• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

ஐயகோ! தமிழகமே!!

ஒரு கோடி வரை வெல்ல விழைவோர்
வருவார் ஓடி, இதில் தாமும் பங்கு பெற.

முதுகலைப் பட்டம் பெற்ற ஓர் ஆசிரியர்,
பொது அறிவிலே எப்படி இருக்கின்றார்?

பிரணவ மந்திரத்தை, குமரன் தந்தைக்கு,
புரிய வைத்தது பழனியிலே என்கின்றார்!

கண்ணின் லென்ஸைக் கட்டுப்படுத்தக்
கருவிழி உதவுமா? ஐயம் கொள்கின்றார்!

சட்டம் படிக்கும் ஒரு மாணவிக்குத் தன்
பட்டத்திற்குக் கணிதமே தேவையில்லை!

ஐந்து அடிக்கு எத்தனை அங்குலம் என
வந்த வினாவிற்கே audience poll தேவை!

ஒரு புறம் 12 எனவும், மறுபுறம் 30 எனவும்
ஒரு அடிக்கோலில் உள்ளது அறியாரோ?

இவர் வக்கீலான பின், தினம் 'அளப்பதே'
இவர் செய்திடும் தொழில் ஆகாதோ?

அந்த audience இல் கூடப் பலர் தவறாக
இந்த வினாவுக்கு விடை அளித்தனரே!

பாடப் புத்தகத்தில் சிறிதளவே படித்து,
பரீட்சையில் கக்குவதால் இப்படியோ?

:noidea:
 
ஐயகோ, தமிழ்த் தாயே!

முகநூல் பதிவில் கீழ்த்தரமான
அகத்தின் வெளிப்பாடுகள் பல!

இரு மங்கையரை மணம் புரிய
ஒரு நாட்டில் சட்டம் இயற்றிவிட,

இங்கே வாழும் சிலரோ - உடனே
அங்கே செல்ல விழைகின்றார்!

விழைவதைவிடக் கேவலம் அந்தப்
பிழை மிக்க தமிழ் வாக்கியங்கள்!

:(
 
R.R. Madam,

Thanks for visiting that thread and pointing out the mistakes

I now learnt that it is a fake one and had accordingly addressed the Moderator to delete the same.

Thanks again.

Good day.
 
Last edited by a moderator:
RRji

Watch out ,sun is rising from the west.

Take care

Without knowing the full story, here comes a caution. Nice to read that.

Thanks



P.S:
[h=1]Sunrise in the WEST: Scientists warn North could be SOUTH as Earth's magnetic poles SWITCH[/h][h=3]SCIENTISTS have warned Earth could be heading towards an extraordinary event which would see compasses point SOUTH and the sun rise in the West.[/h]http://www.express.co.uk/news/scien...n-magnetic-poles-SWITCHING-North-become-south
 
Last edited by a moderator:
Dear Krish Sir,

First, I read the 'unedited post' from my in-box and had a good laugh. :D

But, the edited version (nice one!) has made my day!! :thumb:

P.S: It is morning in Boston. :)
 
ஓடிடும் காலச் சக்கரம்!

ஆறு மாதங்கள் உருண்டு ஓடிவிட்டது,
ஆசை உறவுகள் இருந்தால் தெரியாது!

மற்றவர் மதிக்க வாழும் மனிதர்களால்,
உற்றவர் அனைவரும் மனம் களிப்பார்!

நல்ல உடல் நிலை நிலைக்கும் வரை,
நல்ல வரவேற்பு எங்குமே கிடைக்கும்!

இந்த இனிய காலங்கள் தொடர்ந்திட,
அந்த இறைவனின் அருளே வேண்டும்!

:pray2:
 
Time flies.

However heart continues to be young.

As one grows old,there is less hair to comb and more face to wash.lol

The greys in the hair and creaky joints send a message that we are on the last lap.

However as a matter of habit we become more involved with many close to us but realise that many have moved on and found new pastures.

As long as we live, we shall continue to reach out to many and hope some will accept us with our physical and mental disabilities.

Cheer up.

Yours is a noble soul.

You will always be welcome everywhere.
 
ஆறு ஆண்டுகள்......

இந்த நாள் நாட்காட்டியில் வரும்போது,
வந்துவிடும் மனதில் எண்ணம் ஒன்று.

இந்த இணையதளத்தினில் இணைந்த
அந்த நாளின் காலை நேரம்தான் அது!

இணையதள நட்பு, நிஜமாக மாறினால்,
இணையில்லா மகிழ்வு வருவது நிஜம்.

அன்புடன் நண்பர்கள் வந்த சமயத்தில்,
நன்கு சென்றன சில மணி நேரங்கள்!

ஆறு ஆண்டுகளில் கற்றுக்கொண்டவை
வேறு எங்கும் கற்க முடியாப் பாடங்கள்.

என் நிஜ நண்பர்களுக்குக் கூறுகின்றேன்,
என்றும் உங்கள் ஊக்கம்; எந்தன் ஆக்கம்.

:)

 
பெயரில் இளமை; மனதிலும் இளமை!

அவர் பெயர் பாலமுரளி க்ருஷ்ணா;
அவர் மனமும் பாலகனைப் போல!

குழந்தைச் சிரிப்பு முகத்தில் தவழ,
குழல் போல இழைந்திடும் சாரீரம்!

ரசிகர்களை மயக்கிடும் குரல் வளம்;
ரசிகர்களுடன் ஒன்றிவிடும் சுபாவம்!

சினிமாவிலும், கர்னாடக இசையிலும்,
சிகரம் தொட்டுச் சாதனை படைத்தார்!

பூவுலகை நீத்தார் எனினும் அவரின்
தூய இசை என்றும் நம்முடனிருக்கும்!

ஒரு நாள் போதுமா நான் பாட என்றார்!
ஒரு நாள் போதாது அவர் புகழ் பாட!

அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறேன்! :pray:
 
இதற்கா விடுமுறை?

தொடர் மழை காரணமாய் வந்தது
இடர் சென்னைக்குச் சென்ற ஆண்டு!

இப்போதோ தமிழ் நாட்டிலே வறட்சி;
அன்றாடம் நீருக்கு அலையும் காட்சி!

அடை மழை காணவில்லை ஐப்பசி;

தொடர் மழைக்கோ வழியுமில்லை!

புயாலால் வந்திடுமாம் பெரு மழை;
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை!

குடை பிடிக்க மக்கள் மறந்தனரோ? ;)
 
காலை வணக்கம்

காலை வணக்கம் ராஜி ராம் ! நன்றாக உள்ளது நன்றி
 

இறை
வன் அருள் இருந்தால் .....

இறைவன் அருள் இருந்தால்,
துவுமே
குறைகள் இன்றி நடந்திடும்; நிஜமே!

இளந் தளிரின் பிறந்தநாள் விழாவுக்கு,
உள மகிழ்வுடன் ஏற்பாடு செய்தோம்.

உறவு நட்பு வட்டத்திலிருந்து, வரணும்
அருமையான நூற்றைம்பது நபர்கள்!

பெரிய இரு சோதனைகள் உதித்தன!
அரிய தலைவியுடைய முடிவு ஒன்று!

சக்தியுடன் தாக்க வரும் புயல் ஒன்று!
பக்தியுடன் வேண்டினேன் கணபதியை!

'ஜிக்ஸா' புதிரின் துண்டுகள் சேர்ந்தால்,
சிக்கென்று சரியான உருவம் வந்திடும்!

அதே போன்று எல்லா நிகழ்வுகளுமே
அந்த அந்த வேளையில் நடந்துவிட,

விக்னராஜனின் பூரண அருளினால்,
விக்னமிலாது விழா இனிதே நடந்தது!


:pray2:
 
Gananatha Ashtakam (Pratah smarami) - Kanipaka Vinayaka - YouTube
▶ 3:43
https://www.youtube.com/watch?v=dH3saKesjSI
Sep 19, 2010 - Uploaded by telugubhaktisongs
Om Gam Ganapataye Namaha Kanipaka Vinayaka - Gananatha Ashtakam.


Sarva vigna karma devam (You cause all the hinderances)

Sara vigna vivarjitham (You remove all the hinderances)

தும்பிக்கையான் மீது நம்பிக்கை வைத்தவருக்குத்

துன்பம் எல்லாம் ஆதவன் முன் பனி போல் மறையும்!

 
Last edited:
பெண் உரிமை!

பெண் உரிமை பற்றிப் பேசாத
பெண்கள் மிகக் குறைவுதான்!

உரிமையின் பொருளைத்தான்
புரிந்து கொள்வதில்லை சிலர்!

அங்கம் தெரிய உடுத்துவதும்,
எங்கும் ஆணுடன் உலவுவதும்,

விடுதிகளில் இரவு உழல்வதும்,
சடுதியில் மதுவில் மகிழ்வதும்,

கற்பு எதற்கு எனக் கேட்பதும்,
பெரியோரை மதியாதிருப்பதும்


பெண்ணுரிமை என்று எண்ணி,
மண்ணில் வலம் வருகின்றார்!

வம்பு தும்பில் மாட்டிய பின்னர்,
வசை பாடுகின்றார் ஆண்களை!

உயர் கல்வி கற்பதையும் - நம்
உயர் கலாச்சாரம் காப்பதையும்

பெண்ணுரிமை என்று இவர்கள்
எண்ணத் துவங்கும் நாட்களே,

இந்தியப் பெண்களின் உயர்வை
இமயத்துக்கு இணை ஆக்கிடும்!

award_star.png
 
திருமதி ராஜி ராம் அவர்களு க்கு வணக்கம்.
தங்கள் எண்ண அலைகள் எனது எண்ணங்களின் எதிரொலியாகவே உள்ளது.
பெண்கள் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள் என மதிப்பவன் நான். இதில் அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
பெங்களூரில் சென்ற சில நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இவையாவும் நள்ளிரவில் தனியாக சென்று வரும் பெண்களுக்கு எவ்வித ஆபத்து காத்திருக்கிகின்றன என்று எச்சரிகின்றன. பெண்களுக்கு சமூக பாதுகா ப்பு எவ்வளவு அவசியம் என்பதை உறுதி படுத்துகிறது.
தங்கள் நலங்கோ றும்,

ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு.
 
Last edited:
திருமதி ராஜி ராம் அவர்களு க்கு வணக்கம்.
தங்கள் எண்ண அலைகள் எனது எண்ணங்களின் எதிரொலியாகவே உள்ளது.
பெண்கள் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள் என மதிப்பவன் நான். இதில் அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது..........
மதிப்பிற்குரிய நண்பருக்கு வணக்கம். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. :)

பெண்களின் பாதுகாப்பில்
பெண்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.

இதன் எதிரொலியே என் எழுத்துக்கள்!

 
திருமதி ராஜி ராம் அவர்களு க்கு வணக்கம்.
தங்கள் எண்ண அலைகள் எனது எண்ணங்களின் எதிரொலியாகவே உள்ளது.
பெண்கள் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள் என மதிப்பவன் நான். இதில் அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
பெங்களூரில் சென்ற சில நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியடைய செய்கின்றன. இவையாவும் நள்ளிரவில் தனியாக சென்று வரும் பெண்களுக்கு எவ்வித ஆபத்து காத்திருக்கிகின்றன என்று எச்சரிகின்றன. பெண்களுக்கு சமூக பாதுகா ப்பு எவ்வளவு அவசியம் என்பதை உறுதி படுத்துகிறது.
தங்கள் நலங்கோ றும்,

ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு.

Probably these silly girls assume that today's India is the one dreamed about by Mahatma Ghandhiji

where a young woman wearing costly jewels can safely walk around in the streets in the middle of

the night! :doh:
 

Latest ads

Back
Top