• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

பார்ப்பனர் = பார்ப்பார் = ( people who once upon a time used to be selfless) seekers

பார்ப்பனர் = பார்ப்பார் = Seekers

"பார்ப்பார்" இப்போது பார்க்க மாட்டார்!

பார்ப்பாரால் இப்போது பார்க்கவும் முடியாது!


'செந்தண்மை பூண்ட அந்தணன்' இன்று எங்கே?

'சோ'வின் மொழியில் கூறினால் "எங்கே பிராம்மணன்?"
 
bhagavathy bhagavatam - skanda 10

10#13e. பிரமரி தேவி (4)

தோத்தரித்தனர் தேவர்கள் தேவியை பக்தியுடன்;
தேனினும் இனிய தன் குரலில் கூறினாள் தேவி;


“கேளுங்கள் தேவர்களே வேண்டும் வரங்களை;
கேட்கும் வரங்களைத் தருவேன் உங்களுக்கு!”


கூறினர் அருணன் தரும் துன்பத்தைத் தேவியிடம்;
கோரினர் அருணனை அழித்துத் தம்மைக் காத்திட.


ஏவினாள் தேவி எண்ணிறந்த வண்டுகளை வானில்;
மேவியது இருள் வானில் வண்டுகள் பரவி விரவியதால்.


பறந்தன வண்டுகள் குருவிக் கூட்டங்களைப் போல;
நிறைத்தன வண்டுகள் மூன்று உலகங்களையும்!


துளைத்தன வண்டுகள் அரக்கர்களின் மார்புகளை;
துளைத்தன கூரிய அம்பின் முனைகளைப் போல!


இருக்கும் போர்க்களத்தில் வீர உரையாடல்கள்!
இருக்கும் போர்க்களத்தில் வீர ஆவேச யுத்தம்!


சத்தம் இன்றி அழித்து விட்டன வண்டுகள் அசுரரை!
ரத்தம் சிந்த அழித்து விட்டன வண்டுகள் அசுரரை!


ஹ்ரீங்காரத்துடன் அழித்து விட்டன அசுரர்களின்
ஹ்ருதயங்களைத் துளையிட்ட வண்டுகள் கூட்டம்.


பிரமன் தந்த வரத்துக்கு பங்கம் நேராமல்
மரணம் நேர்ந்தது ஆறுகால் வண்டுகளால்!


பிரமரி தேவியைத் துதித்து வரங்கள் பெற்றனர்
பிரமரி தேவியின் சரிதம் இதுவே அறிவீர் நீர்!


அச்சம் அகன்று விடும் இந்தச் சரித்திரத்தை
அன்புடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும்.

அகன்று செல்லும் அனைத்துப் பாவங்களும்;
அடைவர் பக்தர்கள் சாயுஜ்ய பதவிகளை

தரும் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும்
தேவி சாயுஜ்ய பதவியைத் தேவி மஹாத்ம்யம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


ஓம் தத் சத்.


தேவி பகவதி பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம் இத்துடன் நிறைவுற்றது

10#13e. BhrAmari Devi (4)


Devi spoke in a voice sweeter than that of a cuckoo,”O Devas! Say what do you want.” The Devas began to explain the cause of their sorrows. They informed Devi of the wicked deeds of the vicious Daitya in neglecting the Devas, VedAs and BrahmaNAs.


BhrAmari Devi sent out the black bees and hornets swarming around her. More and more black bees got generated and they together with those which had got out of Devi’s hands covered the whole earth. The sky was overcast with the bees and became dark.


Those black bees bored through and torn asunder the breasts of the Daityas. The Daityas could neither use their weapons nor fight back nor even exchange any words. They could do nothing but die, wherever they were and however they were.

After destroying the asuAs the bees came back to the Devi. The DevAs worshiped the Devi Bhagavati with various offerings. The MahA Devi became happy and gave to each of them separate boons and disappeared from there.


If anybody hears this wonderful story of BhrAmari Devi, he will cross the ocean of samsArA. Hearing the the accounts of the Manus will bestow auspiciousness. He who hears or recites daily the Greatness of Devi, as given in Devi Mahaatmyam , will be freed from all his sins and obtain SAjuya mukti.

The tenth Skanda of Devi Bhagavathy Bhaagavatam gets completed.



 
SEkkizhArin Periya PurANam

#48. திரு கணம்புல்ல நாயனார்

இருக்கு வேளூர் என்னும் ஒப்பற்ற திருத்தலம்
இருந்தது வடவெள்ளாற்றின் தென் கரையில்.

கணம்புல்ல நாயனார் என்னும் சிவனருட் செல்வர்
கணம் தவறாது அன்பு செய்தார் கண்ணுதலோனிடம்.

தவறாமல் நெய் விளக்கு ஏற்றுவார் சிவாலயங்களில்;
தரும் இத்திருப்பணி ஞானஒளிப் பாதையை முக்திக்கு!

வளர்ந்தது வறுமை இவர் இல்லத்தில் காலப்போக்கில்;
தளரவில்லை ஆலயத் திருப்பணி வளரும் வறுமையால்.

நிலபுலன்களை விற்றார்; திருத்தல யாத்திரை செய்தார்;
நிறைவாக விளக்குகளை ஏற்றியபடி அடைந்தார் தில்லை.

பிரிந்து செல்ல முடியவில்லை தில்லையை, நடராஜனை!
சிறிய வீடு எடுத்துத் தங்கிவிட்டார் இவர் தில்லையிலேயே.

பணம் தீர்ந்து போய்விட்டது ஒருநாள் அதன் பின்னர்
கணம்புல்லை அரிந்து, அதை விற்று விளக்கேற்றினார்.

சோதனை மேல் சோதனையாக புல்லும் விற்கவில்லை;
வேதனையுடன் எரித்தார் கணம் புல்லையே விளக்காக.

எரிந்து முடிந்து விட்டது கணம்புல் வெகு விரைவாக - அதை
எரிக்க முடியவில்லை வழக்கம் போல நடு ஜாமம் வரையில்.

விளக்கு ஆக்கிவிட்டார் நாயனார் தன் மேனியையே!
விளக்கு போல எரித்தார் தன் சென்னியை அன்புடன்!

தாங்கவில்லை அரனுக்கு அடியவன் படும் துன்பம்
தந்தான் திருக்காட்சி உடனே தேவியுடன் நந்தி மீது.

அளித்தான் அவருக்கு உயரிய சிவலோகப்பதவியை;
களித்தார் கணம்புல்ல நாயனார் பெருவாழ்வு பெற்று.

"கணம் புல்ல நம்பிக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#48. KaNampulla nAyanAr

Irukku VELoor was situated in the Southern Bank of Vada VeLLARu. KaNam pulla nAyanAr lived here. He was a sincere and serious devotee of Lord Siva.

He was committed to lighting ghee lamps in the Siva Temples. He had a firm belief that driving away the darkness in this manner would show him the bright path to salvation.

In due course of time he became poorer and poorer. But it did not affect his commitment to light lamps in the temples. Finally he sold all his earthly belongings and went on a long pilgrimage. He lit ghee lamps in every temple he visited and finally reached Thillai Chidambaram.

He got attached to Thillai and NatarAjan so much that he could not leave that place. He rented a small house and stayed on in Thillai. He took on himself the task of lighting lamps in the Siva temple at Thirup Puleeswaram.

His small fortune dwindled down and soon got completely exhausted. He then started to cut the kaNam grass. He sold it and out of the money earned would light the lamps at the Siva temple.

Soon he was unable to sell the cut kaNam grass. He then twisted the grass into thick wicks and burned them like lamps.

But the grass would burn down faster and he was not able to light up the temple as long as he usually did. Now decided to burn his own body as a lamp.

He lit his head and was happy to make it burn like a lamp. Siva could not bear the agony of his devotee any longer. He appeared there on His bull with His Devi. He blessed the nAyanAr with a permanent spot in His wonderful world called SivalOkam









 
முதல் மூன்று ஆழ்வார்கள்

முதல் மூன்று ஆழ்வார்கள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவருமே ஆறாம் நூற்றாண்டில், சித்தார்த்தி ஆண்டில், ஐப்பசி மாதத்தில், அடுத்து அடுத்த மூன்று நட்சத்திரங்களில் (திருவோணம், அவிட்டம், சதயம்) பிறந்தனர்.

மூவருமே நீர் நிலைகளில் முறையே பொற்றாமரை மலர், நீலோத்பல மலர், சிவப்பு அல்லி மலர் என்பவற்றின் மேல் அவதரிக்கின்றனர். இறைவனை அருளைப் பெறும் சமயம் வந்தவுடன் மூவரும் சந்திக்கின்றனர்.

சந்தித்த மூவரும் இறைவனைச் சிந்திக்கின்றனர். அவனை வந்திக்கின்றனர். அதன் பின்னர் அவனையும் சந்திக்கின்றனர். அவன் அருளால் பாசுரங்கள் உருவாகி பிரவாகிக்கின்றன.

அந்தாதி என்னும் வகையில் நூறு, நூறு அழகிய வெண்பாக்களைக் கொண்டு அமைகின்றன. இவைகளே முதலாம் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளாக உருவெடுக்கின்றன.

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பது வழக்கு. ஆனால் இந்த மூன்று ஆழ்வார்களுமே இறைவனைக் கண்டும், அது பற்றி விண்டும் சிறந்துள்ளனர்.

(#4 from my AzhwArgal VAzhkkai VaralAru which will appear here as soon as the 63 NAyanmAr VaralAru gets completed.)
 

#5. முதல் மூவரின் வினோத சந்திப்பு

திருக்கோவிலூர் வந்தடைந்த பொய்கையாழ்வார் அங்கு மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தில் உள்ள ஒரு சிறு இடைக்கழியில் தங்கி இருந்தார். பூதத்தாழ்வாரும் அங்கு தங்க இடம் தேடி வந்தார்.

"ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம் " என்று இருவரும் அங்கிருந்தனர். பிறகு பேயாழ்வாரும் அதே சமயம் அங்கு இடம் தேடி வந்தார். "ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்" என்று முவரும் நின்று கொண்டிருந்தனர்.

மூவரும் பெருமானின் அருமை பெருமைகளைப் பேசிககொண்டிருந்தனர். அப்போது அதைக் கேட்பதற்குப் பெருமானும் அங்கே வந்து விட்டார் .

இருளில் தங்களை அவ்வண்ணம் நெருங்குவது யார் என்று தெரியவில்லை. பொய்கையாழ்வார் தொடங்குகின்றார் அந்தாதியை.

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று"

அதைத் தொடர்ந்து பூதத்தாழ்வார் பாடுகின்றார்

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"

இவர்கள் ஏற்றிய விளக்கொளியில் பெருமானைக் கண்டார் பேயாழ்வார்.


"திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு

மருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கி ளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கங் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று" என்று பேயாழ்வார் பாடினார்.

ஞானம், பக்தி, வைராக்கியம் கொண்டு துறவறம் பூண்ட இம்மூவரும் இறைவனுக்குத் தொண்டு புரிந்தனர் .


ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்






 
bhagavathy bhaagavatam - skanda 11

11#1a. சதாசாரம் (1)

சதாசார அனுஷ்டானம் பிரியமானது தேவிக்கு
சாதனம் ஆகும் சதாசாரம் தேவி அருளைப் பெற.

புரிய வேண்டும் நித்திய, நைமிதிக்க கர்மங்களை;
புரியும் உதவி இது சஞ்சித விளைவுகளைத் தடுக்க.

ஸ்ருதியுக்த தர்மம் ஸ்ருதி சம்பந்தம் உடையது;
ஸ்ம்ருதியுக்த தர்மம் ஸ்ம்ருதியில் கூறப்படுவது.

ஆசாரம் காரணம் சகல சுப நிகழ்வுகளுக்கும்;
ஆசாரம் காரணம் ஆயள் அபிவிருத்திக்கும்.

ஆசாரம் காரணம் நல்ல சந்ததியினருக்கு;
ஆசாரம் காரணம் நற்குணம், ஞானத்துக்கு.

அனைத்தையும் பெறுவான் ஆசாரம் உள்ளவன்;
அனைவரும் ஒதுக்குவர் ஆசாரம் இழந்தவனை.

ஆசாரத்தின் இரு கண்கள் ஸ்ருதி, ஸ்ம்ருதி;
ஆசாரத்தின் இருதயம் ஆகும் புராணங்கள்.

தர்மம் கூறப்பட்டிருக்கும் இம் மூன்றிலும்!
தர்மம் ஆகாது இம்மூன்றும் முரண்பட்டால்.

பிரமாணம் ஆகும் வேதம் கூறுவதே – ஆகாது
பிரமாணம் வேதத்திலிருந்து மாறுபடும் ஒன்று.

வேதம் கூறாததை ஒதுக்க வேண்டும் – அவை
தோதாக மற்றவற்றில் காணப்பட்ட போதிலும்.

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

11#1a. SadAchaRA (1)


SadAchAra is the right way of living. Devi is pleased with a person who follows the rules of SadAchAra meticulously. One must perform his nithya and naimitthika karmA without fail. This will curb the bad effects of sanchita karmAs.

Sruti yukata Dharmam is related to the Sruti. Smruti yukta Dharmam is what is stated in Smrutis. SadAchAra bestows many benefits on one who observes it.

It bestows auspiciousness, a long life span, a good lineage, good conduct and pure JnAnam to one who follows it sincerely.

One who follows SadAchAra will get everything he desires. One who does not follow sadAchAra will be shunned by everyone else.

Sruti and Smruti are the two eyes of SadAchAra. PurANAs form the heart of SadAchAra. Dharma is outlined in all these three.

But if there is a contradiction among what is stated in these three, one must take the VedAs as the pramANam and not the other two of these three.

Whatever is not stated in the VedAs can be neglected – even if they appear in the other two namely Smruti and PurANam.

 
bhagavathy bhaagavatam - skanda 11

#49. திரு காரி நாயனார்

அவதரித்தார் காரி நாயனார் திருக்கடவூர் தலத்தில்,
அந்தணர் குலத்தில், சிறந்த ஒரு செந்தமிழ் புலவராக.

பெற்றிருந்தார் நாயனார் தமிழ் கவி பாடும் திறனை;
வீற்றிருந்தனர் வாணி நாவிலும்; அரன் அறிவிலும்!

செய்து வந்தார் சிவனடியவர்களின் திருத் தொண்டுகள்;
செய்து வந்தார் ஆலயங்களில் தவறாமல் திருப்பணிகள்.

படைத்தார் காரிக்கோவை என்னும் அரிய தமிழ் நூலை.
அடைந்தார் மூவேந்தர்களின் உயர்ந்த நட்பை, மதிப்பை.

அளித்தனர் பொன்னும், மணியும், பொருளும் இவருக்கு
களிப்புடன் நட்புப் பூண்ட தமிழினத்தின் மூவேந்தர்களும்.

புதுப்பித்தார் பழுதடைந்த பழைய சிவன் கோவில்களை;
புது சிவாலயங்கள் கட்டிச் செய்வித்தார் கும்பாபிஷேகம்.

அமுது அளித்து மகிழ்ந்தார் அடியவர்களுக்குக் காரி நாயனார்
அள்ளி அள்ளித் தந்தார் அரிய பரிசுகளை அன்புடன் அடியாருக்கு

சேவித்து வந்தார் அல்லும், பகலும், அனவரதமும், காரிநாயனார்
கோவில் கொண்டிருந்த அமிர்தகடேசுவரரை, தேவி அபிராமியை.

மகிழ்ந்தார் நறுமண மாலைகள் சார்த்தி அண்ணலை அன்னையை;
மகிழ்ந்தார் தமிழ்ப் பாமாலைகள் சார்த்தி அண்ணலை அன்னையை.

பேரருள் பாலித்தார் அமிர்த கடேசுவரர் காரி நாயனாருக்கு - அதனால்
பேரின்பம் தந்தார் தன் ஒப்புயர்வற்ற திருவடி நீழலில் நிலைத்திருக்க .

"காரிக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#49. KAri nAyanAr

KAri nAyanAr was born in a family of brahmins in Thirukkdavoor. He was a great exponent in composing Poems in Tamizh. It was as if Goddess Saraswathi Devi was residing on his tongue and Lord Siva ruled over his intellect.

He was committed to serving Lord Siva and devotees of Lord Siva. He attended at all the needs of the Siva temples. He composed a famous Work called KArik kOvai. He won the respects and friendship of all the three kings of Thamizh nAdu namely ChERan, ChOzhan and PAndian.

All the three kings showered on him rich gifts with a great affection. He used up these in renovating the old Siva Temples and building new Siva Temples and performing Kumbha - abhishekham to those temples.

KAri nAynar found great joy in feeding the devotees of Siva and giving them rich gifts. His thoughts were always centered on The Amurtha GhatEswarar and AbhirAmi Devi. He worshiped them both with the fragrant fresh flower garlands as well as the garlands made of his songs singing their praise.

Amirtha GhatEswarar and AbhirAmi Devi blessed him and made him live forever a life of superior bliss in their SivalOkam.




 
bhagavathy bhaagavatam - skanda 11

11#1b. சதாசாரம் (2)

பிரம்ம த்யானம் செய்ய வேண்டும் தினமும்;
பிராணாயாமம் செய்ய வேண்டும் தினமும்.


இடகலையில் உள்ளிழுத்த காற்றை நிறுத்தி
வடகலையில் வெளித்தள்ளி ரேசிக்க வேண்டும்.


தியானிக்க வேண்டும் தேவியை உள்ளத்தில்!
தியானிப்பவன் ஆவான் ஒரு ஜீவன் முக்தன்.


தியானிப்பவனின் இருப்பு தேவியின் இருப்பு;
தியானிப்பவனின் நடை தேவியின் யாத்திரை;


தியானிப்பவனின் புத்தியே தேவியின் சிந்தனை;
தியானிப்பவனின் பேச்சே தேவியின் தோத்திரம்;


“ஸர்வாத்மகமான தேவியின் வடிவு என் வடிவே!
ஸர்வ தேவதைகளின் அர்ச்சனை தேவியுடையதே.


தேவியிடம் இருந்து வேறானவன் அல்ல நான்;
தேவியின் ஸ்வரூபமான பிரம்மம் ஆவேன் நான்;


உறைவிடமில்லை நான் துக்கங்களுக்கு!
உள்ளேன் சத் சித் ஆனந்த ஸ்வரூபமாக!”


பிரகாசிப்பாள் தேவி முதல் பிரயாணத்தில்.
தருவாள் மறு பிரயாணத்தில் அமுதச்சுவை.


ஆனந்த மயமாவாள் நம் இதயப் பிரதேசத்தில்;
தியானிக்க வேண்டும் தேவியைச் சரணடைந்து.


தியானிக்க வேண்டும் நிஜ குருவை பிரமரந்திரத்தில்;
தோத்திரம் செய்ய வேண்டும் நிஜ குருவை எண்ணி.


குருவந்தனம் சொல்லாமல் வெளியிடத்துக்கு
ஒருபோதும் செல்லவே கூடாது என்றறிவீர்!


गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥१॥


கு3ருர் ப்3ரஹ்மா கு3ருர் விஷ்ணு கு3ருர் தே3வோ மஹேஸ்வர:
கு3ருரேவ பரம் ப்3ரஹ்ம தஸ்மை ஸ்ரீ கு3ரவே நம:

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்


11#1b. SadhAchAra (2)

One must meditate on the Supreme Brahman every morning. One must perform regularly PrANAyAmam every morning. The air must be inhaled through the left nostril. It must be held inside and exhaled through the right nostril.


One must meditate on Devi without fail. One who meditates on Devi becomes a jeevan mukta (liberated while still living in his body). He becomes an extension of Supreme Devi so much so that his travel become Devi’s yAtrta, His buddhi becomes Devi’s thoughts; His speech becomes Devi’s stuti; His form becomes Devi’s form.


The worship offered to the different Gods becomes Devi’s worship. One must firmly believe that he is not different from Devi – who lives in every jeeva.


He must tell to himself,”I am not really different from Devi. I am the swaroopam of Devi. I am not a mere mortal to get afflicted by sorrow. I am the Sath-Cith-Anandha swaroopam”


Devi shines during the journey of the kuNdalini from the moolAdhAra upwards. She showers nectar during the downward journey of the kuNdalini back to moolAdhAra.

In the heart region Devi gives us pure bliss. One must start meditating on Devi after surrendering to her unconditionally.

One must meditate on his own guru – placing him in one’s Brahmarandram (the top of the skull). He must praise his own Guru-the living god. One must not leave the house and go out without praying to his guru with this mantra of Guru Vandanam


गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥


Gurur-BrahmA Gurur-VishNur-GururdevO MahEshvarah |
GururEva Param Brahma Tasmai Shree-Gurave Namah ||



 
SEkkizhArin Periya PurANam

#50. திரு நின்றசீர் நெடுமாறன் நாயனார்

முத்தமிழையும் வளர்த்தது மதுரை மாநகரம் - ஆண்டான்
இத்தலத்தை மன்னன் நின்றசீர் நெடுமாறன் நாயனார்.

பட்டத்தரசி ஆனாள் சோழமன்னனின் திருச் செல்வியான
மட்டற்ற சிவநேசம் கொண்டிருந்த மங்கையர்க்கரசியார்.

சிக்கினான் மன்னன் சமணர்கள் விரித்த மாய வலையில்;
சிக்கெனப் பற்றிக் கொண்டு விட்டான் அச் சமண மதத்தை.

மாய வலையை அகற்றினார் ஆளுடைய பிள்ளையார்;
தூய சிவநெறியில் செலுத்தினார் மன்னனை மீண்டும்!

வளர்த்தான் மன்னன் இயல், இசை, நாடகத் தமிழை;
வளர்த்தான் சைவ நன்னெறிகளை வான் புகழும்படி.

வென்றான் வடபுலத்து மன்னனைத் திருநெல்வேலியில்
நின்றான் பின்பு திருநெல்வேலி வென்ற நெடுமாறனாக.

புரிந்தான் ஆலவாய் அண்ணலின் ஆலயப் பணிகளை;
புரிந்தான் தான் குடிமக்கள் மனம் மகிழும் முடியாட்சி.

அடைந்தான் விரிசடையோன் திருவடிகளில் பேரின்பம்;
விடையேறும் பெருமான் காட்டிய தண்ணருளால் மன்னன்.

"நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#50. Nindraseer NedumAran nAyanAr

Madurai contributed to the growth of all the three forms of Thamizh namely Prose (Iyal), Music (Isai) and Drama (NAtakam). Nindraseer NedumAran nAyanAr ruled over PANdya kingdom with Madurai as his capital city.

His queen was Magaiyarkkarasi - the ChOzha princess. She had deep love for Lord Siva and the principles taught by Saivism. The king NedumAran got deluded into thinking that Jainism was the best religion and became a Jain.

The queen Magaiyarkkarasi and the chief minister Kulach chiraiyAr invited Thiru gNana Sambandhar over to Madurai. Sambandhar was able to convince the king that Saivism was superior to Jainism. The king became a Saivite and a staunch devotee of Lord Siva.

NedumAran contributed to the growth of Thamizh. He helped the cause of Saivim and spread that religion in his region. He conquered the king from the north India in a battle at Thirunelvei. He was conferred the title Thirunelveli vendra NedumAran.

He attended to the needs of the Siva temples and ruled over his kingdom well so that his citizens lived happily. He reached the lotus feet of Siva to live there forever in eternal bliss.




 
bhagavathy bhaagavatam - skanda 11

11# 2. சௌசம்

எழ வேண்டும் பிரம்ம முஹூர்த்தத்தில்;
எழ வேண்டும் நான்காவது ஜாம நேரத்தில்.

தொழ வேண்டும் இஷ்ட தெய்வத்தை தியானித்து;
தொழ வேண்டும் பரபிரும்மத்தை ஒரு யோகியானால்.

கொப்பூழுக்குக் கீழே சுத்தம் செய்ய இடது கை;
கொப்பூழுக்கு மேலே சுத்தம் செய்ய வலது கை.

சுத்தம் செய்யவேண்டும் மலஜலம் கழித்தவுடனேயே!
அலட்சியம் செய்தால் செய்ய வேண்டும் ஒரு பரிஹாரம்!

அருந்த வேண்டும் தண்ணீர் மட்டுமே மூன்று நாட்கள்;
பெற வேண்டும் மீண்டும் பரிசுத்தம் மந்திர ஜபத்தினால்.

மலம் கழித்தால் கொப்பளிக்க வேண்டும் பன்னிரு முறை;
ஜலம் கழித்தால் கொப்பளிக்க வேண்டும் நான்கு முறை.

தந்த சுத்தி செய்ய வேண்டிய காலங்கள் இவை;
சந்தியா காலம், ஜப காலம், போஜன வேளை;

தேவ பித்ரு கர்மங்கள் செய்யும் காலம், மத்திய காலம் – சம்
போகம், யாகம், தானம், யக்ஞம் இவைகள் செய்யும் காலம்.

செய்யக் கூடாது தந்த சுத்தி மல, ஜலம் கழிக்கையில்;
செய்யக் கூடாது நின்று கொண்டும், நடந்து கொண்டும்.

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

11# 2. Soucham


One must get out of the bed in the fourth jAmam or the Brahma muhoortam. This corresponds to 90 minutes before the Sunrise. One must pray to his ishta daivam (favorite God). If he happens to be yogi, he must pray to the ParamAtma (The Supreme God).

The left hand must be used to clean all the body parts below the navel and the right hand must be used to clean all the body parts above the navel.

After urinating and defecating one must get cleaned up immediately. Delaying the cleaning will have to be set right by a parihAram. One must drink only water for the next three days and also purify oneself with mantra japam.

After defecating one must wash the mouth by gargling twelve times. After urinating one must wash the mouth and gargle four times.

Teeth must be cleaned during SandhyA kAlam, japa kAlam, Bhojana kAlam, the time of performing the Deva karmAs or Pitru karmAS, madhyama kAlam, after indulgence in sex and at the time of performing dAnam, YAgam and Yagnam.

Teeth should not be cleaned while defecating or urinating. Teeth must not be cleaned while walking or standing.

 
SEkkizhArin Periya PurANam

#51. திரு வாயிலார் நாயனார்

உயர்ந்த பொலிவு பெற்று இருந்தது மயிலாபுரி
உயர்ந்த கடல் வளத்துடன் பக்தி வளமும் பெற்று

கபாலீஸ்வரர் இந்த நகரில் உறையும் பெருமான்
கற்பகவல்லி இந்த நகரில் உறையும் பிராட்டியார்

அவதரித்தார் வாயிலார் நாயனார் திருமயிலையில்
அளவற்ற அன்பு பூண்டிருந்தார் அரன், உமையிடம்.

குடி இருத்தினார் ஈசனைத் தன் உள்ளக் கோவிலில்;
நிலை நிறுத்தினார் இறையுணர்வு என்னும் தீபத்தை;

வழிபட்டார் அரனை அல்லும், பகலும், அனவரதமும்;
வழிகண்டார் சிவன் திருவடிகளில் வீடு பேற்றடைய.

"தென்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#51. VAyilAr nAyanAr

MayilApuri was prosperous in the rich wealth it derived from the sea as well in its rich devotion to Lord Siva. The name of the residing Deities are KapAleeswarar and Karpagavalli.

VAyilAr nAyanAr was born here in MayilApuri. He was a staunch devotee of KapAleeswarar and Karpagavalli. He established them in the temple called his heart and lit a bright lamp called constant devotion.

His devotion was continuous and unbroken. He found the easiest way to escape the shackles of SamsAram and attain the divine after life in the ever blissful SivalOkam.








 
bhagavathy bhaagavatam - skanda 11

11#3a. ஸ்நானம்

மலங்கள் நிறைந்தது மனித உடல் – இதில்
மலங்கள் உள்ளன ஒன்பது துவாரங்களிலும்.


புணரக் கூடாத பெண்ணைப் புணர்ந்த பாவம்;
தானம் பெறுவதனால் வந்து சேர்ந்த பாவம்;


ரஹசியச் செயல்களால் விளைந்த பாவம்,
அதிசயமாக ஸ்நானத்தால் அழிந்து போகும்!


பயனற்றவை குளிக்காமல் செய்கின்றவை;
பயன் தரும் விடியலில் செய்யும் ஸ்நானம்.


கிடைக்காது காயத்ரீ ஜப பலன்கள் – தினம்
விடியலில் குளிக்காமல் இருப்பவனுக்கு!


அக்னி ஹோத்திரக் காலத்தைத் தவற விட்டால்
கிடைக்காது இம்மையிலும், மறுமையிலும் பலன்!


காதுகளில் வசிக்கின்றனர் அக்னி, வருணன்,
சந்திரன், சூரியன், தேவர்கள், வாயு தேவன்.


சுத்தம் ஆகிவிடுவோம் வலது காதைத் தொட்டால்
பொய் சொல்லும் போதும், எச்சில் உமிழும் போதும்!


தூய ஆடைகள் அணிய வேண்டும் – அதன்பின்
தரிக்க வேண்டும் விபூதியை, ருத்திராக்ஷத்தை.


அணிய வேண்டும் மந்திரங்களை உச்சரித்து
அந்தணர்கள் ருத்திராக்ஷத்தைத் தம் உடலில்.


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்


11#3a. SnAnam

The human body is oozes filth from all the nine pores. The sin of copulating with a woman not worthy of that act; the sin accrued by accepting a dAnam; the sin accumulated by the clandestine activities are all removed completely by a purifying bath.


One who does not bathe early in the morning does not reap the benefits of his GAyatree mantra japam. If one misses the time of performing the agnihotram, he will not reap its benefit either in this life or in the next.


Agni, VaruNa, the Sun, the Moon, the DevAs and Vayu all live in our ears. Touching one’s right ear purifies a man when he utters a lie or spits his saliva.


After taking bath one must wear clean clothes. He must wear vibhooti and RudrAksham. All the brahmins must wear the RudrAksham uttering the mantrAs which go with them.




 
SEkizhArin Periya PurANam

#52. திரு முனையடுவார் நாயனார்

திரு நீடூர்பதி ஆகும் சோழநாட்டின் சிவத்தலம்;
திரு முனையடுவார் ஆவார் ஒரு வீர வேளாளர்.

வீரமும், தீரமும் மிகுந்தவர் திரு முனையடுவார்;
வீர அணி ஒன்று அமைத்தார் வீரர்களைத் திரட்டி.

உதவுவார் மன்னர்கள் போரில் வெற்றி பெற்றிட.
உதவிக்கு கிடைக்கும் பெரும் செல்வம் பரிசாக!

பயன்பட்டது செல்வம் திருத்தொண்டுகள் புரிய.
பயன்பட்டது செல்வம் பிறர் நலம் பேணுவதற்கு.

புரிந்தார் சிவத் தொண்டுகள் பல ஆண்டுகள்;
அரிய சிவபதம் பெற்றார் அரன் திருவடிகளில்.

"வேல் நம்பி முனையடுவார்க்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#52. Thiru MunaiyAduvAr nAyanAr


Thiru Needoor pathi was a famous Siva Kshethram. Thiru MunaiyAduvAr nAyanAr belonged to the race of the "Veera vELALar" known for their bravery and loyalty.

Thiru MunaiyAduvAr nAyanAr was very brave. He formed an army of youth well versed in warfare. He and his army would assist the King to win in the wars. The king would shower on them a lot of wealth to show his gratitude.

The large wealth thus earned would be spent to serve the causes of Lord Siva and His devotees. Thiru MunaiyaduvAr nAyanAr would spend the wealth for the benefit of the others without any selfish motives.

He did his charity work for a long time and obtained his spot in the blissful world of Siva.
 
11#3b. ருத்திராக்ஷம்

காணக் கூடாததைக் கண்ட பாவம்;
கேட்கக் கூடாததைக் கேட்ட பாவம்;


முகரக் கூடாததை முகர்ந்த பாவம்;
உண்ணக் கூடாததை உண்ட பாவம்;


சொல்லக் கூடாததைச் சொன்ன பாவம்;
செய்யக் கூடாததைச் செய்த பாவம்;


எண்ணக் கூடாததை எண்ணிய பாவம்;
பண்ணக் கூடாததைப் பண்ணிய பாவம்;


நெருப்பில் பஞ்சு போல அழிந்து போகும்
நெஞ்சில் ருத்திராக்ஷம் அணிந்தவனுக்கு.


ருத்திராக்ஷம் அணிபவன் ருத்திரனுகுச் சமம்;
ருத்திரன் உண்பது அவன் உண்பதற்குச் சமம்.


ருத்திராக்ஷம் அணிவதற்கு நாணும் ஒருவன்
துக்க மயமான சம்சாரக் கடலில் அமிழ்வான்.


ருத்திராக்ஷத்தைப் பரிகாசம் செய்பவன்,
பிறந்தவன் ஆவான் கலப்பு ஜாதிகளில்.


அணியலாம் இதை எந்த ஆபரணத்தோடும்;
அணியலாம் இதை எந்த வர்ணத்தவரும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


11#3b. RudrAksham


The sin of seeing things not to be seen; the sin of hearing things not to be heard; the sin of smelling things not to be smelled; the sin of eating things not to be eaten; the sin of speaking words which should not be spoken; the sin of doing deeds not to be done; the sin of thinking thoughts not to be thought about; and the sin of performing acts not to be performed will all burn away like the cotton does in a fire, if the person wears RudrAksham around his neck.


A man wearing RudrAksham is equal to Rudran himself. If he eats the food it is as good as eaten by Rudran himself. One who feels shy to wear a RudaAksham will get immersed in the samsAra sAgaram filled with sorrows. One who makes fun of RudrAksham is born out of the mixed varNas.


RudrAksham may be worn with any other ornament. It may be worn by men belonging to all the four varNas.




 
SEkkizhArin Periya PurANam

#53. திரு கழற்சிங்க நாயனார்

அரசாண்டு வந்தார் கழற்சிங்க நாயனார் - அரனின்
அருளால் அறவழியில் நின்று தன் பல்லவ நாட்டை.

வாகை சூடினார் வடபுலத்து மன்னர்களை வென்று;
வகைப்படுத்தினார் அரனின் ஆலய வழிபாடுகளை .

விரும்பினார் தியாகேசனைத் தரிசிப்பதற்கு - எனவே
திருவாரூர் சென்றார் தன் பிராட்டி, பரிவாரங்களுடன்.

பூங்கோவில் புண்ணியன் அருள்வடிவதில் மெய்மறந்து
பொங்கும் பக்தியுடன் வழிபட நின்றுவிட்டார் நாயனார்.

அதிசயித்தாள் அவர் பட்டத்து அரசி அரனை வலம் வந்து;
மதியை மயக்கின அங்கு குவிந்திருந்த நறுமண மலர்கள்!

தொடுத்துக் கொண்டிருந்தனர் தொண்டர்கள் மலர்களை;
எடுத்தாள் அரசி ஒரு நறுமண மலரை! அதை முகர்ந்தாள்!

தொண்டருளுள் ஒருவர் ஆவார் செருத்துணை நாயனார்;
தண்டிப்பார் அச்சமின்றி யார் எத்தவறு செய்திருந்தாலும்.

சினம் கொண்டார் மலரை முகர்ந்துவிட்ட அரசியின் மீது!
இனம் புரியாமல் சேதித்தார் அவள் நாசியின் நுனியை!

மண்மீது விழுந்து விட்டாள் வலியால் மயங்கிய அரசி;
மண்ணாளும் மன்னன் ஓடி வந்தான் பதறியடித்தபடி.

"யார் செய்தது இந்தக் கொடுமையை ?" என்று அரசன்
பார் அஞ்சும் சினத்துடன் கேட்டான் தொண்டர்களிடம்.

துணிந்து முன்வந்து நின்றார் செருத்துணை நயனார்;
"துணிக்கும்படி என்ன பிழை செய்தாள் இவள்?" என

"முகர்ந்து பார்த்து விட்டாள் நறுமண மலரை மன்னா!
அகமகிழ்ந்து அரனுக்குச் சூட்டிடும் முன்பே" என்றார்.

"எடுத்த பின் அல்லவா முகர்ந்தாள் மலரை - எனில்
எடுத்த கரத்தை ஏன் நீர் துணிக்கவில்லை ?" என

வெட்டினார் கழற்சிங்கர் அரசியின் திருக் கரத்தை;
வெருண்டனர் இதுகண்ட அங்கிருந்த தொண்டர்கள்!

அளித்தனர் அருங்காட்சி அரனும், உமையும, விடை மீது!
அருளினர் கருணையுடன்; போக்கினர் அரசியின் துயர்.

வியந்தனர் அனைவரும் கழற்சிங்கரின் தீவிர பக்தியை!
தயங்கவில்லை தவறு செய்த மனைவியைத் தண்டிக்க !

ஆண்டார் நாயனார் ஆண்டுகள் பல அறநெறி வழுவாமல்!
மாண்டபின் அடைந்தார் அவர் அரனின் திருவடி நீழலை .

"காடவற்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி







#53. KazhaRsingar nAyanAr


KazhaRsingar nAyanAr was ruling over his Pallava Kingdom in a righteous manner - guided by his intense devotion and love for Lord Siva. He won over the Kings of the North in a battle. He regulated the worship of Lord Siva in all the Siva temples.



Once he wished to get a glimpse of ThiruvAroor ThyAgEsan. He went to ThiruvAroor with his Queen and his retinue. He was overwhelmed by the dharshan of Lord Siva in PoongOvil and stood rooted to the spot in ecstasy.


The Queen went round the temple. She was thrilled by the colorful sight and sweet smell of the heap of flowers which the devotees were converting into garlands. She took one flower from the heap and smelled it.


Cheruth thuNai nAyanAr was among the devotees who were making the garlands. He was not afraid of anyone on earth. He would dare to punish anyone whosoever who committed any mistake. He chopped off he tip of the nose of the queen for smelling the flower meant to be offered to Lord Siva.


The queen was duly shocked by this act. She fainted on the ground by the shock and the pain inflicted on her. The king KazhaRsingar came running to the spot where his Queen had fainted. He demanded in great anger to know who had committed this atrocity.


CheRuth thuNai nAyanAr came forward boldly. The King now demanded, "What is the sin she had committed to get punished in this manner?" CheRuth thuNai nAyanAr said, "The Queen smelled a flower which was meant for Lord Siva, before it could be offered to Him"


The King now asked, " If so she must have picked up the flower first and then smelled it. Why did you not cut off the hand that picked the flower first?"


He cut off the hand of his queen mercilessly. The bystanders were awestruck and scared by the intensity ff the King's love for Siva.

Now Siva and Uma appeared seated on the back of Nandi Devan. They took pity on the Queen, eased her pain and suffering and restored the cut off parts.


KazahRsingan ruled for a long time and reached the blissful world of Siva after his life on earth.



 
bhagavathy bhaagavatam - skanda 11

11#4a. ருத்திராக்ஷ வகைகள்(1)

“எப்படி வந்தது இத்தனை சிறப்பு – இதனைத்
தப்பாமல் கூற வேண்டும் தாங்கள் எனக்கு!”

நாரதன் வேண்டினான் நாராயணனிடம்,
நாராயணன் கூறினான் நாரதனுக்கு இதை.

“கேட்டான் இதையே முருகன் ருத்திரனிடம்;
கூறினான் ருத்திரன் ருத்திராக்ஷ மகிமையை.

வெல்ல இயலாதவர்கள் திரிபுர அசுரர்கள்;
தொல்லைகள் பல தந்தனர் தேவர்களுக்கு.

முறையிட்டனர் தேவர்கள், தெய்வங்கள் – தம்
குறைகளை என்னிடம் ஒன்றாகக் கூடி வந்து.

சகல தேவ ஸ்வரூபமான, மனோஹரமான,
சுடர் விட்டு அக்னி போல எரியக் கூடியதான,

பயங்கர வடிவுடைய, இடையூறுகளை அகற்றக் கூடிய
அகோரம் என்னும் அஸ்திரத்தை ஆயிரம் ஆண்டுகள்

கண் மூடிச் சிந்தித்தேன் மனத்தை ஒருமுகப் படுத்தி;
கண் திறந்ததும் உருண்டோடின கண்ணீர்த் துளிகள்!

தோன்றின அவற்றிலிருந்து ருத்திராக்ஷ மரங்கள்;
தோன்றின முப்பத்தெட்டு விதமான ருத்திராக்ஷங்கள்!

வலக் கண்ணாகிய சூரிய விழியின் நீரிலிருந்து
கபில வர்ணம் கொண்ட பன்னிரெண்டு வகைகள்;

இடக் கண்ணாகிய சந்திர விழியின் நீரிலிலிருந்து
வெண்ணிறம் கொண்ட அரிய பதினாறு வகைகள்;

நெற்றி கண்ணாகிய அக்னி விழியின் நீரிலிருந்து
கறுப்பு நிறம் கொண்ட பத்து வகைகள் தோன்றின.

வெண்ணிறம் கொண்டவை ஆகும் பிராமண ஜாதி;
செந்நிறம் கொண்டவை ஆகும் க்ஷத்திரிய ஜாதி;

கலப்பு நிறம் கொண்டவை ஆகும் வைசிய ஜாதி
கருப்பு நிறம் கொண்டவை ஆகும் சூத்திர ஜாதி!”

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

11#4a. The types of RudrAkshas (1)


NArada asked NArAyaNan,”Why is RudrAksham so famous? You must explain this to me!” NArAyaNan said,” Skandan had asked the same question to Rudran and this is what Rudran told Skandan.”

“The asurAs living in TripurA were invincible. They gave immense problems to the people of the three worlds. The DevAs complained about this to me (Rudran).

I sat in deep meditation for one thousand years concentrating on the Aghora Asthram – which has the swaroopam of all the DevAs, which steals one’s mind by its uniqueness, which glows like the burning fire, which is awesome and which can remove all the hurdles.

When I opened my eyes three drops of tears rolled down from my three eyes. From those three drops grew the trees of RudrAksham which were of thirty eight different types.

Twelve types which had Kapila VarNam appeared from the teardrop from my right eye which is the Sun. Sixteen types which were white in color appeared from the
tear drop from my left eye which is the Moon. Ten different types which were black in color appeared from the tear from my third eye which is Agni.


The white colored RudrAksha belong to the Brahmins, the red colored belong to the KshatriyAs, the mixed colored belongs to Vaisayas and the black colored belong to the SoodrAs.”

 
SEkkizhArin Periya PurANam

#54. திரு இடங்கழி நாயனார்

அவதரித்தார் கோனாட்டின் குறுநில மன்னராக
ஆதித்த சோழனின் குடியில் இடங்கழி நாயனார்.

குறுநில மன்னனாக ஆன போதிலும் இடங்கழியார்
பொருளும் பொன்னும் அளித்தார் ஆலயங்களுக்கு

தழைத்து ஓங்கின அப்போது சைவமும், தர்மமும்.
தழைத்து ஓங்கின அப்போது சிவத் தொண்டுகள்.

செய்து வந்தார் ஒரு சிவனடியார் திருவமுதுத் தொண்டு
செய்ய முடியவில்லை தொடர்ந்து நெல் தட்டுப்பாட்டால்

கலங்கினார் மனம் சிவனடியார் தன் இயலாமையால்
களஞ்சியத்தில் உள்ளதாம் அரசன் சேகரித்த நெல்!

நள்ளிரவில் நுழைந்தார் களஞ்சியத்தில் சிவனடியார்;
கவர்ந்தார் நெல் மூட்டைகளைக் கள்வனைப் போல;

மாட்டிக் கொண்டார் காவலரிடம் அந்தச் சிவனடியார்
கூட்டிச் சென்றனர் அவர்கள் அவரை இடங்கழியாரிடம்;

தாக்கியது வேந்தனை அடியாரின் சிவக்கோலம்;
தாக்கியது வேந்தனை அடியாரின் கள்ளத்தனம்!

"திருவமுது அளித்து வந்தேன் சிவனடியாருக்கு!
திருப்பணியைத் தொடரக் கவர்ந்தேன் நெல்லை!"

தந்தான் பொன்னும், பொருளும் அந்தச் சிவனடியாருக்கு.
தந்தான் அனுமதி அடியார் வேண்டிய நெல்லை பெற்றிட .

வெண்ணீற்றுக்கு வணங்கினார் இடங்கழியார் நாயனார்;
கண்ணுதல் பெருமானின் இனிய சேவடிகளை அடைந்தார்.

"தான் நம்பி இடங்கழிக்கு அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#54. Idangazhi nAyanAr

Idangazhi nAyanAr was born in the race of Adhithya ChOzhan, in the family of the Chieftain of KOnAdu which had KodumbALoor as its capital. He donated a lot of gold and money to the Siva temples. Saivism and Dharma flourished in his reign. The services rendered to Lord Siva and His devotees flourished under his reign.

There was a devotee of Siva who used to feed the other devotees as a service. But soon there was a shortage of paddy and he could not continue his humble service. He had heard that the paddy procured by the Chieftain was saved in the granary.


One fine night he entered the granary to steal the paddy but got caught. He was taken to the Chieftain Idangazhi nAyanAr who was surprised by the holy appearance of the thief and his unholy action. A devotee of Siva and a thief at the same time?

The Devotee of Siva explained the reason for this action. "I used to feed all the devotee of Siva but of late am unable to continue my service. So I wanted to steal some paddy so that the feeding can go on as usual."

Idangazhi nAyanAr presented the devotee with money, gold and grains. He gave permission to the other devotees who were doing a similar service to feel free to take take away the paddy required by them without any fear of punishment.

He lived for long and ruled well. He took refuge in the lotus feet of Lord Siva and got freed from the shackles of SamsAra.






 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 11

11#4b. ருத்திராக்ஷ வகைகள்(2)

ஒரு முகம் கொண்டது சாக்ஷாத் சிவ ஸ்வரூபம்;
நீக்கும் பிரம்மஹத்தி தோஷங்களையும் கூட!


இரு முகம் கொண்டது தேவியின் ஸ்வரூபம்;
நீக்கும் புத்தி பூர்வ, அபுத்தி பூர்வ பாவங்களை.


மூன்று முகம் கொண்டது அக்னி ஸ்வரூபம்;
நீக்கும் ஸ்த்ரீ ஹத்தி தோஷத்தை நொடியில்.


நான்கு முகம் கொண்டது பிரம்ம ஸ்வரூபம்;
நீக்கும் நர ஹத்தி என்னும் கொடிய பாவத்தை.


ஐந்து முகம் கொண்டது காலாக்னி ருத்ர ஸ்வரூபம்;
நீக்கும் தவறான உணவு, புணர்ச்சியின் பாவங்களை.


ஆறு முகம் கொண்டது சுப்ரமண்ய ஸ்வரூபம்;
நீக்கும் பிரம்ம ஹத்தி போன்ற பாவத்தையும்.


ஆறு முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை ஒருவன்
அணிந்து கொள்ளலாம் தனது வலது காதில்.


ஏழு முகம் கொண்டது மன்மத ஸ்வரூபம்;
நீக்கும் பொன்னைத் திருடிய பாவத்தையும்.


எட்டு முகம் கொண்டது விநாயக ஸ்வரூபம்;
நீக்கும் சகல பாவங்களை; தரும் நன்மைகளை!


ஒன்பது முகம் கொண்டது பிரணவ ஸ்வரூபம்;
தரும் புத்தியும், முக்தியும், சிவலோகப் பதவியும்.


நீக்கும் ஆயிரம் நர ஹத்தியின் பாவங்களை;
நீக்கும் நூறு பிரம்ம ஹத்தியின் பாவங்களை.


ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை
ஒருவன் அணியலாம் தன் இடது தோளில்.


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்


11#4b. Types of RudrAkshas (2)


RudrAksha with a single face is Lord Siva Himself. It can rid the wearer of even the sin incurred by killing a brahmin.


The RudrAksha with two faces is the swaroopam of Devi. Two different sorts of sins (buddhi poorva and abuddhi poorva) are completely destroyed by it.


The RudrAksha with three faces is the swaroopam of Agni. The sin incurred by killing a woman (sthree haththi dosham) is destroyed by it – in a moment.


The RudrAksham seed with four faces is the swaroopam of BrahmA and removes the sin of killing human beings (nara haththi dosham).


The RudrAksham with five faces is the swaroopam of RudrA. Sins incurred by eating the forbidden food and copulating with unworthy women are destroyed by it.


The six faced RudrAksha is the swaroopam of KArtikEya. It is to be worn on the right hand. The wearer becomes free from the BrahmahatyA sin.


The seven faced RudrAksha is the swaroopam of Manmatha and is named Ananga. Wearing this frees a person from the sin of stealing gold.


The eight faced RudrAksha is the swaroopam of Lord VinAyaka. Wearing this frees one from the sin of having illicit relationship with a woman from a bad family and the forbidden relationship with the wife of one’s own Guru. It bestows on the wearer plenty of food, clothes, gold and the Highest abode at the end.


The nine-faced RudrAksha is the swaroopam of Bhairava. By wearing this, a person gets both Bhoga (worldly enjoyment while living on earth) and Moksha (total liberation at the end of one’s lifetime)




 
SEkkizhArin Periya PurANam

#55. திரு செருத்துணை நாயனார்

சீரும், சிறப்பும், செல்வமும் பெற்றது தஞ்சாவூர் - இங்கு
செறுத்துணையார் அவதரித்தார் வேளாண் குலத்தில்.

பணிவு மிகுந்து இருந்தார் செறுத்துணை நாயனார்
துணிவு மிகுந்து இருந்தார் செறுத்துணை நாயனார்

கண்டிப்பார் இவர் அறியாது தவறு செய்பவர்களை;
தண்டிப்பார் இவர் அறிந்தே தவறு செய்பவர்களை.

உடல், பொருள் ஆவி என்னும் மூன்றையும் தயங்காது
விடையேறும் பெருமானின் அடியவருக்கு அளிப்பவர்.

தொடுத்துக் கொண்டு இருந்தார் இவர் மலர் மாலைகளை
அடுத்து இருந்த ஆலய மண்டபத்தில் அமர்ந்து கொண்டு.

வழிபட ஆலயம் வந்தான் காடவர்கோன் கழற்சிங்கன்;
வழிபட அவனுடன் வந்தனர் அரசியும் பிற அதிகாரிகளும்;

மயக்கியது அரசியை புது மலர்களின் நறுமணம்;
தயக்கம் இன்றி எடுத்து முகர்ந்தாள் ஒரு மலரை.

தள்ளினார் நாயனார் அரசியின் கூந்தலைப் பற்றி!
துள்ளி விழுந்தது அவள் நாசி அவர் வாள் நுனியால்!

சினம் கொண்டார் மலரை முகர்ந்துவிட்ட அரசியின் மீது!
இனம் புரியாமல் சேதித்தார் அவள் நாசியின் நுனியை!

மண்மீது விழுந்து விட்டாள் வலியால் மயங்கிய அரசி;
மண்ணாளும் மன்னன் ஓடி வந்தான் பதறியடித்தபடி.

"யார் செய்தது இந்தக் கொடுமையை ?" என்று அரசன்
பார் அஞ்சும் சினத்துடன் கேட்டான் தொண்டர்களிடம்.

துணிந்து முன்வந்து நின்றார் செருத்துணை நயனார்;
"துணிக்கும்படி என்ன பிழை செய்தாள் இவள்?" என

"முகர்ந்து பார்த்து விட்டாள் நறுமண மலரை மன்னா!
அகமகிழ்ந்து அரனுக்குச் சூட்டிடும் முன்பே" என்றார்.

"எடுத்த பின் அல்லவா முகர்ந்தாள் மலரை - எனில்
எடுத்த கரத்தை ஏன் நீர் துணிக்கவில்லை ?" என

வெட்டினார் கழற்சிங்கர் அரசியின் திருக் கரத்தை;
வெருண்டனர் இதுகண்ட அங்கிருந்த தொண்டர்கள்!

அளித்தனர் அருங்காட்சி அரனும், உமையும, விடை மீது!
அருளினர் கருணையுடன்; போக்கினர் அரசியின் துயர்.

வியந்தனர் அனைவரும் கழற்சிங்கரின் தீவிர பக்தியை!
தயங்கவில்லை தவறு செய்த மனைவியைத் தண்டிக்க !

வியந்தனர் அனைவரும் செறுத்துணையாரின் தீரத்தை!
தயங்கவில்லை அவர் தவறு செய்த அரசியைத் தண்டிக்க!

வாழும் போது ஈசன் திருவடிகளுக்குத் தொண்டு புரிந்தார்;
வாழ்ந்து முடிந்தபின் சேர்ந்தார் அரனின் இணையடிகளை.

"மன்னவனாம் செறுத்துணை தன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#55. CheRuth thuNai nAyanAr

Tanjavoor is a very famous place in Tamil Nadu. CheRuth ThuNai nAyanAr was born here in the family of farmers and cultivators. He was as fearless to the core and as he was a staunch devotee of Lord Siva.

He would spare no one who commits a mistake. If the person commits the mistake due to his or her ignorance, he or she would be severely warned by nAyanAr. If the person commits the mistake knowingly, then he or she would be severely punished by CheRuth thuNai nAyanAr.

Chethu thuNai nAyanAr was ready to offer his body, his belongings and his life in serving Lord Siva and the devotees of Siva. One fine day he along with many other devotees of Siva, sat in a mandapam adjacent to the temple and was making garlands with the heap of fresh flowers.

KAdavar KOn Kazharsingan came to worship the deity in that temple along with his queen and his retinue. The king stood rooted to the spot and was praying with ecstasy to his lord. The queen went on and saw the devotees making the garlands.

The sight and the smell of the heap of fresh flowers fascinated the queen. She picked up a flower and smelled it. Cheruth thuNai nAyanAr was among the devotees got wild with rage.

He held the hair of the Queen; pushed her down on the ground and chopped off he tip of her nose - for smelling the flower meant to be offered to Lord Siva.

The queen was duly shocked by this act. She fainted on the ground due the shock and the pain inflicted on her. The king KazhaRsingar came running to the spot where his Queen had fainted. He demanded in great anger to know who had committed this atrocity.

CheRuth thuNai nAyanAr came forward boldly. The King now demanded, "What is the sin she had committed to get punished in this manner?" CheRuth thuNai nAyanAr said, "The Queen smelled a flower which was meant for Lord Siva, before it could be offered to Him"

The King now asked, " If so she must have picked up the flower first and then smelled it. Why did you not cut off the hand that picked the flower first?"

He cut off the hand of his queen mercilessly. The bystanders were both awestruck and scared by the intensity of the love for Siva shown both by Kazharsinghan and Cheruth thuNai nAyanAr

Now Siva and Uma appeared seated on the back of Nandi Devan. They took pity on the Queen, eased her pain and suffering and restored the cut off parts.

Both Seruth thuNai nAyanAr and KazahRsingan nAyanAr reached the blissful world of Siva after their life on earth came to an end.














 
bhagavathy bhaagavatam - skanda 11

11#4c. ருத்திராக்ஷ வகைகள்(3)


பத்து முகம் கொண்ட மணி விஷ்ணு ஸ்வரூபம்;
நீக்கும் கிரஹ தோஷங்கள், பீடைகள், விஷத்தை.

பதினோரு முகம் கொண்டது ஏகாதச ருத்திர ஸ்வரூபம்;
தரும் அஸ்வமேத, வாஜ்பேய யாகங்களின் பலங்களை.

பதினோரு முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை
அணியலாம் ஒருவன் தன்னுடைய சிகையில்.

பன்னிரண்டு முகம் கொண்டது ஆதித்ய ஸ்வரூபம்;
நீக்கும் துஷ்ட மிருகங்களின் பயம், வியாதிகளை!

பன்னிரண்டு முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை
அணியலாம் ஒருவன் தன்னுடைய காதுகளில்.

பதிமூன்று முகம் கொண்டது ஷண்முகனுக்குச் சமம்;
நிறைவேற்றும் சகல விருப்பங்களையும் அணிபவருக்கு.

பதினான்கு முகம் கொண்ட மணி ருத்திரனாக்கி விடும்;
அணிந்தவன் மோக்ஷம் பெறுவான்; தேவரும் தொழுவர்.

அணிய வேண்டும் ஆறுமுக மணியை வலது காதில்;
அணிய வேண்டும் ஒன்பது முகத்தை இடது தோளில்;

அணிய வேண்டும் பதினொரு முகத்தைச் சிகையில்;
அணிய வேண்டும் பன்னிருமுக மணியைக் காதுகளில்;

அணிய வேண்டும் சிரசில் இருபத்து ஆறு மணிகளை.
அணிய வேண்டும் மார்பில் ஐம்பது மணிகளை;

அணிய வேண்டும் தோளில் பதினாறு மணிகளை;
அணிய வேண்டும் மணிக்கட்டில் பன்னிரண்டு மணிகளை

இருக்க வேண்டும் ஒரு ஜபமாலையி
ல் மணிகள்….27, 54, 108.

உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்

11#4c. The types of RudrAksha (3)

The ten-faced RudrAksha is the swaroopam of JanArdana, the DevA of all the DevAs. Wearing this pacifies the evils caused by unfriendly planets, evil spirits and snakes.

The eleven-faced RudrAksha is the swaroopam of the EkAdasa (Eleven) Rudras. Wearer of this gets the benefits of performing one thousand Aswameda YAgas, one hundred VAjapeya sacrifices and making gifts of one hundred thousand cows.

The RudrAksha with twelve faces is the swroopam of the DwAdasa Aadityas. These can be worn in the ears. They rid the wearer from the fear of wild animals, diseases and discomforts. One becomes freed of the sins incurred in killing elephants, horses, deer, cats, snakes, mice, frogs, asses, foxes and various other animals.

The thirteen faced RudrAksha is very rare to find. The wearer becomes equal to KArtikeya and gets all his heart’s desires fulfilled and earn the eight siddhis.

One who wears the fourteen faced RudrAksha on his head becomes equal to Siva. The Devas pay their respects to him and he attains the Highest Goal in the end namely the state of becoming Siva. His body becomes the body of Siva.

The BrAhmins should wear at least one RudrAksha with devotion. A rosary of twenty-six RudrAkshas can be worn on the head. A rosary of fifty seeds is to be worn on the chest; sixteen rudrAkshas can be worn on each of the two arms and twelve RudrAksha on each of the two wrists.

 
SEkkizhArin periya purANam

#56. திரு புகழ்த்துணை நாயனார்

தோன்றினார் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர் ;
தோன்றினார் செருவல்லிப் புத்தூர் என்னும் திருத்தலத்தில்.

நிலை நிறுத்தினார் இவர் தன் நெஞ்சில் பஞ்சாட்சரத்தை;
நிலை நிறுத்தினார் நினைவில் பிஞ்சுமதியணிப் பிரானை.

பஞ்சம் தலை விரித்தாடியது அந்த நாட்டில் அந்த நாட்களில்;
கொஞ்சம் உணவுக்காக அலைந்து திரிந்தனர் நாட்டு மக்கள்.

நேசம் பூண்ட அடியார் புகழ்த் துணை நாயனாரோ எனில்
ஈசனையே இடையறாது பூசித்து வந்தார் வழக்கம் போல்.

திருமஞ்சனம் செய்து வழிபட்டார் சிவலிங்கத்தை.
தடுமாறி விழுந்தார் தள்ளாமையால், தளர்ச்சியால்!

தவறி விழுந்து விட்டது தண்ணீர் குடம் கீழே - மேலும்
தவறி விட்டது அடிபட்டதால் அடியவருக்குப் பிரக்ஞை.

மயக்க நிலையில் தோன்றியது அவருக்கு ஒரு கனவு ;
மனம் கவர்ந்த முக்கண்ணன் தோன்றினான் கனவில்!

"உணவைத் தேடி வெளியேறி விட்டனர் ஊர் மக்கள்;
உண்மையான அன்பினால் நீ இங்கு தங்கி விட்டாய்;

பஞ்சம் நீங்கும் வரைப் பாதுகாப்போம் உன்னை;
நெஞ்சம் குளிரப் படிக்காசு பெறுவாய் நித்தமும்"

இருந்தது பீடத்தில் ஒரு பொற்காசு அரன் அளித்தது;
தொடர்ந்தது அடியவரின் இறைப்பணி முன்போலவே.

பஞ்சம் வாட்டி விரட்டிய போதும் கொஞ்சமும் அஞ்சாமல்
தஞ்சம் அடைந்தார் அடியார் பிஞ்சு மதியணிப் பிரானை.

"பொன்னடிக்கே மனம் வாய்த்த புகழ்த்துணைக்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#56. Pugazh thuNai nAyanAr


Pugazh thuNai nAyanAr was born in a place called Cheruvalli Puththoor. He was a staunch devotee of lord Siva. He had established the Siva panchAksharam in his heart. He had established Lord Siva in his mind.

A severe famine affected that country. People struggled to find enough food to keep their body and soul together. They left the place one by one and went in all directions in search of food. But Pugazh thuNai nAyanAr stayed on there due to his intense love for Siva. He continued worshiping Lord Siva as usual.

One day Pugazh thuNai nAyanAr was performing abhishekham to the Siva lingam. He was feeling very weak and famished. He dropped the water pot and fainted on the Siva lingam itself. He lost his consciousness. He had a vivid dream in his twilight zone.

Lord Siva appeared in his dream and said, "Most of the people have left this place and gone in search of food. But you have stayed on here due to your intense love for me. So it is my duty to protect you and provide you with the food you need. I shall leave a gold coin on the peetam everyday till the rains return and prosperity returns"

Pugazh thuNai nAyanAr woke up from his dram and saw a gold coin on the peetam. He could continue his worship of Siva as before. Even when there prevailed a severe famine the Pugazh thuNai nAyanAr would not move away from his place and his lord.
 
bhagavathy bhaagavatam - skanda 11

11# 5. ருத்திராக்ஷ மஹிமை

ருத்திராக்ஷத்தின் மேல் பக்க முகம் பிரமன்;
ருத்திராக்ஷத்தின் கீழ் பக்க முகம் விஷ்ணு.


நடுக் கண்டம் ஆகும் ருத்திரன் இந்த மணியில்;
அடங்குவர் மும்மூர்த்திகள் ஒரே ருத்திராக்ஷத்தில்!


போக, மோக்ஷங்கள் தரவல்லது இந்த மணி;
மூன்று நிறங்கள் கொண்டது ருத்திராக்ஷம்.


முள் போன்ற அமைப்பினை உடையது இது;
முகங்கள் ஐந்து கொண்டது ருத்திராக்ஷ மணி.


முகத்தோடு முகத்தைச் சேர்த்து கோர்த்து – அதன்
பிருஷ்டத்தோடு பிருஷ்டத்தை சேர்க்க வேண்டும்.


மேல் நோக்கி இருக்க வேண்டும் மேருவின் முகம்;
மேருவை நாக பாசத்தினால் சேர்த்திட வேண்டும்.


அபிஷேகம் செய்ய வேண்டும் பஞ்ச கவ்வியத்தால்;
அபிஷேகம் செய்ய வேண்டும் சந்தன நீரினால்.


எந்தத் தெய்வத்துக்கு எந்த மந்திரமோ – அதனால்
அந்த தெய்வத்தை நன்கு பூஜிக்க வேண்டும்.


சிரத்தையோடு அணிய வேண்டும் இவற்றை ஒருவன்
சிரசு, கழுத்து, மார்பு, காதுகள் மற்றும் தோளில்.


அணிய வேண்டும் வைதீக கர்மங்களின் போது;
அணிய வேண்டும் கயிறு / பொன்னில் கோர்த்து.


அளிக்கும் புண்ணியம் கண்ணால் கண்டதுமே;
அணியக் கூடாது இவற்றைத் தூய்மையின்றி.


அளிக்கும் புண்ணியம் கையால் தொட்டால் – இது
அதிகப் புண்ணியம் தரும் உடலில் அணிந்தால்.


அதிகப் புண்ணியம் இதனால் ஜபம் செய்தால்;
அடையும் நற்கதி இருபத்தொரு தலைமுறை!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


11#5a. The greatness of RudrAksha


The top surface of the RudrAksha seed is BrahmA, the bottom surface is VishNu and the middle portion is Rudran. Thus all the Trinites are present in every seed.


RudrAksha can bestow on the wearer earthly pleasures as well as the final and total liberation. These are of three main colors. These have an irregular thorny surface.


While stringing the seeds, the top flat surface of one seed should come near the top flat surface of the next seed. The bottom of one seed must be put near the bottom of the next seed. The Meru’s flat surface must face upwards.


The rosary must be washed with the pancha gavya (five auspicious products obtained from a cow) and then in sandal water. The mantras of the God to be worshipped must be used to charge the rosary.


RudrAksha must be worn with devotion and respect on the head, the neck, the chest, the ears, the arms and the wrists. They must be worn while performing a any karma. They may be strung in Gold or silver. RudrAksha must not be worn when the person is impure or unclean.


The very sight of these seeds bestow merits on the beholder. Touching them confers greater merits. Wearing them confers the greatest merit. Doing Japam with a RudrAksha rosary uplifts twenty one generations of the person doing japam.




 
SEkkizhArin Periya PurANam

#57. திரு கோட்புலி நாயனார்

வீர வேளாளர் மரபில் தோன்றினார் சிவத்தொண்டர்
கோட்புலியார், சோழ நாட்டில் நாட்டியத்தான்குடியில்.

படைத் தலைவர் ஆவார் சோழ மன்னனுக்கு - பெற்றார்
பட்டப் பெயர் கோட்புலியார் என்று, காட்டிய வீரத்தினால்.

இயற்பெயர் அனைவருக்கும் மறந்தும், மறைந்தும் போனது;
இயற்பெயராக ஆகிவிட்டது அவர் பெற்ற காரணப் பெயர் .

அன்பு பூண்டிருந்தார் கோட்புலியார் எம்பெருமானிடம்;
ஆலயத் திருப்பணிகள் செய்தார் பூண்ட அன்பினால் .

குவித்து வைத்தார் மலை போல நெல்மணிகளை;
அவை அனைத்தும் அரன் ஆலயத் திருப்பணிக்கே!

போர்முனை சென்று விட்டார் கோட்புலியார் ஒருமுறை;
பார் முழுவதும் பரிதவித்தது நிலவிய பஞ்சத்தினால் ;

உறவினர்கள் உண்ணலாயினர் பசிக் கொடுமையினால்
அரன் ஆலயத் திருப்பணிக்கு அமைத்த நெற்குவியலை.

வெற்றியுடன் திரும்பி வந்தார் கோட்புலியார் - ஆனால்
வெறி கொண்டார் உறவினர்கள் செய்த செயல் கண்டு

வெட்டி வீழ்த்தினார் உற்றம், சுற்றம் அனைவரையும் ;
விட்டுவிடவில்லை பால்மணம் மாறாத பாலர்களையும்!

விடை மீது எழுத்து அருளினார் விரிசடைப் பெருமான்
"உடைவாளால் உயிர் நீத்தோர் பிறவி ஒழிந்து விட்டார்!

சிவபுரியில் வந்து சேர்வாய் நீயும் எம்முடன்!" என்று
சிவபெருமான் அருள்புரிந்தார் கோட்புலியாருக்கு .

"வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#57. KOtpuli nAyanAr

KOtpuli nAyanAr was born in the race of the valorous Veera vELAlar in the ChOzha kingdom in a place called NAttiyAththankudi. He was the general of the army of the ChOzha king. He was as brave and ferocious in warfare as a tiger. So his real name got replaced by the title "KOtpuliyAr" he had won.

He was a staunch devotee of Lord Siva. He did many welfare activities towards Lord Siva and his devotees. He heaped paddy like a mountain and it was entirely for offering to Siva.

KOtpuli nAyanAr had to go to a war front. A severe famine affected the country . People found it hard to get enough food. The relatives of KOtpuli nAyanAr assumed that he would not get angry if they use up the heaped up paddy during the severe famine. So they started taking out the paddy for their personal use regularly.

KOtpuli nAyanAr returned after emerging victorious. He got terribly shocked to find the paddy meant for the Siva temple had been consumed by his own relatives. He killed each and everyone of them - including infants, after making sure they could not escape.

Lord Siva appeared on the back of his bull Nandi Devan and said," All the people who have been killed by you have escaped the shackles of Samsara and the endless cycle of birth and death. You yourself will come and merge with me in my Sivapuri"
 
bhagavathy bhAgavatam - skanda 11

11#6a. மேன்மையானவைகள்

மேன்மையானவர் புருஷர்களில் விஷ்ணு;
மேன்மையானது கிரஹங்களில் சூரியன்;


மேன்மையானது நதிகளில் கங்கை நதி;
மேன்மையானவர் முனிவரில் காசியபர்;


மேன்மையானவள் தேவியரில் கௌரீ தேவீ;
மேன்மையானவர் தேவர்களில் மஹாதேவன்;


மேன்மையானது குதிரைகளில் உச்சைஸ்ரவம்;
மேன்மையானது மணிகளில் ருத்திராக்ஷம்;


மேன்மையானது தானங்களில் ருத்திராக்ஷ தானம்;
மேன்மை பெறுவான் ருத்திராக்ஷ தானம் அளிப்பவன்.


பெறுவான் சிவத்தன்மை ருத்திராக்ஷம் அணிந்தவன்;
சரி சமம் ஆகும் இவன் உண்பது சிவன் உண்பதற்கு!


அணிய வேண்டும் ஆயிரம் ருத்திராக்ஷ மணிகள்;
அணிய வேண்டும் தோளில் பதினாறு, பதினாறு.


அணிய வேண்டும் மணிக்கட்டில் பன்னிரண்டு;
அணிய வேண்டும் மார்பில் நூற்றெட்டு மணிகள்.


அணிய வேண்டும் கண்டத்தில் முப்பது இரண்டு;
அணிய வேண்டும் சிரசில் மட்டும் ஒன்றே ஒன்று.


சேர்க்கலாம் முத்து, பவளம், ஸ்படிகம், வைடூரியம்
கோர்க்கலாம் தங்கத்தில் அல்லது வெள்ளியில்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


11#6a. The greatest of their kind

VishNu is the greatest among all the purushas; Soorya is the greatest among all the planets; Ganges is th greatest among all the rivers; Sage Kashyapa is the greatest among all sages; Gowri Devi is the greatest among all the Devis; MahAdEva is the greatest among all the DevAs; Uchchisravam is the greatest among all the horses and RudrAksha is the greatest among all seeds and beads.


The highest DAnam is giving a gift of RudrAksham. The person who wears RudrAska gains merits. He develops Sivathvam – the state of becoming Siva. If he eats food it is equal to offering the food to Siva himself.


Wearing one thousand RudrAksha is the best. Sixteen seeds can be worn on each arm, twelve on each wrist, one hundred and eight on the chest; thirty two on the neck; and one on the head.


The RudrAksha may be strung in gold or silver along with pearls, corals, crystals and vaidooryam.




 

Latest ads

Back
Top