• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

#199. யோகியின் ஞானோதயம்

பிடித்து இருந்தன குருவின் போதனைகள்;
விடுக்க வேண்டும் இல்லற வாழ்வினை!

உயிருக்கு உயிராக நேசிக்கும் மனைவியைத்
தவிக்க விட மனம் இல்லை ஹடயோகிக்கு.

ரகசியம் சொன்னார் குரு அவன் செவிகளில்;
ரகசியம் வெளிப்படுத்தும் பல உண்மைகளை.

தந்தார் ஒரு விந்தையான மருந்தையும் - அதை
அருந்தும் முறையையும், அதன் பயன்களையும்.

யோகம் செய்த நிலையில் இருந்தார் ஹடயோகி
கோணிய உடலுடன் ஒரு அசைவற்ற நிலையில்!

உதறித் தள்ளி விட்டாரா யோகி தன் பூத உடலை?
கதறி அழுதாள் அந்த ஹடயோகியின் மனைவி.

ஓடி வந்தனர் அக்கம் பக்கத்தினர் அழுகை கேட்டு;
நாடி பேசவில்லை; மூச்சு இல்லை; பேச்சு இல்லை!

இறுதி யாத்திரைக்குத் தயார் செய்தனர் அவனை.
இறுகிய உடலை வெளிக் கொணர வேண்டுமே!

இடித்தன கோணிய கை, கால்கள் நிலைப்படியை!
இடித்தால் உடலை வெளிக் கொணர முடியுமா ?

கோடரியால் பெயர்த்தனர் நிலைப் படியை;
ஓடோடி வந்தால் ஹடயோகியின் மனைவி .

"இடிக்க வேண்டாம் நிலைப் படியை நீங்கள்!
இனி யார் உள்ளனர் எனக்கு உதவி செய்திட?

வெட்டுகள் பிணத்தின் கை கால்களை!
வெட்டினாலும் வலி அறியாது பிணம்!" என

இதைக் கேட்டதும் கண் விழித்தான் யோகி;
புதை சேறான சம்சாரத்தையும் விடுத்தான்.

குருவிடம் சென்று சேர்ந்தான் அவன்;
உருபட்டான் அதன் பின்னர் வாழ்வில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
#199. The Householder Hatha Yogi

The hatha yogi loved the teaching of his guru. One must give up worldly life to realize the higher truth. But he also loved his wife and could not bear the thought of going away from her.

His guru told him secret which would bring to light many hidden secrets. The guru him gave a medicine and taught him how to use it and its benefits. The hatha yogi went back home.

After sometime the yogi's wife found him in a strange knotted pose - completely motionless. She feared that he had given up his life and started wailing.

The neighbours heard the sound and came in rushing to find out what was wrong. The yogi was found motionless and knotted in a strange posture. They all assumed that he was gone forever.

So they prepared for his last journey. But they could not bring out the body of the yogi through the doorway. So they started chopping off the door way with an axe.

Now the yogi's wife came out running and said," Do not damage my home. I have no one to help me now. Insead you may chop off the legs and hands of this body. It would not know any pain"

Right at that time, the hatha yogi woke up from his wanton slumber and to the reality of the world. He gave up the mire called samsara. He went to his spiritual guru and got saved from the endless cycle of birth and death.
 
200. உண்மை ஸ்வரூபம், ஸ்வபாவம்

ஆடுகளின் மீது பாய்ந்தது கர்ப்பிணிப் புலி;
அதிர்ச்சியில் இறந்தது குட்டியை ஈன்ற பின்.

ஆடுகளிடையே வளர்ந்தது அந்தப் புலிக்குட்டி;
ஆடுகளிடையே வாழ்ந்தது அந்தப் புலிக்குட்டி.

ஆட்டைப் போன்றே கத்தியது வளர்ந்த பின்னர்;
ஆட்டைப் போலவே தின்றது இலை, தழைகளை.

மறைந்து விட்டது புலியின் உண்மை ஸ்வபாவம்;
மறந்து விட்டது புலியும் தன் உண்மை ஸ்வரூபம்.

உருண்டு ஓடிவிட்டன பல ஆண்டுகள் - அது ஆனது
உருவத்தில் வரிப்புலி ஆனால் உள்ளத்தில் ஓர் ஆடு.

வந்தது இன்னொரு புலி ஆடுகளை உண்பதற்கு;
கண்டது அந்த ஆட்டுப் புலியை ஆட்டு மந்தையில்.

புதிய புலியைக் கண்டு அஞ்சிய ஆடுகள் கத்தின;
புதிய புலியைக் கண்ட ஆட்டுப் புலியும் கத்தியது.

அழைத்துச் சென்றது புதுப் புலி ஆட்டுப் புலியை;
நிழலான பிரதி பிம்பத்தைக் காட்டி விளக்கியது.

தந்தது மாமிசத் துண்டை ஆட்டுப் புலிக்கு - அது
மறுத்து விட்டது மாமிசத்தை உண்பதற்கு முதலில்

அதைச் சுவைத்தவுடன் வெளிப்பட்டது ஸ்வபாவம்;
அதைச் சுவைத்தவுடன் வெளிப்பட்டது ஸ்வரூபம்;

தன்னை உள்ளபடி உணர்ந்து கொண்டது நன்கு
தன்னிலை மறந்து வாழ்ந்து வந்த ஆட்டுப் புலி.

நல்ல குருவும் நமக்கு இதையே செய்கின்றார்;
நினைவூட்டுகிறார் மறந்த ஆத்ம ஸ்வரூபத்தை.

"மடிந்து மண்ணாகும் வெறும் உடல் அல்ல நீ !
வடிவற்ற பரமாத்மனின் உண்மை அம்சம் நீ!

நித்தியன் நீ ! சத்தியன் நீ ! உத்தமன் நீ !
நிர்மலமானவன் நீ !" என்று உணர்த்துவார்.

அப்போது மறைந்து விடும் மாயையின் திரைகள்;
அப்போதே மறைந்திருந்த ஆன்மா வெளிப்படும்.

குருவே என்றென்றும் நமக்கு ஓர் உறுதுணை!
குருவும் அந்த இறைவனின் பெருங்கருணை !

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
200. Know Thyself!

A pregnant tigress pounced on a flock of sheep. The shock proved to be too much for her. She delivered her cub and died. The tiger cub grew up among the sheep. The tiger cub lived among the sheep. It started to imagine itself to be another sheep. So it bleated like a sheep and ate leaves and grass as a sheep does. Very soon it forgot its real nature and its real habits.

One day another tiger came to feed on the sheep. The frightened sheep bleated and ran helter skelter. The sheep-tiger did the same thing on eyeing the ferocious new tiger.

The new tiger took the sheep-tiger aside and showed it its reflection in the water. It explained that the sheep-tiger was a real tiger like itself. It gave the sheep-tiger a piece of meat to eat. The sheep-tiger declined to eat meat at first. But once it tasted the blood and the flesh, it remembered its real nature and habits.

A sadhguru does the same thing to his disciples. Man has forgotten his real nature and suffers in the shackles of samsaram. Guru makes us realize that man is not just a perishable physical body. Man is made in the image of God. Man is eternal, pure and blemishless.

Once the disciple realizes the truth in his teaching, the screen of mAyA disappears. His true Atma swaroopam exhibits itself.
 
201. மன அலைகள் அடங்கினால் ...

அரசனைக் காணச் சென்றான் ஒரு மனிதன்;
"அரசன் எப்படி இருப்பானோ தெரியவில்லை!"

இருந்தான் அரசன் ஏழு வாயில்களுக்கு அப்பால்!
அறியவில்லை அந்த எளிய மனிதன் இது குறித்து!

கண்டான் முதல் வாயிலில் ஒரு கம்பீர மனிதனை;
கொண்டான் ஐயம் "இவன் தான் அரசனோ?" என.

கண்ட மனிதன் காவலன் என்று அறிந்து கொண்டு
சென்றான் முன்னேறி அவன் இரண்டாம் வாயிலுக்கு.

இங்கும் கண்டான் ஓர் உயர்ந்த காவல் அதிகாரியை;
இங்கு மயங்கினான் "இவன் தான் அரசனோ?" என.

இதுவே நிகழ்ந்தது ஒவ்வொரு வாயிலிலும்;
இது போன்றே கடந்தான் ஏழு வாயில்களையும்.

இறுதியில் கண்டான் அரசனை அரச சபையில்;
உறுதியாக உணர்ந்தான் "இவன் தான் அரசன்" என.

அகன்று சென்றன ஐயங்கள் அனைத்தும் அப்போதே!
அகன்று செல்லும் ஐயங்கள் அலைகள் அடங்கினால்!

வெளிப்படும் உண்மை ஆத்மஸ்வரூபம் அப்போது;
வெளியேறிவிடும் நம் துன்பங்களும், துயரங்களும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
201. When the waves cease...

A man went to meet the king. He had no idea of what the king would look like or where he would be.
The king was in his durbar behind the safety of a seven layer protection. But the man did not know that.

When he saw the impressive guard at the first gate, he wondered whether that man could be the king. But after learning that the man was just a gatekeeper, he advanced to the second gate.

Here also he saw a powerful man guarding the gate. He wondered whether he was the king. He found out the truth and then advanced to the third gate. The same thing happened at every gate until he had crossed all the seven gates and reached the king's durbar.

The moment he set his eyes on the King, all his doubts vanished. Surely this man must be the king!

While travelling inward to realise the Atman, a spiritual sadaka would be riddled with many doubts. But if he advances in his spiritual sadhana, he would finally realize the atman. All his doubts and sufferings will vanish then.

The doubts and sufferings one has will cease only when the restless mind ceases to create thought waves. The doubts will cease to be only when the thought waves cease to be!
 
#202. "நான் யார்?"

அடையலாம் நாம் பரிபூர்ண ஆத்ம ஞானத்தை,
அடைந்தால் "நான் யார்?" என்பதன் விடையை!

இளம் வாலிபன் ஆக இருந்தான் ஒரு சீடன்;
உளம் நிலை பெறவில்லை ஞானத் தேடலுக்கு!

உணர்ந்தார் குரு நாதர் இந்த உண்மையை;
உணர்ந்து கொண்டார் என்ன செய்வதென!

இருக்கச் செய்தார் அவனை நந்த வனத்தில் ;
இருக்கச் செய்தார் ஓர் அழகியை அவனுடன்.

இருந்தனர் இருவரும் இன்ப உலகத்தில்;
நீந்தினர் இருவரும் இன்ப வெள்ளத்தில்.

வந்தார் குருநாதர் மீண்டும் ஒருமுறை;
வினவினார், "வேறு எதுவும் தேவையா?"

"இன்பமாக உள்ளோம் யாம் உம் தயவால்;
இனித் தேவை என்பது எதுவும் இல்லை!"

வினவினார் குருநாதர், "இது என்ன கூறு?"
விடை தந்தான், " இது சியாமாவின் கை !"

வினவினார் குருநாதர், "இவை என்ன கூறு?"
விடை தந்தான், " இவை சியாமாவின் கண்கள்!"

தொடர்ந்தன கேள்விகள் மேலும் மேலும்;
தொடர்ந்து காது, மூக்கு, வாய், முகம் பற்றி !

பொறி தட்டியது சீடன் மனத்தில் ஓர் ஐயம்;
அறிய வேண்டும் இந்த சியாமா யார் என்பதை!

"குருவே கூறுவீரா இந்த சியாமா யார் என்பதை?"
அருளுடன் அழைத்துச் சென்றார் குருநாதர் அவனை.

தயார் ஆகிவிட்டான் சீடன் ஆத்ம விசாரத்துக்கு;
தருணம் இதுவே தமது போதனையைத் துவக்க.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
202. "Who Am I ?"

One can acquire the True Knowledge about Self - once one knows the answer for this soul searching question "Who am I?"

One of the disciples of a famous Guru was a very young man. He had not become mature enough for the true knowledge about Self. So the Guru decided to wait till he was mature enough for the spiritual quest.

He took the young man to a beautiful garden. He gave a lovely maiden ShyAmA a his constant companion and went away. The two young things fell in love with each other madly and they started living a very happy and contented life in the garden.

The Guru returned after some days and asked him, "Do you need anything more to make your happiness complete?" The young man replied ,"We are very happy by your grace. We do not need anything else to make our life complete!"

Now the Guru pointed to ShyAmA's hand and asked the young disciple what it was. The young man replied that it was ShyAmA's hand. Now the Guru pointed out to her eyes and repeated his question. The disciple replied that they were ShyAmA's eyes.

The questions continued about ShyAmA's ear, nose, mouth and face. The young disciple replied that they were ShyAma's ear, nose, mouth and face. He could not help wondering "Who is this ShyAma to whom all these things belong to! I must know the truth about this ShyAmA!"

Now he begged his Guru,"Sire will you please enlighten me as to who this ShyAmA is?"

Guru realised that the disciple had become mature enough for the spiritual quest. So he took him aside to start teaching him the path leading to the true knowledge about Self!
 
203. ஜீவாத்மா, பரமாத்மா

ஜீவாத்மா வெறும் பூஜ்யம் எனில் பரமாத்மா பரிபூரணன்.
ஜீவாத்மா பெறும் மதிப்பு, பரமாத்மாவை அடைந்த பின்பு.

விளக்கு ஜீவாத்மா எனில் எண்ணெய் ஆகும் பரமாத்மா
விளக்கு எரியாது நொடிப் பொழுதும் எண்ணெய் இன்றி!

ஜீவாத்மா இரும்பு எனில் ஒரு காந்தம் ஆகும் பரமாத்மா;
ஜீவாத்மாயை மூடி இருப்பது மாயை என்னும் களிமண்.

மண்ணைக் கழுவினால் மட்டுமே காந்தம் செயல்படும்!
மாயையை அகற்றினால் மட்டுமே இறை செயல்படும் !

பந்தப் பட்ட சிறிய ஆத்மா ஆகும் ஜீவாத்மா;
பந்தப் படாத பெரிய ஆத்மா ஆகும் பரமாத்மா.

விஷய சுகங்களை அனுபவிப்பது ஜீவாத்மா;
விஷய சுகங்களுக்கு அப்பாற்பட்டது பரமாத்மா.

நீர்க் குமிழ் போல் தோன்றி மறைவது ஜீவாத்மா;
நீரோட்டமாக என்றும் நிலைத்து நிற்பது பரமாத்மா.

அலைகள் போலத் தோன்றி மறைவது ஜீவாத்மா;
நிலையாக மாற்றமே இன்றி இருப்பது பரமாத்மா.

ஜீவாத்மா சார்ந்து நிற்கும் அந்தப் பரமாத்மாவை;
ஜீவாத்மாவைச் சார்வதில்லை அந்தப் பரமாத்மா .

தோற்றமும், மறைவும் உடையது ஜீவாத்மா ;
தோற்றமும், மறைவும் இல்லாதது பரமாத்மா.

சச்சிதானந்த ரூபத்தை இழந்தவன் ஜீவாத்மா;
சச்சிதானந்த ரூபத்தை உடையவன் பரமாத்மா.

நிறத்தால் வேறுபடும் தலையணைகள் ஜீவாத்மா;
நிரப்பும் பஞ்சு போன்று மிகத் தூயவன் பரமாத்மா.

குணங்களால் வேறுபட்டு மாறுபடுவது ஜீவாத்மா;
குணங்களை முற்றும் கடந்து நிற்பது பரமாத்மா .

குறைந்த அறிவினை உடையவன் ஜீவாத்மா;
நிறைந்த அறிவினை உடையவன் பரமாத்மா.

குறைந்த திறமையை உடையவன் ஜீவாத்மா;
செறிந்த திறமையை உடையவன் பரமாத்மா .

எல்லைகளுக்கு உட்பட்டு நிற்பவன் ஜீவாத்மா ;
எல்லைகளைக் கடந்து நிற்பவன் தூயபரமாத்மா.

அனைத்தையும் கடந்து நிற்பதால் அவன் கடவுள்!
அனைத்திற்கும் அப்பாற்பட்டதால் அவன் கடவுள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
203. JeevAthma vs ParamAthma

JeevAthma is a zero and gets its value only when it stands behind ParamAtma. JeevAthma is a lamp while ParamAthma is the oil in the lamp. If JeevAthma is a piece of iron then ParamAthma is a magnet. The clay covering the iron piece is the mAya. When the clay is washed away the magnet can attract the iron. When the mAya is removed ParamAthma can be realised by the JeevAthma

JeevAthma is in bongdage while ParamAthma is not in any kind of bondage. JeevAthma enjoys the sensual pleasures while ParamAthma refrains from any kind of sensual enjoyment. JeevAthma is like a flimsy bubble in water but ParamAthma is the water from which the bubbles are formed. JeevAthma appears and disappears like the waves in an ocean. ParamAthma does not appear or disappear and is constant and unchanging as the deep ocean.

JeevAthma depends on ParamAthma for its very existence. ParamAthma does not depend on anything or anyone at anytime. JeevAthma has a beginning and and end. ParamAthma has neither a beginning nor an end.

JeevAthma has lost its sath-chith-Anandha-swaroopm but ParamAthma never ever loses it. JeevAthmas differ in their colors like the pillows made of different materials. But ParamAthma remains the same as the cotton that fills up the pillows. JeevAthmas differ by their qualities and attributes. ParamAthma is beyond qualities and attributes.

JeevAthma has limited knowledge but ParamAthma has unlimited knowledge. JeevAthma has limited power but ParamAthma has unlimited power. JeevAthma has boundaries but ParamAthma has transcended all boundaries.
 
204. மறு பிறவி

பாண்டங்கள் செய்யலாம் பச்சை மண்ணில்.
பாண்டங்கள் உருவாகா வெந்த மண்ணில் !

முளை விடும் வித்துக்கள் அனைத்துமே
முளை விடா வறுக்கப்பட்ட விதைகள் !

அஞ்ஞானத்துடன் மரித்தால் உண்டு மறுபிறவி
மெய்ஞானம் அடைந்தபின் இல்லை மறுபிறவி.

ஞானம் சித்திக்கும் இடைவிடாத சாதனைகளால்;
ஞானம் சித்திக்கும் வரை தொடரும் பிறவிகள்.

உமியுடன் கூடிய நெல் முளைவிடும் - அஞ்ஞான
உமியை நீக்கினால் முளைவிடாது அதே நெல்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
204. Cycle of Birth and Death

We make make utensils out of fresh clay. But we can't make anything out of clay already baked. All seeds can sprout and grow into plants. But if the seeds are roasted then they will never sprout or grow

If a man dies without obtaining true knowledge about SELF he will be born again and again. The person who has realised the truth will not take any more births since he will get liberated.

To do away with the cycle of birth and death, one must obtain True knowledge. To obtain True Knowledge one must do spiritual sadhana. Until knowledge has fructified the cycle of births will continue.

Once the Ignorance is removed like the husk from paddy, the soul gets liberated and escapes the misery of endless birth and death.
 
Today's link to the blog with an introduction.

திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.

 
205. ஞானமும், மௌனமும்

நீர் நிரம்பும் குடம் செய்யும் இடைவிடாத சப்தம்
நீர் நிரம்பியபின் நின்று விடும் அந்தச் சப்தம்.

காணும் வரையில் இறைவனைப் பற்றிப் பேசுபவன்
கண்ட பின்னர் ஆனந்திக்கின்றான் மிக மௌனமாக

விருந்து படைக்கும் இடத்தில் இருக்கும் இறைச்சல்;
விருந்து கிடைத்தவுடன் அடங்கிவிடும் இரைச்சல் .

ஞானம் பெறும் வரையில் ஒரே இரைச்சல் தான்!
ஞானம் பெற்ற பின்னர் பிறக்கும் ஒரு மௌனம்.

தேனை அடையும்வரையில் ரீங்கரிக்கும் வண்டு,
தேனை அடைந்த பின்னர் அருந்தும் அமைதியாக

வாதம் செய்வார்கள் மேதாவிகள் அறிவின் செறிவால்!
போதம் அடைந்த பின்னர் நின்று விடும் வீண் வாதம்

சந்தைக்கு வெளியே நின்றால் கேட்கும் இரைச்சல்!
சந்தைக்கு உள்ளே சென்றால் விளங்கும் வார்த்தைகள்.

இறைவனுக்குத் தொலைவில் உள்ளவரை குழப்பங்கள்!
இறைவனை நெருங்கினால் விலகிவிடும் குழப்பங்கள்.

வாதப் பிரதிவாதங்கள் எழுவது சாஸ்திர அறிவால்!
போதம் பிறந்த பின் எழுவது குழப்பமற்ற மௌனம்.

நீறை குடம் ஒலிப்பதில்லை; தளும்புவதில்லை ;
இறைவனை அறிந்தவன் அதிகம் பேசுவதில்லை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
205. True Knowledge and Deep Silence

A ghatam (pot) while being filled up with water from a river makes a continuous sound. Once the pot is filled completely the sound ceases. Man talks a lot about God until he realises Him, but becomes very silent once he realises GOd.

In a hall where feast is served, there would be a loud buzzing noise. But once the feast is served the noise ceases and there is absolute silence.There will be nose until true knowledge is gained. After that everything will become silent.

The bee buzzes on while going in search of honey. Once it has spotted the flower, it drinks the nectar quitely and happily.

Pundits spend their time arguing about God but once they realise Him all their arguments cease. The marketplace is filled with a loud jargon of words and sounds. But once we enter the market, all the words beom clear and intelligible.

The confusion we have while we are far away from God cease once we go near to Him. The enlightened man does not talk much. The pot filled with water does not make any sound.
 
206. இளமையும், பக்தியும்

வளைக்கலாம் மிக எளிதில் முற்றாத மூங்கிலை;
வளைத்தால் உடைந்து விடும் முற்றிய மூங்கில்.

இளமையில் பக்தி மிக மிக எளிது என்றால்
முதுமையில் பக்தியை முயல்வதும் கடினம்.

இளம் கிளிக்கு கற்பிக்கலாம் இறைவன் நாமத்தை;
இளமை நீங்கினால் கற்காது இறைவன் நாமத்தை.

யாக்கையில் ஆசைகள் விளைவது இயல்பு - ஆசைக்
காக்கைகள் கொத்திய கிழப்பழம் பக்திக்கு உதவாது

திருப்ப வேண்டும் இளம் மனதை பக்தி மார்கத்தில்,
விருப்பம் ஏற்படும் முன்னரே உலக இச்சைகளில்!

இளம் வயதில் உன் அன்பு முழுமையானது - ஆயின்
அளிக்கின்றாய் அதில் பாதியை உன் மனைவிக்கு.

வளரும் குழந்தைகளுக்கு அளிப்பாய் அதில் பாதி
தளரும் பெற்றோருக்கு அளிப்பாய் அதில் பாதி

மனை, மாடு, வீடு, வாசல் இவற்றுக்கு மீதி - ஆக
தனக்கும் இறைவனுக்கும் மிஞ்சாது இதை மீறி.

இளமையில் கற்க வேண்டும் கல்வி, கேள்விகளை;
இளமையால் கற்க வேண்டும் பக்தி, பாவனைகளை;

இனிய கற்கண்டை ச் சுவைத்தவன் அதன் பின்னர்
இனி உண்ண விழையான் அற்பப் பொருட்களை.

அரசபோகம் அனுபவித்த ஒருவன் விழையான்
அற்பனின் கட்டிலில் படுத்து உறங்கும் விதியை.

அரசனின் காதலி கண்ணெடுத்தும் பாராள்
அவனிலும் தாழ்ந்த வேறு எந்த மனிதனையும்.

இறை இன்பத்தைச் சுவைத்து விட்ட ஜீவன்
குறைவான உலக இன்பத்தை விரும்பாது.

இளமையில் பக்தியைக் கற்றவன் எண்ணான்
"வளமான உலக இன்பங்களே இன்பம்!" என்று.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
206. Bhakthi at a young age

A tender bamboo can be bent easily. A mature bamboo will break when bent. Developing Bhakthi - a deep love towards God is easy in young age. Developing bhakthi in a very old age is very difficult.

A young parrot can learn to repeat God's names easily. An old parrot can't learn new words! A fruit pecked by a crow is useless. In the same way a body pecked and ravished by various desires is useless - even though all those desires are natural in a body made of flesh and bones!

The mind should be diverted towards God before the worldly desires invade in it. The love in a child is complete in itself, whoever it is directed to. After reaching adulthood a man gives half of his love to his wife.

He gives half of the reming love to his children. He gives half of the remaining to his parents. The remaining affinity is spent on his house, land, wealth, and other possessions. Finally nothing is left to give to God in the name of Bhakthi.

Youth is the best time to learn, to listen and to evolve spiritually. A person who has tasted the sugar cubes will not care for anything less than them. One who had enjoyed a princely life would not want to sleep in the humble hut of a pauper. The lover of the king would not even look at any man lower in status than him.

The jeevan which had tasted the bliss of bhathi would not settle for the lowly pleasures of the world. One who had learnt to do bhakthi in his youth would not consider the worldly pleasures as superior to bhakthi.
 

Latest ads

Back
Top