எண்ண அலைகள்.... [ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
எண்ண அலைகள்.....[ என் எழுத்துக்கள் ].....

நான் ஏன் எழுதுகிறேன்...?...எதற்க்காக....? யாருக்காக..? மனதிற்குள் ஊஞ்சலாடும் கேள்விகள்..

இதில் என்ன பயன்..? என் நேரத்தையும்.. படிப்பவர்கள் நேரத்தையும் வீணடிப்பதை தவிர...

ஓன்று மட்டும் புரிகிறது...நான் யாருக்காகவும் ..எதையும் எழுதுவது இல்லை..ஏன்எனக்ககாவும்தான்...

’ஏதோ’..வருகின்றது..அதுஎழுத்துவடிவம்பெறுகிறது..அவ்வளவுதான்..

ஆனாலும் என் எழுத்துக்கள்,..சில பல முகநூல் நண்பர்களின் பாராட்டுக்களுக்கும்....உலகளவில் பரந்து நிற்கும் “நட்புகளின்” அறிமுகத்துக்கும் ஓர் கருவியாயிற்று என்பதை என்னால் மறுக்க முடியாது...மறக்கவும் முடியாது.. இந்த“மாயைகளில்” நான் என்றுமே மயங்கியதும் இல்லை...இவை என்னை “உயர்த்தியதும்” இல்லை...இதை முற்றும் உணர்ந்தவன்தான் நான்..

நான் எழுதியதை...பலநேரங்களில் படித்து பார்க்கும்போது..”இது ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்” என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.. உண்மை நிலையும் அதுதானே...!!

சில நேரங்களில் ஆழ்மனதின் அடித்தளத்தில்..எங்கோ ஓர்இருள்மூலையில்..பதுங்கிநிற்கும்“காயங்கள்’..”வக்கிரங்கள்”...”துயரங்கள்”..”கணநேர..மகிழ்வுகள்”..கண்விழத்தே நான் காணும் சிலநேரக் கனவுகள்.. ஏன் என்னை தூண்டிவிடுகின்றன..?

இத்தகைய நிகழ்வுகளும்..சஞ்சலங்களும்.. மனித வாழ்வில் காணாத எவரேனும் உள்ளனரா..?.ஏன் இந்த நாடகம்..?

“இனமரியா...ஏதோ ஓன்று”..என்னை..ஆட்கொள்கிறது...என்னை அடிமை ஆக்குகிறது...

இந்த “ஏதோ ஒன்றின்”..ஆக்கிரமிப்பில் சிக்குண்டு விரல்களின் வழியே ......மதகில்லாகடைமடையாய்..வழிகின்றன.. “எழுத்துக்கள்”.. விரல்களின் நாட்டிய அசைவில் துள்ளிக் குதித்து வரும் “வார்த்தைகளில்”...என்னை இழக்கிறேன் நான்...ஏனென்று தெரியாமல்......எதற்கு என்று புரியாமல்... ..சுற்றமும் ... சூழலும்...மறந்து...

இந்த “ஏதோஓன்று”..என்னை எங்கு கொண்டு செல்லும்...?..எதுவரை தொடரும்..?...என்றுவரை... என் எழத்துக்கள்.. எண்ணங்களின் வடிகாலாகும்..?

என் இறுதிவரையிலா..?..அல்லது.. இன்றுவரையிலா....?

தெரியவில்லையே..


“டிவிகே”

 
Status
Not open for further replies.
Back
Top