• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

இலவச மருத்துவத் தகவல் பெற 104 எண்ணை அழைக்கல&#3

Status
Not open for further replies.
இலவச மருத்துவத் தகவல் பெற 104 எண்ணை அழைக்கல&#3

இலவச மருத்துவத் தகவல் பெற 104 எண்ணை அழைக்கலாம்!


சென்னை: தமிழகத்தில் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்று 104 என்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

எந்த ஒரு நேரத்திலும் விபத்தோ, எமர்ஜென்ஸியா உடனே நாம் அழைக்கும் எண் 108 ஆகத் தான் இருக்கும். அப்படி நம்பிக்கையோடு நாம் அழைக்கும் பட்சத்தில் அழைத்த சில நிமிடங்களில் உதவிக்கு 108 எண் கொண்ட ஆம்பலன்ஸ் நமது பக்கத்தில் நண்பர் போல் ஓடி வந்து நிற்பது கண்கூடு.

அதே போல இப்போது இன்னொரு எண்ணை அவசரகால சிகிச்சை மற்றும் மேலாண்மை நிறுவனமான 'GVK-EMRI' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ள எந்த ஊரிலும், கிராமத்திலும், யாருக்காவது உடல் நிலை சரியில்லையா? வயிற்று வலி, தலை வலியா? காய்ச்சலா? உடனே 104 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலம் அழைத்தால் நமக்கு தேவையான மருத்துவ தகவல்கள், ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் முறையாக பெற்றுத் தருகின்றார்கள்.

மேலும், ரத்தம் வேண்டுவோருக்கு அருகே எந்த ரத்த வங்கி இருக்கிறது என்ற தகவலும், அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள், புதிய நோய்த் தொற்று பற்றிய தகவல்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகின்றது இந்த 104 இலவச சேவை. 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவைக்கு தற்போது பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

For free medical advice dial 104 | ???? ?????????? ????? ??? 104 ????? ??????????! - Oneindia Tamil
 
Status
Not open for further replies.
Back
Top