எண்ண அலைகள்....

மலரும் நினைவுகள் - 9

கம்பி மத்தாப்பு எரிந்து அணைந்து குளிர,
கம்பியை மட்டும் தட்டித் தட்டி எடுத்து,

அன்பு அன்னை செய்யும் ரிப்பேர்களுக்கு,
அழகாய்ப் பேப்பரிலே சுற்றி வைப்பது!

;)
 
மலரும் நினைவுகள் - 10

பட்டாசு ஏற்றினால், மிகவும் வேகமாக அப்
பட்டாசு வெடிக்கும் என்பதால், அதனுடைய

நுனியின் உறையைச் சிறிது பிரித்தெடுத்து,
இனி மெதுவாக வெடிக்குமென மகிழ்வது!

:becky:
 
மலரும் நினைவுகள் - 11

தரைச்சக்கரப் பொறிகள் காலில் படாதிருக்க,
தரையில் அதை வைக்கும் முன்பே - அதன்

முதல் அரை அங்குலத்தைச் செங்குத்தாக்கி
அதன் பின்பு அதை ஏற்றி, ஓடிச் செல்வது!

:bolt:
 
மலரும் நினைவுகள் - 12

வெடிக்காது அமைதி காக்கும் பட்டாசுகளை
வெளியிலே வீசாது, எடுத்து வந்து சேர்த்து,

நடுவில் அதை ஒடித்து, தரையில் நிறுத்தி,
நடுவில் ஏற்ற, அது ஒரு புஸ்வாணமாவது!

:becky:
 
மலரும் நினைவுகள் - 13

அம்மா கொடுக்கும் தீபாவளி லேகியத்தை

அப்படியே விழுங்காது, ஓரமாக வாயிலே

அடக்கி வைத்து, அதன் சுவை சீக்கிரமாய்
அடங்காது, ரசித்து ருசித்து ஆனந்திப்பது!

:dance:
 
மலரும் நினைவுகள் - 14

எல்லோருக்கும் இனிப்பு பிடிக்கும்; எனவே
எல்லோருக்கும் சம்மாக அன்னை அளிக்க,

தமக்கு மிகப் பிடித்ததை, உடன் பிறப்புகள்
தம்மிடையிலே பண்டமாற்றுச் செய்வது!
:decision:
 
மலரும் நினைவுகள் - 15

சிறப்பான சமையலில் அங்கம் வகித்திடும்
மொறு மொறுப்பான வடாம் பொறித்திட

அம்மா அடுப்படியில் நிற்கும் சமயத்தில்,
அம்மாவிடம் கெஞ்சி, ருசித்திட எடுப்பது!

:hug:
 
மலரும் நினைவுகள் - 16

சமையற்கட்டிலேயே நின்று வேலை செய்யும்
அமைதியான அன்னையின் கரத்தைப் பிடித்து,

தீப் பொறிகள் சிதறும் புஸ்வாணங்களை ஏற்றி,
'நீங்களும் பாருங்கள்', என்று நிறுத்தி வைப்பது!
cheer2.gif
 
மலரும் நினைவுகள் - 17

கெட்டியான நீளமான பட்டாசு ஏற்றும் பத்தி
குட்டியாகிப் போனவுடன், அதன் கனலிலே

குட்டியான ஊசிப் பட்டாசுகளைக் கொளுத்தி
எட்ட வீச, தரையில் படும் முன் வெடிப்பது!

;)
 
மலரும் நினைவுகள் - 18

காற்றில் பாவாடை வீசினால் ஆபத்து! எனவே
காலின் இடையில் அதைப் பிடித்துக்கொண்டு,

பட்டாசை ஏற்றியவுடனே, திரும்பி, நாலு கால்
பாய்ச்சல் போல ஓடி, காதை மூடிக்கொள்வது!

:llama:
 
மலரும் நினைவுகள் - 19

சிவப்பு நிறப் பட்டாசுக் கட்டை ஏற்றினால்,
சில நொடிகளிலே வெடித்திடும்; அதனால்

பொறுமையாக அதன் தையலைப் பிரித்து,
பொறுமையாக ஒவ்வொன்றாய் வெடிப்பது!

icon3.png
 
மலரும் நினைவுகள் - 20

நாள் முழுதும் பட்டாசு வெடித்து - தீபாவளி
நாளை உற்சாகமாகக் கொண்டாடி - இரவில்

சொக்கப்பானை கொளுத்துகிற சமயத்தில்,

சொக்கிப் போவது அதன் வண்ணமயத்தில்!

:flame:
 
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


எத்தனை உண்மையான சொற்கள்!

குறைவான பொருட்கள் இருந்தவர்க்கு,

குறைந்த சேதமே, வெள்ளப் பிரவாகத்தால்! :rain:
 
காலணிகள் இல்லாதவன், அடுத்ததாக இருக்கும்
கால்கள் இல்லாதவனைப் பார்த்துத் தேறணுமாம்!


மேற் கூரை வரை வெள்ளம் வந்தோரைப் பார்த்து,
முழங்கால் வரை வெள்ளம் வந்தோர் தேறணுமோ?


:decision:
 
இதுவும் நன்மைக்கே!

சுவற்றில் சிலந்தி வலைகளை நாம் எடுக்காதிருந்தால்,
அவற்றில் மாட்டிக்கொள்ளும் மனித எதிரி கொசுக்கள்!

மின்சாரம் இல்லாது அவதிப்படினும் - வெள்ளத்தில்
மின்சாரம் தாக்கி மனிதர் இறப்பது குறைந்துவிடும்!

தொலைபேசி இல்லாது தொடர்பு அற்றுப் போய்விடினும்,
தொலை தூரம் வாழ் சுற்றம், நட்பு நம்மையே நினைக்கும்!

ஜாதி, மத பேதங்கள் அற்றுப் போகும் - மழை வெள்ளம்
மோதி வந்து வீடுகளைத் தீவுகளாய் மாற்றிவிட்டால்!

வீட்டினுள் மழை நீர் நிலத்தடி நீரளவு ஏறினால்தான்
வீட்டினுள் இட்ட மின்னும் தரை கெடாதிருக்குமாம்!

 
பாரதியாரின் தில்லானா ?!

சங்கீதம் வீசை என்ன விலை என்று கேட்கும்
சங்கீதம் அறியாதவர் பொறுப்பினை ஏற்பின்,

பட்டணம் சுப்ரமணிய ஐயரின் தில்லானா ஒன்று,
பாரதியார் இயற்றியதாக மாறியே போய்விடும்!

லிஸ்டை டி.விக்குக் கொடுத்த இசைக் கலைஞர்,
லிஸ்டை வரியில்லாத் தாளில் எழுதித் தந்திட,

எடுத்த தில்லானாவை இயற்றியவர், லிஸ்டிலுள்ள
அடுத்த பாட்டினை இயற்றியவராய் மாறிவிட்டார்!

இசைக் கலைஞரின் குழலோசை மட்டும் அல்லாது
இந்த பாரதியாரின் தில்லானாவும் எனை மயக்கியது!

:dizzy:
 
கசங்கிய உடையா?

பாடகியின் உடை அலங்காரம் காணவே
பாட்டுக் கச்சேரி கேட்க வருவோருண்டு!

தமது புதிய புடவைக் கலெக்க்ஷன் காட்டிட,
தமது சீசன் டிக்கட்டை வாங்குவோருண்டு!

நிலைமை இப்படி இருக்க, தான் உடுத்திய
புடவை கசங்கியதைக்கூடக் கவனிக்காது,

வீட்டில் உள்ளது போன்ற தோற்றத்திலே
பாட்டுக் கச்சேரி செய்தாளே, அது எப்படி?

:noidea:

 
இதுவும் ஸாடிஸம்!!

வெள்ளப் பெருக்கு தெருக்களை நிறைத்து,
உள்ளம் நடுங்க வை
த்து, வீட்டில் நுழைந்து,

பத்து நாள் அழையா விருந்தாளியாயிருந்து,
முத்தான பல மரச் சாதனங்களைச் சிதைக்க,

வந்து பார்த்த உறவினர், 'இவ்வளவுதானா?'
என்று கேட்டு, தானறிந்த வேறு இழப்புக்களை

பட்டியலிட்டுச் சொன்னதும், எனது நெஞ்சம்
சுட்டிக் காட்டியது - 'இதுவும் ஒரு ஸாடிஸம்'!

:heh:
 
இப்படி ஒரு ராகமா?

இப்படி ஒரு ராகமா? இத்தனை நாள்
எப்படி நான் அறியாதிருந்தேன் என்று

எண்ணிய பின் அறிந்தேன் - அதுவும்
பண்ணிய பிழைகளில் ஒன்று என்று!

ஆங்கிலத்தில் எழுதிய லிஸ்டில் உள்ள
பாங்கான காபி ராகமே உருமாறியது!

ஒரு உயிரெழுத்து வேறாக்கிவிட்டது;
ஒரு உயிரெழுத்து குறில் ஆகிவிட்டது!

'காபி' ராகம் மாறியது 'கபு' என்று அன்று,
காபியுடன் சங்கீதமும் அருந்தாததால்!

இசை அறிந்தோர் பணியில் அமர்ந்தால்,
வசைக்கு ஆளாகாமல் தப்பிக்கலாமே!

:rant:
 
Back
Top