision and not in God's

design. May I suggest that if you find the posts here not agreeable, you

have the liberty and freedom of not entering the thread to read these

posts which seems to disturb you so much.

I am not the one who has thought up of all these stories in the first place.

I am only trying to render the hard to understand ancient Tamil poetry

into easy to understand modern Tamil poetry.

I am only a scribe and not the original composer.

You are welcome to read the posts or leap over them and go to another

thread which is more acceptable and agreeable to you.
 
Bhagavathy bhaagavatam - skanda 10

10#12c. சரஸ்வதி தேவி (1)

தோன்றினாள் சரஸ்வதி சும்ப, நிசும்பரை அழிப்பதற்கு;
தோன்றினாள் இமயத்தில் தேவர்கள் துதிக்கும் பொழுது.


“துன்பத்தைத் துடைக்க வல்ல எங்கள் தேவியே!
துன்மார்க்கர்களை அழித்திட உருவெடுப்பவளே!


வர்ஜிக்க வல்லவள் நீ ஜனன, மரண சுழற்சியை.
வல்லவள் நீ! உன்னதமானவள் நீ அனைத்திலுமே.


எளியவள் ஆவாய் நீ பக்தர்களின் பக்திக்கு;
வலிமையோடு கொண்டுள்ளாய் பராக்கிரமம்.


மும்மூர்த்திகளின் ஸ்வரூபம் கொண்டவள் நீ!
முத்தொழில்களைப் புரிந்து வரும் தேவியும் நீ!


பிரியம் கொண்டுள்ளாய் தாண்டவம் செய்வதில்.
புரிவாய் கருணை! தருவாய் அபயம்!” என்றனர்.


தோன்றினாள் தேவியின் அடர்ந்த கேசத்திலிருந்து
தேவி கௌசிகை தேவர்களுக்கு அபயம் அளித்திட.


“அஞ்சற்க தேவர்களே!” என்று அபயம் அளித்தாள்.
“அழிக்கின்றேன் அசுரர்களை!” என அபயம் தந்தாள்.


சண்ட, முண்டர்கள் கண்டனர் தேவியின் அழகை;
விண்டனர் சும்ப, நிசும்பரிடம் தேவியின் அழகை!


“அவள் ஒரு பெண் ரத்தினம்! காண்பதற்கரியவள்!
அவள் இருக்க வேண்டும் உங்கள் அந்தப்புரத்தில்!”


மோஹம் கொண்டான் சும்பாசுரன் தேவியின் மீது;
மோஹம் வளர்ந்தது கண்களால் காணமலேயே!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


10#12c. MahA Saraswati (1)


Saraswati Devi appeared in order to destroy the wicked asuras Shumbha and Nishumbha, when the Devas collectively prayed to the MahA Shakti on the slopes of HimAlayAs.


The Devas prayed thus,”You alone can remove our sufferings Oh Devi! You assume a form in order to destroy the wicked people and save the good people.


You are capable of freeing anyone from the cycle of birth and death. You are the supreme among everyone and everything. You are merciful to your devotees.


You have immense power though you are very merciful. You are the swaroopam of the Trinity. You perform the three tasks of the Trinity by yourself. Please have mercy on us and save us!”


Kousiki Devi appeared from the dense black hair of Shakti Devi to bestow the Fearlessness on the Devas. She told those Devas,”Do not have any more fear. I will destroy the wicked Shumbha and Nishumbha and protect you!”


ChaNda and MuNda saw this beautiful Devi. They went and told Shumbha, “This Devi with an unusual beauty is a gem among women. Her rightful place is your harem”


Sumba fell head over heels in love with that Devi – whom he had not yet set his eyes upon!




 

Latest ads

Back
Top