VINAAYAKA PURAANAM 2
9v. தூமாசுரன்
தூமாசுரன் மகிபாதினியை ஆண்டு வந்தான்.
உமா மகேஸ்வரனிடம் பக்தி கொண்டவன்.
ஆதரித்தான் அடியவர்களை அன்போடு;
ஆட்சி புரிந்தான் குறைவு ஏதும் இன்றி.
மந்திரிகள் எண்மர்; மகன்கள் நால்வர்;
மகிழ்ந்திருந்தான் தன் மனைவியருடன்
பிருகு முனிவர் வந்தார் தூமாசுரனிடம்;
பிருகுவைச் சீடர்களுடன் கௌரவித்தான்.
பிறகு கே ட்டான் தன் மனத்தின் ஐயத்தை,
“பிறந்தேன் அசுர குலத்தில் நான் எதற்காக?”
முக்காலமும் அறிந்தவர் பிருகு முனிவர்;
முற்கால நிகழ்ச்சிகளைக் கூறலானார்.
முற்பிறப்பில் தூமாசுரன் பெயர் விகுதி;
நற்பண்புகளும், புகழும் வாய்திருந்தான்.
இந்திரப் பதவியை விரும்பினான் விகுதி;
அந்த முயற்சியில் செய்தான் யாகங்கள்.
முடிந்தன தொண்ணூற்றொன்பது யாகங்கள்;.
மிகுந்து இருந்தது நூறாவது யாகம் மட்டுமே.
யாகத்தை முடித்துவிட்டால் சுவர்க்க
போகம் தேடி வந்து விடும் விகுதியை!
“பறிபோகுமோ பதவி?” அஞ்சினான் இந்திரன்;
பரிதவித்தான் செய்வது அறியாமல் இந்திரன்.
மன்னன் விகுதி மகேசன் அருள் பெற்றவன்;
மண்ணைக் கவ்வச் செய்ய முடியாது எளிதில்.
அபாயம் ஏற்படுத்த வேண்டும் அவனுக்கு
உபாயம் ஒன்றைக் கண்டுபிடிப்பதன் மூலம்.
கசக்கினான் மூளையை; நன்கு சிந்தித்தான்;
விகசிக்கவில்லை தக்க உபாயம் ஒன்றும்
நாரதர் வந்தார் நல்ல சமயத்தில் அவ்விடம்;
“நன்மைகள் செய்வேன் இந்திரா!” என்றார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
9v. தூமாசுரன்
தூமாசுரன் மகிபாதினியை ஆண்டு வந்தான்.
உமா மகேஸ்வரனிடம் பக்தி கொண்டவன்.
ஆதரித்தான் அடியவர்களை அன்போடு;
ஆட்சி புரிந்தான் குறைவு ஏதும் இன்றி.
மந்திரிகள் எண்மர்; மகன்கள் நால்வர்;
மகிழ்ந்திருந்தான் தன் மனைவியருடன்
பிருகு முனிவர் வந்தார் தூமாசுரனிடம்;
பிருகுவைச் சீடர்களுடன் கௌரவித்தான்.
பிறகு கே ட்டான் தன் மனத்தின் ஐயத்தை,
“பிறந்தேன் அசுர குலத்தில் நான் எதற்காக?”
முக்காலமும் அறிந்தவர் பிருகு முனிவர்;
முற்கால நிகழ்ச்சிகளைக் கூறலானார்.
முற்பிறப்பில் தூமாசுரன் பெயர் விகுதி;
நற்பண்புகளும், புகழும் வாய்திருந்தான்.
இந்திரப் பதவியை விரும்பினான் விகுதி;
அந்த முயற்சியில் செய்தான் யாகங்கள்.
முடிந்தன தொண்ணூற்றொன்பது யாகங்கள்;.
மிகுந்து இருந்தது நூறாவது யாகம் மட்டுமே.
யாகத்தை முடித்துவிட்டால் சுவர்க்க
போகம் தேடி வந்து விடும் விகுதியை!
“பறிபோகுமோ பதவி?” அஞ்சினான் இந்திரன்;
பரிதவித்தான் செய்வது அறியாமல் இந்திரன்.
மன்னன் விகுதி மகேசன் அருள் பெற்றவன்;
மண்ணைக் கவ்வச் செய்ய முடியாது எளிதில்.
அபாயம் ஏற்படுத்த வேண்டும் அவனுக்கு
உபாயம் ஒன்றைக் கண்டுபிடிப்பதன் மூலம்.
கசக்கினான் மூளையை; நன்கு சிந்தித்தான்;
விகசிக்கவில்லை தக்க உபாயம் ஒன்றும்
நாரதர் வந்தார் நல்ல சமயத்தில் அவ்விடம்;
“நன்மைகள் செய்வேன் இந்திரா!” என்றார்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி