DEVI BHAAGAVATAM - SKANDA 7
7#30b. தக்ஷனின் துவேஷம்
துர்வாசர் ஜபித்தார் மாயாபீஜ மந்திரத்தை ;
தரிசனம் தந்தாள் ஜாம்புந்தேச்வரி அவருக்கு.
தந்தாள் தான் அணிந்திருந்த மாலையை அவருக்கு.
அந்த மாலையுடன் சென்றார் முனிவர் தக்ஷனிடம்.
"வினோத மாலை கிடைத்தது எவ்வாறு?" தக்ஷன் வினவ
"மனம் மகிழ்ந்த தேவி தந்தாள் பிரசாதமாக!" என்றார்.
தனக்கு அதைத் தருமாறு வேண்டினான் தக்ஷன்;
"உனக்கு இல்லாததா?" என்றளித்தார் மாலையை.
தொங்க விட்டான் மாலையை பள்ளியறையில்;
தூண்டியது காம உணர்வை அந்த மலர் மாலை.
உறவாடினான் மனைவியோடு காமவெறியில்;
மறைந்தது சிவபக்தி; பிறந்தது சிவதுவேஷம்.
சிவனை இகழ்ந்தான் தக்ஷன் - அதைக் கண்டு
ஜீவனைத் துறந்தாள் சதிதேவி யோகாக்னியில்.
தோன்றினாள் சக்தி ஒளிவடிவாக மீண்டும்;
தோன்றினாள் சக்தி இமயமலை மீது மீண்டும்.
பெரும் கோபம் உண்டானது பரம சிவனுக்கு;
உருவாக்கினர் வீரபத்திரனை, பத்ரகாளியை!
உருவாக்கினார் எண்ணற்ற பூதகணங்களை;
வெறி கொண்டு அழித்தனர் அனைவரையும்;
சரண் புகுந்தனர் தேவர்கள் பரமசிவனிடம் சென்று;
"ஒரு குற்றமும் செய்யாத எமக்குத் தண்டனை ஏன்?"
மன்னித்தார் சிவனார் அனைவர் குற்றங்களையும்;
பின்னர் உயிப்பித்தனர் தக்ஷனை ஆட்டுத் தலையுடன்;
வருந்தினார் சிவனார் சதிதேவியின் மறைவுக்கு;
திரிந்தார் உலகெங்கும் சதியைச் சுமந்து கொண்டு.
"சித்கலா ரூபத்தின் கலைகளைப் பீடமாக்கி
சக்தராகிய தமரும் அமர்ந்து அருள வேண்டும். "
இணங்கினர் சிவன் அமரரின் வேண்டுகோளுக்கு;
இணங்கினார் விஷ்ணு கலைகளைப் பிரதிஷ்டை செய்ய!
மாயாபீஜா மந்திரத்தை சக்தி பீடத்தில் ஜபித்தால்
மந்திர சித்தி உண்டாகும் என்றருளினார் சிவன்.
நன்னெறியை உலகினருக்கு எடுத்துக் காட்டத்
தாமே அமர்ந்தார் தியான நிஷ்டைகளில்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.