VINAAYAKA PURAANAM 2
9p. நந்தியின் தூது
இறங்கினார் படைகளுடன் நகருக்கு வெளியே;
சிறந்த நந்தியை அனுப்பினார் தன் தூதுவராக.
‘திறமை வேண்டும் நம் கட்சியை உரைக்க;
அறிவு வேண்டும் நிலைமையை சமாளிக்க.’
அரச சபையை அடைந்தார் நந்திதேவர்;
அரன் அருளால் தோன்றியது அரியணை.
மிடுக்காக அமர்ந்தார் அரியணை மீது;
திடுக்கிட்டான் சிந்துராஜன் அது கண்டு!
“யார் நீ? எங்கு வந்தாய்? எதற்கு வந்தாய்?
யார் அனுப்பினார் உன்னை? உண்மை கூறு”
“மயூரேசர் அனுப்பிய தூதுவன் நான் நந்தி.
அபூர்வ வரங்கள் தீங்கிழைப்பதற்காகவா?
முனிவருக்கும் தேவருக்கும் தருகின்றாய்
இனிமேல் தாங்க முடியாத துன்பங்களை!
சிறையில் வாட்டுகின்றாய் தேவர்களை;
குறை சொல்லத் துணியவில்லை எவரும்!
பரம் பொருளே பிறந்துள்ளார் கணேசனாக;
அதன் பொருள் உன் அழிவு நிச்சயம் என்பது.
சிறைவிடு தேவர்களை உடனேயே – உன்
குறைகளை மன்னித்து விடுவார் மயூரேசர்.
மன்னித்தால் வாழ்வாய் நெடுங்காலம்;
மறுத்தால் வீழ்வாய் வெகு விரைவில்
மலை போல நம்பியிருந்த அசுர வீரர்கள்
நிலை குலைந்து மாய்ந்ததை மறவாதே!
முடிவு செய்வாய் நன்கு சிந்தித்த பின்னர்,
மடியப் போகிறாயா? வாழப் போகிறாயா?”
கலகலவென்று நகைத்தான் சிந்து ராஜன்;
கண்களில் கனல் எழ விழித்தான் பின்னர்..
“வலிமையற்ற அசுரரைப் போல என்னையும்
வலிமையற்றவன் என்று நீ கருதிவிட்டாயா?
தூதுவனாக வந்ததால் செல்வாய் மீண்டு;
வேறு மனிதர்கள் சென்றதில்லை மீண்டு.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
9p. நந்தியின் தூது
இறங்கினார் படைகளுடன் நகருக்கு வெளியே;
சிறந்த நந்தியை அனுப்பினார் தன் தூதுவராக.
‘திறமை வேண்டும் நம் கட்சியை உரைக்க;
அறிவு வேண்டும் நிலைமையை சமாளிக்க.’
அரச சபையை அடைந்தார் நந்திதேவர்;
அரன் அருளால் தோன்றியது அரியணை.
மிடுக்காக அமர்ந்தார் அரியணை மீது;
திடுக்கிட்டான் சிந்துராஜன் அது கண்டு!
“யார் நீ? எங்கு வந்தாய்? எதற்கு வந்தாய்?
யார் அனுப்பினார் உன்னை? உண்மை கூறு”
“மயூரேசர் அனுப்பிய தூதுவன் நான் நந்தி.
அபூர்வ வரங்கள் தீங்கிழைப்பதற்காகவா?
முனிவருக்கும் தேவருக்கும் தருகின்றாய்
இனிமேல் தாங்க முடியாத துன்பங்களை!
சிறையில் வாட்டுகின்றாய் தேவர்களை;
குறை சொல்லத் துணியவில்லை எவரும்!
பரம் பொருளே பிறந்துள்ளார் கணேசனாக;
அதன் பொருள் உன் அழிவு நிச்சயம் என்பது.
சிறைவிடு தேவர்களை உடனேயே – உன்
குறைகளை மன்னித்து விடுவார் மயூரேசர்.
மன்னித்தால் வாழ்வாய் நெடுங்காலம்;
மறுத்தால் வீழ்வாய் வெகு விரைவில்
மலை போல நம்பியிருந்த அசுர வீரர்கள்
நிலை குலைந்து மாய்ந்ததை மறவாதே!
முடிவு செய்வாய் நன்கு சிந்தித்த பின்னர்,
மடியப் போகிறாயா? வாழப் போகிறாயா?”
கலகலவென்று நகைத்தான் சிந்து ராஜன்;
கண்களில் கனல் எழ விழித்தான் பின்னர்..
“வலிமையற்ற அசுரரைப் போல என்னையும்
வலிமையற்றவன் என்று நீ கருதிவிட்டாயா?
தூதுவனாக வந்ததால் செல்வாய் மீண்டு;
வேறு மனிதர்கள் சென்றதில்லை மீண்டு.”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.