• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

பெண் உரிமை!

பெண் உரிமை பற்றிப் பேசாத
பெண்கள் மிகக் குறைவுதான்!

உரிமையின் பொருளைத்தான்
புரிந்து கொள்வதில்லை சிலர்!

அங்கம் தெரிய உடுத்துவதும்,
எங்கும் ஆணுடன் உலவுவதும்,

விடுதிகளில் இரவு உழல்வதும்,
சடுதியில் மதுவில் மகிழ்வதும்,

கற்பு எதற்கு எனக் கேட்பதும்,
பெரியோரை மதியாதிருப்பதும்


பெண்ணுரிமை என்று எண்ணி,
மண்ணில் வலம் வருகின்றார்!

வம்பு தும்பில் மாட்டிய பின்னர்,
வசை பாடுகின்றார் ஆண்களை!

உயர் கல்வி கற்பதையும் - நம்
உயர் கலாச்சாரம் காப்பதையும்

பெண்ணுரிமை என்று இவர்கள்
எண்ணத் துவங்கும் நாட்களே,

இந்தியப் பெண்களின் உயர்வை
இமயத்துக்கு இணை ஆக்கிடும்!

award_star.png

PENN enbavaL yaar???

WHERE do these so called liberated women really stand??? :doh:

https://www.youtube.com/watch?v=iWmAWC7_CTo
 
Last edited:
நம்ம ஊர்ப் பொண்ணு!

'கொங்கு மாமணி' எனப் பட்டம் பெற்ற
கொங்கு நாட்டின் ஒரு சிறந்த மனிதர்.

முத்தமிழ் ஆர்வலர், தொழிலதிபர்.
முத்தான தமிழிசைச் சங்கத்தினை

கொள்ளை ஆர்வத்துடன் சிறப்பாய்ப்
பொள்ளாச்சி நகரினில் நடத்துபவர்!

என்னவருக்கு ஒரு விருது அளித்திட
அன்னவரே அழைக்கப்பட்டிருந்தார்.

கோவை மாநகரில் விழா ஏற்பாடு;
கோவை மாநகர் வந்து சேர்ந்தோம்!

என் காமரா சகிதம் தயார் நிலையில்
முன்னிருக்கையில் நான் அமர்ந்திட,

துணைவியுடன் மேடை வருமாறு
துரிதமாய் அழைப்பு வந்துவிட்டது!

எதிர்பாராத் தருணமே இது - எனினும்
குதித்து என் மனம் மிக்க மகிழ்வுடன்!

அருகிருந்த இளைஞனிடம் படங்களை
அருமையாய் எடுத்திட வேண்டினேன்!

மேடை ஏறியதும், என் தந்தை பற்றி
மேலான அவைத் தலைவரிடம் கூறி,

அவரின் தமிழிசைச் சங்கத்தில் - நான்
அன்றொரு நாள் வீணைக் கச்சேரியும்

வாசித்தாகச் சொல்ல, ஒரு நொடியும்
யோசிக்காது அவர் உரைத்தார், 'இவர்

நம்ம ஊர்ப் பொண்ணு! ஆகையால்
இந்த விருதை அவருக்கே தருவேன்;

மாப்பிள்ளைக்கு அல்ல!' - மேடையே
அப்படியே சிரிப்பலைகளில் மூழ்கிட,

மறக்க இயலாச் சில நொடிகளை - என்
மனத்தில் பதித்தன அன்றைய நிகழ்வு!

நிறை குடமான அந்த மாமனிதருக்கு,
நிறைவான ஓர் இடம் எம் நெஞ்சினில்!

காமிராவில் பதிந்த படங்கள் - என்றும்
தவறாது நெஞ்சில் இனிமை நிரப்பிடும்!


dance.gif
 
என்றாவது இதை எண்ணிப் பார்த்தது உண்டா???

ஊருக்கு உத்தமர் ஒருவரின் மகளாகப் பிறந்து விட்டால்
ஊர் முழுவதும் கொண்டாடும் அவளைத் தன் மகளாகவே! :grouphug:

அந்த உத்தமியை மணந்து கொண்ட ஒரு பாக்கியவான்

ஆகிவிடுவான் மொத்த ஊருக்கும் ஒப்பில்லாத மருமகனாக! :thumb:
 

நல்லவன் யார்?


பொல்லாத பிள்ளைகளைப் பெற்றவன் எனச்
சொல்லாத எவருமே இல்லை அவனிடத்தில்!

வந்தான் அவன் தோழன், பல ஆண்டுகளுக்குப்
பின்தான்! நலம் பரஸ்பரம் விசாரித்த பின்னர்

அவன் கேட்டான், 'உனக்குப் பிள்ளைகள் பலர்;
எவன் அவர்களில் மிகவும் நல்லவன்?' 'அதோ!

என் கூரையில் தீ வைக்கி
ன்றானே, அவன்தான்
என் பிள்ளைச் செல்வங்களில் மிக நல்லவன்!'

:flame:

பொறுப்புத் துறப்பு:

இதற்கும் தமிழக அரசியலுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை! :nono:
 
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ! :drama:

ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை!! :bump2:


ஒன்பதில் ஒன்று கூட உருப்படி இல்லை !!! :doh:



நல்லவனே இப்படி இருந்தால் :evil:
வல்லவன் எப்படி இருப்பானோ? :fear:
பொல்லாதவன் எப்படி இருப்பானோ?? :scared:
 
உண்டி முதற்றே உலகு!

உண்டி முதற்றே உலகு என ஏன்
பண்டு தொட்டு உரைத்தனரோ?

எண் சாண் உடலுக்குப் பிரதானம்
என்றும் வயிறே என்றே ஆனது!

மக்களின் முன்னேற்றம் குறித்து
எக்கணமும் எண்ணம் இல்லாது,

சொகுசு அறைகளிலே அமர்ந்து,
சோம பானத்துடன், அசைவமும்

உண்டு கொழுக்கும் ஜீவன்களே!
தொண்டு செய்திடும் எண்ணமே

எள்ளளவும் இலையோ? உயிர்
உள்ளளவும் இப்படி இருப்பீரோ?

Binge-Eating.jpg


Picture courtesy: Google images
 
காசு, பணம், துட்டு!

பொது மக்களைக் கொள்ளை அடிக்கப்
பொது வாழ்வுக்கு வர வேண்டும்! பின்

ஆட்சியைப் பிடிக்கப் பணம் இறைத்து,
ஆட்சிக்கு வந்ததவுடன், கஜானாவைக்

காலி செய்யும் வேலையில் இறங்கி,
வேலியே பயிரை மேயும் கதை ஆக்கி,

ஓட்டுப் போட்ட மக்களுக்கு, வாழ்வில்
வேட்டு வைப்பதே வாடிக்கை ஆனது!

எவரிடம் பணம் கொழிக்கிறதோ, அது
அவரிடம் எப்படி வந்தது எனப் பாராது,

அவர்களின் அடிவருடிகளாக ஆதும்
அவலமே! இறை நமைக் காக்கட்டும்!!

:pray:

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 1

திருமணச் செலவைக் குறையுங்கள் என்று
தினமும் சிலர் முழங்கி வந்தாலும், பலரும்

கோலாகலக் கல்யாணம் செய்து தரும்படிக்
கோருகின்றார், செலவைப் பற்றி எண்ணாது!

சிங்காரச் சென்னை மண்டப வாடகை - பெரும்
பங்காகப் பட்ஜெட்டில் ஆகும் என்று நினைத்து,

திருமணத்தைக் கும்பகோணம் சென்று நடத்த,
ஒரு பெண்ணின் தந்தை தீர்மானித்துவிட்டார்!

மணமகன் வீட்டு அழைப்பு எமக்கும் வந்ததால்.
மணமகன் வீட்டாருடன் பேருந்திலே பய்ணம்!

கோவில்கள் நிறைந்த ஊர் என்பதால், எனக்கும்
கோவில்கள் காணும் ஆவல் மனதில் எழுந்தது!

ஒரு நாள் முதல் பயணத்திற்கு; அதன் பின்னர்
இரு நாட்கள் திருமண வையவங்கள்; பின்னர்

பாலிகை கரைத்து, கட்டுச் சாதக் கூடையுடன்,
நாலாவது நாள் சிங்காரச் சென்னைக்கு வரவு!

கும்பேஸ்வரரைக் காணும் ஆவலும் சேர்ந்திட,
கும்பகோணம் நகர் நோக்கிச் செல்ல, வழியில்

மறைமலை நகரின் நளபாக செஃப்
பின் உணவு
நிறைவாக வந்தது, ப்ளாஸ்டிக் பாத்தித் தட்டில்!


தொடரும்................

 
ப்ளாஸ்டிக் பாத்தித் தட்டு (Courtesy: Google images)

disposable-fix-lunch-plate-8-part-500x500.jpg


Items served column-wise ( from left to right ):

1. Mysore bonda; Dhal; Curd rice;

2. Two Chapathis + pickle (in a tiny plastic bag); SAmbAr sAdham;

3. Milk sweet; Potato curry; Vegetable rice.

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 2

பசியாறக் கிடைத்தன, உண்பதற்கு மிகவும்
ருசியான பல வகைப் பதார்த்தங்கள், அன்று.

உண்ட மயக்கத்தில் உறக்கம் வரும் சமயம்,
வந்தது ஒரு கேள்வி திரைப்படம் வேணுமா?

தியேட்டர் பக்கம் செல்லாதவர்கள் நாங்கள்!
திரைப்படம் வேண்டாம் எனக் கூறுவோமா?

மூன்று சாய்ஸில் ஒன்று மூன்றாம் சிங்கம்;
அன்று அதுவே ஏகமனதாகத் தேர்வானது!

அதிகமான அடிதடி; பல விதத் துரத்தல்கள்;

அதீதமான மிரட்டல்கள்! படம் மிகச் சுமார்!

இடையிடையே கொஞ்சம் உறங்கினாலும்,
இருந்த கொஞ்சம் கதை நன்றாகப் புரிந்தது!

அஸ்தமனத்திற்கு முன்பே கும்பகோணம்
அடைய, வரவேற்பு நாகஸ்வர இசையுடன்!

மாப்பிள்ளை, அவன் பெற்றோர், தங்கைக்கு
மாலைகள் பெரியது; மற்ற எல்லோருக்கும்

சம்பங்கி மாலைகள் நல்ல வாசனையுடன்.
சம்பந்தி உபசரிப்பில் ஸ்வீட், காரம், காபி!

பரஸ்பரம் க்ஷேம நலங்கள் விசாரித்த பின்,
புறப்பட்டோம் எங்கள் ஏ. ஸி அறைகளுக்கு!

தொடரும் .................
 
Thank you very much Krish Sir! :)

I always thank my readers with these words:

தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! (Your encouragement is my wealth)
 
Thank you very much Krish Sir! :)

I always thank my readers with these words:

தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! (Your encouragement is my wealth)
Hey I know good tamil.I can speak,read and write.

Mine is brahmin tamizh not kadikkara tamizh.

Tamizh you write is good for tamizh mythological films.lol
 
Write tanjore tamizh and consume kumbakonam degree coffee.

You will get one ardent follower -ie me.

I claim I belong to kumbakonam and go there to visit uppiliappan koil along with Rahu sthalam nearby.

The good tamizh there comes as a package with mosquito bites .

Andavan ashramam close to the temple has wonderful wedding halls with plenty of rooms AC and non AC.

Hotels closeby can accomodate guests at competitive rates.

It is very good economics even if one adds travelling cost from chennai and other places.

Best have marriage in kumbakonam and reception in large metro like chennai.

Only avoid mahamaham time when the place gets very crowded.
 
Thank you very much Krish Sir! :)

I always thank my readers with these words:

தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! (Your encouragement is my wealth)


Please accept the title ' ஆக்கம் காெண்ட கூகை ' unlike ''ஆக்கம் கெட்ட கூகை ' which means Othavakaris in southern TN - which you are definitely not - but a woman of substance!
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 3

இரவு உணவுக்கு அழைப்பு வந்தவுடன், 'நான்
இரவில் சாதம் உண்ணவே மாட்டேன்', என்று

மூதாட்டி ஒருவர் உரைத்து, தனது அறையில்
ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டியபடி இருக்க,

மற்றவர் எல்லோரும் விரைந்தோம், உண்ண.
மணப் பெண்ணின் உற்றார், உறவினரும் வர,

நுனி இலையிலே மூன்று சிற்றுண்டிகளுடன்,
தனிச் சுவையுடன் இரண்டு இனிப்புக்களும்,

ருசியான தயிர் சாதமும், ஊறுகாயும் பரிமாற,
பசித்திருந்த அந்த மூதாட்டிக்கு வேண்டுமென

சிற்றுண்டிகளும், இனிப்பும் கேட்டேன். உடனே
சிரித்த முகத்துடன் ஓடி வந்த ஒருவர், தானே

தப்பாமல் எடுத்துச் செல்லுவதாக உரைத்தார்;
மாப்பிள்ளையின் உறவு என்றால் சும்மாவா?

சாப்பிட்ட பின்
பு, நல்லிரவு சொல்லிப் புறப்பட,
கூப்பிட்டார் ஒருவர் கையில் பெரிய பையுடன்!

ஒவ்வொரு தம்பதிக்கும் தந்தார், நீல நிறத்தில்
ஒவ்வொரு பாக்கெட்டு;
அதற்குள்ளே இருந்தன


ஒரு மாத உபயோகத்திற்கான தே. எண்ணெய்,
ஒரு சந்தனப் பவுடர் டப்பா, சோப்பு, டூத் பேஸ்ட்!!

தொடரும் ............ :cool:

 
Raji Madam,

Relished the story so far in the Kumbakonam marriage! Eagerly awaiting your next part!!I visited the place about 3 years back! Fresh in my memory!!
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 4

செலவைக் குறைக்க வேண்டுகிற காலத்தில்,
செலவு எப்படியெல்லாம் செய்ய விழைகிறார்!

அடுத்த நாள் காலை சிறப்புப் பூஜைகள் மூன்று;
விடுத்தனர் எங்களுக்கு
ப் பணிவுடன் அழைப்பு!

'விரதம்தானே ஆரம்பம்? இது என்ன? மூன்று
விதமான சிறப்புப் பூஜைகள்?', என வியந்தேன்!

க்ண்ணயர, நல்லிரவு கூறி விடை பெற்றபோது,
கண்களில் பட்டது ஒரு கஜராஜி (பெண் யானை)!

திருமண மண்டபத்தை ஒட்டியேதான் விடுதி;
இரு மாடிகள் ஏற வேண்டும்; லிஃப்ட் இல்லை!

வசதியான ஏ. ஸி அறை.
ஆறு அடி அகலத்தில்,
அசதி தீர உறங்க, நல்ல கட்டில், மெத்தைகள்.

பயணக் களைப்பால், கட்டிலில் சாய்ந்தவுடன்
சயனம் ஆரம்பம்! அலாரம் வைத்திருந்தேன்.

எழுவதற்கு அலாரமே தேவையில்லை! எமை
எழுப்ப வந்துவிட்டது கும்பகோணம் டிகிரி காபி!

மணி ஐந்துதான் ஆகியிருந்தது; காபிக்குப் பின்
இனிய தூக்கத்தைக் கொஞ்சம் தொடர்ந்தேன்!

சரியாக ஏழு மணி; பட்டாடை உடுத்தித் தயார்!
அரிதான காட்சி பார்த்தோம் மண்டப வாசலில்!

தொடரும் ....................

 

Latest ads

Back
Top