• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

# 170. The Three thieves.



A traveler was walking all by himself in a dense forest. He was carrying all his treasures bundled up along with him. Three thieves stopped him and seized his precious bundle. They wanted to kill him before making their escape.

The first thief drew out his shining dagger while the second thief bound his legs and hands. The third thief intervened, argued with them and saved the traveler's life.

The first two thieves ran away in haste. The third thief accompanied the man till he reached his home. But in spite of repeated requests he refused to come inside the house.

He left immediately after the traveler entered his house. The man was at peace at last since he had reached his final destination.

The world is the dense forest. The traveler is the Jeevaatmaa. The precious bundle he carries is the Atma Gnaanam. The three thieves are the three gunas - Raajasa, Thaamsa and Satva.

The thief who drew out his dagger is the Raajasan.
The thief who bound the traveler is the Thaamasan.
The thief who saved his life was the Satvan.
The home is the Paramapadam / Vaikuntam / Kailaasam / the final abode which every Jeeva wants to reach.

We can enter the final abode only after getting rid of all the three gunaas. Satvan is a good fellow and helps the jeevaa, but he too is a thief and can not accompany the Jeevaa is into the final abode.
 
#171. மூன்று வகை மனிதர்கள்!





உலகின் அனைத்துப் பொருட்களிலும்
உண்டு மூன்று வெவ்வேறு வகைகள்;
உத்தமம் எனவும், மத்தியமம் எனவும்,
உருப்படா அதமம் எனவும் மூவகைகள்.

தேனைத் தவிர எதையுமே உண்ணாத
தேனீக்கள் உன்னதமான உத்தம வகை;
தேன் கிடைக்காவிடில் இறக்குமேயன்றி,
தேடிச் செல்லா அவை வேறு உணவை!

தேனை உண்ட பின்னும், தேடிச் சென்று
தெருவில் இருக்கும் கழிவுகளையும்
பேதம் இன்றி உண்ணும் வெறும் ஈக்கள்
பெயர் பெரும் மத்தியம வகை என்று!

சாணப் புழுக்கள் என்ற ஒரு வகையோ
சாணத்திலே பிறந்து, வளர்ந்து, வாழ்பவை.
தேனில் இட்டால் உடனே மடிந்து போகும்,
சாணத்திலே ஊறும் அவ்வகைப் புழுக்கள்.

நாம் காணும் மனிதரும் மூவகையினர்.
நல்லதை மட்டுமே நாடிச் செல்பவர்;
நல்லதையும், அல்லதையும் நாடுபவர்;
அல்லதை மட்டுமே என்றும் நாடுபவர்.

ஆறு அறிவும், அரிய மனிதப் பிறவியும்
அடைந்தும், அவற்றை வீணாக்கலாமா?
நல்லதையே நாடி, நன்மைகளே செய்து,
நல்லதையே எண்ணி நலம் பெறுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 171. The three types of men.



Everything in the world can be divided into three types - the Uththamam, the Madhymam and the Adhamam. Men can also be divided into these three types.

The honey bees spend their entire lives looking for nectar. They will settle for nothing less than the best - the nectar. If they can not find enough nectar, they would rather die than eat anything else. These form the Uththamam among the various insects.

The house fly will drink honey. It will also go and eat the garbage strewn on the road. It has no discretion between the good and the bad and will accept anything it finds. It forms the Madhyamam among the insects.

The maggots found in the rotting cow-dung can survive only there! If offered honey, they will die! These form the Adhamam among the insects.

Men are also of these three types. Those who like the honey bee always go in search of the best are the Uththmam. Those who accept the good and the bad without any discretion are the Madhyamam and the men who always go in pursuit of the bad things are the Adhamam.

Human life is a precious gift of God. We should not waste it in lowly things and pursuits. We should always aim for the good things which will help us both in worldly matters and spiritual matters.
 
#172. சரீரமும், சம்சாரமும்!





மாறுவது மனித சரீரமும், சம்சாரமும்;
மாறாமல் என்றும் இருப்பது இறை ஒன்றே!
எத்தனை பருவங்கள்; எத்தனை உருவங்கள்!
எத்தனை ஆசைகள்; எத்தனை திட்டங்கள்!

நான்கு கால் பிராணிபோல் தவழும் குழவி;
நன்றாகத் திகழும் அழகிய வாலிபம்;
ஊன்று கோலுடன் மூன்று கால் முதுமை;
ஊதினாலே விழுந்துவிடும் வயோதிகம்!

விளையாட்டுப் பிள்ளையின் பருவம்;
விளை நிலமாக உள்ளத்தை ஆக்கும்
பள்ளிப் பருவம், கல்லூரி, தொடர்ந்து
பணியில் பணம் பண்ணும் பருவம்!

திருமணப் பருவம்; பெற்றோர் ஆகித்
திரும்பிப் பார்க்கும் முன், பிள்ளைகளே
திருமணத்துக்கு தயாராக இருப்பார்!
திரும்பவும் பெறுவோம் பேரன், பேத்திகள்!

கடல் அலைகள் ஓய்ந்தாலும் ஓயலாம்;
கண நேரமும் ஓயாது சம்சார அலைகள்!
கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருக்கும்
கரை காணாக் கடலே இந்த சம்சாரம்!

சம்சார சாகரத்தைக் கடந்து சென்று,
சாயுஜ்யம் என்பதை அடைவது எப்படி?
மாயையின் சக்தியை ஒரு மனிதனால்
மாலவன் உதவி இன்றி அடக்க முடியாது!

கடலைக் கடக்க உதவும் படகாக மாறிக்
கடவுளின் திருநாமமே நமக்கு உதவும்.
விடாமல் பற்றிக்கொண்டே இருந்தால்
விடிவு காலம் வரும்; இது சத்தியம்!

மாறும் சரீரத்தையும், சம்சாரத்தையும்,
மனத்தில் எண்ணிக் கவலை கொள்ளோம்!
தேறும் வழியைத் தேடிக் கண்டுகொண்டு
தேவன் திருவடிகளைப் பற்றிடுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 172. Sareeram and samsaaram.



Sareeram and samsaaram are the two things that keep changing continuously. They keep changing every moment of our lives. How many different stages are there in a human life! How much a person's appearance changes with age! How many plans / projects / desires / pursuits / aims / ambitions are there in a human life!

The tiny baby crawls on all the four limb like an animal. The youth has a finely tuned body with the best mobility. The old age is bent under the wight of the day-to-day-life and the ripe old age needs some support in order to be able to stand up!

The small child spends all its time in play. The youth spends it in getting educated and then in earning a livelihood. Then the youths get married, beget children and spend their lives in bringing up their children and getting them married.

The cycle goes on and on. The waves in the ocean of samsaara never cease even for a second! How then can a Jeevaatmaa come out of this endless wave motion and reach the opposite bank safely?

Crossing the Maya and the Samsaaraa are not within the power of any man / woman! Only if God wills it to happen, it will happen! Only God can make us cross the endless ocean of samsaaraa.

The small boat which can brave the troubled waters of samsaaraa and take us across safely is the Nama Japam of the God. It looks so small and a fragile compared to the ocean to be crossed.

But have faith, catch hold of the lotus feet of your favorite God and keep chanting his name - if you really want to jump out of the endless cycle of birth and death. God and His name never fail the one who trusts in them.
 
#173. உலக மகா அதிசயம்!





ஒரு நாள் கேட்டேன் குருநாதரிடம்,
“உருளும் உலகின் அதிசயம் என்ன?”

“ஒரு கிளியைக் கூண்டில் அடைத்து,
ஒரு கதவைத் திறந்தால் என்ன ஆகும்?”

“உடனேயே பறந்து போய்விடும் கிளி,
உயர உயர, மீண்டும் பிடிபடாதபடி!”

“உலக மகா அதிசயம் இதுவே அறிவாய்;
உலகம் அனைத்துமே வியக்கும் அற்புதம்;

கூண்டில் சிறை உள்ளது உயிர்ப் பறவை;
கூண்டில் உள்ளன ஒன்பது வாசல்கள்;

மூடாத அவ்வாசல்கள் வழியே கிளி
ஓடாது இருப்பது ஏன் என்பதே அது”

அறிவீரா யாரேனும் இது என்ன மாயம்?
அறிந்தால் கூறும், அனைவருக்கும் லாபம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 173. The Greatest Mystery.



One day I asked mu Sat guru, "What is the great mystery in the Universe?"

He asked me,"What will happen if you open the door of a cage in which a parrot has been kept a captive?"

I told him, "It will fly up and away - never to be caught by any man again!"

My guru replied, "Know this to be the greatest mystery in the Universe.
A jivan is arrested in the cage called a body. The cage has not just one but nine doors which are never locked up. Why then does the bird not escape from the cage and fly up and away?"

"Do any of you know the answer for this mystery?

If you do, please reveal it for the benefit of the entire humanity!"
 
#174. காந்தஊசி.


காந்தம் ஈர்க்கும் இரும்புத் துகள்களை;
கடவுள் ஈர்ப்பான் அனைத்து உயிர்களை.

காந்தம் காட்டும் என்றும் வடதிசை,
கடவுள் காட்டுவான் என்றும் நல்வழி.

கடலில் செல்பவர் திசை அறியாமல்,
கலங்கி நின்ற காலமும் முன்பு உண்டு.

பகலில் ஆதவனை, இரவில் துருவனைப்
பார்த்துப் பார்த்துத் திசை அறிந்திடுவார்.

படகினைச் செலுத்துவார் திசைகளை அறிந்து,
புறப்பட்ட இடம் சென்று அடைய வேண்டாமா?

சுழல்கள், புயல்கள் பற்றிக் கவலை இல்லை.
சரியான திசையில் படகு செல்லும் வரை.

காந்த ஊசியினைக் கண்டுபிடித்த பின்,
காணலாம் திசைகளை எந்த நேரமும்!

பகலோ, இரவோ, மழையோ, வெய்யிலோ,
பார்க்க முடியும் நாம் செல்லும் திசையை.

கடவுள் என்ற அதிசய காந்தம் காட்டும்
நடக்க வேண்டிய ஒரு நல்ல திசையினை.

பாதை மாறாது, ஒரு பயமும் வாராது,
பரமன் காட்டும் வழியில் செல்பவர்க்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 174. The Compass Needle.



A magnet attracts iron objects. In the same way God attracts all the human beings. A magnet shows us the direction North. God shows us the righteous path.

There was a time when seafarers would depend on the Sun during the day and pole star during the night to know the directions, while in the middle of a sea. They would be able to steer in the right path once they know the directions.

After the discovery of the compass needle, anyone can know the directions anytime and anywhere, just be looking a it...whether it is day or night, sunny or cloudy!

God is the wonderful magnetic needle. He always points to the direction of righteousness. If we trust Him and walk fearlessly in the path shown by Him, no harms will come to us nor dangers nor calamities!
 
#175. உருவமும், அருவமும்.





எங்கும் நிறைந்த இறைவன் எவனோ அவன்
எந்த உருவமோ அன்றி உடலோ இல்லாதவன்;
எங்கும் நிறைந்த அவனை வெறும் அருவமாக
எண்ணிப் பார்ப்பதும் வெகு கடினமே ஆகும்.

ஐம்பொறிகள் வழியே அனைத்தையும்,
ஐயம் திரிபற அறிந்து கொள்ளும் நாம்,
ஐயம் பொறிகளின் உதவி சற்றும் இன்றி
ஐயனையும் கூட அறிந்துவிட முடியாது.

உருவ வழிபாடு தோன்றியது இந்த
ஒரு காரணத்திற்காகவே அறிவோம்;
அருமை பெருமைகள் அனைத்தையும்
ஒருங்கே பெற்ற ஒரு அழகிய வடிவு!

நினைக்கும்போதே மனம் நிறைந்து
நனைக்கும் கண்ணீர்த் துளிகள் வழிந்து;
இனிக்கும் அந்த உருவத்திடம் மயங்கி
மனத்தை பறி கொடாதார் யாரோ?

உருவ வழிபாட்டை மறுக்கும் மதமும்
உருவங்களின் துணையையே நாடும்;
இறைவனின் தூதனாகவோ, அல்லது
இறைவனின் சிறந்த குழந்தையாகவோ.

வெற்றிடத்தின் மீது மனத்தைப் பதித்து,
வெகு நேரம் தியானம் செய்வது கடினம்;
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகில்
உள்ளத்தைத் தொலைத்துவிடலாம் எளிதாக!

மந்திரம், தந்திரம், யந்திரம் என்கின்ற
மூன்றுமே பலன் அளிக்கும் ஒருபோலவே;
சுந்தர ரூபம் தரும் இன்பத்தை வேறு
எந்த ரூபமுமே தர இயலாது அல்லவா?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 175. The Uruvam and Aruvam.



The God who pervades the universe is in fact formless. But it is difficult for us to imagine anything without a form!

We depend on our five sense organs to gain knowledge about the outside world. Without their help, we can grasp or understand nothing at all!

The worship of God in various forms emerged to make it easy for us to think about and meditate on God!

A form so beautiful, so pleasing and so charming that it gives the onlooker perfect peace of mind. A deep glance at one's Ishta Deivam is sure to fill any body's mind with pleasant thoughts which express themselves as tears and roll down the cheeks.

Even the religions which do not attribute any form to God depend on other forms.
They use the forms of the Son of God or the Messenger of God. It is difficult to concentrate or contemplate on emptiness or Soonya. That is why the idol worship is very useful .

Manthram, Thanthram and Yanthram are equally effective but none of them can give the pleasure a lovely form of God can give. The happiness born out of the lovely form of God is matchless!
 
#176. இயற்கையே நம் குரு!





அகழ்வாரைத் தாங்கும் நில மடந்தையிடம்,
இகழ்வாரைத் தாங்கும் பொறுமை கற்போம்;
அனைத்தையும் புனிதமாக்கிய பின் தெளிந்து,
இனிக்கும் நீர் போல மாறிவிடக் கற்போம்.

பொருட்கள் அனைத்திலும் மறைந்து நிற்கும்,
நெருப்பைப் போன்றது ஆத்மா என்று அறிவோம்;
மாற்றம் அடையாமல் மணங்களைப் பரப்பும்,
காற்றிடம் கற்போம் பற்று அறுக்கும் தன்மையை.

நிர்மலமாக எங்கும் என்றும் நிறைந்திருக்கும்
மர்மம் என்ன என்று ஆகாசத்திடம் கற்போம்;
ஆழம் காண முடியாத கம்பீரத்தை அங்கு
ஆழ்ந்து விளங்கும் கடலிடம் கற்போம்.

நூறு குடங்களில் வேறு வேறாகத் தெரியும்
சூரியன் போன்றதே ஆத்மா, அறிந்திடுவோம்;
வளர்ந்து தேயும் சந்திர கலைகள் போன்றே
வளர்ந்து தேயும் மனித சரீரமும், அறிவோம்.

தன் உடலில் இருந்தே உற்பத்தி செய்து,
தன் உடலுள் வலையை மீண்டும் மறைக்கும்
சிலந்தியிடம் காண்போம் நம் இறைவனின்
சிருஷ்டி, பிரளய ரகசியங்களை எல்லாம்!

நினைக்கும் பொருளாக நாம் மாறுவதை,
தினமும் காணும் குளவியிடம் கற்போம்;
தினவு எடுத்து திரியாமல், கிடைத்தைத்
தின்பதை மலைப் பாம்பிடம் கற்போம்.

மலருக்கு மலர் தாவிச் சென்று பல
மலர்களின் தேனைச் சேர்த்து வைத்து,
தேனாலேயே அழியும் தேனீ கற்பிப்பது
தேவைக்கு மீறின செல்வத்தின் ஆபத்து.

கண்களால் நன்கு காணும் திறனையும்,
காதுகளால் நன்கு கேட்கும் திறனையும்
அழகாய் வளர்த்தால், நமக்கு இறைவனும்
அழகிய இயற்கையும் குருவாகவே ஆவர்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 176. Mother Nature -The greatest Guru.


Nature is the best teacher to anyone who wishes to evolve spiritually.
Just by keeping our eyes and ears open, we can learn many lessons from Mother Nature.

The earth supports the person who digs deep into her womb. Let us learn the virtue of Patience from Mother Earth.

The water cools, cleanses and purifies. It lets the dirt settle down and becomes pure again. Let us learn the art of cleansing and remaining clean from water.

Fire is hidden in every object around us. Under the right conditions they will start burning. Let us learn the truth that Atman is hidden in every object around us just like the element of Fire.

Air dissipates and carries various fragrances and odors but does not get attached to any of them. Let us learn the art of doing our work without getting attached to them.

The sky pervades everywhere-inside and outside every object. Neither does it defile any of those things nor does it get defiled by them. Let us learn the secret of Nirmalathvam from Aakaasam.

The sea is so deep, so majestic and so silent, in spite of holding so many treasures in her womb. Let us learn from the sea to be silent and serene .

If we place 100 pots filled with water we can see the reflection of the Sun in each of the pots. Let us learn the truth that Atman is one but it is illuminating every jeevan just as the Sun does the water in the pots.

The Moon waxes and wanes. The sareera of any jeeva is constantly changing, growing and deteriorating. Let us learn from the Moon the fact that sareeram is not constant or permanent.

The spider spins a web from the silk produced in its body. It can also take back the web into its body. Let us learn the fact the God created the universe from His own self during Srushti and will take back everything into Himself during Pralaya.

The worm becomes a wasp, just by thinking about it. Let us learn from the wasp the fact that we become what we keep thinking about.

A python never leaves its tree. It just eats any prey that happens to walk close by. Let us learn to eat what comes our way and not go searching for fancy food stuff.

The honey bees work all day long, gather nectar and convert it to honey. They make more honey than what they may need and store it. The greedy human being kills the bees and take their honey. Let us learn from the honey bees the lesson that hoarding too much of wealth may endanger our lives.

If we remain alert and observant we can learn many valuable lessons from Mother Nature!
 
#177. சான்றோர் சகவாசம்.





சாதனை படிகளில் ஒருவர் முன்னேறிட,
சான்றோர் சகவாசம் தேவை அவசியம்;
ஒத்த கருத்து உடையவர்களின் நட்பு,
மெத்தவும் நன்று, சித்தம் தெளிந்திட.

உலக விஷயங்களில் உழலும் போதும்,
கலகங்கள் பலப்பல காணும் போதும்,
நீருடன் கலந்த பாலைப் போலவே,
நீர்த்துப் போகும் நம் சாதனை முயற்சிகள்.

நீரில் அமிழ்த்திய பானை என்றும்,
நீர்மை இழந்து காய்ந்து போகாது.
நல்லவர் நட்பு நம் நினைவில் நிறுத்தும்,
நல்ல பண்புகளையும், நல்ல மரபுகளையும்.

சுடர் விளக்குக்கும் ஒரு தூண்டு கோல் வேண்டும்,
சுடும் நெருப்புக்கும், ஒரு ஊதுகுழல் வேண்டும்,
கரும்புகையை விரட்ட, ஒரு கை விசிறி வேண்டும்,
இரும்பை உருக்கவும், ஒரு துருத்தி வேண்டும்.

பற்றினை ஒழிக்கும், நல்லவர்கள் நட்பு.
பற்று ஒழிந்தவனின் மன மயக்கம் மறையும்;
அமைதி அடைகின்றான், மயக்கம் ஒழிந்தவன்,
அமைதி அடைந்தவனே, முக்தி அடைகின்றான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 177. Sat Sang.



To evolve spiritually, we need sat sang or the association with the Satvic people and the Sadhu. The association of like minded persons is very important for the Saadaka to evolve spiritually.

The world we live in is over flowing with several problems, difficulties and distractions. At times one's mind gets distracted and one's efforts become diluted like milk mixed with water.

A pot kept in the air becomes completely dry. But a pot inside water never becomes dry. In the same way, when the mind is immersed in the association of good people, it does not get distracted or disturbed. It remains good natured and well focused.

Even the brightest lamp needs occasional trimming of its wick!
Glowing charcoal needs occasional blowing of of air.
The thick black smoke can be dissipated only by using a hand fan.
The blacksmith needs a blow of bellows to melt the iron.

Sat Sang helps a person to come out of Raga and Dwesha - likes and dislikes.

Persons who have come out of Raga and Dwesha come out of their delusions.

Persons out of their delusions acquire equanimity of the mind.

Persons who have acquired equanimity are fit to try for mukti
or liberation from bondage.
 
#178. மாயக்கண்ணாடி!





அழகிய வடிவுடைய ஒரு கண்ணாடி,
அழகினைக் காட்டும் மிகத் தெளிவாக;
தூசுகள் படிந்து அது மாசு அடைந்தால்,
துளியும் நமக்கு பயன் தராது அன்றோ?

ஆத்மா ஒரு அழகிய கண்ணாடி!
அற்புதமான, அதிசயமான, அரியதான,
ஜீவாத்மாவுக்கு அது தேடும் அந்த
பரமாத்மாவைக் காட்டும் கண்ணாடி!

கண்ணாடியை மறைப்பவை தூசுகள்.
ஆத்மாவை மறைப்பவை மன மாசுகள்!
விருப்பு, கோப, தாபங்கள், பேராசை,
வெறுப்பு, மயக்கம், மதம் போன்றவை.

அழகைக் கண்ணாடியில் காண்பதற்கு,
துடைக்கணும் அதிலுள்ள தூசுகளை;
அவனை ஆன்மாவில் காண விழைந்தால்,
துடைக்கணும் அதிலுள்ள மாசுகளை.

தூசினைத் துடைத்து அகற்றிட தேவை,
துணித் துண்டு சிறியது ஒன்று மட்டுமே.
மன மாசினைத் துடைத்து, அகற்றிட நாம்
மாயங்கள் என்ன என்ன செய்ய வேண்டும்?

தியானம், தவம், சுத்தம், நேர்மை,
தியாகம், பக்தி போன்றவைகளே;
மன மாசினைத் துடைக்கவல்ல,
மாயத் துணித் துண்டுகள் ஆகும்.

மாசினை அகற்றும் மாயம் அறிந்தோம்;
மாயம் அறிந்ததால், முனைந்து, முயன்று,
தூசினைத் துடைத்த கண்ணாடியைப் போல்
மாசில்லாத மனத்தினைப் பெற்றிடுவோம்!

மாசில்லாத மனமே அமைதி கொள்ளும்;
மாசில்லாத மனமே பூலோக வைகுந்தம்;
மாசில்லாத மனமே ஊழ் வினை ஒழிக்கும்;
மாசில்லாத மனமே பிறவிப்பிணி அறுக்கும்! !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
# 178. The mirror of Wisdom.



A clean, beautiful and flawless mirror reflects the objects best. But when covered by dust and dirt, it can not reflect the object clearly. The Atman is also a mirror and we can see the reflection of Paramaatmaa in it.

The dust covering the Atman are the six defects of the mind viz Kaama, Krodha, Loba, Moha, Mada, Maacharya.

To clean a mirror we need a small piece of cloth. How can we clean the mirror of Atman, which in itself is elusive and invisible?

Dhyaanam, Taps, Soucham, Arjavam, Thyaagam, bakthi are the towels that are capable of cleaning the invisible and elusive Atman.

Now that we know how to clean the mirror and get a glimpse of the Supreme, let us try our best to get it.
 
#178. இவர்களும் திருடர்களே!





முகமூடி அணிந்து, கத்தியும் கையுமாக
முன் வந்து நிற்பவன் மட்டும் திருடனல்ல!
மற்றவர் பொருளை விரும்பி விழையும்
மனிதர்கள் அனைவரும் திருடர்களே!

“பெற்றோர் என்போர் பணம் காய்ச்சி மரம்;
மற்றோர் எல்லாம் தன் ஊழியர் படை;
தானே அண்ட சராசரங்களின் மையம்;
தனக்கெனவே பிறந்தது இப்பரந்த பூமி!”

இங்ஙனம் எண்ணியபடி, பிறருடைய
உழைப்பு, நேரம், திறமை, பொருள்
இவற்றை மனச் சஞ்சலம் இன்றியே
உறிஞ்சுபவர்களும் இங்கு திருடர்களே!

தினை விதைத்தால் தினைதான் முளைக்கும்.
வினையை விதைத்தால் என்ன முளைக்கும்?
மனித நேயம், நேர்மை, பண்பு இவற்றை
மனத்துள் இளமையில் விதைக்க வேண்டும்.

ஞானம் என்பதே இல்லாமல் வளர்த்தால்,
ஊனம் கொண்ட மனத்துடனேயே வளர்ந்து,
நேரம் பார்த்து நெஞ்சில் உதைப்பார் தம்
நெருங்கிய உறவினரின் கூட்டத்தையே!

தன் பங்கைவிட அதிகம் எடுத்துக்கொண்டு,
தன் சுற்றதையே ஏய்க்கும் கயவர்களும்,
தர்மத்தின் அளவுகோலின்படி, உலகின்
தரம் கெட்ட திருடர்கள் என்பது உண்மையே!

பணம், பணம் என்று பேயாய் அலைந்து,
குணம் என்பதைத் தூக்கி எறிந்தவர்கள்,
பணத்தாலேயே பலமாக அடிக்கப்பட்டுப்
பரிதவிக்கப் போவது உறுதியான ஒன்று!

பணம் தேவைதான் உலகில் நாம் வாழ!
குணம் தேவை நல்ல மனிதனாக வாழ!
அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் பெற்று
அப் பணமே பகைவனாகாமல் பார்த்திரும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
# 179. They too are thieves.



Thieves are not just those persons who threaten us with sharp daggers - wearing masks! Whosoever covets things that do not belong to him is a thief.

"Parents are money spinners. All the family members have been created to serve me. I am the center of the universe. The whole world is there only for my sake!"

Thinking on these lines, many people blot off the time, talent, energy and knowledge of others - without feeling even a trace of guilt. They too are thieves!

We grow what we sow. We reap what we grow. Humaneness, honesty, sense of justice and value of values must be sown in the minds, when they are young and impressionable.

When this is not done by the parents and the elders in the family, the children grow up to become utterly selfish, indifferent and thoughtless persons. Those of us who grab more than our share of things and cheat the others are also thieves!

Many people run after money and wealth. They care nothing about honesty or dharma. They will eventually be punished by the same money - which they had chased all their lives!

Man needs money to survive in this world. But man needs values to live as a good human being. Money is a good servant but a bad master. Do not give too much importance to money, lest you be punished by the very same money - in chasing which you have spent your entire life!
 
#180. ருசியும், வாசனையும்!





ருசியும், வாசனையும் உணவுக்கு மட்டுமல்ல;
ருசியும், வாசனையும் பிறவிக்கும் தேவை.

மணக்க மணக்க உண்டபின், ருசி நாவிலும்,
மணம் கையிலும், நெடு நேரம் தங்கிவிடும்.

அனுபவித்த பொருட்களின் பலவிதத் தாக்கம்,
மனதினில் மாறாமல் நிலை கொண்டிருக்கும்.

நமக்கு பிடித்த பொருட்களில், நமக்கு ருசி;
நமக்கு அவை வேண்டுமென்ற அவா, வாசனை.

நாம் எடுக்கும் பிறவிகள் அனைத்துமே,
நம் ருசி, வாசனைகளைப் பொறுத்தவையே !

இசையில் ஆர்வம், நடனத்தில் நாட்டம் ,
இயலில் ஆர்வம், நாடகத்தில் நாட்டம் ,

கலைகளில் நாட்டம் , கற்பதில் ஆர்வம்,
சிலை வடிப்பதில் சிந்தனை என நம்மால்,

காரணம் கூற முடியாத ஆசைகளை, நம்
கண்மணிகளிடம் நாம் காண்கின்றோமே!

எங்கிருந்து வந்தன இந்த ஆர்வங்கள்?
எப்படி உண்டாயின இந்த நாட்டங்கள்?

பூர்வ ஜன்மத்து ருசியும், வாசனையும்,
ஆர்வமாய் அவரைப் பின்தொடருவதாலே!

நல்ல ருசிகளையும், நல்ல வாசனைகளையும்,
நாமும் நித்தம் மேற்கொள்ள வேண்டும்.

இப்பிறவியில் மட்டுமின்றி அவை எல்லாம் ,
எப்பிறவியிலும் நமக்கு பயக்கும் நன்மையே.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
# 180. The Ruchi and Vaasanaa.



Tastes and smells are essential in our food items. Only then we can relish and enjoy what we eat. The taste and the smell of the food we eat linger on in our hands, mouth and mind for a long time, after we finish eating!

The mental recordings of all our experiences linger on in our minds forming our Ruchi (our likes ) and Vaasanaa ( our aptitudes). Our future births are decided by our Ruchi and Vaasanaa now.

We find that our children have an aptitude for music or for dancing or for writing or for acting. Some of these aptitudes are inexplicable - since there is no family history or connection to these arts!

The how and from where do they develop such tastes and likes?

It is because the mental recordings of their previous births follow them to their present births. We must develop good tastes and good aptitudes. They are useful not only in this birth but also in all our future births.
 
#181. உத்தம குரு!





இறையருள் பெற நாம் எண்ணும்போதே,
இறையருளால் உத்தம குருவும் வருவார்!
நாம் நாடித் தேடிச் சென்றிடும் முன்பே,
நம்மைத் தேடி வந்து விடுவார் அவரே!

உத்தம குரு வெறும் மனிதர் அல்ல,
இறையே அந்த குரு வடிவு எடுக்கும்!
உத்தம குருவும் இறையும் ஒன்றென
விரைவில் நாம் விளங்கிக் கொள்வோம்.

மந்திரங்கள் காதுகளில் உபதேசிப்பார்;
மனதில் வைராக்கியத்தை வளர்ப்பார்;
அறிவில் விவேகம்தனை விதைப்பார்;
ஆன்மாவில் நாட்டம் கொள்ளச் செய்வார்.

ஜீவாத்மாவையும், அது அலைந்து தேடிடும்
பரமாத்மாவையும், குரு சேர்த்து வைப்பார்;
பார்வை அற்றவனுக்கு வழி காட்டுவது போல,
நேர்மை மாறாத நல்வழியில் நம்மை நடத்துவார்.

கங்கையைப் போலப் புனிதமானவர் குரு;
விந்தைகள் பலப்பல புரிய வல்லவர் குரு;
நிந்தனையால் அவர் உள்ளம் மாறுபடார்;
சிந்தனைச் சிற்பி என்பவரே நல்ல குரு.

மூன்று வகை வைத்தியர்கள் உண்டு;
மூன்று வகையினர் குருவும் ஆவர்.
அதமம், மத்யமம், உத்தமம் என நாம்,
அறியும் வகைகள் உண்டு இரண்டிலும்.

முதல் வகை வைத்தியர், நாடியைச் சோதித்து,
மருந்தை அளித்து விட்டுச் சென்று விடுவார்.
முதல் வகை குரு நல்ல முறையில் போதித்து,
“மகனே! இனி உன் சமர்த்து!” என்றிடுவார்.

இரண்டாம் வகை வைத்தியர் மருந்தை,
வற்புறுத்தி, வலியுறுத்தி உண்ண வைப்பார்.
இரண்டாம் வகை குரு, இனிய சொற்களால்,
வற்புறுத்தி, நம்மை நல்வழிப்படுத்துவார்.

அடுத்த வகை வைத்தியர் நம்மை, ”பாடு
படுத்தி”யேனும் மருந்தைச் செலுத்துவார்.
பலப்பிரயோகம் செய்தேனும் நம்மை,
நலம்பட வாழ்விப்பவரே ஒரு உத்தம குரு.

குருவருளும், இறைஅருளும் ஒன்றாய்க்
கூடி வரும்போது, நம் உலக வாழ்வில்
குறை இன்றிக் கோரினவை கைக்கூடும்.
குருவை வரவேற்கத் தயாராகுங்கள்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
# 181. The Best Guru.



When we are ready to receive the divine grace of the God, out sat guru appears in front of us! Even before we set out searching for him, he himself comes looking for us!

Guru is not just any ordinary human being. Guru is the personification of God Himself. We will realize very soon that Guru and God are one and the same.

Guru initiates us with a mantra. He teaches us Viveka - the discerning power- and makes us develop our Vairaagya. He helps us evolve spiritually and try for Atma dharshan.

Guru forms a bridge between the restless jivatman and its final abode the Paramatman. Just like a kind man leading a blind man our Guru leads us in the right path towards God.

Guru is as venerable a Ganga. He does not get hurt by thoughtless comments. He shapes our thinking process.

There are three kinds of doctors - the Good, the Better and the Best - going from the bottom to the top! There are three types of gurus in the same order.

The first type of doctor diagnoses our ailment, prescribes the medicine and goes away. The first type of Guru preaches us well but leaves us to develop and progress on our own.

The second type of doctor diagnoses, prescribes and makes us take the medicines in his presence. The second type of Guru teaches us, clears all out doubts and makes sure we progress satisfactorily.

The third and the best doctor puts the bitter medicine down our throat, using physical force if necessary. The Uthama guru does the same thing. He makes sure that we progress satisfactorily even if he has to apply pressurizing techniques.

When the grace of God and Guru descend on us, is there anything that we cannot achieve in this world? Get ready for your Guru. He will come to you only when you are really ready to receive him!
 
#182. கலியின் இருப்பிடங்கள்.

ஒரு நாள் மன்னன் பரீக்ஷித்து கண்டது,
ஒரு கால் எருதினை அடிக்கும் மனிதனை;
அருகினில் ஒரு பசு உருவினில் பூமகள்,
அருவியாய்ப் பெருகிடும் கண்ணீர் வழிந்திட;

முதல் யுகமான கிருத யுகத்தினில்,
முழு எருதாக இருந்தது தர்ம தேவதை.
தவம், ஆசாரம், தயை, சத்யம் என்ற
தன் கால்கள் ஒவ்வொன்றாய் இழந்து;

கலியுகத்தில் சத்யம் என்னும் ஒரே
காலுடன் தடுமாறுகின்றது தர்மம்.
தடியால் அடிப்பவனே கலிபுருடன்,
தாங்க முடியவில்லை மன்னனுக்கு.

“இனி என் நாட்டில் உன்னைப் போன்ற,
இரக்கமில்லதவனுக்கு இடமில்லை “என்று
கலியை விரட்ட முனைந்தான் மன்னன்,
கலியோ தன் பக்க நியாயத்தைப் பகர்ந்தான்.

“இறைவன் என்னை இப்படிப் படைத்தான்,
இதில் என் தவறு ஏதும் இல்லை. நீங்கள்
அளிக்கும் இடத்தில் ஒளிந்து கொள்கின்றேன் ,
அனுமதி தரவும் வேண்டுகின்றேன்” எனப் பணிய,

மது, மாது, கொலை, சூது, தங்கம் என்று
மன்னன் கலிக்கு அளித்தான் ஐந்து இடங்கள்.
போதாது என்று மன்றாடிய கலிக்கு அளித்தான்,
மேதாவி மன்னன் மேலும் ஐந்து இடங்கள்,

காமம், பொய், வெறி, கலகம், பகைமை;
கலிக்கு கிடைத்த வேறு ஐந்து புகலிடங்கள்.
கலியின் புகலிடங்கள் அறிந்து, அவற்றுடன்,
கலப்பதை நாம் அறவே தவிர்ப்போம்! .

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
# 182. The hideouts of Kali.

One day King Pareekshit saw a strange and moving spectacle! An ox was precariously balancing on its only leg.
A cruel man was thrashing the ox harshly.
A cow stood nearly shedding copious tears.

The ox was the Dharma Devan. The cow was the Mother earth and the cruel man
was the Kali purushan.

At the beginning of the Chatur yuga, the ox had all is four legs intact. During the first three yugas, viz Kritha, Treta and Dwapara , it lost three of its legs called Tapas, Achaaram and Daya. In Kali Yuga it was left with a solitary leg called satyam.

The King became very angry and ordered the kali purushan to leave his country immediately. But Kali presented the king his side of the problem.

"Oh King! It is not my fault that you find me disagreeable. I was made this way by God Himself. I too need a place to live in. So please give me some place to live and I will not disturb your citizens. I will confine myself in the allotted space."

It looked reasonable and the King gave him five places to hide. They were wine, women, murder, gambling and gold!

Kali demanded for five more places until the king gave him these five more places viz Lust, Falsehood, Frenzy, Fury and Enmity.

Now that we know Kali's hideouts we must avoid them very carefully - if we do not wish to be bothered by Kali.
 

Latest ads

Back
Top