எண்ண அலைகள்....

இனிய இசையும், தனிப்பட்ட வாழ்வும்!

பாடும் கலைஞர்களுக்கு ஒரு போட்டி;
நாடும் இசை விரும்பும் மனம் அதை!

பாட்டில் அவர்களின் திறனை மட்டுமே
காட்டினால் போதுமே! அவர்கள் படுகிற

பாட்டை வெட்ட வெளிச்சமாக நமக்குக்
காட்டுவது ஒரு சாடிசமே அல்லவோ?

தனிப்பட்ட வாழ்வைத் தனியே விட்டு,
இனிய இசையை மட்டு
ம் ரசிப்போமே!

:music: .... :couch2:
 
Thank you Bala Sir! :)

This is for you and other friends in forum:

Navratri+Facebook+Quotes.jpg


Courtesy: Google images
 
குரு!

குருவாக இசை கற்பித்தால் என்ன கிடைக்கும்?
அருமையான புடவைகள் அன்போடு கிடைக்கும்!! :popcorn:
 
தங்க பொம்மை!

அங்கம் தங்க நிறம்; புடவை நிறம்
தங்கம்! கொடிபோல் அழகு உருவம்!

சிவப்பு ரவிக்கை. கழுத்தில் சின்னச்
சிவப்புக் கல் நெக்லஸ் ஆபரணம்.

புடவைக் கடை வாசல் பொம்மை
நடமாடுவது போலிருந்தது உண்மை!

ஜே ஜே என்றிருந்த கும்பலில் - அந்த
ஜெர்மனிப் பேரழகியே மிளிர்ந்தாள்!

:cheer2:
 
images


ஒளிரும் தீப ஒளி போல ....

தீபாவளித் திருநாளில், ஒளிரும்
தீப ஒளி போல, அனைவருக்கும்,


இறையருளால், செல்வம் யாவும்
நிறையட்டும்; மனம் மகிழட்டும்!


மனம் கனிந்த தீபாவளி நல்
வாழ்த்துக்கள்!
ராஜி ராம்
 

அந்த நாளும் வந்திடாதோ?

துள்ளித் திரிந்து மகிழும் பிள்ளைப் பருவம்;
துள்ளும் தீபாவளி நாளை எண்ணி மனமும்!

இரு வாரங்களுக்கு முன்பே, அன்பு அன்னை
அருமையான உடைகளைத் தைத்திடுவார்!

சகலகலாவல்லியான அவர், தான் அறிந்த
சகல விதப் பலகாரங்களையும் தயாரிப்பார்!

மூன்று வகை முறுக்குகள்; மைசூர்பாகிலும்
மூன்று வகை வண்ணங்கள், வாசனைகள்.

மைதா மாவால் இனிப்பு பிஸ்கட் - மனதை
மையல் கொள்ள வைக்கும் பார்த்தவுடனே!

வரிகள் பல கொண்ட மரப் பலகை உதவிட,
வரிகள் விளங்கும் அழகு சங்கு மிட்டாய்கள்!

இரண்டு வகை அல்வாக்கள்; அவைகளும்
இரண்டு வகை வண்ணங்கள், சுவைகளில்!

நெளிச் சக்கரத்தை உருட்டுவதால், ஓரத்தில்
நெளிகள் அமைந்த குட்டி உப்பு பிஸ்கட்டுகள்.

அரசனின் பெயர் கொண்டது இனிப்பு ஒன்று;
அருமையான மென்மையான பாதுஷா அது!

இத்தனையும் நன்கு ஜீரணம் ஆகிட, எங்கள்
அத்தனை பேருக்குமே தீபாவளி லேகியம்!

தீபாவளியின் முன் தினம், பட்டாசுகள் பற்பல
தீராத ஆவலுடன் வெடித்தாலும், தாத்தாவின்

மேற்பார்வையில் நடக்கும்; பேரப் பிள்ளைகள்
மேல் தீப்பொறி படாதிருக்க, நீளக் குச்சியிலே

மத்தாப்புகளைச் சொருகித் தருவார், கனிவுடன்;
எத்தனை கரிசனை எங்கள் மீது பெரியவருக்கு!

அதிகாலை துயிலெழுப்பி, தலையில் எண்ணை
மெதுவாகத் தேய்த்துவிடுவார் அன்பு அன்னை!

இளம் வென்னீரில் கங்கா ஸ்நானம்; அன்றைய
தினம் அணிய, புத்தாடையை அளிப்பார் தந்தை!

பெரியவர்களை வணங்கி வாங்கி உடுத்துவது,
பெரிய சந்தோஷத்தைத் தருவது நிஜம்தானே!

எல்லாப் பலகாரங்களையும், ஆண்டவனுக்கு
எல்லோரும் சேர்ந்து நைவேத்யம் செய்த பின்,

ஆவலுடன் உண்டு மகிழ்ந்து, நட்பு வட்டத்திற்கு
ஆசையுடன் அவைகளைப் பகிர்ந்து அளித்து,

பட்டாசுகளை வெடித்து, இரவிலே வெடிக்காத
பட்டாசுகளைப் பிரித்து, சொக்கப்பானையாகக்

கொளுத்திய பின்னர், தீபாவளித் திருநாளின்
கொண்டாட்டம் முடிவுறும், மன நிறைவுடன்!

cheer2.gif
 
excellent !

அந்த நாளும் வந்திடாதோ?

துள்ளித் திரிந்து மகிழும் பிள்ளைப் பருவம்;
துள்ளும் தீபாவளி நாளை எண்ணி மனமும்!

இரு வாரங்களுக்கு முன்பே, அன்பு அன்னை
அருமையான உடைகளைத் தைத்திடுவார்!

சகலகலாவல்லியான அவர், தான் அறிந்த
சகல விதப் பலகாரங்களையும் தயாரிப்பார்!

மூன்று வகை முறுக்குகள்; மைசூர்பாகிலும்
மூன்று வகை வண்ணங்கள், வாசனைகள்.

மைதா மாவால் இனிப்பு பிஸ்கட் - மனதை
மையல் கொள்ள வைக்கும் பார்த்தவுடனே!

வரிகள் பல கொண்ட மரப் பலகை உதவிட,
வரிகள் விளங்கும் அழகு சங்கு மிட்டாய்கள்!

இரண்டு வகை அல்வாக்கள்; அவைகளும்
இரண்டு வகை வண்ணங்கள், சுவைகளில்!

நெளிச் சக்கரத்தை உருட்டுவதால், ஓரத்தில்
நெளிகள் அமைந்த குட்டி உப்பு பிஸ்கட்டுகள்.

அரசனின் பெயர் கொண்டது இனிப்பு ஒன்று;
அருமையான மென்மையான பாதுஷா அது!

இத்தனையும் நன்கு ஜீரணம் ஆகிட, எங்கள்
அத்தனை பேருக்குமே தீபாவளி லேகியம்!

தீபாவளியின் முன் தினம், பட்டாசுகள் பற்பல
தீராத ஆவலுடன் வெடித்தாலும், தாத்தாவின்

மேற்பார்வையில் நடக்கும்; பேரப் பிள்ளைகள்
மேல் தீப்பொறி படாதிருக்க, நீளக் குச்சியிலே

மத்தாப்புகளைச் சொருகித் தருவார், கனிவுடன்;
எத்தனை கரிசனை எங்கள் மீது பெரியவருக்கு!

அதிகாலை துயிலெழுப்பி, தலையில் எண்ணை
மெதுவாகத் தேய்த்துவிடுவார் அன்பு அன்னை!

இளம் வென்னீரில் கங்கா ஸ்நானம்; அன்றைய
தினம் அணிய, புத்தாடையை அளிப்பார் தந்தை!

பெரியவர்களை வணங்கி வாங்கி உடுத்துவது,
பெரிய சந்தோஷத்தைத் தருவது நிஜம்தானே!

எல்லாப் பலகாரங்களையும், ஆண்டவனுக்கு
எல்லோரும் சேர்ந்து நைவேத்யம் செய்த பின்,

ஆவலுடன் உண்டு மகிழ்ந்து, நட்பு வட்டத்திற்கு
ஆசையுடன் அவைகளைப் பகிர்ந்து அளித்து,

பட்டாசுகளை வெடித்து, இரவிலே வெடிக்காத
பட்டாசுகளைப் பிரித்து, சொக்கப்பானையாகக்

கொளுத்திய பின்னர், தீபாவளித் திருநாளின்
கொண்டாட்டம் முடிவுறும், மன நிறைவுடன்!

cheer2.gif
 

அந்த நாளும் வந்திடாதோ?

துள்ளித் திரிந்து மகிழும் பிள்ளைப் பருவம்;
துள்ளும் தீபாவளி நாளை எண்ணி மனமும்!

இரு வாரங்களுக்கு முன்பே, அன்பு அன்னை
அருமையான உடைகளைத் தைத்திடுவார்!

சகலகலாவல்லியான அவர், தான் அறிந்த
சகல விதப் பலகாரங்களையும் தயாரிப்பார்!

மூன்று வகை முறுக்குகள்; மைசூர்பாகிலும்
மூன்று வகை வண்ணங்கள், வாசனைகள்.

மைதா மாவால் இனிப்பு பிஸ்கட் - மனதை
மையல் கொள்ள வைக்கும் பார்த்தவுடனே!

வரிகள் பல கொண்ட மரப் பலகை உதவிட,
வரிகள் விளங்கும் அழகு சங்கு மிட்டாய்கள்!

இரண்டு வகை அல்வாக்கள்; அவைகளும்
இரண்டு வகை வண்ணங்கள், சுவைகளில்!

நெளிச் சக்கரத்தை உருட்டுவதால், ஓரத்தில்
நெளிகள் அமைந்த குட்டி உப்பு பிஸ்கட்டுகள்.

அரசனின் பெயர் கொண்டது இனிப்பு ஒன்று;
அருமையான மென்மையான பாதுஷா அது!

இத்தனையும் நன்கு ஜீரணம் ஆகிட, எங்கள்
அத்தனை பேருக்குமே தீபாவளி லேகியம்!

தீபாவளியின் முன் தினம், பட்டாசுகள் பற்பல
தீராத ஆவலுடன் வெடித்தாலும், தாத்தாவின்

மேற்பார்வையில் நடக்கும்; பேரப் பிள்ளைகள்
மேல் தீப்பொறி படாதிருக்க, நீளக் குச்சியிலே

மத்தாப்புகளைச் சொருகித் தருவார், கனிவுடன்;
எத்தனை கரிசனை எங்கள் மீது பெரியவருக்கு!

அதிகாலை துயிலெழுப்பி, தலையில் எண்ணை
மெதுவாகத் தேய்த்துவிடுவார் அன்பு அன்னை!

இளம் வென்னீரில் கங்கா ஸ்நானம்; அன்றைய
தினம் அணிய, புத்தாடையை அளிப்பார் தந்தை!

பெரியவர்களை வணங்கி வாங்கி உடுத்துவது,
பெரிய சந்தோஷத்தைத் தருவது நிஜம்தானே!

எல்லாப் பலகாரங்களையும், ஆண்டவனுக்கு
எல்லோரும் சேர்ந்து நைவேத்யம் செய்த பின்,

ஆவலுடன் உண்டு மகிழ்ந்து, நட்பு வட்டத்திற்கு
ஆசையுடன் அவைகளைப் பகிர்ந்து அளித்து,

பட்டாசுகளை வெடித்து, இரவிலே வெடிக்காத
பட்டாசுகளைப் பிரித்து, சொக்கப்பானையாகக்

கொளுத்திய பின்னர், தீபாவளித் திருநாளின்
கொண்டாட்டம் முடிவுறும், மன நிறைவுடன்!

cheer2.gif
Thank you for helping us all relive our sweet childhood memories!



Z
 
மலரும் நினைவுகள் - 1

அம்மா தைத்த தீபாவளி ஆடைகளை
அம்மா அறியாது வெளியில் எடுத்து,

மேலே வைத்து அழகு பார்த்து, இது
மேலான அழகு உடையென மகிழ்தல்!

:dance:
 
மலரும் நினைவுகள் - 2

விஷமமாக, 'விடிய விடிய தீவாளி;
விடிஞ்சு போனாக் கோமாளி', என்று

பல நண்பர்கள் கேலி செய்ய விழைய,
பட்டாசுகளை முதல் நாளே வெடிப்பது!
:boom:
 
மலரும் நினைவுகள் - 3

கருப்பு வில்லையாக பெட்டியில் வரும்,
கருப்புப் புழு போல மேலெழுந்து வரும்

பாம்பு வில்லையெ ஏற்றிய பின்பு - அப்
பாம்பு விடும் புகையிலிருந்து தப்புவது!

:bolt:
 
மலரும் நினைவுகள் - 4

கல்லுச் சுவற்றில் கை வலிக்க எறியும்
கல்லுப் பட்டாசு வெடிக்காவிட்டால்,

அதைத் தேடி எடுத்து வந்து வைத்து,
அப்பாவின் உதவியை நாடி ஓடுவது!

:help:
 
மலரும் நினைவுகள் - 5

வெடிக்காத அந்தக் கல்லுப் பட்டாசினை
வெடிக்க வைக்கப் புது வழி ஒன்று உண்டு!

குட்டிப் பாறை மீது அதை இட்டு, மேலே
குட்டிப் பாறை ஒன்றை அப்பா போடுவார்!

icon3.png
 
மலரும் நினைவுகள் - 6

'சடபுட மத்தாப்பு' என்ற செல்லப் பெயரில்
சடபுட என்று வெடிக்கும் ஒரு மத்தாப்பு!

அதனைப் பார்க்கக் கண்கள் கெடுமென்று
சுவரைப் பார்க்கத் தாத்தா வேண்டுவது!

:cool:
 
மலரும் நினைவுகள் - 7

எங்கள் தாத்தா அருகே இல்லாத நேரம்,
எங்கள் வீர தீரத்தினைக் காட்டும் நேரம்!

சாதாக் கம்பி மத்தாப்பின் சிதறல்களை,
சாதாரணமாக இடது கையில் ஏந்துவது!

:thumb:
 
மலரும் நினைவுகள் - 8

விஷ்ணுச் சக்கரத்தைப் பிடிக்க பயப்பட்டு,
விஷ்ணுச் சக்கரத்தின் நடுவே, மத்தாப்பை


உடைத்து, நுழைத்துவிட்டு, அதை அழகிய
தரைச் சக்கரமாக மாற்றிக் கொளுத்துவது!

:thumb:

 
Back
Top