KANDA PURAANAM - PORPURI KAANDAM
13e. உயிர்ப்பித்தல்
தாயை நினைவு கூர்ந்தான் சூரபத்மன்.
மாயை தோன்றினாள் கண்முன்னே!
“நிகழ்ந்த போரில் படைகள் அழிய
நிற்கின்றேன் நான் தனி ஒருவனாக;
இறந்தவர்கள் உயிர் பெற்று எழுந்திட
இயம்புவாய் ஒரு நல்ல உபாயம்!”
“பெரும்புறக் கடலின் அருகே உள்ளது
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மலை.
அமுதசீதமந்திரகூடத்தைக் கொணர்ந்தால்
அழிந்த அவுணர்கள் உயிர் பெற்றெழுவர்.
தாயின் சூழ்ச்சியால் மகிழ்ந்த சூரன்
மாயவள் கூறிய ஔஷத மலையைக்
கொண்டு வரும்படிப் பணித்தான் தேரை!
கொண்டு வந்தது மலையை அந்தத் தேர்.
உயிர்பெற்று எழுந்தனர் அவுணர்கள்.
உயிர்பெற்று எழுந்தன கரிகள், பரிகள்,
உயிர்பெற்று எழுந்தான அரிமாக்கள் .
உயிர் பெற்று எழுந்தனர் அரிமுகன்,
தீ முகன், பானுகோபன், வஜ்ஜிரவாகு,
அதிசூரன், அசுரேந்திரன், தருமகோபன்.
அனைவரும் கூடினர் சூரபத்மன் அருகே.
அனைவரும் தொடங்கினர் போர்த்தொழிலை.
கை தட்டிக் குதூகலித்தான் முருகன்
மெய் சோர்ந்து தளர்ந்தனர் தேவர்கள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
13e. உயிர்ப்பித்தல்
தாயை நினைவு கூர்ந்தான் சூரபத்மன்.
மாயை தோன்றினாள் கண்முன்னே!
“நிகழ்ந்த போரில் படைகள் அழிய
நிற்கின்றேன் நான் தனி ஒருவனாக;
இறந்தவர்கள் உயிர் பெற்று எழுந்திட
இயம்புவாய் ஒரு நல்ல உபாயம்!”
“பெரும்புறக் கடலின் அருகே உள்ளது
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மலை.
அமுதசீதமந்திரகூடத்தைக் கொணர்ந்தால்
அழிந்த அவுணர்கள் உயிர் பெற்றெழுவர்.
தாயின் சூழ்ச்சியால் மகிழ்ந்த சூரன்
மாயவள் கூறிய ஔஷத மலையைக்
கொண்டு வரும்படிப் பணித்தான் தேரை!
கொண்டு வந்தது மலையை அந்தத் தேர்.
உயிர்பெற்று எழுந்தனர் அவுணர்கள்.
உயிர்பெற்று எழுந்தன கரிகள், பரிகள்,
உயிர்பெற்று எழுந்தான அரிமாக்கள் .
உயிர் பெற்று எழுந்தனர் அரிமுகன்,
தீ முகன், பானுகோபன், வஜ்ஜிரவாகு,
அதிசூரன், அசுரேந்திரன், தருமகோபன்.
அனைவரும் கூடினர் சூரபத்மன் அருகே.
அனைவரும் தொடங்கினர் போர்த்தொழிலை.
கை தட்டிக் குதூகலித்தான் முருகன்
மெய் சோர்ந்து தளர்ந்தனர் தேவர்கள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி