இதுவும் ஸாடிஸம்!!
வெள்ளப் பெருக்கு தெருக்களை நிறைத்து,
உள்ளம் நடுங்க வைத்து, வீட்டில் நுழைந்து,
பத்து நாள் அழையா விருந்தாளியாயிருந்து,
முத்தான பல மரச் சாதனங்களைச் சிதைக்க,
வந்து பார்த்த உறவினர், 'இவ்வளவுதானா?'
என்று கேட்டு, தானறிந்த வேறு இழப்புக்களை
பட்டியலிட்டுச் சொன்னதும், எனது நெஞ்சம்
சுட்டிக் காட்டியது - 'இதுவும் ஒரு ஸாடிஸம்'!
:heh: